27 – மீண்டும் வருவாயா?
குழந்தைகளை வசந்துடன் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட விஜய் விடிய விடிய அவளின் கைகளை பற்றிக்கொண்டு பேசிக்கொண்டு அதுலையே உறங்கிவிட அதிகாலையில் கண் விழித்தவள் தன் கைகளை பற்றிக்கொண்டிருந்த கணவனை கண்டவளுக்கு அவனை நினைத்து பாவமாக இருக்க அவனது தலையை வருடிவிட “லவ் யூ நித்து..” என அவன் தூக்கத்திலும் கூற இவளும் புன்னகையுடன் “விஜய்” என அழைக்க அவன் விருட்டென்று விழித்தெழுந்தவன் “நித்து.. நித்து.. ஆர் யூ ஓகே..பெயின் எதுவும் இல்லையே டாக்டர் கூப்பிடவே?” என அவன் விடாமல் பதட்டமாக கேட்க
அவளோ பொறுமையாக எச்சிலை விழுங்கிவிட்டு “அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் கொஞ்சம் உட்காரணும் என அவன் உதவியோடு சற்று எழுந்து சாய்ந்தபடி அமர அவனை எதிரே அருகில் அமர சொல்லி விடாமல் பார்க்க விஜய் “என்ன ஏன் அப்டி பாக்குற?”
“இப்போ லவ் யூ சொல்லலாமா வேண்டாமானு பாத்தேன்..திரும்ப திட்டிட்டிங்கன்னா?” என அவள் குறும்புடன் வினவ
அவனும் குறுநகையுடன் “இனிமேல் உன்னை நான் திட்றதா?”
“எப்படி சொன்னமாதிரியே என்ன நடந்தாலும் உங்களுக்காக வருவேன்னு சொன்னேனா? திரும்ப வந்துட்டேனா?”
“ம்ம்..அதோட எந்த நேரத்துல நான் கேட்டு நீ சொன்னியோ.. இனி உனக்கு என்ன நடந்தாலும் என் கண்ணு முன்னாடி தான் நடக்கும்னு…கடவுளே…அந்த நிலமைல உன்னை பாக்குறதுக்கு எனக்கு உயிரே போயிருந்தா கூட அவளோ பீல் பண்ணிருக்கமாட்டேன் போல.. ஆடிபோய்ட்டேன்.. என அவனது அன்பில் தன்னை தொலைத்தாலும் அவனை சீண்டி சாதாரணமாக்க எண்ணி “அப்டியா? நம்புறமாதிரி இல்லையே?”
“ஏன் டி அப்டி குறுக்க வந்த?”
“பின்ன.. உங்களையும் நம்ம பொண்ணையும் அப்டியே வண்டிக்கு முன்னாடி நிக்க வெச்சு வேடிக்கை பாக்க சொல்றிங்களா? அப்டி என்ன சார்க்கு போனு? நல்லா நாலு கன்னத்துலையே போடணும்…ரொம்ப அசால்ட்டு..சீரியஸ்நெஸே இல்ல.. அப்டியே அடிபட்டதுல நான் போயிருந்தா தான் உங்களுக்கு இனிமேல் கவனமா இருக்கணும்னு நினைப்பு வரும்..” என அவள் விளையாட்டாக கூற அவனோ அமைதியாக தலை கவிழ்ந்தபடி “ப்ளீஸ் நித்து.. அப்டி சொல்லாத..நான் கவனமில்லாம இருந்தது தப்பு தான். சாரி..என்னை அடிக்க கூட செஞ்சிடு.. இன்னொரு தடவ அப்டி உனக்கு வேண்டாம்…அப்போ அத பாக்க நான் இருக்கமாட்டேன்…” என அவள் “அச்சச்சோ..என்ன விஜய் நீங்க.. நான் இதே மாதிரி இன்னும் நாலு சண்டை போடலாம்.. கேம் வெக்கலாம்னு நினைச்சேனே..உங்களுக்கு தான் டைம் பிக்ஸ் பண்ணி கேம் வெக்க ரொம்ப புடிக்கும்ல…சோ நான் நெக்ஸ்ட் ஏதாவது டெஸ்ட் இல்லை சண்டை எப்போன்னு எதிர்பார்த்தேனே..நீங்க இப்டி சொன்னா எப்படி?” என அவள் யோசிக்க விஜய் “இனி லைப்ல எப்படி நீ திட்டுனாலும் சண்டை போட்டாலும் நான் பேசாம உன்னை விட்டுட்டு போனாக்கூட ஒரு செகண்ட் நீ இல்லாத அந்த நிமிசத்த நினச்சு பாத்தாலே நான் அவ்ளோதான்..நான் திரும்பி உன்கிட்ட வந்துடுவேன்….நீ என்ன வேணாலும் சண்டை போட்டுக்கோ.. ஆனா பேச்சுக்குக்கூட இனி அந்த மாதிரி எதுவும் சொல்லாத ..லவ் யூ நித்து. ” என அவன் பாவமாக பேசி அவள் தோளில் சாய்ந்துகொண்டான்.
அவளும் “விஜய்.. இங்க பாருங்க..நான் தான் உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேனு சொல்லிட்டேனே… ”
“இருந்தாலும் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்” என அவன் அப்டியே இருக்க
அவளுக்கு புரிந்தது அவனது வலி யாரிடமும் பகிர கூற முடியாமல் இருந்த அவனது நிலை.. “விஜய் கண்ணா என்னாச்சு…ஏன் என் விசயத்துல மட்டும் நீங்க இன்னும் குழந்தையா இருக்கீங்களோ தெரில.. எவ்ளோ யோசிக்கறீங்க.. சாதிக்கிறிங்க.. ஏன் விஜய் இவளோ எமோஷனல் ஆகுறீங்க.. நீங்க ஜீவாவை விட மோசம்.” என முதுகை வருடி கொடுக்க சற்று நேரம் பொறுத்து அவன் விலக கலங்கிய அவனது கண்களை கண்டவள் மனம் உருகிவிட அருகே அழைத்து “என் விஜய் எப்போவும் பீல் பண்ணக்கூடாது. ஆல்வேஸ் ஸ்ட்ரோங் தான். பிஸிக்கலாவும் சரி மனசளவுலையும் சரி.. எப்போவும் கலங்க கூடாது.. லவ் யூ” என கூறி நெற்றியில் இதழ் பதித்தாள்.
அவனும் புன்னகையுடன் “லவ் யூ டூ நித்து.” என அணைத்துக்கொண்டான்.
வசந்த் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வர அவள் முழித்திருப்பதை பார்த்தவர்கள் மகிழ்வுடன் வந்தனர். ஜீவா ஓடிவந்து “அம்மா…” என கத்திகொண்டே அவளை கட்டிக்கொண்டான்.
“கண்ணா, அழக்கூடாது மா…இங்க பாருங்க.. அதான் அம்மா வந்துட்டேன்ல…”
“நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் மா…உங்களுக்கு எவ்ளோ பிளட் லாஸ் ஆச்சு தெரியுமா? டாக்டர் அங்கிள்ஸ் உங்களுக்கு சரி ஆகுறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க… எனக்கு எவ்ளோ பயமா இருந்தது தெரியுமா? எனக்கு என் அம்மா கூட இருக்கணும்..இவளோ நாள் கழிச்சு இப்போதான் நீங்க என்கிட்ட வந்திருக்கீங்க.. திரும்ப நீங்க இல்லாம இனி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். நான் இனிமேல் உங்களை விட்டு எங்கேயுமே போகமாட்டேன் என அவன் தேம்பி தேம்பி அழுக”
மகனின் பாசத்தில் கண் கலங்க அவனை சமாதானப்படுத்த அவனை நேராக பார்த்து “சரி சரி அம்மா இனிமேல் எங்கேயும் போகமாட்டேன். ஆனா நீ என் கூடவே இருந்தா யார் ஸ்கூல் போறது? நீ இன்னும் நெறையா கத்துக்கணும் வளரணும்ல..”
“நீங்க என் கூட இருங்க நான் எல்லாமே கத்துக்குவேன்… ஆனா இனி உங்களை விட்டு போகமாட்டேன்..”
“ஓகே ஓகே அதுக்காக அழக்கூடாது…”
ஜீவிதா “அவனுக்கு சொல்லுங்க மா.. அழுதிட்டே இருக்கான். யார் சொன்னாலும் கேக்கமாட்டேன்கிறான்…யாருகிட்டேயும் போகமாட்டேன்கிறான்…எல்லாரையும் கத்திட்டான்..” என அவள் புகார் செய்ய
சகஜ நிலைக்கு வந்த ஜீவா “பின்ன..நான் அம்மா வேணும்னு சொல்றேன்.. அம்மாக்கு அடிபட்டிடுச்சுனு பீல் பண்ணிட்டு இருக்கேன்…என்னை தனியா விடாம எல்லாரும் இங்க வா.. என்கிட்ட வா உன்கிட்ட வானு சொல்ராங்க.. அவங்க எல்லாம் என் அம்மாவா? அவங்ககிட்ட போனாமட்டும் என் அம்மாக்கு சரி ஆகுமா?” என அவனது கேள்வியில் பெரியர்வர்கள் சிரித்துவிட
“ம்ம்… ஜீவா பார்ம்க்கு வந்துட்டான் போலவே.. எது எடுத்தாலும் சண்டை போடறது, தப்பிலேனா கத்துறது, டிஸ்டர்ப் பண்ணா சரிக்கு சரியா நிக்கிறது… இதுதான் என் பையன்… அந்த அழகுற ஜீவா வேண்டாம்… எப்போவுமே பிரேவ் பாய் தான் என் ஜீவா குட்டி…” என்றவள் சட்டென தன் உதட்டை கடித்துக்கொண்டு “சாரி ஜீவா..உனக்கு குட்டி சொன்னா புடிக்காதில்லை? சண்டைபோடமாட்டேல ப்ளீஸ்?” என
ஜீவா “நீங்க இனிமேல் என்னவேணாலும் கூப்பிடுங்க.. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன். பிரேவ் பாயா இருக்கேன்..ஆனா என்னை விட்டுட்டு மட்டும் போகாதீங்க மம்மி.. ஐ மிஸ் யூ சோ மச்..” என கூறிக்கொண்டே அவளது தோளில் சாய்ந்துகொண்டு கட்டிக்கொள்ள நேத்ராவிற்கு சற்று முன் விஜயும் இதுபோல செய்தது நினைவு வர அவளுக்கு புன்னகை வர விஜயும் அதையே நினைத்து சிரித்தான்..
அவனது முதுகை வருடி கொடுத்தவள் “சரி எங்கேயும் போகமாட்டேன்.. என் செல்லம் பிரேவ் பாய் அண்ட் குட் பாய் தான்..” என
ஜீவிதா “மம்மி நானும் பிரேவ் கேர்ள் தானே… உங்களுக்கு தெரியுமா?அப்பா பாட்டி எல்லாரையும் நான் தான் சமாதானப்படுத்தினேன்.. நீங்க சொன்னமாதிரி நான் அப்பாகூடவே இருந்து பாத்துக்கிட்டேன்..” என பெருமையாக சொல்ல
நேத்ரா “ம்ம்..?” என ஆச்சரியமாக வினவ
விஜய் அருகே இருந்தவளை மடியில் எடுத்து அமர்த்திக்கொண்டு “ம்ம்… என் குட்டி இளவரசி தான் எவ்ளோ தைரியமா இருந்தாங்க… உண்மையாவே நீ கிரேட்டா தங்கம்..” என
வசந்த் “ஆமாடா ஜீவி.. நானும் கேட்கணும்னு தான் இருந்தேன்.. இந்த குட்டி பாப்ஸ் மட்டும் எப்படி அவளோ தைரியமா இருந்திங்க?”
“அதுவா அங்கிள்…அம்மா சொல்லிருக்காங்க.. நாம மனசுல எதை நினைச்சிட்டே இருக்கோமோ அத எப்போவுமே நம்பிடுவோம்… நாம முழுசா நம்புற ஒரு விஷயம் அடுத்தவங்களுக்கு பிரச்சனை இல்லாம இருந்தா காட் நமக்கு அத கண்டிப்பா கொடுப்பாருன்னு. அதேமாதிரி எந்த ப்ரோப்லேம் வந்தாலும் தைரியமா நம்பிக்கையோட இருக்கனும்.. நெகடிவ்வா திங்க் பண்ணகூடாதுனு..”
“அம்மாக்கு அடிபட்டதும் பஸ்ட் நானும் ரொம்ப பயந்துட்டேன்.. பிளட் எல்லாம் பாத்ததும் கொஞ்ச நேரம் அதான் அழுதிட்டே இருந்தேன்.. அப்புறம் தான் அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.. நானே அம்மாக்கு சரி ஆகிடும்..திரும்ப வந்துடுவாங்கனு எனக்குள்ள சொல்லிகிட்டே இருந்தேன்… அம்மாவும் என்கிட்ட கண்டிப்பா வரேன்னு தானே சொல்லிட்டு போனாங்க.. அவங்க வரவரைக்கும் அப்பா ஜீவாவை பாத்துக்கணும் கூட இருக்கணும்னு தானே சொன்னாங்க.. எப்படியும் அப்போ அம்மா வந்திடுவாங்கனு தான் நான் அத பத்தி கவலைப்படாம அடுத்து அம்மா சொன்னதை செஞ்சேன்..” என கூற
பெரியவர்கள் அனைவர்க்கும் ஆச்சரியம் ‘உண்மைதானே…என்னதான் ஆறுதல் அறிவுரைகள் ஆயிரம் கூறினாலும் அதை தேவைப்படும்போது எண்ணிப்பார்க்கவும் அதை நடைமுறைப்படுத்தவும் எத்தனை பேர் நம்மில் தயாராக உள்ளோம். குழந்தைகளுக்கு கூறும் அறிவுரைகளை எத்தனை பெரியவர்கள் முதலில் கடைபிடிக்கிறார்கள் ஆனால் ஜீவி அதை எவ்வளோ அழகாக யோசித்திருக்கிறாள்’ என விஜய், நேத்ரா, வசந்த் மூவரும் தத்தம் சிந்தனையில் எண்ணிப்பார்த்தனர்..
வசந்த் “யூ சோ ஸ்வீட் டா செல்லம்…” என அவள் தலையை கலைத்துவிட குழந்தை சிரித்துவிட்டு அம்மாவை பார்க்க நேத்ராவும் “ஆல்வேஸ் நீ சமத்து டா குட்டி” என அருகே அழைத்து அவளது நெற்றியில் முத்தமிட ஜீவா பாவமாக அவர்களை பார்த்துக்கொண்டிருக்க மகனின் மனம் அறிந்த தாயோ புன்னகையுடன் அவனையும் அழைத்து அவனுக்கும் முத்தமிட்டு “நீயும் தான் என் செல்லம்..” என கூறிவிட அவனும் மகிழ்ச்சியாகி “அம்மா, இனி நானே உங்களுக்கு எல்லாமே செய்றேன்..கூட இருந்து டேப்லெட் எல்லாம் எடுத்துகுடுக்கறேன் பாத்துக்கறேன்…எப்போ நாம வீட்டுக்கு போவோம்?” என நேத்ரா விஜயை பார்க்க
அவன் “ஆ…சரி நீங்க பேசிட்டு இருங்க.. நான் டாக்டர்கிட்ட பாத்து பேசிட்டு வரேன்.” என ஜீவி “நான் அப்பாகூட..” என்றதும் விஜயும் மகிழ்ச்சியாக அவளை தூக்கிக்கொண்டு வசந்த் விஜய் வசந்த் செல்ல தாயும், மகனும் தனியே விடப்பட்டனர்.
“ம்ம்.. சொல்லுங்க சார்.. எதுக்கு எல்லார்கிட்டயும் கோபப்பட்டு கத்துனீங்களாம்.?”
“அது வந்து மா.. எல்லாரும் இங்க இருக்கமுடியாது சொன்னதால ஊருக்கு போலாம் இங்க டாடி கூட ஹெல்ப்க்கு வேணா யாராவது இருக்கட்டும்னு சொன்னாங்க.. சோ மீதி எல்லாரும் ஊருக்கு நம்ம வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாங்க..என்னையும் கூப்பிட்டாங்க.. நான் மாட்டேன்னு சொன்னேன். திரும்ப திரும்ப கூப்பிட்டாங்க. அதான் உங்க கூட வந்தா மட்டும் என் அம்மாக்கு சரி ஆகிடுமான்னு கேட்டேன்..”
நேத்ரா “ம்ம்..அது சரி அப்டினா அடிபட்டவங்க கூடவே இருந்தா மட்டும் சரி ஆகிடுமா?அப்புறம் எதுக்கு இந்த டாக்டர் டிரீட்மென்ட் எல்லாம்? கூப்டா வரலேன்னு சொல்லணும்.. அதுக்காக கத்துவாங்களா சொல்லு?” என அவள் எதிர்கேள்வி கேட்க அவன் அமைதியாக இருந்தான்.
“சாரி மா…என்றவன் அம்மா என்னை உங்களுக்கு பிடிக்காம போய்டுமா?” என்றான்
“ஏன்டா கண்ணா அப்டி கேக்கற?”
“இல்ல, நீங்க சொன்னமாதிரி எல்லாம் ஜீவி தான் இருக்கா. அழுகாம, தைரியமா, கோபப்படாம, யோசிச்சு எதுனாலும் பண்ரா.. ஆனா நான் அப்டி இல்லையே.. நீங்க அழுகக்கூடாது சொல்லியும் நான் அழுதேன்.. எல்லார்கிட்டயும் சட்டுனு கோபப்பட்டு கத்துறேன்.. நீங்க சொன்னதை எதையும் நான் கேட்கலேனு என்னை பிடிக்கலேன்னு விட்டுட்டு போய்டுவிங்களா மா?” என வினவ
நேத்ரா “ஜீவா…நீ ஏன் இப்டி எல்லாம் யோசிக்கற.. எனக்கு நீயும் ஜீவியும் எப்போவும் ஒண்ணுதான். நான் சொன்னதை அவ செஞ்சான்னா நான் அவகூடவே இருந்தேன்.. கொஞ்சம் கொஞ்சமா அந்த பழக்கம் அவளுக்கு வந்திடுச்சு.. உன்கூட அம்மாவால இவளோ நாள் இருக்கமுடில.. கொஞ்சம் கொஞ்சமா வரப்போகுது.. அவ்ளோதான்.. ஆனாலும் நீ எதுவுமே தப்பா பண்ணலையே.. அழுகறதும் ஒரு பீலிங் உணர்ச்சியோடு வெளிப்பாடு தான்.. எல்லாரும் மனுசங்க தான்.. எல்லாருக்குமே இந்த எல்லா உணர்ச்சிகளும் இருக்கும்.. இருக்கணும். ஒரு லிமிட்க்கு மேல எந்த உணர்ச்சியும் அடக்ககூடாது.. அதுதான் ஆபத்து… பயம், கவலை வருத்தம் வரும்போது அழுகை வருதா அழுதிடு.. கொஞ்சம் அந்த பாரத்தை இறக்கி வெச்சுட்டு தென் அடுத்து என்ன பண்ணனும்னு யோசி.. அழுதுட்டு, இல்ல கோபப்பட்டு கத்திட்டு மட்டுமே இருந்தா எல்லாமே கிடைக்க போகுதா என்ன? எல்லாமே ஒரு அளவா இருந்தாதான் அதுக்கு ஒரு மதிப்பு இருக்கும்.. அது கோபம், அழுகை, சந்தோம், அட்வைஸ் எதுன்னாலும் எப்போவுமே இருந்ததுன்னா அதுக்கு மதிப்பிருக்காது.. அண்ட் என் பையன் தேவையில்லாம கோபப்படமாட்டான்னு தெரியும்.. ஆனா அத எப்படி வெளில காட்டுனா அந்த விஷயம் நடக்குமோ அப்டி காட்டணும்…சோ நீ இந்த மாதிரி எல்லாம் நினைக்காம எப்போவும் போல ஹாப்பியா நீ நீயா இரு.. அதான் மம்மிக்கு டாடிக்கு இரண்டுபேருக்குமே பிடிக்கும்..நீங்க தப்பு பண்ணமாட்டீங்கனு தெரியும்..தெரியாம ஒருவேளை பண்ணாலும் அத எடுத்து சொன்னா அடம்பண்ணாம புரிஞ்சுப்பீங்கனும் தெரியும்..நீங்க என்ன பண்ணாலும் எங்களுக்கு நீ ஜீவி இரண்டுபேருமே பெஸ்ட்தான். ஓகேவா?”
புன்னகையுடன் ஜீவா “ஓகே மம்மி… இனிமேல் நீங்க சொன்னமாதிரி இருந்துக்கறேன்..” என்று அவளை கட்டிக்கொண்டவன் திடீரென
ஜீவா “அம்மா, உங்களுக்கு அடிபட்டது ரொம்ப பெயினா இருக்கா?”
“அவ்ளோவா இல்ல செல்லம். லைட்டா வலிக்கிது.. ” என
“சரி அப்போ நான் மேல சாயல.. உங்களுக்கு வலிக்கும்ல.. நான் பக்கத்துல உக்காந்துக்கறேன்..” என அவன் கூற நேத்ராவிற்கு சிரிப்பும் வந்தது. அவன் அன்பில் ஆனந்தமாய் மனதும் நிறைந்தது.
காயங்கள் குணமாக மட்டும் சில நாட்கள் ஆகும். ரெஸ்டில் இருக்க சொல்லிவிட்டு மறுநாள் அவளை டிஸ்சார்ஜ் செய்வதாக கூற வீட்டில் அனைவரும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து காத்திருந்தனர்.