Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 02

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 02

2 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

“டேய் ஒழுங்கா இரண்டு பேரும் என்கிட்ட வந்துடுங்கடா. இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

“அதான் உனக்கே, தெரியாதே அப்புறம் என்ன?. பேசாம போ தேவி” என பெரியவன் கூற சின்னவனோ சிரித்துக்கொண்டே இருக்க

அவளும் முறைத்துவிட்டு “டேய் நம்பர் 1 அண்ட் நம்பர் 2 இரண்டு பேரும் என்னவா கலாய்க்கிறீங்க..நீங்க காலிடா” என அவர்கள்  எதிர்பாரா நேரத்தில் தண்ணியை ஊற்றிவிட அவர்களும் திகைத்து பின் இவளை துரத்த அவளும் சிரித்துக்கொண்டே ஓடினாள்.

“தேவி நில்லு,  சொன்னா கேளு” என அவர்களும் கப்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு துரத்த வேகமாக தப்பிக்க ஓடி எதிரே வருபவனை கவனிக்காமல் மோதிவிட்டாள் அக்ஷரா தேவி. அவனோ இவளை விழாமல் பிடித்து நிறுத்த அவளும் தடுமாறி ‘சாரி தேங்க்ஸ்’ என நிமிர்ந்து ஒரு நொடி பார்க்க அவனும் ஒரு அவளது கண்களை கண்டவன் சுதாரித்து கொண்டு திட்ட ஆரம்பிக்க இவளோ அதை கவனிக்காமல் பின்னால் சத்தம் கேட்க, அவனை சுற்றிக்கொண்டு பின்னாடி வந்த மூர்த்தியிடம் சென்று “அண்ணா, அவனுங்கள பிடிங்க. வேண்டாம்னு சொல்லுங்க அண்ணா.” ஆதர்ஷும் யாருக்கு பயந்து ஓடுகிறாள் என திரும்பி பார்த்தவன் முழித்து கொண்டிருக்க

மூர்த்தி “என்னாச்சு, என்னாச்சு தம்பி சொன்னா கேளுங்கபா. ஏன் இப்டி தொரத்திக்கிட்டு..”

பெரியவனோ “அங்கிள், அவ பேச்ச கேக்காதீங்க… அவதான் எங்க மேல தண்ணி ஊத்திட்டா.”

சின்னவனோ “ஆமா, இங்க பாருங்க. மொத்தமா நினைஞ்சிடிச்சு. சளி பிடிக்கும்.”

அவளோ “டேய் சும்மா, இரண்டு பேரும் விடாதீங்கடா. நேத்து ஐஸ்கிரீம் ஆ மாத்தி மாத்தி சாப்பிடும் போது உங்களுக்கு பிடிக்காத சளி இந்த ஒரு கப் தண்ணில பிடிக்கப்போகுதா? நடிக்காதிங்கடா.. அண்ணா நீங்க அவனுங்கள நம்பாதீங்க..” என

மூர்த்தியோ “என்னதான் ஆச்சு, எதுக்கு இப்போ காலையிலேயே சண்டை.?”

நான் சொல்றேன் நான் சொல்றேன் என மூவரும் விஷயத்தை சொல்லாமல் சண்டையிட பொறுமையிழந்த மூர்த்தியோ “ஸூ… இப்போ யாராவது சொல்ல போறீங்களா? இல்லையா? ” என சொல்ல

“அங்கிள், அவ தான் சொன்னா, இந்த வாரம் பொட்டானிக்கல் கார்டன் கூட்டிட்டு போறேன்னு. பட் வேலை இருக்குன்னு சொல்லி லேட்டாகி லேட்டாகி இந்த வாரமே முடியப்போகுது இன்னும் கூட்டிட்டு போகல.” என்றான் பெரியவன்

“அதுக்கு பனிஷ்மெண்ட்டா எங்களுக்கு இன்னைக்கு ஆப்பிள் அல்வா செஞ்சு தரேன்னு சொல்லி, நாங்க எந்திரிக்கறதுக்குள்ள இவளே எல்லா ஆப்பிளும் தின்னுட்டா. எங்களுக்கு அல்வா செய்ய ஆப்பிள் இல்லேனு சொல்றா. ” என சின்னவனும் குற்றப்பத்திரிக்கை வாசிக்க

அக்ஷரா “இல்ல அண்ணா, இவனுங்க தான் தின்னுட்டானுங்க. தீந்தா என்கிட்ட சொல்லாம இருந்தா எனக்கு எப்படி தெரியும். இன்னிக்கு காலைல பாத்தா ஒன்னே ஒன்னு தான் இருந்தது. எப்படியும் செய்யமுடியாதுனு தான் நானே அதையும் சாப்பிட்டேன் அண்ணா. அதுக்கு இவன் என்னை தேவாங்கு தேவின்னு சொல்றான். அவன் அத கேட்டு சிரிச்சு இரண்டும் கலாய்க்கிதுங்க. அதான் கோபம் வந்திடுச்சு தண்ணிய தூக்கி ஊத்திட்டேன்.” என மூவரும் முறைத்துக்கொண்டு நிற்க அவர்களை கண்டு சிந்தியாவும், மூர்த்தியும் சிரிக்க ஆதர்ஸ்க்கு சிரிப்பு வந்தாலும் மெலிதாக தனக்குள் புன்னகைத்துக்கொள்ள மூர்த்தியோ “ஆண்டவா, இதுக்கா இவளோ சண்டை. வீட்ல ஆப்பிள் இருக்கும். நான் அப்புறம் கொண்டுவந்து மஹாவையோ, குமாரையோ தர சொல்றேன்.”

அக்ஸா, “அட இப்போ என்ன அண்ணா,  நாளைக்கோ இன்னொரு நாளோ செஞ்சு தர போறேன்.”

பெரியவன், “அல்வா செஞ்சு தரேன் செஞ்சு தரேன்னு சொல்லி செய்யாமலே அல்வா தந்துட்டேல்ள?”

அக்ஸா, “டேய் வாவ் டா. சூப்பரா டயலாக் சொல்ற. செம போ.”

பெரியவன், “உன்னை… கிண்டலா பண்ற? ” என மீண்டும் பெரியவன் துரத்த அவனை பிடித்து நிறுத்திய மூர்த்தி

“இப்டியே துரத்திக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா புதுசா வந்தவங்க அப்டியே பயந்து ஓடிடுவாங்க.” என்றதும் தான் அவர்கள் திரும்பி கவனிக்க மூர்த்தி அவர்களை அறிமுகப்படுத்தினார்.

ஆதர்ஸை காட்டி, “தம்பியும் அவங்க குடும்பத்தோட இங்க தான் இருக்கப்போறாங்க. ஐயா சொன்னாரு. நாளைல இருந்து எல்லா நிர்வாகமும் தம்பி தான் பாத்துக்கப்போறாங்க. இவங்க அவங்க தங்கச்சி. என்றவர் திரும்பி இவங்க பேரு அக்ஷரா. இங்க தான் உங்க போர்சன்க்கு பக்கத்துல இருக்கற போர்சன்ல தான் தங்கிருக்காங்க. அக்ஷராவும் ஐயாகிட்ட தான் வேலை பாக்குதுங்க தம்பி என்றவர் இவங்க இரண்டு பேரும் அந்த பொண்ணோட தம்பிங்க.

சிந்தியாவிடம் வந்த சிறுவர்கள் என் பேரு அனீஸ் கண்ணன், 6th std,  என் ‘பேரு ரானேஷ் கண்ணன் 2nd std, நீங்க?”

“சிந்தியா… 9th std” என மூர்த்தியும் உங்க ஸ்கூல் தான் சேர போறாங்க எனவும் “வாவ் அக்கா, சூப்பர், நாம ஜாலியா விளையாடலாம், நாங்களே உங்கள கூட்டிட்டு போறோம், ஊட்டி எல்லாம் சுத்திகாட்டறோம். பிரண்ட்ஸ்? ” என கை நீட்ட மூவரும் ஒன்று சேர்ந்து கொள்ள காரினுள் குழந்தை அழும் சத்தம் கேட்க ஆதர்ஷ் சென்று திறக்க அவனிடம் தாவிய சஞ்சீவ் அனைவரையும் கண்டு விழிக்க குட்டிஸ் “ஐய்…ஜாலி அக்ஸா இங்க பாறேன் குட்டி பையன்” என்றவன் ஆதரிஷிடம் வந்து “அங்கிள் அவன் பேர் என்ன? அவனை காட்டுங்களேன்” என்றான் ரானேஷ்.

ஆதர்ஸ் அவன் முன் குனிந்து காட்டிவிட்டு “சஞ்சீவ் அவன் பேரு.” என்றதும் இவன் கை பற்றி இழுக்க அவனோ கத்த துவங்க ரானேஷ் பாவமாக பார்க்க ஆதர்ஷ் அவனிடம் “புது இடம், புது ஆளுங்க தூக்க கலக்கத்தில் இருக்கான்ல. அதனால தான். அப்புறமா விளையாடுவீங்களாம். சரியா?” என அவனும் தலையசைத்து ஓடிவிட அனைத்தும் எடுத்துவைக்க மூர்த்தியும் சென்றுவிட லக்கேஜ் எடுக்க சிந்தியா செல்ல அனீஸ், ரானேஷ் நாங்களும் போறோம்னு உடன் சென்றுவிட ஆதர்ஷிடம் வந்தவள் புன்னகைத்துவிட்டு “ஹாய், நீங்க எஸ்டேட் பாத்துக்கப்போறீங்களா? சூப்பர். அங்க ரொம்ப நல்லா இருக்கும். பை தி வே என் பேரு அக்சரா, உங்க நேம்? ” என கேட்க அவனோ  இவளிடம் எதுவும் கூறாமல் இவளை மட்டும் முறைத்துவிட்டு எதுவும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டான்.

[எல்லாரும் போனதுக்கு அப்புறம் என்ன தனியா பேச்சு இந்த பொண்ணுக்கு. என் பேர் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணபோறாளாம்? அதோட அங்க கிளைமேட் எப்படி இருக்கும்னு நான் கேட்டேனா? ஏன் தான் இப்டி அவங்களா வந்து பேசுறாங்களோ? பதில் பேசாம வந்ததுக்கு கொஞ்சமாவது நல்ல பொண்ணா சுயமரியாதை இருக்கற பொண்ணா இருந்தா இனிமேல் நம்மகிட்ட எதுவும் வெச்சுக்காது. அதையும் மீறி வந்தா கண்டிப்பா ஆல்ரெடி பாத்த பொண்ணுங்க மாதிரி இவளும் ஏதாவது கடைசில ஏடாகூடமா பண்ற பொண்ணாதான் இருக்கும். நாம அளவா வெச்சுக்கிறது நல்லது என தனக்குள் சொல்லிக்கொண்டு நகர்ந்துவிட்டான்.]

இவளுக்கு “இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி முறைச்சிட்டு போறாரு. ஒருவேளை காது கேக்காதோ? இல்லையே ரானேஷ் கேக்கும்போது பதில் சொன்னாரே. ம்ம்ச்ச்.,…ஏதோ டென்ஷனா இருக்கும். இங்கதான இருக்கப்போறாங்க. பொறுமையா கேட்டுக்கலாம்.” என அவளும் உள்ளே சென்றுவிட்டாள்.

 

அன்று முழுவதும் குட்டிஸ் அனைவரும் வேலையுடன் பேசிக்கொண்டே, விளையாடிக்கொண்டே இருக்க ஆதர்ஷ் அக்சராவிடம் மட்டும் ஒதுக்கத்துடனே இருந்தான். அதோடு சிந்தியாவிடமும் “குழந்தைங்க எதுவும் நினைக்காம தான் எதிர்பாக்காம தான் பழகுவாங்க.ஆனா பெரியவங்க அப்டி இருக்கமாட்டாங்க. எல்லார்கிட்டயும் பழகறது சரி,பட் பாத்து இருந்துக்கணும்.யாரு என்னனு தெரியாம நம்ம வீட்டு ப்ரோப்லேம் ஏன் இங்க இருக்கோம்னு எதுவும் சொல்லக்கூடாது சரியா? பாத்து இருந்துக்கோடா. நான் சொல்றது உனக்கு புரியுதில்ல சிந்து மா? என ஆதர்ஷ் கூறினான்.

“புரிது அண்ணா, நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்”

“அவங்களா தெரிஞ்சுக்க கூட முயற்சி பண்ணலாம்.நல்லா பழகுறாங்க,பாசமா இருக்காங்கனு கூட நீ எமோஷனல் அட்டச்மெண்ட் அதிகம் வெச்சுக்காத. நாம இன்னும் எவளோ நாள் இல்லை மாசம் இங்க இருப்போம்னு தெரியாது. சோ அப்போ சங்கடமாயிருக்கும். அதனால இப்போ இருந்தே அளவா பழகிக்கோ. சரியா?”

அவளும் எதுவும் கூறாமல் தலையசைக்க அவள் மனம் புரிந்தவனாக வந்து அவளது தலையை வருடிக்கொடுத்து “நான் உன்னை கண்ட்ரோல் பண்ணல.. நமக்கிருக்கற

நிறையா பிரச்சனைல இதுவும் வேண்டாம்னு சொல்றேன். நீ ஓகே தானே?”

அவளும் மெலிதாக புன்னகைத்து “கண்டிப்பா அண்ணா, நீங்க எதுக்கு சொல்றீங்கனு எனக்கு புரியுது. நான் கவனமா இருந்துக்கறேன் அண்ணா.” என்று சென்றுவிட்டாள்.

அவனுக்குமே வருத்தமாக இருந்தது. பாவம் அவளும் சின்ன பொண்ணு தானே.எல்லாரோடையும் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பாதானே.ஆனா இப்போ இருக்கற நிலைமைல எதுவும் ரிஸ்க் எடுக்க முடியாதே என்றெண்ணியவன் பெருமூச்சுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

 

மதிய வேளையில் மூர்த்தி “ஐயா குடுக்க சொன்னாங்க” என உணவை கொண்டு வந்து தர அதை பெற்றுக்கொண்ட ஆதர்ஷ் “தேங்க்ஸ் அண்ணா.”

“இருக்கட்டும் தம்பி. ஐயாதான் அங்க இருந்து குடுத்துவிட்ருக்காங்க. இவ என் மனைவி மகா, அவன் என் பையன் குமார் என அறிமுகப்படுத்த சாதாரணமாக ஒரு இரண்டு நிமிடம் பேசிக்கொண்டிருக்க அனீஸ் “ஹே குமார் எப்போடா வந்த? அக்ஸா  குமார் வந்திருக்கான் நானும் அவனும் விளையாட போறோம் என கத்திகொண்டே நகர்ந்துவிட மூர்த்தி “இவனுக இரண்டு பேரும் ஒரே கிளாஸ் தான் தம்பி. வாலுங்க. ஆனா நல்ல பசங்க.” என கூறிவிட்டு “தம்பி  உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி இன்னைக்கு இராத்திரிக்கு எங்க வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டு வரட்டும்ங்களா?”

“உங்களுக்கு எதுக்கு அண்ணா வீண் சிரமம்.வெளில வாங்கிக்றேன்.. நீங்க இதுக்காக ஏன் அலையணும். நாளைக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கிட்டு வீட்லையே சமைச்சிக்கலாம்.”

“இதுல என்ன தம்பி சிரமம் இருக்கப்போகுது. இங்கேயிருந்து அஞ்சு நிமிச நடை தான் எங்க வீடு. கொண்டு வந்து தரதுக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகுது. எதுனாலும் நீங்க கூப்பிடுங்க. நான், மகா இல்லை குமார் இருக்கோம் கொண்டு வந்து தந்திடப்போறோம். என்னவேணும்னாலும் நீங்க சங்கோஜப்படாம கேளுங்க.”

அவன் தயங்க மகா “குழந்தை வேற இருக்குன்னு இவரு சொன்னாரு. எதுக்கு கடை சாப்பாடெல்லாம். வீட்ல சமைச்சா சரி. இல்லாட்டி எங்ககிட்ட சொல்லுங்க.. நானே கொண்டுவந்து தந்துடறேன்.” என கூறிக்கொண்டிருக்க அவனும் ஒப்புக்கொள்ள

அக்சரா “என்னக்கா புது ஆளுங்க வந்ததும் என்னை மறந்தாச்சா? எனக்கு அப்போ நைட் எந்த ஸ்பெஷலும் தரமாட்டீங்களா?” என வம்பிழுக்க

அவரும் சிரித்துக்கொண்டே “அது சரி, உனக்கு தராமிருந்தா நீ விட்ருவ பாரு.. எங்கடா சண்டை போட ஆளில்லையேன்னு பாத்தேன்.” அவளும் சிரிக்க ஆதர்ஸ்க்கு ஏனோ அக்சராவை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டு “சரிங்க, நீங்க பேசிட்டு இருங்க.உள்ள கொஞ்சம் வேலை இருக்கு” என நகர்ந்துசென்றுவிட்டான்.

[இந்த பொண்ண எல்லாம் என்ன பண்ணா தகும். என்ன பழக்கம் இது. இன்னொருத்தர்கிட்ட பேசிட்டிருக்காங்கனு ஒரு மேனர்ஸ் வேண்டாமா? என தனக்குள் திட்டிக்கொண்டே சென்றுவிட்டான்]

மகாவும், மூர்த்தியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அக்சராவிற்கு ஏனோ அவன் தன்னை ஒதுக்கிவைப்பது போல தோன்ற உடனே தன்னை சரி செய்துகொண்டு இவர்களை உள்ளே அழைத்து பேசிக்கொண்டிருந்தாள்.

 

ஆதர்ஷ் தனது நண்பன் வாசு என்ற வாசுப்ரியனுக்கு போன் செய்து “டேய் நாங்க ரீச் ஆயிட்டோம்டா”

வாசு “ஓகே டா. அங்க எல்லாமே ஓகே தானே.எந்த ப்ரோப்லேமும் இல்லையே?”

“இல்லைடா.எல்லாமே விக்ரம் அப்பாவே ரெடி பண்ணிட்டாங்க. என வந்தது முதல் அனைத்தும் கூறிவிட்டு எனக்கு அந்த பொண்ணு தான்டா பக்கத்துல இருக்கறது சரியாப்படல. இங்கேயும் ஏதாவது ப்ரோப்லேம்னா என்ன பண்றது. சோ வேற வீடு மாத்தலாமான்னு பாக்கறேன். மத்தபடி எல்லாமே ஓகே தான்.”

வாசு “என்னடா இப்டி சொல்ற. நீ சொல்றத பாத்தா அந்த பொண்ணும் அங்கேயே தான் ஒர்க் பண்ணப்போகுது போல. அதுவுமில்லாம உனக்கு பொண்ணுங்களால ப்ரோப்லேம் வந்ததுன்னு போற இடத்துல எங்கேயும் பொண்ணுங்க இருக்கக்கூடாதுன்னா எப்படி? ஜஸ்ட் என்ன பக்கத்துவீடு அவ்ளோதானே. அதுக்கு ஏன் நீ வீட்டை மாத்தணும். காட்டை மாத்தணும்னு.  நீ பாட்டுக்கு வேலைக்கு போய்டுவ,அந்த பொண்ணு தனியா எங்கேயோ வேலைக்கு போய்டும். அதுவுமில்லாம விக்ரம் அப்பா கேட்டா என்ன பதில் சொல்லுவ..அங்க ஒரு பொண்ணு இருக்கா. அதனால வீடு மாறுறேன்னா?விடுடா.  குழந்தைங்க

சேப்டி தான் முக்கியம்.இப்போ இருக்கற இடம் வேற எந்த பிரச்சனையும் இல்ல. அதோட அந்த டிரைவர் அவங்க பேமிலியும் கொஞ்சம் செட் ஆகிட்டாங்க. சிந்துக்கு ஸ்கூல் கொஞ்சம் அங்க பக்கம் தான்.. சோ நீ மத்த எல்லாத்தையும் விட்டுட்டு கொஞ்ச நாள் அங்க இருக்கற வேலை குழந்தைங்களை பாருடா.”

 

“ம்ம்..சரிடா, நீ அங்க இருந்து கொஞ்சம் பாத்துக்கோ. ஏதாவது ப்ரோப்லேம்ன்னா சொல்லு. கொஞ்சம் வீட்டுக்கும் போயி அம்மாவையும், அண்ணியையும்  பாத்துக்கோடா.”

 

“கண்டிப்பாடா. இத நீ சொல்லணுமா? நீ அங்க ரிலாக்ஸா இரு. நான் இங்க பாத்துக்கறேன்.”

 

“சரிடா” என்று போனை வைத்துவிட்டு சென்றான் ஆதர்ஷ் . அனைவரும் இரவு உணவிற்கு பின் உறக்கம் கொண்டு உறவாட, இவன் மட்டும் உறக்கம் விடுத்து உலாவிக்கொண்டிருந்தான். அதை கண்ட அக்சராவும் பதில் தெரியாமல், ஏதோ அவன் வேதனை இவளுக்கு உறுத்தலை கொடுத்தாலும் அவன் செயல் புரியாமல்  இருக்க அப்போதைக்கு அமைதியாக மட்டுமே அவளால் நகர்ந்துசெல்ல முடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 4பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 4

“நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டு எனக்கு அளவு கடந்த ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. என் எதிரே உட்கார்ந்துகொண்டு, சுமார் 20 வருஷங்களுக்கு முன்புதான் இறந்ததையும், சுடலையில் தன் பிணத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டதையும், தீ நன்றாகப் பிடித்துக் கொண்டதையும்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 45ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 45

45 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியுடன் அறைக்கு வந்த திவிக்கு செல்லமுடியா வேதனையாக இருந்தது. கோபம், கவலை என அனைத்து உணர்வுகளும் கலந்து இருக்க என்ன செய்வது என புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆதிக்கும் வருத்தம் தான். ஆனால் வேற வழியில்லை.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – ENDஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – END

78 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டில் வந்து சுந்தர், மீரா விஷயமும் பேசி தாத்தாவிடம் சம்மதம் வாங்கிவிட அடுத்தடுத்து அனைத்தும் துரிதமாக நடந்தேறியது. மதனின் பெற்றோர்கள் வந்ததும் அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் திருமணம் என்று முடிவானது. சுந்தர் மீரா திருமணம்