மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23

23

ரு மழை நாளில், சுஜி உனக்கு யாரோ விசிட்டர் என்று ரோசி சொன்னதும், சோம்பலாக படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சுஜி எழுந்து குதித்தோடி வெளியே சென்றாள். போன வாரமே விக்கி வருகிறேன் என்று சொல்லி இருந்தான். பரபரவென ஒரு இளஞ்சிவப்பு சுடிதாரை அணிந்துக் கொண்டு குடையுடன் வெளியே சென்றாள்.

சுற்றும் முற்றும் விக்கியைத் தேடி நடந்தவளை, “ஹாய் சுஜிகுட்டி” என்ற குரல் திடுக்கிட வைத்தது. கருப்பில் சிறிய வெள்ளைக் கோடுகள் போட்ட டிஷர்ட்டும், நீல நிற ஜீன்சும் அணிந்து, தனது வழக்கமான சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தான் மாதவன்.

“யார் இந்த அட்ரஸ் தந்தது?”

“நீதான்”

“நானா… என்ன உளறல் இது”.

“ஆமா அன்னைக்கு நீதானே என்னை ரூம்ல வந்து பார்த்துட்டு இங்க இருக்குறத indirect ஆக சொன்ன”.

“அப்பவே என்ன கண்டுபிடிச்சுட்டிங்களா?”

“ஆமா. அப்பறம் அங்க உன்னப்பத்தி விசாரிச்சு இங்க வந்துட்டேன்”.

“அங்கேயே அன்னைக்கே பார்த்து தொலைச்சு இருக்கலாமே…”

“இருக்கலாம்தான்… ஆனா அனிதா முன்னாடி எதுக்குன்னு நெனச்சு விட்டுட்டேன்”

“ஆமாமா… உங்க மனைவி கூட இருக்கும் போது எப்படி என்கூட பேசுவிங்க?”

“கரெக்ட். சரியாச் சொன்ன. என் மனைவி கூட இருக்கும்போது வேறு பெண்கள் யாரும் கண்ணுல தெரியமாட்டாங்க”.

“சரி இப்ப எதுக்கு வந்திங்க?”

“என்ன சுஜி, அத்தான் உன்னத் தேடி ஓடி வந்திருக்கேன்; என்கிட்ட அன்பா நாலு வார்த்தை பேசக்கூடாதா?”

“அன்பா… உன்கிட்ட நான் பேசவே தயாரா இல்ல”.

“சரி பேச வேண்டாம். நான் பேசுறதையாவது கேளு”

“முடியாது”.

“ரெண்டும் வேண்டாம். ஒரு கப் காபியாவது என்கூட குடிச்சுட்டுப் போ”.

“மாட்டேன்”.

“சரி நீ குடிக்க வேண்டாம். நான் குடிக்குறேன். நீ பக்கத்துல வந்து உட்கார்ந்திரு போதும்.”

“அதுவும் மாட்டேன்” என்றபடி நடக்க ஆரம்பித்தாள்.

“அப்ப சரி, நேரா அத்தைகிட்ட போய் இந்த அட்ரஸ்ஸை கொடுத்துடுறேன். எங்க வீட்டுல வேற, பொண்ணக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க”.

இது சுஜியை காபி ஷாப்புக்கு இழுத்து வரப் போதுமானதாக இருந்தது.

“காபி குடிச்சதும் வந்துடுவேன்”.

“சரி”.

“நீங்க பேசினா எந்திருச்சு வந்துடுவேன்.”

“சரி”.

மெலிதான இருட்டு. மனதை மயக்கும் மேற்கத்திய பாடல்.
இது எதுவும் சுஜியைக் கவரவில்லை. இவனுக்கு நான் ஏன் பயப்படணும்? இப்பிடி மிரட்டிக் கூட்டிட்டு வரது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். இனிமே இந்த மாதிரி பிளாக்மெயில் பண்ணா அப்பா கிட்ட சொல்லிடுவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட வேண்டியதுதான்.

ரெண்டு கேப்பசினோ (cappuccino) என்று அவன் சொன்னதை மறுக்காமல், வாங்கிப் பருகத் தொடங்கினாள் சுஜி. கவனமெல்லாம் எங்கோ இருந்ததால் இரண்டு கண்கள் அவளைப் பருகியதை அவள் கவனிக்கவில்லை. அதிர்ஷ்டக்காரனுக்கு இருட்டும் துணை செய்தது. புதியபாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

Every night in my dreams
I see you. I feel you.
That is how I know you go on.

Far across the distance
And spaces between us
You have come to show you go on.

Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you’re here in my heart
And my heart will go on and on

Love can touch us one time
And last for a lifetime
And never go till we’re one

Love was when I loved you
One true time I hold to
In my life we’ll always go on

Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you’re here in my heart
And my heart will go on and on

There is some love that will not
go away

You’re here, there’s nothing I fear,
And I know that my heart will go on
We’ll stay forever this way
You are safe in my heart
And my heart will go on and on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

லட்சுமி வாருமம்மாலட்சுமி வாருமம்மா

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி

ராணி மங்கம்மாள் – 28ராணி மங்கம்மாள் – 28

28. மங்கம்மாள் சிறைப்பட்டாள் விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி மூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 29

29 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் காலையில் எழுந்ததும் திவி தோட்டத்திற்கு கிளம்பிவிட்டாள். உடன் சுந்தர் வருகிறேன் என கிளம்பினான். திவியை ஆவலுடன் காண வந்த ஆதிக்கு இதை கேட்டதும் கோபம். இவ போகுறதுன்னா ராமைய்யா கூட போகவேண்டியதுதானே, சுந்தர் கூட