Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61

61 – மனதை மாற்றிவிட்டாய்

திவி ராஜேஸ்வரி இருந்த அறை கதவை தட்டிவிட்டு “அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று பணிந்துவிட்டு பிரயாணம் எல்லாம் சௌரியமா இருந்ததா. எப்படி இருக்கீங்க? என சம்ரதாயமாக வினவ அவரும் எதிர்பார்த்தவர் போல மிடுக்காக மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு “ம்ம். எல்லாம் நல்லா இருந்தது. நீ? ”

அவளும் சிரித்த முகத்துடன் “மன்னிச்சுடுங்க சொல்ல மறந்துட்டேன். நான் ஆதியோட என்றவள் அவரது முறைப்பை பார்க்க நாக்கை கடித்துக்கொண்டு உங்க மருமகனோட மனைவி திவ்யஸ்ரீ ” என அவரும் என்ன படிச்சிருக்க? என்னை வேலை பாத்த? குடும்பம் என பொதுப்படையான கேள்விகள் வினவ இவள் அனைத்திற்கும் பதில் அளிக்க இறுதியாக அவர்களது திருமணத்தில் வந்து கேள்வி நின்றது. ஏன் யாருக்குமே சொல்லாம கல்யாணம் நடந்தது. அவ்ளோ அவசரம் என்ன ? என அவர் வினவ “ஜாதகத்துல எனக்கும் அவருக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிருந்தாங்க. வேற வழியில்லை அதனால தான் உங்க யாருக்கும் சொல்லமுடியுமா போயிடிச்சு அவசரத்துல பண்ணதால. முடிச்சதும் ஊருக்கு வந்து உங்ககிட்ட விஷயத்தை சொல்லி ஆசீர்வாதம் வாங்கிட்டு வரலாம்னு தான் இருந்தோம். அதுக்குள்ள அம்மு கல்யாணமும் வர நாள் கொஞ்சம் தான் இருந்ததால ரொம்ப வேலை அத்தை பாட்டி மட்டுமே எப்படி சமாளிக்கமுடியும் அபி அண்ணியும் நிறைமாசம். அதனால தான் நேரல வர முடியல கோவிச்சுக்காதீங்க.”

பாட்டியும் “ஆமாமா, ஆதிக்கும் ஜாதகத்துல பாக்கும் போது ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. இவளுக்கும் சீக்கிரம் பண்ணனும்னு சொன்னாங்க. இரண்டுபேருக்கும் நேரம் சரி இல்லே அதுதான் சொல்லமுடியல மா.” என அவர் மனம் சிறிது சமாதானம் ஆக

திவியை பார்த்து “நீயும் ஆதியும் காதலிச்சிங்களா? இல்ல வீட்ல தெரிஞ்ச பொண்ணுங்கிறதால பாத்தாங்களா? ” என அவர் நேராக கண்களில் கூர்மையுடன் வினவ மதி “அண்ணி நாங்க முடிவு பண்….” எனும் போது கையமர்த்தி நிறுத்திவிட்டு திவியை பார்க்க அவள் தயங்காமல் ” வீட்ல இருக்கிறவங்களுக்கும் விரும்பம் தான் அவருக்கும் எனக்கும் கூட தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அதனால எதுவும் பிரச்சனையா இல்லாம கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டாங்க. ”

“ஏதோ அவசரத்துக்குனு அவனும் பிடிச்சிருக்குனு கல்யாணம் பண்ணாலும் இந்த குடும்பத்துக்கு ஏத்தவளா இருக்கனும்…ஆதியை பத்தி உனக்கு என்னை தெரியும் வந்த இரண்டு வாரத்துல காதல் கல்யாணமா… அவசரப்படறீங்கன்னு தோணல? ”

“கண்டிப்பா இல்ல… உங்க எல்லாருக்கும் அந்த காலத்துல பெரியவங்க பாத்து பொண்ணு பையன முடிவு பண்ணுவாங்க..நம்பிக்கையோட கல்யாணம் பண்ணக்குவிங்க. ஒருவேளை பிரச்சனை இருந்தாலும் நம்ம வாழ்க்கைய நாம தான் சரி பண்ணிக்கனும்னு சொல்லுவீங்க தானே. அந்த ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் பாக்கிறதுல எப்படி அவ்ளோ நம்பிக்கையோட கல்யாணம் பண்ணாங்க. சில பேருக்கு அந்த சான்ஸ் கூட இருக்கறதில்ல. இவங்க தான் பையன், இவங்க தான் பொண்ணு முடிவு பண்ணிட்டோம் கல்யாணம் பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. அப்டி இருந்தும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அது எந்த புரிதலோட நடந்தது சொல்லுங்க.. ஒருவேளை நீங்க சொல்லலாம். பெரியவங்க பாத்து முடிவு பண்ண நம்பிக்கைன்னு. அப்டினாலும் என்னையும் சரி, அவரையும் சரி எங்க இரண்டு குடும்பத்துக்கும் நல்லாவே தெரியும். அவங்களுக்கும் விருப்பம் தான். அந்த நம்பிக்கை புரிதலோட அழகான எங்க அன்பும் இருக்கும் எப்போவுமே . வேற என்ன வேணும். எந்த சூழ்நிலையிலையும் நானும் அவரும் எங்களை மத்தவங்ககிட்ட விட்டுகுடுக்கமாட்டோம். அந்த நம்பிக்கை தான். எல்லாத்துக்கும் மேல இந்த குடும்பத்தோட முக்கியமா உங்க மருமகனோட தேர்வு பொய்யாக்க நான் விடமாட்டேன் உங்களுக்கும் அவரு முடிவு தப்பாகாதுங்கிற நம்பிக்கை இருக்கும்னு நினைக்கிறேன்.” என பதிலுடன் கேள்வியும் வினவ வாய்விட்டு சிரித்த ராஜேஸ்வரி

“சித்தி, உங்க பேரனுக்கு ஏத்தவ தான்.”

திவியிடம் திரும்பி “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?, என் முன்னாடி நின்னு பேச என் தம்பியே யோசிப்பான். அதான் உன் மாமனார். உன் மாமியார், அவ பொண்ணுங்க எல்லாமே அந்த அளவுக்கு வரகூட யோசிப்பாங்க. என்கிட்ட தைரியமா வந்து சரிக்கு சரியா பேசுற ஒரே ஆள் உன் புருஷன் தான். அதனால தான் அவனுக்கு வரப்போறவள பத்தி எனக்கும் சில கனவு இருந்தது. அதுல நீ தேறிட்ட. முக்கியமா என் மருமகனோட தேர்வை சரியா தப்பான்னு எனக்கே கேக்கற அப்போவே தெரிஞ்சது உன்னோட தைரியம். ம்ம்… எல்லாத்துக்கும் மேல என் மருமகன் என் முன்னாடியே உன்னை இவ்ளோ பாக்கிறானே அதுல தெரிஞ்சது அவனோட அன்பும்.” என கூற திரும்பி அனைவரும் பார்க்க ஆதி திவிபேச ஆரம்பித்த போதே வந்து அவளை பார்த்துக்கொண்டிருக்க ராஜேஸ்வரி கவனித்தும் திவியை ஆராய்வதை நிறுத்தாமல் இருக்க இருவருக்கும் நடந்த உரையாடலை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

இப்போது உள்ளே சிரித்துக்கொண்டே வந்த ஆதி திவியின் தோளை சுற்றி கைபோட்ட படி “எப்படி அத்தை என் செலெக்ஷன்.?” என வினவ

இருவருக்கும் திருஷ்டி சுற்றி விட்டு “உனக்கு பொருத்தமானவ தான். பேச்சு, செயல், மரியாதை, பாசம், பொறுப்பு எல்லாத்துலையும்…. ”

“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.” என காலில் விழ

மனமாற ஆசிர்வதித்தவர் “என்னை பெரியம்மான்னு கூப்டு.” இவளும் தலையசைக்க “அவனுக்கு என்ன வேணுமோ கவனி. போங்க. ஆதி நீயும் இப்போத்தானே வந்த. போயி ஏதாவது சாப்பிடு. அடுத்தடுத்து வேலையும் இருக்கில்ல. போங்க.”

“அடுத்து வெளியே வந்தவர் அங்கே சிலர் ஆதி திவி பற்றி பேசிக்கொண்டிருக்க, என்ன இப்போ உங்களுக்கு நாங்க பாத்த பொண்ணு தான். அவ தங்கச்சிக்கும் இவளுக்கு அடுத்து தானே கல்யாணம் பண்ணணும்.. ஆதியும் படிப்பு எல்லாமே முடிச்சிட்டு வந்துட்டான். அதனால தான் உடனே கல்யாணம் முடிச்சிட்டோம். இரண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்ததுல சீக்கிரமே பண்ணிட்டா நல்லதுன்னு சொன்னாங்க. அதனாலதான். இனிமேல் யாரும் அவளை பத்தி எதுவும் சொல்லக்கூடாது. அதுவுமில்லாம ஆதி எங்க வளர்ப்பு. இந்த குடும்பத்தோட வாரிசு. கண்டிப்பா தப்பு பண்ணமாட்டான். யாராவது இனிமேல் ஏதாவது சொல்லனும்னா என்கிட்ட வந்து சொல்லுங்க. என்னை தெரிஞ்சுக்கணுமோ என்கிட்ட கேளுங்க.” எனவும் அடுத்து ஒருவரும் வாயை திறக்கவில்லை.

அர்ஜுன், அம்முவின் முகவாட்டத்தை கண்ட திவி அர்ஜுனிடம் கேட்டா கண்டிப்பா ஒன்னுமிலேன்னு மழுப்பிருவாங்க என அம்முவிடம் விசாரிக்க முதலில் அவளும் எதுவுமில்லை என இவள் விடாமல் கேட்கவும் “நீ தான் பிரச்சனை, இப்போ என்ன பண்ண முடியும் உன்னால.”

திவி புரியாமல் விழிக்க “நீ எந்த மாதிரி எங்களால புரிஞ்சுக்கமுடில திவி. இதுவரைக்கும் மேலோட்டமா பாத்த எல்லா விஷயமும் அன்னைக்கு நீ பேசுனது கேட்ட அப்புறம் யோசிச்சு பாத்தா தப்பா தான் இருக்கு. எங்க கொஞ்சம் கொஞ்சமா சந்தோசத்தை குடுத்திட்டு மொத்தமா சங்கடப்பட வெச்சுருவியோன்னு. அர்ஜுன் உனக்கு சப்போர்ட் பன்றாரு. நீ அவரை எதுலையோ பிளாக் மைல் பண்றயோ அவருக்கு பிரச்சனை வந்திடுமோன்னு பயமா இருக்கு எனக்கு. அர்ஜுன் கிட்ட ஒரு தடவ இத பத்தி பேசுனதுக்கே எனக்கும் அவருக்கும் பிரச்சனை. என்னை அதட்டி கூட பேசாதவர் உனக்காக எதையும் என்னால மாத்திக்க முடியாது சொல்லறாரு. என் அர்ஜுன் மிஸ் பண்ணிடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு.” என அவள் கலங்க

திவி “நான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணமாட்டேன் அம்மு. அர்ஜுன் என் அண்ணா, நீ என் பிரண்ட்..உங்க லைப்ல நான் எப்படி பிரச்சனை பண்ணுவேன். ” என இன்னும் அம்மு முகம் தெளியாமல் குழப்பமும் விரக்கிதியும் இருக்க “சரி இப்போ உனக்கு என்ன வேணும்?..நான் என்ன பண்ணா நீ நம்புவ? ”

அம்மு “என்ன சொன்னாலும் செய்வியா? ” என சந்தேகமாக வினவ “கண்ணடிப்பா”

“அப்போ சரி, நாளைக்கு கல்யாணதப்போ நீ அவரு தங்கச்சியா அந்த வீட்டு பொண்ணா இருந்து எதுவும் முறை செய்யாத.”

“அது பண்ணிட்டா போதுமா? ” என உடனே அவள் கேட்கவும்

அம்மு “எப்பிடியும் எல்லாரும் உன்கிட்ட வந்து சொல்லுவாங்க. ‘கடைசில வேற வழியில்லைனு சொல்லி வந்து நிக்கப்போற…எல்லாரையும் உன்ன நம்பவெக்கிறதும், அவங்கள ஏமாத்தறதும் உனக்கு புதுசில்லையே. …இல்லாட்டி என்னை மாட்டி விட்டு இன்னுமும் எனக்கும் அர்ஜூனுக்கும் பிரச்சனை பண்ணனுமா? எது இப்போ உன் பிளான்? ”

திவி சிரித்துவிட்டு “என்கூட சேர்ந்து நீயும் இவ்ளோ யோசிக்கிற அம்மு. எங்க மத்த விசயம் மாதிரி அண்ணா விஷயத்துலையு விடுகுடுக்கறேன் பீல் பன்றேன்னு இருந்திடிவியோன்னு நினச்சேன். பரவால்ல. இந்த அளவுக்காவது உன் மனசுக்கு என்ன வேணும். அத காப்பாத்திரமோ இல்லையோ பிரச்சனைய விட்டு உன் புருஷன விலக்கி வெக்கணும்னு பாக்கிற. நைஸ். பட் எனக்கு உன் சந்தோசம் முக்கியம். இது உன் கல்யாணம். நீ மனசுல ஒரு உறுத்தலோட பண்ணிக்காத. நான் நாளைக்கு உன் நாத்தனாரா இருந்து எந்த சடங்கும் செய்யமாட்டேன். யாரும் உன்னை கேள்வியும் கேக்கமாட்டாங்க. அத நான் பாத்துக்கறேன். ஆனா அதுக்கப்புறம் ஒரே ஒரு விஷயம். இப்போ எல்லாரும் ஒரே பேமிலி. எப்போவும் முகத்தை திருப்பிகிட்டே போனா நல்லா இருக்காது. சோ பாத்த பேசுனா கேட்ட கேள்விக்கு பதில் அந்த அளவுளையாவது இருக்கலாம்னு நினைக்கிறேன். அர்ஜுன் அண்ணாகிட்ட தனியா இனிமேல் என் விஷயமா எந்த ஹெல்பும் கேட்கமாட்டேன். பட் சாதாரணமா பேசுறதுக்காக எல்லாம் ஏன்னு நீ அண்ணாகிட்ட கேட்டு உங்களுக்குள்ள பிரச்சனை பண்ணிக்காதிங்க சரியா? ” என அவள் சொல்லிவிட்டு செல்ல அம்முவுக்கு “இவ எப்படி இருக்கணும்னு எனக்கு சொல்றா. ச்சா…எல்லா பிரச்சனைக்கும் காரணமே இவதான். எப்படி எல்லாம் சந்தோசமா நடக்கவேண்டிய விஷயம். ஆனால் எல்லாரும் ஒரு உறுத்தலோட சங்கடத்தோட இருக்காங்க. இவ என் உறுத்தலை பத்தி கவலைப்படறாளாம். எல்லாரும் இவளை தாங்கணும்னு நினைப்பு. அதுனால தான் நாளைக்கு இருக்கக்கூடாதுனு சொன்னதும் சரிங்கறா. இவளாவது வராம இறுக்கறதாவது.” என கொஞ்சம் மனவருத்தத்துடன் பொருமிக்கொண்டே சென்று உறங்கிவிட்டாள்.

மறுநாள் அனைவரும் அதிகாலை முகூர்த்தம் என தயாராக தாத்தா, பாட்டி ஆதியிடம், திவி கோவிலுக்கு சென்றுவருவதாக கூறினாள். அனைவரும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் வெச்சுகிட்டு இப்போ எங்க போற. நீ இருக்கணும்ல. கல்யாணம் முடிஞ்சதும் போக்கலாம். என ஆதி கூற இவள்

“இல்லை, வேண்டுதல் இருக்கு. கல்யாணம் அன்னைக்கு காலைல அபிஷேகம் குடுத்திருக்கு. அதுக்கு நாம வீட்ல இருந்து ஒருத்தராவது போகணும். எனக்கு வேண்டுதலும் இருக்கு. நான் எப்படியும் தாலி கட்றதுக்குள்ள வந்துடறேன். சாமி விசயத்தல குறை வெக்கக்கூடாது என அவளும் நிறைய சொல்லி பேச முதலில் மறுத்தவர்கள் எனினும் பாட்டி ஒரு வழியாக சாமி பூஜை என்றதும் ஒரு மனதாக அவ போயிடு வரட்டும் என ஒப்புக்கொண்டார். ஆதிக்கு சரி சீக்கிரம் போய்ட்டு வா. என்று அவனும் ஏனோ ஒப்புக்கொண்டான். ஆனால் முகூர்த்தம் ஆரம்பிக்கறதுக்குள்ள வந்துடுன்னு 100 முறையாவது சொல்லி அனுப்பினான்.

அவள் சென்ற பின்பும் அனைவரும் திவியை கேட்க ஆதி பாட்டியும் அவர்களுக்கு பதில் கூற யாருக்கும் அதில் மனம் ஒப்பவில்லை. இப்போவா? என வினவ முகூர்த்தம் ஆரம்பித்த பின்னரும் அவள் வராமல் இருக்க மல்லிகா, அர்ஜுனும் அவதானே அர்ஜுன் தங்கச்சி முறைல எல்லாமே செய்யணும் இப்போ ஏன் போனா? சரி இன்னும் ஏன் வரல வினவ அவளுக்கு கால் பண்ணி கேக்கறேன் என ஆதியும் கூற காலை எடுத்த அவள் இன்னும் வேண்டுதல் முடியல. லேட்டாகும் போல, பாதில நிறுத்திட்டு வரக்கூடாது . என்றதும் ஆதி கத்த துவங்கிவிட்டான். இப்போ என்ன பண்றது எல்லாரும் கேக்கறாங்க என அவன் கத்திக்கொண்டிருக்க என்ன ஆதி நான் வரதுக்கு கொஞ்சம் லேட்டாகும். பட் எல்லாரையும் வெயிட் பண்ணவெக்கமுடியாது. அதனால நீங்க எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் நடத்த ஆரம்பிங்க. நான் வர ட்ரை பண்றேன். என அவனுக்கு இவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை. என்றதும் வைத்துவிட்டான். அனைவரிடமும் அவள் வர தாமதமாகும் என இவன் கூற ஆளாளுக்கு கத்த துவங்கிவிட்டனர். அவளுக்கு அவளை எல்லாரும் கெஞ்சணும்னு எண்ணம், இல்லாட்டி இப்போ போய்ட்டு இப்டி வம்பு பண்ணுவாளா? நாத்தனார் முறைல அவ தானே செய்யணும். இது தெரியாதா? ஆளாளுக்கு சலசலக்க இறுதியில் அவசரத்தில் என்ன செய்வது என பெரியர்வர்கள் அனைவரும் முடிவெடுத்து “சரி, இப்போ என்ன, அதான் தர்ஷினி, சுபி எல்லாரும் இருக்காங்கள்ல? அதே இடத்துல அவங்க செஞ்சிட்டு போகட்டும்” என அடுத்து செய்யவேண்டிய பணிகளை செய்தனர். மல்லிகாவிற்கு வருத்தம், இருந்தாலும் நல்லது நடக்கும்னு தானே போயிருக்கா. என ஏற்றுக்கொண்டார். அர்ஜூனுக்கும், ஆதிக்கும் வருத்தத்துடன் கோபம். ஆனால் எதுவும் செய்ய இயலாமல் விட்டுவிட்டனர்.

அனைத்து சடங்குகளும் நிகழ அர்ஜுன் அம்மு கழுத்தில் மங்களநாணை பூட்ட திவி வரவும் சரியாக இருந்தது. அனைவரும் நிறைவுடன் அட்சதை தூவி விட்டு திரும்பி பார்க்க திவி நின்றிக்க ஒரு ஒருவருக்கும் கோபம், வருத்தம், சந்தோசம், என பல உணர்வு. அப்போதைக்கு ஒருவரும் எதுவும் காட்டாமல் அனைத்து சம்பிரதாயங்களும் நிகழ்ந்தேறி மாலை வீட்டிற்கு அழைத்து வரும் வரை பெரிதாக யாரும் திவியை கண்டுகொள்ளவில்லை. அவளுக்கு இதை செய் அதை செய் என வேலையும் வைக்கவில்லை. செய்தால் ஏன் என கேட்கவும் இல்லை. திவிக்கு புரிந்தது. மாலையில் அதை பற்றி வீட்டில் பேச, மதி, சேகர், அபி, “நாங்க சொன்னா நீ என்ன கேட்கப்போறா சொல்லு உன் இஷ்டப்படி என்னவோ பண்ணு. யாரு உன்கிட்ட பேசமுடியுது. ?”

மல்லிகாவிற்கும் வருத்தம் எனினும் திவியை விடுகுடுக்க மனமின்றி பரிந்து பேசினார். “சரி விடுங்க எல்லாரும். அவளும் இவங்க கல்யாணத்துக்காகன்னு வேண்டிக்கிட்டு நல்லது நடக்கும்னு தானே போயிட்டு வந்திருக்கா. சும்மா இதுக்கு போயி திட்டிகிட்டு, இப்டி நிக்க வெச்சு கேள்வி கேட்டுட்டு.”

இருந்தும் அவர்கள் விடாமல் உடன் ஈஸ்வரியும் “நாங்க கேள்வி கேக்கறது தப்புங்கிறீங்க. சரி, கல்யாண வீட்ல எல்லாரும் என்னென்ன பேசுனாங்க. எல்லாத்தையும் திவி பாத்து செஞ்சா …. கல்யாணத்தப்போ எங்க போனா? ஏன் இல்ல? அவளுக்கு இவங்க கல்யாணம் பிடிக்கலையா? அர்ஜுன் தங்கச்சினாலும் அவ இருந்திருக்கணும். இல்ல இந்த வீட்டு மருமகன்னு முறைல அவ இருந்திருக்கணுமே? ஏன் ஏதாவது பிரச்னையாங்கிற மாதிரி கேக்கறாங்க. இது தேவையா? அதுக்கு பதில் இல்லேனு சொன்னாலும் வேற என்ன? ஏன் திவி கல்யாணத்தப்போ இல்லேனு கேப்பாங்க. அதுக்கு என்ன விளக்கம் குடுக்கிறது?” என

ராஜேஸ்வரி “அப்படி கேக்றவங்க எல்லாருக்கும் பின்னாடி போயி நம்மளால பதில் சொல்லமுடியாது. சொன்ன அவங்க அப்போ கேட்டாங்க. சொல்லிட்டு கிளம்பி போய்ட்டாங்க. வேற என்ன. திவி என்ன சொல்லாம போனாளா? வீட்டுக்கு பெரியவங்க சித்தி சித்தப்பா கிட்டேயும் சொல்லிட்டு தான் போயிருக்கா. புருஷன்கிட்டயும் சொல்லிட்டு தான் போயிருக்கா. அதுவும் நீங்க சொல்றமாரி அவ அண்ணா கல்யாணம் இந்த வீட்டு மருமகளா இந்த வீட்டு விசேஷம் நல்லபடியா நடக்க தான் கோவிலுக்கு போயிருக்கா. போன இடத்துல நேரம் ஆயிடிச்சு. அதான் எல்லாமே நல்லபடியா தானே நடந்திருக்கு. இதுல அவ கோவிச்சுக்கிட்டு போனா? குடும்பத்துல பிரச்சனை பண்ணிட்டு போனான்னு யாரு கேட்டது? திரும்ப திரும்ப இத பத்தி யாரு பேசுனாங்க உங்ககிட்ட. அவங்கள வரச்சொல்லுங்க. நான் பேசிக்கிறேன். ” என ஈஸ்வரியும் அமைதியாகிவிட்டாள்.

இத்தனைக்கும் திவி எதுவும் கூறாமல் திட்டுவாங்கிக்கொண்டு நிற்க அம்முவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. “அவ எப்படியும் வராம இருக்கமாட்டானு நினச்சு தான் கோபத்துல அப்படி சொன்னது. ஆனால் அதுக்காக அவள் தான் சொன்னதை செய்வாள் எனவும் நினைக்கவில்லை அது இவ்ளோ பெரிய பிரச்சனையாகும் எனவும் நினைக்கவில்லை. உண்மையில் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே “எனக்கு நீ தான் கல்யாணப்பொண்ணு தோழியா, நாத்தனாரா இருந்து எல்லாமே செய்யணும், உனக்கு நான் தான் செய்யணும்னு முடிவெடுத்திருந்தனர். ஒருவேளை அவங்களுக்கு அக்கா தங்கச்சி இருந்தா என்ற கேள்விக்கு அந்த மாப்பிளையே வேண்டாம். பேசாம அக்கா தங்கச்சி இல்லாதவனா பாத்துக்கலாம் ” என கூறிக்கொண்டு சிரித்தது அம்முவிற்கு ஞாபகம் வர அதையும் மீறி நானே எப்படி திவிய என் கல்யாணத்த விட்டு விலகி இருன்னு சொன்னேன். அதையும் ஏன் அவ அப்படியே செஞ்சா என நினைக்க அவளுக்கு வருத்தம், ஆற்றாமை அனைத்தும் வந்தது.

பின் அனைவரும் அடுத்த வேலைகளை பார்க்க அர்ஜுனும் திவியிடம் முகம் கொடுத்து பேசாமல் இருக்க ஆதியோ சொல்லவே வேண்டாம். ஏன் இப்டி பண்ணேன்னு திட்டுனாகூட பரவால்ல..இந்தமாதிரி அமைதியா உன் இஷ்டம் நாங்க என்ன சொல்றதுங்கிறமாதிரி என்னதான் பண்றது என புலம்பினாலும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. சிறிது நேரத்தில் அர்ஜூனாவது “நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல திவி. எங்க கல்யாணத்துக்கு முக்கிய காரணமே நீதான். இவ்ளோ பாத்து பாத்து பண்ணிட்டு லாஸ்ட் மிண்ட்ல கல்யாணத்துல இல்லாம பாக்காம அப்டி என்ன? ”

திவி “இல்லையே அண்ணா, லாஸ்ட் மிண்ட்ல நான் வந்துட்டேன். உங்க கல்யாணம் நான் இல்லாம பாக்காம நடக்கல. ” என சிரித்துக்கொண்டே கூற அவன் “இப்டியே ஏதாவது காரணம் சொல்லிட்டே இரு. ” என போய்விட்டான்.

ஆனால் ஆதி எதுவும் அதைப்பற்றி பேசவில்லை. அவளே அவனிடம் பேச வந்தும் மற்ற விஷயங்கள் பற்றி பேசினான். இதை பற்றி பேசினாலோ சாரி ஆதி …எனவும் அதைப்பத்தி பேசாத விட்று வேற ஏதாவதுனா சொல்லு என கூற அந்த வார்த்தையில் குரலில் கோபம் இல்லை ஆனால் ஆதங்கமே நிறைந்திருந்தது. நீ பண்ணது தவறு உனக்கே தெரியும் அதை மாற்ற முடியாது. அதுக்கு விளக்கம் தந்தும் பிரயோஜனம் இல்லை. வேண்டாம் அந்த விஷயத்தை விட்டுவிடு என்ற ரீதியில் அழுத்தமாக இருந்தது.

அபியின் புகுந்த வீட்டார் அவளுக்கு சீமந்தம் செய்ய நாள் கேட்க அடுத்த இரு வாரங்களில் வைத்துக்கொள்ளலாம் அதுவும் அபியின் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் மீண்டும் அங்கேயும் இங்கேயும் அலைய வைக்க வேண்டாம். இங்கேயே இருக்கட்டும். சம்ப்ரதாயம் முடிஞ்ச அளவுக்கு தான் பாக்கணும் அதனால நாங்க எல்லாம் இத பிரச்சனையா எடுத்துக்கல. அபி நல்லபடியே பிள்ளையை பெத்து குடுத்தா போதும் என அனைவரும் முடிவெடுத்தனர். அடுத்து வந்த நாட்களில் அடுத்த விசேஷத்திற்கு என அனைவரும் வேலையில் இருக்க இடையில் அனு ஸ்பெஷல் கிளாஸ் என வர தாமதமானது. அவளது வண்டியில் ஏதோ பிரச்சனை என்பதால் அவளது தோழன் அஷ்வின் உடன் வந்தான். திவி வெளியே இருந்ததால் இவர்களிடம் வந்து விசாரித்தாள்.

“ஏதாவது ப்ரோப்லேம் ஆஹ்? உன் வண்டி என்னாச்சு அனு ? உனக்கெதும் இல்லையே ” என கேட்க

அனு “வண்டி பாதில வரும்போது ஏதோ ப்ரோப்லேம். நின்றிச்சு அதான் கடைல குடுத்திட்டு பிரண்டோட வந்தேன். எனக்கு ஏதும் ப்ரோப்லேம் இல்ல.” என கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள்.

அஷ்வினிடம் திரும்பி “ஓகே தேங்க்ஸ். நாளைக்கு கிளாஸ் ல பாக்கலாம். நீ போ”

மத்தபடி இருவருக்கும் அறுமுகப்படுத்தவோ? அதீத விளக்கமோ ஏன் அண்ணி, திவி என்ற பேர் கூட வரவில்லை. திவி அதை புரிந்துகொண்டாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அந்த பையனிடம் “நான் அவ அண்ணி என்று அறிமுகப்படுத்தி கொண்டு இவளும் பத்திரமாக அனுவை கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி கூறிவிட்டு பொதுபைடையாக படிப்பு அவர்கள் வீடு எங்கே இருக்கு என விசாரித்து உள்ளே வா என உபசரிக்க அவனும் கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு இருக்கட்டும் அண்ணி டைம் ஆச்சு. நான் கிளம்பிறேன். இன்னொரு நாள் வரேன் என சொல்லிவிட்டு அவன் நன்றாகவே பேசிவிட்டு கிளம்பிவிட இவர்களும் உள்ளே சென்றுவிட்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 56ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 56

உனக்கென நான் 56 ஃபோனை பார்த்து “வாட் என்ன சொல்றீங்க” என்றாள். பாலாஜிதான் மறுமுனையில் பேசினான். “ஹாப்பி நியூஸ்தான்மா” “கன்ஃபார்ம்பன்னிட்டீங்களா” “இல்லமா ரெகுலர் செக் அப் பன்ன சொல்லிருக்காங்கள்ள அதுல இப்ப ஃபைன்ட் பன்னிருக்காங்க. மேபி இருக்கலாம்” “ஐயோ நான் இப்ப

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 27

27 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் லண்டன் வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. அன்று காலையில் இருந்து ஆதர்ஷ் மனம் ஏனோ தவிப்புடன் இருக்க இவனுக்கும் வேலை என்பதால் வீட்டில் யாருடனும் பேசமுடியவில்லை. அண்ணனிடம் இருந்து அவ்வப்போது மெசேஜ் வந்தாலும், ஏனோ

வார்த்தை தவறிவிட்டாய் – 3வார்த்தை தவறிவிட்டாய் – 3

ஹலோ பிரெண்ட்ஸ், இரண்டாவது பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு நன்றி. நீங்க சொன்ன மாதிரி வழக்கமான ஹீரோ ஹீரோயின் இந்தக் கதையில் இல்லை. ஆனால் அழுத்தமான கதை. இது போன்றதொரு நிகழ்ச்சியை நீங்கள் கண்ணால் கண்டிருப்பீர்கள். அதைத்தான் தர முயல்கிறேன். சீக்கிரம் மூன்றாவது