Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4

4 – மீண்டும் வருவாயா?

 

ஜீவன் வீட்டிற்கு வந்ததும் ஜீவா பேச ஆரம்பித்தவன் தான். நிருமா நிருமா என அதே மந்திரம். முதன் முறையாக தன் மகன் வெளியாள் ஒருவரை இத்தனை தூரம் நம்புகிறான். உரிமையாக அதுவும் அம்மா என அழைக்கிறான் என்பதை ஜீவனால் நம்பவே முடியவில்லை. அவன் ஜீவிதா பற்றி காலை முதல் நேத்ராவிடம் பேசியது வரை அனைத்தும் கூறினான். அதோடு ஜீவா “நிரு மா நான் அவனை அடிச்சதுக்கு எல்லார் முன்னாடியும் சாரி சொன்னாங்க பா. எனக்கு அதுதான் கஷ்டமா இருந்தது. அதோட நான் அப்டி கோபமா நடந்துக்கிட்டா எல்லாரும் உங்கள தான் குறை சொல்லுவாங்கன்னு நிரு மா சொன்னாங்க…” என வருத்தம் கொண்டான்.

“இனிமேல் நிரு மா சொன்னமாதிரி எந்த ப்ரோப்லேம்னாலும் மிஸ்கிட்ட, உங்ககிட்ட தான் சொல்லப்போறேன். இந்த மாதிரி பேசிட்டு இருக்கும்போது கோபப்பட்டு அடிக்கமாட்டேன் சாரி பா.. உங்கள யாரும் குறை சொல்றமாதிரி நான் நடந்துக்கமாட்டேன் டாடி.. ” என கட்டிக்கொண்டான்.

ஜீவாவை அணைத்துக்கொண்டு ஜீவன் “ஓகே டா கண்ணா… நீ எப்போவுமே குட் பாய் தான்… நீ காரணமில்லாம கோபப்படமாட்டேன்னு தெரியும்… அப்பா உன்ன நம்புறேன்… ஆனா நம்ம கோபம் எப்போவுமே அடுத்தவங்களை திருத்தணும்… அதுக்கு அடி தான் ஒரே வழின்னு இல்ல. சரியா?” என வினவ

ஜீவாவும் “ஓகே டாடி… குட் பாயா இருப்பேன் பா” என்றான்..

இருவரும் பின் உண்டு முடித்து சற்று விளையாடிவிட்டு உறங்க சென்றதும் ஜீவன் இன்று ஜீவா பேசியதை அசைபோட்டுக்கொண்டே இருந்தான்.  ஜீவனால் குழந்தையின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. அதேபோல பிறர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேள் என ஜீவாவை அவள் வறுபுறுத்தாமல் அவனது உணர்விற்கு மதிப்பு கொடுத்தது, இருப்பினும் இவன் அடித்தது தவறு தான் என அவள் மன்னிப்பு கேட்டு குழந்தையின் தவறை உணர செய்தது என அவளின் மீது ஜீவனிற்கு மதிப்பு வந்தது. எதோ அவனுக்கு தோன்ற பேர் என்ன நிரு மான்னு சொல்ரான். முழு பேர் என்னன்னு கேட்காம விட்டுட்டேனே என்றெண்ணியவன் காலை வசந்த் வந்ததும் அவனிடம் நேற்று நடந்த அனைத்தும் கூறினான். வசந்த் ஜீவாவிடம் கிளம்பும்போது பேரை வினவினான்.  சின்னவனோ “2 பேர் வரும். 1st பேர்ல 4 லெட்டர்ஸ். ஆனா பேர் சரியா வரமாட்டேங்கிதே” என சற்று யோசிக்க

ஜீவன் கால் வந்தது என நகர்ந்து செல்ல வசந்த் நிர்மலாவா என பொதுவாக பேர் கேட்க ஜீவா கிளம்பும் அவசரத்தில் ஏற்கனவே அவள் பெயரும் ஞாபகம் இல்லாமல் இருக்க “ஆமாம்” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

வசந்த் ஜீவனிடம் “டேய் அந்த பொண்ணு பேர் நிர்மலாவாம்.” என்றான்.

ஜீவன் “ஒஹ்ஹஹ்…” என்ற சுதி குறைந்து. ஏனோ அவன் எதை எதிர்பார்த்தானோ என அவனே அறியவில்லை. ஆனாலும் எதோ ஒரு ஏமாற்றம் அவனை சூழ்ந்ததை அவன் உணர்ந்தான்.

 

அடுத்து வந்த நாட்களில் மாலை ஜீவா, ஜீவிதா மற்றும் நிருவுடன் வருவது, சிறிது நேரம் பார்க்கில் விளையாடுவது என இருந்தான். நிரு, ஜீவிதாவும் அங்கு இருந்த அனைவரிடமும் நன்றாக பழக விரைவில் இந்த இடம் அவர்களுக்கு செட் ஆகிவிட்டது. ராமு தாத்தாவும் அவர்களுடன் இருந்து சற்று பொறுத்து ஜீவாவை அழைத்து செல்வார்.

ஜீவன், வசந்த் வீட்டிற்கு வந்ததும் உணவு உண்ணும் வேளையில் ஜீவா தன் தந்தையிடம் கூறினான் “அப்பா நீங்களும் ஆபீஸ் விட்டு வர லேட்டாகும். வீட்டில் போர் அடிக்கும். ராமு தாத்தா பாவம் அவரோட நான் ஓடி புடிச்சு எல்லாம் விளையாட முடியாதில்ல. ஆனா நல்லா ஓடி ஆடி விளையாடணும் அப்போதான் ஹெல்த் சூப்பரா இருக்கும்னு சொன்னிங்க. சோ நான் தினமும் நீங்க வரவரைக்கும் ஸ்கூல் விட்டு நிரு மா, ஜீவி கூட இருந்திட்டு பார்க்ல விளையாடிட்டு ராமு தாத்தாகூடவே வரேனே?” என அவன் அனுமதி கேட்டான்.

ஜீவனோ மெலிதான புன்னகையுடன்  “உனக்கு அவங்களோட இருக்கணும்னு முடிவு பண்ணிட்ட. அதனால அப்பா சொன்ன அட்வைஸ் எல்லாம் ஞாபகம் வருது இப்போ? பிராடு…” என சிரிக்க சின்னவனும் தன்னை கண்டுகொண்டதை எண்ணி மெலிதாக நாக்கை கடித்து சிரித்தான்.

ஜீவன் ஏற்கனவே ராமுவிடம் கேட்டறிந்ததால் புன்னகையுடன் “2 டேஸ் அப்படித்தானே வர..இப்போ வந்து சார் பெர்மிஸ்ஸின் கேக்கறீங்க அண்ட் இப்போவும் விளையாடுறியே அப்புறம் ஏன் நான் வர வரைக்கும் டைம்?” என்றான்?

ஜீவா “அதுவா? ஸ்கூல் முடிச்சு அப்டியே நிரு மா கூட தான் வந்து இங்க விளையாடிட்டு பேசிட்டு இருப்போம் அது ஜஸ்ட் ஒன் ஆர் தான். அதுவும் நீங்க யாரும் வீட்ல இல்ல. நான் தனியா இருப்பேன்னு நிருமா கூட வெச்சுக்கிட்டாங்களாம். அப்போவும், ராமு தாத்தாகிட்ட சொல்லி சொல்ல சொல்லிருக்காங்களாம். நான் இன்னும் 3 டேஸ்ல கராத்தே கிளாஸ் போகணும்ல.. அதுக்கு போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு வந்து அவங்ககூடவே இருக்கேன்னு கேட்டேனா… அதுக்கு தான் நிரு மா அப்பாகிட்ட கேட்டு அவங்க ஓகே சொன்னா தான் விளையாட, இங்க இருக்க எல்லாமே நானும் ஓகே சொல்லுவேன். கேக்காம அப்டி வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க.

ஜீவன் சரி என்றான். “ஆனால் அதுக்கப்புறம் வந்து ஹோம் ஒர்க் எல்லாம் முடிச்சிடணும்.ஓகே?”

ஜீவா “நோ பா. அதுல எல்லாம் நிருமா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. ஸ்கூல் விட்டு வந்ததும் 30மின்ஸ்  ரெப்பிரேஷ் பண்ணிட்டு ஸ்னாக்ஸ் சாப்பிட்டு அப்புறம் ஹோம் ஒர்க் முடிச்சாதான் விளையாடவே வருவாங்க. விளையாடிட்டு ராமு தாத்தா கூட சீக்கிரம் அனுபிச்சுவெச்சுடுவாங்க. 2 டேஸ் இதனாலையே வேகவேகமா ஹோம் ஒர்க் முடிச்சிட்டேன் தெரியுமா..?” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற அனைவரும் சிரித்தனர்.

ஜீவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் சரி என்றான்.

ஜீவா குதித்து “தேங்க்ஸ் டாடி..” என முத்தமிட்டு சென்றான். பின் திரும்பி வந்து வசந்த்திடம் “குட் நைட்” அங்கிள் என முத்தமிட்டு மகிழ்வுடன் ஓடினான்.

வசந்திற்கு தன் நண்பனை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. “டேய் ஜீவன், என்னடா அவன் கேட்டதும் சரின்னுட்ட. அவங்க யாரு எங்க இருந்து வந்தாங்க.. எங்க இருக்காங்க எதுவுமே கேக்காம நீ உடனே ஓகே சொல்லிட்ட. அதுகூட ஓகே.. ஆனா அட்லீஸ்ட் ஜீவாகிட்ட கூட அவங்கள டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, கரெக்ட்டா சாப்பிடணும், ரொம்ப நேரம் வேண்டாம், சீக்கிரம் வந்திடணும்னு எதுவுமே சொல்லல. நம்ம பேமிலில ரிலேட்டிவ் வீட்டுக்கு அனுப்பிச்சாகூட இத நீ அவனுக்கு சொல்லாம அனுப்பிச்சதில்லையே?”

ஜீவன் “வசந்த், எதுக்குடா இவளோ பதற.. ஜீவா பேசுனதை கேட்டேள்ல? அப்பாகிட்ட பெர்மிஸ்ஸின் வாங்காம வரக்கூடாதுனு சொல்லி அனுப்பிச்சிட்டா.  நான் டியூட்டில இருக்கேன். கண்டிப்பா நான் நைட் வரதுக்குள்ள அவனை அங்கேயே வெச்சுட்டு லேட்டா அனுப்பிச்சாலும் எனக்கு தெரியப்போறதில்ல. ஆனாலும் முதல் நாளே ராமுகிட்ட சொல்லி கால் பண்ணி இன்போர்ம் பண்ண சொன்னா. இப்போவும் பாரு, ஜீவாவை ஸ்கூல் விட்டு வந்ததும் பிரெஷ்ஷப் பண்ணிட்டு படிக்கவும் வெச்சுட்டு அப்புறம் விளையாட விடுறா. எந்த வேலையும் அங்க மிஸ் ஆகலையே. இப்போவும் பெர்மிஸ்ஸின் கேட்டுட்டு தான் வரணும்னு சொல்லிருக்கா. அவ பண்ற எல்லா விஷயமுமே சரியாதானே இருக்கு.”

 

ராமுவும் “ஆமா தம்பி, அந்த பொண்ணு இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது.  ஆனா எல்லார்கூடவும் நல்ல பழக்கம். ரொம்ப மரியாதையா பேசும் தம்பி. என்னை அப்பானு தான் கூப்பிடும். ஏதோ என் பொண்ணுகூடவே இருக்கறமாதிரி ஒரு உணர்வு.

ஜீவாவிடம் திரும்பி ‘உங்ககிட்ட கூட அன்னைக்கு வீட்டுக்கு வந்த பிறகு நான் ஜீவா இவளோ நேரம் அங்க விளையாடிட்டு தான் இருந்தானு சொல்லிக்கறேன்னு தான் சொன்னேன். ஆனா அந்த பொண்ணு தான் “இல்லப்பா, என்ன இருந்தாலும் குழந்தை என்ன பண்ராங்கன்னு பேரண்ஸ்க்கு எப்போவும் தெரிஞ்சிருக்கணும். பாக்க பழக ரொம்ப நல்லவங்களா தெரியறாங்கனு கொஞ்ச நேரம் தானே இதுல என்னன்னு பழக விடறது, கொஞ்ச நாள்ல அது அதிக நேரம் எடுக்க வைக்கும்.

குழந்தைங்க வீட்ல சொல்லாம பண்ணும் போது, அன்னைக்கு மாட்டிக்கலேல. இப்போவும் மாட்டிக்கமாட்டோம்னு தெரியாம யாருகிட்டேயும் சொல்லாம வேற ஏதாவது அவங்கள செய்ய வைக்கும். அதனால பிரச்னை வந்ததுனா..?

அதோட இதே மாதிரி வேற யாராவது புதுசா பழகுனாலும் அவன் சட்டுனு யோசிக்காம பேசுவான், பழகுவான். ஆனா அவங்க தப்பானவங்களா இருந்தா, குழந்தையை வெச்சு பிரச்னை பண்ணா இதெல்லாம் தேவையில்லாத ரிஸ்க். எப்போவுமே குழந்தைக்கும் அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு இடையில எந்த ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது. கண்டிப்பா நாம கேக்கற விஷயம் தப்பில்லன்னா நம்ம அப்பா அம்மா ஓகே சொல்லுவாங்கன்னு தோணும். அப்போதான் குழந்தைக்கும் பெரியவங்க மேல ஒரு நம்பிக்கை வரும் பெரியவங்களுக்கும் நம்ம புள்ளைங்க சொல்லாம கேக்காம எதுவும் செய்யமாட்டாங்கனு ஒரு நம்பிக்கை வரும்.

சும்மா என் புள்ளைய நான் நம்புவேன். பண்றதெல்லாம் சரியாதான் இருக்கும்னு வாய் வார்த்தைல சொல்றது யாருக்குமே பிரயோஜனம் இல்ல. பின்னாடி பிரச்சனை வரும் போது இப்டி ஆகும்னு நினைக்கலையேன்னு பொலம்பி என்ன பண்றது சொல்லுங்க? வெளிப்படையா குடும்பத்துல பேசுற சொல்ற அந்த பழக்கம் அவங்களுக்கு இருக்கனும். என்கிட்ட நடந்ததை சொல்லுன்னு என்னைக்கும் நாம கேக்காம குழந்தைங்களா அவங்க பாக்குற, யோசிக்கற விஷயத்தைகூட சொல்லவெக்கணும். அது இந்த வயசுல இருந்தே அவங்களுக்கு வரணும். அந்த அளவுக்கு பெரியவங்களும் புள்ளைங்களை புரிஞ்சுகணும். அதே சமயம் கண்டிப்பான விஷயத்துலையும் கரெக்ட்டா இருக்கனும். அவங்க அப்பா இப்போ இங்க இல்ல. தெரியவாபோகுதுனு அவரு குடுத்த சுதந்திரத்தை இவன் தப்பா பயன்படுத்த நாம அவனுக்கு துணையா இருக்க கூடாது. அதோட குழந்தையை உங்கள நம்பி விட்ருக்காங்க. ஏதாவது பிரச்னைன்னா உங்களையும் அது பாதிக்கும். அதுக்கு தான் சொல்றேன் பா. நீங்க ஜீவாவோட அப்பாக்கு கால் பண்ணி இப்போவே கேட்டு சொல்லுங்க. இல்லை ஜீவாகிட்ட நான் பேசிக்கறேன்  அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.” அப்டினே சொல்லிடிச்சு தம்பி. அப்புறம் தான் நான் உங்ககிட்ட பேசுனது எல்லாம்.”

“அந்த பொண்ணும் இங்க தான் இருக்கு தம்பி. B-பிளாக்..நாம இருக்கறது D-பிளாக். நான் எப்படியும் அவங்களோடதான் இருக்க போறேன். நீங்க வந்துட்டிங்கனு சொன்ன பத்தே நிமிஷம் ஜீவா தம்பிய கூட்டிட்டு வர போறேன். குழந்தைகளும் ஒண்ணா விளையாடிட்டு இருக்கட்டுமே.” என கேட்க வசந்தும் சரி என்றான்.

 

ஆனாலும் ஜீவனிடம் வந்து “டேய் ஜீவன், எனக்கு நீ பண்றது தான் புதுசா இருக்கு. இருந்தாலும் யாரு என்னனு ஒருதடவை கூட பாக்காம எப்பிடிடா, குழந்தையை விடுறது? நாம இருக்கற வேலை. டிபார்ட்மென்ட்ல எவ்ளோ கேஸ் பாத்திருப்போம் எதிரிங்க இப்டி எல்லாம் ஆளுங்க வெச்சு கூட ஏமாத்தறாங்கலே?” என அவன் தயங்க

ஜீவன் நிதானமாக “வசந்த், நான் தெளிவா தான் இருக்கேன். ஜீவா அப்டி சும்மா யாரு பேசுனாலும் பழகுற ஆள் இல்ல. ஆனா அவன் நிருமா நிரு மான்னு எவ்ளோ பாசமா இருக்கான் தெரியுமா? அதோட அவ சொல்ற விஷயத்தை அப்டியே பண்ரான். அவ்ளோ நம்புறான். அவளும் தப்பான விஷயத்தை சொல்லி தரல. அதுக்காக மட்டும் நான் ஒத்துக்கல. எனக்கும் ஏனோ சந்தேகப்பட தப்பா நினைக்க தோணல. என் மனசு ரொம்ப ஸ்ட்ரோங்கா சொல்லுது, ஜீவா நான் வரவரைக்கும் மத்தவங்ககிட்ட இருக்கறதைவிட நிரு கிட்ட இருக்கறது அவனுக்கு சரி  பாதுகாப்பும் கூட. சில நேரம் மனசு சொல்றதயும் கேக்கறேன். அவ்ளோதான்” என்றான்.

 

வசந்த் “டேய், எப்போ இருந்துடா நீ மூளை சொல்றதை கேக்காம மனச கவனிக்க ஆரம்பிச்ச? புதுசா இருக்கு.” என வம்பிழுக்க

ஜீவன் “என் நித்ரா என் வாழ்க்கைல வந்ததுல இருந்து…என்னை இப்டி பொறுமையா யோசிக்கவெச்சது அவதானே..” என்றான்.

வசந்த் சட்டென்று முகம் வாட பின் தன்னை சரி செய்துகொண்டு “அந்த நிரு பொண்ண நம்பி யாருனு கூட பாக்காம குழந்தையை விடுற. கேட்டா மனசு சொல்லுச்சுனு சொல்ற. ஆனா பேமிலி ஆளுங்ககிட்ட இத்தனை வருஷ பழக்கத்துல ஒரு நாள் அவங்களோட விடுறதுன்னாலும் அவ்ளோ அட்வைஸ் யோசனை.. அவங்களை புரிஞ்சுக்கோடா. அவங்களும் கெட்டவங்க இல்லடா.” என்றான்

ஜீவன் விரக்தியாக “அவங்க கெட்டவங்க இல்ல தான். ஆனா என் மேல வெச்ச பாசத்துல அநியாயமா தப்பு பண்ணிட்டாங்களே. அதனால எவ்ளோ வலி வருத்தம் எல்லாருக்கும். நீயே சொல்லு அவங்க அவசரத்துல அவங்க உணர்வுகளை மட்டும் வெச்சு செஞ்ச தப்ப மன்னிக்க சொல்றியா? மனச வெச்சு யோசிக்க சொல்லி நித்து சொன்னா தான். அதுக்காக கொடுமை பண்றதை தப்பு பண்றவங்களை ஏத்துக்கவோ நியாயப்படுத்தவோ என்னால முடியாது. அத நித்துவும் விரும்ப மாட்டா. இன்னைக்கு இப்டி இருக்க காரணமே அவங்க யோசிக்காம பண்ண சில விஷயங்கள் தான். என் நித்து எனக்கு திரும்ப கிடைச்சாக்கூட என் மனசுல இருந்து இதெல்லாம் மாறுமான்னு எனக்கு தெரில. விடுறா. லேட்டாகிடிச்சு. இன்னைக்கு இங்கேயே இரு.” என்றுவிட்டு எழுந்து பால்கனிக்கு சென்று நடக்க ஆரம்பித்தான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-27ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-27

27 – மீண்டும் வருவாயா? குழந்தைகளை வசந்துடன் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட விஜய் விடிய விடிய அவளின் கைகளை பற்றிக்கொண்டு பேசிக்கொண்டு அதுலையே உறங்கிவிட அதிகாலையில் கண் விழித்தவள் தன் கைகளை பற்றிக்கொண்டிருந்த கணவனை கண்டவளுக்கு அவனை நினைத்து பாவமாக இருக்க அவனது

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-32

32 – மீண்டும் வருவாயா?   இரண்டு நாள் முன்பு நேத்ராவிடம் அனைவரும் “நீ, ஜீவன் குழந்தைங்க எல்லாரும் இங்கேயே இருக்கலாம்ல மா?” நேத்ரா “ஆ..அது வேண்டாமே.. அப்போ அப்போ வர போக இருந்திட்டு பாத்துக்கலாம்.. ஒண்ணா வேண்டாம்னு தோணுது மாமா..”

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-31

31 – மீண்டும் வருவாயா?   விஜய் “ஆனா அதுக்காக நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைப்பியா? இதுக்கு நீ என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்..” என அவன் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வீம்புடன் அமர அவள் அழைப்பதை