Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 48

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 48

48- மனதை மாற்றிவிட்டாய்

முந்தைய நாள் இரவு அனைவரும் நேரம் கழித்து தூங்கியதாலோ என்னவோ சற்று தாமதமாகவே எழுந்தனர். தாத்தா பாட்டி சேகர் அனைவரும் வந்து கூடத்தில் அமர ஈஸ்வரியும் வந்து அமர்ந்துகொண்டு என்ன இன்னும் ஒரு காபீ கூட யாரும் போடலையா? என எப்போவும் போல தோரணையோடு வினவ தாத்தாஏன்மா கிட்சன் இருக்கறது தெரியும்ல நீ போயி போடலாமே? ” என் கேட்க ஈஸ்வரிஇல்லங்க மாமா, அத்தை, சந்திரா போடுற மாதிரி காபி டேஸ்ட் எனக்கு வராதுங்களே.. உங்களுக்கு அப்டி போட்டாத்தானே பிடிக்கும். அதா இன்னும் காணோமேன்னு தான் கேட்டேன்என இழுக்க பாட்டியும்ஆமா மாப்பிள்ளை, இவ்ளோ நேரம் அசந்து தூங்கமாட்டேளே? எங்க அவ? “

இல்ல அத்தை, இராத்திரி அவ தூங்க லேட்டாயிடிச்சு. அதனால தான் காலைல கொஞ்சம் அசந்துட்டா. நானும் எழுப்பல.”

மதியும் அங்கே வர அவரது தாய் வினவினார்என்னமா உடம்புக்கு எதுவுமில்லையே? “

இல்லமா, நைட் லேட்டாயிடிச்சு. ஆதி வந்த அப்புறம் தான் படுத்தேன். அதான் கொஞ்சம் அசந்துட்டேன்.”

சேகர்நீ ஏன் முழிச்சிருக்க, அவனுக்கு தான் அவன் பொண்டாட்டி இருக்கால்ல. இனி அவ பாத்துக்கிட்டும்

ஈஸ்வரிஎன்ன அண்ணா இப்டி சொல்றிங்கஎன்ன இருந்தாலும் அவ முறையா கல்யாணம் பண்ணி வந்தவளா என்ன? அவகிட்ட இதெல்லாம் எதிர்பாக்கலாமா? பாருங்க. பொழுது விடிஞ்சு எவ்வளோ நேரம் ஆகுது. வீட்டு மருமக இன்னும் ஆள காணோம். எல்லாம் நம்ம குடும்ப பழக்கம் எங்க தெரியப்போகுது? இதுக்கு தான் சொந்தத்துக்குள்ள இருக்கட்டும்னு சொன்னேன். கேட்டாத்தானே? ” என ஆரம்பிக்க

மதிநான் போயி காபி கொண்டு வரேன்என செல்ல எத்தனிக்க திவி டிரேயில் காபியுடன் வந்தாள்.

அனைவர்க்கும் காபீ குடுக்க ஈஸ்வரிநீ எதுக்கு இப்போ இதெல்லாம் செய்ற?”

நீங்க தானே ஆண்ட்டி சொன்னிங்க? வீட்டு மருமக இப்படியா பொறுப்பிலாம இருங்கறதுனு. அதுதான் பொறுப்பா எல்லாமே செய்றேன். மதி அத்தை தூங்கிட்டு இருந்தாங்க. டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு தான் நானே போட்டுட்டேன்மருமக வந்த அப்புறம் எதுக்கு அவங்களுக்கு டென்ஷன் சொல்லுங்க. ” என ஈஸ்வரி விழிக்க தாத்தாவும், பாட்டியும் தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டே காபீயை எடுத்துக்கொண்டனர்.

சேகரிடம் திரும்பியவள்இந்தாங்க மாமா உங்களுக்கு பிடிச்ச இஞ்சி டீ, நியூஸ் பேப்பர்.” என நீட்ட முதலில் தயங்கியவர் பின் அமைதியாக வாங்கிக்கொண்டார். பின் மதியிடம் திரும்ப அவர் அம்மா நான் போயி கோலம் போட்டுட்டு வரேன். ரொம்ப லேட்டாஆயிடிச்சு இன்னைக்கு. என நகர முற்படநானே கோலம் போட்டுட்டேன் அத்தை. கொஞ்சம் காய் எல்லாம் கட் பண்ணி வெச்சுஇருக்கேன். காலைலக்கு என்ன செய்யணும்னு சொல்லுங்க. ..நானும் ஹெல்ப் பண்றேஎன அனைவரும் அவளை பார்க்க ஈஸ்வரியிடம் திரும்பிஆண்ட்டி, இந்த வீட்டு ஆளுங்களுக்கு என்ன என்ன வேணும்னு தெரியும். சோ யாருக்கு டீ, காபின்னு பாத்து கொடுத்துட்டேன். நீங்க எப்போவது வரதால எனக்கு தெரில. அதனால தான் காபியே போட்டுட்டேன். வேணும்னா டீ கொண்டு வரேன். “

என சொல்ல அவள் நீ ஒரு விருந்தாளி எனக்கு இந்த குடும்பம் பற்றி எல்லாமே தெரியும் என காட்டிக்கொண்டு தன்னை மட்டம் தட்டுகிறாள் என உணர்ந்து மறுப்பேதும் கூறாமல் எடுத்துக்கொண்டு குடிக்கஎப்படி இருக்கு ஆண்ட்டி?” என வினவம்ம். ..” என்றாள்.

ம்ம். ..ன்னா என்ன ஆன்ட்டி அர்த்தம். என் கை பக்குவம் எப்படி இருக்குனு சொல்லமாட்டீங்களா? ” என வினவ ஈஸ்வரிக்கு பெருமையாவும் கூறமுடியாமல், குறை கூறினாலும் நான் தான் பிரச்னை பண்றதுக்குனு பேசறேன்னு இந்த பெருசுங்க சொல்லி அனுப்பிச்சிடும். என்ன சொல்றது இவ வேற என திட்டிக்கொள்ள, தாத்தாவேஅப்டியே சந்திரா போடற காபீ மாதிரியே இருக்கு மாஅவளும் தேங்க்ஸ் தாத்தா என மதியை பார்க்க மதியோ திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்க

ஈஸ்வரிஐயோ இந்த பெருசுங்க என்ன இப்டி பெருமையா சொல்லி சாதாரணமாகிடுவாங்க போல இருக்கே.” என எண்ணிஆனாலும் திவி உனக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் எதுக்கு? அதுதான் ஆதி தெளிவா சொல்லிட்டாப்லேல. சொத்து கிடையாது, அந்த எண்ணத்தோட இருந்தா இந்த வீட்ல ஆதியோட பொண்டாட்டியா இருக்கமுடியாதுனு ஆதியை பத்தி இன்னும் உனக்கு முழுசா தெரில. அவன் சொன்னா சொன்னமாதிரி இருப்பான். யாரும் மாத்தமுடியாது. அப்புறம் நீ ஏன் சிரமப்பட்டு இந்த வேலை எல்லாம் செய்ற? “

திவிஎன்னை ஆதி கல்யாணம் பண்ணி தான் கூட்டிட்டு வந்தாரு. இந்த வீட்டு மருமகள்னு தான் சொன்னாரு. ஒருவேளை அவளுக்கு சொத்துதான முக்கியம்னா அத நான் மாத்திக்காட்டுவேன். இல்லாட்டி அவளுக்கு இந்த வீட்ல ஹவுஸ் அர்ரெஸ்ட் மாதிரி தான்னு சொன்னாரு. அவரு தெளிவா தான் இருக்காரு.

அதனால மருமகளா நினச்சா அதுக்கான பொறுப்பு, கடமை இருக்கு. சோ வேலை செய்றேன்.

உங்க எல்லாருக்கும் என்னை மருமகளா ஏத்துக்க மனசு வராட்டி கொஞ்ச நாள் உங்க மனசு மாற வரைக்கும் ஏதோ வேலைசெய்றாங்க மாதிரி நினைச்சுக்கோங்க.. வேலைக்காரியா இருந்து வேலை செஞ்சுக்கறேன்ஆபிஸ் வேலைக்கும் போகமாட்டேன். வீட்ல சும்மா சாப்பிட எனக்கு இஷ்டமில்லை.

என கூறிவிட்டு திரும்ப மீண்டும் அவளிடம் திரும்பிஆதியை பத்தி எனக்கு நல்லா தெரியும். தப்பான எந்த விஷயத்தையும் அவர் சப்போர்ட் பணமாட்டாரு. அதேமாரி எடுத்து எந்த விஷயத்துலையும் பாதில விட்டுட்டும் போகமாட்டாரு. முக்கியமா அடுத்தவங்க பேச்ச கேட்டு முடிவு பண்ண மாட்டாரு. எல்லாத்துக்கும் மேல இந்த ஜென்மத்துல நான் மட்டும் தான் அவருக்குனு அவரே சொல்லிருக்காரு. அதனால நீங்க கவலைப்படாதீங்க ஆண்ட்டி. இந்த குடும்பத்துல இருக்கற எல்லாரையும் நான் சந்தோசமா பாத்துக்கறேன். ” என சிரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் ஆதிக்கு காபீ எடுத்துக்கொண்டு மாடிக்கு செல்ல அவனும் அப்போதுதான் எழுந்திருந்தான். இருவரும் பார்த்துக்கொண்டார்களா, இல்ல முறைத்துக்கொண்டார்களா என புரியாத அளவுக்கு இருந்தது அவர்களின் செயல். மனதுக்குள் இருவரும் மற்றவரை திட்டி கொண்டே ஒரு 2 நிமிடம் அப்டியே இருக்க இவளும் காபியை டேபிளில் வைக்க வந்தாள். அவனும் ரெபிரஸ் ஆகா போய்விட்டான். இவள் சன்னல் திரைசீலைகளை விலக்கிக்கொண்டு, போர்வையை மடித்துக்கொண்டு வேலைகளை செய்ய திரும்பி வந்த ஆதி காபியை எடுத்துக்கொண்டு அவள் நம்மகிட்ட பேசமாட்டாளா? என்ன ஐடியால இருக்கா? எல்லாம் திமிரு என திட்டிக்கொண்டே

ஆபீஸ்ல சொல்லிட்டியா?

மறந்துட்டேன்இன்னைக்கு சொல்லிடறேன்

நேத்து நைட் சாப்பிட்டீயா?”

ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன்மறந்துட்டு தூங்கிட்டேன். “

இதெல்லம் மறந்திடு. ஆனா தூக்கத்துல கூட லவ் யூ டூ தயா ன்னு சொல்ற அளவுக்கு நினைச்சிட்டே இரு. மத்ததெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும்.”

அவள் சன்னல் பக்கம் திரும்பி நின்று திரைசீலையை சரி செய்துகொண்டே பதில் கூறிக்கொண்டு இருந்தாள். இவன் கடைசியாக கூறியதை கேட்டதும் அவள் சட்டென்று அதிர்ச்சியாகி நாக்கை கடித்துக்கொண்டுஅப்போ நேத்து நைட் கனவில்லையா? இவர்கிட்டயா அப்டி சொன்னேன். ச்சா…. திவி நீ தயாவ நினைச்சிட்டே கண்ட்ரோல் இல்லாம இருக்க. சரி இப்போ இவன சமாளிக்கணுமே.” என தன்னை திடப்படுத்திக்கொண்டுஆமா, லவர் பத்தி தானே கனவுல நினைப்பாங்க. அப்போ தயாவ பத்தி நான் நினைச்சது சரி தானே. இதுக்கு ஏன் நீங்க தாம் தூம்னு குதிக்கிறிங்க? “

இங்க பாரு சும்மா லவர் லவர் னு சொல்லி இரிடேட் பண்ணாத, காபி சூட வெச்சு இருக்க, அப்டியே ஊத்திடுவேன்.”

அப்டி எனக்கு ஏதாவது நடந்தா என் தயா உங்கள சும்மா விடமாட்டாரு. உங்கள நிம்மதியா இருக்க விடமாட்டாரு. “

போதும் நிறுத்திரியா? நீ யாரையும் லவ் பண்ணலேனு எனக்கு தெரியும்

நீங்களா அப்டி முடிவு பண்ணிட்டா நான் என்ன பண்ணுவேன். நான் சொன்னேனா, நான் யாரையும் லவ் பண்ணலேனு.. “

நீதான் சொன்ன, நாம எல்லாரும் ஒண்ணா உக்காந்து அன்னைக்கு சாப்பிடும்போது, உனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்னு ஒரு லிஸ்ட் ஆப் எஸ்பக்டேஷன் சொன்னேன்ல. அப்போ அம்மு உன்கிட்ட யாரை லவ் பணறேன்னு கேட்டா, நீ இல்லனு உன் வாயால தான் சொன்ன? ” என அவன் அழுத்தமாக கூற இவள் இமைக்க மறந்துஇவளோ ஞாபகம் இருக்கா, அம்மாடி விட்டா அன்னைக்கு மூச்சு விட்டது நடந்தது கூட சொல்லுவாரு போலவே.’ என மனதுக்குள்\ நினைத்துக்கொண்டு இருக்க,

ஆதி அவள் முன் வந்து சொடக்கு போட்டுஎன்ன மேடம் ஞாபகம் வந்ததா? இனிமேல் அந்த விசயத்துல பொய் சொல்லாத. சரியா? “

திவியும் சளைக்காமல்உண்மை தான் ஆதி, அப்போ எனக்கு அவரோட லவ் புரியல. அதனால இல்லன்னு சொல்லிட்டேன். …, ஆனா அதுக்கப்றம் தான் புரிஞ்சது. ..புரியாமலே ரொம்ப வருசமா லவ் பண்ணிருப்பேன் போல, உள்ளுக்குளேயே இருந்திருக்கு. … ஆனா அவரை மொத்தமா ஒன் வீக் தான் புரிஞ்சு லவ் பண்ணேன்.” என அவள் கண்ணில் கனவுடன் சொல்லிக்கொண்டு இருக்க இங்கு ஆதியின் நிலைமை தான் மோசமாக இருந்தது.

திவி தலையை சிலுப்பிக்கொண்டுஓகே ஆதி, சீக்கிரம் ரெடியாகி வாங்க, எனக்கு கீழ சமையல் வேலை இருக்குஎன அவள் சொல்லிவிட்டு கூலாக சென்றுவிட்டாள்.

இவன் திட்டிக்கொண்டே ரெடியாகி கீழே வந்தான். திவி சாமி கும்பிட்டு விட்டு , ரெடியாகி வந்த தாத்தா பாட்டி இருவருக்கும் பிரசாதம் தந்தாள். அவர்களும் எடுத்துக்கொள்ள ஆதி வருவதை கண்டவள் அவனுக்கும் தந்துவிட்டு கூட வாங்க என கை பிடித்து அழைத்து சென்றாள். எங்க என கேட்டதுக்கும் பதில் இல்லை. நேராக பாட்டி தாத்தாவிடம் வந்தவள் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க என கூற இவனும் உடன் சேர்ந்து அவர்கள் காலில் விழுந்து பணிக்க பெரியோர்கள் மனதில் ஆயிரம் குழப்பம் இருப்பினும் மனநிறைவுடன் அவர்களைஇரண்டு பேரும் நீண்ட ஆயுளோட ஒருத்தர ஒருத்தர் விட்டுகுடுக்காம சந்தோசமா இருக்கணும்.” என சிரித்த முகத்துடன் ஆசிர்வதிக்க பாட்டி ஆதிக்கு விபூதியை அவரே வைத்துவிட திவிஎனக்கு குங்குமம் வெச்சுவிடமாட்டீங்களா? ” என பாவமாக கேட்க அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

வா என பூஜை அறைக்கு அழைத்து சென்று அவளுக்கு நெற்றியிலும், வகிட்டிலும், பின் தாலியிலும் வைத்துவிட்டார். தேங்க்ஸ் பாட்டி….நாங்க அத்தை மாமாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வரோம் என அவள் கூற ….எல்லாரையும் கரெக்ட் பண்ணிடறா என ஆதி தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.

ஹாலில் தான் இத்தனையும் நடந்ததால் அனைவரும் இதை கவனித்துக்கொண்டே தான் இருந்தனர். ஏனோ மதிக்கும், சேகருக்கும் அவள் செயல்கள் மனநிறைவுடன் இருக்க, இருந்தும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.அவர்கள் தங்களிடம் வரப்போகிறார்கள் என அறிந்ததும் சேகர்நான் போயிட்டு வரேன்மாஎன மதியிடம் கூறிவிட்டு உடனே கிளம்பிவிட்டார்.

வாசல் வரை சென்றவரை கிளம்பும்போது கூப்பிடவேண்டாம் என திவியும் விட்டுவிட்டு திரும்பி

இரண்டு பேர்கிட்டேயும் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கலாம்னு நினச்சேன். அத்தை தனியா ஆசிர்வாதம் பண்ணமாட்டாங்க.” என முகம் சுருங்க கூறியவளிடம் வந்த பாட்டிவிடு, சாய்ங்காலம் வந்ததும் வாங்கிக்கோ.” என இவளும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டுநான் போயி டிபன் எடுத்துவெக்கிறேன், எல்லாரும் சாப்பிடவாங்கஎன கூறஆதிக்கு எடுத்து வை மா, எங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும். சாப்பிடற முன்னாடி மாத்திரை போடணும் அதனால அப்புறம் சாப்பிடுறோம்.” என கூறி அவர்கள் அறைக்கு செல்ல ஹாலில் ஆதி மட்டும் இருக்க போனை கையில் வைத்துக்கொண்டு நடந்துகொண்டு இருந்தான். அங்கே வந்த சோபனாஎன்ன மா, இன்னைக்கு புது வேலைக்காரி சமையல் போல, நல்லா இருக்குமா? “

காலைல காபி குடுச்சேனே, நல்ல டேஸ்ட். சும்மா சொல்லக்கூடாது..”

ஆதிஎன்ன புது வேலைக்காரியா? யாரா சொல்ராங்க? நம்ம வீட்டு வேலைய நாம தான் செய்யணும். எல்லாருக்கும் என்னென்ன பிடிக்கும்னு நாம பாத்து பாத்து செய்யும் போதுதான் பிள்ளைங்களுக்கு பிடிச்சதை தெருஞ்சுக்கவும் முடியும், கூடவே டைம் ஸ்பென்ட் பண்றமாறியும் இருக்கும். முக்கியமா நமக்காக கேர் எடுத்து பன்னிருக்காங்களேன்னு நல்லா சாப்பிடவும் தோணும். ரொம்ப முடியாத பட்சத்துல வேலைக்கு ஆள் வெச்சுக்கலாம். இப்போதைக்கு தோட்டத்துக்கு, வீட்டை சுத்தம் பண்ண இரண்டு வாரத்துக்கு ஒரு தடவ வேணும்னா ஆள் போட்டுக்கலாம். என அம்மா கூறுவார்கள். அத்தனைபேருக்கும் அம்மா தனியாவே செய்வாங்க, அம்மு ஹெல்ப் பண்ணுவா.

நந்துவுக்கு காய்ச்சல் என கூறியதால் அக்காவை தனியாக அனுப்ப வேண்டாமென அம்முவையும், அனுவையும் நேத்து சாயந்தரம் தான் உடன் அனுப்பிச்சு வெச்சுஇருக்காங்க.

அதனால ஆளுங்களும் கம்மிதா, இப்போ திவியும் கூட இருந்து ஹெல்ப் பண்ணுவாவேற எதுக்கு வேலைக்காரி, அம்மாவுக்கு உடம்பு சரில்லையா? அப்டி இருந்தா எல்லாரும் இவ்ளோ சாதாரணமா இருக்கமாட்டாங்களே? திவி சொல்லிருப்பாளே.” என நினைத்தவன்

யாரை சொல்றிங்க? யார் வேலைக்கு வந்துஇருக்காங்க? “

சோபனாதிவியை தான் சொல்றோம்

ஆதிக்கு கோபம் ஏறஎன்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறிங்களா? அவ என் வைப்….இந்த வீட்டு மருமக. வேலைக்காரி இல்ல. உங்க இஷ்டத்துக்கு ஒளறிட்டு இருந்தா எல்லா நேரத்துலையும் நான் பொறுமையா சொல்லிட்டு இருக்கமாட்டேன்

சோபனாநீங்க தான் அவளை உங்க வைப் னு சொல்லிட்டு இருக்கீங்க? அவ அந்தமாதிரி நினைக்கலியே? உங்களுக்கே தெரியும் அவளுக்கு ஸெல்ப் ரெஸ்பெக்ட் அதிகம்னு. காலைல அம்மா, அத்த, மாமா, தாத்தா, பாட்டி எல்லாரும் இருக்கும்போது அவளே சொல்லிருக்காவீட்டு மருமகளா இருக்க எனக்கு பிடிக்கல. ஆனா இங்க தான் இருக்கணும்னு ஆய்டுச்சு. சோ ஓசில சாப்பிடவும் பிடிக்கல, அதனால இருக்கற வேலைய செஞ்சுக்கறேன்னு. கொஞ்ச நாளைக்கு வேலைக்காரின்னு நினைச்சுக்கோங்கன்னு சொல்லிருக்கா…” என்றதும் அவன் இவர்களை நம்பாமல் பார்க்க ஈஸ்வரிநம்ம சொன்னா எல்லாம் ஆதிக்கு நம்பிக்கை வராது. இருங்கஎன டேபிளில் அனைத்தும் எடுத்துவைத்துக்கொண்டு உள்ளேயும் வெளியேயும் நடந்து கொண்டிருந்த திவியை அழைத்து

ஈஸ்வரிஏன் திவி, நீ இன்னுமா நம்பிக்கையோட இருக்க, உன்ன இந்த வீட்ல யாரும் மருமகளா ஏத்துக்களையே? ” என மெதுவாக கேட்க

திவிக்கு இந்த சொறிக்கு எத்தனை தடவ ஒரே விஷயத்தை சொல்றது என மனதுக்குள் திட்டிக்கொண்டுபாருங்க ஆண்ட்டி, நான் காலைலேயே எல்லாருக்கும் தெளிவா சொல்லிட்டேன். மருமகளா இல்லை, கொஞ்ச நாள் இந்த வீட்ல வேலைக்காரியா நினைச்சுக்கோங்க. சும்மா சாப்பிட எனக்கு பிடிக்காது. அதனால வேலை செஞ்சுக்கறேன்னு. திரும்ப திரும்ப அத பத்தி பேசாதீங்க..” என அவள் அவசரமாக கூறிவிட்டு செல்ல இதை கேட்ட ஆதிக்கு கோபத்துடன் மனது வலிக்கவும் செய்தது.

திவிக்கு இன்றைக்கு முதல் முறையாக நான் சமைச்சது ஆதிக்காக. எல்லாமே பிடிச்ச ஐட்டம்ஸ் கூட என கொஞ்சம் எதிர்பார்ப்போடு பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தாள்.

சோபனாம்ம். ..ஆனா அம்மா அந்த கொஞ்ச நாளைக்கு என்ன அர்த்தம் மனசு மாறிடுவாங்கன்னா? இல்ல அவ காதலனோட போய்டுவான்னா?” என ஆதியின் காது பட அவள் கூற

ஆதி முறைக்கஎன்ன ஆதி, முறைக்கிறீங்க? நான் என்ன இல்லாததா சொன்னேன். அதுதான் அவ தயானு ஒருத்தன லவ் பன்றேன்னு சொல்லிட்டு சுத்தறாளே? உங்களுக்கு தெரியாதா? ” என கேட்க

ஆதியின் சினம் பெருக எதிர்வந்த தாத்தா பாட்டியிடம் மட்டும் கிளம்புறேன்னு சொல்லிட்டு கிளம்பிவிட்டான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 30ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 30

உனக்கென நான் 30 ராஜேஷ் என்ற வார்த்தையை கேட்டதும் எரிச்சலடைந்தாள் சங்கீதா. “ஏன்டி என்னடி ஆச்சு” இது அன்பு. “என்ன சொல்றது நீ அவன உண்மையாதான காதலிச்ச! ஆனா அவன் அப்புடி இல்லடி அவனுக்கும் அவன் அத்தை பொண்ணுக்கும் நிச்சயம் பன்னிட்டாங்க

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13

கப்பலின் நங்கூரம் நீரை துளைத்து முன்னேறியது. கதவை திறந்து உள்ளே வந்த கேப்டன் “சார் செரிபியன் தீவுக்கு வந்துவிட்டோம்“ இந்த தருணத்திற்காகவை இத்தனை யுகங்கள் காத்திருந்த செங்கோரன் வம்சம் தன் தெய்வமான அகோரனை மீட்கும் ஆசையில் சிரித்தான் பீட்டர். புதிதாக கப்பல்