Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-15

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-15

15 – மீண்டும் வருவாயா?

 

வீடு, குழந்தைகளை பார்த்துக்கொண்டு பேங்கிங் தேர்வுகளுக்கு படிக்கறேன்னு என கூற அனைவரும் ஒப்புக்கொண்டனர். குமார், வசந்த், சுரேஷ் என மூவரும் அண்ணன்களாக அவளை காத்தனர். சுதா, கீதா இருவரும் அவளை உடன் பிறவா சகோதரியாக தோழியாக பாவித்தனர். அவர்களின் குழந்தைகளுக்கும் நேத்ரா தான் பொறுப்பு என விட்டுவிட்டனர். விஜய் வரும் ஒரு மாதமும் வீட்டில் இன்னமும் கோலாகலமாக இருக்கும்.

 

அனைத்தும் நலமாக சென்று கொண்டிருக்க ஒரு நாள் நேத்ராவிற்கு தலை சுற்ற யோசித்தவள் முகத்தில் புன்னகை மலர வயிற்றில் கைவைத்தவள் மறுநொடி முகம் வாடியது. விஜயிடம் முதலில் சொல்லலாம் என்றால் அவன் இப்போதுதான் வந்து சென்றான். திரும்ப வர வாய்ப்பில்லை. என மனம் கூற யாரிடமும் ஏனோ எதுவும் சொல்ல தோணாமல் கிளம்பி கிளாஸ்க்கு சென்றுவிட்டாள். இப்படியாக ஒரு வாரம் நகர எப்படியும் இவர்களிடம்தான் சொல்லவேண்டும். விஜய் வர இயலாது என அறிந்தும் ஏன் வீட்டில் கூற தன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. எதற்கு இந்த காத்திருப்பு என புரியாமல் மனம் குழப்பத்துடன் சரி என்னவோ இன்னைக்கு பாத்துட்டு நாளைக்கு எல்லார்கிட்டயும் சொல்லிடலாம். எல்லாரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க. என எண்ணிக்கொண்டே வீட்டிற்கு வர அங்கே கண்டது சாட்சாத் விஜயே தான். அவள் அப்டியே சிலையென நிற்க அவளிடம் வந்தவன் “ஓய்.. என்ன அப்டியே பிரீஸ் ஆகிட்ட.. உண்மைய சொல்லு என்னை ரொம்ப எதிர்பார்த்த தானே.?” என கண்ணடிக்க பொதுவாக அவன் வீட்டில் அனைவரின்  முன்பும் இவ்வாறு சீண்டினால் வெட்கத்தில் நகர்ந்து செல்பவள் இன்று முழு மகிழ்வுடன் ஆமாம் என கூறி அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள். அவள் கண்களில் நீர் கோர்க்க “டேய் என்னாச்சு என் செல்லத்துக்கு.. எப்போவுமே இவளோ எமோஷனல் ஆகாதே.. என்னை பாரு.. இந்த அழுகிற பாப்பாவை பாக்கலாம்.” என அவளை முகத்தை பார்க்க முயல வசந்தா “டேய், போதும்டா சும்மா அவளை சீண்டிகிட்டே இருக்காத. புள்ளை பாவம். ஒரு வாரமா அவ முகமே சரில்லை. அவளை கூட்டிட்டு போயி கொஞ்ச நேரம் பேசிட்டு இரு. நாங்க டிபன் ரெடி பண்ணிட்டு கூப்படறோம்.” என அனுப்பிவைக்க

 

அவனும் சிரிப்புடன் அவளை அழைத்து செல்ல உள்ளே சென்றவள் அவனிடம் “திடிர்னு எப்படி வந்திங்க.?”

விஜய் “ஒரு வேலை இருந்தது அதான் வந்தேன்.. முடிச்சிட்டு சரி போகும்போது ஒரு 2 டேஸ் அப்படியே பாத்திட்டு போலாமேன்னு.”

நித்து அவனை உற்று பார்த்தவள் “ஏதாவது பிரச்னையா?”

விஜய் ஒரு நொடி அவளை பார்த்தவன் அவளின் கன்னம் பற்றி “அதெல்லாம் ஒண்ணுமில்ல டி. என் பொண்டாட்டிய பாக்க வரக்கூடாதா. இதுக்கு எல்லாம் பார்டர்ல பாம் போட்டா பிரச்சனை பண்ணுவாங்க.?” என

இவளும் சிரித்துக்கொண்டே “அதெல்லாம் சரிதான் ஆனா பிரச்சனையோ குழப்பமோ ஏதோ ஒண்ணு இருக்கு. அது என்னனு நீங்க தான் சொல்லணும். தோணுச்சுனா சொல்லுங்க. இல்லை கம்பெல் பண்ணல. ஆனா ஒண்ணும் இல்லேனு பொய் மட்டும் சொல்லாதீங்க.” என அவளும் கன்னம் தட்டிவிட்டு நகர அவளை இழுத்து படுக்கையில் அமரவைத்தவன் அவளது மடியில் படுத்துக்கொண்டு “பிராடு, சொல்றேன் இரு. உண்மைதான். இப்போ நடந்த மிஷன்ல எங்க டீம்ல இருந்து ஒருத்தன் இறந்திட்டான். நல்ல பழக்கம். பாடிய அவங்க குடும்பத்துக்கிட்ட ஒப்படைக்க தான் வந்தோம். அங்க எல்லாரும் அழுதது, பொலம்பினது.. அவனோட மனைவி அவங்களோட குடும்பத்துல இருக்கறவங்க எல்லாம் “எங்க பொண்ணு வாழ்க்கையே போச்சு. இதுக்கு தான் அன்னைக்கே இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன். இப்டி கேக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு பாதில வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறாளே.. எத்தனை தடவை சொன்னேன்.. உன் புருஷன்கிட்ட பேசுடின்னு… உன் மாமனார் மாமியார்கிட்டேயும் கேட்டோமே.. நாட்டுக்காக உழைச்சது பாத்தது போதும், இனிமேல் கொஞ்சம் வீடு குடும்பம்னு வாழட்டும்.. இரெண்டுகெட்டான் வயசுல புள்ளைங்க இருக்கு. இங்க வர சொல்லுங்கன்னு… அப்போ எல்லாம் முடியாதுனு சொன்னாங்களே. இப்போ 2 பொம்பள புள்ளைங்கள வெச்சுகிட்டு நீ தனியா நிக்கிரியே இனி உன் வாழ்க்கை கேள்வி குறியாகிடுச்சேனு சொல்லி புலம்பினாங்க”. பையனோட அம்மா அப்பா அவளோ கஷ்டத்துலையும் எவ்ளோ ஆறுதல் சொல்லியும் அந்த பொண்ணோட பேரெண்ட்ஸ் கேக்காம அவங்க பொண்ணையும் குழந்தைங்களையும் உடனே கூட்டிட்டு போய்ட்டாங்க… அந்த பெரியவர் எங்க மருமகளுக்கு வேற நல்ல வாழ்க்கையை கூட நாங்களே அமைச்சு தரோம்..என் பேத்திங்க இல்லாம வீடே வெறுச்சோனு இருக்கும்… அவங்கள நாங்க நல்லா பாத்துக்கறோம் எங்ககிட்ட இருக்கட்டும்னு எவ்ளோ சொல்லியும் கேட்கவேயில்லை..குழந்தைங்கள கூட்டிட்டு அந்தம்மா போய்ட்டாங்க.. ‘ அவங்க போனப்புறம் பையனோட அம்மாவும் அப்பாவும் இனி நாங்க வாழ்ந்து என்ன பண்ணறதுனு அவங்களும் மருந்தை குடிக்க போய்ட்டாங்க. இன்னைக்கு நாங்க இருந்தோம் காப்பாத்திட்டோம்.. ஆனா இனி ? அவங்களும் தான் பாவம் என்ன பண்ணுவாங்க..ஒருவேளை அந்த குழந்தைங்க மருமக அவங்களோட  இருந்திருந்தா கூட ஏதோ இவங்களுக்காகன்னு வாழ்ந்திருப்பாங்களோ என்னவோ.’

இது எனக்கு ஒன்னும் புதுசில்லை தான். ஒரு ஒரு தடவையும் யாராவது இறந்துட்டாங்கன்னா அவங்க குடும்பம் கதறத கேட்கும்போது ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். ஆனாலும் இந்த தடவை என அவன் தயக்கமாக நிறுத்த நித்து இடக்கையால் அவனது தலையை கோதிவிட்டவள் வலக்கையை  அவனின் கைகளுக்குள் வைத்தவள் “இங்க யாரும் அப்டி யாரையும் குறை சொல்லி சங்கடப்படுத்தமாட்டாங்க…” என

அவன் சட்டென்று அவளை நோக்கியவன் “நித்து, இல்லடா.. நான் அப்டினு சொல்லவரல..எனக்கு அந்த பொண்ணை நினைச்சா கொஞ்சம் வருத்தமா இருந்தது…” என அவன் முடிக்க முடியாமல் திணற நித்து “அதனால அதே மாதிரி ப்ரோப்லேம் இங்க வந்தா என்ன ஆகும்னு நினச்சு பீல் பண்றிங்களா?” அவன் ஏதோ சொல்லவர அவளே தொடர்ந்து “நான் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க. நீங்க எனக்கு எந்த துரோகமும் பண்ணல. நீங்க இந்த வேலைல இருக்கீங்கன்னு தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்க.. நானும் விரும்பி தான் வந்தேன். எத்தனை வருஷம் கூட வாழறோம்ங்கிறத விட வாழற காலத்துல எவ்ளோ நிம்மதியா சந்தோசமா மனசார வாழ்ந்திருக்கோம்கிறது தான் முக்கியம். உங்களுக்கு இந்த வேலை எவ்ளோபிடிக்கும்னு எனக்கு தெரியும் விஜய். இதை வேலைங்கிறத விட சேவையா நினச்சு பண்ணிட்டு இருக்கீங்க.. சோ எனக்கு எந்த உறுத்தலும் கவலையும் இல்லை…எனக்கு இதுவரைக்கும் இல்லை இனிமேலும் உங்கள உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை விட்டுட்டு இங்க வாங்கனு கூப்பிடற ஐடியா இல்லை. எனக்கு மட்டுமில்லை என் அம்மா அப்பானு குடும்பத்துல ஒருத்தர் கூட சொன்னதில்லை. எல்லாருக்கும் உங்கமேலையும் இந்த குடும்பத்து மேலையும் அவ்ளோ நம்பிக்கை. நீங்க அதனால வீணா மனச போட்டு கொழப்பிக்காதீங்க.”

 

புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டவன் “நான் இன்னொன்னு கேட்கிறேன். எனக்கு தெரிஞ்சுக்கணும் அதனால தான்… சோ கோவிச்சுக்காம பதில் சொல்லு.” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவன் “இதுவரைக்கும் நான் இறந்துட்டா என்னாகும்னு யோசிச்சதேயில்லை. ஆனா இப்போ தோணுது. நித்து, நான் ஒருவேளை இல்லாம போய்ட்டா நீ என்ன பண்ணுவ?”

அவள் அமைதியாக இருக்க விஜய் “சாரி நித்து நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல.. இன்னைக்கு நடந்த விஷயம் என்னை அவ்ளோ பாதிச்சிடிச்சு. அந்த பொண்ணோட அம்மா அப்பாவை நான் தப்பு சொல்லல. அதேசமயம் அந்த பொண்ணும் எதுவும் சொல்லாம கிளம்பி போய்ட்டா…அந்த பையனோட அப்பா அம்மா பீல் பண்ணது ..இதெல்லாம் பாத்ததுல இருந்து…” என அவன் முடிக்கமுடியாமல் திணற

 

நித்து ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து விட்டவள் “உங்க விருப்பம் தான் என் விருப்பமும். அப்டி ஒரு சூழ்நிலை வந்தா அப்போ எல்லாரும் என்ன மனநிலைல இருப்பாங்கன்னு என்னால சொல்லமுடியாது. அந்த நேரத்து சூழ்நிலை எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது. ஆனா எப்படி இருந்தாலும் நம்ம குடும்பத்துல இருக்கறவங்களோட ஆசைய நிறைவேத்தணும்னு தான் நீங்க இருந்தா ஆசைப்படுவீங்க. சோ அதைத்தான் நானும் செய்வேன். என்னை இன்னொரு கல்யாணம் மட்டும் பண்ணிக்க சொல்லி யாரு கம்பெல் பண்ணாலும் செய்யமாட்டேன். மத்தபடி உங்க அம்மா, அப்பா இந்த மொத்த குடும்பமும் என்ன விருப்பப்பட்டு சொல்ராங்களோ அதை கண்டிப்பா செய்வேன். என்னை அவங்ககூட வெச்சு பாத்துக்கறேன்னு சொன்னா உங்களுக்கு பதிலா நான் இங்க இருந்து எல்லாத்தையும் பாத்துப்பேன். இல்லைம்மா உன்னை இப்டி பாக்க கஷ்டமா இருக்கு உன் அம்மா அப்பாகூட போன்னு சொன்னா அதுவும் ஓகே. தூரத்துல இருந்து அவங்களை பாத்துக்குவேன். ஆனா எப்போவும் நம்ம இரண்டு குடும்பமும் சண்டைபோடுற அளவுக்கு விடமாட்டேன். இது ப்ரோமிஸ் ஓகே வா?” என

அவன் இவளை இறுகி அணைத்துக்கொண்டான்.

“லவ் யூ பேபி..”

“லவ் யூ டூ டா கண்ணா.. ” என செல்லமாக தலையை கலைத்துவிட

சட்டென சிரித்துவிட்டு “ஏய்.. என்ன டி குழந்தையை ட்ரீட் பண்றமாதிரி பண்ற?”

“ம்ம்ம்… நீங்க தானே என் பஸ்ட் குழந்தை. அப்போ அப்டி தான் இருக்கும்.”

“அதெல்லாம் சும்மா… குழந்தை பொறந்தா எல்லா அம்மாஸும் மாறிடுவீங்க..” என குறைபட முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள

“அட்ச்சோ… அப்படியெல்லாம் மாறமாட்டேன்… எப்போவுமே நீதான் பஸ்ட்..” என தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.

அவனும் “ம்ம் பாக்குறேன். குழந்தை வந்த அப்புறமும் இந்த டயலாக் வருதான்னு..”

நித்து சிரித்துவிட்டு “இப்போவே அப்படித்தானே வருது.” என்றாள்.

விஜய் “ஏய்.. நான் சொல்றது குழந்தை வந்த அப்புறம்டி..”

“நானும் அதான்ப்பா சொல்றேன்…” என

இவன் ஒரு நொடி குழம்பி அவளை நிமிர்ந்து பார்க்க அவள் கண்ணடித்ததும் வேகமாக எழுந்து அமர்ந்தவன் “உண்மையாவா?” என உறுதி செய்துகொண்டவன் அவளை முத்தமிட்டவன் “இவளோ நேரம் ஏன் சொல்லல? வீட்லையும் யாருமே சொல்லல ” என அவன் செல்லமாக கோபித்துக்கொள்ள

நித்து “ம்ம்.. வந்ததுல இருந்து முகத்தை உம்முனு வெச்சுட்டு எல்லா டவுட்டும் இப்போதான் முடிஞ்சது. இதுல எங்க உடனே சொல்றது. அண்ட் வீட்ல இன்னும் யாருக்கும் தெரியாது. நீங்க தான் பஸ்ட்.” என்றதும்

“என்கிட்ட தான் பஸ்டா சொல்றியா? என சிறுவனின் ஆச்சரியத்தில் கேட்டவன் நான் என்னதான் பீல் பண்ணிருந்தாலும் நான் வந்ததுமே இதை நீ சொல்லிருக்கலாம்ல.” என

நித்து அவனின் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “என் முதல் குழந்தை நீங்கன்னு நான் ஒன்னும் சும்மா சொல்லல… முதல் குழந்தை உம்முனு இருக்கும்போது நீ எப்டியோ இரு அடுத்து குழந்தை வருது பாருன்னு எப்படி உன்னை விடமுடியும் சொல்லு.” என அவளது கேள்வியில் உண்மையாகவே மகிழ்ந்தவன் அவளை தூக்கி சுற்றிவிட்டு கீழே விட்டவன் சரி எல்லார்கிட்டயும் சொல்லலாம் வா. ஆனா நான்தான் சொல்லுவேன்.” என அழைத்து சென்றவன் அனைவரிடமும் கூற அதுவும் “என் நித்து என்கிட்ட தான் பஸ்ட் சொன்னாலே” என பெருமையாக கூற

குமார், சுரேஷ் அனைவரும் அவனை வம்பிழுக்க “டேய் உன் பொண்டாட்டி மட்டுமில்லைடா எல்லா பொண்ணுங்களுமே முதல புருஷன்கிட்ட தான்டா சொல்லணும்னு ஆசைப்படுவாங்க. உன் அக்கா அண்ணி கூட அப்டித்தான்.. இது என்னமோ பெரியவிஷயமா பேசிகிட்டு..” என சீண்ட

இவனும் “டேய் அண்ணா, நீ மாமா எல்லாரும் பொண்டாட்டி கூடவே இருக்கீங்க. எல்லாரும் நினச்சா உடனே பாக்க முடியும், பேசமுடியும். அப்போ ஒரு நாள் வெயிட் பண்ணி சொல்றது பெரிய விஷயம் இல்லை. ஆனா எங்க கதை அப்டி இல்லையே. அவ்ளோ ப்ரோப்லேம் இருந்தும் இங்க நீங்க இத்தனை பேர் இருந்தும் என் மூலமா தான் உங்களுக்கு விஷயம் தெரியணும்னு இருந்திருக்கு. உங்க யாராலையும் கண்டுபுடிக்க கூட முடிலேல.. அதனால எனக்கு பெருமைதான்டா…. என் பொண்டாட்டிக்கு நான் தான் ரொம்ப ஸ்பெஷல் அண்ட் பெஸ்ட்னு இப்போ புரியுதா? என்ன அத்தை நான் சொல்றது சரிதானே ” என

வாசுகியும் “ஏத்துக்கவேண்டிய உண்மைதான்… அவ ப்ரெக்னென்ட் ஆன இந்த சமயம் நீ இங்க வரணும் அத அவ உன்கிட்ட தான் முதல சொல்லணும்னு இருக்கு. எந்த அளவுக்கு அவ விருப்பப்பட்டிருந்தா உடனே நீயும் வந்திருப்ப. நீ வந்ததுக்கு காரணம் என்னவா வேணாலும் இருக்கலாம். ஆனா அது எல்லாம் ஏன் நடக்கணும்னு யோசிச்சு பாத்தா பதிலே இருக்காது…எப்டியோமா குட்டி ஜீவா இந்த வீட்ல வரப்போறான்…”

விஜய் “எது குட்டி ஜீவாவா? நித்து ப்ளீஸ் நித்து எனக்கு குட்டி நித்து தான் வேணும். உனக்கு வேணும்னா நெக்ஸ்ட் அட்டெம்ப்ட்ல குட்டி ஜீவா வரட்டும்.” என சுற்றி அனைவரும் கிண்டல் செய்ய அவள் நாணத்தில் சிரிக்க வசந்தா விஜயின் தலையில் தட்டிவிட்டு “உன்னை வெச்சுகிட்டு நேத்ராக்கு தான் ரொம்ப கஷ்டம்டா. என்றவர் நேத்ராவிடம் “அம்மாடி, இதுக்கு மேல எதுன்னாலும் எங்ககிட்ட சொல்லிடுமா..இல்லை உன் புருஷன் எங்களை ஒரு வழி பண்ணிடுவான். ஆனா அவன் சொல்றதும் உண்மைதான் இத்தனை பேர் இருந்தும் கண்டுபுடிக்க முடியாம போச்சே..அவன் வந்து சொல்லி தெரிஞ்சுக்கவேண்டியதா இருக்கு.” என செல்லமாக குறைபட நேத்ரா “அத்தை, சாரி..” என தயங்க வசந்தா சிரித்துவிட்டு “நான் சும்மாதான் சொன்னேன். உன் மனசு எனக்கு புரியுது. ஆனா இதுக்குமேல நாங்க சொல்றதுதான் நீ கேட்கணும். உடம்பை பத்திரமா பாத்துக்கணும்.. ஏதாவது ஒண்ணுன்னா எங்களுக்கு தெரிஞ்சாதானே நாங்க பாத்துக்கமுடியும்..இப்போ போயி ரெஸ்ட் எடு.” என கூறி விஜய் நித்து இருவருக்கும் திருஷ்டி சுற்றி விட்டு அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-22ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-22

22 – மீண்டும் வருவாயா? அடுத்து வந்த தினங்களில் அனைவரும் திருமண வேளையில் தீவிரமாக இறங்கிவிட எல்லோரும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் குழந்தைகளும் புது உறவுகளுடன் இணைத்துவிட நேத்ரா, ஜீவன் இருவர் மட்டும் தங்களுக்குள் விலகியே இருந்தனர். நேத்ரா வந்தால் ஜீவன்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-34ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-34

34 – மீண்டும் வருவாயா? விஜய் “ம்ம்.. அம்மாவும் பொண்ணும் எங்களை வெச்சு பிளான் போட்டிருக்கீங்க… பிராடுங்களா..” என அவன் மூக்கை பிடித்து வம்பிழுக்க நித்து சிரிப்புடன் “அப்பாவும், பையனும் சொன்ன பேச்ச கேட்கலேன்னா இப்படி தான்..” என கூறினாள். அவனும்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

13 – மீண்டும் வருவாயா?     சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ