Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49

49 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

“உன் நேம் என்ன?”

“என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன?”

“என் நேம் ஆதர்ஷ் யாதவ்”

“ஆதர்ஸ் ஆதவ்?”

“ஆதவ் இல்லை.. யாதவ் கரெக்டா சொல்லு..”

“ஆ…தவ்..” என அவளுக்கு சரியாக உச்சரிப்பு வராமல் கூற

“ம்ச்ச்…நீ ஏன் இப்டி என் நேம்ம தப்பு தப்பா கூப்படற?” என கேட்டதும்

முகம் வாட அம்பிகா “சின்ன பாப்பா தானேடா கண்ணா..அவளுக்கு சரியா சொல்ல தெரியாட்டி என்ன விடு..”

ஆதர்ஷ் “எனக்கு யாரு இந்த பேரு வெச்சது.. யாதவ் வேண்டாம் மாத்துங்க…” என அவன் முகத்தை சுருக்கி கொள்ள அம்பிகா சிரித்துவிட்டு “அப்டி எல்லாம் மாத்தமுடியாது..”

“ஏன் ஆண்ட்டி முடியாது. கூப்பிட்றதுக்கு தானே பேர் வெப்பாங்க. பாப்பாவுக்கு தான் சரியா கூப்பிட வரலையே.. அவளுக்கு கூப்பிட்ற மாதிரி பேர் வைங்க.”

அம்பிகா மற்றும் அங்கே வேலை செய்தவர்கள் இதை கேட்டு சிரித்துவிட்டு அவனிடம் வந்து “இங்க பாரு ஆதர்ஷ் கண்ணா, யாதவ் அப்படிங்கிறது கிருஷ்ணானோட பேரு. உங்க அம்மாவுக்கு கிருஷ்ணர் ரொம்ப பிடிக்கும். அதனால உனக்கு அந்த நேம் வெச்சாங்க.. அக்ஸாவுக்கு இப்போதானே நேம் கூப்பிட வரல. அவளும் கொஞ்சம் வளந்ததும்  உன் நேம கரெக்ட்டா கூப்பிடுவா…” என அவனுக்கு விளக்கம் கூற

அக்ஸா “அத்தை கிருஷ்ணர்னா ரொம்ப சேட்டை பண்ணுவாரே குட்டி பையன் மாதிரி இருப்பாரே அந்த கார்டு தானே?” என அம்பிகா “ஆமாடா குட்டி..”

ஆதர்ஷ் “நான் ஒன்னும் குட்டி பையன் இல்லை. பெரிய பையன் தான். 2ண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். அப்புறம் நான் ரொம்ப சேட்டை எல்லாம் இல்லை. குட் பாய் தான்.” என கூற

தலை குனிந்த அக்ஸா மெதுவாக “சாரி..”

ஆதர்ஷ் “பரவால்ல…சரி என்ன நேம் சொல்லி என்னை அப்போ கூப்பிடுவ சொல்லு.?”

குட்டி அக்ஸா யோசித்துவிட்டு “ஆ..ஐயோ உங்க பஸ்ட் நேம் என்ன? ஆதர்ஷ் தானே.. எனக்கு ஆ வந்தாலே ஆதவ் தான் வருது.. அதனால தர்ஷு கூப்படறேன்.. ஓகேவா?”

ஆதர்ஷ்க்கும் அந்த பெயர் பிடித்துவிட “ம்ம்.. அப்டியே கூப்பிடு.. நானும் உன்னை அச்சுன்னு கூப்பிடறேன்.” என இருவரும் பேரில் வைத்த சண்டையை முடித்துக்கொள்ள அம்பிகா இருவரையும் கொஞ்சிவிட்டு “சமத்து..” என்று கூறிவிட்டு நகர… பின் இருவரும் விளையாடி கொண்டிருக்க பிடித்ததை பற்றி கேட்க அவளுக்கு படம் வரைய பிடிக்கும் என சொன்னதும்,  அப்போ வரையலாமா? என கேட்டவன் அம்பிகாவிடம் ஸ்கெட்ச், பேப்பர் கேட்க அவரோ தான் வேலையில் இருப்பதால் “மேல ருத்திரா அண்ணா இருப்பான், போயி கேளு..” என்றார்.

ஆதர்ஷ் முன்னே செல்ல அக்ஸா தயங்கி தயங்கி பின்னால் சென்றாள்.

ஆதர்ஷ் “ருத்திரா அண்ணா…”

ஏற்கனவே இவன் மேல கோபமாக இருந்தவன் இவன் வந்ததில் இருந்து அந்த அக்ஸாகூட இவன் கூடவே சுத்துறா என நினைத்தவன் அவனிடம் கோபமாக “டேய் என்ன அண்ணான்னு கூப்பிடாதேன்னு சொல்லிருக்கேன்ல?” என கத்த

ஆதர்ஷ் சரிக்கு சரியாக நின்று “ஆண்ட்டி தான் ருத்திரா அண்ணாகிட்ட கேளு சொன்னாங்க.. நானா ஒண்ணும் கூப்பிடல.” என வெடுக்கென்று அவனும் முகத்தை சுருக்கிகொண்டு சொல்ல

“இப்போ உனக்கு என்னடா வேணும்?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம். அச்சு பாப்பாவுக்கு தான்  ட்ராயிங் பண்ண ஸ்கெட்ச் பேப்பர்ஸ் வேணும்.”

“ஏன் அவ கேக்கமாட்டாளா?”

“நீங்க கத்திட்டே இருக்கீங்க. அவ அதனால உங்ககிட்ட வர பயப்படுறா…” என

ருத்திரா கதவருகில் எட்டி பார்த்துக்கொண்டிருந்த அக்ஸாவை பார்த்தவன் அதன் மீறி எதுவும் கூறாமல் ஆதர்ஷிடம் “அந்த ஸெல்ப்ல இருக்கு. போயி எடுத்துக்கோ..” என்றுவிட்டு நகர்ந்து சென்றான்.

ஆதர்ஷ் அக்ஸா உள்ளே சென்று பார்க்க அது இரண்டாவது செல்பில் இருக்க இவனுக்கு உயரம் பத்தாமல் போக அக்ஸா எடுக்க முடியாதே என எண்ணி பாவமாக பார்க்க ஆதர்ஷ் “இரு இரு.. இந்த ஸ்டூல் போட்டு ஏறி எடுக்கலாம்.” என அருகில் இருந்த ஸ்டூலை இழுத்துப்போட்டு ஏறி கை அலமாரியை எட்டும் அளவிற்கு தான் வந்ததே தவிர அதை அவனால் எடுக்க முடியவில்லை. அதை எக்கி மெதுவாக தள்ளி தள்ளி ஓரத்திற்கு கொண்டுவந்தவன் கொஞ்சம் பாலன்ஸ் தவற சில அந்த ஸ்கெட்ச் பாக்ஸ் கீழே விழுந்து சில பொருட்கள் தட்டிவிட ஆதர்ஷ் விழபோனவன் தவறி விழுந்த தலையணை மீதி விழுக அடிபடாமல் தப்பிவிட்டான். அக்ஸா பயந்து “தர்ஷு என்னாச்சு… அடிபட்டிச்சா .. வலிக்கிதா?” என பயந்து போயி வினவ சத்தம் கேட்டு வந்த ருத்திரா அனைத்தும் கீழே விழுந்திருப்பதை கண்டு “எல்லாத்தையும் தள்ளிவிட்டுட்டியா? உனக்கு அறிவே இல்லையா ஆதர்ஷ்? வளந்திருக்கேல பாத்து எடுக்க தெரியாது?” என திட்ட

அக்ஸா “நீங்களும் தானே வளந்திருக்கிங்க.. நாங்க இரண்டுபேரும் குட்டி பசங்க. ஹெயிட் பத்தாதுன்னு தெரியாதா? எடுத்துகுடுத்திட்டு போகணும்னு உங்களுக்கு அறிவில்லையா? தர்ஷு கீழ விழுந்து அடிபட்டிருக்கான்னு கேக்கல. இப்டி கத்துறிங்க?” என கோபமாக அவன் முன் நின்று கத்த முதலில் ருத்திரா ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்தான்.

ஆதர்ஷ் “அச்சு, விடு… எனக்கு ஒன்னும் ஆகல. இந்த ஸ்கெட்ச்..” என நீட்ட

அக்ஸா ருத்திராவை முறைத்துக்கொண்டே “எனக்கு இவங்க ஸ்கெட்ச் வேண்டாம் தர்ஷு… ”

“நீதானே கேட்ட?”

“ஆமா ஆனா இவங்க உன்னை திட்டுனாங்கல நமக்கு இந்த ஸ்கெட்ச் வேண்டாம்.. நான் இதுல வரையவே மாட்டேன். வா தர்ஷு நம்ம போலாம்.” என அவனையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட முதலில் அவள் கோபம், தைரியத்தை ரசித்தவன் பின் அவை அனைத்தும் ஆதர்ஷ்க்காக என்றதும் அவள் மீதும் கோபம் கொண்டான். மனதினுள் “இத்துனூண்டு இருந்திட்டு எவ்ளோ ரோசம் அவளுக்கு.. நீ ஊருக்கு  போறதுக்குள்ள அவனோட சேத்தி உனக்கு இருக்கு..” என்று முடிவுடன் சென்றுவிட்டான்.

பின் மாலையில் அம்பிகா ஆதர்ஷ், அக்ஸா, ருத்திரா மூவரையும் அழைத்து கொண்டு ஷாப்பிங் செல்ல அக்ஸா ஆதர்ஷுடனே சுற்றி திரிய ருத்திராவின் புறம் திரும்பவேயில்லை.. அவன் இருப்பதாகவே கண்டுகொள்ளவில்லை.. அவளை திட்டியபோது கூட அப்போதைக்கு பேசாமல் விட்டவள் சிறிது நேரத்தில் வந்து பேசினாள். ஆனால் இந்த ஆதர்ஷ் பயலை திட்டுனதுக்கு அப்புறம் எப்படி மூஞ்சை திருப்பிகிட்டு போறா என்றெண்ணியவன் அவர்களை முறைத்துக்கொண்டே இருந்தான்.

அக்ஸாவிற்கு டிரஸ் எடுக்க சென்ற போது அவள் தர்ஷு இது ஓகேவா அது ஓகேவா? என அவனிடமே கேட்க அவனும் அனைத்தும் வேண்டாம் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்க அம்பிகாவிற்கு டையர்ட் ஆகிவிட “டேய் ஆதர்ஷ் குட்டி, ஏதாவது ஒண்ணு சூஸ் பண்ணுடா. அவகிட்ட கேட்டா நீ ஓகே சொல்ற டிரஸ் தான் போடுவேன்னு சொல்றா.. நீ எத காட்டினாலும் வேண்டாம்னு சொல்ற? உங்கள என்ன தான் பண்றது?” என சிரிப்புடன் சலித்துக்கொள்ள ஆதர்ஷ் “இருங்க ஆண்ட்டி, அச்சு பாப்பாக்கு இதைவிட சூப்பர டிரஸ் எடுக்கலாம். நான் பாத்துட்டுவரேன் என உள்ளே சென்றுவிட  சேல்ஸ் கேர்ள் “மேடம் நான் பாத்துக்கறேன்..நீங்க இருங்க” என ஆதர்ஸுடன் செல்ல அம்பிகாவும் தெரிந்தவர் கடை என்பதால் பயமின்றி விட்டுவிட அக்ஸா பக்கத்தில் இருந்த கடைக்கு அம்பிகாவை அழைத்து சென்று ஒரு பேபி டால் பொம்மையை வாங்கினாள். அதோடு ஆங்கில எழுத்துக்கள் தனி தனியே வைத்திருந்த கடை அதில் பெயருக்கு ஏற்றார் போல எழுத்துக்கள் சேர்த்தி, செயின், பேண்ட், பிரெஸ்ட்லெட் மாடலில் செய்யும் கடையை கண்டவள் என்னவென்று கேட்டு விளக்கியதும் “ஒஹ்ஹ… அப்போ AA சேர்த்தி வெச்ச மாதிரி கையில் அணியும் ஒரு பேண்ட் வேண்டும் என்றாள்.” அம்பிகா யாருக்கு என வினவ “தர்ஷுக்கு.. ஒன்னு ஆ…தர்ஸ் , இன்னொன்னு அட்சரா..  நல்லாயிருக்கா அத்தை?” என வினவ அதே நேரம் ஆதர்ஷ் வெள்ளை நிற பிராக்கில் ஆங்காங்கே பிங்க் நிறத்தில் பூ போட்ட ஒரு டிரஸ்சுடன் வந்தான்… அதை பார்த்ததும் அம்பிகாவிற்குமே பிடித்துவிட்டது. அவனுக்கு வாங்கிய பொம்மை, இவர்களின் பெயர் எழுத்து பதித்த பேண்ட் இரண்டையும் காட்ட இவனும் மகிழ்வுடன் சூப்பரா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என ஏற்றுக்கொண்டான்.. அதோடு உனக்கும் நான் பொம்மை வாங்கிட்டு வரேன் என்றவன் அங்கே பார்த்து கிட்டார் வைத்திருந்த ஒரு பையன் பொம்மையை வேண்டும் என்றான். அந்த கள்ளம்கபடமில்லா சின்ன குழந்தைகளின் அன்பில் அம்பிகா பூரித்து போனார்.

பின் பில் போட்டுவிட்டு கிளம்ப பையை எடுத்துக்கொண்டு வந்தவன் அக்ஸா ஆதர்ஷ்க்கு எடுத்த பேண்டை பையில் இருந்து எடுத்துவிட்டான். வீட்டிற்கு வந்ததும் அக்ஸா எடுத்த பொம்மையை அவனிடம் நீட்டினாள். ஆதர்ஷ் தான் எடுத்த பொம்மையை “இந்தா, இந்த பாய் பொம்மையை கேப் போட்டு கிட்டார் வெச்சுகிட்டு சூப்பரா இருக்கில்ல… இத நீ வெச்சுக்கோ..” என அதை வாங்கியவள் “தர்ஷு இது என்ன பொம்மை, ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், சக்திமான், பேபி டால், பார்பி  இந்தமாதிரி இது என்ன பொம்மை என்ன பேரு?..” என வினவ

அவனுக்கு சரியாக அது என்ன பொம்மை என சொல்ல தெரியாததால் “அது நான்தானே உனக்கு குடுத்தேன். சோ அந்த பொம்மை நான்தான். நீ அதை என் பேர் சொல்லியே கூப்பிடு.” என்றான். அவளும் அப்டியே ஏற்றுகொண்டாள்.. அதோடு இவர்கள் முதல் எழுத்து பதித்த பேண்ட் காணாமல் போக தேடி அனைவரும் ஒரு வழியானதுதான் மிச்சம்… அக்ஸா முகம் வாட அமர்ந்திருக்க அவளிடம் வந்தவன் “அச்சு பீல் பண்ணாத.. வேற வாங்கிக்கலாம்.. நீ எப்போ வாங்கிக்குடுத்தாலும் நான் போட்டுக்கறேன்..இப்போ வா விளையாடலாம் ” என சமாதானப்படுத்தி அழைத்து சென்றான். பின் இருவரும் அம்பிகாவுடன் விளையாடிக்கொண்டே தூங்கிவிட்டனர். மறுநாள் என்ன ஸ்வீட் செய்யலாம் சொல்லுங்க  என வினவ இவன் முதலில் “குலாப் ஜாமூன் என்றவன் இருங்க நேராக அக்ஸாவிடம் சென்றவன் “அச்சு உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்?” என

அவள் “நிறைய பிடிக்கும்.. ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சது பால் கொழுக்கட்டை” என கூற

அவனும் அதையே செய்ய சொல்லி கேட்டான். இருவரும் கோவிலுக்கு கிளம்பி தயாராக ஆதர்ஷ் எடுத்த துணியை அணிந்து வந்தவள் “தர்ஷு இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு..” என

அவனும் “சூப்பரா இருக்கு… லிட்டில் ஏஞ்சல் மாதிரி இருக்க..” என்றான்.

அடுத்து அவன் தான் தான் அச்சு பாப்பாவுக்கு நான் தான் ஊட்டிவிடுவேன் என்று அடம்பிடிக்க பின் இருவரையும் டேபிளின் மேல் அமர வைத்துவிட்டு ஒரு கிண்ணியில் பால் கொழுக்கட்டை வைத்து கொடுக்க அதில் ஒன்றை எடுத்து அச்சுவிற்கு அவன் ஊட்டினான்.” அவள் ஆ… என கத்த ஆதர்ஷ் “என்னாச்சு என்னாச்சு?” என வினவ அவள் சுடுது என்றதும் அவன் துப்பிடு என கூறியதும் துப்பிவிட்டாள். அடுத்து தண்ணீர் குடித்தபின் அவன் அடுத்து ஊதி ஊதி ஊட்டிவிட்டான்.. அனைத்தும் உண்டு முடித்ததும் அவள் திருதிருவென விழிக்க அவன் என்னாச்சு அச்சு ஏன் இப்டி முழிக்கற?” என வினவ

அவளோ “தர்ஷு நீ சாப்பிடவேயில்லை… நல்லா இருந்ததா.. பேசிட்டே நானே சாப்பிட்டேனே..” என  வருத்தம் கொள்ள ஆதர்ஷ் “விடு அச்சு… உள்ள ஆண்ட்டி வெச்சிருப்பாங்க.. நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்..” என்றான். அதே கிண்ணியில் கொஞ்சம் இருக்க ஆதர்ஷ் கையில் அதை கண்டவன் ருத்திரா டேபிளை தெரியாமல் இடிப்பது போல அசைத்துவிட அவன் கையில் வைத்திருந்த கிண்ணம் அதில் கொஞ்சம் மிச்சமிருந்த ஜீரா அனைத்தும் அக்ஸாவின் துணியில் கொட்டிவிட வேறு வழியின்றி அவள் வேறு டிரஸ் அணிந்துகொண்டு தான் கோவிலுக்கு சென்றாள்.

கோவிலுக்கு செல்லும் முன்  பூ வைக்க மல்லிகை, முல்லைப்பூ, ரோஜா என தோட்டத்தில் இருக்க எது வேண்டும் என கேட்க அக்ஸா எனக்கு மல்லிகை பூ வேணும், ஆ.. இல்ல ரோஸ் வேணும்..  என மாற்றி மாற்றி இரண்டையும் பார்க்க ஆதர்ஷ் “அச்சு பாப்பாவுக்கு இரண்டுமே வெச்சு விட்ருங்க ஆண்ட்டி. அவளுக்கு தான் இரண்டுமே பிடிச்சிருக்கே..?”

அம்பிகா சிரித்துவிட்டு “டேய் அதுக்கு இல்லடா குட்டி. அவளுக்கு கொஞ்சம் தானே முடி இருக்கு. பாய் கட்ல இருக்கு.. எவ்ளோ பூ வெக்க முடியும்.. ரோஸ் வேணும்னா வெக்கலாம்.. இல்ல மல்லிகை பூ கொஞ்சம் வெக்கலாம். இரண்டுமே அதுவும் அவ கேக்குறமாதிரி நீளமா எல்லாம் வெச்சா உன் அச்சு பாப்பாவுக்கு தான் கொஞ்ச நேரத்துல தலை வலிக்கும். அண்ட் பூவும் நிக்காது.” என விளக்கம் குடுத்துவிட்டு ரோஸ் மட்டும் இறுதியில் வைத்துவிட்டார்.

இருந்தும் அவள் முகம் வாடி விட அவன் அவளிடம் பேசிக்கொண்டே அவன் குடுத்த பொம்மையை வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டே வர சிறிது நேரத்தில் சரியாகிவிட்டாள். கோவிலுக்கு சென்றதும் இருவரும் அவர்கள் வயது சிறுவர்கள் சிலருடன் விளையாட துவங்கினர். அக்ஸாவின் அப்பா அம்மா என குடும்பத்தினர் வந்ததும் சிறிது நேரத்தில் சாமி தரிசனம் முடித்துவிட்டு உடனே கிளம்ப வேண்டும் என கூற வேறு வழியின்றி விரைவில் அக்ஸாவை கிளப்பி அனுப்பிவைத்தனர். அவளோடது 3 செட் டிரஸ் தானே மா.. இங்கேயே இருக்கட்டும். நேரம் இல்லை. இப்போவே போகணும். நாளைக்கு ஒரு ஆபீஸ் மீட்டிங் இருக்கு.. வர சொல்லிருக்காங்க..அதுக்கு தேவையானது எல்லாம் நான் தான் பாத்து ரெடி பண்ணனும். மேனேஜர் என்கிட்ட தான்மா குடுத்திருக்காங்க என அம்பிகையிடம் பேசி வீட்டிற்கு வர முடியாததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு சமாதான படுத்திவிட்டு அக்ஸாவுடன் கிளம்பினர். அவர்கள் வந்து 2 மணி நேரம் தான் இருந்திருப்பார்கள். அக்ஸா கையில் இருக்கும் அந்த பொம்மையை விடவேயில்லை..விளையாடினாலும் தன் கண் பார்வையில் படும் தூரத்தில் மட்டுமே வைத்துக்கொண்டாள். இவர்களிடமும் வந்து “அம்மா, அப்பா.. இங்க பாத்திங்களா தர்ஷு வாங்கி குடுத்த பொம்மை..நல்லா இருக்கா.. ” என கேட்டவள் “சரி, தர்ஷு அங்க விளையாடிட்டு இருக்கான். நான் போயி கூட்டிட்டு வரேன்.” என ஓடியவள் அவன் அங்கே இல்லாமல் அந்த பக்கம் ஏதோ வேடிக்கை பார்க்க சென்றுவிட இவள் தேடிக்கொண்டே இருக்க அவளின் பெற்றோர் “அக்ஸா குட்டி டைம் ஆச்சுடா மா.. நாம கிளம்பலாம். உன் பிரண்ட்ஸ நாம அடுத்த தடவை வரும்போது பாத்துக்கலாம்.” என கூறி அவளை கிளப்ப ஒப்புக்கொள்ள வைத்தனர். அவள் அவர்களிடம் பொம்மையை குடுத்து இத வெச்சிருங்க.. நான் ஒரே ஒரு தடவை தர்ஷு வந்திட்டான்னு பாத்துட்டு வரேன் ப்ளீஸ் ..” என ஓடிவிட இவர்களும் காரினுள் அவள் கொடுத்த பொம்மையை வைத்துவிட்டு உள்ளே வந்து அம்பிகா மற்றும் கோவில் குருக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

ருத்திரா அங்கே வந்ததில் இருந்து அவன் வைத்திருந்த சின்ன கேமராவில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தான். ஏதேச்சியாக அதில் ஒரு போட்டோவில் அக்ஸா, ஆதர்ஷ்  ஒன்றாக இருப்பது போல அதுவும் குழந்தைகளின் மனதார சிரிப்புடன் வந்துவிட இவனுக்கு தன்னிடம் முகம் திருப்பிக்கொண்டு அவனிடம் சிரித்து சிரித்து பேசுகிறாள் என்றெண்ணியவன் காரினுள் இருந்த பொம்மையை வெளியே எடுத்து அருகில் இருந்த மரத்தின் பின்னால் போட்டுவிட்டான்.

நேரமாகி விட்டது என அக்ஸாவை அழைத்துக்கொண்டு அனைவரும் வண்டியில் ஏறிவிட அவள் ஆதர்சை கண்ணில் தென்படுகிறானா என எட்டி பார்த்துக்கொண்டே இருந்ததில் பொம்மை இல்லை என்பதை கவனிக்கவில்லை. கோவிலின் தெருமுனையை தாண்டியதும் அவள் வாடிய முகத்துடன் உள்ளே அமர்ந்து பின் பொம்மையை கேட்க அவர்களும் பார்த்துவிட்டு வெட்ச்சோம் இங்க தான்.. ஆனா காணோமே என வண்டியில் தேடி பார்க்க அதுவும் கிடைக்காமல் போக இறுதியில் அக்ஸாவின் அழுகையில் மட்டுமே அது நிறைவுற்றது.. அம்மா அப்பா இரு மாமா என அனைவரும் எத்தனை சமாதானம் கூறியும், வேற பொம்மை வாங்கி தரோம்னு சொல்லியும்  அவள் அழுகை நின்றபாடில்லை. ஏற்கனவே தர்ஷுவை காணவில்லை, அவன் தேர்ந்தெடுத்த ட்ரெஸ்ஸை எடுக்கவில்லை என்றவளுக்கு அவன் அளித்த பொம்மையும் காணவில்லை என்றதும் அழுகை நிற்காமல் வர அது காய்ச்சலில் வந்து முடிவடைந்தது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22

உனக்கென நான் 22 மடியின் மீது ஏறிகொண்டு பிரியாவோ “அம்ம” என்று இவளை அழைக்க உணர்ச்சிமிகுந்தவளாய் பிரியாவை தூக்கி முத்தமிட்டாள் பின் அனைத்துகொண்டாள். பின் மீண்டும் டைரியை (அல்ல) நினைவுகளை புரட்டினாள். சந்துருவின் அருகில் வந்த அரிசியோ “டேய் சந்துரு ஓடுடா”