58 – மனதை மாற்றிவிட்டாய்
அங்கிருந்து கிளம்பிய அர்ஜுனுக்கு மனம் ஆறவேயில்லை. ஏன் ஆதி இப்படி பண்றான்.. சொல்லவரத கேக்றதுக்குகூட அவன் ரெடியா இலேயா? அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாதவன் வெறுக்கிறவன் எதுக்கு அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணனும். என ஆதங்கத்தில் புலம்பியவன் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டான்.
ஊரிலிருந்து வந்தவன் நேரே ஆதி வீட்டிற்கு செல்ல அங்கே இருந்து நிலை கண்டு குழம்பிப்போனான். அனைவரும் அமைதியாக எதையோ பறிகொடுத்தது போல இருக்க அம்மு, அனு ஆதங்கத்தில திவி பேசியது செய்த அனைத்தையும் கூற அபியும் அவள் பங்கிற்கு நடந்த சண்டை அவள் சொத்துக்காக பழகியது, ஆதி அவளை யாரும் அறியாமல் கல்யாணம் செய்தது என அனைத்தையும் சற்று கோபத்தில் மிகைப்படுத்தி கூற அர்ஜுன் “திவிகிட்ட பேசுனீங்களா? காரணமில்லாம அவ பண்ணமாட்டானு நீங்க எல்லாரும் தானே சொல்லுவீங்க. ”
“உண்மைதான் ஆனா அவளுக்கு நாங்க எல்லாம் முக்கியமில்லை. எங்ககிட்ட சொல்லமாட்டாளாம். ஆதிகிட்ட மட்டும் தான் சொல்லுவாளாம். இத்தனை வருஷம் அவளை வளத்துன நாங்க அவ கண்ணுக்கு தெரில. நேத்து வந்த ஆதி பெருசா போய்ட்டானா?” என அபி இன்னும் கோபத்தில் கத்த அங்கே இருந்த பெரியவர்களால் எதுவும் கூறமுடியாமல் அப்டியே இருக்க இவனுக்கு புரிந்துவிட்டது. இவங்க எல்லாரும் திவி மேல ரொம்ப கோபத்துல இருக்காங்க. எது சொன்னாலும் கேக்கமாட்டாங்க. மொதல திவிகிட்ட பேசலாம். ஏன் அவ இன்னும் ஆதிகிட்ட சொல்லாம இருக்கா. என நினைத்துக்கொண்டே “நான் திவிய பாத்துட்டு வரேன்” என கூறி மாடிக்கு சென்றான்.
[அபிக்கு சொத்து விஷயத்தில் ஒரு உறுத்தல் தான் இருந்தது. ஆனால் அவள் யாரோ ஒருத்தனை காதலிக்கறேன் என கூறவும் அபி அவளை பாதிக்கு மேல் வெறுத்தேவிட்டாள். அவளுக்கும் தன் தம்பி தான் தனக்கு முதல் குழந்தை என்று பாசம் காட்டி வளத்தியவள். அவன் ஆசைப்பட்டது திவியின் நேசம். அவளும் இருப்பது போல் காட்டி இப்டி ஏமாற்றியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த திருமணம் அனைவரின் சம்பதத்தோடு அவளை கைப்பிடிக்க எண்ணியதை நினைத்து முதலில் பெருமைப்பட்டது, கல்யாணத்தை எதிர்பார்த்தது அவளே. அவளால் இப்பொது திவியின் செயலை ஏற்கமுடியாமல் குழம்பி கோபத்தில் திளைக்க அடுத்து இருந்த பிள்ளை பாசத்தையும் வைத்து சோபி குழப்பிவிட முழுதாக திவிமீது கோபத்தை மட்டுமே காட்டினாள். அவள் எது செய்தாலும் குறைகளை மட்டுமே கவனித்தாள்.]
பால்கனியில் நின்று திவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க “திவி” என அர்ஜுன் அழைத்தான். திரும்பியவள் முகம் மலர “அண்ணா, எப்படி இருக்கீங்க… என்ன திடீர்னு. ஏன் எப்போ வரேன்னு சொல்லல? ” என கேட்க
அவளை கூர்மையாக பார்த்தவன் “இங்க எவ்வளோ நடந்திருக்கு. அவனும் ஒண்ணுமே சொல்லல. .. நீயும் அதுவே பன்ரேல்ல? ”
மெலிதாக அவள் சிரிக்க “சிரிக்காத திவி. செம கடுப்புல இருக்கேன். நீ ஏன் என்கிட்ட சொல்லல. ஏன் அவன்கிட்ட இன்னும் பேசமாயிருக்க? யாரு அந்த வீடியோ அனுபிச்சது. வீட்ல எல்லாரும் இவ்வளோ கோபத்துல கிட்டத்தட்ட உன்ன வெறுக்கற அளவுக்கு இருகாங்க. ..அதுல முக்கியமா நீங்க சொல்லாம கல்யாணம் பண்ணது தான்.நீதான் அவங்ககிட்ட இருந்து அவனை பிரிக்க இப்படி பன்ரேங்கிற ரேஞ்சுல பேசுறாங்க. சொல்ல வரத கூட கேக்கமாட்டேங்கிறாங்க. நீ என்ன தான் பண்ற” என அவன் கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கமாக முடிக்க இவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“அண்ணா, ப்ளீஸ் ரிலாக்ஸ். எல்லாத்துக்கும் பதில் சொல்றேன் என அவள் அறிந்த அவள் பக்கம் இருந்து பார்த்தவற்றை நிச்சயம் நடக்கவிருந்த அன்றிலிருந்து இன்று வரை அனைத்தையும் கூறினாள். ஆனால் ஆதிக்கு ஏதோ ஒரு உந்துதல் தான். கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டாரு. ஆனா அவரு எல்லாரையும் அடக்க தான் ஹவுஸ் அரெஸ்ட். அது இதுனு எல்லாம் சொல்லிருப்பாரு. எனக்கு அவரை நினச்சா தான் கொஞ்சம் சங்கடமாயிருக்கு. என் மேல இவ்ளோ பாசம் வெச்சும், அன்ப மட்டுமே எதிர்பார்த்து அது பொய்யோன்னு அவரால ஏதுக்கமுடில. அதனால சில சமயம் ரொம்ப கத்திடறாரு. மத்தபடி வேற எதுவுமில்லை அண்ணா. இன்னைக்கு கூட பேசியது, பிரச்சனையை சொல்ல வந்து அவருக்கு கால் வர அது தடைபட்டது என அனைத்தையும் கூறியவள் சீக்கிரம் பேசிட்டா சரி ஆய்டும் அண்ணா. எல்லாரும் என் மேல கோபமா இருகாங்க. என் மேல ரொம்ப பாசம் வெச்சவங்க தான். அதனால சொன்ன புரிஞ்சுப்பாங்க. அவரு தான் காலைல போனவரு. வேலை போல. இன்னும் வரவேயில்லை. அவரும் மனசு உறுத்தலோட எத்தனைய தான் பாப்பாரு. அதுதான் இவங்க எல்லாரையும் நினச்சு கவலையா இருக்கு. சீக்கிரம் எல்லாம் பேசிட்டு திருப்ப பழையமாதிரி நம்ம எல்லாரும் ஜாலியா இருப்போம் அண்ணா.” என அவள் முழு நம்பிக்கையுடன் கூற.
இந்த பொண்ணு இவ்வளவு நம்பிக்கையோட இருக்காளே. ஆனா இவ மேல அவங்களுக்கு இருக்குறது வெறும் கோபம் மட்டுமில்ல. இவளை நம்பாம எத பண்ணாலும் அது தப்பு குறைன்னு சொல்றாங்க. அவ்வளவு தூரம் வந்தது கூட புரியாம சீக்கிரம் சமாளிச்சிடலாம்னு இருக்காளே. என நினைத்தவன் அவளிடம் “நீ சொன்னாதானே ஆதி கேட்கமாட்டேன்கிறான். நான் வேணும்னா பேசி பாக்கவா ? ”
இவளும் அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு “நான் அவர்கிட்ட நிறையா சொல்லணும் அண்ணா. எங்களுக்குள்ள இன்னும் புரிஞ்சுக்கவேண்டியது பேச வேண்டியது நிறையா இருக்க. ஆனா எத எங்கயிருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரில. நம்பிக்கை அன்பு எல்லாமே நம்மகூட பழகும்போது கொஞ்ச கொஞ்சமா நாமளே புரிஞ்சிக்கும்போது தானா வந்தாதான் கடைசிவரைக்கும் இருக்கும்னு நினச்சேன்… மத்தவங்க சொல்லி கன்வின்ஸ் பண்ணி வரதுல அந்தளவுக்கு இஷ்டமில்ல அண்ணா. ஆனாலும் இப்போ எல்லாரும் சங்கடப்படறத பாக்கும்போது எனக்கு எப்படியாவது இது சாரியாகட்டும்னு இருக்கு. ஆதி எந்தளவுக்கு நீங்க சொல்றத கேப்பாருனு தெரில. சரி எதுக்கும் பேசிப்பாருங்க… ஒருவேளை அவரு கேட்டு பிரச்சனை சரி ஆயிடிச்சுனா பழையபடி எல்லாமே மாறி ஆதியோட சிரிப்பை பாத்தா அதுவே ரொம்ப சந்தோசம் தான். அது போதும் அண்ணா எனக்கு. அதுக்கப்புறம் அவரும் என்னை எப்போவும் விடாம என்னை அவருக்குள்ள வெச்சு பாத்துப்பாரு.” என கூற அர்ஜுன் அவளிடம் வந்து அவளது தலையை வருடிவிட்டு “எல்லாம் நல்லபடியா நடக்கும்…. நான் பேசுறேன் மா அவன்கிட்ட சரியா? நீ நிம்மதியா இரு. ” என கூற இவளும் வேகமாக தலையசைத்து “ஆமாமா, அப்போதானே உங்க ரூட் கிளீயர் ஆகும். இந்த பிரச்சனைல எல்லாரும் அத கவனிக்காம இருக்காங்கல அண்ணா. இவங்கள நம்புனா இனி வேலையாகாது. சோ சீக்கிரம் இத சரி பண்ணிட்டா நீங்க அம்முவை கூட்டிட்டு போயிடுவீங்க அதுக்குதானே அண்ணா பிளான் பண்றிங்க?” என கண்ணடித்து கேட்க
அவனும் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு “வாலு, இப்போவும் கிண்டல் பண்றத நிறுத்தலையா?”
அவள் சிரிக்க அர்ஜுன் “உனக்கு கஷ்டமாயில்லையா? ”
திவி “ஆதிகூட இருக்கேன். எனக்கென்ன கஷ்டம் வரப்போகுது…. என்ன நடந்தாலும் அவரு என்னை விடமாட்டாரு அண்ணா.” என அவள் கூற அவளின் இந்த அசைக்கமுடியாத நம்பிக்கை கண்டு அர்ஜுன்
“உன் மனசு போல எல்லாமே நடக்கும்” என கீழே வர ஈஸ்வரி, சோபியுடன் அனைவரும் இருக்க இவனை கண்டதும் ஈஸ்வரி ராகத்தோடு தன் பேச்சை ஆரம்பிக்க அதுவும் திவியை வசைபாட அர்ஜுன் “போதும் தேவையில்லாம பேசாதீங்க…. அவளை பத்தி தப்பா பேசுற அருகதை உங்களுக்கு இல்லை.” என்றான்.
இதற்கு ஈஸ்வரி “பாருப்பா, அண்ணா அண்ணா னு உன்னையும் ஏதோ பேசி நம்ப வெச்சுட்டா. அம்மு இனி உன் நிலைமையும் இப்படித்தான் எப்போ என்ன நடக்குமோ, அந்த திவி எந்த பிரச்சனையை கொண்டுவருவாளோன்னு தான் நீ உன் வாழ்க்கைல இருக்கப்போற புலம்ப ஆரம்பிக்க”
அம்முவும் “நீங்க அவகிட்ட பேசிமட்டும் என்னவாக போகுது. உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. இனிமேல் அவகிட்ட பேசாதீங்க. அவ சரில்ல இந்த குடும்பத்தில இருக்கற எல்லாரையும் பிரிச்சுடுவா. அவளுக்கு சொத்து தான் முக்கியம்… இவ்ளோ நாள் கூட நான் யோசிச்சேன். ஆனா இன்னைக்கு நடந்த விஷயம், இப்போ உங்ககிட்ட இவ்வளோ நேரம் இத்தனை பேர் அவளை பத்தி சொல்லியும் அவகிட்ட போயி பேசிட்டுவந்த 10 நிமிசத்துல அவளுக்கு சப்போர்ட் பண்றீங்கல்ல. அவகிட்ட நெருங்காம இருக்கறதுதான் நமக்கு நல்லது. இல்ல அவ உங்களையும் மாத்திடுவா.” என
கோபமுற்ற அர்ஜுன் “நிறுத்து அம்மு, எல்லாமே தெரிஞ்சமாதிரி பேசாத. மத்தவங்க பேச்ச கேட்டு என்னவே கண்ட்ரோல் பண்ற? நீயும் எல்லாரை மாதிரி தான்ல. அவளால இப்போவரைக்கும் என்ன நீங்க இழந்துட்டீங்கனு இப்டி பேசுறீங்க. மத்தவங்கள விடு நீ கூட அவளை இவ்ளோ மோசமா நினைப்பியா? அவ உன் பிரண்ட், அவ உனக்காக என்னவெல்லாம் பண்ணிருக்கா. இப்போ நானும் நீயும் சேர போறதுக்கே அவதான் காரணம்னு கூட மறந்திடுச்சா? ச்சா…. இத நான் உன்கிட்ட இருந்து எதிர்பாக்கவேயில்ல.. எனக்கு உங்ககிட்ட பேசவே இஷ்டமில்லை. ” என்றவன் வெளியேறி விட்டான்.
இங்கே சோபி மீண்டும், “அவளுக்காக உன்ன இப்டி எல்லார்முன்னாடியும் இன்சல்ட் பன்னிருக்கவேண்டாம். உன் மனசு கஷ்டப்படும்னு கூட நினைக்காம இப்டி அவசரமா கிளம்பி போகணுமா? இதுவரைக்கும் உன்ன அதட்டிக்கூட பேசாதவரு இன்னைக்கு இப்டி கோபமா நடந்துக்கறாரு. வந்த போது கூட சாதாரணமா பேசிட்டு பிரச்சனையை கேட்டுட்டு போனதாதானே சொன்னிங்க. மேல போயி அவளை பாத்துட்டுவந்ததும் இப்டி கத்துறாரே. என்ன சொல்லிவிட்ச்சாலோ? எல்லாம் அவளால. ” என இன்னும் ஏத்திவிட அழுதுகொண்டே அம்மு அறைக்குள் சென்றுவிட்டாள்…அனைவரும் அவளை சமாதானப்படுத்த சென்றனர்.
பாட்டி தாத்தாவிற்கும் அர்ஜுனின் இந்த கோபம் புதிது தான். இருந்தும் அவன் கேட்ட கேள்விகள் உண்மையே. அவளால் என்ன இழந்துவிட்டோம். அதை யாரும் இங்கு சிந்திக்கும் மனநிலையில் இல்லை என புரிய பேத்தியை சமாதானப்படுத்த சென்றனர்.