Tamil Madhura ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 57

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 57

57 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதிக்கு தனியே இருக்க வேண்டுமென தோன்ற அவன் ஆபீஸ்க்கு சென்று மீட்டிங்காக இருக்கும் தனியறையில் அடைந்துகொண்டான்.

ஏன் திவி இப்படி பண்ரா. ஆல்ரெடி இருக்குற பிரச்சினைல இவ இன்னும் பேசி சங்கடபடுத்தனுமா?

அக்கா அம்மா எல்லாரும் எவ்வளவு பீல் பண்றாங்க.

ஏன் அப்ப திவி மட்டும் பீல் பண்ணமாட்டாளா?

அதேதான் நானும் சொல்றேன். ஏற்கனவே அவ பேசுனதுல அவள பத்தி எல்லாரும் தப்பா தானே நினைக்கிறாங்க. இந்த அழகுல அவ ஸ்வீட் பண்ணலேன்னு யாரு அழுதா. இதுல அக்கா நந்துவ திட்டுறத பத்தி இவ திட்டிட்டு வேற போயிருக்கா.. அவங்க பையன் மேல அவங்களுக்கு இல்லாத உரிமையா இவளுக்கு. வாய் திமிரு அதிகமாயிடுச்சு.

எல்லாரும் இன்னமும் அவ மேல கொஞ்சம் நம்பிக்கையோட தான் இருக்காங்க. இவ ஏன் சொத்துக்காக தான் பழகுனேன்னு சொன்னாஙகற காரணத்த யாருகிட்டேயும் சொல்லாம அவ நார்மலா இருக்குறத தான் அவங்க எல்லாரும் தப்பாவும் நினைக்கிறாங்க.. சங்கடமும்படறாங்க…திவியும் அவ்வளவு உறுதியா சொல்ரான்னா கண்டிப்பா ஏதோ இருக்கும். ஆனா அவ என்கிட்ட மட்டும் சொல்லுவேன்ங்கறதுதான் எல்லாருக்கும் இவ மேல இருக்குற அதிகபட்ச கோபமே. எனக்கு முன்னாடி இருந்தே அவளை பார்த்து வளத்துனவங்க. அவ சொல்றத புரிஞ்சுக்காம போய்டுவாங்களா என்ன…இத ஏன் அவ புரிஞ்சுக்க மாட்டேன்ங்கிறா. நானே கேட்டு சொன்னாலும் அவங்களுக்கு ஒரு உறுத்தல் இருந்திட்டே இருக்கும்.

எல்லாத்துக்கும் மேல எனக்கு அவ விளக்கம் சொல்லாட்டியும் என் தியாவ நான் நம்பறேன்..ஏத்துப்பேன். ஆனா மத்தவங்க அப்படி இல்லையே. அவளை பழைய மாதிரி எல்லாரும் முழு மனசோட ஏத்துகிட்டா தான் இவளும் சந்தோஷமா இருப்பா.இப்போ என்னதான் அவ நார்மலா இருந்தாலும் பழைய திவிகிட்ட இருந்த ஏதோ ஒன்னு குறையுது.

திவி எல்லா விஷயம் மாதிரி இதையும் ஈசியா சமாளிச்சடலாம். அவ வழிக்கு கொண்டு வந்திடலாம்னு பாக்கிறா. ஆனா எல்லாரும் இருக்கிற மனநிலைல இவ அந்த விஷயத்தை ஸ்கிப் பண்ணிட்டு அடுத்தடுத்துன்னு போறது இன்னும் கோபபடுத்தும்னு இவளுக்கு புரியுதா புரியலையா ?

என்ன நடந்தாலும் சரி இனி இவளை இப்படியே என்கரேஜ் பண்ணகூடாது..

நம்ம ஸ்டிரிக்டா சொல்லணும். அவங்ககிட்ட உண்மைய சொல்லி அவங்கள மொதல சரி பண்ணணும்னு.

பாவம் என்ன பண்ராளோ நான் வீட்டுக்கு போனபோது கூட அவ கீழ வரலையே. ச்ச நானும் அவகூட இருக்காம இங்க வந்திட்டேனே. அவ யார்கிட்ட போவா. பீல் பண்ணிருப்பாளோ..என்கிட்ட சொல்லணும்னு என்னை எதிர்ப்பார்த்திட்டு இருந்திருப்பாளோ. என்னை அவ எதிர்பார்ப்பாளா மாட்டாளா.. எதுன்னாலும் சரி ஃபஸ்ட் வீட்டுக்கு போவோம். என அனைத்தும் யோசித்து முடித்து தெளிவாக எழ அவனுக்கு அழைப்பு வந்தது.

சொல்லு முரளி..

ஆதி நீ சொன்னமாதிரி நான் எல்லாமே செக் பண்ணிட்டேன். உன்ன கொலை பண்ண யாரும் டிரைகூட பண்ணல. அந்த ஊர்ல இருக்குற எல்லாரும் உன் தாத்தா மேல ரொம்ப மரியாதை வெச்சிருக்காங்க. யாருக்கும் பகை அந்த மாதிரி எல்லாம் கூட இல்ல. உன் ஆதிநாராயணன் தாத்தா வழிலையும் பாத்தாச்சு. அவரு மேலேயும் பயம் கலந்த மரியாதை. யாரும் குறையா ஒரு வார்த்தை கூட சொல்லல. உன்மேலையும் பெரிய வீட்டு பையன்னு பாசம் மரியாதை தான். சொத்து அந்தஸ்து, கௌரவம்னு பார்த்தாலும் ஒரு நாலு குடும்பம் தான். அதுல 2குடும்பத்துல பிள்ளைங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஒரு குடும்பத்துல பையன் தான். அவனும் லவ் பண்ணி மேரேஜ் பிக்ஸ் பண்ணபோறாங்க. ஒரு குடும்பத்துல தான் ஒரே ஒரு பொண்ணு இருக்கு. அவ ஸ்கூல் காலேஜ் எல்லாமே பாத்தாச்சு. நீங்க 2பேரும் ஒன்னா கூட படிக்கல. இன்னும் சொன்னா அவ உன்ன விட மூனு வயசு சின்னவ. எதுக்கும் செக் பண்ணுவோம்னு ஆள் செட் பண்ணி உன் போட்டோ காட்டியும் விசாரிச்சாச்சு. அவளுக்கு நீ யாருன்னே தெரில டா.

அப்படின்னா எந்த வகையிலும் பிரச்சினை இல்லேங்கிறியா.

அடசாமி இதுக்குமேலையுமா உனக்கு சந்தேகம். டிடக்டிவா இருந்து உனக்கும் பிரண்டா இருந்து நான் படற அவஸ்தை.

யாருடா உன்ன இப்படி குழப்பிவிட்டது. உன்னை யாரோ நல்லா வெச்சு ப்ளே பண்ணிருக்காங்க. ஆனா நீயே இவ்வளவு நம்புற அளவுக்கு ஸ்கிரிப்ட் பண்ணத நினச்சாதான்டா என அவன் சிரித்து விட்டு சரிடா பை. வேற ஏதாவதுன்னா கூப்டு என போனை அணைத்தான்.

அவனுக்கு மீண்டும் குழப்பம் வர திவி அவ்ளோ ஸ்ட்ராங்கா சொன்னாளே. இந்த விசயத்துல அவ விளையாடுவாளா என்ன?

ஏன் அவளுக்கு ஆக்சிடென்ட்னு சொல்லி விளையாடலையா?

ஆனா அவளோட பதட்டம் பயம் நடுக்கம் எல்லாமே உண்மை அது எப்படி?

அவளே சொல்லிருக்கா ஸ்கிரிப்ட் எல்லாம் என் பிரண்ட்க்கு நான் எழுதிக்குடுத்து நீங்க கண்டுபுடிக்காத அளவுக்கு ரியலா இருக்கணும்னு பிளான் பண்ணி அவளை பயமுறுத்தி பேசவெச்சேன்னு. அதே மாதிரி இந்த தடவையும் இவ ரியல இருக்கணும்ங்கிறதுக்காக அப்டி நடந்துக்கிட்டாளா? ஆனா அதுக்கு என்ன அவசியம் இருக்கு.. லவ் தான் சொல்லனும்னா அவ டைரக்ட்டா சொல்லிருந்தாலே நானே ஒத்துக்கிட்டுஇருந்திருப்பேனே…

அந்த வீடியோல பேசும் போது என்ன சொன்னா? – ஆதிகிட்ட நான் நேரடியா லவ் பண்றேன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனா அந்த மாதிரி எல்லாத்தையும் கிரீயட் பண்ணிடுவேன். ஒருவேளை பிரச்னை வந்தாலும் நானா உங்ககிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். வீட்ல சொன்னாங்க. உங்ககிட்ட லவ் பன்றேன்னு சொன்னேனா? னு கேட்டா ஆதிக்கு பதிலே இருக்காது. அவரும் ரொம்ப நேர்மையா யோசிப்பாரு. இது உண்மைதானேனு நினச்சா எதுவும் சொல்லாம போய்டுவாருன்னு.

இருக்கலாம் ஆனா எனக்குள் லவ் வந்தது எனக்காதானே..அவ அதுக்கு தகுந்தமாதிரி எதுவும் என்னை இம்ப்ரெஸ் பண்ணவெல்லாம் பண்ணலையே.

என அவள் குணத்தையும், நடவடிக்கைகளும், பேச்சுகளும் அனைத்தையும் யோசிக்க ஒன்றுக்கு ஒன்று முரண்பட இவனால் இவள் கெட்டவள் தான், நல்லவள் தான் என்ற எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை ஆதிக்கு தலையே வலித்தது.

இப்டி குழப்பறதே அவளுக்கு வேலையா போயிடிச்சு. என்னவா இருந்தாலும் இந்த அளவுக்கு பொய் சொல்லி, விளையாடமாட்டா. என்னமோ இருக்கு. ஆனால் திவி மீது கோபமும் வந்தது. இவ பண்ணற வேலைன்னாலே ச்சா…. என முடிவுக்கு வரமுடியாமல் கடுப்பாகி கத்திக்கொண்டிருக்க

அந்த நேரம் பார்த்து கதவை வேகமாக திறந்துகொண்டு அர்ஜுன் உள்ளே வர அவனை கண்டதும் மகிழ்வுடன் “டேய் மச்சா. …” என ஆரம்பிப்பதற்குள்

“ஏன்டா ஆதி இப்டி பண்ண? உனக்கு கொஞ்சம் கூட நிதானமே இல்லையா? ”

“டேய் என்னடா வந்ததும் வராததுமா இப்டி கத்துற? நீ மொதல்ல உக்காரு. வரத ஏன் சொல்லவேயில்லை? ” என என்றும் இல்லாமல் சற்று முன் இருந்த கோபம், குழப்பம் எல்லாமே ஒதுக்கிவிட்டு ஆதி பொறுமையாக பேச,

கோபமே கொள்ளாத அர்ஜுனுக்கு இவனின் இந்த செயலே கோபம் தலைக்கேற “என்ன பிரச்சனை பண்ணிவெடிச்சுட்டு என்னை சாவுகாசமா வரவேற்கிற நீ? நீ கல்யாணம் பண்ணதவே சொல்லல. ..அதுவும் யார்கிட்டேயும். இந்த லட்சணத்துல நான் ஊருக்கு வரத உனக்கு சொல்லலைனு கேள்வி வேற.?”

“டேய் கொஞ்சம் நான் சொல்றத கேளு. நடந்ததை நான் சொல்றேன். ”

“தேவையில்ல டா. வீட்டுக்கு போயிட்டு தான் வரேன். குடும்பமே ரொம்ப அழகா எல்லாத்தையும் படம் போட்டு காட்டிட்டாங்க. ”

“ஓ. ..”

“நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கல டா. அதுவும் கல்யாண விசயத்துல. ..யாரை பத்தியும் நீ யோசிக்கலேல்ல. அந்த அளவுக்கு உனக்கு உன் பிடிவாதம் தான் முக்கியமா போட்ச்சா? ”

“இல்லடா சூழ்நிலை அப்டி அமைஞ்சிடுச்சு. ”

“சூழ்நிலைய அப்டி அமைச்சுக்கிட்டேன்னு சொல்லு. அவ ஏன் அப்படி பேசுனான்னு ஒரு தடவையாவது காதுகொடுத்து கேட்டியா? திவி நிலைமைல இருந்து யோசிச்சு பாத்தியா? அவளை மட்டும் அங்க விட்டுட்டு நீ இங்க ஹாயா உக்காந்திருக்க. நீ பண்ண வேலைனால எல்லாரும் அவளை எவ்ளோ தப்பா நினைக்கிறாங்க தெரியுமா? யாரும் இல்லாம கோவில்ல வெச்சு தனியா கல்யாணம் பண்ணிருக்க. அதுவும் அவளை கட்டாயப்படுத்தி. அதுல திவி சந்தோசமா இருப்பான்னு நீ நினைக்கிறியா? (என அவன் யாருமற்று இவர்களுக்கு நடந்த கல்யாணம் குறித்து கூறினான் – அர்ஜுன்)

ஏற்கனவே திவி மீது குழப்பம் கோபம் என இருந்தவனுக்கு இன்னும் கடுப்பாகி பொறுமையிழந்து தவறாக புரிந்துகொண்டு “அப்போ என்கூட இருந்தா உன் தங்கச்சி சந்தோசமா இருக்கமாட்டேன்னு சொன்னாளா? அந்த அளவுக்கு அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் நான் கொடூரமானவனா தெரியுறேனா? அவளை பத்தி நான் யோசிக்கலேல்ல… பேசுவடா. … ஆனா எனக்கு புரியாம கேக்கறேன். அவ சொத்து தான் முக்கியம் அதுக்காக தான் நல்லவ மாதிரி நடிச்சேன். பாசமா இருக்கற மாதிரி ஏமாத்துனேன்னு சொன்னது தப்பில்லை. அப்போ எல்லாம் குடும்பத்துல யாருமே பீல் பண்ணல. பேமிலில பிரச்சனையே வரல. ஆனா நான் அவளை கல்யாணம் பண்ணதால தான் எல்லாமேன்னு எப்படிடா அண்ணனும், தங்கச்சியும் ஒரே புடியா நிக்கிறீங்க? அவளை பத்தி யோசிச்சியானு என்கிட்ட கேக்குற. ஏன் அவகிட்ட கேக்கவேண்டியது தானே. ஏன் அப்டி பேசுன? எல்லாரும் சங்கடப்படறாங்க. அவங்ககிட்ட அத பத்தி பேசி மொதல்ல பிரச்சனைய சால்வ் பண்ணுனு சொன்னியா? அவங்ககிட்ட மூஞ்சில அடிச்சமாதிரி உங்ககிட்ட எந்த காரணமும் சொல்லமுடியாதுன்னு சொல்றா. அவங்க எல்லாரும் அதுலையே பாவம் ஒடைஞ்சிட்டாங்க.

என்னமோ அவளை அங்க சிங்கம் நரி இருக்கற காட்டுக்குள்ள விட்டுட்டு வந்த மாதிரி பேசுற. வீட்ல தானே இருக்கா. இவகிட்ட தான் எல்லாரும் பயப்படறாங்க. எப்போ எத பண்ணுவா? ஏன் இப்டி பண்ரா? நடிக்கறாளா? உண்மையா இருக்காளா? இப்டி எல்லாம் பயப்படறாங்க. இவ பீல் பன்றாளாம். வந்துட்டான் சப்போர்ட்க்கு. இப்போகூட பாரு, நீ வந்ததும் வராததுமா உன்கிட்ட என்னவோ வாழ்க்கையே போன ரேஞ்சுக்கு பில்ட்டப் பண்ணிருக்கா. அப்படி எல்லாரும் அவளை கஷ்டப்படுத்துறாங்க. போடா ” என ஏளனமாக பேச

அர்ஜுனுக்கும் கோபம் வர “ஆதி, இது சரியில்ல. நீ ரொம்ப பேசுற. அவகிட்ட நான் கேட்டேன். நீ ஏன் திவி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு. அவ ஜஸ்ட் இந்த மாதிரி கல்யாணம் பண்ண வேண்டாம்னு சொல்லியும் ஆதி கேக்கலேன்னு தான் சொன்னா. வேற எதுவும் குறையா எல்லாம் சொல்லல. அதை நீயும் தான் எல்லார்கிட்டையும் சொல்லிருக்க. இதோட அவ என்னை ஏமாத்தணும்னு நினச்சா அதனால வாழ்க்கை முழுசும் ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி தான் சொல்லிருக்க. அவ்ளோ நம்பிக்கை இல்லாம கொடுமை பண்றதுக்கு நீ எதுக்குடா அவளை கல்யாணம் பண்ண?”

ஆதி “என்னை லவ் பண்றமாதிரி என்கரேஜ் பன்னிட்டு அவ ஏமாத்திட்டு போவா. நான் பாத்துகிட்டு இருக்கணுமா? என்னை யாரு ஏமாத்துனாலும் அவங்களுக்கு தண்டனை குடுக்காம நான் விடமாட்டேன். அது உனக்கே நல்லா தெரியும்.” என

இறுதியாக அர்ஜுன் மூச்சை இழுத்து விட்டபடி “திவி பீல் பண்ரான்னு கூட உனக்கு புரியலேல்ல. திவிக்கு ஒரு சான்ஸ் கொடுக்கக்கூட உனக்கு தோணல? சரி இருக்கட்டும். அவ தப்பு பண்ணல. நான் சொல்றத கேளு. அன்னைக்கு…”

“தேவையில்லை அர்ஜுன், எனக்கும் திவிக்கும் நடுவுல நடக்குற இந்த பிரச்சனைல யாரும் எனக்கு விளக்கம் கொடுக்கணும்னு அவசியமில்லை.. நான் அவளுக்கு கொடுமை பண்றதா நினைச்சாலும் எனக்கு கவலையில்ல… நான் தப்பானவனாவே இருந்திட்டு போறேன். ”

“இப்போ கடைசியா என்ன தான் சொல்லவர? ”

“இது என் பர்சனல் விஷயம் யாரும் தலையிடாம இருந்தா எல்லாருக்கும் நல்லது.”

அதிர்ச்சியான அர்ஜுன் சற்று அமைதியாகி விட்டு பின் கூறினான் “கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன் காதலை பார்த்து, அவளை நீ புரிஞ்சுக்கிட்டேன்னு நினச்சு உன்னை மாதிரி ஒருத்தன் கிடைக்க அவ குடுத்துவெச்சுருக்கணும்னு நான் தான் சொன்னேன். அதனால தான் உன் அவசரம், பிடிவாதம், கோபம் எல்லாமே பெருசா எடுத்துக்காம பொறுமையா இருன்னு கூட சொல்லலாம விட்டுட்டேன். ஆனா இப்போ நான் தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது. அவளை நீ புரிஞ்சுக்கல ஆதி. ஆனா உனக்கே உன்னை புரியலடா. புரிதல் உங்களுக்குள்ள தானா வரணும். அப்போதான் டா கடைசிவரைக்கும் நிலைக்கும். அவளை கஷ்டப்படுத்தறதா நினைச்சுட்டு உன்ன நீயே கஷ்டப்படுத்திக்கற. இதுக்கு மேல நான் உன் பர்சனல் விசயத்துல தலையிடமாட்டேன்.” என்றவன் வெளியேறிவிட்டான்.

ஆதிக்கும் கோபம், வருத்தம் என்றிருந்தது. அர்ஜுன் எத்தனை வருட நட்பு. என் நிறை குறையோட என்னை ஏத்துக்கிட்டு எல்லா நேரத்துலையும் எனக்கு சப்போர்ட்டா இருந்தவன் இன்னைக்கு அவன் தங்கச்சிக்காக என்னை தூக்கிஎறிஞ்சுட்டு போய்ட்டான்ல. இப்போ வந்த அவ மனசை புரிஞ்சுக்கமுடியுது இவனால. இத்தனை வருஷம் கூடவே பழகுன என்னை புரிஞ்சுக்கமுடியலையா? போகட்டும். என்று இவனும் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 39

39 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் அனைவரும் மகிழ்ச்சியோட விழிக்க ஆதியின் வீட்டிலே நிச்சயம் என்பதால் பரபரப்பாக அனைவரும் வேலை செய்துகொண்டு ஆதிக்காக காத்திருக்க ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அந்த சூழலை கண்டு முதலில் திகைக்க அவனின் கண் முன்னால்