Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized மறக்க முடியா என் கோடை சுற்றுலா

மறக்க முடியா என் கோடை சுற்றுலா

வணக்கம் சகோஸ் ️

இது என்னுடைய பயண கதை, இது நடந்து இருபத்தி ஒரு வருஷம் ஆகுது. அப்போ எனக்கு வயசு எட்டு. பயண கதைன்னு கேட்டதும் எனக்கு நியாபகம் வந்தது இது தான்.  

1998 வருடம், கோடை மாதம். என் பெயர் மாதவ கிருஷ்ணன். நான், என் அண்ணா, அம்மா, அப்பா, என் சித்தி ஐந்து பேரும் திருப்பதி சென்று இருந்தோம். திருப்பதியில் நல்ல தரிசனம். அது முடிய, அடுத்து நான் போனது சென்னை. ரொம்ப அழகான ஊர். ஆறு வருஷம் முன்னாடி அங்கே தான் வேலை பார்த்தேன். அப்போ பார்த்த சென்னையை விட எனக்கு நான் எட்டு வயசில் பார்த்த சென்னை மேல் தான் ஒரு விருப்பம். காலம் மாறுது இல்லையா? சரி வாங்க இந்த கட்டுரையோடு சில நினைவுகளை சொல்றேன்.

கிஷ்கிந்தா எல்லாருக்கும் தெரிந்த பெயர் இல்லையா? எத்தனை அழகு? எத்தனை விளையாட்டு? நான் என் எட்டு வயசில் கிஷ்கிந்தா வாசலில் நின்ற போது அப்படி ஒரு மகிழ்ச்சி, இது வரை என் வகுப்பு நண்பர்கள், என் வீட்டின் அருகில் உள்ளோர் என்று யாருமே பார்க்காத கிஷ்கிந்தா வாசலில் நான் நிற்கின்றேன்.

எட்டு வயது குழந்தையாய் யோசிச்சு பாருங்க, அப்போ புரியும் என் சந்தோசம் என்னன்னு, அம்மாவும் அப்பாவும் நம்ம கேட்காம நம்மை இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி குடுத்து இருக்காங்க என்று ஒரே சந்தோசம்.

அந்த சந்தோஷத்தோடு உள்ளே செல்ல ரசீது வாங்க நின்றோம். அங்கே தான் விழுந்தது இடி. மனம் உடையும் அளவுக்கு, வாங்க அதையும் சொல்றேன்.

அங்கே உள்ள செல்ல ரசீது தொகை ஆள் ஒருவருக்கு 100 ரூபாய். பின் அங்கே விளையாட ஆள் ஒருவருக்கு 250 ரூபாய். அதை கேட்டதும் என் அம்மா வாங்க திரும்பி போவோம் என்று சொல்லிட்டாங்க, நான் அழுதே விட்டேன்.

நானும் என் அண்ணனும் உள்ளே போய் ஆகனும் என்று அடம் பிடிக்க, அப்பா மனம் இறங்கி உள்ளே செல்ல அனுமதி ரசீது மட்டும் அனைவருக்கும் வாங்கி உள்ளே சென்றோம். கண் கவரும் விளையாட்டு, தண்ணீரில் விழுந்து விளையாட ஆசை. ஆனா விளையாட ரசீது வாங்கவில்லையே? என்ன செய்ய?

எல்லா ரைடும் வேடிக்கை பார்த்தோம். நல்ல தான் இருந்தது அதுவும். அதுவே அத்தனை மகிழ்ச்சி எனக்கு, அங்கு இருந்த ரைட் எல்லாம் என்னை ஆச்சரியம் கொள்ள செய்தது, சிலது பயங்கரம் பார்த்தே பயந்து போய் இருந்தேன். பின் அங்கே இருந்த இலவச விளையாட்டு எல்லாம் விளையாடினோம். கார், பைக் என்று ஓட்டினோம். எட்டு வயதில் அதுவும் கூட இனித்தது.

பின் பீச் சென்றோம், அங்கு கடலில் விளையாடி, மீன் சாப்பிட்டோம். அம்மா எங்களுக்கு பள்ளி செல்ல புது ஷு எடுத்து கொடுத்தார்கள். நாங்கள் அங்கு ரைட் செல்லாமல் சேர்த்த காசு ஒரு வருடம் நான் பள்ளி செல்ல அணிய வேண்டிய ஷு ஆனது.

அதன் பின் 10 முறையாவது  கிஷ்கிந்தா சென்று அனைத்து ரைடும் விளையாடி இருப்பேன். ஆனாலும் எட்டு வயதில் பார்த்த உற்சாகம் இல்லை. இதில் நான் உணர்வது நாம் வாழ்க்கை முறையை தான்.  அன்றைய பிள்ளைகளுக்கும் இப்போது இருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள வேறுபாடு எவ்வளவு? இப்போது இது போல் கண்ணில் மட்டும் காட்டிவிட்டு வர முடியுமா? பொருளாதாரம் எப்படி வளர்ந்து உள்ளது? 350 ரூபாய் இப்போது ஒரு நாள் பாக்கெட் மனி சிலருக்கு, இன்னும் சிலருக்கு அதுவே பெரிது.

எப்படியோ என் வாழ்வில் நான் சென்ற மறக்க முடியாத கோடை விடுமுறையும் அதன் நினைவுகளும் இவை. தமிழ் பிக்க்ஷன் தளத்திற்கு நன்றிகள் என்னை என் பள்ளி பருவம் வரை அழைத்து சென்று, என்னை எட்டு வயது சிறுவனாக உணர வைத்து உள்ளீர்கள். உங்களின் புது முயற்சிகளுக்கு என் மனமார்ந்த  வாழ்த்துக்கள். என்னுடன் இந்த போட்டியில் பங்கு பெற்று உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி,
மாதவ கிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6

தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது. “இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்…” “அம்மா…! என்

பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தோழமைகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.   சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் இத்தனை சிரமத்திலும், இயற்கை இடர்பாடுகளிலும் அயராது பாடுபட்டு உலகுக்கு உணவளிக்கும் வேளாண்மக்களுக்கு  என் நன்றிகள். தை மாசம் பொறந்துடுச்சு தில்லே லே

சிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதிசிவகாமியின் சபதம் – இறுதிப் பகுதி

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் இறுதிப் பகுதி உங்களுக்காக. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380394830 key=key-Qck9yxArLYt7SRAxIVzv mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. Download Nulled WordPress Themes Download Best WordPress Themes Free Download Download