பாகம் 3
மாமரத்திலிருந்து அவன் குதித்தான்…ஆம் இவள் பள்ளித்தோழன் சிவமூர்த்தி தான் அவன்……
“என்ன தேனு ஆளே மாறிட்ட அடக்கம் ஒடுக்கமா பொம்பளைபிள்ளையா என் தேனுவா இது……புல்லரிக்குதுமா” என்றவனை காதைத்திருகினாள் செல்லமாக…..
“அப்புறம் பட்டாளத்தான் என்ன இந்தப்பக்கம் …..”என்றாள்
“அதுவா சும்மா லீவுல வந்தேன் அப்படியே எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்னு….உங்க அம்மாதான் நீ கம்மாய்க்கு போய்ருக்கனு சொன்னாங்க….அப்படியே இந்த பக்கம் வந்தா என் ஆளு ராசாத்திய பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என அசடு வழிந்தான்…
“டேய் மூர்த்தி என்னடா எலி பம்முதேனு அப்பவே நினைச்சேன் “அதானே பார்த்தேன் .
“உன் ராசாத்தி அந்தா வராப்பாரு “என்று சொல்ல
மூர்த்தி”அவளைப்பார்த்து ரசித்தவாறு என் கருப்பு தேவதைவர்றா பாரு கட்டழகிடி அவ “எனக்கூற.
ராசாத்தி தேவதை….நீ நடத்து ராசா எனத் தேனு நக்கலாகக்கூற
மூர்த்தியை நோக்கி ராசாத்தி வந்தாள் மாமா என அவன் கைப்பற்றி அழுதாள்.
“என்ன மாமா இவ்ளோ நாள் ஆயிடுச்சு …உன்னை பார்க்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன்…இந்த பட்டாளத்தான் பொண்டாட்டியாவனும்னுதான் காத்து கிடக்கேன் …என அவனனைக் கட்டிக்கொண்டு அழுதாள்” ராசாத்தி….
(ஆம் சிவமூர்த்தி,ராசாத்தி இருவருமே தூரத்து சொந்தம் ….இருவரும் 8ம் வகுப்பு முதல் காதலித்து வந்தனர்….ராசாத்தி 10வது படித்ததும் படிப்பை நிறுத்திவிட்டனர் ….கிராமமாயிற்றே)
தேனு மட்டும்தான் அந்த ஊர் பெண்களில் நன்குபடித்த முதுகலைப்பட்டதாரி……தந்தை ராமனுக்கு படிக்க ஆசை ….அந்த காலகட்டத்தில் அவரிடம் பணமில்லை…..இப்பொழுது எல்லா வசதியும் இருக்க தன் செல்லப்பெண்ணை அவள் விரும்பிய எம்.பி.ஏ படிக்க வைத்தார்….அதுவும் பிரசித்தி பெற்ற காலேஜில்…அவளும் நன்றாக படித்தாள்….
லேசாக தேனு தொண்டையை கணைக்க ராசாத்தியை விட்டு விலகி நின்றான் மூர்த்தி….
ராசாத்தி முகம் வெட்கத்தில் நனைந்தது
வரும் வழியில் மூர்த்தி “ஏன் தேனு நீ படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகலையா “எனக்கேட்டான்
“இல்ல மூர்த்தி நல்ல வேலை கிடைச்சது ஆனா அப்பாக்கு இஷ்டமில்லை….நீ கல்யாணம் பண்ணிபோகுற வீட்ல மாப்பிள்ளை ஒத்துக்கிட்டார்னா போமானு சொல்லிட்டாங்கடா” என சோகமாக தேனு கூறினாள்.
இடைமறித்த ராசாத்தி “மாமா அவளுக்கு பக்கத்து ஊரு கலக்டர பேசி முடிச்சிட்டாங்க….அம்மணி என்னமோ நடிக்கிறா”னு நக்கலாக சிரித்தான்
தலையைக் கவிழ்ந்த அவளை ….. “அடிப்பாவி முழுபூசணியை மறச்சுட்ட பாத்தியா…என தேனை தலையில் குட்ட. ஸ்.ஆஆஆ” என தலையை தேய்த்தவள் …”போடா லூசு எங்கடா நீ சொல்லவிட்ட….இந்த கருவாப்பக்கிய பார்த்த உடனே ஜொள்ளு வடிச்சுட்டு அவளோட லவ்ஸ் விட ஆரம்பிச்சுட்ட இப்ப நான் சொல்லலனு கத்து …..” என அவனை குத்து குத்து என முதுகில் விளையாட்டாய் குத்தினாள்.
எல்லோரும் ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தனர்…..ராசாத்தி மூர்த்தியை பிரிய எண்ணமில்லாமல் பிரியாவிடை பெற்றாள்
இதைப்பார்த்த தேனுவிற்கு கிஷோரை பார்க்க எண்ணம் தோன்றியது……….மனம் ஏனோ உணர்ச்சிவசப்பட்டது…..
“மாட விளக்கை தென்றல்
தீண்டினாற்போல்
இவளுள்ளத்தை
அவன் தீண்டினான்
இந்த சீதை தேடிய
ராமன் இவனோ
சுயவரம் புரியப்பட்டது
இவள் மனதில்
சிவதனுசுக்கு பதில்
வளைக்கப்பட்டது
இத்தையலின் மனம்”
கணபாபொழுதில் நினைத்த நிமிடம் மல்லிகை தோட்டத்தில் கிஷோர் குரல் கேட்க ஓடிவந்தாள்…
அங்கு கிஷோர் அவள் தாயிடம்”சும்மா ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன் ஸோ அப்படியே தேனுகிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன் ஆண்ட்டி” எனக்கூற
“தேனு மாப்பிள்ளை வந்திருக்காரு மல்லிகை தோட்டத்துல உட்கார வச்சிருக்கேன்….இந்த காபி பலகாரத்தை குடுத்துட்டு பேசிட்டு வாமா” எனக்கூப்பிட….
இவள் பேபி பிங்க் காட்டன் புடவை கட்டி தலையில் கிளிப் மாட்டி பொருத்தமான சின்ன நெக்லஸ், காதுமடலுக்கேற்ற ஜிமிக்கி போட்டு ,கண்ணுக்கு மையிட்டு
தலையில் மேட்சாக பிங்க் ரோஜாப்பூ வைத்து…..பதுமையாய் காபி டம்ளருடன் அவன் முன் நின்றாள்
திரும்பி நின்றவனை என்ன கூப்பிட என நினைத்தவளாய்”கிகிகி…என தடுமாற்றத்துடன் இழுக்க இவன் திரும்பிவிட்டான்……”வா மை டியர் ஸ்வீட்டி என அவளைப்பார்த்தவன் அவள் அழகில் பித்துபிடித்தார்போல் நின்றவாறே….”ஸ்வீட்டி யூ லுக்கிங் ஸோ ப்ரிட்டி ……அவ்ளோ அழகா இருக்க இந்த ட்ரெஸ்ல …எனச் சொல்ல அவள் மனம் குத்தாட்டம் போட்டது….நீ ரசிக்க தானேடா இப்படி வந்து நின்னேன்….என்பது போல் அவன் கண்களை பார்த்தாள்
பையில் இருந்த கேட்பரிஸ் செலப்ரேசன் பேக்கையும் ,மல்லிகை சரத்தையும் அவளிடம் கொடுத்து….நீ என்னய என்னமோ பண்ணிட்ட டா லவ் யூ டூ மை லாஸ்ட் ப்ரீத்” என அவள் காது மடல் அருகே மெதுவாய் தடவினான்
இவள் கண்கள் மூடி காதலை அனுபவித்தாள்
பின் அவள் கண்ணம் கிள்ளி …..உன் குறும்புத்தனம்தான் எனக்கூ பிடிச்சிருக்கு எனக்கூற
அவள் தலையில் கைவைத்தபடியே போங்க மாமு எனக்கு வெட்கமா இருக்கு என்றாள்…
என்னது மாமுவாஆஆஆ என அவன் மகிழ்ச்சி துள்ளலிட்டான்
இவள் ஓடியபடி நீங்க என் செல்லமான ஸ்விட் மாமுதான் லவ்யூ ஸோ மச்ச் என கன்னக்குழி சிரிப்போடு ஓடினாள்
இவன்”ஏ ஏ …..ஹனி நில்லு எனக் கூப்பிட்டபடி வந்தான்…அவள் தன் அறைக்கு மகிழ்ச்சியோடு ஓடிவிட்டாள்…. சே ம எஸ்கேப் ஆய்டாலே கள்ளி என நினைத்தபடி….ஆண்ட்டி போய்ட்டு வாரேன் என விடைபெற்று கிஷோர் சிரித்தபடி காருக்கு சென்றான்
“நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நெஞ்சாத்தியே நீதானடி
……..யாஞ்சி யாஞ்சி” என பாடல் போட்டபடி காதல் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் காரை ஸ்டார்ட் செய்தான்….
இவன் வாங்கிவந்த மல்லிகை சரத்தை சூடிக்கொண்டு மாடியிலிருந்து ஜன்னல் வழியே இவனை பார்க்க ப்ளையிங் கிஸ் அவன் கொடுத்தான்….தேனு உள்மூச்சு வாங்க ஓடியவள் அவள் தாயின் மேல் மோதிவிட்டாள் …..என்ன ஆச்சு தேனு என அவள் வினவ….ஒன்னுமில்லமா என தன் அரைக்கதவை சாற்றிக்கொண்டு கண்ணாடி முன் நின்று அவள் தன்னைத்தானே ரசித்தாள்….