Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 42

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 42

42 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அன்று மாலை அக்சரா ஆதர்ஷ் இருவருக்கும் கோவிலில் வைத்து எளிமையாக உறுதி செய்துகொண்டு மோதிரம் மாற்றி நிச்சயம் நடந்தது. ஒரு மாதத்தில் கல்யாணம் என முடிவானது. பின் மகிழ்வுடன் எல்லாரும் கல்யாண வேலை இவர்களை கிண்டல் செய்வது என வீடே கலகலப்பாக இருக்க ஆதர்ஷ் மட்டும் அவ்வப்போது ஏதோ சிந்தனையில் இருந்தான். அக்சரா கவனித்துவிட்டு விசாரிக்க ருத்திராவிடம் அம்பிகா ஆண்ட்டி பேசாதது, அவனை இறுதியாக பார்த்தது அனைத்தும் கூறிவிட்டு அத பத்தி திங்க் பண்ணிட்டு இருந்தேன் என கூற அவனை பாத்துகொண்டே இருந்தவள் “ருத்திராவை போயி பாக்கணுமா? ” என நேராக கேட்க அவனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.

அக்சரா “போறதுன்னு ஒண்ணும் ப்ரோப்லேம் இல்லை. பாத்துட்டு வாங்க.” என

ஆதர்ஷ் “நீயும் வருவியா?”

“வரணும்னு நீங்க சொன்னா வரேன்.” என்றாள்.

ஆதர்ஷ் மெலிதான புன்னகையுடன் “வா..” என்றான். அவளும் ஒப்புக்கொண்டாள். வேறேதும் கேட்கவில்லை. இருவரும் மறுநாள் ருத்திராவை பார்க்க சென்றனர். ரகுவிற்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் ஆதர்ஷ் அவன்கிட்ட பாத்து பேசணும்னு மிகவும் உறுதியாக இருக்க அக்சராவிடம் “நீயாவது, சொல்லமாட்டியா மா?”

அக்ஸா “இல்லை, அண்ணா பாத்து பேசுறதுல என்ன ஆகப்போகுது. அவரு ஆசைப்படுறாரு, பண்ணட்டும்..”

ரகு “சரி, நீ போடா, ஜெயிலுக்கு எல்லாம் அக்ஸாவா ஏன் கூட்டிட்டு போற?”

ஆதர்ஷ் ” இல்லை, அவளும் வரட்டும்.” என கூறிவிட அக்ஸாவும் எதுவும் தடுக்காமல் இருக்க ரகு “என்னவோ பண்ணுங்க..” அவர்கள் கேட்டது போல தனியாக பேச ஏற்பாடு செய்தான்.

ரகு ருத்திரா வந்ததும் “உன்ன பாக்க ஆள் வந்திருக்காங்க..”

ருத்திரா மெலிதாக புன்னகைத்தான், ரகு “நார்மலா விசிட்டர்ஸ் பாக்கிற இடத்துல இல்லை, அங்க போ என உள்ளே கிரௌண்ட் மாதிரி இருந்த மர நிழலை காட்டி அங்க வெயிட் பண்ணு, வருவாங்க.. எல்லாரும் இங்க பக்கத்துல இருந்து பாத்துட்டு தான் இருப்போம் ஏதாவது பிரச்சனை பண்ண பாத்த அவ்ளோதான்.” என வேண்டா வெறுப்பாக சொல்ல

அதை உணர்ந்துகொண்டவன் “ஏன் சார் அவளோ பயமா இருந்தா உங்க பிரண்ட்கிட்ட வேண்டாம்னு சொல்லலாமே.. ஏளனமாக சிரித்துவிட்டு நீங்க என்னதான் வெறுப்பா பேசுனாலும், யோசிச்சாலும் அவனை தடுத்தாலும் ஆதர்ஷ் கேட்கமாட்டான், சரிதான்…அவன்கிட்ட நானும் பேசணும், வெயிட் பண்றேன். வரச்சொல்லுங்க.” என்றான்.

ரகு “நான் பாக்க ஆள் வந்திருக்காங்கனு தானே சொன்னேன். ஆதர்ஷ்னு எப்படி கரெக்டா சொல்ற?” என வினவ

ருத்திரா புன்னகையுடன் சென்றுவிட்டான்.

ரகு ஆதர்ஷ் அக்சராவை வரவைத்தான். ஆதர்ஷ் மட்டும் ருத்திராவிடம் பேசச்சென்றான். அக்சரா ரகு மற்றும் பிற போலீஸ் இருந்த அறையில் இருந்துகொண்டாள்.

ருத்திராவின் முன்பு சென்று ஆதர்சை மேலிருந்து கீழ் வரை முழுதாக பார்த்தவன் உட்கார சொல்லி கைகாட்டினான். ஐந்து நிமிடம் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அதை உடைத்த ஆதர்ஷ்

“ரகு சொன்னான், யாரு வந்திருக்காங்கன்னு சொல்லாமையே நான்தான்னு கண்டுபுடிச்சிட்டையாம், அன்னைக்கு நீ யாரு என்னனு தெரிஞ்சதும் நான் உன்னை ஒண்ணுமே பண்ணாம விட்டுட்டு ஜஸ்ட் அர்ரெஸ்ட் மட்டும் பண்ணுங்கனு சொன்னதுக்கு நீ சொன்னியாம் ஆதர்ஷ் தான் இத சொல்லிருப்பான், அவன் பிரச்சனையோட ஆணிவேர் எதுன்னு யோசிச்சிருப்பான் அதான் இந்த முடிவு எடுத்திருப்பான்னு உங்க அப்பாவும் சொன்னாரு என்னை விட என்னை பத்தி நீ நல்லா புரிஞ்சிருக்கன்னு அந்த அளவுக்கு யோசிச்சவன் ஏன் இவளோ கஷ்டப்படுத்த பாத்த?” என அமைதியாக வினவ

ருத்திரா “உண்மை தான் ஆதர்ஷ், உன்ன அவ்ளோ அனலைஸ் பண்ணேன். ஆனா அதுக்கு எனக்கு அதிகம் டைம் எடுக்கல. ஏன்னா நீ என்னோட டிட்டோ… ஒருவேளை இந்த கோபம் வெறுப்பு இதெல்லாம் மட்டும் இல்லாம இருந்திருந்தா நானும் நீயும் ஒரே மாதிரி இருந்திருப்போம். கரெக்டா?” என எதிர்வினா கேட்க

ஆதர்ஷ் மெலிதான புன்னகையுடன் “ம்ம்.. நிஜம் தான். நான் நிறையா விஷயம் உன்ன பாத்துதான் பழகுனேன். அது ஞாபகம் இருக்கு. அப்பா, பெரியப்பா, ஆனந்த் அண்ணா எல்லாரையும் பிடிச்சாலும் உன்கிட்ட இருக்கற அந்த தனி கெத்து எப்போவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும், நீ திங்க் பண்ற விதம், யாருன்னாலும் தப்பு பண்ணா இப்படித்தான்னு எடுத்த முடிவுல மாறாம எப்பவுமே கிவ்வப் பண்ணாம அந்த விஷயத்தை முடிக்கணும்னு நினைக்கற அந்த பழக்கம் இது எல்லாமே உன்ன பாத்து நான் கத்துகிட்டது, அதுதான் பல நேரத்துல எனக்கு சரினு படும். அப்டியே பழகிட்டேன். எனக்கு இப்போவும் அதுதான் ஆச்சரியமா இருக்கு, என்னை இன்ஸ்பியர் பண்ண அந்த ருத்திராகிட்ட இருக்கற எல்லாமே இன்னும் உன்கிட்ட அப்டியே இருக்கு. கொஞ்சம் கூட குறையல. ஆனா இந்த அளவுக்கு வெறுப்பு, கோபம், பலி அது ஏன் எங்கிருந்து எப்போ உனக்கு வந்ததுன்னு எனக்கு புரிஞ்சுக்கமுடில. ஆனா ஏதோ ஒரு வகைல அதுக்கு நாங்க எல்லாரும் காரணம்னு மட்டும் தோணுது. அதான் உன்கிட்ட கேட்கவந்தேன்.”

ருத்திரா “ம்ம்… தட்ஸ் மை பாய். சரியாதான் யோசிச்சிருக்க. நீ சொல்றது உண்மைதான். நீங்க எல்லாருமே தப்பு பண்ணிட்டீங்க. ஆனந்த் கொஞ்சம் கூச்ச சுபாவம், பெருசா எதுலையும் இன்வோல்வ் ஆகமாட்டான். ஆனா நான் சின்னவயசுல இருந்தே ரொம்ப சுட்டி, துறுதுறுனு ஏதாவது பண்ணிட்டே இருப்பேன். எல்லாருக்கும் பிடிக்கும். நான் இருக்கற இடத்துல நான் தான் ராஜா. அப்டி இருப்பேன். என் அம்மா அப்பாவுக்கு, ஏன் உங்க அம்மா அப்பாவுக்கு கூட நான் செல்லம். படிக்கற இடத்துல, விளையாட்ற இடத்துல எங்க போனாலும் ருத்திரா தான். எனக்கு அம்மா சொல்றது தான் நல்ல பையனா தப்பு பண்ணா பிடிக்காம யாரு என்னனு பாக்காம தட்டிகேட்ருவேன். அப்டித்தான் இருந்தேன். எல்லாமே நீ பொறக்கற வரைக்கும் தான். நீ வந்த அப்புறம் எங்க பாத்தாலும் ஆதர்ஷ் ஆதர்ஷ் ஆதர்ஷ் தான். நானும் அப்போ சின்ன பையன் தானே என்ன உனக்கு ஒரு வயசு, எனக்கு ஆறு வயசு ஆனா என்ன பெருசா விட்டுகுடுக்க எல்லாம் தெரியும் சொல்லு. என்னடா இந்த குட்டி பையன் வந்ததும் எல்லாரும் இவனை தான் ரொம்ப கவனிக்கறாங்கன்னு தோணும். சில சமயம் கஷ்டமா இருக்கும், சில நேரம் கோபமா இருக்கும். எங்க வீட்டலேன்னாலும் அம்மா எப்போ பாரு ஆதர்ஷ் என்ன பண்றான் குட்டி என்ன பண்றானு நான் ஸ்கூல் விட்டு வரும் போது கூட உங்க வீட்டுக்கு கூப்பிட்டு பேசிட்டு இருப்பாங்க. என்னை கவனிக்கலனு எரிச்சலா வரும். கேட்டா நீ வளந்துட்டேள்ல, நீயே உன்னை பாத்துக்கோன்னு சொல்லுவாங்க.  ஆனா அப்பவும் என் அப்பா மட்டும் தான் முன்ன இருந்த மாதிரி என்கிட்ட கிளோஸ இருந்தாரு. சோ நானும் அவர்கூடவே இருக்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிக்கும் போது அப்பா பொலம்புறது, பீல் பண்றது எல்லாம் கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும். என்னை எப்போவுமே ஒரேமாதிரி பாத்த வளத்த என் அப்பா என் கண்ணுமுன்னாடி குடிச்சிட்டு அழுகிறது, பொலம்புறது நீயும் என்னை விட்டுட்டு போய்டுவேன்னு சொல்லும்போது எல்லாம் அதுக்கு காரணமான உங்க எல்லார்மேலையும் ரொம்ப கோபம் வரும். அதுவும் நீ சட்டுனு முகத்துல அடிச்சமாதிரி பதில் சொல்றது, மாட்டி விடுறது எல்லாம் பாக்கும் போது செம எரிச்சலா இருக்கும். அந்த பழக்கம் எனக்கு இருக்குனு தெரிஞ்சாலும் என் அப்பா நமக்கு பிடிச்சவங்கனு வரும்போது அது எல்லாமே மறந்திடுது என்ன பண்ண சொல்ற. ஆனா அப்போவும் யோசிக்காம இல்லை. நிறையா யோசிச்சேன்… எங்க அப்பா ஹெல்ப் வேணும், வேலை வேணும்னு வந்தாரு. உங்க அப்பா வேலை வாங்கி தந்தாரு, ஹெல்ப் பண்ணாரு. அதோட விட்டு இருக்கனும். ஒருத்தரோட முழு குணத்தை பத்தி அட்லீஸ்ட் அவங்க எந்தமாதிரி எவ்ளோ திறமை என்ன ஏதுன்னு கூட தெரிஞ்சுக்காம உடனே பார்ட்னரா சேத்துனது யாரு தப்பு, அடுத்தடுத்த வருஷம் குடிசைல இருந்தவன் கோபுரத்துக்கு போனா அதுவும் கொஞ்சம் கூட கஷ்டப்படாம அவ்ளோ திறமை இல்லாம கெடச்சா அவனுக்கு அந்த சீரியஸ்நெஸ் தெரியாது. இன்னும் அதிகம் அதிகம்னு ஆசைய தூண்டிவிட்டுட்டு உங்க அப்பா போய்ட்டாரு. என் அப்பா தினம் தினம் பெரிய செல்வாக்கு வாழ்க்கைல இருக்கோம்னு ஆசைப்பட்டு அப்டி காட்டிட்டு ஆனா அதுக்கான முழுசுதந்திரம் இல்லாம இவரை கீழையே வெச்சிருக்கிறது என்ன நியாயம். சுயமரியாதை எல்லாருக்குமே இருக்கும். நான் என் வீட்டுக்கு தலைவன்னு சொன்னா அந்தமாதிரி இருக்கணும்னு ஆசைஇருக்கும். நாட்டுக்கு தலைவனாகணும்னு அவன் பெருசா யோசிக்கமாட்டான். ஆனா அவன்கிட்டேயே நீ வீட்டுக்கு பேரளவுல தலைவனா இரு ஆனா முடிவ எடுக்கற உரிமை உனக்கு கிடையாது. சும்மா டம்மியா இருன்னா ஏத்துக்குவோமா சொல்லு. அந்த தப்ப தான் உங்க அப்பா பண்ணாரு. எங்க அப்பாவுக்கு வேலை வாங்கி குடுத்திட்டு இனி உன் வாழ்க்கையை நீ பாத்துக்கோன்னு விட்டிருந்தா அவரும் மாச சம்பளத்துல குடும்பத்தை ஓட்டிட்டு ஒரு சராசரி மனுஷனாவது நிம்மதியா வாழ்ந்திருப்பாரு. உங்க அப்பா பணம், செல்வாக்கு அந்தஸ்து எல்லாமே சும்மா பேருக்கு குடுத்திட்டு எதையும் அனுபவிக்க விடாம கட்டிப்போட்டு என் அப்பா இதுதான் கிடைச்சிருக்குனு மனசார எடுத்துக்கவும் தெரியாம இல்ல இப்டி பிடிக்காம இருக்கவேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போகமுடியாம முடிவெடுக்க முடியாத நிலமைல தினம் தினம் குடிச்சி, கோபம், வெறுப்புன்னு இருக்கற வாழ்க்கையை கூட அவரால வாழ முடியாம ஆக்கிக்கிட்டாரு.

நீ கேட்கலாம், ஏன்டா உன் அப்பாவுக்கு கேட்டதுக்கு அதிகமா உதவி பண்ணது உங்களுக்கு பிரச்சனையான்னு, கண்டிப்பா சொல்றேன் அதுதான் பிரச்சனை. ஒருத்தருக்கு அளவுக்கு மீறி, தகுதிக்கு திறமைக்கு மீறி ஒரு விஷயம் நாம குடுக்கறோம்னு முடிவு பண்ணா அடுத்து அவங்க அத எப்படி எடுத்துக்குவாங்க என்ன ஏதுன்னு எல்லாமே யோசிக்கணும். அப்டி யோசிக்கமுடியலையா நான் இத செய்றேன், இவ்ளோதான் என்னால முடியும், இதுக்கு மேல எதிர்பார்க்காதனு முன்னாடியே பேசி புரியவெக்கணும், எதுமே பண்ணாம உங்க இஷ்டத்துக்கு நாய்க்கு பிஸ்கட் போடுறமாதிரி உங்களுக்கு தோணும் போது போடுவிங்க, நாங்க வந்து சாப்பிடணும், உங்களுக்கு தோணாட்டி நீங்க சும்மா காட்டிட்டு மட்டும் போவீங்க எங்களுக்கா  பசிக்கிதுன்னு கத்துனா அது தப்பு கேட்டாலும் கண்டுக்கமாட்டீங்க அப்படித்தானே, நம்ம வளத்திவிட்ட நாய் தானே கடிக்கவா போகுதுனு நினைச்சிடுங்கள்ல? உங்க அப்பா எவ்ளோ பெரிய ஆளா வேணும்னாலும் இருக்கலாம், ஆனா எங்க குடும்பம் நிம்மதி இல்லாம போனதுக்கு பெரிய காரணம் அவர் தான். என் அப்பாவுக்கு மேனேஜ்மென்ட் சரிஇல்லை, சரியான முடிவு எடுக்க தெரியாதுன்னு சொன்னாரே உங்க அப்பாவுக்கு தெளிவான முடிவு எடுக்க தெரியும்னா எதுக்காக தகுதி இல்லாத என் அப்பாவை அவரு பாட்னரா சேத்துக்கிட்டாரு?” என வினவ ஆதர்ஷ் அமைதியாக இருந்தான். அவனின் கோபம், ஆதங்கம், கேள்வி அனைத்தும் நியாயமாகபட்டது.

ருத்திரா பெருமூச்சுடன் “அதனால தான் உங்க அப்பா அவருக்கு எல்லாமே தெரியும், குடும்பத்துல வெளில ரொம்ப மரியாதை, சந்தோசம், குட் டெஸிஸின் மேக்கர், பெஸ்ட் மேனேஜ்மென்ட் எல்லாம் இருக்கற தைரியத்துல தானே என் அப்பாவை திறமை இல்லாதவன்னு சொன்னாரு, என்னையும் கோவக்காரன் சரியா வரமாட்டான்னு சொன்னாரு. என் அம்மாவுக்கும் அப்பாவுக்கு இந்த விசயத்துல மட்டும் தான் சண்டை வரும், ஆனா அதுவே ரொம்ப அதிகமா, எவ்ளோ வேதனை என் அப்பாவுக்கு, ஒழுங்கா இருந்த மனுஷனை ஆசை காட்டி ஏத்திவிட்டுட்டு என் அப்பாவை முழு கோபக்காரனா கெட்டவனா மாத்துனது எல்லாத்துக்கும் காரணம் யாரு எதுன்னு யோசிச்சேன். அதுதான் உங்க அப்பா அவரோட திறமையை அழிச்சிட்டா, என்னனு தோணுச்சு.. அவர் இருக்கும் போதே அவரோட பிஸ்னஸ்ல பிரச்னை பண்ணா அவரால கண்டுபிடிக்க முடில, குடும்பத்துல நடக்கிற பிரச்சனைய சமாளிக்க முடில. ஆதர்ஷ் புராணமே பாடிட்டு இருந்த உன் மொத்த குடும்பமும் ஒன்னுமில்லமா அமைதியான போது பீல் பெட்டெர், அப்போவும் என் வலிய உன்கிட்ட பாத்தேன். ஆனா எனக்கே தெரியாம என்னை பாத்து நீ நிறையா விஷயம் பண்ணுவ, சோ யூஸ் பண்ணிகிட்டேன்.  பீல் பண்றத பாத்தாலோ, அம்மா எல்லாரும் உங்கள பத்தி குடும்பத்துல வர பிரச்சனை பத்தி சொன்னாலோ எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கும். ஆனா உங்க அப்பாவுக்கு அவர் மேல தான் தப்புனு புரியவெக்கணும்னு ரொம்ப குறியா இருந்தேன், என் அப்பா எங்க குடும்ப சந்தோசம் எல்லாமே போனதுக்கு காரணமான எதையும் மன்னிக்க கூடாதுனு எண்ணம் இருந்திட்டே இருந்தது. சோ அம்மாகிட்ட பேசுறத ரொம்ப கம்மி பண்ணிட்டேன். உங்க எல்லார்கிட்ட இருந்தும் தூரம் விலகிட்டேன். என் அப்பா அவரோட வலி வருத்தம் மட்டும் தான் எனக்கு தெரியமாதிரி பாத்துக்கிட்டேன். அப்போதான் நான் எந்த குழப்பமும் இல்லாம உங்களுக்கு பிரச்சனை கொடுக்கறதுல மட்டும் கவனமா இருக்கமுடியும்னு நினச்சேன். அப்டித்தான் நினச்சமாதிரி நடந்தது. என்ன பண்றது கொஞ்ச காலம் விடாம பழகுன பழக்கம்னாலும் நான் முழு மிருகமா வெறித்தனமா மாறிட்டேன். அதுல முழுசா நிதானத்தை இழந்துட்டேன்… இதுல உன் தப்பு எதுவும் இல்லதான். ஆனா என்ன பண்றது நம்ம இடத்தை பிடிக்கவராங்கனு சொன்னா அவங்க மேல வர ஒரு பொதுவான கோபம் வெறுப்பு தான். சிம்பிளா சொன்னா மாமியார் மருமக சண்டை மாதிரி வெச்சுக்கோயேன். எல்லா பசங்களும் அம்மா மாதிரி தான் மனைவி வேணும்னு சொல்லுவாங்க. அத கேக்கும்போது என்னதான் எல்லா அம்மாவும் பெருமைப்பட்டாலும் மருமக வந்ததும் என்னை ரீபிலேஸ் பண்ணத்தான் இவ வந்திருக்காளோன்னு ஒரு எண்ணம் வரும்ல அதனாலயே அவங்களும் ஒரு பொண்ணுதான்னு மறந்துட்டு மாமியார தன்னோட இடத்தை தக்கவெச்சுக்கணும்னு பண்ற அதிகாரம் காட்டுற கோபம் எல்லாமே எப்டியோ அது மாதிரி தான் இதுவும் . என்னதான் சின்னவயசுல இருந்தே நீ என்னமாதிரி தைரியம் அறிவுன்னு எல்லாரும் சொன்னாலும் அது எனக்கு பெருமைதானேங்கிறது எனக்கு அப்போ தோணல. எனக்கு கிடைக்க வேண்டிய எல்லாத்தையும் நீ எடுத்துக்கிட்ட என் இடத்தை நீ பிடிச்சிட்டேன்னு ஒரு கோபம் தான் உன்மேல.” என

ஆதர்ஷ் மெலிதான புன்னகையுடன் “புரியுது… இப்டி எக்சாம்பிள் சொல்லியும் புரியாம போகுமா?” என அவன் கிண்டலாக கூறி சிரிக்க,  தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரகுவிற்கு தான் கோபம் தலைக்கேறியது, என்ன இவன் சிரிச்சு பேசிட்டு இருக்கான் என அக்ஸாவிடம் கத்திக்கொண்டிருக்க ருத்திரா உன் பிரண்ட் அங்க பாரு எவ்ளோ கோபமா என்னை பாத்திட்டு இருக்கான், நீ என்கூட சிரிச்சு பேசிட்டு இருக்க, இன்னும் கொஞ்ச நேரம் நீ இப்டியே இருந்த நாம என்ன பேசுறோம், நாம உண்மையாவே எதிரிங்களா இல்லையானு அவனுக்கு பைத்தியமே பிடிச்சிடும் இருவரும்  சிரித்தனர்..

முதுகு காட்டியவாறு ஒரு பெண் ரகுவுடன் நிற்க ருத்திரா யாரோ ஒரு பெண் அங்கே இருக்கிறாள் என பார்த்துவிட்டு ஆதர்ஷிடம் கேட்க  அவன் “அக்சரா தான்.. நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு..” என்றான்.

ருத்திரா உண்மையான ஆச்சரியத்துடன் பார்த்தவன் “அப்போ அன்னைக்கு கால்ல நான் ஒருத்தர லவ் பண்றேன். தைரியம் இருந்தா நேர்ல வந்து பாரு, நீ இப்டி என்கிட்ட பேசுறது அவருக்கு தெரியாம பாத்துக்கோ, இல்லாட்டி உனக்கு தான் பிரச்னைன்னு அவ்ளோ பெருமையா தைரியமா பேசுனது உன்னை பத்தி தானா?” என

ஆதர்ஷ் ஆமாம் என தலையசைக்க கேட்டுக்கொண்டிருந்த ருத்திரா இறுதியில் வாய்விட்டே சிரிக்கத்துவங்கினான். புரியாமல் விழித்த ஆதர்ஷ் “என்னாச்சு?” என விசாரிக்க

ருத்திரா “இல்லை சின்னவயசுல இருந்து இன்னுமா அவ உன்ன விடலைன்னு யோசிச்சேன். நீயும் கூட..அதோட  இதுலையும் நீ எனக்கு தெரிஞ்சு எதிரியா வந்தியா தெரியாம வந்தியானு டவுட்..” என்று கூற

ஆதர்ஷ் “இன்னுமான்னா? அப்போ முன்னாடியே தெரியுமா?”

ருத்திரா ஆமாம் என்பது போல தலையசைத்தான். ஆதர்ஸ் நம்பமுடியாமல் வினவ “அது ஒரு குட்டி கதை, நீங்க இரண்டு பேரும் அப்போ சின்ன பசங்கள்ல சோ ஞாபகம் இருந்திருக்காது. எல்லாத்தையும் தாண்டி மறுபடியும் இத்தனை வருஷம் கழிச்சு நீங்க ஒண்ணா வந்திருக்கீங்கனு நினைக்கும்போது எனக்கு கோபப்படுறதா சிரிக்கறதான்னே தெரில. வாழ்க்கையில நமக்குனு இருக்கறது எவ்ளோ தடுத்தாலும் எப்படியும் நம்மகிட்ட வந்து சேந்திடும்ல. இப்போவும் எல்லாமே யோசிச்சு பாத்தா மேஜிக் மாதிரி இருக்கு. எனக்கு நம்பமுடில.  அப்போவும் நான் உங்க இரண்டுபேருக்குள்ள பிரச்சனை பண்ணேன் என சில விஷயம் கூறினான். அதோடு முழு கதையை என் அம்மாகிட்ட கேளு. நல்லா கதை சொல்லுவாங்க அவங்க. ரியலி மேஜிக் அண்ட் இன்டெரெஸ்ட்டிங். என்றவன் அக்ஸாவை பார்த்துகொண்டே நீ என்னை மாதிரினு சொல்லுவாங்க அதேமாதிரி அவ செய்ற விஷயம் பாத்தா நம்ம இரண்டுபேரையும் மிக்ஸ் பண்ணாமாதிரி தோணும். தெளிவான முடிவு, எதையும் அடுத்தவன் இடத்துல இருந்து யோசிக்கறது, சான்ஸ் கிடைச்சா நமக்கு பிரச்சனை குடுத்தவனை மாட்டிவிடுறத, நேருக்கு நேரா தைரியமா எதையும் பேஸ் பண்றதுனு நம்ம இரண்டுபேரோட குணம், அதோட உன்கிட்ட இருக்கற இரக்கம், என்கிட்ட இருக்கற கிரிமினல் திங்கிங், அது இல்லாம பொண்ணுங்களுக்காகவே ஸ்பெஷல இருக்கற நிதானம், பொறுமை, அக்கறை எல்லாமே இல்லையா?” என அவன் பெருமையாக கூறி கேட்க ஆதர்ஷ் ருத்திராவிடம் “அக்ஸாவை இங்க கூப்பிடவா? பேசுறியா?” என கேட்க ஆதர்சை திரும்பி பார்த்தவன் “உனக்கு ரொம்ப தாண்டா தைரியம், என்கிட்ட பயமே இல்லையா? உன் லவர நான் அவகிட்ட என்னென்ன பேசுனேன்னு தெரிஞ்சும் இப்டி என்கிட்ட வந்து பேசுறியான்னு கேக்குற, இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்க, அவ என்னை பாக்க வரதுக்கு ஓகே சொன்னாளா?” என வினா எழுப்ப

அதை கேட்டு சிரித்த ஆதர்ஷ் “அதெல்லாம் நான் கேட்டேன், வரியான்னு, கூப்பிட்டா வரேன்னு சொன்னா வான்னு கூட்டிட்டு வந்துட்டேன்.” என பெருமையாக கூறினான். அதோடு தொடர்ந்து “எனக்கு ஒரு டவுட் இருந்திட்டே இருந்தது, மத்த விஷயம் மாதிரி இதுக்கும் ஒரு காரணம் இருக்குமோன்னு ரொம்ப ரேர் கேஸ் உண்மையாவே நீ அவளை விரும்புனியான்னு அதான் அவளை கூட்டிட்டு வந்தேன். ஆனா நீ அவளை பாத்ததும், அவளை பத்தி பேசுனதும் உன் கண்ணில தெரிஞ்ச ஆச்சரியம், பெருமை  அதில் காதலோ, காமமோ, வருத்தமோ எதுமே இல்லை. எல்லாத்துக்கும் மேல நீயாவே என்ன பதிலுனும் சொல்லிட்டா. சின்னவயசுல நடந்த விஷயம் அப்போவே நீ கோபப்பட்டேன்னு அதுபோதுமே நீ ஏன் அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன்னு பதில் கிடைச்சிடுச்சே.” என ருத்திரா சிரித்துவிட்டு “கூப்பிடு.” என்றான்.

அக்ஸா வந்ததும் “எப்படி இருக்கீங்க மேடம்?” என ஆதர்ஷ் போலவே கிண்டலாக கேட்க அவள் ஆதர்சை பார்க்க சொடுக்கிட்டு “ஹலோ இந்த மாதிரி பேசுறது எங்களுக்கு பழக்கம் இருக்கு, உங்க ஆளுக்கு மட்டும் பட்டா போட்டு குடுக்கல.. இன்னும் சொல்லப்போனா அவனே என்கிட்ட இருந்துதான் கத்திட்டு இருந்திருப்பான் … நம்பி தைரியமா பதில் சொல்லலாம்” என வம்பிழுக்க

அக்ஸா மெலிதான புன்னகையுடன் “இருக்கலாம், உங்ககிட்ட இருந்தே நிறைய கத்திட்டு இருந்திருக்கலாம்.. ஆனா சொல்லி குடுத்ததோட கடைமை முடிஞ்சதுனு உங்க பழக்கத்தை நீங்க மாத்திகிட்டது, மறந்தது சரி இல்லையே.. ஆதவ் மாதிரி பேசுறவங்க எல்லாம் ஆதவ் ஆகிடமுடியாது. அண்ட் அவரோட மனசுல நான் இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது, தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் எனக்கு என்ன குறைச்சல் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.” என கர்வமாக கூற ருத்திராவின் கண்கள் வியப்பை காட்டின. ஆதர்சிடம் கண்ணசைக்க இருவரும் சிரித்தனர்.

ருத்திரா “என்ன பாக்க என் அம்மா என்கூட இருந்தவங்கள வரல, யோசிக்கிறாங்க, தயங்குறாங்க, பயப்படுறாங்க… உனக்கு என் மேல கோபம் இல்லையா?”

அக்ஸா “உங்கள பாக்க வந்தது அவருக்காக தான். ஆனா கேட்டதும் வேண்டாம்னு சொல்லி சண்டை போட, உங்க மேல தான் முழு தப்பும்னு சொல்றதுக்கு எனக்கு தோணல. உங்கள அப்டி அவ்ளோ கோபக்காரனா தப்பானவனா மாத்துனதுக்கு மத்தவங்களும் ஒரு காரணம்னு தோணுச்சு. இவளோ கோபம் வெறுப்பு பலி உணர்வு எல்லாம் ஒரு நாள்ல வரக்கூடிய விஷயம் இல்லை…சோ மத்தவங்க உங்கள சுத்தி இருந்தவங்க உங்களை கவனிச்சு அப்போவே மாத்திருக்கலாம். பட் பண்ணல. தப்பை எல்லாரும் பண்ணிட்டு ஏன் முழு தண்டனையும் உங்களுக்கு மட்டும்னு யோசிச்சேன். சோ பாக்ககூடாதுனு சொல்ல தோணல. கூப்பிட்டதும் வந்துட்டேன்.” என இவனுக்காக யோசிக்க ருத்திரா மெலிதாக சிரித்துவிட்டு “தேங்க்ஸ்.. எல்லாத்துக்கும் என் பிரச்சனைய சொல்லாமலே இந்த அளவுக்கு புரிஞ்சுக்கிட்டதுக்கு.. அண்ட் mrs.அக்சரா தேவி ஆதர்ஷ் யாதவ்வா  மாற போறீங்க வாழ்த்துக்கள்” என கை நீட்ட அவளும் புன்னகையுடன் கை குலுக்கி விட்டு “நன்றி.” என்றாள்.

ஆதர்ஷிடம் “அவளை பத்திரமா பாத்துக்கோ” என்றான். ஆதர்ஷ் தலையசைக்க அக்ஸாவிடம் திரும்பிய ருத்திரா “என் வாழ்க்கைல முதல் தடவையா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தோணுது…. எல்லாரும் ஏதோ வகைல என்னை கஷ்டப்படுத்தினாங்க. நான் அவங்களுக்கு திருப்பி அத குடுத்திட்டேன். அது நல்லது கெட்டதுனு பத்தி நான் யோசிக்கவிரும்பல. ஏன் அதனால இப்போ நான் ஜெயில்ல இருக்கேன், குடும்பமே போச்சு யாரும் இல்லேன்னு என்ன வந்தாலும் அப்போவும் இப்போவும் எனக்கு வந்த விசயத்துக்கு, நான் பண்ணது தான் எனக்கு சரினு தோணுது, தோணும். அதனால வர தண்டனைக்கு நான் எப்போவுமே தயாராதான் இருந்தேன். என்னால நடந்த பிரச்னைல ஆதர்ஷ்க்கு இழப்பு அதிகம் தான். ஆனாலும் அவன்கிட்ட கூட நான் மன்னிப்பு கேட்கல. ஏன்னா அதுக்கு ஒரு காரணம் எனக்கு இருந்தது…ஆனா உனக்கு மட்டும் ஏனோ சம்பந்தமே இல்லமா காரணமே இல்லமா ரொம்ப கஷ்டத்தை குடுத்திட்டேன். எப்போவது தோணுச்சுனா என்னோட மன்னிப்பை ஏத்துக்கோ.. அவனோட சந்தோசமா இரு..” என்றவன் திரும்பி ஆதர்ஷ்க்கு வாழ்த்து கூற “தேங்க்ஸ்டா அண்ணா” என்றான். ருத்திரா அவனை கூர்மையாக பார்க்க ஆதர்ஷ் “ஆரம்பத்துல நான் உன்னை அப்படித்தானே கூப்பிடுவேன். உனக்கு பிடிக்காதுன்னு சொன்னதால தான் விட்டுட்டேன்… இப்போவும் நீ வேண்டாம்னு சொன்னா கூப்படல.” என ருத்திரா எதுவும் கூறமால் “இரண்டுபேரும் பாத்து போங்க, அம்மாவை நல்லா பாத்துக்கோ, பாவம் அவங்க. ரொம்ப தைரியமா இருந்து கஷ்டப்படுத்திப்பாங்க..” என்று கூறிவிட்டு அவன் நகர எத்தனிக்க ஆதர்ஷ் அவனிடம் “நீ முன்னமாதிரி இல்லேதானே.. அதான் மாறிட்டியே? நீ வந்திடு.. எல்லார்கூடவும் சந்தோசமா இரு…நான் வேணும்னா கேஸ வாபஸ் வாங்கிடவா? ” என கேட்க

ருத்திரா நெற்றியை தடவியவன் புன்னகைத்து விட்டு “ஆதர்ஷ், ஆதர்ஷ் உன்னை என்ன சொல்றது…நீயும் அதே தப்ப தான் பண்ற…” என்றவன் அக்ஸாவிடம் திரும்பி “அக்ஸா நீ சொல்லு இது சரிவருமா? நான் இப்போவே வெளில வந்திடவானு?” என அவளிடம் வினவ அக்ஸா ஒரு நிமிடம் யோசித்தவள் வேண்டாம் என்பது போல தலையசைக்க ருத்திரா ஆதர்சை பார்த்தவன் “ஷி ஸ் கரெக்ட்… அவகிட்ட கேளு… ஏன் சரி வராதுன்னு..இப்போ கிளம்புங்க.. எல்லாரையும் பாத்துக்கோ..அண்ட் அக்ஸா உனக்கு ஒரு சூப்பர் ஸ்டோரி ஆதர்ஷ் சொல்லுவான் அதையும் கேட்டுக்கோ… அடுத்த டைம் ஒருவேளை வந்தா அதுல இருந்து வேற என்ன மேஜிக் நடந்ததுன்னு சொல்லு…” என்று புன்னகையுடன் கூறிவிட்டு  உள்ளே சென்றுவிட்டான். அந்த நடை கம்பீரம் சற்றும் குறையாமல் செல்லும் ருத்திராவை பார்த்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 14உள்ளம் குழையுதடி கிளியே – 14

அன்புள்ள தோழிகளுக்கு, உள்ளம் குழையுதடி கிளியே கதை பதிவு தாமதமானதற்கு மன்னிக்கவும். தாமதத்திற்கு சரியான காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு முகநூலிலும், மெசேஜ் மற்றும் தொலைபேசி அழைப்பு  என பலவிதமாக என்னைத் தொடர்பு கொண்டு  நலனை விசாரித்த தோழிகள் அனைவருக்கும்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 20’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 20’

அதன்பின் ஐந்தாறு முறை வம்சி வந்துவிட்டான். ஒரு முறை கூட பதிலைக் கேட்கவில்லை. ஆனால் உரிமையாக உணவு வகைகளை வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கி வைப்பான். சில நாட்கள் பாஸ்தா, நூடுல்ஸ் என்று அவள் சமைத்திருக்கும் சுலப உணவுகளை கூட சேர்ந்து

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’

அந்தேரி பகுதியில் இருந்த பணக்கார அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ். வீடுகளின் விலையே அங்கு சில கோடிகளில்தான் ஆரம்பிக்கும். அதைத்தவிர மெயின்டனன்ஸ், இருவத்திநான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பிரத்யோக ஜிம்மிற்கு என்று வருடத்துக்கு சில லட்சங்கள் செலவாகும். விடியற்காலை ஐந்து மணி, அதிகாலை வேளையில்