Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-23

23 – மீண்டும் வருவாயா?

அடுத்து வந்த சில நாட்களில் திருமணவேளை குழந்தைகளின் சேட்டை அதோடு வெளியே கூறாவிடினும் இருவரின் அருகாமையை இருவருமே மிகவும் ரசித்தனர். வாரம் ஒருமுறை என்றால் அனைவரும் ஜீவனின் பெற்றோர் வீட்டிற்கு செல்வது என அனைத்தும் சாதாரணமாகவே சென்றுகொண்டிருந்தது.

எப்போதும் ஜீவன் நித்ரா குழந்தைகளை அழைத்து வந்தால் வீட்டில் அவர்களுடனே இருந்துவிட்டு மாலை அழைத்துச்செல்வது வழக்கம். அன்று வசந்துடன் அவசரம் என ஏதோ கடைக்கு சென்றுவிட்டான். திரும்பி வரும்போது விக்கி வந்து “மாமா அத்தைக்கு அடிபட்டிடுச்சு ” என கூறியதும்தான் தாமதம். விரைந்து வீட்டினுள் சென்றவன் சுற்றி நின்ற அனைவரையும் விலக்கிவிட்டு “நித்து, என்னாச்சுடா. எங்க அடிபட்டிச்சு.  எங்க போன?” என்னாச்சு? வலிக்குதா? ஹாஸ்பிடல் போலாம் வா..” என அவன் பதற அவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

பின் அவன் கேட்டுக்கொண்டே இருக்க நித்ரா “எனக்கு ஒண்ணுமில்ல..” என்றாள்.

வாணி “கதவு பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்திருக்கா. காத்துக்கு கதவு அடிக்க வந்திடிச்சு. குழந்தைங்க உள்ள இருந்து அப்போதான் ஓடிவந்தாங்கனு கதவை சாத்தாம புடிக்க போயி அதுக்குள்ள கையில முட்டிக்கு மேல அடிச்சிடிச்சு . மருந்து போட்டிருக்கு. வேற எதுவுமில்லை அண்ணா” என்றாள்.

 

நித்ராவை பார்க்க அவ்ளோ “ஐ யம் ஓகே…” என்றாள். சுற்றி நின்ற சுமதி, கீதா,சுரேஷ், குமார் அனைவரும் ஜீவனிடம் “டேய், இவளோ பாசம் இருக்கில்ல. இன்னும் ஏன்டா அந்த புள்ளைகிட்ட இருந்து ஒதுங்கியே இருக்க? அவ என்ன டா தப்பு பண்ணா? அவளுக்கு சின்ன காயம்னாலும் உன்னால தாங்கிக்க முடில. அவளும் எப்போவுமே உன்னையே தானே சுத்தி சுத்தி வரா. உனக்கென்ன நேத்ரா மேல இன்னும் கோபம். அவ வீட்டை விட்டு போனது என்ன காரணத்துனாலன்னு உனக்கு நல்லாவே தெரியும். அவமேல எந்த தப்பும் இல்லையே. நீ என்னதான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாலும் சாதாரணமா பேசுனாலும் உனக்கு நேத்ராவுக்கும் இடைல ஏதோ பிரச்சனைனு உன் நடவடிக்கையே அழகா காட்டிக்குடுக்கிது. உங்களுக்குள்ள வேற என்ன பிரச்சனையோ எங்களுக்கு தெரில ஆனா இப்டி இரண்டுபேரும் சங்கடப்பட்டு இப்டி ஒரு தண்டனை தேவையா?” என ஆளாளுக்கு கேள்வி கேட்க அட்வைஸ் செய்ய அமைதியாக நித்ராவை நிமிர்ந்து பார்த்தவன் இறைஞ்சும் அவள் கண்களை காண முடியாமல் “நான் முன்னாடி பிளாட்க்கு போறேன். நீ வா..” என்றுவிட்டு சென்றுவிட்டான்.

அவனையே பார்த்திருந்த அனைவர்க்கும் கவலையாகவும் இருந்தது. விஜய் சென்றதும் நேத்ராவிடம் வந்த வசந்த் “என்ன இருந்தாலும் நீ அவனை அப்டி நினைச்சது தப்பு நேத்ரா. அவன் பீல் பண்ணுவான்னு உனக்கு தோணலையா?” என குறைபட அனைவரும் என்னவென்று பார்க்க ஜீவன் கூறியதை வசந்த் அனைவரிடமும் சொன்னான்.

நேத்ரா மெல்லிய புன்னகையுடன் “நான் தெளிவா தான் அண்ணா சொன்னேன். ஒருவேளை வீட்ல எல்லாரும் அவருக்கு வேற கல்யாணம் பண்ணிவெக்கணும்னு முடிவுல இருந்தா நான் வந்தா குழப்பம் வரும்னு. அவரு அத பண்ணுவாருனோ, அப்டி யோசிப்பாருன்னோ நான் எங்க சொன்னேன். இப்போகூட நிருன்னு ஒரு பொண்ண தானே அவரு கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தது. யாரும் அங்க இந்த நேத்ராவை எதிர்பார்கலையே?

எனக்கு அவரு மட்டும் போதும்ன்னு நினைச்சிருந்தா நான் எப்போவோ வந்திருப்பேன் அண்ணா. கல்யாணம் பண்ணும் போது சரி இப்போவும் சரி எனக்கு அவரு விரும்பற மொத்த குடும்பமும் வேணும்னு தான் தோணுது. எனக்கு இங்க யாரையும் சங்கடப்படுத்தி சண்டைபோட்டு ஒரு மனக்குறையோட வாழ்க்கை வாழ முடியும்னு தோணல அண்ணா.”

சுதா “அப்டியே இருந்தாலும் இப்போவும் உன்னை அவரு கூட்டிட்டு வந்ததும் ஏத்துக்கிட்டோம் தானே?”

நேத்ரா “அக்கா, உங்க எல்லாருக்கும் அவரை இவளோ நாள் பாத்து இப்டி அவன் தனியா இருக்கானே? அவனுக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்கானேனு நினச்சு நினச்சு பீல் பண்ணதால அவன் நம்ம கூட இல்லாட்டியும் பரவால்லை, யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும்னு ஒரு கட்டத்துல நினைச்சிருப்பிங்க. அப்பவும் அவரு தனியா இருந்ததால இதுக்கு நேத்ராவே இருந்திருந்தா பரவாயில்லையேன்னு நினைச்சிருப்பிங்க.

மனசார சொல்லுங்க, நான் போன கொஞ்ச நாள்லையே வந்திருந்தா எல்லாரும் ஏதோ போனவ திரும்பி வந்திட்டா இருக்கட்டும்ன்னு தான் நினைச்சிருப்பீங்களே தவிர மனசார ஏத்திடிருப்பிங்களா? திரும்ப அவருக்கு இல்ல எங்களுக்குள்ளையே ஏதாவது பிரச்சனை வந்தா இதுக்கு தான் அன்னைக்கே வேண்டாம்னு நினைச்சது. ஒரு குறையா தானே யோசிச்சிருப்பிங்க. அதை அவர்கிட்ட மனசு கேட்காம சொன்னாலும் அவரு  சண்டை கூட போடுவாரே தவிர என்னைவிட்டு இன்னொரு பொண்ணுகிட்ட போகமாட்டாரு. உங்ககிட்டேயும் நார்மலா இருக்கமுடியாம இப்டி நினைச்சிட்டாங்களேன்னு ரொம்ப வருத்தப்படுவாரு.

 

அடுத்து அடுத்து நமக்கு பிடிச்சவங்க நம்ம கண்ணு முன்னாடி கஷ்டப்படும் போது தான் அவங்களுக்கு பிடிச்சதே கொடுக்கலாம்னு எல்லாருக்கும் தோணுது. சாதாரணமா கேட்கும் போது யாரு அதை ஏத்துக்கறாங்க?”

 

கீதா, “ஒரு நேரத்துல கோபத்துல என்ன பண்றோம்னு தெரியாம அப்டி பண்ணிட்டோம் தான். ஆனா எப்போவுமே எல்லாரும் அப்டி தப்பானவங்களாவே இருப்பாங்கன்னு சொல்லமுடியுமா? இதை நீ யோசிக்கமாட்டியா? அவங்க கேரக்டரே தப்பானவங்களா தான் இருப்பாங்களா?”

நேத்ரா “அண்ணி, இதுல கேரக்டர் தப்புனு நான் சொல்லலியே. எல்லாரும் மனுசங்க தான் உணர்ச்சிகளுக்கு அடிமையாகுறவங்க தான்.

சரி பேரெண்ட்ஸ் குழந்தைகளுக்காக சம்பாரிக்கணும்னு ராத்திரியும் பகலுமா உழைக்கிறாங்க. ஆனா அப்டி தன்னையே வருத்திகிட்டு குழந்தைக்காக கஷ்டப்படுற பெத்தவங்களுக்கு குழந்தைங்க கூட இருக்கணும்னு ஆசை பட்டா கூட நிறைவேத்த முடில. அவங்களுக்கு மனசளவுல என்ன எதிர்பார்க்கறாங்க, எது அவங்க சந்தோசம்னு பாக்க மறந்துடறாங்க.

இதுல யாரு தப்பானவங்க குழந்தைங்க எத விரும்பறாங்கனு தெரியாம தேவையான எல்லாத்தையும் வாங்கிக்குடுத்திட்டா போதும்னு நினைக்கிற பேரெண்ட்ஸா? நம்ம கூட இல்லாட்டியும் நம்ம வாழ்க்கைக்காகதானே இவளோ கஷ்டப்படுறாங்கனு புரிஞ்சுக்காம எங்க அம்மா அப்பாக்கு என் மேல பாசமேயில்லைனு சொல்ற குழந்தைகளையா? யாரு தப்பு சொல்லுவீங்க.

அவங்கவங்க மனசுக்குனு ஒண்ணு சரினு படும் புடிக்கும். அதுதான் மத்தவங்களுக்கு பொருந்தும்னு நாமளே ஒரு ஸ்ட்ராட்டஜி வெச்சறோம். ஆனா எப்போவுமே எல்லாருமே நமக்கு நெருக்கமானவங்களுக்கு நல்லது எதுன்னு தானே பாக்கறாங்களே தவிர பிடிச்சது எதுன்னு முதல வெச்சு யோசிக்கறாங்களா? அப்டி ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தா இப்போ இவளோ கஷ்டம் யாருக்குமே தேவையில்லையே?” என அவள் கூற வீட்டில் அனைவரும் அதை இல்லை என மறுக்கமுடியாமல் மௌனம் காத்தனர்.

நேத்ரா “நடந்த எதையும் மாத்த முடியாது. யாரும் நினச்சு பீல் பண்ணி கொழப்பிக்காதீங்க. நான் அவர்கிட்ட பேசிக்கறேன். எங்களுக்குள்ள பிரச்சனை ரொம்ப நாள் எல்லாம் இருக்காது.” என்றவள் குழந்தைகள் இன்று இருக்கட்டும் மறுநாள் வசந்த் வாணி திருமணம் முடிந்த பின் அழைத்துச்செல்வதாக கூறிவிட்டு சென்றாள்.

 

வாசுகி “அப்போ அன்னைக்கு நாம பண்ணது தான் இவளோ பிரச்னைக்கும் காரணம்னு சொல்றாளா?”

சுந்தரம் “கண்டிப்பா.. அதுல என்ன சந்தேகம். ஜீவன் உயிர் முக்கியம் அவ வாழணும்னு நினச்சு அந்த புள்ளையே பேசி அனுப்பிச்சிட்டோம். ஆனா அவனோட சந்தோசம் வாழ்க்கை எல்லாமே அவதான்னு நாம புரிஞ்சுக்கலையே. இத்தனை வருஷம் அவன் நாம கேட்ட அந்த வெறும் உயிரோட மட்டும் தான் நம்ம கண்ணு முன்னாடி நடமாடினான். ஆனா சந்தோசம் இல்லையே?… நேத்ரா புத்திசாலி பொண்ணு உங்களால தான் இந்த பிரச்சனைனு சொல்லாம சொல்லிட்டா.” என்றார். பின் புன்னகையுடன் “எல்லாரும் எதுவும் கவலைப்படாம போங்க. அதான் என் மருமக சொல்லிருக்கால்ள ‘எங்களுக்குள்ள பிரச்சனை ரொம்ப நாள் எல்லாம் இருக்காது. அவர்கிட்ட பேசிக்கறேன்னு’ அவ பாத்துப்பா…” என அனைவரும் மனம் லேசாக களைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-18ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-18

18 – மீண்டும் வருவாயா? அன்புள்ள உறவுகளுக்கு, இந்த லெட்டர் அம்மா அப்பாக்கு மட்டுமில்ல.. ஏன்னா உங்க எல்லாருக்குமே தான் என் மேல பாசம் அதிகமாட்டாச்சே. எல்லாருக்குமே தான் நான் பதில் சொல்லியாகணும். என்னை எல்லாரும் என்னனு நினைச்சீங்கனு எனக்கு தெரில.

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5

5 – மீண்டும் வருவாயா? ஜீவன் “நித்து நீ எப்போ திரும்பி வருவ? ஒருவேளை நீ கூட இருந்து வளத்திருந்தா ஜீவா இப்போ இருக்கறமாதிரி தான் அம்மா அம்மானு இருந்திருப்பான்ல..நம்ம பையனுக்கு அம்மா ஏக்கம் வந்திடிச்சா? இல்ல ஜீவிதாவோட அம்மா அவளோ

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6

6 – மீண்டும் வருவாயா? அன்று அனைவரும் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டனர். நிருவிற்கு இன்னும் சிறுது வேலை இருக்க மாலை குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கோப்புகளை எடுத்துக்கொண்டே கிளம்பிவிட்டாள். நிருவை பார்த்ததும் ஜீவி, ஜீவா இருவரும் எப்போதும்