Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே உள்ளம் குழையுதடி கிளியே – 8

உள்ளம் குழையுதடி கிளியே – 8

அத்யாயம் – 8

ரத் சந்தர் காலை விமானத்தில் டெல்லி கிளம்பி சென்றுவிட்டான். ஆனால் முதல் நாள் அவன் சொன்ன விஷயத்தின் தாக்கம் குறையாமல் இயந்திரம் போல வேலைகளை செய்தாள் ஹிமாவதி.

விடிய நிறைய நேரமிருந்தது. தினமும் ஆறுமணிக்கு கிறிஸ்டி எழுந்துவிடுவாள். ஆறரை மணியாகும் வரை காத்திருந்துவிட்டு அவளை அழைத்தாள். சரத்தின் தாய் துருவை சரத்தின் மகன் என்று நினைத்திருப்பதை சொன்னாள்.

“எப்படி கிறிஸ்டி இதுக்கு நான் ஒத்துக்க முடியும். அவன் எங்க குழந்தை. எனக்கும் சத்யாவுக்கும் பிறந்தவன். அவன் எப்படி இவங்க பேரனாவான்”

மறுமுனையில் சில வினாடிகள் கிறிஸ்டி யோசித்தாள். உணர்ச்சிகளின் தாக்கத்திலிருக்கும் ஹிமாவை எப்படிக் கட்டுப்படுத்துவது.

“தப்புத்தான் ஹிமா. அவங்க அப்படி நினைக்கக் கூடாது”

“நானும் அதைத்தான் சொல்றேன்”

“ஆனால் ஒண்ணு துருவை உங்க ரெண்டு பேரோட பாக்குறவங்க உங்களை அவனோட அம்மா அப்பான்னுதான் சொல்லுவாங்க. அவங்க எல்லாரையும் திருத்த முடியுமா”

“முடியாது…”

“உன்னோட வருத்தமும் புரியுது. சோ நீ என்ன செய்ற… துருவை ஏதாவது ஹாஸ்டலில் விட்டுரு…”

“என்னடி சொல்ற…”

“பின்ன என்னடி… நீ தற்காலிக பொண்டாட்டி போஸ்டுக்கு ஒத்துக்கிட்டது உன் தலைவிதி. கூட மகனையும் கூட்டிட்டு போய்ட்ட. ஏன்னா உனக்கு வேற வழியில்லை. சத்யா வீட்டில் சத்யாவின் இறப்புக்கான இழபீட்டின் மேல காண்பிச்ச ஆர்வத்தை அவங்க குடும்பத்து வாரிசை வளர்த்து ஆளாக்குவதில் காட்டல. அவங்க சப்போர்ட் இருந்திருந்தா அங்கேயாவது விட்டுட்டு போயிருக்கலாம். இந்த மாதிரி தர்மசங்கடமான நிலைமையும் தவிர்த்திருக்கலாம்”

“இப்ப என்னதான்டி செய்றது”

“ஒண்ணு அந்த வயசான அம்மா சொன்னதைக் கொஞ்ச நாள் சகிச்சுட்டு அங்கேயே இருக்குறது. அப்பறம் மதராசில் வந்து வாழ்க்கையைத் தொடங்குறது. இல்லேன்னா இதுக்கு என்னால ஒத்துக்க முடியாதுன்னு காண்ட்ராக்டை ப்ரேக் பண்ணிட்டு கையோட சரத்தின் அம்மா மனசையும் ஒடைச்சுட்டு இங்க வந்துரு. பழைய ஹோமில் உங்க அம்மாவை சேர்த்து விட்டுடலாம், உனக்கு வேற வேலை தேடலாம், துருவுக்கு வேற ஸ்கூல் தேடலாம்”

“என்னடி இப்படி சொல்ற…”

“வேறே என்ன சொல்ல சொல்ற. இதுதான் நிதர்சனம். இதை யோசிச்சு முடிவெடு. சரத்தின் அம்மா கொஞ்ச நாள்தானே அங்க இருக்கப் போறாங்க. அந்த சமயத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

“என்னடி அட்ஜஸ்ட் பண்றது… என்னால சரத்தான் துருவின் அப்பான்னு எந்த காலத்திலும் பொய் சொல்ல முடியாது”

“பொய் சொல்லாதே… ஆனால் சத்யாதான் துருவின் அப்பா என்ற உண்மையையும் கொஞ்ச நாள் சொல்லாதே”

அலைப்பேசியை வைத்துவிட்டு நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் ஹிமா.

காலை துருவை எழுப்பிக் குளிக்க வைத்து, உணவூட்டினாள். அதன் பின் பழனியம்மாளிடம் மதிய உணவுக்குத் தானே காய்கறிகளை வாங்கி வருவதாய் சொல்லிவிட்டு மகனுடன் அந்தக் குடியிருப்பிலேயே இருந்த கடைக்கு சென்றாள்.

வீட்டினரை வேலைக்கும், பள்ளிக்கும் அனுப்பிவிட்டுக் குடும்பத்தலைவிகள் பலர் பரபரப்பின்றி கதை பேசியபடியே காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். புதிதாய் வந்தவளிடம் சிநேகமாய் சிரித்தபடி கேள்விகளால் துளைத்தனர்.

“புதுசா குடிவந்திருக்கிங்களா… எந்த வீடு” என்று ஆர்வமாய் கேள்வி கேட்டவர்களிடம் புன்னகையோடு பதில் சொன்னாள்.

“மெட்ராஸ்ல வேலை பாக்குறாரே அவர் வீடா… முன்னாடியே வந்திருக்கலாமே… ரொம்ப நாள் பூட்டியே கிடந்தது” என்று ஆதங்கப்பட்டார் ஒரு பெண்மணி.

“என் பெயர் சாந்தா. அவ பூங்குழலி, இவ மீனா” என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.

“குழந்தை பள்ளிக்கூடம் போகல” என்றவர்களிடம்

“அடுத்தவாரம் சேர்க்கணும்” என்றாள்.

“இந்த சமயம்அக்டோபர் முடியப் போகுது. இந்த சமயத்தில் இடம் கிடைக்கிறது கஷ்டம். வேணும்னா நம்ம காலனி பக்கத்தில இருக்குற ஸ்கூல்ல ட்ரை பண்ணுங்க”

“எங்க இருக்கு. ஸ்கூல் எப்படி”

“சாரதான்னு ஒருத்தங்க ரிடையர்ட் ஆனதும் இந்த ஸ்கூல் ஆரம்பிச்சாங்க. பிரச்சனை என்னன்னா ஏதோ புது மெத்தட்ல கத்துத் தரேன்னு சொல்லுவாங்க. அதனால ஹோம்வொர்க் கிடையாது, பாதி நேரம் பாட்டு விளையாட்டுன்னு போகும். உங்க பையன் சின்னவன்தானே. ஒண்ணு ரெண்டு வருஷம் படிக்க வைக்கலாம். ஆனால் மறக்காம வேற ஸ்கூல் மாத்திருங்க. “

“ஏன் அப்படி சொல்றிங்க?”

“பின்ன என்னங்க பாட்டு பாடியும், டூர் போயும் எப்படி பாடத்தைக் கத்துக்க முடியும்… இருக்குற காம்படிஷன்ல குழந்தைகள் ஜெய்கணும்னா மத்த எல்லாரையும் விடக் கடுமையா உழைக்கணும். அப்பத்தான் நாளைக்கு ஒரு டாக்டராவோ எஞ்சினியராவோ நம்ம உருவாக்கலாம். அதுக்கு அஞ்சு வயசிலேயே வளைச்சாத்தானே ஒழுங்கா படிப்பாங்க… என்ன நான் சொல்றது” என்றார் சாந்தா.

ணீரென்ற குரலில் சொன்னார் ப்ரின்சிபல் சாரதா.

“நீங்க எதிர்பார்க்குற மாதிரி ஒரு பள்ளியா இது நிச்சயம் இருக்காது. தினமும் மூணு மணி நேரம் ஹோம்வொர்க் வேணும், கழுதை பொதி சுமக்குற மாதிரி ஒரு மூட்டை சுமக்கனும் அப்பத்தான் நல்ல ஸ்கூல். இந்த மாதிரி எண்ணம் இருந்தால் மன்னிச்சுடுங்க உங்களுக்கு ஏற்ற ஸ்கூல் இது இல்லை.

எடுத்தவுடனே இதை ஏன் சொன்னேன்னா ஒரு குழந்தையை செதுக்குறதை விட அவங்க அம்மா அப்பாவோட அடிப்படைக் கருத்துக்களை ரிப்பேர் செய்வது மஹா பெரிய வேலை. அதுக்கு எனக்கு நேரமும் இல்லை. எனர்ஜியும் இல்லை”

“என் மகனைப் பற்றி சொல்றேன் அதுக்கப்பறம் இடம் தரதா வேண்டாமான்னு நீங்க முடிவு செய்ங்க மேடம்”

சுருக்கமாய் சொன்னாள்.

“உங்க மகன் வந்திருந்தால் வர சொல்லுங்களேன்”

துருவை அழைத்தாள்.

“டீச்சருக்கு விஷ் பண்ணு” என்றாள் ஹிமா.

அவனோ சாரதாவை முறைத்துப் பார்த்தபடி “நீங்க என்னை அடிப்பிங்களா” என்றான்

“அடிக்குற அளவுக்கு என்ன தப்பு செஞ்ச?” என்றார்

“வாட்டர் பௌன்டன்ல கல்லைத் தூக்கிப் போட்டேனே” என்றான்.

“கல்லை ஏன் தூக்கிப் போட்ட…”

“நைட் அம்மா ஸ்டோரில வந்த காக்கா தண்ணி மேல வர கல்லைத் தூக்கி போட்ட மாதிரி நானும் செஞ்சேன்”

“தண்ணி வந்துச்சா”

“இல்லையே”

“பெரிய பௌன்டன்ல இதெல்லாம் செய்யக் கூடாது. சின்ன எவர்சில்வர் டம்ளர்ல அம்மாட்ட தண்ணி வாங்கி குட்டிக் கல்லைத் தூக்கிப் போட்டா நீயும் பாக்கலாம்ல”

“ஆமாம்… அம்மா வீட்டுக்கு வாம்மா கல்லு தூக்கிப் போடலாம்”

“இப்ப இந்த ஆன்ட்டி உனக்கு கிளாசும் சின்ன பெபில்சும் தருவாங்க. செஞ்சு பார்த்துட்டு என்னாகுதுன்னு எனக்கும் அம்மாவுக்கும் சொல்லுவியாம்” என்று உதவியாளருடன் அனுப்பி வைத்தார்.

“இந்தக் குழந்தைக்கு டிஸ்லெக்சியா, ஆங்கர் ப்ராப்லம் இதெல்லாம் எந்த டாக்டர் சொன்னார்”

“டாக்டர் கிட்ட டெஸ்ட் பண்ணல ஆனா பழைய ஸ்கூல்ல சொன்னாங்க”

“இங்க பாரும்மா எல்லா விரலும் ஒரே மாதிரி இருக்கறதில்லை. அதே போலத்தான் குழந்தைகளும். சிலருக்கு சில பிரச்சனைகள் இருக்கலாம். அதை நீக்க முயற்சி செஞ்சா போதும். அதை விட்டுட்டு இவனுக்கு இந்த பிரச்சனை இருக்குன்னு தனிமைப் படுத்துறது அவங்களை மேலும் காயப்படுத்தி இந்த உலகத்தை பேஸ் பண்ண முடியாத கோழையாக்கிடும்.

அந்த காலத்தில் இதெல்லாம் இல்லைன்னா நினைக்கிறிங்க… ஆனால் எல்லாரும் சேர்ந்தே இருப்பாங்க. படிப்பு சரியா வரலையா என்ன வருதுன்னு பார்த்து அந்தத் துறையில் ஈடுபடுத்துவாங்க. இப்ப அதுக்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை.

உங்க மகன் கல்லைத் தூக்கிப் போட்டதுக்கு என்ன ஒரு அழகான காரணம் சொன்னான் பாருங்க. காரணத்தைக் கேட்காம அடிச்சிருந்தால் அவனோட ஆர்வம் ஆரம்பத்திலேயே கருகிருக்கும். “

அதன் பின் இருவரும் சிறிது நேரம் பேசினார்கள். துருவிற்கு விளையாட்டு காட்டியபடியே வேறு சில பரிட்சைகள் வைத்தார்.

“ஹிமா, துருவிற்கு சில எக்ஸ்ட்ரா க்ளாசஸ் தேவைப்படலாம் மற்றபடி ஹீ இஸ் பர்பெக்டிலி ஆல்ரைட். நீங்க திங்கள் கிழமையிலிருந்து ஸ்கூலுக்கு அனுப்ப ஆரம்பிச்சுடுங்க”

முதன் முறையாக துருவைப் பற்றி நம்பிக்கை தரும் வார்த்தைகள். சிரிப்போடு மகனை தூக்கிக் கொண்டாள். என்னம்மா என்று புருவத்தை உயர்த்தி அவன் கேட்டது சத்யாவைப் போலவே இருந்தது. கண்களில் நீர் வழிய சந்தோஷத்தோடு தன் மகனின் கன்னத்தை முத்தத்தால் நனைத்தாள்.

“சத்யா நம்ம துருவுக்கு ஒண்ணும் இல்லை. அவன் சரியாயிடுவான். அவனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுத் தந்துடுவேன். நான் அதுக்காக செய்ற இந்த பெரிய தப்பை மன்னிச்சுடுவேல்ல. வேற வழியே தெரியல சத்யா மன்னிச்சுடு”

2 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 8”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 11உள்ளம் குழையுதடி கிளியே – 11

அத்தியாயம் – 11 ஹிமாவுக்கு பூமி தனது சுழற்சியின் வேகத்தை மெதுவாக்கி விட்டதோ என்ற ஐயம் தோன்றியது. ஏனென்றால் நாளொன்று போவதும் பொழுதொன்று கழிவதும் மிக மெதுவாகவே சென்றது. சரத்தின் தாயை தினந்தோறும் எதிர்கொள்ளும் போராட்டம் அவளது மற்ற கவலைகளைப் பின்னுக்குத்

உள்ளம் குழையுதடி கிளியே – 19உள்ளம் குழையுதடி கிளியே – 19

அத்தியாயம் – 19 காலையில் எழுந்தவுடன் சரத் முதலில் கண்டது குளிப்பதற்கு அடம் பிடிக்கும் துருவையும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடிய ஹிமாவையும்தான். அவர்களது குதூகலமும் சுறுசுறுப்பும் அவனிடமும் தொற்றிக் கொண்டது. “துருவ் இங்க ஓடி வா…” என்று கை நீட்டினான்.

உள்ளம் குழையுதடி கிளியே – 29உள்ளம் குழையுதடி கிளியே – 29

அத்யாயம் – 29 அந்த அதிகாலை வேளையில் சாரதாவின் இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த தெய்வானையிடம் என்ன பேசுவது என்று தெரியாமலேயே திகைத்து அமர்ந்திருந்தாள் ஹிமா. அவளருகிலிருந்த இருக்கையில் தெய்வானை. எதிர் இருக்கையில் அமைதியாக அவளையே பார்த்தவண்ணம் சரத். ஊருக்கு சென்ற