Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32

32 – மீண்டும் வருவாயா?

 

இரண்டு நாள் முன்பு நேத்ராவிடம் அனைவரும் “நீ, ஜீவன் குழந்தைங்க எல்லாரும் இங்கேயே இருக்கலாம்ல மா?”

நேத்ரா “ஆ..அது வேண்டாமே.. அப்போ அப்போ வர போக இருந்திட்டு பாத்துக்கலாம்.. ஒண்ணா வேண்டாம்னு தோணுது மாமா..” என தயக்கத்துடன் ஆனால் உறுதியாக கூறினாள்.

வாசுகி “ஏன் மா இன்னும் அன்னைக்கு நடந்ததவே நினைச்சிட்டு இருக்கியா? நாங்க அப்டி நடந்துக்கிட்டதுக்கு..” என முடிக்கும்முன்

“இல்ல பெரியம்மா..எனக்கு உங்ககிட்ட இருந்து எந்த விளக்கமும் வேண்டாம்.. நான் உங்க யாரையும் தப்பா நினைக்கல.. ஏன் எதுக்குன்னு தெளிவா காரணம் தெரியாட்டியும், எனக்கு தெரியும் நீங்க என்னை பிடிக்காம இல்ல வேண்டாம்னு வெறுத்து எல்லாம் அனுப்பிச்சிருக்கமாட்டீங்க…” என கூற தங்களின் மேல் அவள் வைத்த பாசம் நம்பிக்கையை எண்ணியவர்கள் “எங்களை இவளோ புரிஞ்சுக்கிட்ட நீ ஏன் டா முழுசா இங்க இருக்க ஒத்துக்கமாட்டேங்கிற? நீ சரினு சொன்னா போதுமே உன் புருஷன் குழந்தைங்க எல்லாரும் உனக்காகவே ஒத்துகிட்டு வந்துடுவாங்க..”

 

அவள் விரக்தி புன்னகையுடன் “அதனால தான் அத்தை நான் வேண்டாம்னு சொல்றேன். என்னை இவளோ நம்புறவங்களை கஷ்டப்படுத்தற ஒரு இக்கட்டுல நிறுத்தற தப்ப நான் செய்யலாமா சொல்லுங்க..?”

“யாரை சொல்ற?..ஜீவன்கிட்ட நாங்களும் பேசுறோம்.. நாங்க அந்த நேரத்துல ஏன் அப்டி பண்ணோம்னு சொன்னா புரிஞ்சுக்குவான். ”

 

“நான் அவரை சொல்லல..”

“பின்ன வேற யாரு?”

“ஜீவிதா…” என்றாள்..

அனைவரும் “என்ன ஜீவியா? அவளுக்கு என்ன?” என வினவ

“ஜீவிக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும்…” அனைவரும் அதிர்ச்சியாக “வசந்த் அண்ணா வீட்ல வாணிகிட்ட நடந்ததை எல்லாம் சொல்லும் போது அவ கேட்டிருக்கா.. இப்போ இந்த வயசுல அவளுக்கு பாதி புரிஞ்சும் புரியாமலும் இருக்கறதால அவ கொஞ்ச நாள் எதுவும் வெளில காட்டிக்காம அமைதியா இருக்கா..ஆனா இன்னும் அவ சின்ன பொண்ணு தானே.. ஒருவேளை கூடவே இருக்கும் போது நீங்க சாதாரணமா திட்டினா கூட அவளை பிடிக்காம தான் திட்டுனீங்கனு தோணிடுச்சுனா.. அத அவ கேட்டுட்டா உங்களுக்கும் கஷ்டம்.. எது எப்போ எப்படி வேணாலும் மாறலாம்.. எனக்கு நீங்க எல்லாருமே வேணும் எப்போவுமே ஒண்ணா இருக்கணும்.. ஒரு வார்த்தை வந்திடுச்சு பேசி சங்கடப்படுத்திறது அதோட மட்டும் முடியாது.. அந்த வலி எப்போவுமே இருக்கும். அது சில காலம் கழிச்சு மாறலாம் சில நேரம் மாறாமலே கூட போகலாம்..ஆனா இருக்கற ஒரு வாழ்க்கைல எனக்கு பிடிச்ச உங்க எல்லாரையும் வெச்சு மறுபடியும் நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்லை.. இப்போ இருக்கறமாதிரியே இருப்போம்.. அதான் எல்லாருக்குமே நல்லது..என்ன கூப்பிட்டா உடனே வரப்போறோம்.. நினச்சா நீங்க வரப்போறிங்க. அவ்ளோதானே..”

 

அவள் கூறுவது அவர்களுக்கு புரிந்தாலும் “அப்டி இருந்தாலும் சின்ன பொண்ணு தானேமா பேசுறா..அப்டியே இருந்தாலும் ஏன் என் அம்மாவை கஷ்டப்படுத்தினீங்கனு கேட்கப்போறா..அவளுக்கு இல்லாத உரிமையா?”

 

நேத்ரா “கேட்கற கேள்விகள் சொல்ற விஷயம் அதனால வர பாதிப்பு வயசு, உரிமை பாத்து வரத்தில்ல மா.. நம்ம வார்த்தைகளை வெச்சு வரது.. இந்த உலகத்துல இருக்கற எல்லாருமே வாழ்க்கைல ஒரு கட்டத்துல உணர்ச்சிக்கு முக்கியத்துவம் குடுக்கறவங்களா தான் இருக்காங்க… இருப்பாங்க.. அதான் மனுசங்க இயல்பு.. அவங்களோட எமோஷனல் பீலிங் வெளில வரும்போது எடுக்கற முடிவு பாக்கிற விதம் எல்லாமே மாறிடும்..

இவளோ பெரியவங்க குடும்பத்தை இவளோ தூரம் அழகா உருவாக்கியிருக்கற நீங்களே ஒரு பிரச்சனை வந்ததும் அப்டி தப்பான முடிவெடுத்திட்டீங்க தானே அத்தை.. இத்தனைக்கும் இவளோ தெளிவா விஜய் இல்லாம என் வாழ்க்கை சந்தோசம் இல்லனு சொல்ற அளவுக்கு யோசிச்ச நீங்க, சும்மா பிரச்சனை குடுத்தா கடுமையா பேசுனா மட்டும் பயந்தோ இல்ல என் அம்மா அப்பாவோட எமோஷனல் பிளாக்மைல்க்காகவோ இன்னொரு கல்யாணம் பண்ணுவேன்னு எப்படி எதிர்பார்த்திங்க.. அப்டி வேற ஒருத்தர கல்யாணம் பண்ணாலும் என் மனசுல விஜய் மட்டும் தானே இருப்பாரு..அப்டி யோசிச்சிட்டு இன்னொருத்தரோட நான் எப்படி வாழ முடியும் அதை நீங்க யோசிக்கலையா?”

அதெப்படி நீங்க எல்லாரும் வாழ்க்கைல பிடிச்சவங்க இறந்தாலும் சரி இனி இருக்கறவங்கள பாக்கலாம்னு நினச்சு வாழ்விங்க.. நான் மட்டும் எனக்கு இதுவரைக்கும் வாழ்க்கைல பிடிச்சவங்க எல்லாத்தையும் மறந்துட்டு ஒதுங்கி போயி வாழணுமா? சரி இத்தனை வருஷ பழகுன இவங்களே நம்மள புரிஞ்சுக்கலங்கும் போது  இனி வர போற லைப்ல எப்படி ஒரு பிடிப்பு இருக்கும்..நம்பிக்கை இருக்கும்.. அத யாருமே யோசிக்கல?” என்ற அவளின் கேள்வியில்  அவள் சண்டையிடவில்லை என்றாலும் அவளின் ஆதங்கமும் மனக்குமுறலும் வெளிப்பட்டது.

நேத்ராவின் அம்மா “உனக்காக பாத்துதானே மா அப்டி பண்ணிருக்காங்க.. அத நீ யோசிக்கலையா? எங்களை அந்த நேரத்துல வேற என்ன தான் பண்ண சொல்ற? எப்படி முடிவெடுக்க சொல்ற? சரி அதையும் தாண்டி உங்க வாழ்க்கை நல்லதுக்குனு நாங்க நினச்சு பண்ண விஷயத்தால தான் இவளோ கஷ்டமும்.. நாங்க மட்டும் உங்களை அப்டி பாத்து சந்தோசமாவா இருந்தோம்?” என அவரும் புரியவெக்க வேண்டுமென்ற நோக்கில் கேட்க

 

நேத்ரா “அம்மா, எனக்காக மட்டும் அப்போ பாத்தா போதுமா மா?.. சரி அப்போ சொல்லுங்க .. இந்த 7 வருஷம் என் வாழ்க்கைல நடந்த எது நல்லது எது சந்தோசம் எனக்கு? நீங்க எல்லாரும் அம்மாங்கிற இடத்துல இருந்து வந்தவங்க தானே.. சொல்லுங்க.. உங்களுக்கு இரண்டு வாய்ப்பு இருக்கு….

‘வாழ்க்கைல ரொம்ப கஷ்டம் வரும் இல்ல உன் புள்ளைய விட்டுட்டா நீ கஷ்டப்படாம இருக்கலாம்னு ஒரு நிலைமை வந்தா..எல்லாரும் என்ன முடிவெடுப்பீங்க’.. புள்ளையோட நல்லது தான் முக்கியம் நான் கஷ்டப்பட்டாலும் பரவால்லன்னு..நீங்க எல்லாரும் மட்டும் அப்டி நினச்சா தப்பில்லை..ஆனா நான் மட்டும் என் புள்ளைய தூக்கி எறிஞ்சுடலாம்..கருவை கலைச்சிடலாம் இல்லையா?

அப்டி பண்ணிட்டு நானும் அவரும் மட்டும் எப்படி சந்தோசமா இருப்போம்.. தாய்மை உணர்வு குழந்தையை பெத்து வளத்து 10 வருஷம் 30 வருஷம்னு ஆனா மட்டும் தான் வருமா? அது என்ன எக்ஸ்பீரியன்ஸ் வெட்சா பாசத்தை காட்டமுடியும்?

ஏன் என் வயித்துல என் குழந்தை இருக்கும் போதே நான் அதுமேல அதே அளவு பாசம் வெக்க கூடாதா?அவரோட உயிரோட தான் நான் சுமக்கறேங்கும் போதே அவருக்கு அந்த குழந்தை மேல பாசம் இருக்காதா என்ன?

 

இது எதுவுமே நீங்க யாருமே ஒருத்தர் கூட யோசிக்கலேல? ஜீவா பொறந்ததும் என்னை விட்டு அவனை கூட்டிட்டு போயிட்டீங்க.. அவன் என்கிட்ட கேட்கிறான்

‘ஏன் மா உனக்கு என்ன பிடிக்காம தான் விட்டுட்டு போனியான்னு? நீங்க எல்லார்கிட்டேயும் ரொம்ப பாசமா இருப்பிங்கனு டாடி சொன்னாரு…அத நானும் தான் பாக்கறேன்.. அப்டி இருக்கும் போது என்னை பத்தி மட்டும் ஏன் மா யோசிக்காம விட்டுட்டு போனீங்க.. நான் ஏதாவது தப்பு பண்ணேனா? என்னை அடிச்சாவது சொல்லிருக்கலாம்லன்னு..’

முன்னாடி அவன் என்னை பாக்கல. என் பாசம் அவனுக்கு கிடைக்கல. அப்போ அப்டி ஒரு சந்தேகம் இருந்தது சரி.. ஆனா இங்க வந்து இவளோ நாள் பழகி அவன் என் பாசத்தை புரிஞ்சுப்பான்னு எல்லாரும் நினைச்சீங்க. அவனும் என்னையும் என் பாசத்தையும் நல்லாவே புரிஞ்சுகிட்டு தனியா என்கிட்ட திரும்ப வந்து சொல்றான் எல்லாருக்காகவும் யோசிக்கற நீ ஏன் மா என்னை பத்தி யோசிக்கலன்னு…’என்னை என்ன சொல்ல சொல்றிங்க.. எனும் போது அவளையும் மீறி கண்ணீர் வெளிப்பட்டது..

காரணமே இல்லாம என் புள்ளைய நான் எவ்ளோ கஷ்டப்படுத்திருக்கேன்.. காலத்துக்கும் அவன் மனசுல இது இருந்திட்டே தானே இருக்கும்.

அவன்கிட்ட ஏதோ குறை இருக்கா இல்ல அவன் தப்பு பண்ணிட்டானோன்னு நினச்சு நினச்சு பீல் பண்றான். ஒருவேளை நான் தப்பானவளா பாசமில்லாதவளா இருந்திருந்தாகூட அவன் பிடிக்கலனு ஒரே முடிவா விட்டுட்டு போயிருப்பான். இப்போ அவனோட பெரிய குழப்பமே இவளோ பாசமா இருக்கற அம்மா எல்லாருக்காகவும் யோசிக்கற அம்மா ஏன் என்னை விட்டுட்டு போனாங்கங்கிறது தான்… உங்க யார்கிட்டேயாவது இதுக்கு பதில் இருக்கா?”

ஜீவாக்கு நடந்த உண்மை தெரிஞ்சா அவனோட முடிவு என்னவா இருக்கும்னு யோசிச்சு பாருங்க.. அவன் பொறுமையா முடிவெடுக்கற ஆள் இல்ல. அதேமாதிரி அடி திட்டுக்காகவும் பயந்து முடிவு பண்ணமாட்டான். நம்மள பிரிச்ச இவங்க யாருமே வேண்டாம்மான்னு நிப்பான். அதை உங்களால ஏத்துக்க முடியுமா?

அனைவரும் அதை ஒப்புக்கொண்டனர். சற்று நினைத்து பார்த்து பதட்டமாகவும் உணர்ந்தனர்.

நேத்ரா “இப்போ நீ சொன்ன உன் புருஷன் கேப்பான் மா.. புள்ளைங்க கேட்கும்.. நீ பேசுனு சொல்றிங்களே.. இதே மாதிரி அன்னைக்கும் இதுதான் பிரச்சனை..இந்த மாதிரி ஜாதகத்துல சொல்ராங்க.. குழந்தை பொண்ணா பொறந்துட்டா நீங்க பிரிஞ்சு இருங்க.. இல்லாட்டி அவனுக்கு ஆபத்துனு சொல்லிருந்தா அவர்கிட்டேயே இத நான் பக்குவமா சொல்லி புரியவெச்சுட்டு போயிருப்பேனே… நீங்க இப்போ அங்க வேலை பாக்குறீங்க.. நான் இங்க இருக்கறதுக்கு பதிலா அம்மா வீட்ல இருக்கமாதிரி நினைச்சுக்கறேன்னு சொல்லிருப்பேனே.. அதையும் மீறி ஒரு கட்டத்துல நாம நினைக்காத அளவுக்கு பிரச்னை வந்தா அப்போ அதை சமாளிக்கலாம்.. அத விட்டுட்டு முன்னாடியே எதுக்கு பிரியறோம்னே தெரியாம பிரிஞ்சு வருத்தப்பட்டு இதெல்லாம் தேவையா?” என அவள் ஆதங்கத்துடன் கூற

“பிரச்சனை வந்தா சமாளிக்கலாம்னு வாய் வார்த்தைல சொல்றதுக்கு அது சரிப்பட்டு வந்தாலும் எப்படி மா ஒத்துவரும்?உயிருக்கே ஆபத்துனு சொல்லும்போது எப்படி?” என தயக்கத்துடன் ராஜீ  கூற

நேத்ரா “என்ன மா இப்டி சொல்றிங்க… ஒருவேளை அந்த நேரத்துல இவங்க ஜாதகம் பாக்காம இருந்திருந்தா?

இந்த மாதிரி விஷயமே தெரியாம யோசிக்காம எனக்கு பொண்ணு பொறந்தாலோ பையன் பொறந்தாலோ குடும்பமே கொண்டாடிருக்குமே…அப்டி ஒரு சூழ்நிலைல ஒருவேளை விஜய்க்கு ஏதாவது ஆகியிருந்தாலும் குழந்தைகளை இவங்க ஒதுக்கிருக்கமாட்டாங்க. என்கிட்ட கடுமையா நடந்திருக்க மாட்டாங்க.. அப்போவும் என்னை இதே அளவுக்கு தாங்கிருப்பாங்க… எனக்கு விஜய் இல்லேன்னாலும் அவரோட இடத்துல இருந்து இவங்கள பாத்துக்கணும். இவங்களுக்காக வாழணும்னு நினைச்சிருப்பேன். அவரும் அதைத்தான் விரும்பிருப்பாரு..விரும்பினாரு.. என்றவள் கண்ணீரை கட்டுப்படுத்தி தொடர்ந்து ஆனா இப்போ என்ன நடந்தது. குழந்தையை வேண்டாம்னு முடிவு பண்ணது.. அது இப்போ தெரிஞ்சாலும் சங்கடம்னு யோசிக்கிறோம்.. இன்னொரு குழந்தையை பிரிச்சு கூட்டிட்டு வந்தது..அதுவும் சொன்னா பிரச்சனை.. விஜய் உயிரோடவே வந்தாலும் மனசார சொல்லுங்க அவர் உயிரோட சந்தோசமா நிம்மதியாவா நடமாடிட்டு இருந்தாரு.. இப்போ வாழணுமா வேண்டாமானே தெரியாத அளவுக்கு எனக்கு ஒருவாழ்க்கை ஒரு ஒரு நாளும் எவ்ளோ கொடுமையா இருந்தது..இதுல இங்க எங்களை சந்தோசமா பாக்கணும்னு நினச்சு நீங்களும் தான் தினம் தினம் வருத்தப்படுறீங்க.. சொல்லுங்க இந்த முடிவுல கொஞ்ச காலமாவது யாராவது சந்தோசமா இருந்தாங்களா? இல்லையே…”

 

“அப்போ ஜாதகம் பாக்குறது, இந்த மாதிரி சில விஷயம் நம்புறது கடவுள் இது எல்லாமே வேண்டாம்னு சொல்றியா? அது கேட்டு முடிவு பண்றது தப்புங்கிரியா?”

 

“தாராளமா..அது உங்க நம்பிக்கை அதை நான் தடுக்கல..ஆனா அதுக்கும் ஒரு வரைமுறை இருக்கணும்ல. அதுல என்ன சொன்னாலும் அது அப்டியே நடக்கும் அதனால நான் வாழற என் கொஞ்ச நாள் வாழ்க்கையும் அதவே நினைச்சு நரகமாகிக்குவேன்னு சொன்னா அது எப்படி சரியாகும்..

அதோட நீங்க எல்லாருமே தான் சொல்றிங்க..விதியை மாத்த முடியாதுனு.. ஜாதகம் ஜோசியம் பாத்தா மட்டும் அத மாத்தியா எழுத போறீங்க.. அப்டி பண்ணத்தான் முடியுமா? இல்லையே..அப்புறம் ஏன் எது வந்தாலும் வரும் போது பாத்துக்கலாம்னு இருந்திருக்கலாமே..

டாக்டர் இவனுக்கு நோய் வந்திடுச்சு இன்னும் 6 மாசத்துல சாகப்போறன்னு சொன்னா முதல குணப்படுத்த முடியுமான்னு தான் பாப்போம். இல்ல குணப்படுத்த முடியாது ஆனா கொஞ்ச காலம் ட்ரீட்மெண்ட்ல சாவை தள்ளி போடலாம்னு சொன்னா சரி கூட கொஞ்ச காலம் இருக்கட்டும்னு இந்த முடிவை ஓகே சொல்லுவீங்களா? இல்ல எப்படி இருந்தாலும் சாக போறான். அத நினச்சு நினச்சு எங்களால அவனை பாத்து சங்கடப்படமுடியாது அதுனால உடனே கொன்னுடுனு சொல்லுவிங்களா?

நீங்க எல்லாரும் எங்க விசயத்துல எடுத்த முடிவு கடைசியா சொன்னமாதிரி தான் இருக்கு. ஜாதகம் பாக்கிறது ஜோசியம் இது எல்லாம் நோய் வருமான்னு தெரிஞ்சுக்கவும் அத முடிஞ்சளவுக்கு கடவுளை கும்பிட்டு நம்பிக்கை வெச்சு கொஞ்ச காலம் தாக்குபிடிக்கத்தானே தவிர வர பிரச்னையவே அழிக்கறதுக்கு இல்லை. அதுக்கு வழி இருந்திருந்தா பல ஞானிகள் சித்தர்கள்னு சக்தி படைச்ச எல்லாருமே ஏன் நீங்க கும்பிடற கடவுளே கூட நடக்குற பிரச்சனைய முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு மாத்தி அவங்களுக்கு பிடிச்சமாதிரி வெச்சுப்பாங்களே… ஆனா அந்த மாதிரி யாராலையும் முடியாது விதி படி தான் எல்லாமே நடக்கும்னு முழுசா நம்புனா கடவுளை கும்பிட்டு நார்மலா எது நடக்கணுமோ அப்டியே நடக்கட்டும். பிரச்னை வந்தா பாத்துக்கலாம்னு விட்ரவேண்டியதுதானே.

இப்டி யோசிக்கற யாருமே தெளிவான ஒரு முடிவை எப்போதுமே எடுக்கறதில்லை. முதல இந்த மாதிரி ஜாதகம் ஜோசியம்னு சொல்ற விஷயத்தை வெச்சு முடிவு பண்ணனுமா? இல்லை மனுசங்க உணர்ச்சிய வெச்சு முடிவு பண்ணனுமா? எப்போ எதுக்கு எவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கணும்னு ஒவ்வொருத்தரும் தெளிவான பதில் வெச்சிருந்தாலே போதும். பாதி கஷ்டங்களை குறைச்சுக்கலாம்.. பிரிஞ்சு 10 வருஷம் உயிரோட இருந்திருந்தாலும் வருத்தம் தான் ஒரு வருஷம் சேந்து சந்தோசமா வாழ்ந்திட்டு இல்லாம போனாலும் வருத்தம் தான். இரண்டுமே வருத்தம்ங்கும்போது அட்லீஸ்ட் வாழற கொஞ்ச காலத்துலையாவது அவங்களுக்கு பிடிச்சமாதிரி நிம்மதியா சந்தோசமா வாழட்டும்னு விட்றலாமே..ஆனா யாருமே அப்டி யோசிக்காம செய்யாத தப்புக்கு எவ்ளோ தண்டனை..எவ்ளோ கஷ்டம்..” என அனைவரும் எதுவும் கூறும் வழியற்று மௌனம் காக்க

நான் இதெல்லாம் உங்களை கஷ்டப்படுத்த சொல்லல..என்னால உங்கள மன்னிக்க முடிஞ்சது. ஆனா நடந்த விஷயத்தை மறக்க முடில..எனக்கு இதுக்கு மேலையாவது நீங்க எல்லாருமே வேணும்.. சண்டை போட்டு யாரையும் இழக்க முடியாது. அதோட என் குழந்தைகளுக்கும் உங்களோட பாசம் வேணும்னு நினைக்கிறேன்.. கூடவே இருக்கும்போது நிறையா பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு.. ” என அவளின் கேள்வி ஆதங்கம் வலி யாரையும் அடுத்து எந்த கேள்வியும் கேட்கவிடவில்லை..பின் அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

 

அனைத்தையும் கேட்ட விஜய் அமைதியாக இருக்க நித்து என்னாச்சு?

விஜய் “இல்ல, ஜீவிக்கு எல்லாமே தெரிஞ்சும் அவ அவங்கள ஏத்துக்கிட்டாளா? மத்தவங்ககிட்ட சொல்றமாதிரி அவ சின்ன பொண்ணு புரிஞ்சும் புரியாமலும் சாதாரணமா இப்போ விட்டுட்டானு சொல்லாத.. ஜீவி ரொம்ப புத்திசாலி.. அவ ரொம்ப பீல் பண்ணாளா? அவங்க மேல கோபமா இருக்காளா? வெறுத்தடமாட்டால?” என ஏனோ ஒரு வலியில் கேட்க

நித்து அவனது தலையை கலைத்துவிட்டு “ஏன் இவளோ பீல் பண்றீங்க.. உண்மைதான் வருத்தப்பட்டா..கோபப்பட்டா..சின்ன பொண்ணுதானே. ஆனா குழந்தைகளுக்கு நாம காட்டுற வழி. சொல்ற விதம்னு ஒன்னு இருக்கு. பாக்கலாம். முடிவு அவளோடதுதான்..”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31

31 – மீண்டும் வருவாயா?   விஜய் “ஆனா அதுக்காக நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைப்பியா? இதுக்கு நீ என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்..” என அவன் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வீம்புடன் அமர அவள் அழைப்பதை

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33

33 – மீண்டும் வருவாயா? விஜய் “ம்ம்.. எப்போ உன்கிட்ட பேசுனா? என்ன சொன்னா?” “வசந்த் அண்ணா வீட்ல இருந்து வந்த அன்னைக்கு ஈவினிங் நீங்க வெளில போய்ட்டாங்கல… அப்போ பேசுனா. ஜீவா நான் ஜீவி மூணு பேரும் கொஞ்ச நேரம்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30

30 – மீண்டும் வருவாயா?   அவ்வழி வந்த வாணி வசந்த் இருவரும் இவர்களை பார்த்துவிட்டு அருகே வந்தனர். “என்ன டா இங்க உக்காந்திட்டே?” “தெரில வசந்த் ..ஏனோ இந்த இடம் பாக்க நல்லா இருக்கு. இங்கிருந்து பாரு பாக்கிற இடமெல்லாம்