Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 12

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 12

12 – மனதை மாற்றிவிட்டாய்

சிறிது நேரத்தில் ஆபீஸ் கிளம்பி ரெடியாக சாப்பிட வந்தவன் அம்மா அப்பாவிடம், இந்த சம்பந்தத்தை பற்றி கூறினான். அவர்களுக்கு முதலில் ஆச்சரியமா அதிர்ச்சியா என பிரிக்கமுடியாத கலவையான உணர்வு. பின்பு முதலில் தெளிந்தவர் சந்திரசேகர் தான். அர்ஜுன் பத்தி குறை எல்லாம் எதுமில்லை ஆதி, குணமும் நல்ல குணம் தான். அவங்க குடும்பம் பிரச்னை இல்லை என கூறும்போதே சந்திரமதி அவங்க அம்மா கொஞ்சம் படபடன்னு பேசுவாங்களே ராஜா, ஒத்துவருமா? என கேட்க அவனும் திவியும் பேசியபோது கூறியதை கூறவும், அவர்கள் ஓரளவுக்கு தெளிவடைந்தனர்.

அர்ஜுனும் “அப்படி அம்முவ விட்டுகுடுக்கற ஆள் இல்லமா, நம்ம அம்மு பிரச்சனைன்னா கூட யார்கிட்டேயும் சொல்லமாட்டா. அவனுக்கும் சின்ன வயசுல இருந்தே அம்முவ பத்தி தெரியும். அதனால அவனும் அவளை புருஞ்சுப்பான். அவளே சொல்லலேன்னாலும் எப்படியும் அர்ஜுன் என்கிட்ட சொல்லிடுவான். வேற குடும்பத்துக்கு அனுப்பற ஒரு பீல் நமக்கும் இருக்காதில்லபா? என அவன் கேட்கவும் பெற்றோர்கள் அனைத்தையும் அவன் யோசித்திருக்கிறான் என்று பெருமையுடன் , அவன் கூறுவதும் சரி என ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு மகிழ்வுடன் பச்சை கொடி காட்டினர். அவனும் மகிழ்வுடன் “அப்புறம் இன்னொரு விஷயம், இந்த கல்யாணத்துல அம்முவுக்கும், அர்ஜூனுக்கும் கூட சம்மதம் தான்.” என அவன் கூறியதில் ஓரளவு அவர்களும் யூகித்து முழுமனதுடன் ஒப்புக்கொண்டனர்.

அந்த நேரத்தில் அர்ஜுனும் வர “வாடா மாப்பிள்ளை, சாரி வாங்க மாப்பிள்ளை..” என ஆதி கூறியதை கேட்டு அர்ஜுன் ஒரு நிமிடம் விழித்தாலும், அம்மு அங்கு வரவும் ஆதி இருவரையும் பார்த்துவிட்டு “சீக்கிரமா நல்ல நாள் பாத்து உங்க அம்மா அப்பாவோட வந்து பொண்ணு கேளுடா. அம்முவ சீக்கிரம் கல்யாணம் பண்ணி உன்கூட அனுப்பிச்ச வெக்கிறோம்.” என்றதும் அவனை தாவி சென்று அணைத்து கொண்டு “தேங்க்ஸ் மச்சான். ” என்றான். அம்முவும் ஓடிவந்து அணைத்துக்கொண்டு “தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

இதை பார்த்ததுமே அனைவருமே மகிழ்ந்தனர். ஆதி”போதும், போதும், கொஞ்சம் மிச்சம் வைங்க..மெயின் ஆள் நான் இல்ல..நான் ஜஸ்ட் அம்மா, அப்பாகிட்ட பேசுனது மட்டும்தான், ஸ்கிரிப்ட் பிளான் எல்லாம் வேற ஆள்” எனவும், பெற்றோர்கள் குழம்பிபோய்”யாரது?” என்க, ஆதி “இங்க ஒரு வானரம் சுத்திட்டு இருக்குமே” என்றவனை பார்த்து, “வாணரமா? “என அனைவரும் வினவ, வெளியில் திவி வருவதை அவள் கொலுசொலியில் இருந்து அறிந்த ஆதி “அதுவே வந்திடுச்சு. .”என்று திரும்ப அனைவரும் திவியை கண்டு ஒரு நொடி சிரித்தனர். அவள் அதை கண்டுகொள்ளாமல் நேராக வந்தவள் ஆதியிடம் ஓகேவா என செய்கை செய்ய அவனும் சிரித்துவிட்டு “உனக்கு தான் தேங்க்ஸ் சொல்ல வெயிட் பண்ராங்க.” என்றதும் அவளுக்கு அனைவரும் ஒப்புக்கொண்டார்கள் என்பதில் ஏக சந்தோஷம். அர்ஜுன், அம்மு என அனைவரையும் அணைத்து வாழ்த்து கூறினாள்.

சந்திரா திவியின் காதை பிடித்துக்கொண்டு “ஏன் டி இத்தனை நாள் என்கிட்டத்தானே எல்லாமே சொல்லுவ…இப்போ என்ன டி என்கிட்ட சொல்லாம என் பையன்கிட்ட சொல்லிருக்க” என பொய் கோபம் கொள்ள “ஐயோ அத்தை, அப்படியில்ல.. நான் சொன்னா கேட்டு யோசிக்கறேன்னு சொல்லுவீங்க… ஆனா ஆதி சொன்னதால தானே கேட்டு ஓகேன்னு முடிவே பன்னிருக்கிங்க. அதுவுமில்லாம இதெலாம் பெரியவங்க பேசவேண்டிய விஷயம் தானே….அதான் எனக்கு உங்ககிட்ட இதப்பத்தி பேச கூச்சமா இருந்தது. எப்படி எடுத்துப்பீங்களோன்னு..” திவி கூற

“ஓய். .. அப்படினா நான் மட்டும் என்ன இதுல எக்ஸ்பிரின்ஸ் ஆனவனா? ” என்று ஆதி கேட்க “அட, அப்படியில்ல, பட் என்னை, அம்முவ விட பெரியவங்க, அதுவுமில்லாம அவளோட அண்ணாவா இன்னும் நெறைய அக்கறையோடு யோசிப்பீங்கள்ல அதான்… உங்க மூலமா மூவ் பண்ணேன்” என்று கண்ணடித்தாள். ஆதியும் சிரித்துவிட்டு அர்ஜுன், அம்முவிடம் திரும்பியவன் “அப்போ 2 பேருக்குமே ஐடியா இருந்திருக்கு. .. என்கிட்ட இத பத்தி சொல்லல… முக்கியமா டேய் நண்பா, நல்லவனே கூடவே தானே இருந்த. .ஒருவார்த்தை கூட சொல்லலையேடா?” என குறைபடவும் அர்ஜுன் அவனை சமாதான படுத்தும் வகையில் “டேய் அப்படி இல்லடா, எனக்கு உங்க எல்லாரையும் சின்ன வயசுல இருந்தே தெரியும், இவ்வளோ நாள் நல்லா பழகிட்டு இப்போ உங்க வீட்டு பொண்ண புடிச்சிருக்கு, லவ் பன்றேன்னு சொல்ல சங்கடமா இருந்ததுடா… என்னதான் என்கூட நீங்க எல்லாரும் நல்லா பழகுனாலும் எங்க ஸ்டேட்டஸ் பாத்து அக்செப்ட் பண்ணலேன்னா, இல்ல பணத்துக்காக பழகுனாங்கன்னு நினைச்சிட்டாலோ, நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்… யாருக்காகவும் உன்னோட பிரண்ட்ஷிப்ப இழக்கவோ, இந்தமாதிரி பாசமான குடும்பத்துல இருக்கற அன்பை இழக்கவோ எனக்கு விருப்பமில்லடா, அது உன் தங்கச்சியும் விரும்பமாட்டா… நாங்க 2 பேரும் அதனால தான் அத

பத்தி பேசக்கூட இல்ல…” என்றவனை பார்த்து முறைத்தவன் “பைத்தியம் டா நீங்க, நாங்க ஒத்துக்குவோமா, இல்லையான்னு எங்ககிட்ட பேசுனாதானே தெரியும். ஒருவேளை, அம்முவுக்கு வேற யாரோடவாது மேரேஜ் பிக்ஸ் பண்ணிருந்தா? இங்க பாரு, மனசுக்கு புடிச்சவங்க எல்லாருக்கும் முன்னாடியே கெடைக்கறதில்ல. உனக்கு அவளை நல்லா பாத்துப்பேன்னு நம்பிக்கை இருந்திருந்தா எப்படியாவது நீ அவளை கல்யாணம் பண்ணிருக்கணும் டா.. மத்தவங்களுக்காக விட்டுகுடுக்கற விஷயமா இது?” எனவும்

அர்ஜுன் ” அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா, நீ உண்மையா லவ் பண்ணி அவளுக்கு புடிக்காத ஒரு விஷயம் பண்ணிதான் உனக்கு அவ கிடைப்பான்னா அத பண்ணவே உனக்கு மனசு வராது டா” என்றதும் ஆதி வேகமாக “அவளை விட்டுகுடுக்கவும் மனசு வராதுடா… அப்படினா அது உண்மையான காதல் இல்லைங்கிரியா?” என வினவ “அப்படி இல்லடா, அந்தமாதிரி போர்ஸ் பண்ணி, யாருக்கும் இஷ்டமில்லாம கல்யாணம் பண்ணிட்டு வாழறபோது அதுல இருந்தே பிரச்னையும், விலகலும் ஆரம்பிக்கும்… ஆனா அந்த மாதிரி பண்ணியும் லவ்வ புரியவெக்கிற, புரிஞ்சுக்கற யாராவது இருப்பாங்களான்னு தெரில” என அர்ஜுன் முடிக்க

“என்னவோ அண்ணா, இந்த விஷயத்துல நான் ஆதிக்கு தான் சப்போர்ட். ஒருவேளை வேற யாராவது கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பொலம்பறதுக்கு, எப்படியாவது கல்யாணம் பண்ணிட்டு லவ்வ புரியவெக்கலாம். தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ பரவால்ல தானே…” என திவி கூற அவள் தலையில் கொட்டி “எக்ஸாம்பிள் சொல்றா பாரு…பேய், பிசாசுன்னு ” என மதி கூற அவள் தலையை தடவிக்கொண்டாள். இருந்தும் “எப்படி உனக்கு அவங்க விஷயம் தெரிஞ்சது” என சேகர் வினவ திவி அவள் கவனித்த இவர்களின் நடவடிக்கை, அம்முவின் சோகம், அர்ஜுனின் கவலை, அம்முவின் எதிர்பார்ப்பு, அர்ஜுனை பற்றி பேசும்போது எழும் மகிழ்ச்சி, அர்ஜுனின் தேடல், பார்வை என அனைத்தையும் கூறியவள், “ஒருவேளை லவ் இருக்குமோனு தான் மாமா அர்ஜுன் அண்ணாகிட்ட பேசுனேன். அவரு ஸ்டேட்டஸ், பிரண்ட்ஷிப், தியாகம்னு என்னென்னமோ பேசி இதுவரைக்கும் நடந்த அவங்களோட லவ் னு பேர்ல இவங்க ஓட்டுன ஊமை படத்தை பத்தி கேட்டதும் முடிவு பண்ணிட்டேன் மாமா. இவங்கள நம்புனா கல்யாணம் நடக்காதுன்னு. அதான் உடனே ஆதிகிட்ட பேசிட்டேன். அவரும் ஒத்துக்கிட்டாரு சோ ஈஸியா வேலை முடிஞ்சது…”

ஆதியோ அவளை பார்த்து சிரித்துவிட்டு “திவி, உன்னோட இந்த மண்டை சைஸ் மட்டும் தான் பெருசுனு நினச்சேன்… எப்படி? ” என அவன் கேட்க திவியோ அடுத்த நொடி “ஐயையோ ஆதி, நான் உங்கள மாதிரி இல்ல… ஆண்டவன் எனக்கு மண்டைக்குள்ள மூளையும் குடுத்திருக்கான். ” என்று அவள் கூறியதை அனைவரும் புரிந்துகொள்ளும் முன் திவியின் காது ஆதியின் கையில் இருந்தது.

“உனக்கு எவ்வளோ சேட்டை இருந்தா, எனக்கு மூளை இல்லேனு சொல்லுவா?” என வினவ

“ஐயோ, வலிக்கிது…மாமா ப்ளீஸ் ஹெல்ப் மீ” எனவும் “டேய் விட்ரு டா ஆதி, வலிக்குதாம்…” என்ற தந்தையிடம் “அப்பா அவள் பொய் சொல்றா, எல்லாம் நடிப்பு ” எனவும், சந்திரசேகரும் “ஐயோ, திவிமா அவன் நீ பொய் சொல்ற, நடிக்கறேன்னு கண்டுபுடிச்சிட்டான். ஒன்னும் பண்ணமுடியாது. ” என கைவிரிக்க அவளோ அவரை முறைத்து விட்டு “மதி அத்த ப்ளீஸ் ” என்றவளை “நீ, எப்படிடி என் பையனுக்கு மூளை இல்லேனு சொல்லலாம். நீயே அனுபவி” என்றவளை விடுத்து “அர்ஜுன் அண்ணா, அம்மு காப்பாத்துங்க” என அழைக்க அவர்களோ “அவனும் உன்ன மாதிரி தாண்டா, சொல் பேச்சு கேட்கமாட்டான். சோ நீயே பாத்துக்கோ என அர்ஜுனும், நீ இதுவரைக்கும் கெஞ்சி பாத்ததே இல்ல டி.. அதனால கொஞ்சம் அப்டியே இரு என அம்முவும்” கூற அவள் இறுதியில் ஆதியை திரும்பி பார்க்க அவனோ “ஒழுங்கா சாரி சொல்லு அப்போ விடறேன்.” என்றான்.

திவியம் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “ராஜா ப்ளீஸ்..” என்றதும் தான் மாயம் அப்படியே சொக்கிவிட்டான். உடனே கையை எடுக்க அவளோ விட்டதும் கொஞ்ச தூரம் ஓடிச்சென்று “எப்போப்பாரு என் காதையே புடிக்கறேல்ல…இன்னைக்கு நைட் நீ எப்படி நிம்மதியா சாபிட்றேன்னு பாக்கறேன் ஆதி…பழிவாங்குறேன் இரு…” என பழிப்பு காட்டிவிட்டு ஓடினாள். அவளை பார்த்த ஆதி “இம்சதான் இவ…” என்று கூறிக்கொண்டே மாடி பக்கம் சென்றான்.

அபி, அரவிந்த அனைவரிடமும் அம்மு அர்ஜுன் விஷயத்தை கூற அவர்களும் மிகவும் மகிழ்ந்து வாழ்த்தினர். அவர்களும் நந்துவுடன் கிளம்பிவிட ஆதியும் அர்ஜுனும் தந்தையுடன் ஆபீஸ் கிளம்பினர்.

சந்திரசேகர், “ஆதி அப்படியே வாயேன். கடைக்கு போயிட்டு ஒரு இன்ட்ரோ குடுக்கறேன்” என அழைக்க

ஆதி “டாடி ப்ளீஸ், எனக்கா தோணும்போது நான் வரேன். அதான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேனே. பட் நாட் நௌ. இப்போதைக்கு நீங்களே பாருங்க. கொஞ்ச நாள் எங்க ஆபீஸ் வேலை பாக்கவிடுங்க.” என்றதும் அவரும் மகன் மீது உள்ள நம்பிக்கையில் சரி அவன் போக்கில் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

3 வருடம் கழித்து ஆபீஸ் வந்த ஆதியை அனைவரும் ஒரு ஒரு மனநிலையில் வரவேற்றனர். சிலர் மகிழ்வுடன், சிலர் பயத்துடன்.

“ஐயோ ஆதி சாரா, மனுஷன் பாரின்ல இருந்து பாக்கும்போதே அப்படி குறை கண்டுபிடிப்பான்.. இப்போ இனிமேல் இங்கேயென்ன சொல்லவே வேண்டாம். அர்ஜுன் சார்கிட்டவாது கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும். ஆனா ஆதி சார் சுத்தம், தப்புன்னு தெரிஞ்சா எல்லாமே பறக்கும். முன்னாடி ஒருத்தன் நிக்கமுடியாது. மன்னிக்கவும் மாட்டாரு. எப்படி இருக்கப்போகுதோ இனி? ஆனா கிளைன்ட் யாரும் நம்மள கேள்விகேக்காத மாதிரி பாத்துப்பாரு. அவங்க கேட்டாங்கன்னாலும் கண்டிப்பா சொல்லிடுவாரு அவங்கள வேலை வாங்குற வேலை உங்களோடதுல்ல. சோ உங்கலோட டிமாண்ட் மட்டும் சொல்லுங்கன்னு நேருக்கு நேர் சொல்லிடுவாரு. பீல்ட் ஒர்க்ல எல்லாம் எல்லாமே பக்காவாஇருக்கும். அந்த ஷர்மாக்கு எல்லாம் ஆதி சார் தான் கரெக்ட். ஷர்மாவும் வேலைய குடுத்திட்டு படுத்தற பாடு இருக்கே…. அப்பப்பா ஆனா அவரையே ஆதி சார் ஹாண்டில் பண்ணிடுவாரு. திறமையான ஆள் தான்… ஆனா கோபம் வந்தா அடக்கறதுதான் கஷ்டம். யாருகிட்ட தான் அடங்குவாரோ ? இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் வீட்லையும் இப்படித்தான் கடுகடுன்னு இருப்பாங்களோ? ” என்றதும் இன்னொருவன் “என்னவோ ? ஆனா அவரை கட்டிக்க போற பொண்ணு ரொம்ப பாவம். இவரு கோவத்துக்கு தாக்குப்புடிக்குமோ என்னவோ? இவரே பாவம் பாத்து கோபத்தை குறைச்சாதான் உண்டு. சரி நம்ம போயி வேலைய பாப்போம். ” என இருவர் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த அர்ஜுன் சிரித்துக்கொண்டே ஆதியின் அறையினுள் நுழைந்தான்.

ஆதி “என்னடா சிரிச்சிட்டே வர? ”

அர்ஜுன் அவன் கேட்ட உரையாடலை கூறிவிட்டு “உன்ன மத்தவங்கனால குறை சொல்லாம இருக்கவும் முடியல, விட்டுகுடுக்கவும் முடியல. மொத்தத்துல இனிமேல் எல்லாமே பக்கவா இருக்கும். இருந்தாலும் எல்லாரும் உன்ன பாத்தாலே அலறானுங்கடா.. அவங்க பேசுறத கேக்கும்போதுதான் எனக்கும் தோணுது உன் ஒய்ப் ரொம்ப பாவம். உன்ன, உன் கோபத்தை ஹாண்டில் பண்ண அவ என்ன பாடுபடபோறாளோ? என கேட்க ஆதி ஒரு பெருமூச்சுடன் அவளை கட்டிக்கிட்டு நான்தான் பாவமா இருக்கனும், அந்த இம்ச எப்போ என்ன என்ன பண்ணுமோனு எப்போவும் அலெர்ட்டா இருக்கனும். என மனதில் நினைத்ததாய் எண்ணி வாய்விட்டே கூறிவிட்டான்.”

அதை கேட்ட அர்ஜுன் நண்பனிடம் வந்து “டேய் உண்மையவாடா?” என கேட்க அதன் பின்பே தான் பேசியதை உணர்ந்த ஆதி “இல்லடா, பொதுவா எல்லா ஹஸ்பெண்ட்ஸ்ம் ஒய்ப்க்கு பயப்படுவாங்கள்ள அந்த மீனிங்ல சொன்னேன் டா”

அவனை நம்பாத பார்வை பார்த்த அர்ஜுன் “நம்பிட்டேன். அப்போ நீ யாரையும் நினச்சு சொல்லல” என்றதும் ஆதி “அட நீ வேற, அவ இப்போ எங்க இருக்காளோ?” என அவன் திரும்பிக்கொள்ள

அர்ஜுன் “அவ, இப்போ ஐடி ஹப் ல xyz கம்பெனில உக்காந்து ஸிஸ்டெமோட சண்டை போட்டுட்டு இருப்பா. “என அவன் கூற அது திவி வேலை செய்யும் கம்பெனி என அறிந்தவன் அர்ஜுனை வேகமா திரும்பி பார்க்க அவனோ குறும்புடன் சிரித்துக்கொண்டே “என்ன கரெக்டா சொல்லிட்டேனா? என்கிட்ட சொல்லுடா திவ்விய நீ லவ் பண்ற தானே?” என்று கேட்க

ஆதி சிரித்துக்கொண்டே “எனக்கு அவளை புடிச்சிருக்கு. லவ் பண்றேன் தான். ஆனா இன்னும் அவகிட்டேயே சொல்லல. உடனே அவகிட்ட சொல்லி அவ நம்பவும் மாட்டா. உண்மையா சொல்லனும்னா சீரியஸ்சாவே எடுத்துக்கமாட்டாளோனு கூட டவுட். எல்லாமே ரொம்ப ஜாலியா funஆ எடுத்துக்கறா. கோபத்துல எது சொன்னாலும் அகைன்ஸ்ட்டா பண்ரா…ஆனா எல்லார் மேலையும் பாசம்…சேட்டை…வாலு.. சில விஷயம் ரொம்ப மெட்சூர்டா இருக்கா. சில விசயத்துல இன்னும் வளரவே இல்ல…அவளுக்கு என்ன புடிச்சிருக்குன்னு அவளா புரிஞ்சுக்கணும். அப்போதான் அவ எந்த சூழ்நிலையிலும் என்னை விடாம எந்த ஆசிலேஷனும் இல்லாம அந்த லைப்ப என்னை முழுசா ஏத்துபா…அதனால கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கேன்…அதுவுமில்லாம ஆரம்பத்துல இருந்து எங்களுக்குள்ள சண்டையாவே இருந்ததால..” என ஆதி கூறிக்கொண்டே இருக்கும்போதே

அர்ஜுன் “சூப்பர் மச்சான், திவ்விய பத்தி இவ்வளோ ஷார்ட் டைமிங்கில இவ்வளோ கரெக்டா புரிஞ்சு வெச்சிருக்க. அவளுக்காக எல்லாமே யோசிச்சிருக்க பாரேன். ரியலி திவி சோ லக்கி டா. நீ சொல்றதும் உண்மைதான் அவ கேரக்டர் அந்தமாதிரிதான், அவளா புரிஞ்சுகிட்டு டிசைட் பண்ணாதான் நல்லது. மத்தவங்க சொல்லி கேக்கமாட்டா. ஆனா ரொம்ப நல்ல பொண்ணுடா… உனக்கு ஏத்த பொண்ணு… உன்ன எப்போவுமே சந்தோசமா வெச்சுப்பா…” என கட்டிக்கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தான்.

[ஆதி திவி சண்டையை பற்றி கூறவந்ததை அர்ஜுன் கேட்டிருந்தாலாவது அர்ஜுனுக்கு புரிந்திருக்கும் ஆதியின் மனநிலையும் அதில் அடங்கிய கேள்வியும். ஆனால் அவன் மகிழ்ச்சியில் கேட்கும் மனநிலையில் இல்லை. உண்மையை கூறினால் அர்ஜுன் அவன் இறுதியாய் கூறியதை கவனிக்கவே இல்லை. பாவம் இதை அறிந்து பதில் கூறவரும் அர்ஜுனும் அறியாததே பின்னொரு நாளில் அவன் கூறு வரும் பதிலை ஆதியும் கேட்கும் மனநிலையை தாண்டி இருப்பான் என்று. ]

ஆதி “ஹ ஹா ஹா… சரி எப்படிடா கண்டுபிடிச்ச எனக்கு அவளை பிடிச்சிருக்குனு….?”

அர்ஜுன் “அதான் தெரியுதே…நேத்து நீ மால்ல திவ்விய பாத்து பேசுனது மொத தடவ பேசுன மாதிரியா இருந்தது. நீ கோபத்துல சண்டை போட்டு பாத்திருக்கேன். ஆனா செல்லமா காதை பிடிச்சு திருகி அதுவும் ஒரு பொண்ணுகிட்ட மொத தடவையா பாக்கறேன். ஆனா திவியோட கேரக்டர் அப்படி அவ எல்லார்கிட்டயும் ஜாலியா பழகுவா, அவகிட்ட எல்லாரும் குளோஸ் ஆய்டுவாங்க. அதனால என்னால முழுசா ஜட்ஜ் பண்ண முடில. ஆனா அதுக்கப்புறமும் நீ அவளை அப்போ அப்போ பாத்து ரசிச்சது, பசங்க அவங்கள கிண்டல் பண்ணும்போது உனக்கு வந்த கோபம், அவளை நீயே கூட்டிட்டு போறேன்னு கேர் பண்ணது, அவ வரமாட்டேன்னு சொல்லியும் கேக்காம கம்பெல் பண்ணி மிரட்டி அவளுக்கான முடிவையும் எடுத்து உன்கூடவே கூட்டிட்டு போனது, இன்னைக்கு காலைல அவ தான் எங்க மேரேஜ்க்கு காரணம்னு நீ சொல்லும்போது உன் முகத்துல வந்த பெருமை, நீயும் அவளும் போட்ட சண்டை எல்லாமே சொல்லுச்சுடா. நீ என் பிரண்ட் ஆதி இல்ல… திவியோட ஆதின்னு… சாரி ராஜான்னு..” என கூறவும் ஆதிக்கே வெக்கமாக போய்விட்டது.

“அவ்வளோ அப்பட்டமாவாடா இருந்திருக்கேன்?” என வினவ

அர்ஜுனோ சிரித்துவிட்டு “நீ ரொம்ப கண்ட்ரோல் மச்சான்… ஆனா உன்ன கொஞ்சம் கவனிச்சாலே போதும் உன்னோட இவ்வளோ நாள் பிஹேவியர்ஸ்க்கு இது டோடல் டிபரென்ட் அதனால ஈஸியா தெரிஞ்சுடும்.” எனவும்

ஆதியும் “உண்மைதான் டா, அவளை பாத்தாலே என் கண்ட்ரோல் எல்லாமே எங்க போகுதோ… நான் அமைதியா இருப்பேன்டா..அவ பண்ற ஏதாவது வேலை என்ன நல்லா டென்ஷன் பண்ணி கத்தவிடறா.. அப்புறம் நான் சுத்தி இருக்கறத விட்டுட்டு அவளை திட்டிட்டு சண்டைபோட ஆரம்பிச்சடறேன்.. சீரியஸ்ஸா திட்டிட்டு இருப்பேன், பாவமா முகத்தை வெச்சு கெஞ்சி கொஞ்சி ஏமாத்திட்டு ஓடிடுவா…உண்மையாவே அந்த நேரத்துல அவளோட அந்த பாவமா இருக்கற முகத்தை பாக்கணுமே நான் அப்படியே உருகிடுவேன் மச்சான்… அவளை ஏதுமே கஷ்டப்படுத்தாம கைக்குள்ள வெச்சு பாத்துக்கணும்னு தோணும்.. ஆனா அந்த பிராடு அப்படி நடிச்சேனு சொல்லி ஏமாத்திட்டு ஓடிடுவா… அவள எப்படி சமாளிக்கபோறேனோ தெரில மச்சான்.” என்றவனை அணைத்துக்கொண்டு “ஆழ்ந்த அனுதாபங்கள் டா மாப்பிள்ளை.. மொதல்ல அவ உன் லவ்வ புரிஞ்சுக்கிட்டும். அப்புறம் அவளை ஹாண்டில் பண்றத பத்தி ரிசெர்ச் பண்ணு. ஆனா அவ உன்கிட்ட அடங்கிடுவான்னு தோணுது… ஏன்னா இத்தனை வருஷத்துல அவ யார்கிட்டேயும் ப்ளீஸ், சாரி, எல்லாம் சொல்லி நான் பாத்ததே இல்ல. எப்படியும் ஏதாவது பண்ணி தப்பிச்சிடுவா. ஆனா உங்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் அடங்குற மாதிரி இருக்கு. அதனால நம்பிக்கையோட காத்திருப்போம். ” என நண்பர்கள் ஆபீஸ் வேலையில் இறங்கிவிட்டனர்.

மாலையில் வீட்டிற்கு வந்த திவி தன் அண்ணா, அண்ணியிடம் போனில் உரையாடிவிட்டு ராஜீ , மகாவுடன் தந்தைக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என கூறி தாய்மார்களை வம்பிழுத்துக்கொண்டிருந்தாள். அதை பார்த்த தந்தையர்கள் மனம்விட்டு சிரிக்க வேகமாக உள்ளே நுழைந்த அனு “திவி, இங்க என்ன பண்ணிட்டு இருக்க?? இன்னும் வீட்டுக்கு வரலயேன்னு பாத்தா இங்க நீ வெட்டியா சிரிச்சிட்டு இருக்க…”என கூறியவளை பார்த்து “ஏன் அனு, அவ எப்போவுமே உங்க வீட்ல தான் இருக்கா, எப்படியும் 2 பேரும் சண்டைதான் போடப்போறீங்க, மதி ஆண்ட்டி விலக்கிவிடனும். இதுக்கு எதுக்கு நீ இந்த ரம்பத்த கஷ்டப்பட்டு வந்து கூட்டிட்டு போற? ” என தர்ஷி கேட்க,

அனுவும் “அதென்னமோ தெரிலக்கா, என்ன பண்ணாலும் திவி கூடவே இருந்து பழகிடுச்சு. எல்லாத்தையும் சொல்லி சண்டை போட்டு, அப்புறம் எல்லாரையும் கலாய்ச்சுட்டு ரொம்ப ஜாலியா இருக்கும். அம்மு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா. எனக்கு எப்போவும் திவி கூட சண்டை போட்டுட்டே இருந்தான் நல்லா இருக்கும். இல்லாட்டி பைத்தியமே புடிச்சிடும்க்கா. ” என கூறியதை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

பின்பு திவி “அதென்னடி, தர்ஷிய மட்டும் மரியாதையா அக்கான்னு கூப்பிடறே, என்ன மட்டும் பேர் சொல்லி கூப்பிடறே? இனிமேல் ஒழுங்கா என்னையும் மரியாதையா கூப்படல அத்தைகிட்ட சொல்லிடுவேன்.” என மிரட்டியவளை பார்த்து சிரித்துவிட்டு

“அட போ திவி, அம்மா எப்போவுமே சொல்லுவாங்க ஆனா நான்தான் கேட்கமாட்டேன். ஒருதடவை உன்ன நான் எப்படி கூப்பிட்றதுன்னு பஞ்சாயத்தே நடந்தது. திவி உங்கள அத்தைனு தானே கூப்பிட்றா, அப்புறம் எப்படி நான் அக்கான்னு கூப்பிட்டா சரிவரும்னு கேக்க சரி அப்படினா அண்ணின்னு கூப்பிடுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறமும் பேசி ஆர்கியு பண்ணி திவி எனக்கு எப்போவுமே பிரண்டா தான் இருக்கா. அப்படி கூப்பிட்டா ரொம்ப தள்ளிவெக்கிறமாதிரி இருக்கு. உங்களுக்காக வெளி ஆளுங்க முன்னாடி வேணும்னா நான் மரியாதையா கூபிட்றேன். மத்தபடி எனக்கு திவி தான்.” என ஒரு கிளைமாக்ஸ் சொல்லிட்டு வந்துஇருக்கேன். அந்த மரியாதைய எல்லாம் அப்புறம் பாக்கலாம். இப்போ ஒழுங்கா என்கூட கிளம்பி வராட்டி, உன்ன பேர் சொல்லி கூப்பிட்ற மரியாதையும் போய்டும்” என மிரட்டிவிட்டு அனு ஓடியேவிட்டாள்..

அனுவை துரத்திக்கொண்டு வந்தவள் கார் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க போக சடன் பிரேக் போட்டு தன் அருகில் நிறுத்தியதை பார்த்தவளுக்கு ஒரு நொடி உடலே நடுங்கிவிட்டது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது