Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 30

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 30

30 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷின் குழப்பத்திற்கான பல பதில்களை தரப்போகும் அன்றைய நாள் அழகாய் விடிய 10 மணிக்கு மேல் மெதுவாக கண் விழித்த ஆதர்ஷ் முதல் பார்த்த காட்சி, பாடலை முணுமுணுத்துக்கொண்டே ஜாலியாக அனைத்து பொருட்களையும் ஒதுங்க வைத்துக்கொண்டு, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த அக்சரா தான். கண் திறந்ததும் காதலியின் தரிசனம் அதுவும் இத்தனை புன்னகை பூத்த முகத்தை காண ஆதர்ஷ் மனதில் வீட்டின் இந்த சூழல் மிகவும் பிடித்தது. சற்று நேரம் அவளை ரசித்துக்கொண்டே இருந்தவன் எழுந்து சென்று ரெப்பிரேஷ் ஆகிவிட்டு ஹால்க்கு வந்தான். அவனை கண்ட அக்சரா “ஹலோ பாஸ்” என

அவனும் “ம்ம்…  குட் மோர்னிங்..”

“பரவால்ல, குட் ஆப்ட்டர்நூன் தான் சொல்லணும்னு நினச்சேன். இப்போவே எழுந்திட்டீங்க.. நல்ல தூக்கமோ ” என கிண்டல் செய்ய

அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “ஓய்ய்ய்… இவளோ நேரம் தூக்கிட்டேன்னு கிண்டல் பண்றியா? அதுக்கு நானா காரணம், நேத்து நைட் பால்ல தூக்க மாத்திரை கலந்து குடுத்தேல? அப்போ தெரியலையா தூங்குவேன்னு…?” என

அக்சரா ஒரு நொடி விழி விரிக்க “ஓ.. அப்போ தெரியுமா?…”

“அப்போவே தெரியாது.. பட் எனக்கு கொஞ்ச நேரத்துல செம தூக்கம் வந்ததுல. அப்போ தெரிஞ்சது மேடம் நமக்கு செய்வினை வெச்சுட்டீங்கனு.”

அக்சரா நாக்கை கடித்துக்கொண்டு “பின்ன தூங்க சொன்னா கேக்கமாட்டேங்கிறீங்க. தலை வலியோட முழிச்சிருந்து நீங்க என்ன சாதிக்க போறீங்க? அதான் அப்டி பண்ணேன். அன்னைக்கே சொல்லிருக்கேன்ல, உங்க மைண்ட் என்கிட்ட கம்பளைண்ட் பண்ணுது. அத நீங்க டார்ச்சர் பண்றிங்கனு. அதுக்கு ஹெல்ப் பண்ண தான் இந்த மாதிரி அதிரடி நடவடிக்கை எல்லாம் எடுக்கவேண்டியது இருக்கு.” என்றாள்.

அவனும் உடன் சிரித்துவிட்டு “சரி என்ன காலங்காத்தாலையே போட்டு உருட்டிக்கிட்டு வீட்டை அலங்கோல படுத்திட்டு இருக்க?” என அவளை சீண்ட

அக்ஸா “யாரு? நானு வீட்டை அலங்கோலப்படுத்துறேனா? எல்லாம் உங்களால தான். நேத்து எல்லாத்தையும் இழுத்து போட்டு இந்த அழகுல வெச்சிருக்கீங்க. இதுல என்னை குறை சொல்றிங்களா. காலைல இருந்து  2மணி நேரமா கிளீன் பண்ணிட்டே இருக்கேன். இன்னும் முடியல. இனிமேல் கோபம் வந்ததுனு சொல்லி இப்பிடி திங்ஸ போட்டு உடைச்சு கலச்சு வெச்சீங்க …”

“என்னடி பண்ணுவ? மறுபடியும் தூக்கமாத்திரை குடுப்பியா?”

“அடடா, எனக்கு வேற வேலை இல்லை பாரு.. அது நேத்து ஒரு நாள் தான். இனிமேல் இப்டி நடந்தது, எல்லாத்தையும் அப்போவே உங்களையே கிளீன் பண்ண சொல்லுவேன் அண்ட் அதுவரைக்கும் சாப்பிட்றதுக்கு ஒன்னும் கிடையாது. உங்களுக்கு டெய்லியும் தூக்க மாத்திரை குடுத்த நீங்க ஜாலியா தூங்கலாம்னு நினைக்கிறீங்களா? பிச்சு…”

“ஹாஹாஹா.. பரவால்லை… பாத்துக்கலாம். ஆனா இதுக்கு மேல தூக்கமாத்திரை எல்லாம் தேவைப்படாது. எப்போவுமே என் மைண்ட ரிலாக்ஸா வெச்சுக்க நீ தான் கூடவே இருக்கியே..சரி எனக்கு பசிக்கிது.” என்றான்.

அக்சரா “அய்யையோ…நீங்க எந்திரிக்க மாட்டிங்கனு நான் எதுவுமே செய்யவேயில்லை.” என சீரிசாக கூற

ஆதர்ஷோ கூலாக “அதெல்லாம் என் பொண்டாட்டி என்னை பட்டினி போடமாட்டா… சோ நீ செஞ்சிருப்ப.. எனக்கு உன்னை பத்தி தெரியும். சாப்பாடு எடுத்து வெய் வரேன்.” என அவன் உறுதியாக கூறிவிட்டு செல்ல

அக்ஸா “பிராடு…” என முணுமுணுப்பதை கேட்டுக்கொண்டே புன்னகையுடன் நகர்ந்தான்.

அவளும் எடுத்துவைக்க சிறிது நேரத்தில் வந்தவன் உணவு உண்ண அமர்ந்தான். கைகளை தட்டிற்கு கொண்டு சென்றவன் ஒரு நொடி நிறுத்தி அக்ஸாவை மீண்டும் சந்தேகத்துடன் பார்க்க அவள் என்னவென்று வினவ

“நீ சாப்பிட்டியா?”

“இல்லை. பசிக்கவும் இல்லை. தனியா சாப்பிடவும் பிடிக்கல. சோ உங்களுக்காக வெயிட் பண்ணேன்.” என்றாள்.

ஆதர்ஷ் “ச்ச.. மிஸ் ஆகிடுச்சே.”

“என்னது?”

“இல்லை நீ முன்னாடியே சாப்பிட்டிருந்தா இதுல என்ன கலந்திருக்கேன்னு தெரிஞ்சிருக்கும். இப்போவும் நான் தான் டெஸ்ட் பண்ணனுமா?” என பொய் வருத்தம் கொள்ள

அக்சராவும் பொய்யாக முறைத்துவிட்டு “ரொம்ப பண்ணாதீங்க. என்னை பாத்தா எப்படி தெரியுது. என்மேல நம்பிக்கை இல்லாட்டி சாப்பிடவே வேண்டாம். இல்லை நானே முதல சாபிட்றேன். உயிரோட இருக்கேனானு பாத்துட்டு அப்புறம் சாப்பிடறீங்களா?” என

ஆதர்ஷ் “ஏய்.. ச்சி… ஏன் இப்டி உளறிட்டு இருக்க… நான் விளையாட்டுக்கு தான் கேட்டேன்னு உனக்கு தெரியும்ல. அப்புறம் எதுக்கு இந்த மாதிரி பதில் சொல்ற?.” என்றவன் அவன் கைகளை இறுக பற்றியவன் “நான் எல்லாரையும் விட ஏன் என்னை விட உன்ன தான் ரொம்ப நம்புறேன். நீ குடுத்தா தூக்க மாத்திரை என்ன விஷமாவே இருந்தாகூட நான் சாப்பிடுவேன். நீ எனக்காக தான் எதுனாலும் செய்வேன்னு அப்டி ஒரு நம்பிக்கை.. சோ இனிமேல் இப்டி பேசாத….” என அவன் கொஞ்சம் சீரியசாக வருத்தத்துடன் அவன் முடிக்க

அக்சராவுக்கு அவனின் அன்பில் நம்பிக்கையில் இருந்த தீவிரம் கண்டு சில நொடி திகைத்தாலும் அவனை சாதாரணமாக்க எண்ணி மர்ம புன்னகையுடன் “ஒஓ….அப்போ சார் விஷம் குடுத்தா கூட சாப்பிடுவாரா? அப்டினா சீக்கிரம் ஒரு பாயசத்தை போற்றவேண்டியதுதான்.” என சினிமா வில்லி பாணியில் கூறிக்கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்க்க அதன் அர்த்தம் புரிந்து ஆதர்ஷ் “அடிப்பாவி, ஒரு பேச்சுக்கு டயலாக் சொன்னா உண்மையாவே கொலை பண்ண பாயாசமா? ”

“அதென்ன சும்மா ஒரு பேச்சுக்குனு டயலாக்?”

“அதுவா… பொதுவா இப்டி எல்லாம் எமோஷனல பேசும் போது நீ அப்டி சொல்லாத. நீ இல்லாட்டி நான் இல்லை. அது இதுனு இன்னும் செண்டிமெண்ட் டயலாக் வந்து அப்டியே கொஞ்சம் ரொமான்ஸ்க்கு இழுத்துட்டு போகும்னு நினச்சேன்… ஆனா எங்க நமக்கு அவ்ளோதான் கொடுப்பினை… எனக்கு வாச்சது ஒரு தத்தியா இருக்கு. இனிமேல் உன்கிட்ட எல்லாம் ஒரு பேச்சுக்குகூட உயிரக்குடுத்து உன்னை காப்பாத்துவேன்னு சொல்லமாட்டேன். உடனே நீயே எந்தமாதிரி உயிர குடுப்பீங்கனு லிஸ்ட் எடுத்தாலும் எடுப்ப..” என

“ஹா ஹா ஹா… சூப்பர்.. ஆதவ்.. என்னை கரெக்டா புரிஞ்சிருக்கீங்க. இப்போ நீங்க அந்த டயலாக் சொன்னதும் எனக்கு இப்படித்தான் கேட்கத்தோணுச்சு… ” என அவள் சிரிக்க

அதை சிறிது ரசித்தவன் பின் இருவரும் பேசிக்கொண்டே மகிழ்ச்சியாக உணவருந்திவிட்டு எழுந்தனர்.

 

பின் அவள் வேலை செய்துகொண்டிருக்க அவளிடம் வந்தவன் “சாரா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

அக்ஸா “ம்ம்.. சொல்லுங்க…” என வேலை செய்துகொண்டே வினவ

“நீ என்ன நினைக்கிற?”

“எதை பத்தினு சொல்லாம இப்டி மொட்டையா கேட்டா என்ன சொல்றது?” என்றாள்.

“இல்லை… நான் யாரும் வேண்டாம், நான் தனியாவே இருக்கேன். இந்த மாதிரி எல்லாம் சொல்றேன்ல அதப்பத்தி..”

“இப்போ அத பத்தி என்ன நினைக்கணும்? ஏன் நினைக்கணும்..”

“அப்டில்லை… சாரா… பொதுவா இந்த மாதிரி ஒருத்தர் சொன்னதும் கேக்றவங்க ஒண்ணு அப்டி இருக்கக்கூடாதுனு அட்வைஸ் பண்ணுவாங்க.. இல்லை இப்டியே எவ்ளோ நாளைக்கு இருக்க முடியும்னு கேட்டு இம்சை பண்ணுவாங்க.. நாங்க அப்டி இல்லை. எங்களை கூடவா அப்டி நினைக்றேன்னு எமோஷனல் பிளாக் மைல் அதுவுமில்லாட்டி எங்களுக்காக கூட உன் பிடிவாதத்தை விடமாட்டியான்னு ஒரு காட்டாயத்துல கொண்டு வந்து நிறுத்துவாங்க… அந்த மாதிரி நீ என்கிட்ட எதுவும் கேக்கலையா? இல்லை அட்வைஸ் எதுவும் பண்ணலையான்னு கேக்கறேன்..  இல்லை சொன்னாலும் இவன் கேட்கமாட்டான் பிடிவாதம் தான் பிடிப்பானு நினைக்கிறியா?” என அவன் வினவ

அக்சரா மெலிதாக புன்னகைத்துக்கொண்டே “அப்படியெல்லாம் நினைக்கல அண்ட் அந்த மாதிரி எல்லாம் எமோஷனல் பிளாக் மைல் பண்ற ஐடியாவும் இல்லை.” என அவள் சாதாரணமாக கூறிவிட்டு மீண்டும் அடுப்பில் வேலையை பார்க்க அவளை முந்திக்கொண்டு சென்று அடுப்பை அணைத்தவன் அவளிடம் திரும்பி

“அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். எனக்கு பதில் சொல்லு.” என மீண்டும் முதலில் இருந்து கேட்க

அக்ஸா புரியாமல் “அதான் சொல்லிட்டேனே… என்ன பதில் சொல்லணும். என்ன கேள்வின்னு முதல தெளிவாக கேளுங்க?”

ஆதவ் “இல்லை உனக்கு அந்தமாதிரி என் மேல கோபம், இல்லை என்கிட்ட சொல்லி மாத்தணும்னு எண்ணம் இருக்கா? சொன்னா இவன் ஒத்துக்கமாட்டான்னு நீயா உனக்குள்ள நினைச்சுட்டு இருக்கியா? இல்லை இப்போ சொல்லவேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்னு ஏதாவது நினைச்சிருக்கியா?”

அக்சரா கைகளை கட்டிக்கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்தவள் மெல்லிய புன்னகையுடன் “நான் இல்லைனு சொல்லிட்டேன். நீங்க ஏன் திரும்ப திரும்ப கேக்கறீங்க? எல்லாரும் அப்டி பண்ராங்க கேள்வி கேக்கறாங்கனு தான் கோபம், டென்ஷன்னு சொன்னிங்க.. இப்போ நான் கேக்காமத்தானே இருக்கேன். ஆனா நீங்க ஏன் அதை பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்க? உங்களுக்கு இப்போ நான் அத பத்தி பேசணுமா? வேண்டாமா?”

ஆதவ் “உனக்கு என்ன தோணுதோ அத சொல்லு.. உன் மனசுல நீ இந்த விஷயத்தை பத்தி, அதுல என்னை பத்தி நீ என்ன நினைச்சிருக்கேன்னு எனக்கு தெரியணும். மத்தவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை. நீ என்ன நினைக்கிற? என்கிட்ட மறைக்காம சொல்லு… இல்லை ஏதாவது கேக்கனும்னா தயங்காம கேளு…”

அக்சரா “உங்க மனசுக்கு இப்போ எது சந்தோசம் தரும்னு சொல்லுங்க அதை பேசுறேன் .. அதைப்பத்தி கேக்கறேன்.”

அவன் புரியாமல் பார்க்க அவளே தொடர்ந்து “இப்போ உங்க கடந்த காலம், நடந்த குழப்பம், பிரச்சனை, வலி, யாரும் வேண்டாம்னு தனிமைல இருக்கறது இதை பத்தி பேசணும்னு நீங்க சொன்னா கண்டிப்பா இப்போ பேசலாம். இல்லை, எனக்கு அதப்பத்தி நினைச்சாலே சங்கடமா இருக்கு சாரா. சோ பேசவே வேண்டாம்னு சொன்னாலும் ஓகே. ஆனா தெளிவா முடிவு எடுத்து உங்களுக்கு என்ன வேணும்னு ஒரு பதில் சொல்லுங்க.”

 

ஆதர்ஷ் இந்த பதிலாகிய கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு இதற்கு விடையும் இல்லை. கடந்த கால வாழ்வை மறக்கவேண்டுமா நினைக்கவேண்டுமா என்ற குழப்பத்திலே இருக்க என்ன பதில் சொல்வது என அறியாமல் அமைதியாக சென்று அமர்ந்துகொண்டான்.

அவனருகில் வந்த அமர்ந்தவளை பார்த்து “நீ சொல்லு, உனக்கு என்ன தோணுது?”

அக்சரா “உங்க மனசை நிம்மதியாக்குற விஷயத்தை மட்டும் தரணும்னு தோணுது. ஆனா உங்களுக்கு எது நிம்மதி சந்தோசம் தரும்னு நீங்க தானே முடிவு பண்ணனும். அதான் உங்ககிட்டேயே கேக்கறேன்.” என தெளிவாக கூற

ஆதர்ஷ் “எனக்கே தெரில சாரா.”

அக்சரா அவனை எதுவும் கூறாமல் பார்த்துக்கொண்டிருக்க அவனே தொடர்ந்து “எப்போவுமே எனக்குள்ள இந்த குழப்பம் இருக்கும். இப்போவும் இருக்கு. நடந்த பிரச்னை எல்லாம் நினச்சா இனி யாரும் வேண்டாம்னு தோணும் அப்டித்தான் இருக்கேன். ஆனா முழுசா விலகி போகணும்னு யாரையும் பாக்கவே கூடாதுனு நினைக்கல. எல்லாரும் கண்ணு முன்னாடியாவது இருக்கணும், அவங்க சந்தோசத்தை பாக்கணும்னு மனசுல எப்போவும் ஒரு எண்ணம் இருந்திட்டே இருக்கும். என்னைக்குமே அதுல என்னால மனசார  இன்வோல்வ் ஆக முடிஞ்சதில்லை… ஆனா இப்போ ஆப்ஷன் கொடுக்கறாங்க…இருந்தா அப்டி பாசமா ஒண்ணா இருக்கணும். இல்லைன்னா விட்டுட்டு போன்னு எல்லாரும் சொல்லும்போது நான் அந்த முடிவை தானே எடுக்க முடியும்.” என அவன் விட்டெறியாக பேச

 

அக்சரா “ஓஒஹ்ஹ.. அப்போ அவங்க எல்லாரும் சண்டை போட்டாங்க, நேத்து அப்டி கோபமா கேட்டாங்கன்னு தான் நீங்க யாரும் வேண்டாம்னு முடிவு பண்ணிங்களா? நீங்களா யோசிக்கல இல்லையா?”

 

ஆதர்ஷ் “அவங்க அப்படி கம்பெல் பண்ணதால தான் நான் இப்டி யோசிச்சேன்னு சொல்றேன்.”

 

அக்சரா “அவங்க அப்டி என்ன தப்பு பண்ணாங்க? கம்பெல் பண்ணாங்க??” என சாதாரணமாக கேட்க

 

ஆதர்ஷ் “என்னை சாரா புதுசா கேக்கற? உனக்கு தெரியும் தானே. உங்க எல்லாருக்குமே தெரியும்ல எனக்கு யாரும் வேண்டாம்னு தான் நான் இருக்கேன். என்னால பேமிலி லைப்ல சாதாரணமா இன்வோல்வ் ஆகமுடிலேன்னு சொல்லிட்டே தானே இருக்கேன். என்கிட்ட இருந்து நான் அவங்க வீட்டு பையன்னு மறைச்சு யூஸ் பண்ணிருக்காங்க. தனியா என்கிட்ட கூட சொல்லாம அத்தனை பேர் முன்னாடி இவன் இந்த வீட்டு வாரிசுன்னு சொல்லி என்னை அவங்ககூட தக்கவெச்சுக்க பாக்குறாங்க. இது வாசு விக்ரம், பிரியா சஞ்சு, ஏன் ரஞ்சித் சிந்து எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. ஒருத்தருக்கு கூடவா என் உணர்ச்சிக்கு ஒரு பெர்ஸன்ட் கூட மதிப்பு குடுக்க தோணல. என்னை எப்படி கார்னெர் பண்ணி கூட வெக்கணும்னு பிளான் பண்ராங்க. கேட்டா அதுக்கு பேரு சர்ப்ரைஸ். ம்ம்ம்? இவ்ளோவும் தெரிஞ்சும் அவங்க என்ன தப்பு பண்ணாங்க, என்ன கம்பெல் பண்ணாங்கன்னு சாதாரணமா கேக்கற நீ ?” என அவன் சற்று கட்டமாகவே எழுந்துவிட

 

அக்சரா “ஆதவ் ஒரு நிமிஷம், இப்போ என்ன பேசிட்டு இருக்கோம். நீங்க பாட்டுக்கு கத்திட்டு எழுந்து போறீங்க?” என வினவ

“இல்லை சாரா நீ இப்டி கேட்பேன்னு நினைக்கல.. இது இப்டியே போச்சுன்னா உன்கூட சண்டைல தான் போயி முடியும். எனக்கு அது  பிடிக்காது. விடு” என மீண்டும் நகர

அக்சரா “எனக்கும் இப்டி பேசிட்டு இருக்கும் போது பாதில எழுந்து போனா பிடிக்காது..” என அழுத்தமாக ஆனால் குரலை உயர்த்தாமல் அவள் கூற திரும்பி பார்த்தவன்

அக்சரா தொடர்ந்து  “நான் இந்த விஷயம் ஆரம்பிக்காம தான் இருந்தேன், நீங்க தான் நீ என்னை நினைக்றேன்னு தெரியணும் சாரா சொல்லு சொல்லு ஆரம்பிச்சிங்க. இப்டி பாதில நீங்க கத்திட்டு போறதுக்குத்தானா கேட்டீங்க? மத்தவங்க உங்க உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கலனு சொல்றிங்க… முதல என் உணர்ச்சிக்கு நீங்க மதிப்பு குடுக்கறீங்களா? நீங்களா கேட்டு ஆரம்பிச்ச விஷயத்தை இப்டி அரைகுறையா விட்டுட்டு போறது அதுவும் என்கிட்ட கத்திட்டு விட்டுட்டு போற அளவுக்கு இங்க எதுவும் பெருசா இல்லை. அதுவும் இத ஆரம்பிச்சா சண்டை தான் வரும்னு நீங்க எப்படி முன்னாடியே முடிவு பண்ணீங்க? பேசிட்டு தானே இருக்கோம்.. அதுக்குள்ள என்ன? இல்லை இனி லைப் முழுக்க இப்டி நான் கேள்வி கேட்டாலே சண்டை வரும்னு நீங்களா முடிவு பண்ணிட்டு எதைப்பதியும் பேசாம இப்டியே போய்டுவீங்களா? எதுனால அப்டி நான் கேட்டேன்னு சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு கூட குடுக்காம என்னோட முடிவு நீங்க எடுக்கறதுக்கு எதுக்கு தேவையில்லாம என்கிட்ட என்ன நினைக்கிறன்னு கேட்டீங்க?  ” என அவள் நேருக்கு நேர் பார்த்து வினவ அவனுக்கு தான் செய்தது தவறு என புரிய எதுவும் கூறாமல் மீண்டும் அமைதியாக வந்து அமர்ந்தான்.

 

ஆதர்ஷ் “சரி சொல்லு..”

அவள் எதுவும் கூறாமல் இருக்க அவளின் நியாயமான கோபம் அவனுக்கு புரிந்ததால் அவனே “சாரா, நான் பண்ணது தப்பு தான். பாதில எழுந்து போயிருக்கக்கூடாது. ஆனா என்னால முடில. உன்கூட என்னால சண்டை போட்டுட்டு நீயும் அவங்கள மாதிரி ஏதாவது சொன்னா நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு எனக்கு தெரில. அதான் முன்னாடியே அது வேண்டாம்னு எழுந்து போக பாத்தேன். மத்தபடி வேற எதுவும் இல்லை.” என தன்னிலை விளக்கம் தர

அக்சரா “அடுத்தவங்க முடிவு இப்படித்தான் இருக்கும்னு யோசிக்க முடிஞ்ச நீங்க இந்த பேச்ச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இது எப்படி போகும்னு  யோசிச்சிருக்கணும்ல.  அப்போவே விட்டிருக்கவேண்டியதுதானே.?” என அவன் அமைதியாக இருக்க அவனை மேலும் வாட்டாமல் “சரி இப்போ உங்க பிரச்சனை என்ன இதை பத்தி பேசி நான் என்ன நினைக்றேன்னு தெரியணும். ஆனா நமக்குள்ள சண்டை வரக்கூடாது அதுதானே. fine இப்போ இன்னைக்கே இதப்பத்தி பேசுவோம். உங்களுக்கு என்ன தோணுது, நீங்க பாத்த எல்லா விசயத்துல இருந்த குழப்பம் என்ன, பிரச்னை என்ன எல்லாமே சொல்லுங்க, அத நான் எப்படி என்னோட கண்ணோட்டத்துல பாக்கறேன் இல்லை மத்தவங்க அத எப்படி பாத்திருப்பாங்கனு நினைக்றேன்னு எல்லாமே நானும் சொல்றேன் நாம பேசி ஆர்கியு பண்ணி ஒரு முடிவுக்கு வரலாம். அதுல மத்தவங்க தப்பு பண்ணிருக்கலாம், இல்லை நீங்க தப்பு பண்ணிருக்கலாம், அது எல்லாத்துக்கும் வேற காரணம் இருக்கலாம், எங்க தப்பு நடந்திருக்கும்னு யோசிக்கலாம், தப்பான விஷயத்தை சரி பண்ண பாக்கலாம், இல்லை சரி பண்ணமுடியாதுனா அத ஏத்துக்கலாம். ஆனா அது எல்லாமே மனசார நடக்கணும். அதுவும் தெளிவான உங்க முடிவா தான் இருக்கனும். இத்தனையும் நாம பேசி முடிக்கறவரைக்கும் சண்டை போட்டாலும், என்னை நீங்க திட்டறிங்க, குறை சொல்றிங்க, நான் உங்கள தப்பு சொன்னாலும் எல்லாமே இந்த விஷயத்துக்காக தான்.. இந்த விஷயம் பேசி முடிச்சதும் நாம அத மறந்திடலாம். நான் கண்டிப்பா அப்போ நீங்க பேசுன விஷயத்தை வெச்சு பின்னாடி சண்டை போடமாட்டேன். விலகி போகமாட்டேன். என்னை ஹர்ட் பண்ணிடுவீங்களோனு நீங்க தயங்கி தயங்கி எதுவும் உங்க உணர்ச்சிகளை மறச்சு கண்ட்ரோல் பண்ணவேண்டாம். நீங்க கத்துனாலும் நான் அத புரிஞ்சுப்பேன். சோ நீங்களும் நீயும் இப்டி சொலிட்டேயே? நீகூட இப்டி நினைச்சிட்டேயேனு சொல்லிட்டு இருக்கக்கூடாது. இந்த விஷயம் நாம பேசி முடிச்சதும் நீங்க முடிவு எடுத்ததும் அதுல இருந்து வெளில வந்திடணும். சரியா?” என அவனுக்கு கரெக்ட் இத இழுத்துகிட்டே இப்டி யார்கிட்டேயும் சொல்லாம கொழப்பத்துல இருக்கறதுக்கு பேசி முடிவு பண்ணிடலாம்னு யோசித்தவன் அதுவே சரியென ஒப்புக்கொண்டான்.

அக்சராவிற்கு அவன் இத்தனை பொறுமையாக பேச ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். அதனால் இதை பயன்படுத்தி அவனுக்கு நடந்த உண்மைகளை அவனது அப்பா அம்மா சித்தி இவர்கள் மீது தவறில்லை என காட்டினாலே இப்போதைக்கு போதும் என்று எண்ணினாள். அவன் தான் நம்பிய யாரும் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் தவறு செய்யவில்லை. அவர்களின் சூழ்நிலை அப்டி அமைந்திருக்கிறது என காட்டினாள் போதும். பின் முடிவு அவனிடத்தில் தான். இருந்தாலும் அவனது அம்மா உட்பட அனைவரும் பயந்தபடி அவன் கோபத்தில்  தவறு செய்தவர்களை அவனின் குடும்பத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களை ஏதாவது செய்வேன் என இவன் பிரச்னையில் மாட்டிகொள்வானோ எனவும் யோசித்தாள் அவன் உண்மையை புரிந்துகொண்டு  இனிமேல் இருக்கும் உறவுகளையும், வாழப்போகும் வாழ்க்கையையும் மட்டுமாவது நிம்மதியாக தெளிவாக வாழட்டும் என்று முடிவுடன் அவனோட பேச ஆரம்பித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27

27 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் லண்டன் வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. அன்று காலையில் இருந்து ஆதர்ஷ் மனம் ஏனோ தவிப்புடன் இருக்க இவனுக்கும் வேலை என்பதால் வீட்டில் யாருடனும் பேசமுடியவில்லை. அண்ணனிடம் இருந்து அவ்வப்போது மெசேஜ் வந்தாலும், ஏனோ

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 2பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 2

“ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையைக் கூறுவாயா? ஏன் நாகசுந்தரம்! அதுதானே உன்