Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 63

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 63

63 – மனதை மாற்றிவிட்டாய்

அடுத்து வந்த தினங்களில் யாருடனும் திவி ஒட்டவில்லை. அவளையும் கண்டு கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆதியும் திவி உட்பட யாருடனும் நெருங்காமல் கேட்ட கேள்விக்கு பதில் என்றிருக்க மூன்று நாட்களில் அபியை குழந்தையுடன் வீட்டுக்கு அழைந்து வர திவி இன்னும் ஒதுங்கியே இருந்தாள். இவளின் இந்த தனிமை நிலை ஆதிக்கு வருத்தம் அளிப்பினும் எதுவும் செய்ய இயலாமல் இவளை காணவும் முடியாமல் ஆபீஸே கதி என்றானான். மறுநாள் சுந்தர் ஊரில் இருந்து வந்தான். அவன் அர்ஜூனிடம் கால் செய்து எல்லார்கிட்டேயும் திவி சம்பந்தமா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி வீட்டில் இருக்க சொன்னான்.

அர்ஜுனும் ஆதி வீட்டார் திவி வீட்டார் அனைவரிடமும் சொல்லி வீட்டில் கூடியிருக்க என்ன நினைத்தானோ ஆதிக்கும் கால் செய்து விஷயத்தை கூறி அவனையும் வீட்டிற்கு வர சொன்னான். வந்தவனிடம் அனைவரும் விசாரிக்க “அந்த விடியோல சொத்து வேணும்னு திவி பேசுனதுல திவி மேல தப்பில்லை. அவ நல்ல விஷயத்துக்காக தான் பண்ணா என்றவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் திவியையும் அழைக்க சொன்னான். சில நிமிடங்களில் அவளும் ஹாலுக்கு வந்து அமர்ந்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கு மொத்த குடும்பமும் ஒன்றாக பார்க்க அவளுக்கு மனம் லேசானது. ஆனால் அதில் தான் இல்லை என நினைக்க மனம் கனக்க சுந்தரிடம் “எப்படி இருக்கீங்க சுந்தர், அடிபட்டதுனு சொன்னாங்க. இப்போ பரவாயில்லையா? சாரி பாக்க வரமுடியலை. என அவள் வருத்தம் தெரிவிக்க அவனும் பதில் கூறிவிட்டு ஒரு நிமிடம் அனைவரையும் பார்த்தவன்

“உங்க எல்லார்கிட்டயும் நான் மொதல்ல மன்னிப்பு கேக்கணும். முக்கியமா திவி உன்கிட்ட. நான் பேசி முடிக்கறவரைக்கும் யாரும் தயவுசெஞ்சு எமோஷன் ஆகாம கேளுங்க. முழுசா சொன்னதுக்கு அப்புறம் என்னவேணாலும் பண்ணிக்கோங்க என அவன் பீடிகையுடன் ஆரம்பித்தான்.

“அன்னைக்கு திவி அந்த மாதிரி சொத்து பணம் இதுக்காக தான் இந்த குடும்பத்தோட பழகுன்னேனு சொன்னது பொய்க்காக. உண்மையா அதுக்கு ஆசைப்பட்டது திவி இல்லை. என் அம்மாவும், தங்கச்சி சோபியும் தான் என்றவன் ஆதி சோபி கல்யாணம் வேண்டாம் என கூறியது சோபி குணம் பற்றி கூறியது எல்லாம் சேர்ந்து அவள் மிகவும் கோபமாக அனைவரையும் பழிவாங்க போட்ட பிளான் அதை திவி கேட்டது, அடுத்த நாள் அம்மு, அர்ஜுன் நிச்சயம் அன்னைக்கு அபி அண்ணி விழுக போனது, அம்மு நிச்சயம் அப்போ எல்லாரும் ராசி சரியிலேன்னு பேசி குழப்பம் பண்ண பாத்தது எல்லாமே அவங்க வேலை தான் என கூறினான்.

அன்று நடந்ததை கூறினான்.

அன்னைக்கு மதியம் பக்கம் நான் நிச்சயம் வீடியோ எல்லாம் எடுத்திட்டு என்னோட வீடியோ கேமராவ வீட்ல வெக்க வந்தேன். அப்போ நகையை வீட்ல வெக்க திவியும், அர்ஜுனும் வந்தாங்க. திவி வாய்ஸ் கேக்க அவள் மாடியில் குருவியை வெளியே எடுத்துவிட சொல்லி அர்ஜுனிடம் கேட்டுக்கொண்டு அதனோட விளையாட அதை வீடியோ எடுத்து ரசித்துக்கொண்டிருக்க அவர்கள் கவனிக்கா வண்ணம் பக்கத்தில் இருந்து ஸ்டோர் ரூம் அறையில் புகுந்து கொண்டு வீடியோ மட்டும் எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரம் அருகே இருந்த அறையில் சோபி, ஈஸ்வரி பேசியதை கேட்க இவன் அந்த சன்னல் வழியாக எட்டி பார்த்தான். திவியிம், அர்ஜுனும் கூட அந்த அறைக்கு வெளியே நின்று கேட்டனர். அவர்கள் பேசியது திவி அவர்களை இப்போதைக்கு திசை திருப்பி தடுக்க கூறிய பொய், அடுத்து அர்ஜுனிடம் அவள் கூறியது, பரமேஸ்வரன் வந்து சத்தியம் வாங்கியது, அவனிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கியது எல்லாமே சுந்தரும் அவனது வீடியோ கேமராவும் ரெகார்ட் செய்துகொண்டது.

நம்ம குடும்பத்துல யாரும் பிரச்சனை பன்னிக்கக்கூடாதுனு தான் திவி அப்படி பேசுனா, சத்தியம் பண்ணா. அதனால தான் ஆதியை தவிர வேற யார்கிட்டேயும் இத சொல்லமாட்டேனு சொல்லிருக்கா. அர்ஜுனும் சத்தியம் பண்ணிட்டதால தான் எதுவும் பண்ணமுடியாம இருந்திருக்கான். திவி மேல தப்பில்லை என்றதும் அனைவருக்கும் என்னவென்று கூறமுடியாத உணர்வு.

அர்ஜுன் மட்டும் “எல்லாம் சரி, சுந்தர், ஆனா இதெல்லாம் உனக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கு. அப்புறம் ஏன் இவளோ நாள் இத வந்து சொல்லல. அண்ட் அந்த வீடியோ அனுபிச்சது யாரு?” என

தலைகுனிந்து “நான் தான். ” என்றான். அர்ஜுனுக்கே இப்பொது அதிர்ச்சி. “அதனால எவ்வளோ பிரச்சனை தெரியுமா? எதுக்காக நீ அப்டி பண்ண?”

சுந்தர் திவியை பார்க்க அவளோ எதுவும் கூறாமல் கூர்மையாக பார்த்துக்கொண்டிருக்க இதற்கு மேல் மறைக்க எதுவுமில்லை என்று முடியெடுத்தவன் திவியிடம் “திவி இத நான் உன்கிட்ட சொல்லி தான் மன்னிப்பு கேக்கணும். ஆரம்பத்தில இருந்து சொல்லிடறேன். 5 வருசத்துக்கு முன்னாடி மொத தடவ இங்கே வரும்போதே நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் திவி. அதனால தான் அடுத்த வருசத்துக்கு ஒரு தடவைன்னாலும் கண்டிப்பா மறக்காம இங்க வந்துடுவேன் உன்ன பாக்கிறதுக்காகவே. உன்னோட எல்லா சேட்டையும், பேச்சு, குடும்பத்து மேல வெச்ச பாசம் எல்லாமே ரசிப்பேன். ஆதி வர வரைக்கும் எனக்கு எதுவும் அவசரம் தோணல. ஆனா ஏதோ ஆதி பார்வை உன்ன சுத்தியே இருந்தது. அது எனக்கு பிடிக்கல. இருந்தாலும் அத நீ புரிஞ்சுக்கல அந்த அளவுக்கு கொஞ்சம் நான் நிம்மதியா தான் இருந்தேன். இருந்தாலும் இந்த தடவை அம்மு அர்ஜுன் கல்யாணம் முடிஞ்சதும் நான் பிசினஸ் ஆரம்பிக்கறதுக்குள்ள உன்கிட்ட பேசிடனும். லவ் சொல்லணும்னு இருந்தேன். நீ ஊருக்கு வரென்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்கு போட்டோகிராபி பிடிக்கும்னு உனக்கு தெரியும்ல. எப்போவுமே உனக்கு தெரியாம உன்னோட பேச்சு, கோபம், குறும்புத்தனம் விளையாட்டுன்னு எல்லா போஸ்லையும் போட்டோஸ் எடுத்து வெச்சேன். அத லவ் சொல்லும்போது உனக்கு சர்பிரைஷா கொடுக்கணும்னு ஆசை. அதுக்கப்புறம் தான் சில நேரம் நீ பேசுறது எல்லாம் கூட விடீயோஸம் எடுக்கலாமான்னு தோணுச்சு. அதனால தான் அன்னைக்கு நீ குருவிகூட விளையாடும் போதும் வீடியோ ஆன் பண்ணிட்டேன். அடுத்து அந்த ஸ்டோர் ரூம்குள்ள இருந்து நீங்க பேசுனதை வீடியோ எடுத்தேன். அதுல நீ தான் விடியோல கவர் ஆயிருப்ப. ஆனா நீ அன்னைக்கு பேசி முடிச்சு போனதும் நீ ஆதியை லவ் பண்ணறேன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. ரொம்ப பீல் பண்ணேன். அடுத்து நீங்க ஊருக்கு வந்த அப்புறமும் கூட பைத்திய மாதிரி உன் போட்டோஸ் விடீயோஸ் எல்லாமே தான் பாத்துகிட்டே இருந்தேன். அதுல எப்பிடியோ சோபி பாத்து கண்டுபுடிச்சிட்டா. அப்படி ஒரு நாள் ஆதிகிட்ட மறைக்கற எதுவும் என்கிட்ட இருக்காதுன்னு நீ சொன்னதை திரும்ப திரும்ப பாத்திட்டே இருந்தேன். அப்போ சோபி என்கிட்ட வந்து “இப்போவும் உனக்கு கிடைக்க வேண்டியதை அந்த ஆதி எடுத்துக்கப்போறான். சின்ன வயசுல இருந்து நீ இழந்தது பத்தாதா? கடைசியா உன் லவ்வையுமா விட்டுகுடுப்ப என விடாமல் பேசி எனக்கு ஆதி மேல் கோபமும், திவியை எப்படியும் அடையவேண்டும் என்ற வெறியும் வந்தது. இறுதியாக திவி எனக்கு கிடைக்கணும் என்ன பண்ணனும் சொல்லு என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டான்.

சோபியும் “இப்போ அவளுக்கும், ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடக்க போகுது. அவளை என்ன பண்ணாலும் அங்க யாரும் விட்டுகுடுக்கமாட்டாங்க, ஆதியும் சேத்தி தான். மொதல்ல அவளை அவங்ககிட்ட இருந்து கொஞ்ச நாள் விலக்கி வை. அவளும் பீல் பண்ணுவா, அப்போ உன் லவ்வ சொல்லு. பாசத்தை காட்டு. அப்புறம் திவி உன்கூடவே தான் இருப்பா” என இன்னும் முழு ஆலோசனை வழங்கினாள்.

திவியை மட்டுமே எண்ணிக்கொண்டு இருந்தவனுக்கு இது நல்ல யோசையானையாக இருந்தது. ஆனால் திவியை தப்பா நினைப்பாங்களே? என

“கண்டிப்பா அப்படி நினைச்சாதா அவளை எல்லாரும் ஒதுக்கிவெப்பாங்க. ஆதியும் நம்பமாட்டான். அந்த கோபத்துல திவி இருக்கும் போது நீ ஆறுதலா சீக்கிரம் போயி அவளை சமாதானபடுத்தி அப்பிடியே அவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட போற. அதுக்கப்புறம் உண்மை தெரிஞ்சாலும் யாரால என்ன பண்ண முடியும்” என அவள் கேட்க இவனுக்கும் சரி என்றே பட்டது. எப்டியோ திவி கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் துணிந்து அவளை தவறாக காட்டும் விதமாக அப்டி ஒரு விடியோவை அனுப்பிவைத்தான். ஆனால் அவனது நேரம் அவனது உயிர் நண்பனுக்கு அடிபட்டது என அவன் உடனடியாக பெங்களூர் செல்ல, அங்கே உறவற்ற அந்த நண்பனுடன் இவனும் ஒரு வாரம் தங்க வேண்டியதாக போய்விட்டது. ஆனால் சோபியிடம் அவ்வப்போது இங்குள்ள நிலவரம் பற்றி கேட்டுக்கொண்டான். ஆனால் யாரும் எதிர்பாராதது ஆதியின் அதிரடி கல்யாணம். அது தெரிய வர ஒருவரும் ஒன்றும் பண்ண முடியாமல் போக விஷயம் அறிந்த நானும் ஆதி அந்த விடீயோவை முழுசா நம்பலை. இல்லை திவி உண்மையை அவன்கிட்ட சொல்லிருப்பா. அதுனால தான் கல்யாணம் பண்ணிகிட்டாங்கனு நினச்சேன். நீங்க சந்தோசமா இருப்பீங்கன்னு தான் நினச்சேன். இதுக்கு மேல எதுவும் பண்ணமுடியாதுனு தான் நான் இங்க வராம ஊருக்கு போய்ட்டேன். யாருகிட்டேயும் எதுவும் பேசல. அதுக்குள்ள எனக்கும் ஆக்சிடென்ட். அப்புறம் அம்மாவும், சோபியும் இந்த தடவை வந்து பேசினதை கேட்டபோது தான் எனக்கு புரிஞ்சது. உன் லைவ்ல நிறையா ப்ரோப்லேம். ஆதியும் உன்ன நம்பலைன்னு. இதுக்கு மேல மறச்சுவெக்கிறது நல்லதில்லேன்னு தான் உடனே கிளம்பி வந்திட்டேன்.மன்னிச்சுடுன்னு ஒரு வார்த்தைல சொல்றது தப்பு தான். இருந்தாலும் வேற வழியில்லை.” என அவன் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க

அனைவரும் கோபம், இயலாமை, வருத்தம் என இருக்க சுந்தரை திட்ட திவி ஏதும் கூறாமல் அப்டியே இருக்க சுந்தர் திவியிடம் “ப்ளீஸ் திவி ஏதாவது சொல்லிடு, அடிச்சிரு, என்ன தண்டனை வேணாலும் குடு… பட் ஏதாவது பேசு திவி” என கெஞ்ச

திவி விரக்தியாக புன்னகைத்து விட்டு “அதெல்லாம் பண்ணிட்டா நடந்த எல்லாமே மாறிடுமா சுந்தர்?” என்ற கேள்வியில் அவள் முகம் தொங்கிவிட்டது.

“நீங்க வருத்தப்பட என்ன இருக்க சுந்தர், எல்லாருமே மனுசங்க தானே தப்பு பண்ணுவோம் தான். என்னை நீங்க லவ் பன்னேனு சொல்றிங்க. அது எனக்கு தெரியாது. எனக்காக தான் அந்த வீடியோ அனுபிச்சது அது இதுன்னு என்னென்னவோ சொன்னிங்க. நான் ஆதியை விரும்புனது தெரிஞ்சும் என்னை தப்பா காட்டி அவர்கிட்ட இருந்து பிரிச்சு என்னை அடையணும்னு பிளான். இதுக்கு நீங்க வெச்ச பேரு லவ் இல்லையா? எல்லாம் சரி தான். ஆனா நான் என்ன குழந்தையா? ஒரு பொம்மையை பிடிங்கி வீசிட்டு இன்னொன்னு புதுசா குடுத்தா உடனே எடுத்துக்கிட்டு போறதுக்கு. அந்த மாதிரி என் மனசை ஈஸியா மாத்திக்குவேன்னு எப்படி எதிர்பார்த்திங்க. அவரு என்னை போக சொன்னாலும், பேசலேன்னாலும், பாக்கலேன்னாலும் அவரு மனசுல நான் இருப்பேன்னு எனக்கு தெரியும். அது என்னை எத்தனை வருஷம்னாலும் அதே எதிர்பார்ப்போட காதலோட வெச்சுஇருக்கும். வேற யார்கிட்டேயும் கூட்டிட்டு போகாது. அண்ட் இன்னொரு விஷயம் இது என்னோட குடும்பம் இங்க யாரும் என்னை தெரிஞ்சே கஷ்டப்படுத்த மாட்டாங்க நீங்க செஞ்சமாதிரி, முக்கியமா என் ஆதி என்னை நம்பாம இல்ல. ரொம்ப நம்புனாரு. முழுசா நம்புறாரு. அதனால தான் எதைப்பதியும் யோசிக்காம கல்யாணம் பண்ணிருக்காரு” என்று அமைதியாக தான் கூறினாள் எனினும் அதில் இருந்த அழுத்தம், கோபம் அவளிடம் யாரும் பேசும் வார்தையற்று நிறுத்தி வைத்தது. அனைவரையும் கண்டவள் கண்களை இறுக மூடி “எனக்கு இப்போவும் உங்க மேல இருக்கற ஒரே கோபம் கொஞ்சம் எனக்கு பிரச்சனை குடுத்தா சமளிக்காம என் ஆதியை மறந்துட்டு இன்னொருத்தன்கிட்ட வந்துடுவேன்னு கேவலமா நினைச்சது தான். என் ஆதிகிட்ட இருந்து என்னை பிரிக்கணும், வேண்டாம்கிற முடிவை எடுக்க நான் இங்க இருக்கற யாருக்குமே அந்த உரிமையை கொடுக்கல ஏன் எனக்குமே. நானே போகணும்னு நினைச்சாலும் ஆதி சொன்னா இருப்பேன். அப்படி இருக்கும்போது அந்த உரிமையை நீங்க எப்படி எடுத்துக்கலாம்… எனக்காக ஒரே ஒரு உதவி பண்ணுங்க. இப்போ நீங்க சொன்னது ஆதிக்கு தெரியவேண்டாம்.” என அர்ஜுன் “திவி என்ன சொல்ற நீ? ”

“இல்ல அண்ணா, அவருக்கு இது தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு. என்னைவிட ஆயிரம் மடங்கு. அவ சொலவரதே கேட்டு இருக்கலாமோ தப்பு பண்ணிட்டேனோன்னு குற்றஉணர்ச்சிலையே இருப்பாரு. அவரை என்னால அப்டி பாக்கமுடியாது. அவரு தப்பு பண்ணல, முக்கியமா என்னை காதலிச்சத தவிர வேற எதுவுமே அவரு தப்பு பண்ணல. வேண்டாம் அண்ணா அவரு சங்கடப்படறத என்னால நினைச்சுக்கூட பாக்கமுடில” என கூறிக்கொண்டிருக்க அவள் எழுந்து மெதுவாக அறை நோக்கி தள்ளாடி நடக்க இதை அனைத்தையும் வெளியே நின்று கேட்ட ஆதி இறுதியாக உள்ளே வந்து “தியா. …” என

அவள் நின்று திரும்பி பார்க்க அவள் அதிகம் உணர்ச்சிவசப்பட கண்களில் குளம் கட்ட மயங்கி விழப்போனவளை ஓடி சென்று தாங்கி பிடிக்க அவளுக்கு மூச்சு வாங்கியது அவளை மடியில் கிடத்தி “தியா, என்னாச்சு மா, கண்ணை திற” என அவன் பதற ஒரு முறை விழித்தவள் “லவ் யூ தயா ” என ஆதியிடம் கூறிவிட்டு மயக்கமாகினாள்.

அவனுக்கு வாழ்வின் சந்தோசம் துக்கம் இரண்டின் எல்லையையும் ஒரு சேர பார்த்த நொடி அதுதான் என்றே கூற வேண்டும். தன்னவளின் காதலை அவள் வாயால் கூற அதுவும் தனக்காக அவள் இத்தனை செய்ததை எண்ணி சந்தோசம் எனினும் அவள் இந்த மயக்கநிலை கண்டு அவளை விடவும் துவண்டு செயலற்று இருந்தான்.

அவர்களிடம் வந்த அனைவரும் பின் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பயண காவியம் – ஏஞ்சலின் டயானாபயண காவியம் – ஏஞ்சலின் டயானா

செப்டம்பர் மாதம் 2004ஆம் ஆண்டு நான் பதினொன்றாம் வகுப்பிற்காகப் புதிய பள்ளியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. சிறு வயதில் இருந்தே பள்ளியின் சார்பாக அழைத்துச் செல்லப்பட்ட எந்த சுற்றுலாவிற்கும் அதுவரை நான் சென்றிருந்ததில்லை. என் அப்பா அனுமதித்ததில்லை என்று சொன்னால்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 ENDஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END

54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..” ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க கடுப்பான

மேற்கே செல்லும் விமானங்கள் – 3மேற்கே செல்லும் விமானங்கள் – 3

வணக்கம் தோழமைகளே, ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்… [scribd id=372890235 key=key-fmnoTjY8PvUKL8gnQI0i mode=scroll]   அன்புடன்,