Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 39

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 39

39 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷ் அம்பிகாவிடம் “இது? இவ போட்டோ இங்க எப்படி வந்தது?” என

அம்பிகா “இது ருத்திராவோட ரூம்.. அவன் மட்டும் தான் வருவான். அவன் போனதுக்கு அப்புறம் யாரும் இங்க வரதில்ல…உனக்கு அக்சராவை முன்னாடியே தெரியுமா?” என்றதும் அவன் தெரியும் என சொல்லிவிட்டு அவரிடம் அக்சரா பற்றி எப்படி தெரியவந்தது என அனைத்தும் விசாரித்தான்.

“அக்சராவோட அப்பா எனக்கு ஒருவகையில அண்ணன் முறையாகுது. எல்லாரும் ரொம்ப டச்ல இல்லேன்னாலும் வருசத்துக்கு ஒருதடவை குலதெய்வம் கோவில் விசேஷம் இந்தமாதிரி பாக்க பேசன்னு இருப்போம். அது கொல்லிமலை பக்கத்துல இருக்கு. அங்க போனா தங்குறதுக்கு எல்லாம் சிரமம்னு ஒரு வீடு பாத்து மெயின்டைன் பண்ணிட்டு இருந்தோம். 2 வருஷம் முன்னாடி அக்சராவுக்கு கல்யாணம் பண்ணலாம்னு  அவங்க வீட்ல ஐடியால இருந்தாங்க. அதுக்கு முன்னாடி கோவிலுக்கு வந்துட்டு ஏதோ வேண்டுதல் இருக்குனு அங்க தங்கவேண்டியதா இருந்தது. அப்போ நானும் அங்க போனதால எங்க வீட்லேயே வந்து தங்க சொல்லிட்டேன். அன்னைக்கு சாய்ங்காலம் அவங்க ஊருக்கு கிளம்பறதா இருந்தது. காலைல ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருந்தோம். அக்சராவ பத்தி சொல்லிட்டு இருந்தாங்க. அவ போட்டோ காட்டுனாங்க. நானும் பாத்துட்டு என் மருமகளுக்கு நானும் பையன் பாக்கறேன். நீங்க ஜாதகத்தை அனுப்சு வைங்கனு சொல்லிட்டு இருந்தேன். போட்டோவை டேபிள்ல வெச்சிட்டு எல்லாரும் சாப்பிட போய்ட்டோம். எப்போவுமே ருத்திரா எங்க கூப்பிட்டாலும் வரமாட்டான். அந்த தடவ நான் தான் அவனை கட்டாயப்படுத்தி கோவிலுக்கு கூட்டிட்டு போனேன். ஆனா அவன் யாருகிட்டேயும் பேசல. ரூம்ல தான் இருந்தான். நானும் பெருசா எடுத்துக்கல. இவன் நாங்க அக்சரா பத்தி பேசுனது எல்லாம் கேட்டிருப்பான் போல. வந்து போட்டோ பாத்துட்டு நேரா எங்ககிட்ட வந்து “எனக்கு இவளை புடிச்சிருக்கு. இவளுக்கு வெளில எல்லாம் மாப்பிள்ளை பாத்தீங்க நான் மனுசனா இருக்கமாட்டேன். சீக்கிரம் இவளை கூட்டிட்டு வந்து விட்ருங்கனு சொல்லிட்டான்.” இந்த மாதிரி அவன் பேசுனது யாருக்கும் பிடிக்கல. எனக்கு கோபம் வந்து அவனை திட்டுனேன்… ஆனா அண்ணா அக்சராவோட அப்பா தான் பொறுமையா “இல்ல தம்பி, பொருத்தம் எல்லாம் பாக்கணும், அதோட எங்க பொண்ணுக்கும் புடிக்கணும். அப்டி எடுத்தோம் கவுத்தோம்னு எதும் பண்ணமுடியாதுனு எடுத்து சொன்னாரு..”

ஆனா ருத்திரா “அதெல்லாம் எனக்கு தேவையில்ல.. உங்க பொண்ணுக்கு பிடிக்கலேன்னா பிடிக்க வெய்ங்க.. நான் முடிவு பண்ணிட்டேன்னு” அவன் பிடிவாதமா இருந்தான்.

அக்சராவோட மாமாங்க இரண்டு பேருக்கும் ரொம்ப கோபம். முதல வாக்குவாதம் ஆரம்பிச்சு கடைசில அவனை அடிச்சுட்டாரு…நாங்க உயிரோட இருக்கறவரைக்கும் ஏன் அதுக்கப்புறமும் கூட எங்க வீட்டு பொண்ணு உனக்கு கிடைக்கமாட்டா…மாமா உங்க தங்கச்சி வீடு சொந்தபந்தம் எல்லாம் ஒரு லிமிட் தான். நம்ம பொண்ண இப்டி ஒருத்தனுக்கு கட்டி வெக்கணும்னு நினைப்பு கூட யாருக்கும் வரக்கூடாது. அதனால என்ன பிரச்சனை வந்தாலும் நாங்க பாத்துக்கறோம்னு கத்திட்டாரு.” அக்சவோட மாமா

ருத்திராவோட கோபம் பிடிவாதம் எனக்கு தெரியும். அதனால அவனை உள்ள கூட்டிட்டு போயிட்டு இன்னும் ஒரு மணிநேரத்துல நாம இங்க இருந்து கிளம்புறோம் அவ்ளோதான்னு சொல்லிட்டு வந்துட்டேன்… இவங்ககிட்டேயும் மன்னிப்பு கேட்டேன். நான் அவனை கூப்பிட்டு இப்போவே கிளம்புறேன் அண்ணா, நீங்க இங்க இருந்து பாத்துட்டு ஏற்கனவே முடிவு பண்ணமாதிரி கோவில்ல வேண்டுதல் இருக்கு சொன்னிங்களே… அத தள்ளிப்போட வேண்டாம்…. முடிச்சிட்டு சாயந்தரம் கிளம்புங்க… எல்லாரும் மன்னிச்சுடுங்க.. அவன் இப்டி பண்ணுவான்னு நானே எதிர்பாக்கலனு சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பிட்டேன்.

அதுக்கப்புறம் அக்சரா அவங்க வீட்டுல இருந்து எனக்கு எந்த தகவலும் வரல. இரண்டு நாள் கழிச்சு ருத்திரா என்கிட்ட வந்து அக்சராவை பத்தி கேட்டான். அவங்க அட்ரஸ் பேமிலி பத்தி கேட்டான். நான் சொன்னா நீ அவங்கள போயி தொந்தரவு பண்ணுவ அதனால குடுக்கமாட்டேனு சொல்லிட்டேன். அவங்க காண்டாக்ட் நம்பர் டீடைல்ஸ் எல்லாமே அழிச்சிட்டேன். ருத்திராவுக்கு அதுல என்மேல ரொம்ப கோபம் இரண்டுபேருக்கும் ரொம்ப சண்டை.. அப்போ போனவன் தான் சுத்தமா என்கிட்ட பேசுறதே இல்ல. இங்க வரதும் இல்லை.. அவன்கிட்ட அக்சராவோட போட்டோ தவிர வேற எதுவுமே இல்லை. அதனால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு ஒரு நம்பிக்கைல நானும் விட்டுட்டேன்.

ஆதர்ஷ் இதற்கு மேல் மறைத்துவைத்து எந்த பிரயஜோனமும் இல்லை என்றெண்ணியவன் அக்சரா குடும்பம் பற்றி தனக்கு தெரிந்தவைகளை கூறினான் அதோடு தன் குடும்பத்திற்கு அவனும் செல்வமும் செய்தவற்றை பற்றியும் விவரித்தான்.. அம்பிகா அனைத்தும் கேட்டுவிட்டு அழுது புலம்ப அவரை சமாதானம் செய்தவன் “ஆனா அக்சரா குடும்பத்துல எல்லாரும் இறந்திருக்க சான்ஸ் இல்லேனு நினைக்கிறேன்.. அதுல எல்லாருக்குமே ஒரு குழப்பம் இருக்கு.. இல்ல சம்மந்தமே இல்லாம ருத்திரா வந்து மறுபடியும் இரண்டு நாள் கழிச்சு உங்ககிட்ட விசாரிச்சிருக்க மாட்டான். என்னமோ நடந்திருக்கு.”

அம்பிகா “ஆனா யார்கிட்ட கேக்கறது.. எப்படி தெரிஞ்சுக்கிறது?”

ஆதர்ஷ் “இத தெரிஞ்ச இரண்டே ஆள் ருத்திரா இன்னொன்னு உங்க ஹஸ்பண்ட் தான்… வேற வழியே இல்லை.” என்றவன் அடுத்து செய்யவேண்டியதை கூறினான். வாசு, ரகு, எடின் அனைவரையும் கால் செய்து விஷயத்தை கூறியவன் லாயர் அங்கிள்ளை அழைத்து கொண்டு இங்கே வர சொன்னான்.. ஹாஸ்பிடல் சென்று எதுவும் கூறாமல் அம்பிகா கணவரை செக்கப் முடிந்து ரிப்போர்ட்ஸ் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அழைத்துவந்தாள்.. ருத்திராவ எப்படி வரவெக்கிறதுன்னு தான் யோசிக்கிறேன். என ஆதர்ஷ் கூற வாசு “ஆமாடா, அவன் அவங்க அப்பாவுக்கு இவளோ முடியாம இருக்குனு தெரிஞ்சுமே இங்க வரல… என்ன பண்றது” என

ஆதர்ஷ் “சரி அம்பிகா ஆண்ட்டி எல்லாம் வரட்டும்.. ஏதாவது பண்ணலாம். ” என்றவன்

ராஜுவிற்கு அழைத்து சங்கரமூர்த்தியை அழைத்துவர சொன்னான்.

 

வாசுவிற்கு அக்சரா கால் செய்து என்ன நிலவரம் என்று கேட்டறிந்தவள் அமைதியாக என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தாள்.

 

அவள் நல்ல நேரமோ என்னவோ ருத்திரா அவளுக்கு மீண்டும் அழைத்து பேச

அக்சரா “நீ தப்பா ஏதோ புரிஞ்சுட்டு பேசிட்டு இருக்க, நான் ஏற்கனவே ஒருத்தர விரும்பறேன். நீ நினைக்கிறது எல்லாம் எதுவும் நடக்காது…”

ருத்திரா “அக்சரா, நான் உன்னை அவ்ளோ சீக்கிரம் விடமாட்டேன். நான் காலையிலேயே சொன்னேன். உன்னை நான் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்னு. உன்னை கண்டுபுடிக்க எனக்கு இத்தனை வருஷம் ஆச்சு. இனிமேல் நான் மிஸ் பண்ணுவேன்னு நினைக்காத.. எவன் குறுக்க வந்தாலும் நான் உன்னை விடுறதாயில்லை.”

 

அக்சரா “இந்தமாதிரி நீ பேசுறது அவருக்கு தெரியாம பாத்துக்கோ..அதுதான் உனக்கு நல்லது.” என சாதாரணமாக அவள் கூற

ருத்திராவிற்கு கோபம் பன்மடங்கு ஏறியது.

அக்சரா தொடர்ந்து “நீயே யோசி, சும்மா போன்ல மிரட்டிட்டு எனக்கு தெரியாம அதுவும் வேற ஆளுங்கள வெச்சு பயமுறுத்த உன்னை பாத்து பயப்படுவேனா?  என் லவர் சென்னைல தான் இருக்காரு.. உன்னை பத்தி நான் வேணும்னா சொல்லிடறேன். நீ ஒருவேளை தைரியமா வந்தா சொல்லு அவரே உன்ன வந்து பஸ்ட் மீட் பண்ணுவாரு.. உன்னமாதிரி பின்னாடி இரண்டு வண்டி முன்னாடி இரண்டு வண்டினு சும்மா சீன் காமிச்சிட்டு போற ஆள் அவரில்லை. நேருக்கு நேரா வந்து மீட் பண்ணுவாரு… அவரை முடிஞ்சா நீ ஜெயிச்சிட்டு வா.. அப்போ பாக்கலாம்… அதுக்கு முன்னாடி இந்த பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் வேண்டாம். உன் ஆளுங்க இன்னும் இங்க இருக்கவெக்கணும்னு அவசியம் இல்லை. நான் எல்லாம் உன்னமாதிரி பயந்து ஓடமாட்டேன். நான் எங்க இருந்தாலும் என்னை பத்திரமா பாத்துக்க அவரு வந்திடுவாரு. சோ உன்னை பத்திரமா பாத்துக்க வேணும்னா உன் ஆளுங்கள கூட வெச்சுக்கோ சரியா..?” என ருத்திராவை சீண்டிவிட

கோபத்தில் வெறிகொண்டவன் போல கத்தியவன் “நான் உடனே இந்தியா கிளம்பி வரேன்… வந்த உடனே உனக்கு கூப்பிடுறேன் டி. உன் லவர ரெடியா இருக்க சொல்லு. இவளோ நாள் உன்னை எப்போ பாப்பேன்னு இருந்தேன்.. ஆனா அவனை பத்தி இவளோ பேசுறேல்ல முதல அவனை பாக்குறேன். அப்படிப்பட்டவன் யாருனு பாத்துட்டு அவனை அடிச்சு இழுத்திட்டு வந்து உன் முன்னாடி நிக்கிறேன்.” என்று அவன் போனை வைத்துவிட்டான்.

 

செல்வம் வீட்டில் அனைவரும் இருக்க ஆதர்ஷ் “நீங்க பிஸ்னஸ்ல இவளோ நாள் பண்ண எல்லா திருட்டுத்தனமும் எவிடென்சோட ரெடியா இருக்கு… நீங்க யாருக்கும் தெரியாம கணக்குல வராத அப்போ அப்போ கொள்ளை அடிச்ச பணம் எல்லாமே எவ்ளோ என்னன்னு இதுல இருக்கு. இது எல்லாமே செட்டில் பண்ணனும். அதோட நம்ம காம்பெடிட்டிவ் கம்பெனி கூட நீங்க வெச்சிருந்த டீலிங், இங்க இருந்த கிளைண்ட்ஸ்கிட்ட நீங்க தரக்குறைவா பேசுனது எல்லாமே ஆதாரபூர்வமா இதுல இருக்கு… இத காரணமா காட்டி உங்கள இந்த பார்ட்னெர்ஷிப்ல இருந்து தூக்கியாச்சு. இனிமேல் உங்களுக்கும் இந்த கம்பனிக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு நீங்களாவே விலகிக்கறேன்னு சைன் போட்டுட்டா பிரச்சனை சுமூகமா முடிஞ்சிடும். எல்லாமே லீகல பேப்பர்ஸ் ரெடி பண்ணியாச்சு. என அவனிடம் நீட்ட செல்வம் எதுவும் கூறாமல் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டான். இனி செல்வத்திற்கும் அந்த கம்பெனிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முடிவானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 2நிலவு ஒரு பெண்ணாகி – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி முதல் பதிவுக்குக் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. இரண்டாம் பகுதி உங்களது பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 2 இது ஆத்ரேயனின் இளம்பிராயத்தைக் கூறும் பதிவு. அன்புடன், தமிழ் மதுரா

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37

37 சுஜியின் சம்மதம் கிடைத்த உடனே அனைவரும் அன்று மாலையே திருப்பதி கிளம்பினர். மறுநாள் காலை ஏழுமலையானின் சந்நிதியில் சுஜாதாவைத் தனது மனைவியாக இணைத்துக் கொண்டான் மாதவன். மாதவனின் சார்பில் அவனது பெற்றோரும், கேசவனும், சுஜியின் சார்பில் சுந்தரம், விக்கி, கமலம்,

ராணி மங்கம்மாள் – 24ராணி மங்கம்மாள் – 24

24. பிரிட்டோ பாதிரியார் கொலையும் பின் விளைவுகளும் கிழவன் சேதுபதியைப் போலவே அரசுரிமை வாரிசுகளில் ஒருவராக இருந்த தடியத்தேவர் என்பவரை ஜான்டி பிரிட்டோ பாதிரியார் முயன்று கிறிஸ்தவராக மதம் மாற்றி விட்டார்.   போர்ச்சுகலுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவுடன் அவர் செய்த