Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 28

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 28

பனி 28

 

கிருஷியும், ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கிருஷியோ அவன் அருகில் வரவே இல்லை. தூரத்தில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் கண்ணில் வலியைக் கண்டவன் தன் முகத்தைச் சீர் செய்துக் கொண்டான் தன் வலியை மறைத்துக் கொண்டு. ராஜேஸ்வரியும் கிருஷியைப் பார்க்க அவரும் அவள் கண்களில் தெரிந்த வலியைக் கண்டுகொண்டார்.

 

“பாருடி, எங்க பிள்ளையை உங்க வீட்டு ஆளுங்க என்ன பன்னி வச்சிருக்காங்கான்னு? உங்க வீட்டு ஆளுங்களை தவிற வேறு யாரும் இதை பன்ன முடியாது” என்று திவியின் தாய் கத்த

 

“காலையில் உங்க வீட்டு ஆளுங்க கிட்ட நியூஸ் கொடுத்துட்டு இருந்தியா? உன்னால் என் மாமாவோட நிலமையைப் பாரு, கல்லு போல நின்றுட்டு இருக்க” என்று திவி கத்தினாள்.

 

கிருஷி ஒன்றும் கூறாமல் அங்கு இருந்து அறைக்குச் சென்றாள்.

 

ஆதி “அம்மா சாப்பாடை ரூமிற்கு அனுப்பி வைங்க” என்று கூறி மாடியேற

 

“என்ன தான் பன்னி எங்க புள்ளைய மயக்கி வச்சி இருக்காளோ” என்று திவியின் தாய் கூற

 

“அத்தை, இதைப் பற்றி நான் உங்களுக்கு இன்னொரு நாளைக்கு விவரமா சொல்றேன்” என்று நக்கலாக இரு பொருள்படக் கூறி அங்கிருந்து சென்றான்.

 

நிலா, ராஜேஸ்வரி, சங்கரன் புரிந்துக் கொண்டனர். இவன் கிருஷியை காதலித்தது பற்றியே கூறுகிறான் என்பதை புரிந்துக் கொண்டனர். மற்றவர்கள் இவன் நக்கலாக கூறுகின்றான் என்றே நினைத்தனர்.

 

அறைக்கு வந்தவன் கிருஷியைத் தேட அவள் பல்கனியில் நின்று இருந்தாள். அவளிடம் நெருங்க கதவு தட்டும் சத்தம் கேட்க அவனே சென்று திறந்தான்.

 

“பிடி சாப்பிட்டு தூங்கு. இதில் ஸ்லீபிங்க பிள்ஸ் இருக்கு. டாக்டர் கொடுத்து இருக்காரு. மறக்காமல் குடி” என்று அம்பிகா கூற

 

அவனும் “சரி” என்றான்.

 

“நான் உன் பக்கத்துலேயே இருக்கேன். நீ சாப்பிட்டு தட்டை கொடு, மருந்தை குடி அப்பொறமா நான் போகிறேன்” என்று கூற

 

கிருஷியுடைய உணவை அருகில் வைத்தவன் அவனுடைய உணவை சாப்பிட்டான். மருந்தையும் குடிக்க அம்பிகா கிருஷியையும், ஆதியையும் பார்த்து அங்கிருந்து சென்றார்.

 

ஆதி களைப்பின் காரணமாக கட்டிலில் சாய்ந்தவாறு உறங்க கிருஷி வெகு நேரத்திற்கு பிறகு உள்ளே நுழைந்தாள். அவளிற்கான உணவைப் பார்த்தவள் அதை எடுத்து சமையலறைக்குள் நுழைந்து அதை எடுத்து வைத்து தண்ணீரை நன்றாக குடித்த பிறகு சென்றாள். இதை அம்பிகாவும், ஒரு ஜோடி விழிகளும் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அறைக்கு வரும் போது அவன் அசந்து உறங்குவதைப் பார்த்தவள் அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள். அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தவளின் விரல்கள் நடுங்கியது.

 

“காலையில் இருந்தே சொன்னேனே டா கேட்டியா? பாரு எப்படி இருக்கன்னு? என்னால் தாங்க முடியல்லை டா” என்று அழுதுக் கொண்டே நெற்றியில் இதழ்பதித்தாள்.

 

“நான் உன் கிட்ட நிறைய பேசனும் டா. இதெல்லாம் நீ முழிச்சுட்டு இருக்கும் போது சொல்லனும்னு தான் ஆசை. ஆனால் என்னால் முடியாது டா. நீ என்னை மிரட்டி கல்யாணம் பன்னது தான் ஞாபகம் வருது. உன் கிட்ட நீ எந்த அளவுக்கு எனக்கு முக்கியம்? உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு நான் உன் கிட்ட சொன்னதே இல்லை டா. இப்போ சொல்றேன்.

 

நீ என் பக்கத்துல இருந்தால் நான் சேபா பீல் பன்றேன் டா. நான் உன்னை முதன் முதலில் பார்த்தப்போ குட்டிபேபின்னு சொன்னியே அப்போ எனக்கு ரொம்ப கோபம் வந்தது. பட் அந்த நிக் நேம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அப்பொறமா நீ என்னை நவி ன்னு கூப்பிட்டியா அப்போ வீட்டுக்கு போனதுக்கு அப்பொறம் கூட என்னை கூபிடுறது போலவே இருந்தது.

 

திரும்ப திரும்ப அந்த குரல் கேட்டது. நீ என்னை அடிச்சப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. பட் நீ என்னை நல்லா பார்த்துகிட்டப்போ வாழ்க்கை பூரா இந்த அன்பு எனக்கு வேணும் மனசு சொல்லிச்சு. நீ ஊருக்கு வந்தபோ, நீ ஊட்டி விடாமல் ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போ என் பக்கத்துல இல்லாமல் இருந்தது ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது. அக்கறையா விசாரிக்கிரப்போ, என் கூட சண்டை போடுறப்போ உன்னை இரசிச்சி இருக்கேன் என்னை அறியாமல்.

 

நீ ஊருக்கு போயிட்டு வந்ததுக்கு அப்பொறமா, என் மேலே ரொம்ப கேயாரா இருந்தாய். அதுக்கும் மேலே ஏதோ ஒன்னு நான் உன் கண்ணுல பார்த்தேன். பட் சரியா அப்போ தெரியல்லை. எனக்கு அடிபட்டப்போ நீ ரொம்ப துடிச்சது எனக்கு அது ரொம்ப பிடிச்சது. அப்பா கிட்ட பேசிட்டு என் கிட்ட புரொபோஸ் பன்ன பாரு, அப்போ உன் மேலே இருக்கிற காதல், மரியாதை அதிகமாச்சு.

 

ஆனால் நீ என்னை வெட்ட வந்தியே அப்போ நான் ரொம்ப உடைஞ்சி போயிட்டேன் டா. நீ என்னை கோயிலில் வச்சு என்னை காப்பாத்தினப்போ என்னை பார்த்துக்க நீ இருக்கன்னு நினைத்தாலும் நீ எங்க எதிரி குடும்பத்தோட பையன், என்னை காப்பாத்துவியா? அதனால் தான் என் முன்னாடி திரும்ப வராதன்னு சொன்னேன்.

 

உன்னை பாக்குற ஒவ்வொரு தடவையும் நான் தடுமாறுவேன். ஒவ்வொரு முறையும் நீ என் பக்கத்துல வேணும்னு மனசு சொல்லிச்சு. நீ என்னை மிரட்டி தாலி கட்டும் போது நான் இல்லை டா, என்னால் அதை ஏத்துக்க முடியல்லை. அதனால் உன்னை ஏத்துக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் ரொம்ப கஷ்டபடுறேன் டா. நீ எனக்காக சபோர்ட் பன்றபோ, என் மேலே அக்கறை காட்டுறப்போ முழு மனசோட ஏத்துக்க ரொம்ப கஷ்டபடுறேன் டா.

 

எனக்கு உன் கூட கடைசி வரைக்கும் வாழனும்னு ஆசையா இருக்கு டா. ஆனால் என் சித்தப்பா, நீ மிரட்டி கல்யாணம் பன்னது என்ன மனசாற உன்னை ஏத்துக்க வைக்க தடுக்குது டா, என் கழுத்துல நீ கட்டுன தாலியை பார்க்கும் போது சந்தோஷமா இருந்தால் அடுத்த நிமிஷம் காணாமல் போயிரும். நீயும், உன் காதல், அன்பு எனக்கு மட்டும் தான் தெரியுது டா. அதை கூட அனுபவிக்க முடியாத பொன்டாட்டியா இருக்கேன்.

 

எனக்கு என்னை பன்னும்னு கூட தெரியாது. உன் பக்கத்துலயே இருக்கனும்னு ஆசையா இருக்கு. முடியல்லை டா. உன்னை நல்லா பார்த்துக்கனும். உன் ஆசையை நிறைவேற்றனும். இப்படி நிறைய இருக்குடா. ஒரு சாதரண கல்யாண பொண்ணு புகுந்த வீட்டுல வாழுமே அப்படி வாழனுமனு ஆசையா இருக்கு” என்று அவன் நெற்றியில் தன் நெற்றியை வைத்து கண்ணீர் வடித்தாள்.

 

எழுந்து கண்களைத் துடைத்து அவனை உறங்க வைத்தவள் அவள் புறம் உறங்க மனமில்லாமல் அவன் மார்பில் தலைவைத்து உறங்க, ஆதி கண்விழித்தான்.

 

‘அடிப்பாவி, மனசுல இதெல்லாம் வச்சிருக்கியா?, நான் நாளைக்கே இதற்கு ஒரு முடிவு கட்டுறேன்’ என்று தன்னுள் முடிவு எடுத்தவன் அவள் நெற்றியில் இதழ்பதித்தான்.

 

அடுத்த நாள் கிருஷி எழுந்து குளித்து கீழே சென்று அவளுக்கும், ஆதிக்கும் காபி எடுத்து வந்தாள். ஆதி எழுந்து பிரஷாகி வரவும் சரியாக இருந்தது.  ஆதி காபியைப் பருகியவன், அவளிடம் ஏதும் கூறாமல் வெளியே சென்றான்.

 

கிருஷி மிகவும் நொந்தாள். அவன் தன்னிடம் ஒரு வார்த்தையேனும் பேசவே இல்லையே, அவர்கள் கூறியது போல தன்னாலே அனைத்தும் நடந்துவிட்டதோ  என்று தன்னை வெறுக்க ஆரம்பித்து விட்டானோ என்று மிகவும் நொருங்கினாள்.

 

ஆதி, அவன் நண்பர்களுடன் சென்று அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான்.

 

இரவு வீடு வந்தவன், கிருஷி அறையில் தான் இருப்பாள், நிச்சயமாக உண்டிருக்கமாட்டாள் என்று சரியாக யூகித்தவன் அவளக்கு உணவை எடுத்துக் கொண்டு செல்ல கிருஷி பல்கனியில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவளை எழுப்பியவன் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

 

அவன் ‘தன்னை வெறுக்கவில்லை’ என்று நிம்மதி அடைந்தாள்.

 

“கிருஷி, நான் உனக்கு டைவர்ஸ் கொடுக்குறேன். உன் வீட்டுலேயே போய் நிம்மதியா இரு” என்று அலேக்காக ஒரு குண்டை போட்ட பிறகு கைகழுவச் செல்ல கிருஷி அதே இடத்தில் உடைந்து அழுதாள்.

 

“இப்போ எதுக்கு அழற? அதான் உன் வீட்டுக்கு போறியே?” என்று ஆதி கேட்க,

 

“யேன்டா இப்படி அணு அணுவா என்னை சாகடிக்கிற? அதற்கு ஒரேடியா என்னை கொன்னுடு” என்றாள் முழங்காலினுள் முகம் புதைத்தபடி.

 

அவளை எழுப்பி நேராக நிற்க வைத்தவன் அவள் முகத்தைக் கையிலேந்தி,

 

“நான் உன்னை டிவோர்ஸ் பன்னா, உன்னால் என்னை விட்டு வேறு ஒருத்தனை கல்யாணம் பன்னிப்பியா?” என்று கேட்க,

 

“அறிவு இருக்கா? இல்லையா உனக்கு? என்னால் எப்படி டா வேறு ஒருத்தனை கல்யாணம் பன்ன முடியும்?” என்று கேட்டாள் கிருஷி.

 

“அதான் யேன்” என்று கேட்க,

 

“யேன்னா நான் உன்னை காதலிக்கிறேன்” என்றாள். அதன் பின்னே தான் கூறியதை உணர்ந்தவள் அவனை விட்டு விலகி நின்றாள்.

 

“என்னாச்சு நவி நீயே உன் மனசை என் கிட்ட சொல்லிட்ட” என்றான் குறும்பாக.

 

“என்னால் உன்னை ஏத்துக்க முடியாது டா” என்று அழ

 

“ஏன்?” என்று அவனும் விடாமல் கேட்க,

 

“நீ என்னை மிரட்டி கல்யாணம் பன்ன, அதுவும் என் தங்கை கழுத்துல கத்தியை வச்சி அவ பயத்துல அலறினது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு” என்றாள்.

 

“இதான் உன் பிரச்சனையா? இல்லை வேறு எதுவும் இருக்கா?” என்று கேட்க,

 

“என் சித்தப்பா அவரை உங்க ஆளுங்க கொன்னாங்க” என்று கூற

 

“என் மாமாவை உன் நேசன் மாமா தான் கொன்னாரு” என்றான் கோபமாக.

 

அவனைப் பார்க்க, ஆதியும் கிருஷியைப் பார்த்தான்.

 

“இப்போ தளிர் தான் உன் பிரச்சனையா? இரு” என்று பவிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“அண்ணா சொல்லுங்க” என்று கூற,

 

“உன் பிரன்டு கல்யாண ரகசியத்தை கேட்குறா?” என்று கூற

 

“அவ கிட்ட மொபைலை கொடுங்க” என்றாள்.

 

அவன் ஸ்பீகரில் போட” நான் இந்த கேள்வியை ரொம்ப நாளைக்கு முன்னாடி கேட்பன்னு எதிர்பார்த்தேன். நீ புரொப் தானே? யாராவது கழுத்தில் கத்தியை வச்சி இறுக்கும் போது சத்தமாக அம்மா ன்னு அலற முடியுமா? அவங்களால் பேசவே முடியாது, இதுல கத்துறது யோசிச்சு பார்த்தியா?” என்று கேட்க,

 

“ஆமா, ஆனால் அவ முகத்துல பயத்தை பார்த்தேனே” என்று கூற

 

“அவளோட நடிப்பு அப்படி டி” என்றாள் பவி.

 

“அவ எதுக்கு நடிக்கனும்?” என்று கேட்க,

 

“அதை உன் புருஷன் கிட்ட கேளு பாய்” என்று அழைப்பைத் துண்டித்தாள் பவி.

 

கிருஷி ஆதியைப் பார்த்தாள்…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17   “அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.   சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 24யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 24

பனி 24   அடுத்த நாள் காலை ஆதி கண்விழிக்க இமைகளை இறுக்க மூடி தன் மார்பை தொட வெற்றிடமாக இருந்தது. கண்களைத் திறந்து பார்க்க, கிருஷி அதே இடத்தில் உறங்கிக் கொண்டு இருந்தாள்.   ‘சே எல்லோருக்கும் போல் நைட்டில்

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10

பனி 10   மாலை கோலேஜ் முடித்தவுடன் மோலிற்கு செல்லும் போது ஒரு கார் அவளை போலோ செய்வதைக் கவனித்தவள் சற்று வேகமெடுத்துப் போக, அவளை இடமறித்து அந்த கார் அவள் ஸ்கூர்டியின் முன்பு வந்து நின்றது.   காரிலிருந்து ஒருவன்