Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-21

21 – மீண்டும் வருவாயா?

 

வசந்த் “ஆனா ஏன்டா. அவங்க திரும்ப நேத்ரா வந்தாலும் ஏத்துக்கற மனநிலைல தானே இருந்தாங்க. அதுனால என்ன பிரச்சனை வரப்போகுது. ஏன் மறைக்க சொல்ற? அதோட இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்?”

ஜீவன் “அவங்களுக்கு நேத்ரா வந்தாலும் ஓகே சொன்னாங்க. ஆனா அன்னைக்கு அவங்க பேசுன விஷயம் தப்புனு இப்போவரைக்கும் உணரல. எனக்கு பையன் பொறந்திட்டான். நானும் உயிரோட வந்திட்டேனு தெரிஞ்சதால அப்டி ஏத்துக்கறாங்க. ஆனா அவங்களோட அந்த நம்பிக்கை.. எனக்கு பொண்ணு பொறந்தா எனக்கு பிரச்சனை அவ எங்க வாழ்க்கைல வேண்டாம்னு சொன்னதை அவங்க இப்போவரைக்கும் தப்புனு சொல்லலையே… இப்போவும் ஜீவிதா நிருன்னு யாரோ ஒருத்தியோட பொண்ணுனு தான் அவங்க ஏத்துக்கறாங்க. ஜீவிதாவும் என் பொண்ணுனு தெரியவரும்போது அவங்களுக்கு அன்னைக்கு விட்ட அதே சந்தேகம் குழப்பம் திரும்ப வராதுன்னு என்ன நிச்சயம். எனக்கு சின்னதா ஏதாவது பிரச்சனை வந்தாலும் உடனே அதுக்கு அவ நேரம் தான் காரணம்னு குறை சொல்லிட்டா பாவம்டா குழந்தை..அதுக்கு நான் இடமே கொடுக்கமாட்டேன். என் மனைவியையும் பொண்ணையும் அவங்க முழுசா மனசார ஏத்துக்கறாங்கனு  தெரியறவரைக்கும் எனக்கு திரும்ப அவங்களோட பழையமாதிரி இருக்கறதுல உடன்பாடில்லைடா. அதோட நேத்ரா அந்த வீட்டை விட்டு வெளில வரும்போது எதெல்லாம் இழந்தாலோ அதெல்லாம் அவளுக்கு திரும்ப குடுக்கணும்டா. அவ அவ்ளோதூரம் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம தாலியா எடுத்துட்டு தானே வீட்டை விட்டு போகசொன்னாங்க. அவங்க குறைனு சொன்ன இரண்டுவிஷயம் எனக்கு பொண்ணு பொறக்கறது, நான் கட்டுன தாலி நேத்ரா கழுத்துல இருக்கறது தானே. இந்த தடவை அது இரண்டையும் சேத்தி தான் என் வாழ்க்கைல ஏத்துக்கப்போறேன். என்ன வருதுன்னு பாத்துக்கலாம்.” என்றவன் அடுத்து செய்ய வேண்டியதை கூறினான். நேத்ரா வாணியிடம் கூறிவிட்டு வெளியே சென்றனர்.

 

மறுநாள் காலை ஜீவனின் குடும்பத்தார் அனைவரும் மகிழ்வுடன் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். இருப்பினும் அவனே நிருவை அழைத்துவருவதாக கூறியதும் இவ்வளவு விரைவில் திருமணம் ஏற்பாடு செய்ததும் சற்று ஏதோ உறுத்தவும் செய்தது. அதோடு கணேஷிடம் மட்டும் உண்மையை கூறி நேத்ராவின் குடும்பத்தினரையும் அழைத்துவர சொன்னான். அனைவர்க்கும் சற்று சங்கடமான மனநிலையில் இருக்க இருந்தும் யாரும் எதுவும் பேசவில்லை ஜீவனிடமும் கேள்வி கேட்கவில்லை. முகூர்த்தத்திற்கு அரைமணி நேரம் முன்பே கோவிலுக்கு நிருவுடன் வந்திறங்கினான். அனைவரும் யாரோ ஒரு பெண் என்று எதிர்பார்க்க அங்கே வந்த நேத்ராவை கண்டவர்களின் உணர்ச்சிகள் ஆச்சரியம், திகைப்பு, மகிழ்ச்சி என வெவ்வேறு வகையாக இருந்தது. ஆனால் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் திகைப்பில் நன்றாக தெரிந்தது. அதைவிட நேத்ராவின் நிலை திகைப்பு அதிகமாகவே இருந்தது. அவளிடமும் கோவிலுக்கு செல்லலாம், திருமணத்தில் கட்டிய புடவையை கட்டிக்கொள் என்று மட்டுமே கூறி இருந்தான்.. அவளும் பல காலம் கழித்து சந்தித்ததில் அவன் இவ்வாறு சிறு சிறு விஷயங்களும் எதிர்பார்க்கிறான் என நினைத்தவள் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள். ஆனால் இங்கே நடப்பது எல்லாம் கண்டவள் விஜயை குழப்பமாக பார்த்தாள். அவனோ அனைவரின் முன்னிலையில் அவளின் கைப்பற்றி உள்ளங்கையில் வைத்தவன் “எனக்கும் உனக்கும் இப்போ கல்யாணம்.. உன்னை கேட்காம நான் எல்லாமே பண்ணிட்டேன். ஆனா இது எல்லாமே நடக்கணும் அதுக்காக தான். உனக்கு?” என கேள்வியோடு நிறுத்த சில நொடிகள் அமைதி காத்தவள் விஜயின் கண்களை நேராக பார்த்து புன்னகையுடன் சம்மதம் கூற, அடுத்த சற்று நேரத்தில் இவர்களின் திருமணமும் நடந்தேறியது.

 

நேத்ராவிடம் அனைவரும் எப்படி இருக்க, இவளோ நாள் எங்க இருந்த, ஏன் வரல எனவும் விஜயிடம் நேத்ராவை எப்போ பாத்த? ஏன் முன்னாடியே சொல்லல? என பல கேள்விகள் கேட்க விசாரிக்க என்றிருந்தனர். விஜயின் தந்தை “எப்டியோப்பா திரும்ப ஒண்ணா சேந்ததுல ரொம்ப  சந்தோசம், வாங்க எல்லாரும் வீட்டுக்கு போலாம். அங்க போயி எதுனாலும் பேசிக்கலாம்..” என மகிழ்வுடன் அழைக்க வர மறுக்க எண்ணிய விஜய் பேசும்முன் குழந்தைகள் “ஆமாப்பா வீட்டுக்கு போலாம். அம்மா அங்க ஜாலியா இருக்கும். நான் உங்களுக்கு என்னோட திங்ஸ் எல்லாம் காட்டுறேன். போலாம் மா. ப்ளீஸ்ப்பா..” என குழந்தைகள் கேட்க அதோடு ரமேஷ், விக்கி உட்பட “ப்ளீஸ் சித்தி வாங்க வீட்டுக்கு போலாம்.”

“ஆமா அத்தை நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். வீட்டுக்கு போலாம்.” என நேத்ராவிற்கு மறுக்க தோணவில்லை. ஆனால் விஜய் இதை எதையும் ஏற்கும் எண்ணத்தில் இல்லாமல் இருக்க இறுதியாக நேத்ரா விஜயிடம் “விஜய் போலாமே.. ப்ளீஸ்.” என மெல்லிய குரலில் கேட்க அவளின் கெஞ்சும் கண்களையும், மனதை பிரதிபலிக்கும் முகத்தையும் அன்பையும் கண்டவன் இவளையா வீட்ட விட்டு வெளிய போகசொன்னாங்க என மீண்டும் மீண்டும் எண்ணி வருந்தியவன் அவளுக்காக ஒப்புக்கொண்டான்.

 

வீட்டிற்கு சென்றதும் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர். பின் அனைவரும் நேத்ரா எங்கே இருந்தாள் என்ன செய்கிறாள் என அனைத்தும் விசாரித்து அவளிடம் முன்பு நிகழ்ந்தவைக்கு மன்னிப்பு வேண்டினர். பிறந்த வீட்டினரும் தாங்கள் அவசரப்பட்டு அன்று எடுத்த முடிவில் தான் தங்களை விட்டு சென்றுவிட்டதாக கூறி புரிந்துகொள்ளாததற்கும் மன்னிப்பு கோரினர். அவள் விரக்தி புன்னகையுடன் அமைதியாக நகர்ந்துவிட்டாலே தவிர யாரிடமும் சரி மன்னிச்சிட்டேன் என்றும் கூறவில்லை. ஏன் இப்டி பண்ணீங்க என்று சண்டை போடவும் இல்லை. இதை கவனித்துக்கொண்டிருந்த விஜயும் எதுவும் கூறாமல் இருந்தான்.

 

இரு குடும்ப பெரியவர்களும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு பழையபடி பேசிக்கொண்டனர். இனி விஜய், நேத்ரா, குழந்தைகளுடன் இங்கேயே இருக்கலாம் என சுந்தரம் கூற விஜய் கண்டிப்பாக மறுத்துவிட்டான். எவ்வளவு எடுத்துக்கூறியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வப்போது வீட்டிற்கு வருவது, போவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தங்க விருப்பமில்லை என்றுவிட்டான். குழந்தைகள் பிரியப்பட்டால் விடுமுறை தினத்தன்று விட்டு செல்வதாகவும் பின்னர் வந்து அழைத்துச்செல்கிறோம் எனவும் கூறினான். ஆனால் தானும் நேத்ராவும் பிளாட்க்கு சென்றே தாங்கிகொள்ள்வதாக கூறிவிட்டான்.

அனைவரும் காலையில் இருந்து பார்த்ததில் எப்படியும் அவள் கூறினால் கேட்டுவிடுவான் என்ற நம்பிக்கையில் நேத்ராவிடம் “நீயாவது சொல்லுமா.” என எடுத்துக்கூறியும் அவள் இந்த விஷயத்தில் “அவரோட முடிவு தான் எனக்கும். அவருக்கு எது ஓகேன்னு தோணுதோ அத பண்ணட்டும். இதுல நான் எதுவும் கேட்கமாட்டேன். அவரை கம்பெல் பண்ணமாட்டேன்.” என்று கூறிவிட்டாள்.

“அப்போ எங்ககூட இருக்கணும்னு உனக்கு ஆசையில்லையா? அவனை விடு. உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு ” என எப்படியும் இருக்கவைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் வினவ

நேத்ரா “எனக்கு அந்த மாதிரி தனியா எதுவுமே தோணல. அவரு இஷ்டம் தான் என் இஷ்டமும்.. இதுக்கு மேல அவரை கஷ்டப்படுத்தவும், கட்டாயப்படுத்தவும் விருப்பம் இல்லை.. அதனால சொல்றேன்.” என அவள் விஜயை பார்த்து கூற விஜய் எதுவும் கூறாமல் எழுந்து வெளியே சென்றுவிட இதை கவனித்த அனைவரும் மேலும் அவளது பதிலில் அமைதியாகினர். ஏதோ அவர்களுக்குள் சரியில்லை என்று கணித்தவர்கள் இப்போதைக்கு அவர்கள் தனியாக இருப்பதே நல்லது என அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டனர்.

விடைபெற்றுக்கொண்டு குழந்தைகளுடன் கிளம்பிவந்ததும் குழந்தைகளும் இருவரிடமும் பேச விளையாட என அவர்களின் கனவு முழுமை அடைந்தது போல உணர்ந்தனர். உறங்க சென்றதும் நேத்ரா “நீங்க தூங்கலையா?”

விஜய் “இல்லை. எனக்கு தூக்கம்..” என முடிக்கும் முன்

ஜீவா “அம்மா, இங்க வாங்க. எனக்கு அந்த ப்ளூ கலர் பெட்சீட் தான் வேணும். என் பாவ்ரிட் அத எடுத்துக்கொடுங்க. இங்க என் பக்கத்துல தான் நீங்க படுக்கணும். நாளைக்கு ஜீவி. நாங்க இரண்டுபேரும் அக்ரீமெண்ட் போட்டுக்கிட்டோமே..” என அவன் பேசிக்கொண்டே இருக்க இவள் புன்னகையுடன் “எல்லாம் ஓகே தான். இப்போ தூங்கு. என குழந்தைகளிடமும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அனைத்தையும் ஒழுங்குபடுத்தி தூங்கவைத்துவிட்டு வெளியே வந்தாள்.

அவள் வந்ததை அறிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க சிரிப்புடன் நேத்ரா தொண்டையை செரும விஜய் “போயி தூங்க வேண்டியது தானே. உன் பையன் தான் உன்னை கூப்பிட்டே இருக்கானே. பாவம் ஏமாந்திடப்போறான். அப்புறம் ரொம்ப கத்துவான்..நீ அவன்கிட்டேயே போம்மா..” என கிண்டல் கலந்து சற்று கோபதொனியில் சொல்ல அதை கண்டு மெல்லிய புன்னகையுடன் விஜயின் அருகில் வந்தவள் “அவனை தூங்கவெச்சுட்டேன்…அப்டியே ஒருவேளை அவன் கத்தினாலும் பரவால்லை .. நான் சமாளிச்சுக்கறேன்.. ஒரு குழந்தையை பாத்துட்டு இன்னொரு குழந்தைய பீல் பண்ணவெக்ககூடாதில்ல.. என அவள் கண்சிமிட்ட ஒரு நொடி அவன் பழைய நினைவுகளில் மெய்மறந்து அவளை பார்க்க அவனை அணைத்துக்கொண்டு “ஏன்னா, அந்த குழந்தையோட கோபத்தை விட இந்த குழந்தையோட கோபம் தான் ரொம்ப அதிகம்…பாவம்… இந்த பையன் தான் ஆல்ரெடி ரொம்ப ஏமாந்திட்டான்..” அவன் அமைதியாக அவளிடம் “போயி தூங்கலாமா?” என்றான்.

நேத்ரா “உடனே தூக்கம் வந்திடிச்சா?” என நம்பாமல் பார்க்க விஜய் அவள் கண்களை தவிர்த்து உள்ளே சென்று படுத்துகொண்டான்.

விஜய், ஜீவி, ஜீவா, நேத்ரா என வரிசையாக படுத்திருக்க நேத்ரா படுத்ததும் ஜீவா அவள் புறம் திரும்பி மேலே கை போட்டுக்கொள்ள அவளும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள ஜீவி உறக்கத்தில் சிணுங்க அவளையும் தட்டிக்கொடுக்க அமைதியாக உறங்கினர். இதை கவனித்துக்கொண்டே உறங்கிய விஜய் குழந்தையின் மேல் இருந்த அவள் கைகளை மட்டும் பற்றிக்கொண்டான். கண் திறந்து பார்க்க கையை மீட்க நினைத்து உருவ அதை இறுக பற்றியிருந்தான். புன்னகையுடன் இவளும் உறங்கிவிட்டாள்.

 

அடுத்து வசந்த் வாணி இருவரின் திருமணம் என பேச்சுவார்த்தையை நேத்ரா ஆரம்பிக்க, வாணி தனக்கு யாருமில்லை என வருந்த விஜய் இங்க பாருமா, என் தங்கச்சி கல்யாணம் எப்படி பண்றேன்னு மட்டும் பாரு. உனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டு நீ ஜாலியா இரு. நாங்க பாத்துக்கறோம். உனக்கு யாருமில்லைன்னு பீல் பண்றது, கண்கலங்கிறது எல்லாம் இனிமேல் இருக்கவே கூடாது என்றவன் கூறியது போல வீட்டில் பேசி கல்யாணத்தை சூப்பரா பண்ணணும் என முடிவெடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-29ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-29

29 – மீண்டும் வருவாயா? நேத்ரா அனைத்தும் எடுத்து பேக் பண்ணிவிட்டு விஜயை அழைக்க “என்ன நித்து கிளம்பலாமா?” அவளோ “கடைசிவரைக்கும் எங்க போறோம் எப்போ ரீட்டர்ன்னு தான் சொல்லல..டிரஸ் எடுத்து வெச்சதாவது போதுமா ஓகே வான்னு பாருங்க..” என அவன்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-20ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-20

20 – மீண்டும் வருவாயா? இதுவரை நடந்ததை கூறிமுடித்த வசந்த் வாணியிடம் “ஆனா அதுக்கப்புறம் ஜீவன் அப்பா அம்மான்னு மொத்த குடும்பமும் ரொம்பவே பீல் பண்ணாங்க…பாப்போம் இனி எல்லாமே சரி ஆகிடும்னு நினைக்கிறேன்..நேத்ராவுக்கு அப்போவே இன்னொரு குழந்தை பொறந்தது இதெல்லாம் எங்களுக்கு

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)

35 – மீண்டும் வருவாயா?   பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட நேத்ராவிற்கு ஒவ்வொருவரும் பரிசு தர ஜீவி “அம்மா..இந்தாங்க…” என ஒரு போட்டோ பிரேம் நீட்ட அதில் விஜய் நித்து ஜீவி ஜீவா நால்வரும் ஒன்றாக இருக்கும் பள்ளி