Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22

22 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

மூவரும் கோவிலுக்கு மகிழ்வுடன் செல்ல வண்டியில் இருந்து இறங்கி நடந்து வர ஜெயேந்திரன், தனம் அனைவரும் ஆதர்ஷ் அக்சரா குழந்தை என அவர்கள் ஒரு குடும்பமாகவே வருவதை கண்டு பூரித்து போயினர். அனைவரும் இதையே எண்ணினர்.

வந்ததும் அனைவரிடமும் சஞ்சீவ் பேசியதை கூறி மகிழ அடுத்து விக்ரம், சஞ்சனா நிச்சயம் நடந்தேறியது. மதிய உணவிற்கு பின் வீட்டிற்கு அனைவரும் கிளம்பினர். மாலை ஆதர்ஷ்க்கு விழா நடத்த தீர்மானித்திருந்தனர். வீட்டின் தோட்டத்தில் பந்தல் போட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக அதுவும் அதிகமாக இருக்க ஆதர்ஷ் ஒரு நிமிடம் தயங்க ஜெயேந்திரனிடம் “எதுக்கு பா இவளோ க்ராண்ட்டா பண்றீங்க? ஜஸ்ட் கம்பெனில யாரு ஒர்க் பண்ணது, யாரு இப்போ இன்ச்சார்ஜ்ன்னு சொல்றதுக்கு எதுக்கு இவளோ தூரம் ஸ்பென்ட் பண்ணனும். அதுவும் கமிட்டி மெம்பெர்ஸ் தானே வராதா சொல்லிருக்காங்க. என்ன ஒரு 15 20 பேர் ஆனா ஏற்பாடு எல்லாம் பாத்தா ரொம்ப அதிகமா இருக்கு…” என

ஜெயேந்திரன் விஷயத்தை கூற வாயெடுக்கும் முன் விக்ரம், வாசு இருவரும் அவரை தடுத்து “அதில்ல ஆதர்ஷ். மோர்னிங் எங்கேஜ்மெண்ட் ரிலேட்டிவ்ஸ், பேமிலிக்கு பழக்கமானவங்க, பிசினஸ் பிரண்ட்ஸ் இப்டி தான் எல்லாரும் வந்தாங்க. நிறையா பேர் இருந்ததால யார்கூடவும் டைம் ஸ்பென்ட் பண்ணமுடில.. சோ இப்போ ரொம்ப கிளோஸ இருக்றவங்கள கூப்பிட்டு அப்டியே எங்கேஜ்மெண்ட்க்கு ஒரு செலிப்ரேஷன் வெக்கலாம்னு.. என் பிரண்ட்ஸ், சஞ்சு பிரண்ட்ஸ் எல்லாம் வராங்க..” அவன் பாதி நம்பியும் நம்பாமலும் பார்க்க அருகே வந்து “டேய் நைட் பேச்சுலர் பார்ட்டி… தனியா கேட்டா வீட்ல நோ சொல்லுவாங்க…தெளிவா தெரிஞ்சடும்.  இது பிஸ்னஸ் மீட்டிங் மாதிரி தானே ..அதான் இந்த பங்க்சனோட பங்க்சனா செலிப்ரட் பண்ணிடலாம்னு  பிரண்ட்ஸ வர சொல்லிட்டேன். சும்மா லைட்டா ப்ளீஸ்…” என இழுக்க

 

ஆதர்ஷ் அவனை பார்த்துவிட்டு மெலிதாக புன்னகைத்தான். வாசு “சக்ஸஸ் ஆதர்ஷ் ஓகே சொல்லிட்டான்.”

ஆதர்ஷ் “அதெல்லாம் சரி, பட் பீ கேர்புல், பேமிலி, பொண்ணுங்க எல்லாரும் இருக்காங்க எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கோங்க அண்ட் நீங்க இரண்டுபேரும் ஓவராகம பாத்துக்கோங்க. பீ கண்ட்ரோல் ஓகே.?” என கூறிவிட்டு நகர்ந்துவிட ஜெயேந்திரன் “என்னடா சொன்னான்.”

விக்ரம் “அப்பா பார்ட்டி இதுக்கெல்லாம் உங்ககிட்ட நான் பெர்மிஸ்ஸின் வாங்க கூட இவளோ விளக்கம் குடுத்து தயங்கல. அட்வைஸ் மழையா பொழியறான்.. ரொம்ப ஷார்ப்பா என்ன சொன்னாலும் நம்பவே மாட்டேங்கிறான்..”

வாசு “அதுவும் திட்றது கூட இல்லை. அந்த பார்வை முறைப்புல எல்லா உண்மையும் நாமளாவே கொட்டிட வேண்டியதா இருக்கு…ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா… இன்னும் 2 நிமிஷம் அவன்கிட்ட பேசிருந்தா எல்லா பிளானும் நாங்களே சொல்லிடுவோம் போல “என

ஜெயேந்திரன் இருவரும் தோளையும் தட்டி விட்டு “ஹா ஹா ஹா…  அதான்டா அவனோட ஸ்பெஷல்.. சரி சரி வாங்க வேலைய பாப்போம். நேரமாச்சு..” என சென்றனர்.

 

ஆதர்ஷ் கால் செய்ய அட்டென்ட் செய்யவும் “சாரா, எங்க இருக்க?”

அக்சரா “கேக்கல…”

“நீ எங்க இருக்க?” என சத்தமாக கேட்க

சாரா “இருங்க தனியா வரேன்.” என அனைத்து இடங்களிலும் யாரேனும் நின்று பேசிக்கொண்டு விளையாடிக்கொண்டு இருக்க அவள் மாடிக்கு சென்றாள்.

“இப்போ சொல்லுங்க..”

“எங்க இருக்கேன்னு கேட்டேன்.”

“வீட்ல மாடில..”

“ஓ… நான் சும்மா ஹால்ல பாத்தேன். நிறையா பேர் இருந்தாங்க. அதான் வெளில வந்துட்டே கால் பண்ணேன்.”

“எல்லாரும் ரிலேட்டிவ் கொஞ்ச பேர் இருந்திட்டு ஈவ்னிங் மேல கிளம்புவாங்க போல.. நீங்க என்ன பண்றீங்க?”

“நான் என்ன பண்றது… நிச்சயம் விக்ரம்க்கு அவன்கூட வேலை இருக்குனு சொல்றான். நான் தான் வெட்டியா இருக்கேன். எத கேட்டாலும் நீ செய்யாத இத நாங்க வேற மாதிரி பண்ணுவோம் உனக்கு தெரியாதுங்கிறாங்க. விக்ரம், வாசு இரண்டுபேரும் அப்டியே வேலை வேலைன்னு சுத்தறானுங்க. ஜெயேந்திரன் அப்பா ரஞ்சித்தை கூப்பிட்டு ஒரு வேலைன்னு வெளில போய்ட்டாரு. எல்லாரும் இன்னும் வரதுக்கு ஒரு மணிநேரமாவது ஆகும். வீட்டுக்குள்ள பாத்தா புல்லா லேடீஸ் கூட்டம், தென் ரிலேட்டிவ்ஸ்.. அதான் நான் தனியா கீழ இருக்கேன்..” என அவன் பெருமூச்சுவிட

அதை கேட்டு சிரித்தவள் “சரி, அப்போ நான் உங்களுக்கு ஒரு வேலை குடுக்கறேன் செய்ங்க.”

“சொல்லுங்க மேடம். பயங்கரமா போர் அடிக்கிது.”

“நான் உங்களுக்கு தான் இருக்கறதுலையே பெரிய பொறுப்பா குடுக்கப்போறேன்..கொஞ்ச பேர் அங்க இருப்பாங்க.. அவங்களை கவனிச்சுக்கோங்க.. அவங்கள ஹாண்டில் பண்றதுதான் ரொம்ப கஷ்டம்…”

“யாரை..? ”

“அனிஷ், ரானேஷ், குமார், சிந்து, சஞ்சீவ் அப்புறம் அதுங்க இப்போ புதுசா புடிச்சிருக்கற பிரண்ட்ஸ் எல்லாரையும்..” என அவன் சிரித்துக்கொண்டே “அவனுங்களா? சரி நான் பாத்துக்கறேன்…” என போனை வைத்துவிட இவளும் சிரிப்புடன் போனை வைத்தவள் அருகே இருந்த அறையில் காற்றுக்கு திரைசீலை விலக அங்கே ஆதர்ஷ் படம் இருப்பது போல தெரிய இவள் அந்த அறை நோக்கி சென்றாள். அறையை திறந்து பார்க்க அங்கே முழுவதும் ஆதர்ஷின் புகைப்படங்கள் சின்ன வயது முதல் இப்போது வரை அதோட சில பொருட்கள் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் இருந்தது. ஒவ்வொருவருடனும் தனியாக ஆதர்ஷ் இருப்பது போன்ற படங்களும் அவன் இந்த குடும்பத்திற்கு எந்த அளவுக்கு செல்லபிள்ளை என்பதை காட்டியது. இறுதியாக அவளது கண்ணில் பட்டது ஒரு குடும்ப போட்டோ அதில் ஜெயேந்திரன், தனம் அவர்கள் கையில் ஆதர்ஷ் சிறுவனாக இருந்தான். அருகில் இன்னொரு ஜோடி அவர்கள் கையில் விக்ரம் இருக்க பின்னால் நால்வரையும் அணைத்தபடி ஒருவன். அருகே இன்னொரு படம் ஆதர்சை கையில் ஏந்திய ஒரு பெண்மணி விக்ரமை மடியில் வைத்திருந்த பெண்ணின் சாயலில் இவர் இருந்தார். அக்கா தங்கச்சியா இருக்குமோ… என அக்சரா எண்ணியவள் ‘இவங்க யாரு. ஆதவ்க்கும் இவங்களுக்கும் எப்படி சொந்தம். இந்த விஷயம் கண்டிப்பா அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்பில்லை.. ஒருவேளை இந்த மாதிரி ஏதாவது தான் சர்ப்ரைஸ்ன்னு சொல்லப்போறாங்களா? அப்டியிருந்தா அவர் எப்படி எடுத்துக்குவாரு இதை..” என யோசிக்க தனம் அங்கே வர அவரிடம் அக்சரா “ஆண்ட்டி இங்க என்ன நடக்கிது. அவரை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என

தனம் “என்னாச்சு மா அக்சரா ஏன் இப்டி பதற.. எல்லாமே சந்தோஷமான விஷயம் தான். ஆதர்ஷ் இந்த வீட்டு வாரிசு தான். அவனோட பிரச்சனை அவன் குடும்பம் இந்த சொத்து இதெல்லாம் வேண்டாம்னு விலகி இருந்ததால நாங்களும் அவன் இங்க வந்ததுல இருந்து இதை சொல்லல. நாங்க அவன் குடும்பம்னு தெரிஞ்சா அவன் இங்கிருந்து போய்டுவானோனு நினச்சு தான் சொல்லாம இருந்துட்டோம்.”

“சரி இப்போ மட்டும் ஏன் சொல்றிங்க?”

“இப்போ தான் அவன் உன்னை விரும்பறான்ல.. நீ சொன்னா கேட்பான். அதோட இத்தனை நாள் அவன் எல்லார்கிட்டயும் பழகுனது இப்போ எல்லாம் அவன் பழகுறத நாங்க கவனிக்காமலா இருக்கோம். அங்கே பாரு என குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்த ஆதர்ஸை காட்டி முன்னெல்லாம் அவன் இப்படியா இருந்தான். இப்போ எவ்ளோ சந்தோசமா மனசு விட்டு சிரிக்கிறான். நல்லா பேசுறான். எங்க பழைய ஆதர்ஷ் எங்களுக்கு திரும்ப கெடச்சுட்டான். அவன் இனி குடும்ப வாழ்க்கையை இந்த பொறுப்பை எல்லாம் ஏத்துக்குவான்னு தோணுச்சு. அதான் இன்னைக்கு இங்க நடக்கப்போற விழாவில இதை அவரு எல்லாருக்கும் சொல்லப்போறாரு.”

 

அக்சரா “இல்லை ஆண்ட்டி நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. என முந்திய நாள் அவன் தன்னிடம் பேசிய அனைத்தையும் கூறியவள் இன்னமும் அவரு முழுசா எல்லாத்தையும் ஏத்துக்கற மனநிலைல இல்லை. அப்படிருக்கும்போது புதுசா இன்னும் நிறையா சொல்றிங்க. இதெல்லாம் அவரு எதிர்பார்த்திருக்கவும் மாட்டாரு. அதோட ஏத்துக்குவாரான்னு தெரில. ஆனா சாதாரணமா எடுத்துக்கமாட்டாருனு தோணுது. பேசாம அங்கிள்கிட்ட சொல்லி இதை நிறுத்த சொல்லிடலாம். முதல நாம ஆதவ்கிட்ட பேசலாம். அதுக்கப்புறம் கூட நாம எல்லாருக்கும் சொல்லிக்கலாம்.”

 

கொஞ்சம் பதறிய தனம் ஜெயேந்திரனை அழைத்து விஷயத்தை கூற “அவரோ என்னமா நீ இந்த நேரத்துல இப்டி சொல்ற. நீங்க இரண்டுபேரும் எதுவும் போட்டு கொழப்பிக்காதீங்க.. அவன் மாறிட்டான். கண்டிப்பா இத ஏத்துக்குவான். நம்ம வீட்டு பையனை இப்டி மூணாவது மனுஷன் மாதிரி பாக்க கஷ்டமா இருக்கு. இதைவிட்டா வேற நல்ல சந்தர்ப்பம் கெடைக்காது. அதோட தனியா பேசி அப்போ அவனுக்கு பிடிக்காம போய்ட்டா என்ன பண்ணுவோம் சொல்லு. அதுக்கு இப்போவே சொல்லிட்டா இத சொல்லிருக்காங்க அப்டின்னாவது அவன் நம்மளோட இருப்பான்ல.. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க எல்லாம் ஆரம்பிக்க போகுது. நீங்க இரண்டுபேரும் என்ன பண்றீங்க. சீக்கிரம் கீழ வாங்க. கெஸ்ட் எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க.” என அவர் வைத்துவிட

அக்சரா ஆதர்ஷ்க்கு கால் செய்ய முதலில் போனை எடுக்காமல் இருக்க விடாமல் அழைப்பு வர எடுத்தவன் “என்னங்க உங்ககிட்ட கொஞ்ச பேசணும்.”

“சாரி டியர்.. நீ எனக்கு வெச்ச வேலை தான். என்னை விடமாட்டேங்கிறானுங்க…”

“இல்லேங்க. ரொம்ப முக்கியம். இங்க நடக்கப்போற பங்சன் பத்தி பேசணும். கொஞ்சம் மேல வாங்களேன்.. உங்களுக்கு வேண்டாம்ன்னா நாம இப்போவே போய்டலாம்…ப்ளீஸ்..” என

ஆதர்ஷ் “பங்சன் பத்தி என்ன பேசணும், பேச்சுலர் பார்ட்டியா? விக்ரம், வாசு சொல்லிட்டானுங்க. நான் கண்ட்ரோல இருக்க சொல்லிட்டேன். மத்தபடி ப்ரோப்லேம் இல்லன்னு ஓகே சொல்லிட்டேன். யாருகிட்டேயும் நான் நோ சொல்லல. சண்டைபோடல. போதுமா.. விடுடா, நீ என்கிட்ட கேட்டது எல்லாரும் வேணும் யார்கிட்டேயும் சண்டைபோடவேண்டாம்னு.. சோ நீ எதுவும் போட்டு கொழப்பிக்காத… நான் இங்க என்ன நடந்தாலும் பங்சன் முடியவரைக்கும் எதுக்கும் கோபமா ரியாக்ட் பண்ணமாட்டேன். சரியா? ”

“அங்கிள், இங்க வாங்க.. கேம் விளையாடும்போது போன் பேசக்கூடாது. அப்புறம் அவுட்.”

“செல்லம்,செல்லம் சாரி டா. கடமை அழைக்கிறது. இவனுங்க வேற..என் ஆளுகிட்ட கூட பேசவிடாம… இருங்க டா இந்த கேம்ல உங்கள பாத்துக்கறேன்.” என அவன் போனை வைத்துவிட மீண்டும் அழைக்கும்போது சுவிட்ச் ஆப் என வர

தனம் “இவரு இப்டி சொல்றாரே ” என புலம்ப

அக்சரா “பேமிலிலைப்ல பிரண்ட்லன்னு எல்லாரும் இந்தமாதிரி எமோஷனல் பிளாக்மெயில் பண்ராங்கன்னு தான் ஆதவ் இந்த வாழ்க்கைல இருந்து விலகி இருக்கணும்னு நினைக்கறாரு. ஆனா திரும்பவும் இத்தனை பேர் முன்னாடி வெச்சு சொல்லி அதுவே காட்டி அவரை இந்த லைப்க்குள்ள கொண்டுவர பாக்கறீங்க. எங்க போயி முடியும்னு தெரில ஆண்ட்டி.” என அக்சரா செய்வதறியாது அமர்ந்துவிட எதுக்கும் கடைசியா ஒருதடவை கீழ போயி சொல்லி பாக்கலாம். என இருவரும் கீழே செல்ல ஜெயேந்திரன் ஆதர்ஸை அழைத்து அனைவர்க்கும் ஆதர்ஸை அறிமுகப்படுத்திவைக்க அதன்பின் ஆதர்ஷ் ஜெயேந்திரன் விக்ரம் வாசு ரஞ்சித் எல்லாரும் ஒன்றாக அங்கேயே இருந்துவிட அவர்களுடன் பிஸ்னஸ் சம்பந்தமாக வந்து பேசினர். தனம், அக்சரா இருவராலும் அங்கே சென்று ஆதர்ஸை அழைக்க முடியவில்லை. அது நாகரிகமாக இருக்காது. அவர்கள் வந்திருப்பதே ஆதர்ஸை பார்க்க தான் எனும் போது அவரை எப்படி தனியே அழைப்பது. அதுவும் போன் வேறு சுவிட்ச் ஆப் எனும்போது என்ன செய்வது என புரியாமல் நிற்க, இங்கே  ஜெயேந்திரன் எழுந்து  பேச சென்றார்.

 

அங்கே இருந்த சிலர் “பரவால்ல பையன் சும்மான்னு நினச்சேன். விஷயம் நிறையாவே இருக்கே., ஆனா ரொம்ப ஷார்ப் போல பா. தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை பேசமாட்டேன்கிறான். இருந்தாலும் ஜெயேந்திரனுக்கு எங்கேயோ அதிர்ஷ்டம் பா இல்லாட்டி எல்லாத்தையும் விக்கலாம்னு முடிவுல இருந்தாரு மனுஷன். எங்க இருந்து வந்து இவன் எல்லாத்தியும் தூக்கிநிறுத்திட்டானே.” என பெருமையாகவும், சற்று காட்டமாகவும் தங்களுக்குள் பேசிக்கொள்ள இதை கேட்டும் கேளாமல் அமைதியாக புன்னகையுடன் இருந்தான் ஆதர்ஷ்.

 

ஜெயேந்திரன் “என்னோட அழைப்பை ஏத்துக்கிட்டு இங்க வந்திருக்கிற நண்பர்கள், உறவினர்கள், தொழில்முறைல பழக்கமான அனைவர்க்கும் என்னோட வணக்கம் மற்றும் நன்றி. இங்க உங்க எல்லாருக்கும் நான் 3 சந்தோஷமான விஷயங்கள் சொல்லப்போறேன். அதுல இரண்டு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். மூணாவது ஒரு ஆனந்த அதிர்ச்சியா இருக்கட்டும்னு தான்.” என ஆதர்ஷ் என்னவாக இருக்கும் என நினைத்தவன் அங்கிருந்து அக்சராவை பார்த்த ஆதர்ஷ் அவளின் பதட்டம் கண்டு முகம் சுளித்தான்.

 

ஜெயேந்திரன் “முதல் விஷயம் விக்ரம், சஞ்சனாவை அழைத்து அவர்கள் திருமண நிச்சயம் பற்றி கூறினார். அனைவரும் வாழ்த்த கத்த என இருக்க விரைவில் திருமண நாளை அறிவிப்பதாக கூறிவிட்டு அடுத்து ஆதர்ஸை அழைத்து உங்க எல்லாருக்கும் தெரியும், விக்ரம் இங்கிருந்து எதையும் பாத்துக்கல இதுல விரும்பம் இல்லேன்னு சொல்லிட்டான். அது அவனோட விரும்பம். அதனால நான் அத தடுக்கல. எனக்கும் உடம்பு சரியில்லாம வேலைய பிஸ்னஸ முழுசா பாதுக்கமுடிலேன்னு நிறையா பேர் எனக்கு விக்க சொல்லி கூட சொன்னிங்க. இதை திரும்ப பழையமாதிரி கொண்டுவரது கஷ்டம்னு கூட நிறையா பேர் அட்வைஸ் பண்ணீங்க. அவங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஆனா என் நம்பிக்கை வீண் போகல. நாங்க உருவாக்குன எந்த தொழிலும் முடக்கி போகாம முன்னாடி கொண்டு வர அளவுக்கு ஆதர்ஷ் எல்லாத்தையும் பாத்துக்கிட்டான். இவ்வளோ நாள் இந்த கொஞ்ச காலத்துல அவன் இந்த அளவுக்கு எல்லாத்தியும் முன்னாடி கொண்டுவந்தத பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க இன்னைக்கு உங்க எல்லாருக்கும் அறிமுகப்படுத்தத்தான் இந்த விழா ஏற்பாடு. மீட் Mr.ஆதர்ஷ் யாதவ் என அவன் அனைவரும் கைதட்ட பொதுவாக  பார்த்து புன்னகைத்தான்.

மூணாவது முக்கியமான விஷயம் “ஆதர்ஷ் இந்த வீட்டு வாரிசு.. என் தம்பி மகேந்திரனோட பையன். இப்போ இந்த குடும்பத்தோட மூத்த வாரிசு ஆதர்ஷ் தான்.”

 

புன்னகை உறைய அதிர்ச்சியில் ஆதர்ஷ் இருக்க அனைவரும் இதை கேட்டு கைதட்ட சிலர் மகேந்திரன் பையனா என மகிழ, சிலர் பெருமைப்பட என ஒரு ஒருவரும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆதர்ஷ் கோபத்தில் நிமிர்ந்தவன் அக்சராவின் கண்களில் தெரிந்த தவிப்பு அவளது பதட்டம் கண்டு எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான். ஒவ்வொருவராக வந்து அவனுக்கு வாழ்த்து கூறிவிட்டு விசாரித்தனர்.

“மகேந்திரன் பையனா நீ ரொம்ப சந்தோசம், உங்க அப்பா நான் எல்லாம் நல்ல பழக்கம். அவன் ரொம்ப திறமைசாலி. ஆனா நடுவுல யார்கிட்டேயும் சொல்லாம லவ் பண்ணிட்டு உங்க அப்பா அவர் வாழ்க்கையை பாக்க போய்ட்டாரு. அதான் வருத்தமா இருக்கு. இப்போ அப்பா எங்க? என ஜெயேந்திரன் வாசு விக்ரம் அனைவரும் சங்கடமாக உணர விக்ரம் “அவர் இப்போ இல்லை அங்கிள்.. இறந்துட்டாரு..” என “மன்னிச்சிருப்பா” என உண்மையான வருத்தத்தில் கூற எதையும் ஏற்கும் மனநிலையில் அவனில்லை. ஜெயேந்திரன் அங்கிருந்தவர்களை சாப்பிட அழைத்து சென்றார் . அவன் தனியே உக்காந்திருக்க சுற்றி இருந்த அனைவரும் ஆளாளுக்கு பேசியது அவன் செவிகளில் எட்டியது “பையன் எப்படி அப்பா மாதிரியே இருக்கான்ல..”

“அட இவன் அவங்க அப்பாவை மிஞ்சிடுவான் பா… அப்போ இருந்து அதான் தோணிட்டே இருந்தது ஏதோ பரிச்சயமான முகமா இருக்கேனு. இப்போதான் புரியுது.”

“எனக்கு கூட டவுட் தான். சும்மா வேலைக்கு வந்தவனுக்கு இப்டி எல்லாமே தூக்கிக்குடுத்து நடத்த சொல்லுவாங்களானு. அதுவுமில்லாம அதுக்கு அவனும் இவளோ கஷ்டப்பட்டு உழைக்கணும்னு என்ன இருக்குனு தோணிச்சு.”

“எல்லாம் அவங்க சொத்து தானே. பின்னாடி எப்படியும் அவனுக்கும் தானே போகும். அந்த அக்கறை தான் ” என சிரிக்க

“அப்போ இதெல்லாம் எதிர்பார்த்து தான் செஞ்சிருப்பான்னு சொல்றியா?”

“பின்ன இல்லையா? எவன் அடுத்தவனுக்கு அதுவும் இவ்ளோ வேலை சும்மா மாச சம்பளத்துக்காக செஞ்சு தருவான். அவனுக்கு வரும். அவங்க குடும்ப சொத்துன்னு தெரியாம அவன் ரிஸ்க் எடுக்க என்ன முட்டாளா? இதுல எல்லாம் நிறைய விஷயம் பின்னாடி இருக்கும் ”

“சரி அப்டியே இருந்தாலும் அவங்க சொத்து அவன் காப்பாத்திருக்கான்.  இதுல என்ன விஷயம் இருக்கப்போகுது.”

“அட, கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு. அந்த விக்ரம் பயலுக்கு இந்த லைன்ல எல்லாம் அதிகமா பிடிப்பு இல்லை. இவனே எல்லாமே எடுத்து நடத்தி பின்னாடி எல்லா சொத்தையும் இவனே எடுத்துக்க வாய்ப்பிருக்கில்ல? அதோட நான் கேள்விப்பட்ட வரைக்கும் மகேந்திரனும் ஏதோ க்ரானைட் பிஸ்னஸ் தான் பண்ணிட்டு இருந்தான். எப்படியும் அதுல இருந்த வர சொத்தும் இவனுக்கு தான் போகும். பையனுக்கு வாழ்வு தான்.”

“அட பையன பாத்தா அப்டி தெரில. அந்த மாதிரி எல்லாம் இருக்காது.”

“எல்லாரும் இப்போ இப்டி தான் இருக்கானுங்க, பணம் புழங்க ஆரம்பிச்சிட்டா போதும் அப்புறம் அத வெச்சுதான் எல்லாரையும் நடத்தவேண்டியது. அதுக்காக என்ன வேணாலும் செய்வாங்க.” என

ஆதர்ஷ் இதை அனைத்தும் கேட்டுக்கொண்டு அவன் இருந்ததே தெரியாதது போல நகர்ந்து சென்றுவிட்டான்.

 

அவனுக்கு சற்று தனிமை தேவைப்பட மாடிக்கு சென்றான். அங்கே நடந்துகொண்டிருக்க அங்கிருந்த அறையின் சன்னலில் ஒரு பறவை உட்காந்துக்கொண்டு கத்த அதை திரும்பி பார்த்தவன் சன்னல் வழியே உள்ளே இருந்த போட்டோவை பார்க்க அறைக்குள் சென்றவன் அனைத்தையும் பார்த்து கோபத்துடன் அவன் குடும்ப படத்தை எடுத்து வீசி எறிந்தான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04

4 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   “ஆதர்ஷ், இந்தா கார் சாவி, இப்போ இருந்து நீயே யூஸ் பண்ணிக்கோ.” அவன் மறுக்க இவரோ “நீயே யோசி, நீதான் எல்லாமே மேனேஜ் பண்ணபோற, எப்படியும் வெளில போக வர வேலை இருக்கும்.

கபாடபுரம் – 13கபாடபுரம் – 13

13. நெய்தற்பண்   புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு – தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து – யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும்.

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05

கனவு – 05   ஒலித்துக் கொண்டிருந்த தொலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. ஒரு தடவை முழுதாக ஒலித்து ஓய்ந்ததன் பின்னர் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்கவும் எடுத்துப் பார்த்தாள். சஞ்சயன் தான்.   “முரளியின் நம்பரை அனுப்பு”   என்று