Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதை மதுரம் 2019,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 03

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 03

3 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

மறுநாள் காலையில் அனைவரும் தங்களது பணிகளை தொடங்க அக்சராவும் அனீஸ்,ரானேஷிடம் சொல்லிக்கொண்டு குமாருடன் அனுப்பிவிட்டு எஸ்டேடிற்கு கிளம்பினாள். அவள் அங்கே அனைவருடனும் பேசிக்கொண்டே வெளியில் வேலைகளை கவனித்துக்கொண்டே இருக்க ஆதர்ஷ், ஜெயேந்திரன், அவரது பிஏ  ஈஸ்வரன் அவரது மகன் விக்னேஷ் அனைவரும் வந்தனர். ஜெயேந்திரனும், ஈஸ்வரனும் அங்கேயே இருந்துகொண்டு அவர்களிடம் பேச வருபவர்களிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆதர்ஷிடம் “நீயும், விக்னேஷும் உள்ள போயி வெயிட் பண்ணுங்க. நாங்க வரோம்.”

இவர்கள் இருவரும் வரும்போது விக்னேஷுக்கு கால் வர அவனை பேச சொல்லிவிட்டு ஆதர்ஷ் முன் நோக்கி செல்ல அங்கே இருந்த அக்சரா “ஹாய், குட் மார்னிங். வெல்கம் டு எஸ்டேட். காலைல பாத்தேன் உங்கள. சீக்கிரம் கிளம்பிட்டிங்க போல. அப்புறம் மூர்த்தி அண்ணா தான் சொன்னாங்க. நீங்க சிந்துவை ஸ்கூல்ல விட்டுட்டு அப்புறம் வறீங்கன்னு. பை தி வே, உங்க பேரென்ன?..பீகாஸ் என்ன சொல்லி கூப்பிட்றதுன்னே தெரில. அனீஸ், ரானேஷ் கூப்பிட்ற மாதிரி உங்கள அங்கிள்ன்னு கூப்பிடமுடியாது. மூர்த்தி அண்ணா கூப்பிட்ற மாதிரி தம்பினும் கூப்பிடமுடியாதில்ல அதான்.” என

அவனோ “ஸீ, நீயும் நானும் ஜஸ்ட் பக்கத்து வீடு அவ்ளோதானே? இவ்ளோ சாதாரணமா வந்து பேசி வெளில நாம என்னமோ ரொம்ப நாள் பழகுற மாதிரி சீன் கிரியேட் பண்றதெல்லாம் வெச்சுக்காத. எனக்கு பிடிக்காது. ஒரு வயசு பொண்ணா இருந்திட்டு பையனை பத்தின டீடைல்ஸ் கேட்டுட்டு இருக்க, உனக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? என்ன பொண்ணுங்க சிரிச்சு பேசுனா வழிஞ்சிட்டு வந்து பேசுவேன்னு நினைச்சியா? அண்ட் நீ என்ன கூப்பிட்றதுக்கு என்ன அவசியம் இருக்கு?  என்கிட்ட நெருங்க ட்ரை பண்ணாத. என்னை விட்டு தள்ளி இருக்கறதுதான் உனக்கு நல்லது. ” என அவன் முகத்தில் அடித்தது போல முக்கியமாக அவளை தவறாக பேசியது போல அவன் திட்டவும் இவளுக்குமே ஒரு நிமிடம் இப்போ என்ன தப்பா கேட்டுட்டோம்னு இருந்தது.

 

பின்னாடி வந்த விக்னேஷ் இவளை ஏளனமாக பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றான்.

ஆதர்ஷ்க்கோ அக்சராவிடம் நேத்து அப்டி ஒதுக்கி வெச்சமாதிரி நடந்துக்கிட்டதுக்கு சிறிது வருத்தப்பட்டான், அவளை பாத்தா அவ்ளோ மோசமா தெரில. அவகிட்ட பேசலாமா? என்ற எண்ணம் இருந்தும் திரும்ப எந்த பொண்ணுங்களோட எமோஷனல் பீலிங்ஸ்க்கும் நம்ம லைப்ல இடம் குடுக்க கூடாதுனு தானே அப்போ அப்டி அவளை கண்டுக்காம இருந்த. பரவால்ல இப்டியே இருக்கட்டும். என எண்ணியவனுக்கு அப்போ அவ திரும்ப பேசமாட்டாளா? என்ற எண்ணமும் கேள்வியும் தோன்ற, அதற்கு அவன் மனமே எந்த நல்ல பொண்ணும் நீ இப்டி நடந்துக்கிட்டதுக்கு அவளா வந்து திரும்ப பேசமாட்டா. என அவளுக்கு நல்லவள் பட்டம் குடுத்து இருக்க, அவளோ எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் முன்பு வந்ததும் வராததுமாக இப்டி சகஜமாக பேசியது அவனுக்கு உறுத்தலோடு கோபமும் வரவே அவ்வாறு திட்டிவிட்டு வந்துவிட்டான். அறையினுள் நுழைந்தும் அவனுக்கு என்னவோபோல் இருக்க ஜெயேந்திரன், ஈஸ்வரன், விக்னேஷ்   அனைவரும் உள்ளே வர இவனும் வேலை விஷயம் என இதற்கு தாவிவிட்டான். இருந்தும் அவள் இங்கு என்ன செய்கிறாள் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

 

அடுத்த பத்தாவது நிமிடம் அக்சரா உள்ளே அனுமதி கேட்டு வர அவள் குரலை கேட்டு ஒரு உந்துதலோடு திரும்பியவன் திரும்பவும் அவள் தன்னிடம் பேச வருவதாக எண்ணி திட்ட ஆரம்பிக்க ஜெயேந்திரன் “வாம்மா, அக்சரா, வா வா..” என அழைக்க இவன் அப்டியே நிறுத்த அக்சராவோ “அங்கிள் நான் வரது இருக்கட்டும், நீங்க எங்க மாத்திரை கூட சாப்பிடாம  இந்த பக்கம் ?”

“போச்சுடா, நீயுமா? என்னம்மா மேலிடத்து உத்தரவா?”

“ஆமா, ஆண்ட்டி தான் சொன்னாங்க, அதோட நீங்க இன்னைக்கு வரீங்கன்னு சொன்னதும் நான்தான் கேட்டேன்.அதனால தான் அவங்க ஆமா மாத்திரை கூட சாப்பிடாம கிளம்பிட்டாருனு சொன்னாங்க. எல்லாரும் அக்கறையா கவனிக்கறவங்கள குறை சொல்ல கிண்டல் பண்ண மட்டும்தான் முன்னாடி நிக்கிறிங்க.” என்று சொல்லிக்கொண்டே அவள் மாத்திரையை எடுத்து தர, அவரும் சிரித்துக்கொண்டே வாங்கிபோட்டுக்கொண்டார்.

 

ஈஸ்வரன் “என்னம்மா அக்சரா, இங்கேயே ஒரு மெடிக்கல் ஷாப் ஓபன் பண்ணிடலாம் போலிருக்கே?”

அவளும் சிரித்துக்கொண்டே “அங்கிள் உடம்பு முடியாம போனதுல இருந்து இரண்டு நாளைக்கு ஒரு தடவ தான் விசிட் வராங்க. சில சமயம் மாத்திரை சாப்பிட மறந்துடறாங்கன்னு ஆண்ட்டி பீல் பண்ணாங்க, எனக்கென்னமோ இது மறக்கற மாதிரி தெரில, மாத்திரைல இருந்து தப்பிக்க ட்ரை பண்ண மாதிரி இருந்தது.அதான் எல்லாத்துலயும் ஒரு செட் வாங்கி ஆஃபீசிலையே வெச்சுட்டேன்.” என ஜெயேந்திரனும் தலையை தொங்கபோட்டுக்கொண்டு “ஈஸ்வரா, என் நிலைமையை பாத்தியா? வீட்ல தனம், இங்க அக்சரா, எங்கபோனாலும் மாத்திரை எனக்கு விடிவுகாலமே இல்லையா?” என குறைபட அனைவரும் சிரிக்க

ஜெயேந்திரனும் “அம்மாடி, இது ஆதர்ஷ், என் பையன் மாதிரி. இனிமேல் எல்லா நிர்வாகமும் ஆதர்ஷ்கிட்ட தான். ஆதர்ஷ், இது அக்சரா அவளும் எங்க வீட்டு பொண்ணுமாதிரி தான். இவ்ளோ நாள் எனக்கு பிஏ இனிமேல் இங்க உன்னோட பிஏ. வெரி ஸ்மார்ட் கேர்ள். உனக்கு ரொம்ப ஹெல்ப்பா இருப்பா..” என்ற அறிமுகத்தில்  அவனுக்கு மகிழ்ச்சியா தயக்கமா வேண்டாம் என்ற உணர்வா என்றே கூற முடியாத வகையில் இருந்தான்.

 

அவரும் சற்று பேசிவிட்டு ஈஸ்வரனுடன் கிளம்பிவிட்டார். ஆதர்ஷ், அக்சரா, விக்னேஷ் மூவர் மட்டும் அங்கே இருக்க அக்சராவின் பார்வையில் இருந்து சிறு திமிர் காலைல இவன்கிட்ட திட்டுவாங்குனோமேன்னு கூனி குறுகி இல்லாம அவளோட கம்பீரமான நேரான பார்வையை அவன் ரசித்தான் என்பதை அவனால் மறுக்கவும் முடியாது. ஆனால் அவளின் அதே திமிர் கலந்த பேச்சு அவளுக்கு அவனது பெயர் இப்போது தெரிந்தாலும் அவன் வாயாலே சொல்ல வைக்கவேண்டும் என்று  “இப்போ உங்களை  கூப்பிட்றதுக்கான அவசியம் இருக்கும்னு நினைக்கிறேன்? சோ யுவர் நேம்?” என அவள் வினவ இவனும் சளைக்காமல் தன் ஈகோவையும் விட்டுக்கொடுக்காமல் “நோ ப்ரோப்லேம், பிஏ தானே, ஜிஎம் அ எப்படி கூப்டுவாங்களோ அப்டியே கூப்பிடலாம்.ஜஸ்ட் கால் மீ சார். நௌ யு கேன் கோ (now u can go) எனவும் அவளும்  கோபம் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே அறையை விட்டு சென்றுவிட்டாள். அதுவே அவனுக்கு சிறிது கோபத்தை தூண்டியது. நேத்துல இருந்து இவ்ளோ தள்ளிவெச்சாலும் அவமானபடுத்தினாலும், கோபமும் படமா, விட்டு விலகியும் போகாம பயப்படவும் இல்லாமல் அவனை நேருக்கு நேர் வந்து கூலாக அவள் அவனை சந்திக்கும் விதம் இவனுக்கு பிடித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

விக்னேஷ்,  ஆதர்ஷிடம், “சார், அக்சரா உங்களுக்கு தெரிஞ்சவங்களா  சார் ?” எனவும் அவனை ஆதர்ஷ் முறைத்துவிட்டு “இந்த சந்தேகம் உங்களுக்கு கண்டிப்பா இப்போ தேவையா விக்னேஷ்?” என்றதும் அவன் உடனே சுதாரித்து கொண்டு  “அப்டி இல்ல சார், அவங்க உங்ககிட்ட பேசுனதால கேட்டேன் சார். இங்கேயும் அப்டி தான் சார், எல்லார்கிட்டேயும் பேசுவாங்க. ரொம்ப நேரம் பேசிட்டு, விளையாடிட்டு வேலை நேரத்துல டிஸ்டர்ப் ஆஹ் இருக்கும். கேட்டா ஜாலியா இருக்கணும்னு  சொல்லி இவங்க கெட்ரது பத்தாதுன்னு வேலை செய்றவங்களையும் கெடுத்துவெச்சிடறாங்க.. ஆனா அடுத்தவங்க வேலை தொந்தரவு ஆகும்ல அதான் உங்களுக்கு தெரிஞ்சவங்கனா உங்ககிட்ட சொல்லியே அவங்களுக்கு பக்குவமா எடுத்து சொல்ல சொல்லலாம்னு பாத்தேன்?” எனவும்  ஆதர்ஷும் அமைதியாகிவிட்டான்.

 

விக்னேஷ் ஈஸ்வரனின் மகன் என்றாலும் ஈஸ்வரனுக்கு அடுத்து பிஏ வேலைக்கு ஆள் எடுக்க விக்னேசும், அக்சராவும் ஒரே நிலையில் இருக்க இறுதியில் அக்சராவிற்கு வேலை கிடைத்தது. விக்னேஷ்க்கு அறிவு அதிகம் தான், ஈஸ்வரனிடம் உங்க பையன் தானே ரெகமெண்ட் பண்ணா கிடைக்கும்ல என விக்னேஷ் வினவ அவரோ “எனக்கு ரெகமெண்ட் பண்ணா பிடிக்காது, ஜெயேந்திரன் சார்க்கும் அதெல்லாம் விரும்பமாட்டாரு. முடிஞ்சா நீ அப்ளை பண்ணி வேலை வாங்கிக்கோன்னு சொல்லிவிட இவனும் வீராப்பில் அதேபோல் அறிவு திறமையில்  செலக்ட் ஆகி இருக்க, இறுதியாக போட்டியாக வந்தவள் அக்சரா, அவளும் ஜெயேந்திரனின் ரெகமண்ட்டில் எனவும் அவனுக்கு கோபம்,  அவள் பிஏ க்கு செலக்ட் ஆகியிருக்க இவனுக்கு அவளுக்கு அடுத்த இடத்திலும், சீஃப் சூப்பர்வைசராக பணியில் அமர்த்த அவனுக்கு கோபம், வெறியாகவே மாறிவிட்டது. அவளுக்கு திறமை இருந்தாலும் அதை அவன் பொருட்படுத்தவில்லை. அவள் பெண் என்பதாலும், பெரிய இடத்து ரெகமெண்டஷன் என்பதாலும் மட்டுமே வேலை கிடைத்தது என எண்ணினான். அதனாலே அவனால் அவளை மாட்டிவிட வேலையை குறை கூறி அவளை மட்டம் தட்ட நேரம் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். அத்தகைய வாய்ப்பு ஜெயேந்திரனிடம் அவனுக்கு கிடைக்கவில்லை. ஆனால் ஆதர்ஸிடம் கிடைக்கும் என தோன்றியது. எனவே அவனிடம் இவ்வாறு அவளை பற்றி குறைகூற அவனுக்கு ஆரம்பத்தில் பெண்களின் மேல் இருந்த எண்ணம், இப்போது இவளது பேச்சு,  செய்கை அதோடு  இந்த புகார் எல்லாம் நினைக்க அவனுக்கு அக்சராவின் மேல் கோபம் வந்தது. இருக்கட்டும் உன் திமிரை நான் அடக்கிறேன் என அவன் முடிவுடன் இருந்தான்.

 

வெளியே வந்த விக்னேஷ் “என்ன அக்சரா, சார் உன் மேல ரொம்ப கோபமா இருக்காரு போல, உன்னை பத்தி பேசுனாலே டென்ஷன் ஆகுறாரு. அப்படி என்ன பிரச்சனை பண்ண?” என சீண்ட

இவளும் சிரித்துக்கொண்டே “ஏன் விக்னேஷ், சொல்லிட்டா பிரச்னையை தீத்துவெக்க போறிங்களா? என்ன? ஆனா பாருங்களேன் நீங்க இங்க சூப்பர்வைசர் வேலைக்கு வந்திங்கனு நினைச்சேன்.. எப்போ இருந்து இந்த பஞ்சாயத்து பண்ற வேலை எல்லாம் பண்ண ஆரம்பிச்சிங்க? ” எனவும்  அவனும் ஒரு மாதிரி முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல அக்சராவிற்கு விக்னேஷின் செயலை அறிந்தவளாதலால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஆதர்ஷ் கொஞ்சம் கூட மெச்சூர்ட்டா நடந்துக்க மாட்டாரா? என்கிட்ட இப்போ என்ன பிரச்சனை அவருக்கு? அப்டியே இருந்தாலும் என்கிட்டே காட்றத விட்டுட்டு மத்தவங்ககிட்ட காட்றது என்ன பழக்கம், இதுல மட்டும் சீன் கிரியேட் ஆகாதா? ” என அவளுக்கும் சிறிது கோபம் எட்டிப்பார்க்க “இருக்கட்டும் இனி பாத்துக்கறேன்.” என அவளும் ஒரு முடிவுக்கு வந்தாள்.

 

[விக்னேஷின் இந்த வன்மத்திற்கு அக்சராவும், ஆதர்ஷும் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு மாட்டிக்கொள்ள போகிறார்கள் பிரச்னையிலும் சரி, வாழ்விலும் சரி. இதை அறிந்த ஒரே ஜீவன் விதி மட்டுமே.]

 

அக்சரா என்ன செய்தாலும் அதை குற்றம் சொல்லவென எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆதர்ஷ், அவனிடம் எதற்காகவும்  மாட்டிக்கொள்ள கூடாது என பாத்து பாத்து வேலை செய்த அக்சரா என இப்படி இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்க, அதையும் மீறி ஆதர்ஷ் வேலையில் ஏதாவது குறை என கூறினால் அது அத்தகைய பெரிய தவறில்லை என  இருவருக்குமே தெரிந்திருக்க அவளும் சிரித்துக்கொண்டே அதை திருத்திக்கொண்டாள், அவனுக்கும் இவளது திமிரை அடக்கமுடியவில்லை என பொறுமையுடன் அன்றைய நாள் நகர மாலை வேளையில் ஜெயேந்திரன் வர “வாங்க பா, இப்போ தான் கிளம்பி வீட்டுக்கு வரலாம்னு நினைச்சேன்.” என்றான் ஆதர்ஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 1பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 1

“ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய ‘கெட்டகாலம்’ அவளை இப்படியாக்கிவிட்டது!” – இது என் நண்பன், தன்