Tamil Madhura அறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 2

அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 2

அத்தியாயம் – 2

வெள்ளிக்கிழமை, பழனி – நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய் செலவில் விமரிசையாக நடை பெற்றது. ஜில்லா ஜட்ஜூ ஜமதக்னி தலைமை வகித்தார். 

பச்சை , சிகப்பு, ஊதா, நீலம் முதலிய பல வர்ணங் களிலே பூ உதிர்வது போன்ற வாண வேடிக்கை ! அதிர் வேட்டு, தாழையூரையே ஆட்டிவிடும் அளவுக்கு . அழகான தங்க நாயனத்தை அம்மையப்பனூர் ஆறுமுகம் பிள்ளை, வைர மோதிரங்கள் பூண்ட கரத்திலே ஏந்திக் கொண்டு, தம்பிரான் கொடுத்த தகட்டியை, ஜெமீன்தார் ஜகவீரர் பரிசாகத் தந்த வெண்பட்டின் மீது அழகாகக் கட்டிவிட்டு, ரசிகர்களைக் கண்டு ரசித்து நிற்க, துந்து பிகான துரைசாமிப்பிள்ளை, ‘விட்டேனா பார்” என்ற வீரக் கோலத்துடன் தலை வெளுத்துக் கொண்டிருந் தார், பவமறுத்தீஸ்வரர் பிரம்மோத்சவத்தின் ஆறாம் திரு விழாவன்று. அன்று, உபயம், ஒரே மகனையும் துறந்து விடத் துணிந்த உத்தமர் குழந்தைவேல் செட்டியார் உடையது. அன்று மட்டுமல்ல, சேட்டியார் ஒவ்வோர் நாளும் அது போன்ற ஏதாவதோர் ‘ பகவத்சேவா’ காரியத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணமும், ப க வ ா னு டை ய சேவையினால் மள மளவென்று பெட்டியை விட்டுக் கிளம்பியபடி இருந்தது. ஊரெங் கும் செட்டியாரின் தர்மகுணம், பகவத் சேவை இவை பற்றியே பேச்சு. ” இருந்தால் அப்படி இருக்க வேண்டும் மகனென்று கூடக் கவனிக்கவில்லை. ஜாதியைக் கெடுக் கத் துணிந்தான் பழனி, போ வெளியே என்று கூறி விட்டார். இருக்கிற சொத்து அவ்வளவும் இனிப் பகவா னுக்குத்தான் என்று சங்கல்பம் செய்து கொண்டார் என ஊர் புகழ்ந்தது. பழனியின் நிலைமையோ ! 

உன் தகப்பனார் பெரிய வைதிகப்பிச்சு அல்லவா? அவரைத் திருத்த முடியாத நீ. ஊரைத் திருத்த வந்து விட்டாயே , அது சரியா?” 

தகப்பனார் பேச்சைக் கேட்காதவனுக்குத் தறுதலை என்று பெயர் உண்டல்லவா? நீ ஏன் பழனி என்று பெயர் வைத்துக் கொண்டாய் ? தறுதலை என்ற பெயர் தானே பொருத்தம்?” 

இப்படிப்பட்ட கேள்விகள்; அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும், கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்றுவந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதித் தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்த்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூராகச் சென்று, சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான், ஒரு வேலைக்கும் போகாமல், அவனுக்கு ‘மகாஜனங்கள்” தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர மறுத்துக் கலியாணம் என்பது, கட்டளையாக இருக்கக் கூடாது, நிர்ப்பந்தமாக இருத்தலாகாது, பரஸ்பர அன்பும் சம்மதமும் இருக்கவேண்டும், காதலர் கருத்து ஒருமித்து வாழ்வதே இன்பம் என்பன போன்ற கொள்கைகளை ஏற்க மறுத்து, ஜாதிப் பீடையை ஆண்டவன் ஏற்பாடு என்று விடாப்பிடியாகக் கொண்டு, ஒரே மகனை உலகில் பராரியாக்கிவிட்டு, பகவத் கைங்கர்யம் என்ற பெயரால் சொத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருந்த குழந்தைவேல் செட்டியார், தர்மிஷ்டர், சனாதன சீலர், பக்திமான்,” என்று கொண்டாடப்பட்டார். கோயில் மாலை அவரு டைய மார்பில் ! ஊர்க் கோடியில் உலவும் உலுத்தர்கள் வீசும் கற்கள், பழனியின் மண்டையில் ! பழனி மனம் உடையவில்லை நாகவல்லியின் அன்பு அவனுக்கு, எந்தக் கஷ்டத்தையும் விநாடியிலே போக்கிவிடும் அபூர்வ மருந்தாக இருந்தது. 

இன்று எத்தனை கற்கள்?” என்று தான் வேடிக்கையாகக் கேட்பாள் நாகவல்லி. 

”பெரிய கூட்டம். வாலிபர்கள் ஏராளம். நாகு ! பெண்கள் கூட வந்திருந்தார்கள்!” என்று கூட்டத்தின் சிறப்பைக் கூறுவான் பழனி. இவ்விதமாக வாழ்க்கை . ஒரே ஊரில் அல்ல! நாகவல்லி ஆறு மாதத்துக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு மாற்றப்படுவது வழக்க மாகி விட்டது. அவள் மேல் குற்றம் கண்டுபிடித்ததால் அல்ல கணவன், சூனாமானாவாமே என்ற காரணத்தால், கஷ்ட ஜீவனந்தான். ஆனால், மற்றக் குடும்பங்கள், வீடு வாங்கினோம், நிலம் வாங்கினோம், இரட்டைப் பட்டைச் செயின் செய்தோம், இரண்டு படி கறக்கும் நெல்லூர்ப் பசு வாங்கினோம் என்று பெருமை பேசினவே தவிர. வாங்கின வீட்டுக்கு மாடி இல்லையே, நிலம் ஆற்றுக்கால் பாய்ச்சலில் இல்லையே, செயின் எட்டுச் சவரன் தானே, பசு வயதானதாயிற்றே என்ற கவலையுடனேயே இருந் தன். நாகவல்லி பழனி குடும்பத்துக்கு அத்தகைய பெருமையும் கவலையும் கிடையாது. 

” நாகு தெரியுமா விசேஷம்?” 

”என்ன ? எந்தக் கோட்டையைப் பிடித்து விட் டீர்கள்?” 

” இடித்துவிட்டேன், கண்ணே !” ”எதை ?” 

”மருங்கூர் மிராசுதாரின் மனக் கோட்டையை. அவர் தன்னுடைய கிராமத்திலே எவனாவது சீர்திருத்தம், சுயமரியாதை என்று பேசினால் மண்டையைப் பிளந்து விடுவேன் என்று ஜம்பமடித்துக்கொண்டிருந்தாரல் லவா? நேற்று, அந்த மனக்கோட்டையை இடித்துத் தூள் தூளாக்கி விட்டேன். பெரிய கூட்டம்! பிரமித்துப் போய்விட்டார்.” 

”டேஷ் ! சரியான வெற்றி. எப்படி முடிந்தது?” 

ஒரு சின்னத் தந்திரம் ! மிராசுதார் மருமகன், இருக்கிறானே அவனுக்கும் மிராசுதாரருக்கும் மனஸ்தாபமாம். யுக்தி செய்தேன். அந்த மருமகனைத் தலைவராகப் போட்டுக் கூட்டத்தை நடத்தினேன் மிராசு 

தாரர் ‘ கப்சிப்’ பெட்டிப் பாம்பாகிவிட்டார்.” 

” அவன் நமது இயக்கத்தை ஆதரிக்கிறானா?” 

இயக்கமாவது, அவன் ஆதரிப்பதாவது! அவனுக்கு என்ன தெரியும் ஒப்புக்கு உட்கார வைத்தேன்? 

”என்னதான் பேசினான் ?” 

அவனா? நாகா, நீ வரவில்லையே! வந்திருந்தால் வயிறு வெடிக்கச் சிரித்துவிட்டிருப்பாய் அவன் பேச்சைக் கேட்டு.” 

‘ரொம்ப காமிக் பேர்வழியோ ?’ 

‘காமிக்குமில்லை, கத்தரிக்காயுமில்லை; அவன் உலகமறியாதவன். ஆரம்பமே , எப்படித் தெரியுமோ? ஏலே! யார்டா அவன் காத்தானா, உட்காரு கீழே. இப்ப, பிரசங்கம் நடக்கப்போவது , கப்சிப்ன்னு சத்தம் செய்யாமே கேட்கவேணும். எவனாவது எதாச்சும் சேஷ்டை செய்தா தோலை உரிச்சுப் போடுவேன். ஆமாம்!’ இது தான், நாகு ! அவன் பிரசங்கம்.” 

”அட இழவே! இந்த மாதிரி ஆட்களைச் சேர்த்தால் இயக்கம் கெட்டுத்தானே போகும்.” 

சேர்க்கறதாவது! நடக்கறதாவது! கூட்டம் நடத்த வேறு வழி கிடைக்காமே இருந்தது, அதற்காக அந்த ஆளை இழுத்துப் போட்டேன். கூட்டம் முடிந்த தும், பத்துப் பேருக்கு மேலே, மிகத் தீவிரமாகிவிட்டார்கள். இனி, யார் தயவும் வேண்டாம் : நாமே கூட்டம் போடலாம் என்று சொன்னார்கள்.” 

இப்படிப்பட்ட பேச்சுத்தான், பழனி – நாகவல் லிக்கு! வேறு என்ன பேசமுடியும், புதிய பங்களாவைப் பற்றியா, பவள மாலையைப் பற்றியா? 

”எங்கே நாகு ! செயின்?” ”பள்ளிக்கூடத்தில்!” 

“என்ன விளையாட்டு இது ? கழுத்தே அழகு குன்றிவிட்டது அந்தச் செயின் இல்லாமல், எங்கே செயின்?” 

“சேட் லீலாராமிடம் 25-க்கு அடகு வைத்திருக் கிறேன்.” 

‘ஏன்?’ 

“சும்மா , தமாஷக்கு! அந்த மிராசுதாரனின் மருமகனைச் சொல்லிவிட்டீர், உலகமறியாதவன் என்று. இன்னும் மூன்று மாதத்திலே தகப்பனாராகப் போகிற விஷயம்கூட உங்களுக்குத் தெரியவில்லை. இருபத்து ஐந்து ரூபாய் வாங்கித்தான் , இரண்டு மாத டாக்டர் பில் கொடுத்தேன் , மிச்சமிருந்த பத்து ரூபாய்க்கு, 

பெர்னாட் ஷா வாங்கினேன்.” 

பழனியின் குடும்பக் கணக்கு இவ்விதம் இருந்தது. அதே கோத்தில், குழந்தைவேலச் செட்டியார் தம் குமாஸ்தாவிடம் சொல்லிக் கொண்டிருப்பார், கணக்கு : வட்டி வரவு : 

ரு அ . ப . வடிவேல் பிள்ளை மூலம். 

650.00 வாடகை வரவு : வில்வசாமி மூலம். 

400.00 நெல் விற்ற வகையில் வரவு. 

2600.00 நேத்திரானந்தர் மடத்துக் கைங்கரியச் செலவு 600 ) பிக்ஷாண்டார்கோயில் வாகன கைங்கரியச்செலவு 1260.00 பிடில் சுந்தரேச ஐயர் மகள் கலியாணச் 

செலவுக்காக 302. ) வாணக் கடைக்கு 4600 பூப்பல்லக்கு ஜோடிக்க  2600 ) என்று இவ்விதம். செட்டியார் வீட்டிலே, சூடிக் கொள்ள ஆளில்லாததால் மூலையில் குவிந்தன் மலர் மாலைகள். பழனியின் மடியில் மலர்ந்த தாமரை போன்ற முகம், அதிலே ரோஜா போன்ற கன்னம், முத்துப் பற்கள், அவைகளைப் பாதுகாக்கும் பவள் இதழ், பவுன் நிற மேனி ,………….. ஏழ்மை . ஆனால், கொள்கையின் படி வாழ்வு அமைந்ததால் இன்பம் அங்கே. செல்வம். ஆனால் மனம் பாலைவனம், செட்டியார் வீட்டில். 

II பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி , மனைவி யால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, “அப்பா! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட் டேன், பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்ச வேண்டும், சீ சோ! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்” என்று ஏச வேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக்கொள்ள வேண்டும் ; இதுவே செட்டியாரின் நித்யப் பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம் மனுச்செய்தும், மகன் வாயிற்படி வரவும் இல்லை, வறுமையால் தாக்கப்பட்டதற்காக, மனம் மாறினதாகவும் தகவலில்லை. 

”கை கோத்துக் கொண்டு கலகலவென்று சிரித்துக் கொண்டே போனார்கள்.” 

”பழனி, ராஜாபோலத்தான் இருக்கிறான்.” 

ரொம்ப அழகாகப் பேசுகிறான்.” ”நேற்றுக் கூட்டத்திலே கல் விழுந்தபடி இருந்தது; பழனி கொஞ்சம் கூடப் பயப்படாமல், பேசிக் கொண்டே இருந்தான்” என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வோர் செய்தியும் செட்டியா ருக்குச் செந்தேள் தான் ! துடித்தார், அவன் துயரமின்றிச் சந்தோஷமாக வாழ்கிறான் என்று கேட்டு, தகப்பனார் மகன் விஷயமாகக் கொள்ளக்கூடிய உணர்ச்சியல்ல தான். ஆனால் குழந்தைவேல் செட்டியார், பழனியைத் தன் மகன் என்று எண்ணவில்லை; தன் பணத்தை அலட் சியப்படுத்திய ஆணவக்காரன் என்றே எண்ணினார். 

“இருக்கட்டும் இருக்கட்டும்; அவள் எத்தனை நாளைக்கு இவனிடம் ஆசைகாட்டப் போகிறாள்? ‘முதலிலே கோபித்துக் கொண்டாலும் பிறகு சமாதானம் ஆகிவிடுவார், அப்போது சொத்துப் பழனிக்குத் தரப் படும், நாம் சொகுசாக வாழலாம்என்று அந்தச் சிறுக்கி எண்ணிக் கொண்டுதான், என் மகனைத் தன் வலையிலே போட்டுக்கொண்டாள். கடைசிவரை ஒரு பைசாகூட நான் தரப்போவதில்லை என்று தெரிந்தால், ‘போய்வாடாஎன்று கூறிவிடுவாள் ; பயல் வந்து சேருவான். பணத் தாசையால் தானே அவள் அவனை மயக்கிவைத்தாள் என்று எண்ணி, மனத்தைத் தேற்றிக்கொள்வார். அவ ருக்கென்ன தெரியும், அவர்கள் சிருஷ்டித்துக் கொண்ட இராச்சியத்திலே, பணத்துக்கு அல்ல மதிப்பு என்பது ! 

மறையூர், நால்வரின் பாடல் பெற்ற ஸ்தலமல்ல : ஆனால் அதற்கு அடுத்த படிக்கட்டிலிருந்த அடியார்கள் பலர், அந்த க்ஷேத்திரத்தைப்பற்றிப் பாடியிருக்கிறார்கள். அங்கிருந்த ஒரு மண்மேடு, ஒரு காலத்தில் மால் மருகன் கோயிலாக இருந்ததென்று வைதிகர்கள் கூறுவர். 

 

குழந்தைவேல் செட்டியாருக்கு, மறையூர் முருகன் கோயிலை அமைக்கும் திருப்பணியின் விசேஷத்தைத் தாழையூர் சனாதனிகளும் மறையூர் வைதிகர்களும் கூறினர். அவரும், வெகுகாலத்துக்கு முன்பு கிலமாகிப் போன திருக்கோயிலை மீண்டும் அமைத்துத் தரும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததே என்று பூரித்தார். பணத்துக்குக் குறைவில்லை; ஆகவே, நினைத்த மாத்திரத் தில் ஆள் அம்பு தளவாடங்கள் வந்து சேர்ந்தன. செட்டியார் மறையூர் முகாம் ஏற்படுத்திக்கொண்டு, கோயில் வேலையை ஆரம்பித்துவிட்டார். பல ஊர்களில் லிருந்து, கட்டட வேலைக்காரர்கள், சிற்பிகள், ஓவியக் காரர், கூலிகள் ஆகியோர் மறையூர் வந்து குவிந்தனர். மறையூர் சேரிக்குப் பக்கத்திலே, நூறு குடிசைகள் புதிதாக அமைக்கப்பட்டு, அவைகளிலே கூலி வேலை செய்பவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது அதி காலை எழுந்திருப்பார்; காலைக்கடனை முடித்துக் கொண்டு, திருப்பணியைக் கவனிப்பார். அரைத்த சுண்ணாம்பை எடுத்துப் பார்ப்பார் ; செதுக்கிய கற்கம்பங்களைத் தடவிப் பார்ப்பார் ; வேலையாட்களைச் சுறுசுறுப்பாக்கு வார். சோலையிலே புஷ்பங்கள் மலரத் தொடங்கியதும் வண்டுகள் மொய்த்துக் கொள்வது போல், மறையூரில் வேலையாட்கள் குழுமிவிட்டனர். ஒவ்வோர் மாலையும், அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியிலே அமர்ந்து அன்றாடக் கூலியைத் தருவார். 

பழனிமேல் ஏற்பட்ட கோபம், செட்டியாரின் சொத்தை மதிலாகவும் பிரகாரமாகவும், திருக்குளமாகவும், மண்டபமாகவும் மாற்றிக்கொண்டிருந்தது. 

 

இந்தக் கோயில் கட்டும் வேலையிலே ஈடுபட்டுக்கொண் டிருந்த வேலையாட்களிலே பெண்களும் ஏராளம். அவர்களிலே. குமரி ஒருத்தி. மாநிறம் , ஆனால் உழைப் பால் மெருகேறின் உடல், குறுகுறுப்பான பார்வை, இயற்கையான ஓர் புன்னகை தவழ்ந்தபடி இருக்கும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் மெல்லிய குரலிலே ஏதாவது பாடிக்கொண்டே இருப்பாள். இருபதுக்குள் தான் வயது. பருவ கர்வத்துடன் விளங் கும் அப்பாவையின் பார்வையிலேயே ஓர்வித மயக்கும் ‘ சக்தி இருந்தது. கொச்சைப் பேச்சோ , வேதாந்திக்குக் கூட இச்சையைக் கிளறி விடுவதாக இருக்கும். அவள் கோபமே கொள்வதில்லை 

”ஏலே! குட்டி! என்ன அங்கே குரங்கு ஆட்டம் ஆடறே!’ என்று மேஸ்திரி முத்துசாமி மிரட்டுவான். குமரி பயப்படவுமாட்டாள், கோபிக்கவுமாட்டாள். “அண்ணி, காலையிலே சண்டை போட்டுதா? என்று கேலிபேசுவாள். கடைக்கண்ணால் பார்ப்பது குமரிக்கு வழக்கமாகிவிட்டது. கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே முகவாய்க்கட்டையில் கைவைத்துவிட்டு, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, “அடே , அப்பா! காளைமாடு மாதிரி விழிக்கிறான் பாரு. ஏமாறுகிறவ நான் இல்லை. அதுக்கு வேறே ஆளைப் பாருடா. ராசா தேசிங்கு” என்று குறும்பாகப் பேசுவாள், யாராவது அவளிடம் கொஞ்சம், அப்படி இப்படி நடக்க நினைத்தால். 

“குட்டி , பார்ப்பதும் சிரிப்பதும், குலுக்கி நடப்பதும், வெடுக்கென்று பேசுவதும் பார்த்தா, தொட்டால் போதும் என்று தோன்றுகிறது; கிட்டே போனாலோ, நெருப்பு ; நெருப்பிடம் போவது போலச் சீறிவிழுகிறாளே, இப்படி ஒருத்தி இருப்பாளா?” என்று பலபேர் தோல்விக்குப் பிறகு பேசிக் கொள்வார்கள். குமரிக்கு, அங்கிருந்தவர்களின் சுபாவம் நன்றாகத் தெரி யும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியும் தெரியும். அதற்காக வேண்டி, யாருடனும் பழகாமலும் இருக்க மாட்டாள். தாராளமாகப் பழகுவாள்; ஆனால் ‘கெட்ட பேச்சு வரும் என்று தெரிந்தால் போதும், வெட்டி விடுவாள். காற்றிலே அலையும் ஆடையைச் சரிப்படுத்த நிற்பாள் ; குறும்புக்காரரின் கண்கள் தன் மீது பாய்வதைக் காண்பாள், முகத்தை எட்டுக் கோணலாக்கிக் காட்டுவாள். அண்ட முடியாத நெருப்பு அவள். அவள் அண்ணனோ, மகா கோபக்காரன். குமரியைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நாணயமான கருத்தைக் கொண்டவர்கள் கூடச் சொக்கனிடம் (கு ம ரி யின் அண்ணனிடம் கேட்கப் பயப்படுவார்கள். தாய்தந்தை இருவரும் இல்லை. தங்கைக்கு அண்ணன் துணை, அண் ணனுக்குத் தங்கை துணை . இருவருக்கும், ரோஷ உணர்ச் சியே பலமான கவசம். 

குமரி, வேலை செய்யுமிடத்திலே இருந்தவர் அனைவ வரையும் ‘எடை’ போட்டுவிட்டாளே தவிர, செட்டியாரை அவள் சரியாக எடை போடவில்லை. பாவம், பெரிய மனுஷர், மெத்தாதி, உபகாரி, ஏழைகளிடம் இரக்கம் உள்ளவர், என்றுதான் குமரியும், மற்றவர் களைப்போலவே, அவரைப்பற்றித் தெரிந்திருந்தாள். மற்றவர்களிடம் பேசுவதைவிட, அவரிடம் கொஞ்சம் அடக்கமாகவே பேசுவாள். ”யாரங்கே! மணல் ஏன் இப்படிச் சிதறி இருக்கு? பகவானுக்கான காரியம், பாவபுண்யம் பார்த்து வேலை செய்யுங்கள், கேவலம் பணத்தை மட்டும் கவனித்தால் சரி இல்லை” என்று செட்டியார் சொல்வார்; மற்றவர்கள் முணுமுணுத்தாலும் குமரிமட்டும் குறை கூற மாட்டாள். ஓடிப்போய், மணற் குவியலைச் சரிசெய்வாள் , 

மீனா, ஒரு குறும்புக்காரி; கொஞ்சம் கைகாரியுங் கூட, அதற்காகவே அவளுக்கு, மேஸ்திரி ஒருநாள் தவறாமல் வேலை கொடுப்பான். இடுப்பிலே கூடை இருக்கும், அது நிறைய மணல் இருக்காது; ஒய்யார நடை நடப்பாள்.” பாக்கு இருக்கா அண்ணேன்! ஒரு வெத்திலைச் சருகு கொடுடி முனி!” என்று யாரையாவது ஏதாவது கேட்டபடி இருப்பாள். கொடுத்தாக வேண்டு மென்பதில்லை. மேஸ்திரியிடம் பேசுவதிலே ரொம்பக் குஷி அவளுக்கு. அவனுக்குந்தான். 

மேஸ்திரியாரே ! இருக்குதா?” 

க ரு க் கு மீசைக்காரனை, இருக்குதாண்ணு கேக்கறயே ! 

‘நான் எதைக் கேட்கறேன் நீ எதைச் சொல்கிறே? 

” கேட்டதற்குப் பதில் நீ என்ன இருக்கான்னு கேட்டே? 

”கொஞ்சம் புகையிலை கேட்டேன்.” ‘காரமா இருக்கும்.” 

பரவாயில்லை. அந்தக் காரத்தைக் காணதவளா நானு. கொடுங்க இருந்தா இப்படிப் பேச்சு நடக்கும். 

 

இருவரும் பேசும் போது மற்றப் பெண்கள் இளித்துக் கொண்டு நிற்பார்கள். விடமாட்டாள் மீனா. 

“ஏண்டி! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க.” 

“ஒண்ணுமில்லையே, அக்கா.” 

”அக்காவா நானு? இவ கொழந்தை! வயசு பதனாறு.” 

இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம், சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத் திலைப்பை, இவைகள் அடிக்கடி மீனா மீது தான் விழும். மேஸ்திரி இவைகளை அடிக்கடி வீசுவார், அவள் ஏச மாட்டாள். அவளுக்கு அவன் கொடுத்து வந்த எட்டணா கூலி, இந்த விளையாட்டுக்கும் (விபரீதமற்ற) சேர்த்துத் தான். 

ஒரு கெட்ட வழக்கம் மீனாவுக்கு ; முடி போட்டு விடுவாள். திடீர் திடீரென்று தன் மனம் போன போக்கிலே ஜோடி சேர்த்து விடுவாள், – கற்பனையாகவே! அவளுடைய ‘ஆருடம்’ பல சமயங்களிலே பலித்ததுண்டு. ‘உன் பல் ரொம்பப் பொல்லாதது. ஒன்றும் சொல்லிவிடாதேயாடியம்மா” என்று கெஞ்சு வார்கள் மற்றவர்கள். இல்லாததை நான் சொல்ல மாட்டேன்” என்று கூறுவாள் மீனா. 

மீனாவின் கண்களுக்குத்தான் முதலில் தெரிந்தது. குமரியின் மீது செட்டியாரின் நோக்கம் செல்வது ! குமரிக்குத் தெரிவதற்கு முன்பே, மீனாவுக்குத் தெரிந்து விட்டது ! குமரி, எந்தப் பக்கத்திலே வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்தப் பக்கம் தான் செட்டியார் அடிக்கொரு தடவை வருவார். மற்றவர்களை, இதைச் செய் அதைச் செய் என்று நேரிலே கூப்பிட்டுச் சொல்வதற்குப் பதில். குமரியைக் கூப்பிட்டனுப்பி அவள் மூலமாகவே சொல்லி அனுப்புவார். அதாவது, குமரியை அடிக்கடி தம் பார்வையிலே வைத்துக் கொண்டிருக்கச் செட்டியார் ஆசைப்பட்டார். எத்தனை நாளைக்குச் செடியிலே இருக்கும் மலரைப் பார்த்து மகிழ்வதோடு இருக்க முடியும் ? ஒருநாள் பறித்தே விடுவது என்று தீர்மானமாகித் தானே விடும்! உலகமறிந்தவள் மீனா. ஆகவே உருத்திராட்சம் அணிந்தால் என்ன, விபூதி பூசினாலென்ன, நல்ல முகவெட்டுக்காரியிடம், மனம் தானாகச் சென்று தீரும். அதிலும், கள்ளங்கபடமற்ற குமரியிடம் காந்தசக்தி இருக்கிறது, என்பதை அவள் அறிவாள். ஆகவே செட்டியார், குமரியைக் கூப்பிட்டு அனுப்புவது போதாதென்று, மீனாவே சில சமயங்களிலே, குமரியைச் செட்டியாரிடம் போய்ச் , சுண்ணாம்பு அரைத்தது சரியா இருக்கா என்று கேட்டுவா, நாளைக்குப் பிள்ளையார் பூஜைக்கு மகிழம் பூ வேண்டுமா என்று கேட்டு வா, என்று ஏதாவது வேலைவைத்து அனுப்புவாள். பாபம், ஒவ்வொரு தடவையும் குமரி தபால் எடுத்துக் கொண்டு மட்டும் போகவில்லை, மையலையும் தந்துவிட்டு வந்தாள் அந்தப் பக்தருக்கு, தன்னையும் அறியாமல். அவள் சேதியைக் கூறுவாள், அவரோ அவளுடைய சுந்தரத் தைப் பருகுவார். எவ்வளவு இயற்கையான அழகு! கண் களிலே என்ன பிரகாசம்! உடல் எவ்வளவு கட்டு ! இவ்வளவுக்கும் ஏழை ! அன்றாடம் வேலை! அழுக் கடைந்த புடவை ! உப்பிரஜாதி (ஓட்டர்)! மாளிகை யிலே உலவ வேண்டிய செளந்தரியவதி, என்று எண்ணிப் பரிதாபப்படுவார். ஒருநாள், கையில் சுண்ணாம்புக்கறை படிந்திருந்ததைக் கழுவ எண்ணி, குமரி! கொஞ்சும் தண்ணீர் கொண்டு வரச் சொல்லு” என்றார் செட்டியார். வழக்கமாக, மேஸ்திரிதான் தண்ணீர் கொட்டுவார். அவர் முதலியார் வகுப்பு, அன்று மேஸ்திரிக்கும் மீனாவுக்கும் பலமான பேச்சு, ஆண் உசத்தியா, பெண் உசத்தியா ” என்று. ஆகவே, குமரி கூப்பிட்டும் அவர் வரவில்லை. சரேலெனத் தண்ணீர்ச் செம்பை எடுத்துக்கொண்டு குமரியே போனாள். சொட்டி யாரும் எங்கேயோ கான் மாக இருந்ததால், தண்ணீர் எடுத்து வந்தது யார் என்று கூடக் கவனிக்காமல் கையை நீட்டினார். குமரி தண்ணீர் ஊற்றினாள். “போதுண்டா” என்றார் செட்டியார் : அவருடைய நினைப்பு தண்ணீர் கொட்டியது மேஸ்திரி தான் என்பது. குமரி களுக்கென்று சிரித்துவிட்டாள். செட்டியாருக்கு அப்போதுதான் விஷயம் விளங்கிற்று. அதுவரை அவர் உட்பிரஜாதியாள் தொட்ட தண்ணீரைத் தொட்டதில்லை. என்ன செய்வது? அவள் அன்போடு அந்தச் சேவை செய்தாள் ; எப்படிக் கோபிப்பது? நீயா? என்று கேட்டார் ‘ ஆமாங்க! மேஸ்திரிக்குத்தான் வேலை சரியாகஇருக்கே! அதனாலேதான் நான் எடுத்து வந்தேன். தப்புங்களா? கையைத் தானே கழுவிக்கொண்மங்க, உள்ளுக்குச் சாப்பிட்டாதானே, தோஷம்” என்று கேட்டாள் . தொட்ட நீரைத் தொடுவது கூடத் தோஷம் என்பது தான் செட்டியாரின் சித்தாந்தம். ஆனால் அந்தப் பெண், சூது வாதறியாது சொன்ன போது என்ன செய் வார்? செட்டியார் ஒருபடி முன்னேறினார்; உள்ளுக்குச் சாப்பிட்டாத்தான் என்னாவாம்? குடலா கறுக்கும்!” என்றார். எல்லாம் மனசுதானுங்களே காரணம்!” என்று கொஞ்சுங் குரலில் கூறினாள் குமரி. “அது சரி! 

ஆமாம்!” என்று கூறுவிட்டு விரைவாக உள்ளே போய் விட்டார். அவள் விட்டாளா ! கூடவே சென்று, செட்டியாரின் நெஞ்சிலே புகுந்து கொண்டாள். எல்லாம் மனம் தானே! சிவப்பழமாக இருந்தால் என்ன ? மனந்தானே அவருக்கும். 

”யாரை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார், குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார்.” 

“ஏன் ? என்னா விஷயம்?” 

”: செட்டியாருக்கு அவளைப்பார்க்காவிட்டா உசிரே போயிடும்.” 

”அம்மா, அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி.” 

பொடியுமில்லை, மந்திரமுமில்லை ! அவளைக் கண்டவன் எவன் தான், தேனில் விழுந்த ஈ போல் ஆகாமலிருக்கிறான் அவகூடக் கிடக்கட்டும்; கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒரு பெண் இருந்தா, எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப் பார்க்காமே இருக்கிறான்? செட்டியார், என்னமோ கோயில் கட்டலாமென்று தான் வந்தார். அவர் கண்டாரா, இங்கே இந்த குண்டு மூஞ்சி இருப்பாளென்று?” 

” செட்டியார் மேலே பழிபோடாதே. அந்த ஆசாமி ரொம்ப வைதிகப் பிடுங்கல். அவ கை பட்ட தண்ணீ ரைக் கூடத் தொடமாட்டார். ஒரே மகன் அவருக்கு ஜாதியைவிட்டு ஜாதியிலே சம்பந்தம் செய்கிறானென்ற உடனே, போடா வெளியே என்று கூறிவிட்டவர்.” 

”மவனுக்குச் சொன்னாரு, அப்பாவா இருந்ததாலே. இவருக்கு எந்த அப்பன் இருக்காரு, போ வெளியேன்னு சொல்ல?’ 

மேஸ்திரி, மீனாவிடமிருந்து தெரிந்து கொண்ட இரகசியத்தைச் சமயம் வரும்போது தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மேற் கொண்டு தகவல்களைக் கேட்டறிய விரும்பினான். மீனா, மேஸ்திரியின் ஆவலைத் தெரிந்து கொண்டு சிரித்தபடி, “செச்சே, நீ, அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சி போச்சின்னு நினைக்காதே. செட்டியாருக்கு அவ கிட்ட கொள்ள ஆசை இருக்கு. ஆனா பயமோ மலையத்தனை இருக்குது. மேலும், குமரி வேடிக்கையாகப் பேசுவாளே தவிர, ரொம்ப ரோஷக்காரி. அதனாலே, செட்டியார் ஏதாவது இளிச்சா, அவ அண்ணனிடம் சொல்லிவிடுவா. சும்மா, பார்க்கறதும், சிரிச்சுப் பேசறதுமா இருக்க வேண்டியது தான் ” என்று கூறினாள். 

உண்மையும் அதுதான். செட்டியார் குமரியின் பார்வையையே விருந்தாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் ஜாதிகுலபேதங்கள் அர்த்தமற்றவை என்று பழனி எவ்வளவோ ஆதாரத்தோடு கூறியும், கேட்க மறுத்த செட்டியாரின் மனத்திலே, அந்தப் பெண்ணின் ஒரு புன்னகை எவ்வளவோ புத்தம் புதுக்கருத்துக்களைத் தூவி விட்டது. * ஜாதியாம் மகாஜாதி ! இந்தப் பெண்ணுடைய இலட்சணத்துக்கும் குணத்துக்கும் ஒருவன் இலயிப்பானே தவிர, இவள் ஜாதியைக்கண்டு பயப்படுவானோ என்ன!” என்று கூட நினைத்தார் ஒரு கணம் அவ்விதம் நினைப்பார், மறுகணமே மாறிவிடுவார். ”இதுதான் சோதனை — மாயை என்னை மயாக வந்திருக்கிறது – இதிலிருந்து தப்பித்தாக வேண் டும்’ என்று தீர்மானித்து, தேவார திருவாசகத்தையும் அடியார்கள் கதைகளையும் முன்பு படித்ததைவிட மேலும் சற்று அதிக ஊக்கமாகப் படிக்கத் தொடங்கினார். அந்தப் பாவையை மறந்துவிட வேண்டும் என்ற திட்டம் அவருடையது. பாபம், அவருக்கு அதுவரை தெரியாது. காதல் பிறந்தாள். அதன் கனலின் முன்பு எந்தத் திட்டமும் தீய்ந்து போய்விடும் என்ற உண்மை . 

‘தோடுடைய செவியன்’ என்ற பதிகத்தை அவர், அதற்கு முன்பு எத்தனையோ நூறு முறை படித்ததுண்டு. அப்போதெல்லாம், இருஷபம் ஏறிக்கொண்டு, ஜடையில் பிறையுடன் சிவனார் வருவது போலவே, அவருடைய அகக்கண் முன் சித்திரம் தோன்றும்; பரமனுக்குப் பக்கத் திலே , பார்வதி நிற்பதும் தெரியும். ஆனால், அப்போதெல்லாம், ஐயனுடைய அருள் விசேஷத்தைப் பற்றியே செட்டியார் கவனிப்பார். குமரியின் மீது ‘ஆசை’ உண்டான பிறகோ, பதிகம் பாடியானதும், பார்வதியும் பரமசிவனும் அவர் மனக் கண்முன் தோன்றுவதும், டார்வதி பரமசிவனை அன்புடன் நோக்குவதும், அந்த அன்புப் பார்வையால் ஐயனுடைய அகம் மகிழ்ந்து முகம் மலர்வதும் ஆகிய காதல் காட்சியே அவருக்குத் தெரிய லாயிற்று பதிகம் பாடி, பிரேமையை மாய்க்க முடிய வில்லை – வளர்ந்தது. ஏகாந்தமாக இருந்து பார்த்தார் – தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கிற்று. அவரையும் அறியாமல் அவர் மனத்திலே ஒருவகை அச்சம் குடி புகுந்து விட்டது. எப்படி நான் தப்ப முடியும்” என்ற அச்சம் அவரைப் பிடித்துக்கொண்டது. துறைமுகத் தருகே நின்றுகொண்டு, தன் கப்பலின் வரவுக்காகக் காத்து கொண்டிருக்கும் வணிகர் போல், இவர் மனம் பாடுபட்டது. குமரியின் கள்ளங்கபடமற்ற உள்ளம் அவருக்குத் தெரியும், பணிவுள்ளவனாக அவள் தன் னிடம் நடந்து கொள்கிறாள்; பசப்பு அல்ல என்பதையும் அறிவார்: தம் மனத்திலே மூண்டு விட்ட தீயை அவள் அறியாள், அறிந்தால் திகைப்பாள் என்பதும் தெரியும். 

கொடியிலே கூத்தாடும் முல்லையைப் பறிக்கும் நேரத்தில் வேலிப் பக்கமிருந்து தோட்டக்காரன் ஏ ! யாரது? கொடியிலிருந்து கையை எடு என்று கூவினால், எவ்வளவு பயம் பிறக்கும் ? தோட்டக்காரன் கூவாமல் முல்லையே கிள்! பறிக்காதே! உனக்காக அல்ல ‘ நான் பூத்திருப்பது!” என்று கூவினால் பயம் எல் வளவர் இருக்கும் அவ்விதமான அச்சம் செட்டியா ருக்கு. அடக்கமுடியவில்லை. அவளோ அணுவளவும் சந்தேகிக்கவில்லை. செட்டியாரின் உண்மை நிலை தெரிந்தாடு அவள் உள்ளம் எவ்வளவு வாடும் ? எவ்வளவு பயப்படுவாள்? மதிப்புத் துளியாவது இருக்குமா? ” கொடியிலிருந்து முல்லை பேசுவது போல அந்தக்குமரி, ‘ஏனய்யா! இதற்குத்தானா கோயில் கட்டு கிறேன் குளம் வெட்டுகிறேன் என்று ஊரை ஏய்த்தாய்? கட்டுக்கட்டாக விபூதி – காலை மாலை குளியல் – கழுத்திலே உருத்திராட்சம் – கந்தா முருகா என்று பூஜை கல் உடைக்க வருபவளைக் கண்டால், கைபிடித்து இழுப்பது, இதுதான் யோக்யதையா? ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே, உன்னுடைய வெளி வேஷத்தை நானும் நம்பினேனே! ஏதோ , வயிற்றுக்கில்லாத கொடுமையால் கூலி வேலை செய்ய வந்தேன். என்ன தைரியம் உனக்கு , வேலை செய்ய வந்தவளை, வாடி என்று அழைக்க!” என்று கேட்டுவிட்டால்! செ! பிறகு இந்த ஜென்மத்தை வைத்துக்கொண்டும் இருப்பதா? குளம் குட்டை தேட வேண்டியதுதான். ஆண்டவனே! என் சபலம் போக ஒரு வழியும் இல்லையா?’ என்று செட்டி யார் சிந்திப்பார். சிவனாரைத் துதிப்பார் ; நாளாகவாக, காதல் தன்னைப் பித்தனாக்கிக் கொண்டு வருவதைத் தெரிந்து பயந்தார். 

ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள். 

”என்னாங்க உடம்புக்கு ? ஒரு மாதிரியா இருக்கறிங்க.” 

”ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே! ”ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க” 

”எனக்கென்ன களைப்பு ! நான் என்ன , உன் போல் வெயிலிலே வேலை செய்கிறேனா? 

”உங்களுக்கு ஏனுங்க , தலை எழுத்தா என்ன , கூலி வேலை செய்ய? நீங்க மகாராஜா.” 

”உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம் பிராயத்திலே சேற்றிலேயும் மண்ணிலேயும் இருக்க. குமரி! உனக்கு ஒரு பணக்காரனாப் பார்த்துக் கலியாணம் செய்துவிட்டார். கூலி வேலை ஏன் செய்யப் போறே 

பிறகு.” 

 

“வேடிக்கையாப் பேசறிங்க. அது அதுக்குன்னு ஆண்டவன் அளவு போடாமலா அனுப்புவாரு.” 

இப்படி ஏதாவது பேசுவாள் குமரி மாடிக்குச் செல்வதற்கு, ஒவ்வோர் படிக்கட்டாகக் கால் வைப்பது போலச் செட்டியாரும், ஒவ்வோர் தடவை பேசும் போதும், ஒவ்வொரு வாசகமாகத் தம் நிலையை உணர்த்துவிக்கக் கூறி வந்தார். குமரி , செட்டியாரிடம் இப்படிப் பட்ட நிலை ஏற்படும் என்று துளியும் எதிர் பார்த்தவளல்ல. ஆகவே அவர் பேசின தன் உட்கருத்தை அவள் உணர்ந்துகொள்ளவே இல்லை. 

ஒருமுறை செட்டியார், தம் சோகநிலைமையைக் கூறினார். அவருக்குப் பரிந்து பேச விரும்பிய குமரி, 

”ஆமாங்க, எனக்குக் கூடச் சொன்னாங்க, உங்க மகன் கதையை . யாரோ ஒரு துஷ்ட முண்டே, அவரைக் கெடுத்து விட்டாளாம்” என்றாள். 

”குமரி! அந்தப் பெண்ணைத் திட்டாதே. பெண்கள் என்ன செய்வார்கள்? அவன் அவள் மீது ஆசை கொண்டால், அவள் என்ன செய்வாள் பாவம்?” என்று செட்டி யார், கம் மருமகள் சார்பிலே ஆஜரானார்! மற்றோர் நாள் “உன் அழகுக்கும் குணத்துக்கும், நீ எங்க ஜாதியிலே பிறந்திருந்தா, உன் தலையிலே, மணல் கூடையா இருக்கும்!’ என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார். மற்றும் ஓர் நாள், மார்பு வலிக்குத் தைலம் தடவும் படி சொன்னார். கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் ‘கல்மிஷம் அற்ற மனத்துடன் அவருடைய மார்புக்குத் தைலம் பூசினாள் குமரி. சதா சர்வகாலமும் அவள் நினைப்பு நெஞ் சிலே இருந்ததே தவிர, ஒருநாளும் அவள், அன்று அமர்ந்திருந்தது போலத் தம் அருகே உட்கார்ந்திருந்ததேயில்லை; அவள் கை , செட்டியாரின் மார்பிலே பட்டபோது புள் காங்கிதமானார். கண்களை மூடிக்கொண்டார். அவளு டைய மூச்சு அவருக்குத் தென்றல் வீசுவது போலி ருந்தது. என்னென்னமோ எண்ணினார். உடலே பதறிற்று அவருக்கு. மார்பு வலி மட்டுமில்லை, செட்டி யாருக்குக் குளிர் ஜுரம் என்று குமரி எண்ணிக்கொண்டாள், அவருடைய உடல் பதறுவதைப் பார்த்து. ஜூரம், ஆம் – ஆனால், அந்த நோயைக் கிளறியது அவளுடைய அழகு என்பதை அவள் அறிந்து கொள்ள வில்லை. ஆபத்து வேளை ; ஆனால் தப்பித்துக்கொண்டார் செட்டியார், மீனா அங்கு வந்ததால், ‘மார்வலி, தைலம் தடவினேன், ஜூரம் வரும் போலிருக்கு” என்றாள் குமரி பார்த்தாலே தெரியுதே” பச்சைச் சிரிப்புடன் கூறிக் கொண்டே போய்விட்டாள் மீனா. 

தைலம் பூசிக் கொண்ட பிறகு, செட்டியாரின் தாம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இனி இங்கிருந் தால், எந்த நேரத்தில் என்ன ஆபத்து நேரிடுமோ , வெறி மீறி என்ன விபரீதமான செயல் புரிந்து விடும் படி நேரிட்டு விடுமோ என்ற திகில் அதிகரித்தது. இனி இங் கிருக்கக் கூடாது இரண்டோர் நாட்கள், வெளியூர் போய் வருவது நல்லது என்று எண்ணி, மறையூரை விட்டுக் கிளம்பினார். மனச்சாந்திக்காக இம்முறையைக் கையாண்டார். ஆனால் எந்த ஊர் சென்றாலும், அவள் பின் தொடர்ந்தாள். அதோ செட்டியார், அந்தியூர்க் கடை வீதியில் அருணாசலச் செட்டியார் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். புதிதாக வந்த பம்பாய் சில்க் சேலையின் நேர்த்தியை அருணாசலச் செட்டியார் வாடிக்கைக்காரருக்குக் கூறுகிறார். குழந்தைவேலச் செட்டியாரோ அந்தச் சேலையைக் கண்ட உடனே அதைக் குமரிக்குக் கட்டி அழகு பார்க்கிறார்! அதாவது அந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு குமரி, தன் எதிரில் நின்று காட்சி தருவது போலத் தோன்றுகிறது செட்டி யாருக்கு. எங்கே போனாலும், எதைக் கண்டாலும், விநாடிக்கு விநாடி அவள் வருகிறாள். ஒவ்வோர் தடவை யும் ஒவ்வோர் படி அதிகரிக்கிறது அவருடைய ஆசை. பித்தம் பிடித்தவர் போல் மீண்டும் மறையூர் வந்து சேர்ந்தார். 

செட்டியாரின் நிலையை மீனா நன்றாக உணர்ந்து கொண்டாள். சமயமறிந்து செட்டியாரைத் தனியாகச் சந்தித்து வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள். அவர் முதலில் நடுநடுங்கிப் போனார். பிறகு இல்லை என்று கூறிப் பார்த்தார். கடைசியில் கண்களில் மிரட்சியுடன், “ஆமாம் எனக்கு, அந்தப் பெண்மீது அமோகமான ஆசைதான்; ஆனால்……………….” என்று பிச்சை கேட்பது போலப் பேசினார். 

”பயப்படாதிங்க செட்டியாரே! அந்தப் பெண் ஒரு மாதிரி. இந்த மாதிரி காரியத்துக்குத் தலை போனாலும் ஒப்பமாட்டாள்” என்றாள் மீனா. 

அது தெரிந்துதானே, நான் இப்படிப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டேன்” என்று செட்டியார் 

கூறினார். 

”அவள் சம்மதிக்கவே மாட்டாள் ; நாம் தான் . சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும். நாளை இரவு, சொக்கனை ஏதாவது வேலையாக வெளியூருக்கு அனுப்பி விடுங்கள். நான் முடித்துவிடுகிறேன்’ என்றாள் மீனா. இஷ்ட தேவதை பிரசன்னமாகி வரம் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷம் வருமோ அவ்வளவு ஆனந்தம் செட்டியாருக்கு. சொக்கனை வெளியூர் அனுப்புவது சிரமமில்லை, அனுப்பினார் மீனா, ஏற்பாட்டின் படி செட்டியாரிடம் வந்தாள் ; கச்சக்காய் அளவுக்கும் குறைவு ஏதோ லேகியத்தைக் கொடுத்தாள் செட்டியா ரிடம். ”குமரியைக் கூப்பிட்டனுப்பி இந்த லேகியத் தைத் தின்றுவிடும்படி செய்யுங்கள். பிறகு அவள் உங்கள் பொருள் ; விடிஞ்ச பிறகு தானே சொக்கன் வருவான்!” என்று யுக்தியும் சொல்லித் தந்தாள். நடுங் கும், கரத்திலே லேகிய உருண்டையை வாங்கிக்கொண்டு செட்டியார், ”இது என்ன மருந்து? ஆபத்துக் கிடை யாதே’ என்று கேட்டார். ”இது என்ன மருந்து என்று நீங்கள் நாளைக் காலையிலே என்னிடம் சொல்வீர் செட்டியாரே! நான் போய் குமரியை அனுப்புகிறேன், லேகியம் செய்யும் வேடிக்கையைப் பார்த்துக்கொள்ளுங் கள் நீங்களே’ என்று மீனா கூறிவிட்டுப் போய்விட்டாள். 

அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலில்லேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடி வந்தாள் கோயிலுக்கு அறையிலே செட்டியார் உலவிக்கொண்டிருக்கக் கண்டு, ”என்னாங்க உடம்புக்கு ! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி , யாரையும் 

 

எழுப்பாதே. யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே” என்று கேட்டாள். 

செட்டியார், மீனாவின் தந்திரத்தைத் தெரிந்து கொண்டார். ”ஆமாம் குமரி ! மயக்கமாக இருந்தது : இப்போது இல்லை. மணி பத்து இருக்குமே பாவம், நீ தனியாகவா இங்கு வந்தே?” என்று கேட்டார். 

”ஆமாங்க! மீனா சொன்னதும் எனக்கு , வந்து பார்த்துவிட்டுப் போகணும்னு தோணவே, ஒரே ஓட்ட மாக ஓடி வந்தேன். நான் போகிறேனுங்க” என்றாள் குமரி. செட்டியாருக்கு ஆபத்து என்ற உடனே ஓடி வந்துவிட்டாளே தவிர, அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், தனியாக அந்த நேரத்தில் அவருடன் இருப்பது சரியல்லவே, என்று தோன்றிற்று. 

” ஏன், இந்த வேளையிலே தனியாக இருக்க ………… ………….’ என்று செட்டியார் கேட்டு முடிப்பதற்குள், குமரி வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில் லிங்க , நாம்ப இங்கே களங்கமற்றுத்தான் இருக்கிறோம். ஆனா மத்ததுங்க அப்படி நினைக்காது பாருங்க” என்றாள். களங்கமற்ற நிலையில் தான் அவள் இருந்தாள். ஆனால் செட்டியாரின் மனநிலை அவளுக்குத் தெரியாது! 

”வந்தாகிவிட்டது, குமரி! கொஞ்சம் அறையைச் சுத்தம் செய்” என்று கூறினார் செட்டியார். குமரி உடனே அந்தக் காரியத்தைச் செய்தாள். ”செட்டி யாரே! நெல் மூட்டைகளை ஏன் இங்கேயே போட் டிருக்கிறீர்கள், எலிகள் அதிகமாகுமே” என்று கேட்டுக்கொண்டே, முட்டைகள் இருந்த இடத்தைச் சுத்தம் செய்தாள். எலிகளைக் காணவேண்டும் என்ற அவசரத்திலே செல்பவர் போலச் செட்டியார், மூட்டை கள் இருக்குமிடம் போனார், குமரி மீது உராய்ந்தபடி ! அதிலே அவருக்கு ஒரு ஆனந்தம் ! அவள் கொஞ்சம் அஞ்சினாள். சுத்தமாக்கிவிட்ட பிறகு, வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டு நின்றாள். செட்டி யார், ‘குமரி! இந்தா , உனக்குப் பரிசு! சாப்பிடு , ருசியாக இருக்கும், உடம்புக்கும் நல்லது’என்று கூறி லேகியத்தைக் கொடுத்தார். 

என்ன துங்க அது , நாவப்பழமாட்டம்!என்று கேட்டாள் குமரி, லேகியத்தைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு. 

‘அது மீனட்சி பிரசாதம்” என்றார் அவர். ” அப்படின்னா?” என்று குமரி கேட்டாள். 

மீனாட்சி கோயிலில், சாமிக்குப் படைத்தது. சாப்பிடு , நல்லது” என்று கூறிவிட்டு, வேறு ஏதோ வேலையைக் கவனிக்கப் போகிறவர் போல் அறைக்கு வெளியே சென்றார். குமரி, லேகியத்தைத் தின்றாள். சுவையாகவே இருந்தது. எப்போதும் அவள் கண்ட தில்லை அது போல லேகியத்தைத் தின்றுவிட்டு, செட்டியார் வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நெல் மூட்டை மீது சாய்ந்தபடி நின்று கொண்டே, அந்த அறையிலே இருந்த படங்களைப் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அந்த அறையில் லிருந்த விளக்கு மிகப் பெரிதாகவும், மிகப் பிரகாச மாகவும் அவளுக்குத் தெரிந்தது. கொஞ்சம் ஆச்சரியத் துடன், மறுபடி விளக்கைப் பார்த்தாள் ; ஒரு விளக்கல்ல, பல விளக்குகள் இருக்கக் கண்டாள்! எலி, மூட்டைகளிடையே ஒடக் கண்டாள் ; குனிந்து, கோல் ஒன்று எடுத்து விரட்டினாள். எலி ஒரு பக்கமிருந்து மற்றோர் பக்கம் ஓடிற்று. குமரி, ஓடினா விடுவேனா! அம்மாடி! எவ்வளவு சாமர்த்தியம் ? ஆனால் இந்தக் குமரியிடமா நடக்கும்” என்று கூறிக் கொண்டே எலியை வேட்டையாடினாள். கடைசியில் எலி தப்பித் துக் கொண்டே ஓடிவிட்டது. ஒரு சுண்டெலிக்கு எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தாயா?’ என்று கேட் டாள். யாரும் எதிரிலே இல்லை. ‘சே! யாரும் இல்லை இங்கே, யாரிடம் பேசுகிறோம்’ என்று நினைத்தாள், சிரிப்பு பொங்கிற்று. சிரித்தாள். மேலும் மேலும் சிரித் தாள். உரத்த குரலிலே சிரித்தாள். இடையிடையே பாடவு மானாள் , அறை முழுவதும் ஜோதிமயமாக அவளுக்குத் தெரிந்தது. குதூகலம் ததும்பிப் பொங்கி வழிந்தது. ஆடை நெகிழ்வதையும் கூந்தல் சரிவதையும் கவனியாமல் சிரித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தாள். குமரியின் கண்கள், உருள ஆரம்பித்தன! தூக்கம் வருவது போன்ற உணர்ச்சி – கருமணி மேல் இரப்பைக்குள்ளே போய் புகுந்து கொள்வது போல், மேலுக்குப் போகிறபடி இருந்தது; என்றுமில்லாத அசட்டுத்தனமான தைரியம் . லேகியம் அவளை ஆட்டி. வைக்க ஆரம்பித்தது; வார்த்தைகள் குழைந்து குழைந்து வெளிவரத் தொடங்கின. செட்டியார், அந்தச் சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்தார். 

குமரி !’ ”செட்டியாரே!’ ”ஏன் இப்படி இருக்கறே?” 

 

” ஏன், செட்டியாரே, ஆடிக்கிட்டே இருக்கறே? ஆமாம், ஏன் இத்தனி விளக்கு?” 

ஒருசமயம் குமரிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று செட்டியாருக்குத் திகில் உண்டாகி விட்ட து. 

”குமரி ! உட்கார்!” 

எங்கே உட்காரவாம்!” அங்கே இருந்த நாற்காலியிலே செட்டியார் உட்கார்ந்து கொண்டு, ”குமரி! இங்கே வா ! இப்படி உட்கார்” என்று கொஞ்சினார். 

குமரி, ‘என்னா அது ! ஏனய்யா, செட்டியாரே! விளையாட்டா செய்யறே!” என்று மிரட்டினாள். செட்டியார், ”லேகியம் குமரியின் புத்தியைக் கெடுத்து விட்டது. ஆனால் அந்த நிலையிலும் அவளை இணங்க வைக்கவில்லை’ என்று நினைத்து மேலும் பயந்தார். மறு விநாடி, குமரி கலகலவெனச் சிரித்தாள். செட்டியார் அருகே போய், அவருடைய முகவாய்க் கட் ையைப் பிடித்தாட்டி, செட்டியாரே ! செட்டியாரே!” என்று ஏதோ பாடத் தொடங்கினாள். அதற்கு மேல் செட்டி யாரால், பயத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவும் முடிய வில்லை. ‘கண்ணு! குமரி !” என்று கொஞ்சியபடி, அவளை அணைத்துக்கொண்டு, முகத்தோடு முகத்தைச் சேர்த்தார், இதழையும் ……….. 

‘சே, கட்டேலே போறவனே?’ என்று கூவிக் கொண்டே , செட்டியார் பிடியிலிருந்து திமிரிக் கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே, காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக் கொள்ள, இடறிக் கீழே வீழ்ந்தாள். 

 

செட்டியார் அவளைத் தூக்கி நிறுத்தினார். அவளுக்கு மேலும் மேலும் மயக்க உணர்ச்சி அதிகரித்தது. எதிர்க் கும் போக்கும் போய்விட்டது. அவளும், அணைப்புக்கு அணைப்பு, முத்தத்துக்கு முத்தம், என்ற முறையில் விளையாடத் தொடங்கினாள் 

கண்ணு “ஏன், மூக்கு ” ”இதோ பார்!” ”மாட்டேன், போ.’ ”ஓரே ஒரு முத்து.” 

வெவ்வெவ்வே.’ இன்பவிளையாட்டு! செட்டியார் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை விட, மிக ரம்மியமாகி விட்டது. 

செட்டியார் மடி மீது தலை வைத்து அவள் சாய்வாள். செட்டியார் குனிந்து ஒரு முத்தம் தருவார்; தலையைப் பிடித்து அவள் ஓங்கிக் கட்டுவாள். பிறகு திமிரிக் கொண்டு எழுந்திருப்பாள். செட்டியாரைப் பிடித்திழுத் துத் தன் மடியில் தலையைச் சாய்த்துக் கொள்ளச் சொல் வாள் ; செட்டியாருக்கு மூச்சுத் திணறும்படி முத்தங்கள் சொரிவாள். ஒரு ஆண் பிள்ளையின் பார்வை சற்று வேக மாகப் பாய்ந்தால் கோபிக்கும் குமரிக்கு இவ்வளவு “சரசத்தன்மை இருக்குமென்று செட்டியார் நினைத்த தில்லை! செட்டியாருடைய முழுக்கு , பூச்சு, பக்தி, பாரா யணம், ஆசாரம், சனாதனம் ஆகியவற்றைக் கண்ட எவர் தான். நள்ளிரவில், அவர் கல் உடைக்க வந்த கன்னியின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டும், கூந்தலைக் கோதிக் கொண்டும், காமுகக் குமரன் போல் ஆடிக் கிடக்கக் கூடியவர் என்று எண்ணியிருக்க முடியும்! காலை முதல் வேலை செய்த அலுப்பினால் அவள் குடிசையிலே, கையே தலையணையாகக் கொண்டு தூங்கி இருக்கவேண்டியவள், ஒரு இலட்சாதிகாரியின் மடியிலே ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு இருக்கிறாள்! கைலாயக் காட்சியைக் கனவிலே கண்டு இரசிக்கவேண்டிய நேரத்திலே பக்திமானான செட்டியார், தம்முடைய வாலிப மகன், காதலித்தவளைக் கடிமணம் புரிவேன் என்று சொன்னதற்காக, ‘காதலாம், காதல் ! ஜாதியைக் கெடுத்துக் கொள்வதா, குலம் நாச மாவதா, ஆசாரம் அழிவதா, ஒரு பெண்ணின் சிநேகத் துக்காக, என்று அனல் கக்கிய செட்டியார், ஒரு பெண்ணை , கூலி வேலை செய்ய வந்தவளை, நடு நிசியில், கட்டி முடியாத கோயிலில். ‘கண்ணே ! மணி யே!’ என்று கொஞ்சிக் கட்டித் தழுவிக்கொள்கிறார், அதுவும் அவள் தன்னுடைய நிலையை இழந்து விடும்படியாக மயக்கம் தரும் லேகியம் சாப்பிடும்படி செய்து செட்டியாருக்கு இவைகளை எண்ணிப் பார்க்க நேரமில்லை ; அவருக்கு அளவில்லாத ஆனந்தம் ; எத்தனையோ நாட்களாகக் கொண்டிருந்த இச்சை பூர்த்தியாயிற்றே என்ற சந்தோஷம்! இன்ப இரவு அவருக்கு. 

இன்ப இரவுக்குக் கடிகாரம் எது ? கோட்டான் கூவினால் கூடக் குயிலின் நாதமாக வன்றோ அந்த நேரத் தில் தொனிக்கும். கருத்த மேகம் சூழ்ந்த வானமும் கூட. அன்று தனி அழ காகத்தானே காணப்படும்! இன்பத் துடன் அளவளாவும் நாள் அமாவாசையாக இருந்தாலும், பௌர்ணமியாகிவிடுகிறது என்பார்கள். செட்டியாரின் நிலை அதுதான். அவர் மனத்திலே அந்த நேரத்தில் கொஞ் சமும் பயமில்லை. “என்ன காரியம் செய்தோம்! நமது வயது என்ன! வாழ்க்கை எப்படிப்பட்டது எவ்வளவு பாசுரம் படித்தோம், எத்தனை திருக்கோயில் வலம் வந்தோம்? காமத்தின் கேடு பற்றி எத்தனை புண்ணிய கதை படித்திருக்கிறோம்? ஒரு கன்னியை , — அவள் நிலை தவறும் படி செய்வது தகுமா? இவ்வளவு மோகாந்த காரத்தில் மூழ்குவது சரியா?” என்று சிந்திக்கத் துளியும் முடியவில்லை. 

அவளுடைய அதரம், அதன் துடிப்பு ! அவளு டைய விழிகள், அவை கெண்டை போல் ஆடுவது! அவளுடைய துடியிடை ! குழையும் பேச்சு! இவைகளைக் கண்டு, ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு வேறு விதமான நினைப்பு வருமா ! 

எந்த வாயால், காமத்துக்குப் பலியாகி ஜாதியைக் கொடுக்கத் துணிந்தாயே, நீ என் மகனல்ல, என் முகா லோபனம் செய்யாதே, போ வீட்டை விட்டு ” என்று கூறினாரோ அந்த வாயால், செட்டியார், அழகுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். காதல் கீதம் பாடிக் கொண்டிருந்தார். ”இது இதழல்ல கனி; கன்னமல்ல ரோஜா ; கண்ணல்ல தாமரை,” என்று கவிதைகளைப் பொழிந்து கொண்டிருந்தார். தூங்கிக் கிடந்த ரசிகத் தன்மை முழுவதும் வெள்ளமெனக் கிளம்பிற்று. இன்ப இரவு அவருக்கு ! அவளுக்கோ , ஏமாந்த இரவு ! அவள் அறியமாட்டாள், காமத்துக்குத்தான் பலியாக்கப் படுவதை. அவள் ஏதோ ஓர் உலகிலே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாள். அந்த உலகிலே நிற்க முடியவில்லை; கண்கள் சுழன்றபடி உள்ளன; ஏதோ ஓர் வகைக் களிப்பிலே மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. காரணம் தெரியவில்லை களிப்புக்கு. ஆடலும் பாடலும் திடீர் திடீரென்று கிளம்புகிறது ; லாகிரியால் ஏற்பட்ட ஆனந்த நிலைமையிலே அவள் இருந்தாள். அவள் நிலை இழந்தாள், அவர் இன்பம் பெற்றார். தாம் . சூது செய்து அந்தச் சுந்தரியை அடைந்ததாகவே அவர் எண்ணவில்லை : எப்படியோ ஒன்று எதிர்பார்த்தது கிடைத்து விட்டது என்ற திருப்தி. அது மட்டுமில்லை, சாமர்த்தியமாக அந்தச் சரசியைப் பெற்றுவிட்டோம் என்ற சந்தோஷம். மதில் சுவரின் மீது ஓசைப் படாமல் ஏறி, மேல் வேட்டியை வீசிக் கிளையை இழுத்து, கிளையிலே கூத்தாடிய மாங் கனியை மெல்லப் பறித்தெடுத்து, முகர்ந்து பார்த்துத் தின்னும் போது, அதன் சுவையிலே இலயித்துவிடும் கள்ளனுக்கு, கனி திருடினோம் என்ற கவனங்கூட வருவதில்லை. மீறிவந்தாலும், தன் சாமர்த்தியத்தைத் தானே புகழ்ந்து கொள்வானே தவிர, செச்சே! எவ் வளவு சூதாக நடந்து கொண்டோம் என்று எண்ணிச் சோகிக்கமாட்டானல்லவா! கனியைக் களவாடுபவனை விட, கன்னியரைக் களவாடுபவன், கட்டுத் திட்டம், சட்டம் சாத்திரம், பதிகம் பாசுரம் ஆகியவைகளின் பிடியிலா சிக்குவான்! முள்வேலியைத் தாண்டிவிட் டோம் என்று கருதிக் களிப்பான். இன்று இரவு. அவ் வளவு தான் அவருக்குத் தெரியும்! அவள் ஓர் அழகி, அவ்வளவுதான் அவருக்குத் தெரியும். அவளை அடைந் தாகிவிட்டது. அது போதும் அவருக்கு . குறும்புப் பார் வைக்கும் கேலிப் பேச்சுக்கும் கூடக்கோபித்துக் கொள் ளும் குமரி, குழந்தை போலத் தூங்கிவிட்டாள், குழந்தை வேலச் செட்டியாரின் மடியில் சாய்ந்தபடி. செட்டியார், மடியில் சாய்ந்திருந்த மங்கையைப் பார்த்தபடி இருந்தார். நெடுநேரம் தூங்கவில்லை. பிறகு, அப்படியே அவரும் நெல் மூட்டை மீது சாய்ந்தபடி நித்திரையில் ஆழ்ந்தார். ஆதவன் உதித்தான்! 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 1அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 1

முன்னுரை  காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கையிலேயே, நேரிடும் சில பல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்துவிடு கின்றன.  ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம்.  இதிலே