Tamil Madhura காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – 1,2

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 1,2

வணக்கம் தோழமைகளே,

நமது தளத்திற்கு ‘தேன்மொழி’ புதினத்தின் மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் திருமதி காயத்திரி அவர்களை வரவேற்கிறோம்.

அழகான கிராமத்து தேன்மொழி உங்கள் அனைவரையும் கவர்வாள் என்று நம்புகிறோம். படித்துவிட்டு உங்களது எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

தேன்மொழி – 1

பொன்வனம்…..ஆம் பெயருகேற்றார் போல்  அழகிய  கிராமம்  தான்  ….எங்கே பார்த்தாலும்  பச்சை  பசேலென்று  நெற்கதிர்கள்  ……வீடுகள் தோறும்  சாணமிட்டு  கோலமிட்டிருந்த  அழகு  …..மாடுகள் அங்கும்  இங்கும்   புல் மேய்ந்தபடி நின்றிருந்தன….வாய்க்கால்  தண்ணீர்  …..மழைமேகமும் வெயிலும்  என  இரண்டும்  கலந்த  தட்பவெட்பம்  ….உண்மையிலேயே  அது  எழில்  கொஞ்சும்  கிராமம் தான்…..கிஷோருக்கு பெண்  பார்க்க  போவதை  விட  ஊர்  மிகவும்  பிடித்து  போனது  அவன் ஆவென்று  ஊரை  பார்த்து ரசிக்க…..”கிஷோர்  என்ன அதுக்குள்ள  பொண்ண பத்தி  டிரீமா என  தங்கை  ஆஷா  ஓட்ட  அவன்  சுயநினைவு பெற்றான்  …..”ஹே போடி நான்  கிளைமேட்  ரசிச்சுட்டு  இருந்தேன்  ….உடனே வந்துருவா

ஓட்றதுக்கு”,…என்று சிரித்தான் …..

உண்மையில்  பெண் எப்படி  வரவேண்டும்  என்ற  எதிர்பார்ப்பு கோட்பாடு  எதுவும்  அவனிடம்  இல்லை  ….தன் அம்மா  சுமவதிக்கு பிடிக்க  வேண்டும்  அதுபோதும் என்று  நினைத்திருந்தான்  .

தேன்மொழி    வெளியே  நின்றிருந்தாள்  எதிரே கார்  வந்ததை  பார்த்ததும்   அனைவரிடமும்  மாப்ள  வந்தாச்சு  எல்லாரும்  ரெடி   ஆகுங்க என்று சிரித்துகொண்டே  முற்றத்தை  சுற்றி  வந்தாள் ….ஹேய் ஆடாம  இங்க  வாடி கொஞ்சம்  அடக்கமா  இரு  உன்னைய தாண்டி பொண்ணு பார்க்க வந்திருக்காங்க  நீ இப்படி  எல்லாரையும்  வர சொல்லி  கத்துற என்று சீதா    காதை திருகினாள் தன் ஒரே    செல்லப்பெண் தேனுவை 

இவள் “ஆ  அம்மா விட்ருங்க  உங்க  மாப்ள கலெக்டராமே எந்த  ஊர் குப்பையை கலெக்ட்  பன்றாரு,”  என்று நக்கல்  விட

வாசலில் பவளமல்லி   மழையில் நனைந்தபடி  கொட்டிக்கிடந்ததை  பார்த்து ரசித்தவாறே  இவள் பேசியதையும்    கேட்டுக்கொண்டு  ….. கிஷோர் கைகட்டி சிரித்த   வண்ணம் உள்ளே வந்து  தேன்மொழி  எதிரே   நின்றிருந்தான் 

அவள் குறும்புத்தனம்  இவனை  கவர்ந்தது 

தேனு அவள்  முகத்தில்  கைவைத்துக்கொண்டு  நாக்கை  கடித்தவாறு  “ஸ்ஸ்ஸ்ஸ்  ஆம் சாரி  “என்று ஓடியேவிட்டாள்

இவள் அம்மாவிற்கு ஒரே அதிர்ச்சி  “தம்பி  மன்னிச்சுடுங்க  அவள் கொஞ்சம் வாய்தான்  ஆனா  நல்ல பொண்ணு”  என்று சொல்ல 

நோ  ப்ரொப்லெம் ஆண்ட்டி  “ஐ லைக்  ஹெர்   சைல்ட்டிஸ் கேரக்டர்  ”  என்று வாய்க்குள்ளயே  முணுமுணுத்தான்

அதற்குள் கிஷோர் தாய்  சுமதி ,ஆஷா  வந்துவிட  எல்லாரையும் பெண் வீட்டார்  வரவேற்றனர்  …

மாப்ள வீட்டுக்காரங்களுக்கு  காபி  கொண்டு  வா மா  தேன்மொழி என்று  தந்தை  ராமன்  கூப்பிட  இவள் காபியை  அனைவருக்கும் கொடுத்த  பின்னர்  கிஷோருக்கு  கொடுக்க  சென்றாள் …அவன் இவளை  ஓரக்கண்ணால்  பார்க்க ….இவள்  சிரித்துகொண்டே கண்ஜாடையில்  அவள் கைகளை  காட்டினாள்  ….இவன் அதை  உற்று  நோக்க  “சாரி “என்று  இருந்தது  ….இவன் மொபைல்  எடுத்து  “இட்ஸ்  ஓகே”  என்று  டைப் செய்து  காட்டினான்  ……இவளுக்கு இப்பொழுது  மெதுவாய்  வெட்கம்  எட்டிப்பார்க்க ..,.ராமன்  என்னமா  தேனு  பையன  பிடிச்சிருக்கா  என கேட்க  …..இவள் தலையசைத்தாள்  ….தம்பிஉங்களுக்கு  என்று தேனு அப்பா இழுக்க  ” ரொம்ப  பிடிச்சுருக்கு  என்றான்  “….காபியை சுவைத்தவாறே…..,,(குறும்புக்காரியை  எப்படி வேண்டாம் என  சொல்ல மனம்  வரும்  )

கிஷோர் ஜன்னல்  ஓரம்  நின்றிருந்தவளை  ஓரக்கண்ணால் பார்த்தான்  அவள் இவனை பார்த்து கண்ணடித்தாள்  ….இவனுக்கு ஷாக்  அடித்தாற்போல்  இருந்தது ……

தேனுவிற்கும்  மகிழ்ச்சி  அவள் மனதில் ஆயிரம்  பட்டாம்பூச்சிகள்  பறந்தன 

                              2

தேனுவின் நினைவுகள் இவனுக்குள்ளும் இரசாயன மாற்றங்களை செய்ய ஆரம்பித்திருந்தன …….

“டேய் கிஷோர் உனக்கும் காதல் வந்துடுச்சா.?…..என அவனாகவே அவன் தலையில் தட்டிக்கொண்டான்

“கல்நெஞ்சகாரனுக்கும் காதல் வந்ததோ!

உழியை கொண்டு மனம் செதுக்க வந்தாயோ பேரழகே !

துருதுருபார்வையாலே கொள்ளையடித்தாய்!

வெட்கம் காட்டி என்னை எட்டிபறித்தாய்

கரிசகாட்டு பூவே!”

இப்படி  அவன் கைகள் பேப்பரில் கவி எழுதிக்கொண்டிருந்தன…..எதரில் வந்த க்ளெர்க் இவன் முகமலர்ச்சியை பார்த்து…. தம்பி பொண்ண பிடிச்சதா என்று கேட்க

…..நினைவு வந்தவனாய் என்னங்க கந்நசாமி அண்ணா கேட்டிங்க என்று விசாரித்தான்….பொண்ணு பிடிச்சதானு கேட்டேன் தம்பி என்றார் ….ம்ம்…என்றான் சிரிப்போடு.

எதையோ நினைத்தவனாய் அவளைக்காண மனம் ஏங்கியது…..

தேனுவின் அம்மா கத்திக்கொண்ணனடிருந்தாள் …..”ஏலே தேனு கல்யாணம் பேசுன பொண்ணா லட்சணமா வீட்டுல குளிக்காம எதுக்குடி ராசாத்தி,பேச்சி கூட கம்மாய்க்கு போறேன்னு ஆடுற….உன்னைய பட்டணத்துல படிக்க வச்சாலும் பட்டிகாட்டு புத்தி போகமாட்டேங்குது”….

போம்மா நான் என்னதான் படிச்சாலும் இந்த மண்ணுக்கு சொந்தகாரிதான் ……..கம்மாய்க்கு போறதுல உனக்கு என்ன பிரச்சனை….வேணும்னா என்ன கட்டிக்கபோறவனுக்கு கால் பண்ணி கேட்டுடவா என்றவள் அவனுக்கு கால் செய்துவிட்டாள்….. “ஹலோ” என்ற அவள் …..ஐயோ உண்மையிலேயே கால் பண்ணிட்டோமே என்று கட் செய்து ஓடியேவிட்டாள்.

அவள் குரல் கேட்ட மயக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்தான் கிஷோர்.

ஒரு வேகத்தில் அவள் நம்பரை டயல் செய்துவிட்டபடி எங்கோ கிளம்பினான்.

இவள் எடுத்ததும் “தேனு எப்படி டா இருக்க ,சாப்டியா என்று ஆரம்பித்தான்…..லொட லொடவென வாயடிக்கும் தேனுவிடம் இருந்து வந்த வார்த்தைகள் எல்லாம் “ம்ம்ம் “என்ற குழைந்த வார்த்தை மட்டுமே ..ஒன்றிரண்டு நிமிடம் பேசியபின் சரி தேனு வைக்கிரேன் மா என்று வெளியே கிளம்பினான்….

அப்பொழுது எப்.எம் ல் ஒளித்த பாடல்

“இதுவரை இல்லாத உணர்விது

இதயத்தில் உண்டான கனவிது

பலித்திடும் அந்நாளில் கேட்டிடும்

பாடல் கேட்பாயா”

கார் டிரைவ் செய்த அவனும்,வீட்டில் இருந்த இவளும் ஒரே நேரம் பாடலை கேட்டு இரசித்தனர்.

அப்பொழுது வெளியே நின்றிருந்த ராசாத்தி “ஏல தேனு குளிக்க போலாமா” எனக் கேட்க  இதோ வந்துட்டேன் என தலைதெரிக்க ஓடினாள்

பொன்மேனியாள் அவள் குளிக்க மீன்கள் அவள் கால்களை உரச நான்,நீயென போட்டி போட்டி போட்டிருபனந்தன……நீரில் அமிழ்ந்த தாமரையாய் அவள் எழுந்துவரநீளவிழியில் தலைமுடி படிந்திட ,அழகேசிலை,அபிநயமிக்க கண்கள் ,கூர்மையான நாசி,பிறை போன்ற நெற்றி ,சிவந்த மாதுளை உதடு,….இவளை எமழுந்து நிற்க பார்த்த தோழிகள்……

“செம அழகிடி நம்ம தேனு பொட்டச்சிங்க நம்ம கண்ணே இப்படி பார்க்குதே ….குடுத்து வச்சவர்டி அந்த கலக்டரு “என்று  பேச்சி சொல்ல ………..

“ஒருமாதிரித்தான்டி திரியுர நீ” என்று ராசாத்தி சொல்ல பேச்சி ராசாத்தியை சமாளித்தாள்

உடைமாற்றி வீடு திரும்பும்போது மாமரத்து மேலிருந்து

“தேனு தேனு”  என்ற குரல் கேட்டு துண்டை தலையில் துவட்டியவாறு வந்தவள் இன்ப அதிர்ச்சியானாள்

‘நீ எப்ப வந்த?’ என்றவாறு…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28

28 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் பற்றி அனைத்தும் கூற அதை கேட்ட அனைவரின் மனமும் கனக்க அமைதியாக இருந்தனர். அக்சரா பெருமூச்சுடன் “சரிங்க அங்கிள் நான் கிளம்பறேன்.” என அவள் சாதாரணமாக கூறினாள். அனைவரும் தங்களுக்குள் பார்த்துக்கொள்ள ஜெயேந்திரன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09

உனக்கென நான் 9 கட்டிலில் மனதை திறந்து தலையணையை நனைத்துகொண்டிருந்த அந்த பாவைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தான். “அது தீடீர்னு சொன்னாங்கல்ல அதான் கொஞ்சம் வெட்கத்துல ஓடிட்டா” என பார்வதியின் குரல் கேட்கவே அது தனது தந்தையின் சந்தேக

கபாடபுரம் – 1கபாடபுரம் – 1

கதை முகம்   இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ‘கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ‘முகஞ் செய்தல்’ – என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து