Tamil Madhura கதைகள்,காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – 14

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 14

பாகம் 14

அப்பாடி ஒருவழியா அப்சராக்கு நல்ல மாப்பிள்ளையாவே கிடைச்சுட்டாறு என் மனசு முழுக்க நிறைஞ்சுடுச்சு ஹனி.உன் மாமு  ஹேப்பி மூட்ல இருக்கேன் ஒரு உம்மா குடுடி என கிஷோர் கேட்க தேனு வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் .இந்த வயசுல இப்படி பேசுறீங்க என பொய்க்கோபம் காட்டிய தேனுவை இறுகக்கட்டிக்கொண்டான் கிஷோர்.வயசான காலத்துலயும் உன் குசும்பு போகமாட்டேங்குது மாமு என அவனை தள்ளியவள் அறைநொடியில் ஓடினாள்.தன் ஆசைமகளின் திருமணத்திற்கு நகை,துணி என ஒவ்வொன்றும் பார்த்து அவளுக்கு பிடித்தவாறே வாங்கினான் கிஷோர்.கல்யாண வேலைகள் மிகத்துள்ளியமாக நடந்துகொண்டிருந்தன.உனக்கு என் நகையில இருந்து எது வேணுமோ எடுத்துக்கோமா என அப்சராவிடம் தேனு கூறினாள.அம்மா உன்னோட வைரம் பதித்த பெண்டன்டை தாமா அதான் ரொம்ப சூப்பர் எனக்கேட்க.சிறுபிள்ளை போல் தேனு”ம்ஹூம் அது மட்டும் தரமாட்டேன்.. அதான் உங்க அப்பா கல்யாணத்தன்னைக்கு வாங்கி தந்தது எனக்கும் பிடிச்சது எனக்கூற ..அப்பா இந்த அம்மாவை பாருங்க ரொம்ப சீட்டிங் பண்றாங்க என தந்தையிடம் புகார் செய்ய கிளம்பினாள் அப்சரா.கிஷோர் தேனுவிடம் இங்க பாரு மா சின்ன பொண்ணு ஆசைப்படறா அதை அவளுக்கு குடுமா எனக்கேட்ட கிஷோரை கோபப்பார்வை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.ஹே என்னாச்சுடி என அருகில் வந்த கிஷோரிடம் உங்க பொண்ணு எதைக்கேட்டாலும் குடுப்பேன் இந்த பெண்டன்ட் தான் நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்ச முதல் நாள் நீங்க எனக்கு தந்தது…இதை பார்க்கும்போதெல்லாம் என் மனசுல ஆழத்துல நம்ம காதல் நியாபகம் வரும் இது வேணும்னு கேட்டா நான் தரமாட்டேன் என கண்களை துடைத்தாள்…அட மக்கு இதுக்கு போய் அழலாமா உன் பொண்ணுக்கு அதே மாதிரி ஆர்டர் குடுத்து வாங்கி தந்துடுறேன்இப்போ சிரி என கிஷோர் கூற…ஈஈஈ போதுமா என அவள் கேட்டாள்.கிஷோருக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது இதுக்கு நீ சிரிக்காமலோ இருந்துருக்கலாம்டி தங்கம் என சொல்ல அவள் செல்லமாய் அவன் முதுகில் குத்த இதை கவனித்த அப்சரா “அடடா எவ்வளவு லவ் என் மாம் மேல என் டாடிக்கு எவ்வளவு பாண்டடா இருக்காங்க”என தனக்குள்ளே நினைத்தாள்..தேனு நான் ஆபிஸ் கிளம்புறேன்மா என அவன் கூற கதவருகே நின்றவாறு அவனை வழியனுப்பினாள்.அப்பாக்கூட அம்மா எவ்வளவோ சண்டை போட்டாலும் அம்மா அப்பா மேல இவ்வளவு லவ்வோட இருக்காங்க ரியலி கிரேட் என மனதில் எண்ணினாள்.அண்ணி எப்படி இருக்கீங்க என சிறுபிள்ளைபோல் ஓடி வந்த ஆஷா தேனுவை கட்டிக்கொண்டாள்.அத்தை எப்படி இருக்கீங்க நம்ம இரண்டு பேரும் இன்னைக்கு சாப்பிங் போகலாம் குட்டி குட்டி திங்க்ஸ் நிறைய வாங்க வேண்டியிருக்கு என்றாள் அப்சரா .கண்டிப்பா போகலாம் சரண் எங்க சார் லாவ் காலேஜ்ல சீட் கிடைச்சுடுச்சாம்ல சொல்லவே இல்லை என  அவனைத்தேடிக்கொண்டே சென்றாள்.தன்வீரும் தயர்ஷினியும் தந்தையோடு வருவதாகக்கூற சரண் முகம் வாடியது.இப்போது ஆஷாவின் கணவர் அவர்களை கூட்டிவர 10ம் வகுப்பு படிக்கும் தன்வீர்,தர்ஷினி இருவரும் அத்தையைக் கட்டிக்கொண்டனர்.சமையல் மெனு கொடுக்க ஆரம்பித்தனர் எனக்கு குழிப்பணியாரம் வேணும்,புலாவ் வேணும் என லிஸ்ட் போட்ஞனர் தேனு சிரித்துக்கொண்டே எல்லாம் செய்யுறேன்டா என்றாள்.திருமண நாளும் நெருங்கி வந்தது நல்ல கோலாகலமாக அப்சரா,பாலா திருமணம் நிகழ்ந்தது சொந்தங்கள் கூடி வாழ்த்திட இனிதே திருமணம் முடிந்தது ராசாத்திக்கு சிவமூர்த்தி இல்லாத குறைதான் இருந்தாலும் தன் தோழியின் மகளே தன் மருமகளாக வருவது பெரிய மகிழ்ச்சி .பாலா அப்சரா இனிதே குடும்பம் நடத்தினர் அவர்களை பார்த்து பூரித்து போனாள் ராசாத்தி இப்பொழுது கையில் அழகிய பேரக்குழந்தை ஆருஷ் வேறு கிடைத்துவிட்டான்அப்புறம என்ன மகிழ்ச்சிதானே பாட்டிக்கு .சரணும் தன் படிப்பை முடித்து பிரபல வக்கீலிடம் ஜூனியராக சேர்ந்தான் இன்றோ சென்னையில் சிறந்த வக்கீல்களில் ஒருவன் அவன்.கிஷோருக்கு ரிடையர்மென்ட் ஏஜ் வந்தது ஆபிஸ் ஸ்டாஃப்கள் செண்ட்ஆப் செய்ய தேனுவிற்கு மட்டும் சிறுகவலை முகத்தில் படர்ந்திருந்தது என்ன இருந்தாலும் இத்தனை நாள் பிஸியாகவே இருந்த கிஷோர் இப்பொழுது வீட்டில் இருப்பது கஷ்டமேஅதுவும் பிடித்த வேலையை விட்டு பிரிவதால் எவ்வளவு கவலைப்படுவார் என்பதுதான் அவளின் கவலை.வீட்டிற்கு வந்ததும் சந்தோஷமாய் தேனு அருகில் வந்த கிஷோர் இனி என் தேனு பேரன் ஆருஷ்கூட ரொம்ப ஜாலியா என்னோட ரிட்டயர்மென்ட் ஏஜ் ஸ்பெண்ட் பண்ண போறேன் என அவளை தூக்கிவிட்டான்.அவன் மகிழ்ச்சியை கண்ட அவளுக்கு மனம் மகிழ்ந்தது மனக்கவலை முழுதாய் குறைய என்னங்க என்னைய கீழே இறக்கி விடுங்க சரண் வேலை முடிச்சு வர்ற டைம் என அவள் கத்த அவளை இறக்கி விட்டு அவள் கன்னத்தில் மகிழ்ச்சியில் முத்தம் பதித்தான்.

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46

46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என

கபாடபுரம் – 30கபாடபுரம் – 30

30. அரங்கேற்றம்   பல தடைகளை எழுப்பிச் சிகண்டியாசிரியருடைய பொறுமையைச் சோதித்தபின் இசையிலக்கணத்தைப் புலவர் பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரியபாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப் பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42

உனக்கென நான் 42 கையில் அந்த சிறிய கோப்பை இடம் பிடித்திருக்கவே தன் அன்னையிடம் ஓடி வந்தாள் சுவேதா. தன்னை நினைத்து தன் தாய் பெருமைபடுவார் என சுவேதா ஓடி வந்தாள். அது அவள் எட்டாம் வகுப்பின் துவக்க தருணம் தான்