Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28

28 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷ் பற்றி அனைத்தும் கூற அதை கேட்ட அனைவரின் மனமும் கனக்க அமைதியாக இருந்தனர். அக்சரா பெருமூச்சுடன் “சரிங்க அங்கிள் நான் கிளம்பறேன்.” என அவள் சாதாரணமாக கூறினாள்.

அனைவரும் தங்களுக்குள் பார்த்துக்கொள்ள ஜெயேந்திரன் “என்னமா அக்சரா எதுவுமே சொல்லமாட்டேன்கிற.. நாங்க பண்ணது தப்புனு நினைக்கிறியா? நீ அவ்ளோதூரம் சொல்லியும் நான் கேக்கல தான். ஆனா இது அவன் நல்லதுக்குன்னு நினச்சு தான் பண்ணேன்.. நீயும் கோபப்படுறியா?”

வாசு “இதுல நம்ம தப்பு என்ன இருக்கு அங்கிள்… அவனுக்காக யோசிக்காதவங்கள நினச்சு பீல் பண்றான். அவனை நினச்சு பீல் பண்ற நம்மளுக்கு அவன் மதிப்பு குடுக்கறானா?”

விக்ரம் “அதானே, நம்மகிட்ட இவளோ கத்திட்டு போறானே அங்க கத்திருக்க வேண்டியது தானே. தேவைப்படுற நேரத்துல எல்லாம் இவன் அமைதியா இருந்திட்டு வந்துட்டான் பெரிய இவன் மாதிரி. இங்க எல்லாரையும் ஒதுக்கி வெப்போம்னு சொன்னா எப்படி?”

வாசு “அவங்க அம்மா அண்ணி அன்னைக்கு சொன்னாலும் அதுக்கப்புறம் பேசணும்னு ஆசைப்படறாங்க. இவன் அவங்களுக்கு வேணும்ங்கிற பாதுகாப்பு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டான். அப்போ மட்டும் பாசம் இருக்குமாம். ஆனா பேசமாட்டானாம். அவன் பிடிவாதம் அவனையே அழிச்சிடும். இப்போ இருக்கறமாதிரியே தனியா அவனே சந்தோசமா இருக்கட்டும். அவனும் அதேதானே கேட்டான். யாரும் வேண்டாம்னு. இந்த தடவ யாரும் இறங்கிப்போகக்கூடாது. அவனா புரிஞ்சுகிட்டு வரட்டும்..”

 

அக்சரா “முடிச்சிட்டீங்களா?, இப்போ என்ன சொல்லவரீங்க? ஆதவ் மேல தான் தப்பு எல்லாம். அவரு கோபபடறது, யார்கூடவும் அட்டச்மெண்ட் இல்லாம இருக்கறது, யார்மேலவும் பாசமே வெக்கலன்னு சொல்றது. இதெல்லாம் தப்பு, அவரோட எல்லா பிரச்னைக்கும் அவரு தான் காரணம் இல்லையா?”

விக்ரம், “பின்ன நாங்களா காரணம்?”

அக்சரா “கண்டிப்பா”

அனைவரும் அவளை புரியாமல் பார்க்க “என்ன சொல்ற நீ, அவனுக்கு நல்லது நினச்சு பண்ண நாங்க தப்பானவங்களா?” என விக்ரம் வினவ

அக்ஸா, “அவருக்கு நல்லதுன்னு நினைச்சீங்க.. அது அவரால ஏத்துக்க முடியுமா என்னனு ஏன் யாருமே யோசிக்கல?”

ரஞ்சித் “அக்ஸா, ஆதர்ஷ்க்கு பெரிய இழப்பு தான்..அதுக்காக நடந்ததை நினைச்சிட்டே, இருக்கற வாழ்க்கையை நரகமாக்கிக்க கூடாதில்லை?”

பிரியா “பிரச்சனை வலி எல்லாருக்குமே தான் இருக்கு. ஆதர்ஷ் அண்ணாவுக்கு நடந்த எல்லாமே ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. ஆனா அதுக்காக இனி யார்கூடவும் எந்த உறவும் கூடாதுன்னா எப்படி? அப்டியே அவரு இத்தனை வருஷம் இருந்ததால தான் நமக்காக யோசிக்கிறவங்கள கூட அவரால மனசார ஏத்துக்கமுடியாது நிலைமையில இருக்காரு ”

சஞ்சனா “என்ன இருந்தாலும், இவளோ கோபப்பட்டு யாரும் வேண்டாம்னு எப்போவுமே இருக்கறது லைப்க்கு ஒத்து வராது..”

 

அக்சரா “எனக்கு நீங்க சொல்ற லாஜிக்கே புரியல. தப்பு பண்ணவங்க மத்தவங்க, ஆனா இவன் எங்ககிட்ட இருந்து ஒதுங்கி இருக்கான்னு சொல்றிங்க.. அவரோட முக்கியமான பிரச்சனை என்ன? அவரோட உணர்ச்சியை புரிஞ்சுக்காம மத்தவங்க அவர்மேல் அவங்க எண்ணத்தை போட்டு திணிக்கறாங்கங்கிறதுதான், அப்டி இருக்க இப்போ இங்க உங்ககிட்டேயும் அதுதானே நடக்கிது. நாங்க உன்கிட்ட பாசமா இருக்கோம். நாங்க சொல்றமாதிரி நீயும் மாறுன்னு அவரை உள்ள இழுக்கபாக்கிறிங்க. இப்போவும் அவரோட மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரில. கேட்கவும் இல்ல. அது சரியா?”

உறவு வேண்டாம்னு சொன்னாலும்  நீங்க எல்லாரும் உறவோட ஒண்ணா இருக்கறத அவரு தப்புன்னு சொல்றாரா?, யாருமே அப்டி இருக்காதீங்க, அது வேஸ்ட் தப்புனு எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணிட்டு இருக்காரா என்ன? இல்லையே.. அவருக்கு நடந்த விஷயங்கள், அவரோட இழப்புகளை யோசிச்சு அவரு விலகி இருக்காரு. அது உங்களுக்கு தப்பா தெரியுது..

உங்க எல்லார்கிட்டயும் அவரு இதுக்கு முன்னாடி ஒரு மாதிரி இப்போ ஒரு மாதிரின்னு எல்லாம் இல்லை. ஆரம்பத்துல இருந்து அப்டித்தான் பாக்கறீங்க. ஆனா அவரு ரொம்ப ஜாலி டைப்னு கேள்விபட்டிருக்கிங்க? அதுக்கே நீங்க அவர்கிட்ட இப்டி இருக்கனும் அப்டி பேசணும், பழகனும்னு எதிர்பாக்கிறிங்க.. அது இல்லேன்னதும் இப்போ இவளோ கோபப்படறீங்க?

அவரு கொஞ்ச வருஷம்னாலும் மொத்த குடும்பத்தோட அன்பையும் முழுசா பாத்துட்டு திடிர்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா எப்படி இருக்கும். அவரு அது திரும்ப வேணும்னு எதிர்பார்த்தது, அது கிடைக்காம போனதால அவரு கோபப்படறது மட்டும் தப்பு இல்லையா? இது எந்த வகைல நியாயம்.” என பதில் கேள்வி கேட்க

மரகதம் “அந்த அம்மா அப்பா பண்ண தப்புக்கு இந்த அப்பா அம்மாவ தண்டிக்கறதுல என்ன நியாயம் இருக்கு.?”

அக்சரா “அவரோட அம்மா அப்பா சித்தி பண்ண தப்புக்கு பதில் கூட சொல்லாம இவங்க 2பேரும் அந்த குடும்பத்தை விலக்கி வெச்சு ஆதவ்வ தண்டிச்சது மட்டும் நியாயமா?..பெரியவங்க பண்ண தப்புக்கு எதுக்கு இவருக்கு தண்டனை குடுத்தாங்க?”

 

வாசு “எங்களை விடு.. ஆனா நீ, கோபத்துல என்ன வேணாலும் பேசலாமா? உன் லவ் பண்ணது தப்புங்கிற மாதிரி சொல்லிட்டு போறான்? அவனோட குணம் எப்படி மாறுதுன்னு உனக்கு புரிலையா?”

அக்ஸா ” அவரு தெளிவா தான் அண்ணா சொன்னாரு. சாராவை லவ் பண்ணத இப்போ உங்ககிட்ட சொன்னதுதான் பிரச்னையான்னு தான் கேட்டாரு. லவ் பண்ணதே பிரச்சனைனு சொல்லல. அவ்ளோ கோபத்துலையும் அவரோட காதலையும் அவரு தூக்கி எறியல. அவரோட நிதானத்தையும் அவரு இழக்கல.”

வாசு “சரி மா, நீ சொல்ற எல்லாமே ஏத்துக்கறோம்.அதுக்காக அவன இப்டியே விட்ரமுடியுமா? இதுக்கான முடிவு தான் என்ன?”

அக்சரா “அதுக்கான பதில் அவர்கிட்ட இருந்து தான் கிடைக்கும். அது அவரு தான் தேடணும். அவரு தான் முடிவு பண்ணனும். அப்போதான் அவரு மனசார எல்லாரையும் ஏத்துக்க முடியும். அதில்லாம உங்களுக்காக, எனக்காகன்னு அவரை கம்பெல் பண்ணி அந்த உறவுல இணைச்சாலும் அது ரொம்ப காலம் நீடிக்காது. மனசுல ஒரு ஓரத்துல எப்போவுமே ஒரு உறுத்தல் இருந்திட்டே இருக்கும்.” என கூற அனைவரும் எதுவும் சொல்லாமல் இருக்க

ரஞ்சித் “இப்போ என்ன பண்றது?”

அக்சரா பெருமூச்சுடன் “நான் போறேன்… கூட இருக்கேன்… ஆனா எதுவும் கேக்கறது, கூட்டிட்டு வரது எல்லாம் வேண்டாம். அவரை கட்டாயப்படுத்துற அதே தப்ப திரும்பவும் செய்யவேண்டாம்னு நினைக்கிறேன்.”

பிரியா “ஆனா அவரு ரொம்ப கோபமா இருக்காறே?”

அக்ஸா, “எவ்ளோ நேரத்துக்கு.. இல்லை எவ்ளோ நாளைக்கு அப்டியே இருக்கமுடியும்.. பாத்துக்கலாம். அந்த கோபத்துக்கு காரணம் இருக்கு. அதனால அதுக்கான தெளிவான முடிவு அவரு எடுத்துட்டா புரிஞ்சுப்பாரு.”

தனம் அவள் அருகே வந்து “நீ சொல்றதுதான் சரிதான். எல்லாரையும் பாத்தா மறுபடியும் அவனுக்கு கோபம் தான் அதிகமாகும். நீ மட்டும் போ” என அனுப்பி வைத்தார்.

 

அக்சராவை மூர்த்தியுடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்ததும்  “அம்மாடி ஆதர்ஷ் தம்பி பயங்கர கோபமா ஆனா ரொம்ப வருத்தத்தோடு போச்சு மா. நான் கூட வரவானு கேட்டதுக்கு “எதுக்கு பாதில விட்டுட்டு போறதுக்கா? யாருமே தேவையில்லை. என்னை தனியா விடுங்க. இனிமேல் யாராவது என்னை தேடி வந்திங்க என்னை மிருகமா தான் பாப்பிங்க” ன்னு சொல்லிட்டு போயிடிச்சு. ”

இதை கேட்ட அக்சரா பெருமூச்சுடன் “சீக்கிரம் எல்லாமே சரியாகும்னு நம்புவோம் அண்ணா.” என கூறிவிட்டு இறங்க போக மூர்த்தி ” நான் வேணும்னா கூட வரவாம்மா? தம்பி ரொம்ப கோபமா இருக்கே..” என இழுக்க

அவரை கண்டு மெலிதாக புன்னகைத்த அக்சரா “என்னை கோபத்தை காட்டி அடிப்பாருனு நினைக்கிறீங்களா?… கோபத்தை காட்டலாம். ஆனா அடிக்கறதுக்கு அவருக்கே மனசு வராது அண்ணா. அவரு என்னை கஷ்டப்படுத்த மாட்டாரு. நீங்க கவலைப்படாம போயி தூங்குங்க.” என அவள் சென்றுவிட மூர்த்தியும் தன் வீட்டிற்கு வந்து மனைவி மகாவிடம் நடந்ததை கூறிவிட்டு இருந்தும் மனசு ஒரே சங்கடமாவே இருக்கு என உணவை விடுத்து சற்று படுத்திருக்கிறேன் என சென்றுவிட்டார்.

 

வீட்டினுள் நுழைந்த அக்சராவை வரவேற்றது முதலில் அலங்கோலமான நிலையில் இருந்த பொருட்கள் தான். இவளை பார்த்த ஆதவ் முதலில் அருகில் இருந்த டேபிளை ஓங்கி குத்திவிட அக்சராவின்  ஒரு நொடி அதிர்ந்த நிலையை கண்டவன் அதன்பின் எதுவும் செய்யாமல் ஆனால் ஒன்றும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்று நடக்கத்துவங்கினான்.

 

அக்சரா விரிசல் கொண்ட அந்த மேஜையை பார்த்தவள் அவனை உள்ளே சென்று பார்க்க அவன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த காட்சி இவை அனைத்திலும் அவனின் முழு கோபமும் வார்த்தைகளின்றி அவளுக்கு  விளங்கின. இருந்தும் அவள் எதுவும் கூறாமல் அங்கே இருந்த பொருட்களை எடுத்துவைக்க சென்றுவிட்டாள்.

 

ஆதர்ஷ் ‘அவள் ஏதேனும் கேட்பாள் தன்னிடம் பேசுவாள் என நினைத்த ஆதவ் எங்கே இருந்த கோபத்தில் அவளை கத்திவிடுவோமோ என தயங்கியே உள்ளே வந்துவிட்டான். ஆனால் அவள் அதுபோல் எதுவும் செய்யாமல் தன்னை வந்து பார்த்து மட்டும் விட்டுவிட்டு அவள் சென்றுவிட சிறிது நேரம் கோபத்துடன் நடந்துகொண்டே இருந்தவன் ஹாலிற்கு வந்தான். அவளிடம் ” உனக்கும் எல்லா உண்மையும் முன்னாடியே தெரியுமா? சர்ப்ரைஸ்ன்னு இன்னைக்கு அவங்க பங்க்ஸன்ல சொல்லப்போறாங்கங்கிற விஷயம் தெரியுமா?”

என வினவ

 

அவளும் நிதானமாக “உங்களுக்கு நான் கால் பண்ணேன்ல. பங்க்சன் ஆரம்பிக்கிறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி.. அப்போதான் தெரியும். தெரிஞ்சதும் உங்ககிட்ட சொல்லத்தான் கூப்பிட்டேன். ஆனா நீங்க என்னைக்கும் இல்லாம இன்னைக்கு குழந்தைங்களோட விளையாடிட்டு சொல்லவரத கூட கேக்கல.” என கூற ஆதர்ஷ் இது விதியின் விளையாட்டா இல்லை தானே தன் வாழ்வில் அறியாமல் விளையாடிவிட்டேனோ என எண்ணியவன் எதுவும் கூறாமல் அப்டியே சோபாவில் வற்றிப்போயி அமர்ந்துவிட அவனை காணவே அக்சராவிற்கு பாவமாக இருந்தது.

 

அந்த நேரம் மகா வந்து அழைக்க அவளிடம் சென்ற அக்சரா “சொல்லுங்ககா.”

மகா “இல்லை அக்சரா, இரண்டுபேரும் மட்டும் தானே சாப்பாடு எடுத்திட்டு வந்தேன்.” என அவள் உள்ளே பார்க்க சிதைந்த பொருட்களை பார்க்க அவளை புரிந்துகொண்ட அக்சரா மெலிதாக புன்னகைத்துவிட்டு “குடுங்க கா,ரொம்ப தேங்க்ஸ். காலைல நானே சமைச்சுக்கறேன். என்றவள் அவள் கேட்காமலே அவரும் உள்ள உக்காந்து தான் இருக்காரு. பேசிட்டு இருக்கோம்கா. அப்புறமா சாப்பிட்டுக்கறோம்.. நீங்க போயி தூங்குங்க. ” என கூறியதை கேட்டு அவளை புரிந்துகொண்ட மகாவும் அமைதியாக சென்று மூர்த்தியிடம் “பாருங்க, நீங்க கவலைப்படாதீங்க. அக்சரா பாத்துக்குவா. பேசிட்டு தான் இருக்கோம்னு அவளே சொல்லிட்டா. நீங்க பயப்படுற அளவுக்கு சண்டை எல்லாம் இல்லை. நிம்மதியா தூங்குங்க என நடந்தவற்றை கூறினாள்.”

 

இங்கே மகா சென்று பின் அவள் மறைந்ததும் கதவை அக்சரா கதவை தாளிட அவளை கேள்வியாக நோக்கிய ஆதர்ஷ்க்கு “வீடு இப்டி இருந்தா பாக்றவங்க எல்லாரும் ஒரு மாதிரி கேள்வி கேக்கத்தான் செய்வாங்க. ஏதோ பிரச்சனைன்னு நினைப்பாங்க தான். அதுவும் உங்களோட இந்த கோபம் என சிதைந்த பொருட்களை காட்டி இதுலையே நல்லா தெரியுதே..அதான் அவங்க பயந்து போயி வந்து பாத்துட்டு போறாங்க.. ஆனா அவங்க பயப்படுற அளவுக்கு நீங்க மோசமில்லை. மத்தவங்ககிட்ட உங்களை விட்டுகுடுக்க எனக்கு விருப்பம் இல்லை அதான் டோர் லாக்” என புன்னகையுடன் அவனருகில் வந்து அமர்ந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 13கபாடபுரம் – 13

13. நெய்தற்பண்   புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு – தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து – யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும்.

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதிபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி

ராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 25ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 25

25 – மனதை மாற்றிவிட்டாய் அவரு லைப்ல என்ன மறக்கவே முடியாதமாதிரி ஒன்னு பண்ணப்போறேன்” என அவள் சொல்லி கண்ணடித்து சிரித்தாள். “சரி பசிக்கிது, வாங்க எல்லாரும் சாப்பிடலாம். நான் போயி எடுத்துவெக்கிறேன் என திவி செல்ல ஆதி மனதில் இப்போ