Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 33

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 33

34 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷ் திரும்பி வந்ததும் அக்சரா ஆதர்ஷ் இருவரும் சில விஷயம் பேசி முடிவுக்கு வந்தனர். மறுநாள் ஜெயேந்திரன் வீட்டிற்கு இருவரும் சென்று அனைவரும் உணவருந்தி விட்ட பின் ஆதர்ஷ் தன் முடிவைப்பற்றி கூறினான். முதலில் அனைவரும் தயங்கினாலும் அவர்கள் இருவரும் பேசி முடிவுக்கு வந்த பின்னரே இதை கூறுகின்றனர் என புரிந்ததால் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையில் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். இதில் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் கேட்டனர்.

ஆதர்ஷ் “நான் லண்டன் போயிட்டு இப்போதான் ப்ராஜெக்ட் முடிச்சிட்டு வரமாதிரி வீட்டுக்கு நேராவே போய்ட்றேன். அப்பா அண்ணா சித்தி எல்லாரும் இறந்த விஷயம் அங்க போனதுக்கு அப்புறம் அவங்க மூலமாவே எனக்கு தெரியவரும். அப்புறம் ஆபீஸ், கிரானைட்ஸ், கல் குவாரி கடை எல்லாமே நான் இன்ச்சார்ஜ் எடுத்துக்கமாதிரி பாத்துக்கறேன். நான் அங்க போனதுக்கு அப்புறம் எந்தமாதிரி சூழ்நிலைன்னு பாத்துட்டு வாசுவை கூப்படறேன்.. அவன் மட்டும் வரட்டும்..அவங்களோட மூவ் பொறுத்து பிளான் மாறலாம்.

ஆனா அதுவரைக்கும் பெரியப்பா, குழந்தைங்க எல்லாரும் இங்கேயே இருக்கட்டும். இங்க தான் அவங்களுக்கு பாதுகாப்பு.” என இன்னும் சில விஷயம் சொல்ல இறுதியில் ரஞ்சித் “அப்டினா எப்போ லண்டன் போற?”

ஆதர்ஸ் “இன்னைக்கு நைட் இங்க இருந்து கிளம்பிடுவேன். போனா நான் முழுசா பிரச்சனைய முடிக்காம பாதில வரமுடியாது. முக்கியமா உங்க யார்கிட்டேயும் அதிகமா கான்டக்ட் வெச்சுக்க வேண்டாம்னு இருக்கேன். ஏன்னா என்னோட கணிப்பு படி இந்த எல்லா பிரச்னையும் செல்வம் மட்டும் பண்ணிருக்கமுடியாது. அவனுக்கு கூட இருந்து வேற யாரோ ஹெல்ப் பண்ராங்க.”

விக்ரம் “என்ன சொல்ற நீ? ஆனா அண்ணி, சித்தி எல்லாருமே சொன்னது செல்வம் மட்டும் தானே. அவனே சொல்லிருக்கானே.? இப்போ வேற யாரோன்னு சொன்னா எப்படி?”

ஆதர்ஸ் “இல்ல விக்ரம், நல்லா யோசி… எந்த பக்கமும் மாட்டிக்காம ரொம்ப ஷார்ப்பா பிஸ்னஸ்ல குளறுபடி பண்ணிருக்காங்க. அப்பா ஒரு வேகம் கலந்த ஷார்ப்பான ஆளு, அண்ணா புத்திசாலியான, நிதானமான ஆள். ஆனா அவனும் ரொம்ப ஷார்ப். இப்படிப்பட்ட இரண்டுபேர்கிட்டேயும் தான் பண்ண தப்பை மாட்டிக்காத அளவுக்கு அவன் இத்தனை வருஷம் பின்னாடி  வேலை பாத்திருக்கான். இது வெறும் செல்வம் மட்டும் பண்ணிருப்பானா? அவனுக்கு பேராசை இருக்கே தவிர அந்தளவுக்கு புத்திசாலிதனம் இல்லை. இவங்க யாருமே வெளில காட்டாத யாரோ அறிவாளி அவங்க கூட இருந்து அவனுக்கு ஹெல்ப் பண்ராங்க. அது முதல யாருன்னு கண்டுபுடிக்கணும். அவனை அடக்கிட்டா போதும் செல்வம் தானா இறங்கிடுவான்.

அப்டி செல்வத்துக்கு உதவி பண்ற ஆள் யாரு, ஒருத்தர இல்ல கேங்கா என்னனு நமக்கு தெரியணும். அவங்கள வெச்சு தான் அடுத்த பிளான்..” என அவன் கூற அனைவரும் சிந்தித்துவிட்டு அவனுக்கு துணை நிற்க முடிவெடுத்தனர்.

பின் அடுத்தடுத்து அனைத்தும் விரைவாக நடக்க அன்று முழுவதும் ஏனோ ஆதர்ஷ் அக்சரா இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அனைவரிடமும் சொல்லிவிட்டு அவன் கிளம்பினான். அக்சரா மாடியில் நின்றுகொண்டிருக்க அவளிடம் வந்து அருகில் நின்றவன் சில நிமிடம் இருவரும் எதுவும் பேசாமல் வெளியே பூந்தோட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் மனதில் கொந்தளித்துக்கொண்டிருந்த பல விடைதெரியா போராட்டத்திற்கு விடை அளிக்க போகும் இந்த யுத்த பயணத்தில் யாருக்கு என்ன காத்திருக்கிறது என்ன நிகழப்போகிறது என எதுவும் அறியாமல் தங்களது சிந்தனையில் இருந்தனர். ஆதர்ஷ்ன் மன சஞ்சலம் நீங்க வேண்டும் அவனது இத்தனை வருட வலிகளுக்கு பதில் கிடைக்கவேண்டும் என அக்சராவும், எந்த சூழ்நிலையிலும் அக்சராவிற்கு இதனால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதை மட்டுமே மனதில் வேண்டிக்கொண்டிருக்கும் ஆதர்ஷ் என இருவரும் மற்றவருக்காக யோசித்துக்கொண்டிருந்தனர். அந்த வார்த்தைகளற்ற மௌன நிலையை கலைக்க  விக்ரமிடம் இருந்து கால் வர அட்டென்ட் செய்தான் ஆதர்ஷ்.

விக்ரம் “ஆதர்ஷ், வண்டி வந்திடிச்சுடா.. எல்லாமே பேக் பண்ணியாச்சு….நீ கீழ வந்தா கிளம்பிடலாம்.” என

ஆதர்ஷ் “இதோ 2மின்ஸ் டா வரேன்…” என போனை கட் செய்துவிட்டு அக்சராவை பார்த்தவன் அவளும் பார்க்க தலையை மட்டும் அசைத்துவிட்டு கிளம்பினான். கதவு வரை போனவன் திரும்பி அவளை பார்க்க அவளும் அருகில் வர எதுவும் கூறாமல் அவளை மென்மையாக அணைத்துவிட்டு அவளது நெற்றியில் தன் இதழ் பதித்தான். அந்த அணைப்பில் வேகம் இல்லை, காமம் இல்லை,  அதில் இருந்த பாதுகாப்பு, எப்போவும் கூட இருப்பேன்னு கூறுவது போல அமைந்தது. அக்சராவும் அவனை ஒரு நிமிடம் விடாமல் அணைத்துக்கொண்டு பின் விலகி சென்று அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். அந்த செயல் இருவருக்கும் ஆயிரம் விஷயங்கள் கூறின அங்கே வார்த்தைகள் தேவையற்று போனது.

அதன் பின் ஆதர்ஷ் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டான்.

 

சென்னையில் ஆனந்தின் மொபைல்க்கு மெசேஜ் வந்தது. அதை கண்டு முகம் சுருங்க நின்றிருந்த செல்வத்திற்கு ஆதர்ஷ் இந்தியா வர போவதாக அடுத்த அரைமணி நேரத்தில் கால் வந்தது. செல்வம் யாருக்கோ கால் பேச “சரி ப்ராஜெக்ட் முடிஞ்சதுனு வீட்டுக்கு சும்மா இரண்டு நாள் வந்துட்டு போவான். எப்படியும் எல்லாரும் இறந்ததை சொல்லித்தான் ஆகணும். சொன்னா இந்த தடவை ஒரு வாரம் சேத்தி இருந்துட்டு போயிடுவான்..முடிஞ்சா இப்போவே பிஸ்னஸ் லாஸ், கொஞ்சம் இன்வெஸ்ட்மென்ட் தேவைன்னு பேசி சில ப்ரோபெர்ட்டி நம்ம பேருக்கு மாத்துறமாதிரி கேப்போம். அப்புறம் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பாத்துக்கலாம். எப்படியும் அவனுக்கு பெருசா இதுல இன்டெரெஸ்ட் இல்லை. அப்டியே மத்தவங்களுக்காக அவன் சரி பிஸ்னஸ் பாதுகாக்கிறேன்னு சொன்னாலும் அவன்கிட்ட எமோஷனலா பேசி இந்த மாதிரி பிஸ்னஸ் பிரச்சனைல தான் உன் அப்பா, அண்ணா எல்லாரும் இறந்தாங்கன்னு அவனோட பீலிங்ஸ அடிச்சாப்போதும். அவன் போயிடுவான். அதையும் தாண்டி அவன் இருந்தா இன்னும் அவன் லைப்ல இருக்கறவங்கள ஏதாவது பண்ணா போதும். அவனே இது தேவையில்லேனு சொல்லிடுவான்.” என மறுமுனையில் இருந்தவன் கூற

செல்வம் “இல்லை இத்தனை பண்றதுக்கு பேசாம அவனை ஏதாவது பண்ணிட்டா பிரச்சனை முடிஞ்சிடுமே.? நான் நம்ம ஆளுங்கள வெச்சு ஏதாவது பண்ணிடவா?” என வினவ

மறுமுனையில் “முட்டாள் மாதிரி பண்ணாதீங்க…ஆதர்ஷ என்னன்னு நினைச்சீங்க, அடிச்சா மிரட்டுனா பயப்படுற ஆளுன்னா? அவனுக்கு பிரச்சனைனு எதுவும் தெரியாத வரைக்கும் தான் இங்க எல்லாரும் ஷேப்பா இருக்க முடியும். அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்ததுன்னாலும், எல்லாருக்கும் டேஞ்சர் தான். சும்மா ஏதோ ஆக்சிடென்ட், விதி, தனிமைல இருக்கோம்னு நினச்சு அமைதியா கொஞ்சம் எமோஷனல பீல் பண்ணிட்டு அவனே போயிடுவான். நீங்க ஏதாவது குளறுபடி பண்ணி அவனை சீண்டிவிடாதீங்க. இத்தனை வருஷம் பண்ண எல்லா விஷயமும் அப்புறம் ஒண்ணுமே இல்லாம போய்டும். இன்னும் கொஞ்ச மாசம் வெயிட் பண்ணுங்க. எல்லாமே நம்ம கைக்கு வந்த அப்புறம் அவனை பாத்துக்கலாம்.” என கூற

செல்வம் “ம்ம்… சரி…” என என்ன செய்யவேண்டும் என்பதை கேட்டுவிட்டு  போனை அணைத்துவிட்டார்.

 

மறுநாள் ஆதர்ஷை அழைத்துவர செல்வம் சென்றார். ஏர்போர்ட்டில் பார்த்ததும் “என்ன அங்கிள் நீங்க வந்திருக்கீங்க? அண்ணா என்ன பண்றான்? அவனை கிளோஸ் பண்ணிட்டிங்களா?” என கேட்டதும்

செல்வம் திகைக்க ஆதர்ஷ் “இல்ல அவன் தானே எப்போவுமே வருவான். இந்த தடவை சார் ரொம்ப பிஸி போல. மெசேஜ் மெயில் எதுக்குமே ரிப்ளை பண்ணவும் இல்லை. நானும் வேலை ப்ராஜெக்ட்னு அவன்கிட்ட பேசவே முடில.. அதான் அவனை எப்போவுமே பிஸியா இருக்கறமாதிரி வேலை குடுத்தே கிளோஸ் பண்ணிட்டிங்களானு கேட்டேன்.”  என்றதும் தான் செல்வத்திற்கு மூச்சே சீராக வந்தது.

செல்வம் “சரி.. நீ வா ஆதர்ஷ், வீட்டுக்கு போலாம்… எல்லாம் வீட்ல போயி பேசிக்கலாம்.” என அவனும் வண்டியில் ஏறினான்.

சிறிது தூரம் கடந்ததும் “என்ன விஷயம் ஆதர்ஷ், நேத்து தான் மெசேஜ் வந்தது…இன்னைக்கு வந்திருக்க? இவளோ அவசரமா ஏதாவது பிளானா?” என செல்வம் கேட்க

ஆதர்ஷ் “ஏன் அங்கிள் பிளான் பண்ணி நான் என்ன கொலை பண்ணவா வரேன்? வீட்டுக்கு தானே வரேன். ஒருவேளை நான் இங்க வரதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என மெலிதாக புன்னகைத்துக்கொண்டே வினவ செல்வத்திற்கு வேர்த்து கொட்டியது. இருந்தும் “ச்ச..ச்ச.. அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா… நீ வீட்டுக்கு வரதுல உண்மையாவே ரொம்ப சந்தோசம் தான். எப்போவாருவேன்னு தான் எல்லாரும் எதிர்பார்த்திட்டு இருந்தோம்.” என்று ஒருவழியாக சமாளித்தான். அடுத்து வீடு வந்து சேரும் வரை செல்வம் வாயே திறக்கவில்லை.

வீட்டிற்கு வந்ததும் சாந்தி முதலில் ஆதர்ஷை பார்த்து திகைக்க, பின்னால் பைரவியும் முகத்தில் அதிர்ச்சியை காட்ட  அவனோ சாதாரணமாக வீட்டினுள் நுழைந்து சோபாவில் அமர்ந்து செல்வத்தையும் அமர சொன்னான்.

ஆதர்ஷ் “எப்படி இருக்கீங்க?” என பைரவியின் அருகில் சென்று புன்னகையுடன் வினவினான். அவர் வார்த்தைகள் இன்றி தலையை மட்டும் அசைக்க சாந்தியிடம் சென்று எப்படி இருக்கீங்க அண்ணா? சிந்து குழந்தை எல்லாம் எங்க? என அவர்கள் விழிக்க செல்வம் “அது அவங்க எல்லாரும் சாந்தியோட அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க.” என அவன் அவரை நம்பாமல் பார்க்க செல்வம் சாந்தியை முறைத்துவிட்டு “அப்படித்தானேமா சாந்தி சொன்ன?”

சாந்தியும் “ஆமா, எங்க அம்மாவீட்டுக்கு அனுப்பிச்சிருக்கேன்.” என்றாள். அப்டித்தான் செல்வத்திடமும் ஊரில் கிராமத்தில் விட்டிருப்பதாக கூறியிருந்தாள். அவனும் கிராமத்தில் கொஞ்சம் பெரிய ஆளுங்களும் கூட. போயி விசாரிக்க, இல்லை கூட்டிட்டு வரன்னு வெச்சுக்கிட்டா நம்ம மேல சந்தேகம் வரும்னு கொஞ்சம் அடக்கியே வாசிச்சான்.

இப்போது செல்வத்திற்கும் ஆதர்சிடம் கூறுவதற்கு அதுவே சரியெனபட்டது. கூறிவிட்டான். இருவரையும் பார்த்துவிட்டு ஆதர்ஷ் “ஓகே பைன்.. ஆமா அண்ணா எங்க போனான்? ரொம்ப வேலையிலேயே இருக்கானா? ஒரு மெசேஜ் ஒரு கால் இல்லை… என்கிட்ட சொல்லாம எங்க போனான்?” என அவன் வினவ

சாந்தி, பைரவி இருவருக்கும் ஒன்றுமே புரியாத நிலை தான். அவர்கள் பிரமை பிடித்தது போல நிற்க செல்வம் அவர்கள் பேசி ஏதாவது உளறிவிட போகிறார்கள் என்ற பயத்தில் அவனே “ஆதர்ஷை மாடிக்கு அழைத்து சென்று அவர்களுக்கு நடந்த விபத்து பற்றி கூறினான். அப்பாவும், சித்தியும் விபத்து நேர்ந்த போதே இறந்துவிட்டார்கள். ஆனந்திற்கு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டதாகவும் கூறினான்.” அவன் கூறிய பொய்யை அதுவும் தன் அண்ணன் சாவுக்கு காரணமானவன் வாயில் இருந்தே கேட்டவனுக்கு கோபம் தலைக்கேற அங்கே இருந்த பொருட்கள் அனைத்திலும் தன் கோபத்தை காட்டினான். முதன்முறை அம்மா அண்ணியின் மூலம் விஷயம் அறிந்த போதும் அவன் உணர்ச்சிகள் அடக்கப்பட்டுவிட்டன. ஆனால் இன்று அதற்கான அவசியம் இல்லை என தோன்றியது.

ஆதர்ஷ் கீழே வந்து சாந்தி, பைரவியிடம் “எப்போ அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு? எப்படி? என அனைத்து கேள்விகளையும் செல்வத்தை வைத்துக்கொண்டே கேட்டான். அவர்கள் பதில் மட்டும் கூறினர்.

“ஏன் என்கிட்ட சொல்லல? நான் ஊருக்கு தானே போயிருந்தேன். ஒரேடியா போய்ட்டேனு நினைச்சீங்களா? அப்பா சித்தி மேல இருந்த கோபத்துல நீங்களும் எல்லாரும் விலகி இருந்ததால நானும் ஒதுங்கி போய்ட்டேன். அதுக்காக எனக்கு குடும்பமே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டிங்களாமா? எனக்கு பாசம், உணர்ச்சி இதெல்லாம் எதுவுமே இல்லேனு நின்னாச்சுடீங்கள்ல? ” என அன்று தன் அம்மா தன்னிடம் சொன்னவற்றிற்கு தன் பதிலை கேள்வியாக அங்கு வைத்தான்.

சாந்தியிடம் திரும்பி “அண்ணனுக்கு அடிப்பட்டபோதே இத சொல்லிருக்கணும்ல? அப்டி சொல்லிருந்தா என் அண்ணனை எப்படியாவது காப்பாத்திருப்பேன்ல?” என்ற அவனின் கேள்விக்கு சாந்தியின் கண்ணீரே விடையாக வந்தது.” அவனின் ஆதங்கம் அவர்களுக்கும் புரிந்ததே.

மீண்டும் ஆதர்ஸ் “ஏன் எனக்கு சொல்லல?” என விடாமல் கேட்க

ஒரு கட்டத்துக்கு மேல் சாந்தி “இல்லை அவரு தான் சொல்லவேண்டாம்னு சொன்னாரு” என செல்வத்தை காட்டி சொல்ல பயந்துபோன செல்வம் அவள் ஏதேனும் உளறிக்கொட்டும் முன் “ஆமா ஆதர்ஷ், உனக்கு தெரிஞ்சு நீ அங்க இருந்துட்டு என்ன பண்ணமுடியும். அதுக்கு நாங்களே சரி பண்ணிட்டு உனக்கு விஷயம் சொல்லலாம்னு தான் அப்போதைக்கு சொல்லவேண்டாம்னு சொன்னேன்.”

ஆதர்ஷ் “அப்போ அவங்க இறந்தே இத்தனை மாசம் ஆகிடுச்சே. ஏன் அதுக்கப்புறம் என்கிட்ட சொல்லல?” மீண்டும் அவன் அதே கேள்வியை வினவ செல்வம் “இல்லை அதுவந்து, நீ கோபத்துல வந்து அதுக்கு காரணமான பிஸ்னஸ் எதிரிங்களை  ஏதாவது கொலை கீது  பண்ணிட்டு உள்ள போயிட்டா உன் வாழ்க்கையே பாதிச்சிடுமேனு தான் சொல்லல. அதோட நீ இங்க வந்து உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு தான் உங்க அம்மாவும் சொல்லவேண்டாம்னு சொன்னாங்க. அதான் சொல்லல …” என இழுக்க

ஆதர்ஸ் “ஒஓ… அப்டின்னா இதை எப்போவுமே எனக்கு தெரியாம பாத்துக்கப்போறிங்களா?, இல்லை என்கிட்ட இருந்து அந்த கொலைபண்ணவங்கள காப்பாத்தபோறிங்களா? பிஸ்னஸ்ல பிரச்சனை ஆக்சிடென்ட் பண்ணாங்கனு சொல்றிங்க? இவளோ நாளா அது யாருனு கண்டுபுடிக்கலையா? அப்புறம் எப்படி நான் அண்ணாவுக்கு அனுப்பிச்ச மெசேஜ் தெரிஞ்சது?” என அவன் கேள்வி மேல் கேள்விகேட்க செல்வம் சற்று மிரண்டு விட்டு இவனிடம் பொறுமையாக கூறினால் நாமே பயந்து உளறிவிடுவோம் என அஞ்சியவன் “என்ன ஆதர்ஷ் பேசுற நீ? நீ சொல்றதை பாத்தா என்னையே சந்தேகப்படுறமாதிரி இருக்கு? அவ்ளோ லாஸ்… இருந்தும் மகேந்திரன் அண்ணனோட உழைப்பு அது, வீணாககூடாதுனு நான் அவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். அதுக்கே அடுத்து பணம் இல்லை. அந்த பணத்தை புரட்டறதுக்கே நான் எவ்ளோ சிரமப்படுறேன்னு தெரியுமா? ஆனா நீ என்னாடான்னா என்னை சந்தேகப்பட்டு நிக்கவெச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க? இவளோ நாள் உன் குடும்பத்தை, தொழிலை பாத்துக்கிட்டதுக்கு நல்ல பட்டம் தான் குடுக்கற? உன் அண்ணா அப்பா எல்லாரும் உன்னைமாதிரி இல்லை. அவங்க மனுஷங்களை நம்புவாங்க..  உன் அண்ணன் உனக்கு அவளோ முக்கியம்ன்னா நீ தானே பாத்திருக்கணும். அவன் அவ்ளோ கேட்டும் இந்த தொழிலை பாத்துக்கமாட்டேனு ஊருக்கு நீ கிளம்பிப்போய்ட்டு இப்போ என்னமோ நான் தப்புபண்ண மாதிரி கேள்வி கேக்குற? ” என அவன் கத்த

 

ஆதர்ஷ் அமைதியாக குறுக்கும் நெடுக்கும் ஒரு 2 நிமிடம் நடந்தவன் இறுதியில் “கரெக்ட் தான் அங்கிள்… நீங்க சொன்னது 100% சரி… தப்பு என்மேல தான்… நானே இனி எல்லாத்தையும் இன்ச்சார்ஜ் எடுத்துக்கறேன்.” என செல்வத்திற்கு மயக்கம் வராத குறை தான்.

தான் ஒன்று  நினைத்துக்கொண்டு பேச அவன் அதை வேறுவிதமாக புரிந்துகொண்ட இங்கேயே இருக்கேன் என்றது செல்வம் எதிர்பார்க்காத ஒன்று.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 05

5 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அடுத்து வந்த தினங்களில் அக்சரா, ஆதர்ஷின் சண்டை, ஒருவர் மற்றவரை வீழ்த்த எண்ணி செய்வது, குறை கூறி விளையாடுவது என அது அனைத்தும் ஒரு போட்டியாகவே சென்றது. இருந்தும் இருவரும் வேலையில் கண்ணும்

வேந்தர் மரபு – 58வேந்தர் மரபு – 58

வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு 58 அடுத்த அத்தியாயம் உங்களுக்காக   Download Nulled WordPress ThemesDownload WordPress Themes FreeDownload WordPress Themes FreePremium WordPress Themes DownloadZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=download mobile firmwareDownload WordPress Themesudemy free download

உள்ளம் குழையுதடி கிளியே – Finalஉள்ளம் குழையுதடி கிளியே – Final

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்று ‘உள்ளம் குழையுதடி கிளியே’ இரண்டு அப்டேட்டுகளைத் தந்திருக்கிறேன். படித்துவிட்டு கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். உள்ளம் குழையுதடி கிளியே – final இந்தக் கதை எதிர்பாராத சில நிகழ்வுகளால் பதிவுகள் தாமதமாகத் தர