Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40

40 – மனதை மாற்றிவிட்டாய்

மகா இதயத்தை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட அவளிடம் வந்த மதிமகா சொன்னா கேளுமா. உனக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. ” என அவரை அடக்க

இல்ல அண்ணி, என்னால முடியல. எப்படி இருந்த உங்க குடும்பத்தை இப்டி பண்ணிட்டாளே? அவ மேல உயிரையே வெச்சு இருந்தானே உங்க பையன்இப்டி ஒருத்தியவா நான் என் வயித்துல சுமந்தேன். நீங்க அவ்ளோ கேட்டும் எதுவும் காரணம் சொல்லாம போறாஎன் திவியா இப்டினு என்னால நம்பக்கூட முடில. கல் நெஞ்சக்காரி. இவ்வளோ அடி, திட்டு கொஞ்சம் கூட கலங்காம, பதில் சொல்லாம நிக்கறாளே. என்ன மன்னிச்சுடுங்க அண்ணிஎன அவள் கதற

மதிநீ ஏன் மகா மன்னிப்பு கேக்குற. தப்பு பண்ணது அவ. அவளே அப்டி போகும்போது நாம ஏன் அழுகணும். ” என கூறும்போதே அவளுக்கும் அழுகை வந்தது.

அத்தனை நேரம் பரிதவிப்பு, கோபம், கெஞ்சல், இயலாமை என அனைத்தையும் முகத்தில் காட்டியவள், அவள் அம்மா பொண்ணே இல்லை செத்துட்டா என கூறியும் நம்பிக்கை இழக்காமல் கேட்டுக்கொண்டு புரியவைக்க போராடிக்கொண்டு இருந்தவள் தான் ஒற்றை வார்த்தை கூறியதை கேட்டதும் கண் கலங்கிவிட்டாளே. அந்த கண் அவளோட காதல் எல்லாம் பொய்யா? என் தியா எனக்கு இல்லையா? என எண்ணியவனால் கோபத்தை அடக்கமுடியாமல் அங்கே இருந்த பெண்டிரைவ் எடுத்தவன் அதோடு சேத்து டீப்பாயியை ஓங்கி குத்திவிட்டு அவனது அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டான். நொறுங்கிய டீப்பாயும், அவன் அடைத்த கதவின் படார் சத்தமும் கூறியது அவனது கோபத்தின் அளவை. ஆனால் அவனிடம் யாரும் நெருங்கும் துணிவற்று இருந்தனர்.

தர்ஷினி வந்து சொன்னாள். திவி வீட்டுல இல்ல. போய்ட்டா. எனவும் அனைவர்க்கும் போய்ட்டாளா என்ற கோபமும், எங்க போனாலோ என்ன பன்றாளோ என்ற பரிதவிப்பும் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் யாரும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

ஒவ்வொருவரும் மனதில் நடந்த நிகழ்வுகளை எண்ணி திவியா இப்படி, ஏன் இப்படி பண்ணா? ஒருவேளை வேற ஏதாவது ப்ரோப்லேமா?

என்னமோ ஆதிகிட்ட சொல்ல வந்தாளே, இல்ல தப்பிக்க அப்படி ஒரு விஷயத்தை சொல்றேன்னு சொல்லிருப்பாளோ? அவ பொய் சொன்னாளா? உண்மையை சொல்றாளா? என தங்களுக்குள் சிந்தித்து ஆதியை நினைத்து கவலையுடன் இருக்க, ஆதி வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவன் யாரிடமும் பேசாமல் எங்கோ வண்டியை கிளப்பி கொண்டு சென்றுவிட்டான்.

மாலை நேரம் தாண்டி அவன் உள்ளே வந்து அனைவரும் சோகமா இருப்பதை கண்டவன் அவர்களிடம் வந்துமா, தாத்தா, பாட்டி யாருமே இன்னும் சாப்பாடலேல? அக்கா நீ கூடவா, உள்ள குழந்தை இருக்குனு நினைப்பு வேண்டாம். எல்லாரும் வாங்க சாப்பிடலாம்.” என இப்பொழுதும் அவன் குடுப்பத்திற்காக பார்க்கிறான் என்று எதுவும் பேசாமல் அவனுடன் உண்ண அமர்ந்தனர்.

இவனே எடுத்து வைக்க, அனைவரும் உண்ண பாட்டிராஜா, நீயும் சாப்பிடு கண்ணா.” என, அனைவரும் வற்புறுத்த அவனும் தட்டில் போட்டுகொண்டு உண்ண ஆரம்பிக்கும் போதுவெளியே சென்று விட்டு வந்த

ஈஸ்வரியும், சோபனாவும்எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சுட்டீங்களா? எப்பிடியும் இன்னைக்கு நடந்ததை நினச்சு எல்லாரும் சோகமாக தான் உக்காந்து இருப்பீங்க. அதனால வெளில சாப்பிட்டு வந்திடலாம்னு தான் அப்டியே வெளில ஷாப்பிங் போனோம். “

அனு துடுக்காகஅதான், சாப்டிங்கள? போங்க, போயி ரெஸ்ட் எடுங்க..”

அதில்ல அனு, வீட்லையே சாப்பிடறீங்களே?தெரிஞ்சிருந்தா அப்போவே வந்திருப்போம். பரவாயில்லையே உடனே மறந்துட்டீங்க? அப்போவே சொன்னேன்ல சோபி, ஆதி அதெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டானு, திவிய மறந்துட்டு அடுத்த வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டான். படுச்ச புள்ள. அதுக்கும் உலக நடப்பு தெரியும்ல. “

அபிஅத்தை, என்ன இப்போ, சாப்பிடாம இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா? இல்ல சாப்பிட்டா பிரச்னை எல்லாம் மறந்துட்டாங்கனு முடிவு பனிடுவங்களா? ” என கத்த

அம்மாடி, எதுக்கு இப்டி கத்துற, ஒருவார்த்தை சொல்லக்கூடாதா? அவளே சொல்லாம கொள்ளாம ஒரு வார்த்தை திட்டுனதுக்கு வீட்டை விட்டு போய்ட்டா. அப்படிப்பட்டவளுக்காக தானே என்கிட்ட இன்னும் சண்டை போடறீங்க? நமக்கு என்ன வந்தது அவளை பத்தி நினச்சு கவலைப்பட ? ” என குத்தலாக கேட்டுவிட்டு அவர்கள் அறைக்கு சென்றுவிட்டனர்.

ஆதி, அப்படியே தட்டை வைத்துவிட்டு எழுந்து அறைக்கு சென்றுவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் கவலையாக பார்க்க அம்முஏன் பாட்டி, இந்த அத்தை, சோபி எல்லாரும் இப்டி இருக்காங்க? நீங்க கேக்கமாட்டீங்களா? “

பாட்டிஅவ குணம் தெரிஞ்சதுதானே அம்மு, நாம பேச பேச இன்னும் எட்சா பேசி குத்தி காட்டி சங்கடப்படுத்துவா? அதுவும் ஆதி இப்போ இருக்கற மனநிலைல வேண்டாம்னு தான் அமைதியா இருக்கோம்.”

ஆனா அண்ணா பாவம்.”

ஆமா அவன் நமக்காக தான் சாப்பிடவே வந்தான்.”

கடைசில அதையு கெடுத்துவிட்டுட்டாங்க..ஒரு வாய்கூட சாப்பிடல…”

அறைக்கு வந்தவனோஅவளை மறக்கறதா? அது எப்படி முடியும். என் தியா அங்க தனியா இருப்பாளே?” என கவலை கொள்ளஅவ அப்படி பண்ணது சரியா? போன்னா போய்டுவாளா? ” என மனம் கேட்க

வேற என்ன பண்ணுவா?”

ஏன் எல்லாரும் தான் அவளை அவ்ளோ திட்டுனாங்க. அசராமதானே நின்னா. என்கிட்ட மட்டும் அவளுக்கு என்ன. சண்டை போட்ருக்கலாம்ல? இருந்தாலும் நான் சொன்ன ஒரு வார்த்தையை கூட அவ மீறலை. என்கிட்ட மட்டும் அவ பேசும்போது வந்த அந்த தயக்கம், கவலை எதையோ என்கிட்ட எதிர்பார்த்த அவளோட பார்வை எதுவும் பொய் இல்லையே. நான் சொன்னேன்னு தானே போனா? “

இப்போ நீ அவ போனது சரிங்க்ரியா? இல்ல சண்டைபோடணும்க்ரியா? “

என் ஒரு பார்வைக்குக்கூட அவ அவ்ளோ மதிப்பு குடுக்கறா. அவளுக்கு என்ன பிடிச்சுதானே இருக்கும். “

அப்படி இருந்தா அவ ஏன் உன்கிட்ட இத்தனை நாள் பேசல? நீ லவ் பண்றது அவளுக்கு தெரிஞ்சும் ஒரு வார்த்தைகூட பேசல. ஒரு போன் கூட இல்ல. ஏன்? “

ஒருவேளை அவ என்ன லவ் பண்ணலையா? நானா தான் முடிவு பண்ணிட்டேனா? அவ பேசுறது, விளையாடறது, அக்கறை எல்லாமே எல்லார்கிட்டயும் தானே காட்டுறா? எனக்கு ஸ்பெஷல்னு ஏன் தோணுச்சு. உண்மையாவே எனக்கு தான் தோணுச்சா? அவ அப்போ லவ் பண்ணலையா?” என தனக்குள் வாதாடி போராடி முடித்தவன் இறுதியாக வந்த கேள்வியில் முழு நம்பிக்கை அற்று இருந்தும் பதில் அளிக்க முடியாமல் மௌனமாய் கண்களை மூடினான்.

அடுத்து வந்த மூன்று நாட்களில் அனைவரும் தத்தமது வேலைகளை செய்தனர். யாரும் யாரிடமும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. இருந்தும் பிறருக்காக என அனைவரும் தங்களை நார்மலாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தனர். முக்கியமாக ஆதி. ஆனால் அவனால் அப்படி அவளை மறந்தது போல நடிக்க சுத்தமாக முடியவில்லை. அதனால் வேலை அது இது என வெளியேவே சுற்றினான். ஆனால் முதல் நாள் அவன் மனதில் இருந்த ஆர்ப்பரிப்பு இல்லை. நிதானமாக செய்தான். ஆனால் முழு மனதோடு செய்ய முடியவில்லை. ஏதோ அவனது கோபமற்ற இந்த பொறுமையே இப்போதைக்கு போதும் என அனைவரும் விட்டுவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40

40 மினியும் விக்கியும் மாதவனிடம் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரிடமும் பேசிவிட்டு, கேசவனிடம் விடை பெற்றுக் கொண்டாள் சுஜி. “எனக்கு கவலையா இருக்கு பெரியத்தான். அப்பாவுக்கு அந்த துரபாண்டியால எதுவும் ஆபத்து வராம பாத்துக்கோங்க.” “கவலைப் படாதே சுஜாதா. துரப்பாண்டிக்கும் உனக்கும் நடக்குறதா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 24

24 – மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரிக்கு வெற்றி புன்னகை ‘ஏன் இப்படி பேசுகிறீர்கள் என சண்டையிட்டாலும் சரி, அவர்களே மனதிற்குள் வைத்து புகைந்துகொண்டாலும் சரி, கல்யாணம் நிற்க வேண்டும் அதுதான் எண்ணம்’….. அனைவரும் அதிர்ச்சியாக திவியை இவள் என்ன சொல்றா என்ற