Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 8

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 8

பனி 8

 

இவ்வாறே ஐந்து நாட்களாக காலை எழுப்புவது முதல் அவள் உறங்கும் வரை அவள் சாப்பிடுவது, மருந்தை கொடுப்பது என அனைத்தையும் வழங்கி அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டான் கிருஷியின் லக்ஷன்.

 

அவன் குட்டி பேபி அடம்பிடிக்கும் போது மட்டும் DSP ஆக மாறிவிடுவான். அதன் பிறகு அவளும் அமைதியாக மாறிவிடுவாள். ஐந்தாவது நாள் காலையில் ஆதியின் வீட்டில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

 

“தேவ் நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லாருமே வீட்டிற்கு வாராங்க.இந்த வாட்டி வீட்டுக்கு வா” என்று அவர் கூற

 

“அம்மா, இப்போ நான் முக்கியமான ஒரு கேசை கையில் எடுத்து இருக்கிறேன், அதான் மா கொஞ்சம் யோசணையா இருக்கு” என்றான்.

 

“வீட்டிற்கு மாமா, அத்தை, திவ்யா எல்லாரும் ஈவினிங் வந்துருவாங்க, நீ நாளைக்கு வந்து மூன்று நாள் தங்கிட்டு போ” என்று ராஜேஸ்வரி அதிகாரமாகக் கூற

 

அவனும் மறுக்க முடியாமல்”சரி” என்றான்.

 

அங்கிருந்து நேரடியாக கிருஷியின் வீட்டிற்குச் சென்றவன் அவளுக்கு காலை உணவை ஊட்ட ஆரம்பித்தான்.

 

“இங்க பாரு குட்டி பேபி, நான் நாளைக்கு ஊருக்கு போறேன். டைமுக்கு சாப்பிடு, டெப்லட்சை டைமுக்கு போட்டுக்க, நல்லா ரெஸ்ட் எடு” என்றான்.

 

அவன் ஊரிற்குச் செல்கிறேன் என்றதில் கவலையடைந்தவள் சரி என்று தலை ஆட்டி விட்டு அமைதியாக சாப்பிட்டாள். அவள் கவலையைப் புரிந்துக் கொண்டவன் பவியிடம் அவளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு கூறி ஸ்டேஷனிற்குச் சென்றான்.

 

விகி அதிகாலையிலேயே கேஸ் விஷயமாக ஸ்டேஷனிற்கு வந்ததால் ஆதி ஊரிற்குச் செல்வதைப் பற்றி அவன் அறிந்து இருக்கவில்லை. ஆதி டல்லாக இருப்பதைப் பார்த்து,

 

“என்ன மச்சான் டல்லா இருக்க?” என்று விகி கேட்க,

 

“இல்லை டா, நான் நாளைக்கு ஊரிற்கு போறேன் டா, குட்டிபேபியை விட்டுட்டு போறேன் அதான் ஒரு மாதிரி இருக்கு” என்றான் ஆதி.

 

‘ஆதி நீ அவளை காதலிக்கிறதை உணர்வதற்கு இது தான் நல்ல சந்தர்ப்பம், அவளை விட்டு தூரமா இருக்கும் போது தான் நீ உன் காதலை புரிஞ்சிப்ப’ என்று மனதில் நினைத்தான்.

 

“நிம்மதியா போயிட்டு வாடா. நானும், பவியும் என் தங்கையை நல்லா பாத்துப்போம்” என்றான்.

 

“மச்சான், அவ டெப்லட் குடிக்கிறதில் ரொம்ப களவு, நீ தான் உன் தங்கையை பாத்துக்கனும், உன்னையே ஏமாத்திருவா, கவனமா இரு” என்றான் ஆதி.

 

“சரி நான் பாத்துக்குறேன் டா, போதும்” என்று விகி கையெடுத்து கும்பிட ஆதி சிரித்தான்.

 

சிவபெருமாள் “நேசன் நீ எந்த வம்பிற்கும் அவங்க கூட போகாத” என்றார்.

 

நேசன், “சரி மாமா அவங்க சூர்யா, அவங்க பையன் தேவ் இருக்கிறதால் தான் அவங்களை நமக்கு நெருங்க முடியல்ல”

 

சிவபெருமாள்,”நானும் அவங்க பையனை பற்றி தேடி பார்த்தேன். அவன் பெயர் தேவ், பொலிஸா இருக்கான், சொந்த ஊருக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது, அந்த பையனை பற்றி அவளோ தான் தெரிஞ்சது” என்றார்.

 

நேசன்” மாமா அவங்களை பழி வாங்குறதுக்கு நமளுக்கு ஒரு நாள் கிடைக்கும் அந்நேரம் பார்த்துக்கலாம்” என்றான்.

 

“என் கடைசி தம்பி ராஜை இழந்துட்டேன், இனி என் குடும்பத்துல யாரையும் நான் இழக்க தயாரில்லை. என் மூத்த தம்பி மாரியையும் இழக்க மாட்டேன், அவங்களை பழிவாங்காமல் விட மாட்டேன்” என்றார் கண்கள் சிவக்க கோபத்துடன்.

 

பழிவாங்கும் நேரம் இருவருக்கும் ஒரு நாள் வரும் போது, இரண்டு குடும்பத்திலும் பாரிய இழப்பும், இதனால் தனது செல்ல மகளின் வாழ்க்கை பாழாகப்போவதையும் அவர் அறியவில்லை.

 

அன்றிரவு கிருஷியின் வீட்டிற்கு வந்தவன் ஏதும் பேசாமல் அமர்ந்து இருந்தான்.

 

“அண்ணா சாப்பாடு ரெடி, கைகால் அலம்பி வந்திங்கன்னா கிருஷிக்கும் ஊட்டிவிட்டுட்டு நீங்களும் சாப்பிடலாம்” என்றாள்.

 

“மச்சான் எனக்கு பசிக்குதுடா, எந்திரி டா” என்றான் விகி.

 

அவனும் கைகால் முகம் அலம்பி வந்தவன் கிருஷி அமர்ந்த இடத்திற்கு வந்தவன் ஊட்ட ஆரம்பித்தான்.

 

“குட்டிபேபி திரும்பவும் சொல்றேன், சமத்தா இரு” என்று காலையில் கூறிய அனைத்தையும் மீண்டும் சிறு குழந்தைக்கு கூறுவது போல கூறினான்.

 

அவளும் பூம்பூம் மாடு போல மண்டையை ஆட்டி வைத்தாள்.

 

“பார்த்தியா உங்க அண்ணனை, அவளை சின்ன குழந்தைக்கு போல டிரீட் பன்றான்” என்றான் விகி.

 

“அண்ணா கிருஷியை காதலிக்குறாரா?” என்று பவி கேட்க,

 

அவள் நேரடிக் கேள்வியில் அதிர்ந்தவன் பின் சுதாகரித்து,

 

“அவன் காதலிக்கிறான் பவி, ஆனால் அவன் இன்னும் அதை உணர இல்லை. அவன் ஊரிற்கு போகிறது நல்ல விஷயம் தான். கண்டிப்பா அவன் காதலை அவன் உணர்ந்து திரும்பி வருவான்” என்றான் விகி உறுதியாக.

 

“கிருஷிக்கு அண்ணாவை ரொம்ப பிடிச்சிருக்கு, அவ ரொம்ப நெருக்கமானவங்க கூட தான் நல்லா பழகுவா” என்றாள் பவி.

 

“பார்க்கலாம் இந்த தற்காலிக பிரிவு அவங்க காதலை அவங்களுக்கு உணர வைக்குமான்னு?” என்றான்.

 

பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க இருவரும் அவர்களது வீட்டிற்கு கிளம்பினர். அடுத்த நாள் அதிகாலையே ஆதி ஊரிற்கு கிளம்பினான்.

 

கிருஷியை காலையில் பவி எழ வைத்து அவளை சாப்பிட அழைக்க,

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல இம்சை வந்திருவான் டி” என்றாள் கிருஷி.

 

“கிருஷி அண்ணா ஊருக்கு போயிருக்காரு டி” என்றாள் பவி.

 

அவளும் அமைதியாக சாப்பிட அமர்ந்து சிறிது சாப்பிட்டு விட்டு தட்டில் கோலம் போட ஆரம்பித்தாள்.

 

“என்னடி பன்ற? ஒழுங்கா சாப்பிடு” என்றாள் பவி.

 

அவளுக்கு இத்தனை நாளாக ஆதி ஊட்டிவிட்டது கண்முன்வர உண்ணாமல் எழுந்து சென்றாள்.

 

பவி எழுந்து அவளுக்கு ஊட்ட கையை கொண்டு செல்ல,

“சொரிடி எனக்கு பசி இல்லை நான் அப்பொறமா சாப்பிடுறேன் பிளீஸ்” என்று கிருஷி கூறினாள்.

 

பவியும் வேலைக்குச் செல்ல தயாராகி வந்து, கவனமாக இருக்குமாறு கூறிவிட்டு சென்றாள். கிருஷியின் நினைவுகள் முழுவதையுமே ஆதியே ஆக்கிரமித்து இருந்தான்.

 

ஆதியை அவனது குடும்பம் முழுவதுமே வரவேற்றது. அவன் ராஜேஸ்வரி,வாசுதேவனின் ஒரே வாரிசு. வாசுதேவனிற்கு தம்பிகளான சங்கரன்,மகாலிங்கம் இருவருமே அக்கா தங்கைகளான அம்பிகா, கோமதியைத் திருமணம் செய்தனர். சங்கரனிற்கு 19 வயதில் ஒரே ஒரு மகள் நிலா. அவள் ஆதியின் செல்லத் தங்கை.. மகாலிங்கத்திற்கு சிந்து, சிவா என்ற 16 வயதான இரட்டைக் குழந்தைகள். வாசுதேவனின் தங்கை ராஜலக்ஷமி, அவரது கணவன் ரகுவரனிற்கு ஒரே 23 வயதான ஒரு மகள் திவ்யா.

 

அவளை சிறுவயதிலிருந்தே ஆதிக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்ய ராஜேஸ்வரியோ ஆதியின் விருப்பமே அவரின் விருப்பம் எனவும், அவன் சரி என்றால் மாத்திரமே திருமணம் செய்வதாக கூறிவிட்டார். திவ்யா அழகி, குணத்தில் நல்லவள் என்பதால் திருமணத்திற்கு விரும்பாமல் இருக்கமாட்டான் என நம்பி இருந்தனர் அனைவரும் ராஜேஸ்வரியைத் தவிற. தன் மகன் எம்முடிவு எடுத்தாலும் அதற்கு சம்மதமே என்றே இருந்தார் ஆதியின் தாய்.

 

திவ்யாவும் ஆதியை ஒருதலையாக காதலிக்கிறாள். எதற்காகவும், யாருக்காகவும் ஆதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள். ஆதி வந்தவுடன் அவன் பின்னே மாமா, என்றே சுற்றிக் கொண்டு இருந்தாள். நிலா, திவ்யா இருவருமே தோழிகள் ஆனால் திருமண விடயத்தில் அண்ணனின் விருப்பமே தன் விருப்பம் என்றே இருந்தாள்.

 

“மாமா எத்தனை வருஷத்துக்கு அப்பொறமா பாத்திருக்கோம்?” என்றாள் திவி.

 

“ஆமா டா, இப்போ என்ன பன்னிட்டு இருக்க?” என்று ஆதி கேட்க,

 

“நான் அப்பாவோட கம்பனியை பாத்துக்குறேன் மாமா” என்றாள்.

 

“மாமா நான் ஒன்னு சொல்லட்டா?” என்று திவி கேட்க,

 

“சொல்லுமா” என்றான்.

 

“நீங்க ஸ்மார்டா இருக்கிங்க, அப்படியே ஹீரோ மாதிரி” என்றாள்.

 

“தேங்ஸ்” என்று அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் எழுந்து சென்றான் ஆதி.

 

ராஜேஸ்வரி தன் மகனின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டே இருந்தார். அங்கிருந்து வெளியே வந்தவன் ஊரைச் சுற்ற செல்ல அவர்களது பழைய நண்பர்களை சந்தித்தான். அவர்களுடன் சிரித்துப் பேசி நடக்க, அங்கே ஒரு ஸ்கூர்டி பஞ்சராகி நின்று இருந்தது.

 

அதைப் பார்த்தவனுக்கு கிருஷியுடனான நினைவுகள் வர, அதை அனுபவித்தவன் புன்னகைத்தான்.

 

“என்ன மச்சான் லவ்வா?” என்று ஒருவன் கேட்க,

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மா தான்” என்றான் ஆதி.

 

” இல்லையே இவளோ நேரமா இல்லாத ஒரு மலர்ச்சி உன் முகத்துல இருக்கே” என்று மற்றொருவன் கூற

 

“வாங்கடா” என்று முதுகில் தட்டி ஆதி சிரித்துக்  அவர்களுடன் சென்றான்.

 

அந்த நாள் இனிதே அனைவருக்கும் நிறைவடைந்தது. அடுத்த நாள் காலையில் ஆதி காலை உணவை உட்கொண்டு விட்டு சோபாவில் அமர நிலா கண்களை மூடி இருக்க அவள் முன்னே திவி அமர்ந்து ஏதோ கூறிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் கண்ணைத் திறந்த நிலா

 

“யாருமே வர இல்லை டி” என்றாள்.

 

இதைப்பார்த்துக் கொண்டு இருந்த ஆதி,

 

“இரண்டு பேருமே என்ன பன்றிங்க?” என்று கேட்க,

 

“லவ் கேம் விளையாடுறோம் மாமா” என்றாள் திவி.

 

“அண்ணா நீங்களும் விளையாடுங்களே” என்று நிலா கூற

 

“ஹலோ நாங்க இதை மிஸ்டர் லோகல் மூவியில் பார்த்துட்டோம்” என்றான்.

 

இருவரும் கெஞ்ச பின் லவ் கேம் விளையாட ஒத்துக்கொண்டான்.

அவன் கண்களை மூடியவுடன் திவி கூற ஆரம்பித்தாள்.

 

“நீங்க பட்டுவேஷ்டி சட்டையில் பூமாலை போட்டு அக்னிக்கு முன்னாடி உட்காந்து ஐயர் சொல்ற மந்திரங்களை சொல்லிட்டு இருக்கிங்க. உங்களை சுற்றி நம்ம குடும்பம் பூராவும் இருக்காங்க. ஐயர் பொண்ணை அழைச்சிட்டு வாங்கோன்னு சொல்றாரு. நிறைய பெண்கள் சூழ பட்டுபுடவையில் உங்க மனைவி வரா. ஆனால் உங்களால் அவளை பார்க்க முடியுது இல்லை. அவளை எட்டி எட்டி பாக்குறிங்க. அப்போ அவ சாரி கீழ இருந்து மேல பார்க்குறிங்க. சாரியோட அடிபகுதி, அடுத்ததா அவங்களோட சாரி மடிப்பு இன்னும் மேலே பார்க்கும் போது அவங்க இடை. இன்னும் மேலே பார்க்குறிங்க நகை, பூமாலை அவங்களோட முகத்தை பார்க்க முன்ன அவங்க மறைந்துவிடுறாங்க. அப்பொறமா உங்க பக்கத்துல உட்காருராங்க. அப்போ தான் அவங்க முகத்தை பாக்குறிங்க……..” என்று திவி கூற ஆதி கற்பனை செய்தான். அவன் மணமகளை பார்த்துவிட்ட பிறகு அவனது உதடுகள் நவி என்று முனுமுனுத்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 17

பனி 17   “அப்பா அவன் வேறு யாரும் இல்லை. அன்றைக்கு வீட்டிற்கு என்னை வந்த தேவ் தான். ராஜேஸ்வரி அம்மாவோட பையன்” என்று கூறி அழுதாள்.   சிவபெருமாள் அதிர்ச்சியில் கீழே அமர்ந்துவிட்டார். கனகாவும் அதிர்ந்து அவளைப் பார்த்தார்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6

பனி 6   அடுத்த நாள் காலையே ஆதி கிருஷியைப் பார்ப்பதற்கு ஆர்வமாகக் கிளம்பினான். அங்கு சென்று பிரின்சியிடம் அனுமதி வாங்கி, கிருஷியின் வகுப்பிற்குச் சென்றான். அங்கே, அவன் எதிர்பார்த்தது போல் கிருஷி இருக்கவில்லை. மாணவ, மாணவிகளிடம் விசாரணைகளை முடித்து உனடியாக