Tamil Madhura Uncategorized லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 11

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 11

அழகன்11

 

 

வெட்டு ஒன்று துண்டு

இரண்டென்று  சட்டென

முடிவெடுத்தவனை

இப்படி வெட்கம் கொண்டு

சிரிக்கவைத்தாய் ஏனடி.

 

காலையில் துயில் களைந்து எழும் போதே அகரன் மனது இதுவரை அனுபவிக்காத நிம்மதியில் இருந்தது,  சுஹீ என்றுமே தன்னை புரிந்து கொள்ளாமல் இருந்து விடுவாளோ என்ற கலக்கம் மறைந்து தன் காதலை புரியவைத்து விடுவேன் என்று நம்பிக்கை வந்தது அகரனுக்கு.

 

சுஹீராவின் வார்த்தைகளில் சலனப்பட்டுயிருந்த அகரன் மனது யமுனாவின் அறிவுறையில் தெளிவடைந்து இருந்தது.  கட்டிலின் அருகிலிருந்த டேபிளில் தனது புகை படத்தின் அருகில் அழகாய் கன்னத்தில் குழிவிழ சிரித்தபடி இருந்தவளை மெதுவாய் அவள் கன்னம் வருடி ” காலை வணக்கம் என் கண்ணம்மா” என்று முத்தமிட்டவன், “நீ சிரிக்கும் போது கன்னத்தில் குழிவிழுமா சுஹீ இதுவரை ஒரு முறை கூட நான் நேரில் பார்த்து இல்லை” அது சரி நீ சந்தோஷத்தில் சிரிக்கும்படி உனக்கு நான் என்ன செய்திருக்கிறேன் “கட்டுப்பாடு விதித்து காதலிக்க சொல்பவனை பார்த்தால் சிரிக்க தோன்றுமா என்ன?” என்று புகைப்படத்தில் இருந்த சுஹீராவின் கண்களை பார்த்து பேசிக்கொண்டு இருந்தவன்,  எவ்வளவு நேரம் தான் இப்படி படத்திடமே பேசுவது என்று தன் கைபேசியை எடுத்து சுஹீரா எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

 

 

 

வெகு நேரம் கடந்தும் பதில்யில்லாமல் போக தன் போன் எண்ணை கண்டதும் தவிர்கின்றாளோ என்று எண்ணம் வந்தது,  தனது வீட்டு லேண்ட்லைன் இருந்து முயற்சிதான் இம்முறை எடுத்தவள்,  “யார் அது நிம்மதியாய் தூங்க கூட விடாமல் சும்மா போன் செய்து தொந்தரவு செய்துகொண்டு”  என்று தூக்க கலக்கத்திலேயே உளரியவள்,  அகரன் சுஹீ என்று அழைக்கவும் “நீ தானா அதானே பார்த்தேன்  வேறு யார் என் நிம்மதியை கெடுக்க முடியும் நீதான் அந்த உரிமையை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து உள்ளேயே” என்று வார்தைகளாலால் காயம் தந்தவள் அகரன் மௌனமாய் இருக்க, “என்ன உன் வழக்கமான வசனம் மறந்துவிட்டதா? என்னிடம் பேசும் முன் யோசித்து பேசு இல்லை அதற்கான தண்டனை உன் குடும்பம் அனுபவிக்கும்” என்று அவனை போலவே சொல்லி காட்டியவள் இன்னும் அகரன் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருக்க “உனக்கு ஒன்றுமில்லையே என்னாயிற்று ஏன் எதுவும் பேச மாட்டேன் என்கின்றாய்,  ஏதும் பிரச்சனையா?” என்று அக்கறையாய் வினவியவன் குரலில் இருந்த ஏதோ ஒரு பதற்றம் அகரனுக்கு ஆறுதலை தந்தது.

 

“எனக்கு ஏதும் நேர்ந்தால் உனக்கு வருத்தமாய் இருக்குமா? சுஹீ” என்று அகரன் குரலில் இருந்த அதீத ஆர்வம் சுஹீராவை விழிக்கவைத்தது , “உனக்கு ஏதும் என்றால் நான் ஏன் வருத்த பட போகின்றேன்,  நீ யார் எனக்கு இல்லாததையும் யோசித்து உனக்கு இருக்கும் கொஞ்ச மூளையையும் கசக்கி காணாமல் போகச் செய்துவிடாதே அதன் பின் சதித்திட்டம் தீட்டி அடுத்தவருக்கு கஷ்டம் தர இருந்த கொஞ்ச மூளையும் இல்லாமல் சிரமப்படுவாய் அந்த அக்கரையில் சொன்னேன் நீயாய் ஏதும் கற்பனை செய்து அதற்கும் சேர்த்து என்னை இம்சை செய்யாதே” என்றாள் சுஹீரா. மீண்டும் அகரன் அமைதியாகி விட, “இப்போது எதற்கு அழைத்தாய் இன்று காலை உன்னை சந்திக்க வேண்டும் அதை நியாபாக படுத்த தானே நிச்சயம் வருகிறேன்,  வரவில்லை என்று மறுத்தால் மட்டும் நீ என்ன என்னை விட்டுவிடவா போகின்றாய்” என்று சலிப்புடன் கூறினாள் சுஹீரா.

 

“என்னை நன்கு புரிந்து வைத்துள்ளாய் சுஹீ இவ்வளவு புரிந்த உனக்கு என் உள்ளம் மட்டும் ஏன் புரியவில்லை என்று எனக்கு புரியவில்லை” என்று வெறுமையாய் சிரித்தவன். பிறகு உன்னை சந்திக்கிறேன் என்றவன்,  அவள் பதில் சொல்லும் முன் அழைப்பை துண்டித்தான் அகரன்.

 

காலையில் வழக்கத்திற்கு முன்பே தயாராகிவந்தவள்,  இன்று கொஞ்சம் முன்பே செல்லவேண்டும் சுகன் அதானல் நான் தனியாகவே செல்கிறேன், “நீ நிறுத்தி நிதானமாய் உன் பானை வயிற்றை நிறைத்து கொண்டு பொறுமையாய் கிளம்பு”,  என்று சுஹீரா கேலி செய்து கொண்டு இருக்கும் போதே, “வர வர நீ சரியில்லை உன் நடவடிக்கையும் சரியில்லை” என்றும் இல்லாமல் வேகமாய் கிளம்புகின்றாய் அடிக்கடி தோழிகளை பார்க்க செல்வதாய் நேரம் காலம் பார்க்காமல் வெளியில் சுற்றி திரிகின்றாய், உன் அப்பா உன்னை கண்டிக்காமல் இருக்கலாம் ஆனால் நான் அப்படியிருக்க முடியாது நாளையே,  நீ ஏதும் தவறு செய்து விட்டு வந்து நின்றாள் என் வளர்ப்பை தான் தவறாக சொல்வார்கள் என்று சுபத்ரா கடுமையாக கேள்வி கேட்டார்.

 

சுஹீராவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தன் மீது எந்த தவறுமில்லை இருந்தும் தான் செய்யும் செயலுக்கு விளக்கம் சொல்ல முடியாமல் தடுமாறினாள். “அம்மா ஒரு நாள் அவள் தொந்தரவுயில்லாமல்,   நான் நிம்மதியாய் மெதுவாய் கிளம்பிக்கொள்கிறேன் என்று சுகந்தன்,  மறைமுகமாய் சுஹீரா உதவிக்கு வந்தான்.

 

“நீயும் உன் அப்பாவும் கொடுக்கும் இடம் தான் இவள் இந்த அளவிற்கு ஆடுகின்றாள் சுகந்தனையும் சேர்த்து வசைப்பாடினார் சுபத்ரா.  அலுவலகம் கிளம்பி வந்த மகேஸ்வரன் “ஒரு நாள் அவளை திட்டாமல் இருக்கின்றாயா எப்போதும் குட்டிமாவை குறை சொல்லிக்கொண்டே, என் மகள் ஒரு காரியம் செய்கின்றாள் என்றால் அதற்கு பின் நிச்சயம் ஒரு வலுவான காரணமிருக்கும் உன்னிடம் பலமுறை கூறிவிட்டேன் நம் பிள்ளைகள் மீது நமக்கே நம்பிக்கை இல்லாமல் போனால் வேறு யார் அவர்களை நம்புவார்கள்”,  நீ கிளம்புடா என்று சுஹீராவின் தலையில் செல்லமாய் தட்டி கொடுத்தவர் மகள் கண்கள் கலங்கியிருப்பதை கண்டு அம்மா பேசியதை மனதில் வைத்துக்கொண்டு கலங்காதே என்று தோளோடு சேர்த்து அணைத்து விடுவித்தவர். “இந்த உலகத்தில் யார் உன்னை நம்புகின்றாகளோ இல்லையோ உன் அப்பா என்றுமே உன்னை நம்புவேன்” என்று தீர்க்கமாய் கூறினர் மகேஸ்வரன்.

 

கலங்கிய கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினாள் சுஹீரா. “ நான் பொய் சொல்வது செய்வது எல்லாமே தவறு தான் அப்பா உங்கள் நம்பிக்கையை உடைப்பது போல் நடந்துகொள்வது எனக்கும் வருத்தமாய் இருக்கின்றது”,  ஆனால் உங்களையும் சுகனையும் அந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்ற அவன் சொல்படி கேட்டு நடப்பதை தவிர வேறு வழி இல்லை நம் குடும்ப நலனுக்காக என் சொந்த விருப்பு வெறுப்புகளை விடுத்தது அவன் முன் பணிய வேண்டிய கட்டாயம் என்று மனதால் தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு வந்தவள் அகரன் காரை கடந்து சென்றாள் சுஹீரா. தன்னை கடந்து சென்றவளை கவனித்தவன் காரை விட்டு இறங்கி அவள் முன் சென்று புன்னகைபுரிந்து “என்னை பற்றி சிந்தித்து கொண்டே நீ என்னை கடந்து சென்றுவிட்டாயா கண்மணி” என்று அவளின் கரம் பற்றி அழைத்து வந்து காரினுள் அமர வைத்துவிட்டு அவனும் உள்ளே ஏறிக்கொண்டு காரை கிளப்பினான்.

 

 

சுஹீராவை கண்டதும் அணைக்க துடித்த மனதினை பெரும்பாடுபட்டு கட்டுப்படுத்தி கொண்டு அவள் கையின் காயத்தை ஆராய்ந்தவன் மருந்து போடவில்லையா என்று வினவ,  கீழ் உதட்டினை சுளித்து இல்லை என்பது போல தலையாட்டிட அது வரை தன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தவன்,  காதல் மனம் நச்சரிப்பு பொறுக்க முடியாமல் அவள் கரத்திணை மட்டும் இதமாய் பற்றி கொண்டான் அகரன்.   சுஹீ “உன்னை பிரிந்து செல்வது ரொம்ப கஷ்டமாய் இருக்கின்றது இப்படியே என்னோடு வந்துவிடேன் என் காலம் முழுவதும்” என்று தனது மனதின் தாக்கத்தை தயங்காமல் கூறிக்கொண்டு இருந்தான் அகரன்.

 

அதுவரை பதில் பேசாமல் அமைதியாய் இருந்துவந்தவள் “காலம் முழுவதும் உன்னிடம் சிறைப்பட்டு  உன் ஆசைகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் அடிமையாய் இருக்க சொல்கின்றாயா” என்று சுஹீரா வெறுப்புடன் கூற, சுஹீ நான் சொன்னதை நீ தவறாக புரிந்துகொண்டாய் “நீ என் அடிமை இல்லை,   என்னை ஆளும் அரிசி நான் தான் உன் காதலுக்கு அடிமை யாய் இருந்து என் கண்ணுக்குள் வைத்து உன்னை பாதுகாப்பேன்”

 

உன் அழகின்

அடிமை நானடி….

என் ஆண்மையின்

அரசி நீயடி…    

 

என்று தனது காதலின் ஆழத்தை கவிதை வரிகளில் நிறைத்து கூறினான் அகரன். “உன் கட்டாயத்தால் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கும் என் அப்பாவை நான் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றேன்”,  இந்த குற்றவுணர்வே என்னை கொன்று கொண்டு இருக்கின்றது,  இதில் இந்த கொடுமையை காலம் முழுவதும் அனுபவிக்க சொல்கின்றாய் என்று வெற்று புன்னகை சிந்தித்தவள் அவன் பற்றி இருந்த கரத்தினை வெறுப்புடன் பார்த்து “உன் கைக்குள் காலம் முழுவதும் இன்பமாய் சிறைபட்டு இருக்க நான் உன்னை காதலிக்கவில்லை அரக்கா”, உன் பணக்கார திமிரில் என் மீது கொண்ட காமம் உன் கண்களுக்கு காதலாய் தோன்ற இப்படி பைத்தியக்காரத்தனம் செய்துகொண்டிருக்கின்றாய், “என் மீது ஏற்பட்ட ஈர்ப்பு மறையவும் நீயே என்னை விலகி சென்று விடுவாய் அந்த நாளிற்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன்” என்று வலி மிகுந்த குரலில் கூறினாள் சுஹீரா.

 

நான் கொண்டது “காதலா இல்லை காமமா” என்று கண்டுபிடிக்க தெரியாத அளவு நான் முட்டாள் இல்லை என்று பற்றி இருந்த அவள் கரத்திணை வலிக்கும் படி இறுக பற்றினான்,  வலி தாங்காமல் அவள் முகம் சுருங்க முனங்கவும் கைகளை விடுவித்துவிட்டு காரை ஓரமாய் நிறுத்தியவன் இதற்கு மேல் தாங்காது என்று இழுத்து தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான் அகரன்.

 

“உன்னை காயப்படுத்தி விடுவேனோ என்ற பயத்தில் தான் நீ கடுமையாய் பேசும் போது பதில் தராமல் என்னை கட்டுபடுத்தி கொண்டிருந்தேன்” ஆனால் என்னையும் மீறி உன்னை காயப்படுத்தி விடுகிறேன்,  என்னை மன்னித்துவிடு சுஹீ. “தயவுசெய்து என்னிடம் பேசும் முன் யோசித்து பேசு சுஹீ என்னை கோபப்படுத்தும் வார்த்தைகள் நீ கூறினால் நான் உன்னை காயப்படுத்திவிடுகிறேன், நீ வலியில் துடித்தால் என் மனமும் இருமடங்கு வலியில் துடிக்கின்றது” என்று அவள் இதழ் நாடி தன் இதயத்தின் வலியினை அவளுக்கு உணர்த்திவிடும் வேகத்தில் முரட்டு முத்தங்களால் தனது கோபத்தினை குறைத்து கொண்டிருந்தான் அகரன்.

விலகிவிட போராடி முடியாமல்,  கோபத்தில் சிவந்திருந்தவள் கன்னத்தில் தனது இரு கைகள் கொண்டு தாங்கி பிடித்து “எப்போதும் உன் குடும்பம் உன் அப்பா  என்று அவர்களையே நினைத்து கொண்டு குற்றவுணர்வில் துடிக்கின்றாயே உன்னையே நினைத்து உனக்காக துடித்து கொண்டு இருக்கும் என்னை ஏன் ஒரு நொடி கூட நினைக்க மறுகின்றாய்” சுஹீ. நான் உன்னை கட்டாயப் படுத்துகின்றேன் என்கின்றாயே இந்த கட்டாயத்தால் உன்னை என் அருகிலேயே வைத்துகொள்ள துடிக்கும் என் காதல் தெரியவில்லையா உனக்கு,  “வார்த்தைக்கு வார்த்தை அரக்கன் என்று காயப்படுத்துகின்றாயே,  இந்த அரக்கன் மனதில் உனக்காக சேர்த்து வைத்திருக்கும் அழகனா காதல் தெரியவில்லையா உனக்கு” என்று அவள் கண்களில் தனக்கான விடையை தேடினான் அகரன்.

 

அகரன் கண்களில் தன் மீதான காதலை உணர்ந்தவள் “காதல் மென்மையான உணர்வு உனக்கும் மென்மைக்கும் வெகு தூரம் உன்னை பற்றி எண்ணம் வந்தாலே உன் முரட்டு குணமும் பிடிவாத செயலும் திமிரும் என் நினைவை நிறைத்து விடுகின்றன இதில் நான் எங்கிருந்து உன் காதலை கண்டறிந்து அதனை உணர்வது”,  என்று அகரன் கண்களை பார்ப்பதை தவிர்த்து இமைகள் மூடியபடி கூறினாள் சுஹீரா.

 

மூடிய இமைகளுக்கு முத்தமிட்டவன் “சதிசெய்து உன்னை அருகில் வைத்துகொள்ள நினைக்கும் நான் அரக்கன், பிடிவாதக்காரன் தான் ஆனால் நான் உன்மீது கொண்ட காதல் மட்டும் உண்மை உனக்காக என் வழக்கமான பிடிவாத குணத்தை விடுத்து என் எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளேன்” என்று தனது மாற்றம் என்ன என்று கூற துவங்கியவன்,  ஒரு நொடி யோசிதித்தான் . “அவள் மீது கொண்ட காதலில் தவறு செய்வதையே பொறுத்துக்கொள்ள முடியாதவள் அவள் தந்தையை பழிவாங்க அவளை பயன்படுத்த நினைத்தது மட்டும் தெரிந்தால் இப்போதிருக்கும் இனக்கமும் மறைந்து தன்னை முழுத்தாய் வெறுத்துவிடுவாள்” என்று புரிய அப்படியே சொல்லாமல் நிறுத்தினான் அகரன்.

 

அகரன் எதையோ சொல்ல துவங்கி பாதியில் நிறுத்தவும் என்ன என்பது போல பார்த்தாள் சுஹீரா. “என் வழக்கமான காலை உணவை தவிர்த்து உன்னை காண வந்தேன் இதை தான் சொல்ல வந்தேன் எனக்கு வயிற்றில் பசி ராகம் போடத்துவங்கிவிட்டது, ஏதாவது சாப்பிட்டு கொண்டே பேசுவோம்” என்று காரை கிளப்பி ஒரு ஹோட்டல் முன் நிறுத்தினான்.  முதல் நாள் நடந்தது நினைவு வர இறங்க தயங்கியளின் காதில் மெதுவாய் “பயப்படாமல் வா வயிற்று பசி என்று தான் சொன்னேன் வயது பசி இல்லை உன்னை விழுங்கிவிட மாட்டேன்” என்று அகரன் கூறவும், அவன் சொன்னதன் பொருள் புரிந்தவள் முகம் கோபத்தில் சிவக்க அப்படியே “நீ என்னை நெருங்கினாலும் உன்னை எரித்துவிடுவேனே தவிர. உன் ஆசை தீயில் எரிந்துவிடமாட்டேன்” என்று கோபமாய் பதில் தந்தாள் சுஹீரா.

 

கோபம் நிறைந்த கண்களையும் காதலோடு பார்த்துக்கொண்டு இருந்தவனை இமை விலகாது பார்த்தாள் சுஹீரா,  “இதழ்கள் மெல்ல விரிந்து வரிசை பற்கள் அழகாய் மிளிர காற்றில் களைந்த முடி கூட அவன் ஆண்மையை அழகாய் காட்ட அவனை மறந்து தன்னை ரசிக்கும் கண்களில் தனது செயலுக்கான ரசனையை கண்டவள் இவன் இப்படி தன் மீது காதல் பைத்தியமாய் இருப்பதற்கு நான் என்ன செய்தேன்” என்று குழம்பி போனாள் சுஹீரா.

 

தன் முன் குழப்பமான முகத்துடன் இருந்தவளை கண்டும் மேலும் மயக்கும் புன்னகை புரிந்தவன். “உன்னிடம் எதை கண்டு மயங்கினேன்” என்று குழப்பமாய் உள்ளதா சுஹீ என்று அகரன் வினவ,  தன்னை மறந்து ஆமாம் என்று தலையாட்டியவன் சுயநினைவு பெற்றவளாய் இல்லை என்பது போல் மறுத்து தலையாட்டினாள் சுஹீரா. “ஆமாம் என்றால் இப்படி தலையை இப்படி ஆட்ட வேண்டும் இல்லை என்றால் இப்படி ஆட்ட வேண்டும்” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் கற்றுதந்தவன் செயலில் கோபம் மறைய இதழ் தானாய் புன்னகை பூசிக்கொண்டது. “இப்படியே ஆட்டி கொண்டியிரு தலையாட்டி பொம்மை போல் பார்க்க அழகாய் இருப்பாய்” என்று சுஹீரா கூற,  தங்கள் உத்தரவு மகாராணி” என்று தலை தாழ்ந்து எழுந்தவன் நீயும் இப்படியே சிரித்துக்கொண்டேயிரு தேவதை போல் அழகாய் இருப்பாய் கண்மணி” என்று அவள் இதழ் வருடியவன்,  முகம் சுருங்கி விலகுவதை கண்டு கையை அகற்றி கொண்டான் அகரன் .

 

இருவருக்கும் சேர்த்து உணவினை ஆர்டர் செய்தவன் அவள் மறுத்தும் கேட்கமால் நீயும் சாப்பிடாமல் தான் வந்திருப்பாய் என்பது உன் முகத்திலேயே தெரிகின்றது என்று அவளுக்கு கட்டாயபடுத்தி ஊட்டிவிட்டான் அகரன். அவன்  தருவதை தவிர்த்து தானே உண்ண எண்ணி உணவினை தொட்டவள் தீக்காயதால் கை வலியில் துடித்திட அவள் கையில் இருந்ததை வாங்கி கீழே போட்டான் அகரன். “அப்படி என்ன உனக்கு பிடிவாதம் இதில் நீ என்னை பிடிவாதக்காரன் என்கின்றாய்” என்று தனது நாற்காலியை அவள்புறம்  நகர்த்தி ஒட்டிப்போட்டு அமர்ந்தவன்,  அவள் மறுப்பை பொருட்படுத்தாமல் கன்னம் பற்றி தன்புறம் திருப்பி ஊட்டி விடத்துவங்கினான் அகரன்.

 

வேண்டா வெறுப்பாய் முகம் சுருங்க அவன் தந்ததை உண்டு கொண்டு இருந்தவளை கண்டவன் “நேற்று உன் அப்பா ஊட்டும் போதும் இப்படி தான் முகத்தை உர்… என்று வைத்து இருந்தாயா” என்று அவள் வைத்து இருந்தது போல் அகரன் செய்து காட்ட , வந்த சிரிப்பை அடக்கி கொண்டவள் “என் அப்பாவும் நீயும் ஒன்றா”,  என் அப்பா என் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் உன் செயலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று ஏளனமாய் பதில் தந்தாள் சுஹீரா.

 

“உன் அப்பாவிற்கு உன்னை எந்த அளவிற்கு பிடிக்கும் சுஹீ” என்று அகரன் வினவ இது என்ன கேள்வி “ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று சிறுபிள்ளை போல் கையை அகற்றிக்காட்டினாள் சுஹீரா. “உன் அப்பாவிற்கு உன் அண்ணனையும், அம்மாவையும் எந்த அளவிற்கு பிடிக்கும் சுஹீ”  என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டான் அகரன். “என்னை பிடித்தது போல தான்” என்று இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்பது போல தயங்காமல் பதில் தந்தாள் சுஹீரா.

 

“உன் அப்பா உன் மீது வைத்திருக்கும் பாசத்தை,  உன் அம்மா அண்ணனுடனும் பங்கு போட்டுக்கொண்டார் சுஹீ” ஆனால் “நான் உன் மீதான அன்பினை யாருடனும் பங்கு போட விரும்பவில்லை எந்த அளவிற்கு பிடிக்கும் என்றதற்கு ரொம்ப ரொம்ப என்று கை விரித்து காட்டினாயே,  என் அன்பின் அளவை அளந்து சொல்ல வானின் நீளம் கூட போதாது கண்மணி” என்று மற்றொரு வாய் ஊட்டிவிட அதை மறுக்காமல் வாங்கி கொண்டவள், “உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை” நான் வலியில் துடித்தால் என்னை விட இருமடங்கு வேதனையில் நீ தவிக்கிறாய்,  ஆனால் எனக்கு அந்த வலியை கொடுப்பதும் நீயாகவே இருக்கின்றாய் “உன்னை விட யாரும் என்னை அதிகமாக நேசிக்கமுடியாது என்று எனக்கு நிரூபிக்க நினைக்கின்றாய்” ஆனால் “நீயே தான் உன் அளவில்லா கோபத்தில் எனக்கு காயமும் தருக்கின்றாய்” என்று குழப்பமாய் வினவினாள் சுஹீரா.

 

“நீ என்னை புரிந்து கொண்டிருந்தால் நான் உனக்கு அரக்கனாகவா தெரிந்து இருப்பேன் அழகனாய் அல்லவா தெரிந்து இருப்பேன்” என்று சிரித்தவன் முகத்தில் இருந்து பார்வையை விலக்காமல் சிறிது நேரத்திற்கு முன் அவனை ரசித்தது நினைவு வர முகம் நாணத்தால் சிவக்க அதை மறைக்க வேறுபுறம்  திரும்பி கொண்டாள் சுஹீரா.

 

உணவு முடிந்ததும் அதற்கான பணத்தை செலுத்திவிட்டு இருவரும் கிளம்பினர். கல்லூரி வாசல் அருகே கார் நிற்கவும்,  “நாளையும் இப்படி முன்னதாக அழைக்காதே என்னால் வர இயலாது” என்று கூறிவிட்டு கீழே இறங்க போனவள் கரம் பற்றி,  “எனக்கு தினமும் ஒரு முறையேனும் உன்னை சந்திக்க வேண்டும் சுஹீ இல்லை என்றால் அந்த நாளே எனக்கு வெறுமையாய் தோன்றும்” என்று கெஞ்சலாய் கேட்க மாலை என் வீட்டின் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் சந்திக்கலாம் என்று கூறினாள் சுஹீரா.

 

உன்னை ஏன் சந்திக்க வேண்டும் என்று வீம்பு செய்வாள் என்று அகரன் நினைக்க அவளே சந்திக்க. நேரம் இடம் கூறவும் வந்த சந்தோஷத்தில் அவளை அணைக்க நெருங்கியவன் மார்பில் கைவைத்து தடுத்தவள்,  போதும் நேரம் ஆயிற்று என்று வேகமாய் விலகி சென்றாள் சுஹீரா.

 

“எப்படியும் சந்திக்க கட்டாயப்படுத்துவான் மறுத்தால் அண்ணனை வைத்து ஏதும் திட்டம் தீட்டி தான் நினைத்ததை சாதித்து கொள்வான் நேற்று இன்று போல தனிமையில் சந்தித்தால் அத்துமீற தான் செய்வான் இதுவே நிறைய பேர் இருக்கும் பொது இடம் என்றால் விலகி இருந்து தானே ஆக வேண்டும்” அப்போது எப்படி பாய்ந்து வந்து அணைப்பான் அனுமதி இல்லாமல் தொடுவான் என்று ஒரு திட்டதுடன் தான் சுஹீரா சிறுவர் பூங்காவை சொன்னது அது புரியாமல் நானே சந்திக்க சம்மதம் சொல்லிவிட்ட சந்தோஷத்தில் செல்கின்றான் இந்த பிடிவாதாக்கார அரக்கன் என்று தனக்குள் சிரித்து கொண்டாள் சுஹீரா.

 

உன்னையே அறியாமல் மெல்ல மெல்ல என் பக்கம் வரத்துவங்கி விட்டாய் சுஹீ,  “உன்னை கண்களால் காண்பதே இன்பம் என்று எண்ணுபவன் நான் உன்னை தொடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் எக்ஸ்ட்ரா போனஸ் போன்றது,  இதில் பொதுஇடம் என்றால் உன்னை நெருங்கமாட்டேன் என்று தப்பு கணக்கு போட்டு நீயே என்னை நெருங்கி வந்துவிட்டாய் சுஹீ” என்று தன்னவளின் மாற்றம் எண்ணி தனக்குள் சிரித்து கொண்டான் அகரன்.

 

கண்களால் களவாடினாய்

அழகால் கொலை செய்கின்றாய்

உன் சிரிப்பால் அணுவனுவாய்

சிதைக்கிறாய்

உன் அளவில்லா திமிரில்

என்னை தினறடிக்கின்றாய்

நீயும் தீவிரவாதி தான்

காதல் தீவிரவாதி…..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post