ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே!
நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.
அன்புடன்
தமிழ் மதுரா.
நேசம் மறந்ததில்லை
நேசிக்க மறந்ததில்லை என் நெஞ்சம்
சூழ்நிலைகள் சூறாவளியாய் எனைக்
களம் மாற்றியதென்னவோ நிஜம் தான்
ஆனால் என் போர்க்களத்தில் – பந்தயக்
குதிரையாய் ஓடிக் கொண்டிருக்கும் வேளையிலும்
உன் நினைவு சுமந்தே ஓடுகின்றேன்
உணர்வாயா நீ?
முடிந்ததெனவே எண்ணினேன் நம் உறவு – ஆனால்
முடியாதெனவே அடம்பிடித்து அழும் சிறுமியாய் – என் இதயம்
இலையுதிர் காலத்தின் சருகுகளாய் – சட்டென
இறங்குகின்றன உன் நினைவுகளும் நாம் சந்தித்த நாட்களும்
கோடையிலும் பனி தரித்த அல்ப்ஸ் மலைச் சிகரங்களாய்
குற்றால அருவியாய் சில்லென எட்டிக் குதித்து – எனைத்
தகித்து தான் செல்கின்றன நம் காதலின் மிச்சங்களும் !
~ ப்ரியவதனா ~