Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 55

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 55

உனக்கென நான் 55

“ஹேய் மலை என்னடி இதெல்லாம்” என அழுக்கு சட்டை பாவைடையுடம் வந்தாள் அரிசி.

“எதடி கேக்குற”

“இல்ல தலைல முழச்சிருக்கே இந்த செம்பருத்தி இத யாருடி குடுத்தா”

“அதுவா எங்க மாமா தோட்டத்துல பறிச்சதுடி அம்மா வச்சுவிட்டாங்க” என்று மலை கூறும்போதே அந்த செம்பருத்தியை தலையிலிருந்து எடுத்தாள்.

“அத ஏன்டி எடுத்த?”

“ம்ம் திங்கதான்” என கூறிகொண்டே ஒரு இதழை எடுத்து வாயில் போட்டுவிட்டு தன் தோழிக்கு ஒன்று பிய்த்து கொடுத்தாள். “அம்மா திட்டுவாங்கடி”

“சித்திகிட்ட நான் சொல்லிகிறேன்டி”

“உன்கிட்ட போய் காட்டுனேன் பாத்தியா குரங்கு குரங்கு இப்புடி பூவ பிச்சிட்ட” என்று திட்டினாள்.

“எல்லாமே திங்குறதுக்குதான்டி இருக்கு” என்று அரிசி முழுதாக வாயில் போட்டாள்.

“அப்படின்னா போய் அந்த மண்ண அள்ளி திண்ணுடி” என்று சிறிது ஆத்திரபட்டாள். பூ போய்விட்டது அல்லவா.

“சரிடி” என மண்ணை அள்ளிவிட்டு “இந்தா” என நீட்டினாள்.

“என்கிட்ட எதுக்கு தர்ர”

“நான் உனக்கு குடுக்காம எதுடி திண்ணுருக்கேன்”

“ம்ஹூம்! உங்க அம்மா வாங்கி தந்த அந்த சாக்லெட் எனக்கு தந்தியா”

“என் அம்மா எப்படி எனக்கு சாக்லெட் வாங்கி தந்துருக்கு”

“அன்னைக்கு நீ மரத்துல ஏறிகிட்டு எனக்கு பளிப்பு காட்டிகிட்டே தின்னியே அந்த சாக்லட்டி. வெளிநாட்டு மிட்டாய்”

“ஓஓ அதுவா!”

“அதுதான்டி அரிசி”

“அது தந்தாங்கனு அப்பா குடுத்தாருடி”

“அப்ப நீ ஏன் எனக்கு குடுக்கல”

“ம்ம் எல்லாதுலையும் பங்குகேப்பியா” என்றாள் அரிசி

“ம்ம் அதான் இந்த மண்ணும் எனக்கு வேணாம் நீயே திண்ணு” என்று வேகமாக கோபித்துகொண்டா நடந்தாள்.

“ஏய் மலை ஏன்டி கோவிச்சுகிட்டியா”

“ஆமா இனி பேசாத போ!” என்று அவள் கூறியது அன்புக்கு எல்லாம் தன்னைவிட்டு போனதுபோல இருந்தது. “நான் என்ன பன்னா பேசுவ நீ இப்ப” என்றாள்.

“ம்ம் நீ திண்ணியே பூ அது குடு”

“சரிடி வாந்தி எடுத்து தரவா” என்று சிரிக்க முறைத்துகொண்டு நடந்தாள். “சித்திகிட்ட சொல்லிடுவேன்டி சித்தி இவ என்கிட்ட பேசமாட்டேங்குறானு” என்று கத்த “சொல்லிகோடி எங்க அம்மாக்கு கொம்பா முளைச்சுருக்கு” என நடந்தாள்.

“இதையும் சொல்லுறேன் இரு” என பிளாக்மெயில் தொடர்ந்தது. “பரவாயில்லடி” என்று அவள் கன்மாயில் குதித்தாள். அனைத்து உத்தியும் பாலாய் போனதால் சோகமாக அந்த படிகட்டில் அமர்ந்தாள் அரிசி.

“இப்ப நீ பேசுறியா இல்லையாடி”

“முடியாதுடி” என்று மலை நீந்தினாள். “இப்ப நீ பேசல நான் எப்பவுமே உன்கூட பேசமாட்டேன்டி” என அரிசிகூற “நான் அந்த மாலாகூட சேந்துகுவேன்” என்றாள். “ச்சீ அவ தூங்கும்போது உச்சாபோனவடி”

“பெரிம்மாவும் அன்னைக்கு போர்வைய துவைக்கும்போது உன்ன திட்டுனாங்க! நானும் சேந்துதான் பிழிஞ்சேன். இரு எல்லார்கிட்டயும் சொல்லுறேன்”

“ம்ம் அப்ப நான் அன்னைக்கு நீ ஐய்யனார் கோயில் தட்டுல இருந்து காசு எடுத்து முறுக்கு வாங்கி தின்னைல நான் அத சொல்லுவேன்” என பதிலுக்கு தன் ஜோக்கர் கார்டை எடுத்து ரம்மி சேர்த்தாள்.

“சரிடி பதிலுக்கு பதில் கழிஞ்சுபோச்சு” என்றாள் மலை. “அப்ப எனகூட பேசுவியா” என்றாள் அரிசி. “ம்ஹூம் இன்னும் அது கழியல நான் பேசமாட்டேன்”

அரிசி உடனே தண்ணீரில் பாய மலை விலகி நின்றாள். நீண்ட நேரமாகியும் அரிசியை கணவில்லை. மலைக்கு பயம் தொற்றிகொண்டது. “ஏய் அரிசி வெளிய வாடி நான் பேசுறேன்டி” என கத்த துவங்கினாள். கால்மணி நேரமாக கத்த அவள் தென்படவில்லை.

தன் பாட்டி கூறியது நினைவுக்கு வந்தது. “அந்த கம்மாய்க்கு போக்கூடது மலரு”

“ஏன் பாட்டி” என அரிசியும் மலரும் கண்கள் விரிய பார்த்தனர். “அய்யாசாமி தாத்தா உங்க்கிட்ட சொல்லலையா” ஆம் அவருக்கு இந்த ஊர்சுற்றி திரியும் சிறுசுகளை கடத்தி கோயிலில் பிச்சை எடுக்க வைப்பார்கள் திருடர்கள் என்ற பயம். அதனால் பேய் கதைகள் சொல்லி பயமுறுத்தி வைப்பார் அந்த ஊர் புளியமரத்தில் சின்ன குழந்தைகள் அனைவரையும் அமரவைத்து. அதுவுமில்லாமல் சமீபகாலமாக ஊரில் திருட்டுவேறு அடிக்கடி நடந்துவந்தது.

அதிலும் அம்மன்கோவில் சாத்திரபடி அதை பூட்டகூடாது. ஆனாலும் ஜெமின் குடுத்த பரம்பரை அம்மன் நகை அந்த ஓலைபெட்டியில்தான் உள்ளது. அதனால் கோடாங்கி என்பவரை ஊர் காவலுக்கு இரவில் போட்டிருந்தனர். பக்கத்து ஊரில் திருடர்கள் ஒரு பெண்ணை கழுத்தறுத்துவேறு போட்டு சென்றுவிட்டனர். அதனால் அய்யாசாமிக்கு முக்கியம் தன் ஊரின் வாரிசுகள். இந்த குட்டி வானரங்கள்தான் அதை திருடர்களிடமிருந்து காக்கவேண்டும். அதற்கு ஆயுதம் பேய் கதைகள். அதிலும் பனங்க்கொட்டை சாத்தான் இப்போது ரொம்ப பேமஸ். ஊர் பழைய கிளவிகள்கூட நம்பியிருந்தனர். ஒருவரின் சொல் உண்மையாகும் நிறையபேரின் நம்பிக்கை நிகழ்உலகிற்கு வரும் எனபதுபோல அந்த குட்டி சாத்தானை நிறையபேர் பார்த்ததாக கூறியிருக்கின்றனர். அதிலும் அய்யாசாமி தாத்தா கூறும் விதம் பகலிலேயே கிளியூட்டும். அன்பு ஆர்வமாக கேட்டுகொண்டிருக்க “அரிசி எனக்கு பயமா இருக்குடி” என வயிற்றை தடவினாள் மலை. அதனால் இருவரும் அந்த குட்டி சாத்தான் கதைக்கு ஆப்ஸன்ட்.

இன்று பாட்டி அந்த கதையை கூறும் நிலை வாங்க கேக்கலாம். “இவதான் பாட்டி பயந்துகிட்டு என்ன கேக்கவிடாம பன்னிட்டா” பலிபோட்டாள் அரிசி.

“அந்த கதை வேனாம்பாட்டி எனக்கு பயமா இருக்கும்” மலை சினுங்கினாள். “நான் பயப்படாம சொல்லுறேன்” என மலையின் பாட்டி துவங்க மலை அரிசியை இருக்கமாக கட்டிகொண்டாள்.

பாட்டி சின்னபுள்ளையா இருந்தப்போ அந்த அய்யசாமி தாத்தாதான் ஊருல பெரிய பையன். நாங்க எல்லாரும் அந்த தாத்தா மாட்டுவண்டில ஏறிகிட்டு ஊரு சுத்துவோம். அப்ப அவங்களுக்கு பெரிய காடு இருக்கும் காடு ஓரத்துல பனமரம் நிறைய இருக்கும் நாங்க போனா எங்களுக்கு நுங்கு வெட்டி தருவாரு. அப்ப அவங்க தோட்டதுல ஒரு பெரிய மரம் இருந்துச்சு. அதுல ஒரு தாத்தா வேலை பாத்துகிட்டு இருந்தாங்க. அவங்க பொண்டாட்டி மாசமா இருந்தாங்க. அப்ப!  என நிறுத்திவிட்டு வள்ளிபாட்டி தெரியும்ல?

ம்ம் கொய்யாபழம் தருவாங்கள்ள அவங்கதானஎன்றாள் அரிசி.

அவங்கதான்! ஒருநாள் அய்யாசாமிதாத்தா தோப்புக்கு போனப்போ அவரு இல்ல அதனால அங்க வேல பாத்துகிட்டு இருந்தவரு மரத்துல ஏறி நுங்கு வெட்டிருக்காறு மேல மரத்துல குட்டி நாகம் இருக்கும் தெரியும்ல?

ஆமா பாட்டி பாம்புக்கு வயசான பன மரத்துல ஏறி உட்காந்துகிட்டு நுங்கு வெட்ட வர்ரவங்கள கடிக்குமே அதுதான

ஆமா அந்த குட்டி நாகம் அங்க மானக்கத்த கக்க உட்காந்துகிட்டு இருந்தா கடிக்காத பின்னஎன்று மலையின் குரலும் வந்தது.

ஆமா அந்த பாம்புதான் அந்த தாத்தாவ கடிச்சிடுச்சு அவரு மேல இருந்து விழுந்து செத்துட்டாரு. வள்ளி பாட்டிகிட்ட கேளு சொல்லுவாங்க.

அப்பறம் பாட்டி

அவங்க பொண்டாட்டி அழுதுகிட்டு அங்க கிடந்த அருவாள எடுத்து கழுத்த அறுத்துகிட்டாங்களாம். வள்ளிபாட்டி பயந்துட்டு ஓடி வந்துருச்சு

பாவம்பாட்டிஎன்றாள் அரிசி.

ம்ம் அப்ப அய்யாசாமி தாத்தா அங்க வந்திருந்துருக்காரு அப்ப அந்த பாட்டிவயித்துல இருந்த குழந்தை எந்திருச்சு வெளிய வந்திருக்கு ஒரே ரத்தமா இருந்துச்சாம்.

ஐயோ அப்புறம்

தாத்தாவ கடிக்க வந்திருக்கு

ம்ம்

தாத்தா அங்க இருந்த முனியசாமி கோயில்ல போய் ஒழிஞ்சுகிட்டாராம் அது வெளிய உட்காந்துகிட்டு எங்க அம்மாவ குடு அப்புடின்னு அழுதுச்சாம். அதுக்கு அவரு அம்மா செத்துடாங்க அப்புடின்னு சொல்லிருக்காறு.

அப்புறமும் போகலையா அது

இல்ல நீ அம்மாவ குடுக்குற வரைக்கும் நான் பனமரத்துல உட்காந்துகிட்டு பனங்காய தின்னுவேன் என்னமாதிரி குட்டிபசங்க வந்தா அவங்களையும் கடிச்சு சாப்புடுவேன் அப்புடின்னு சொல்லிட்டு மரத்துல ஏறிகிச்சாம்.

அப்ப அங்கதான இருக்கனும் ஏன் ஊருக்குள்ள வந்து எல்லாரையும் கொல்லுது! பக்கத்து ஊர்லகூட ஒரு அக்காவ கழுத்த அறுத்துபோட்டுருச்சாம்என்றாள் வக்கில் அரிசி

அதான் அந்த தாத்தா தோட்டத்துல இப்ப பனை மரத்தெல்லாம் கம்மாய ஆழமாக்க வெட்டிட்டாங்கள அதான் அதுக்கு இருக்க இடமில்லாம வருது பாத்து நீங்க வெளிய சுத்தாம இருங்க அப்புறம் உங்களையும் பிடிச்சிரும் என பாட்டி கூற மலை பயந்துவிட்டாள். அரிசியோ “வந்தா ஓத்தகைல அடிச்சுபோட்டுடுவேன் பாட்டி குட்டி சாத்தான” என கையால் குஸ்தி காட்டினாள்.

அந்த நினைவுகள் மலையின் மனதில் காட்சிகளாய் பதிந்திருக்க அதற்கு ஏற்றார்போல இப்ப அரிசியை காணவில்லை. தூரத்தில் அய்யாசாமி தோட்டம்வேற விகாரமாக காட்சியளிக்க அந்த தோட்டத்தில் மீதமிருந்தது. அந்த மொட்டைபனைமரம்தான் அதை பார்த்தாள். அதில் ஒன்னுமில்லை. ஆனால் ஏன் கண் கம்மாய்க்கு நடுவில் இருந்த அந்த ஒற்றை பனைமரத்தை பார்த்ததோ தெரியவில்லை. ஆம் அதில் அந்த பனங்காய் குட்டிசாத்தான் பனங்காயை தின்று தண்ணீரில் போட்டது மலையின் கண்கள் தண்ணீரால் சிவந்திருந்ததால் அனைத்தும் புகைமூட்டமாய் தெரிந்தது. அந்த மரம் மிக தொலைவில்வேறு இருந்தது. அதனால் அதன் நிழல் மட்டும் தெரிய இதயதுடிப்பு அந்த நீரில் அதிர்வை உண்டாக்கிய நேரம். அந்த சாத்தான் அந்த மரத்திலிருந்து நீரில் பொத்தென விழுந்தது. பின் மலையை நோக்கி வேகமாக வரவே “அரிசி வெளிய வாடி பனங்கா பேய் வந்திடுச்சு” என குரல் குலறியது.

கரையிலிருந்த சட்டையேகூட எடுக்காமல் பாவாடை மட்டும் அணிந்து ஒடினாள். “பெரிம்மா அரிசிய பனங்காபேய் மரத்துல வச்சு சாப்புடுது” என அழுதாள்.

“இந்தாடி உன் சட்டை வேனாமா” என வீட்டற்குள்ளிருந்து தலையை துவட்டிகொண்டே வந்தாள் அரிசி. மலையை விட வேகமாக காட்டுபாதையில் ஓடி வந்திருக்கிறாள்.

அவ்வளவுதான்மா மலருக்கு இருளடிச்சிருச்சு ஒருமாசம் காய்ச்சல்மா பாவம் பயந்துட்டாஎன பார்வதி கூற சந்துருவும் சுவேதாவும் சிரித்தனர். “ஆனா அன்னி உங்கள பகைச்சுக்ககூடாதுபோலையேஎன்று அன்னியை அனைத்தாள் சுவேதா.

இருங்கம்மா அதோட விட்டாளா!”

ஓஓ இன்னுமா! சொல்லுங்க அத்த

இப்ப வந்துட்டு போறாறே அவருதான் கோடாங்கி ஊர்காவலர் அப்பஎன பார்வதி ஆரம்பித்தார்.

“டேய் மூக்கா அன்புக்கு இளநி பறிச்சு போடுடா” இது மாரியம்மாள் பாட்டி தோட்டத்தில்.

“அம்மா காலைல இருந்த வாய்க்கால் வெட்டி முடியலமா. சாப்புட்டுடுட்டு வெட்டுறேனே”

“ம்ஹூம் இனி உன்ன வேலைக்கு வச்சா சரியா வராது!”

“அம்மா “ என்று பயந்தார்

“அப்புறம் என்ன ராத்திரி மாங்காமரத்துல காய் கானாம்போகுது அதுக்கு காவலுக்கு வான்னா வரமாட்டேங்குற. வேலைலையும் சுத்தம் இல்லையே”

“அம்மா அந்த பனங்கா சாத்தான் இடமில்லாம சுத்திகிட்டு பனங்கா கிடைக்காம மாங்காய தின்னுதுமா அதான் ராத்திரி பயமா இருக்கு” என்றான் மூக்கன்.

“ஆமாப்பா ராத்திரி வேனாம் தின்னுட்டு போகட்டும் உங்க ஆத்தாலுக்கு நான் பதில் சொல்லமுடியாது உனக்கு எதாவது ஆச்சுனா! சரி சாப்பிட்டுட்டு இளநி பறிச்சு குடு” என மாரியம்மாள் கூற.

“பாட்டி நான் ஏறி பறிச்சுகிறேன்! மாமா நீங்க சாப்புடுங்க” என மரத்தில் ஏறினாள் சிறிது நொடியில்.

“ஏய் பாத்துடி கீழ விழுந்த உங்க அப்பன் என்ன கொண்ணுடுவான்”

“நான் விழமாட்டேன்பாட்டி” என அங்கிருந்து கைகலைவிட்டுவிட்டு காலால் மரத்தை பற்றிகொண்டு தலைகீழாக தொங்கினாள்.

“நீ ஒன்னும்பறிக்க வேனாம் இறங்கு” என பதறினார் மாரியம்மாள். அதற்குள் சில இளநிகள் கீழே விழுந்தன. அவள் மேலயே அமர்ந்து விரலால் ஓட்டைபோட்டு குடித்தாள்.

“தள்ளுங்கப்பா கூட்ட கீழ போடபோறேன்” என எப்படியும் ஒரு ஐந்து காலிகூடுகள் கீழே வந்திருக்கும். மலை ஒன்றுதான் குடித்திருந்தாள். பின் இறங்கியவள் பாட்டியின் கோழிகளை விரட்டி கூட்டில் அடைத்தாள்.

அங்கிருந்த குட்டி ஆடுகள் இவளையும் மலையையும் பார்த்து தெரித்து தன் தாயிடம் ஓடி பால்குடிக்க அதை எடுத்துவிட்டு இருவரும் அந்த ஆடுகளில் பாலை குடித்துவிடுவதுண்டு. “என்ன ஆட்டுக்கு புன்னாக்கு வைக்குறீங்களா இல்லையா குட்டிக்கு வயிறு நிறையலையே” என்று திட்டும்மாரியம்மாவுக்கு மூக்கன் பதில் கூறமுடியாமல் நிற்பான்.

அதிலும் அந்த ஆட்டுக்கு புல் வைக்கும்போடு அதை சாப்பிடவிட்டாதான. குதிரை இல்லை என்பதற்காக அதில் ஏறி இருவரும் அம்ர்ந்துகொண்டு “நான் அர்ஜுனன் நீ கெட்டவன்” என தெருவில் பார்த்த மகாபாரத நாடகத்தை நடத்துவது. பாவம் அந்த ஆடுகள்.

இன்று விடுப்பு என்றால் இரண்டு நாட்களுக்கு கண்ணீர் விடும். அப்புறம் இவர்கள் வந்துவிட்டாள் தோட்டதை காவல்காக்க வளர்க்கும் நாய்கள்கூட ஊருக்குள் ஓடிவிடும் பின் பள்ளி திறந்த அப்புறம்தான் வரும்.

பின்ன டீச்சர் நாய் வால நிமித்த முடியாது உங்க ரெண்டு போத்தையும் திருத்த முடியாது என கூறயதால் முதல்கூற்று பொய் என நிறுபிக்க நாய்களைபிடித்து அதன் வாலில் கல்லை கட்டிவிடுவது. அதனால் இவர்கள் வந்தால் தெறித்து ஓடும்.

“வாத்த கழுத்த பிடிச்சுதான்டி தூக்கனும்” என்று மூன்று வாத்துகள் செத்துவிட்டன. கிளிக்கு வைக்கும் வாழைபழத்தை அது மூன்று வினாடியில் தின்றுவிடும் என்ற அதிசயம் இங்குதான் நடக்கும்.

மொத்ததில் தோட்டம் இந்த சனி ஞாயிறு. அதற்கு சனிதான்.

இரவு வரவே “அரிசி இங்க அந்த சாத்தான் வருதாம்டி மூக்கம் மாமா சொன்னாங்க பாத்தியா” என்றாள்மலை.

“ஏய் நான் வள்ளி பாட்டிகிட்ட கேட்டேன்டி அந்த குட்டிசாத்தான நாம பிடிச்சி டப்பாவுக்குள்ள அடச்சிட்டா அது கேக்குற வரம் தருமாம். நான் அதுகிட்ட அந்த ஃபாரின் சாக்லெட் கேப்பேன்பா”

“எப்படி கேட்ட வள்ளி பாட்டிகிட்ட”

“அவங்க தினமும் எனக்குதான முதல் பழம் தந்துட்டு போவாங்க”

“ஆமா அப்பதான் நல்லா விக்குதுனு சொல்லுவாங்க அதுக்கு என்னடி”

“அப்பதான் காதுல ரகசியமா கேட்டேன்”

வள்ளிபாட்டி அந்த சாவை நேரடியாக பார்த்ததால் அவருக்கு பேய் பயம் இல்லை. அதனால் முடிந்தவரை அய்யாசாமி தாத்தா கொள்கை எதிராலி வள்ளிதான். அன்புக்கு பேய்லாம் இல்லைனுகாட்ட இந்த பதில்.

“ஓஓ அப்படியாடி அப்ப எப்புடி அத டப்பால அடைக்குறது” என்றாள் மலை.

“அதுக்கு ஒரு ஐடியா இருக்குடி! நீ என்ன அதுகிட்ட கேப்ப”

“நானா! நான் நிறைய டிரஸ் அப்புறம் பூ அப்புறம் பாசிமணி மச்சிவீட்டு அக்கா போட்டுருந்தாங்கள்ள அந்த மாதிரி(அது முத்து என தெரியாது) அப்புறம்…”என அவள் அடுக்க.

“போதும்டி அது செத்துட போகுது”

“இன்னும் இருக்குடி”

“இரு முதல்ல அதபிடிப்போம்”

“எப்புடிடி”

“நான் குடிச்சுபோட்ட இளநிய பாத்தியா”

“ஆமா மேல ஓட்ட போட்டுருந்த”

“ம்ம் அதுதான் திட்டம் அந்த சாத்தான் வந்த்தும் இதுல அடைச்சு குச்சிய வச்சு குத்திமூடிருவேன்” என்று தன் ராஜ தந்திரத்தை காட்டினாள்.

“சூப்பர்டி ஆமா அது எப்புடி இதுக்குள்ள வரும்?”

“மாங்கா மரத்துக்கு வருதுன்னு பாட்டிசொன்னாங்கல்ல”

“ஆமா அரிசி”

“அங்க நுங்கு வச்சுருக்கேன் நுங்குனா அதுக்கு பிடிக்கும்ல அத எடுத்து இந்த இளநிகுள்ள போட்டுட்டு மாங்கா மரத்துல உட்காந்துகிறேன் நீ கீழ இருந்து ஒரு குழி வெட்டி வச்சுடு அத பிடிச்சதும் குழிக்குள்ள போட்டுமூடிலாம் காலை வரம் கேட்டுக்கலாம்” என திட்டம் முடிய அன்று இரவு பாட்டியை தூங்கவைத்துவிட்டு எழுந்து செனாறாகிவிட்டது.

மலை அங்கிருந்த தென்னை ஓலைகளை எடுத்துமேலே போட்டு ஒளிந்துகொள்ள அரிசி மூன்று பனங்காய் ஒரு இளநி ஒரு குச்சி என மேலை ஏறி அமர்ந்தாள்.(இன்னைக்கு அந்த சாத்தான் தொலைஞ்சது இந்த குட்டி சாத்தானுங்க்கிட்ட)

சுற்றிலும் இருட்டு காலடி சத்தம் கேட்க மலைக்கு வியர்த்தது. அரிசியோ கன்னிவைத்த வேடன்போல் ஆயத்தமானாள் ஃபாரின் சாகலெட் கிடைக்கம்ல்லவா

சற்று அருகில் வர அது கோடாங்கி ஊர்காவலன் கையில் ஒரு கம்பு இருந்தது. அரிசி ‘இவருக்கு தெரிஞ்சா அம்மாகிட்ட சொல்லிடுவாரு அவங்க சூடு வைப்பாங்க’ என பயந்து நடுங்கினாள்.

கோடாங்கி அந்தகம்பை வைத்து மாங்காய்களை பறிக்க ஆரம்பித்தார். அரிசியின் காலில் அது கீறிவிட ரத்தம் வந்தது. அரிசிக்கு கோபம் வரவே அந்த பனங்காயில் ஒன்றை எடுத்து அந்த கோடாங்கியின் தலையில் போட அவர் விலகிகொண்டார். பொத்தென விழ சற்று பயந்துமுழித்துவிட்டு மீண்டும் பறித்தார்.

மீண்டும் அனைத்தையும் போட அதில்ஒரு பனங்காய் அவரின் தலையில் நச்சென்று விழ “ஐயோ மாங்கா மரத்துல பனங்காயா” என குரல் நடுங்க சிரித்தாள் அரிசி.

“அய்யோ பனங்கா குட்டிசாத்தான்” என அந்த காவலரை அலற ஒழிந்திருந்த மலை பயந்து தென்னை ஓலையுடன் எழுந்திரிக்க நடுங்கினார் கோடாங்கி. அடுத்ததாக அரிசி அவர்முன் குதிக்க குட்டிசாத்தான் போல இருந்தால் அந்த இருளில். அந்த கோடாங்கியின் மூளை குடுத்த சமிக்கை “ஓடு”

அவர் தெறித்து ஓட இவர்கள் இழிச்சவாயன் கிடைத்தால் விடுவார்களா! அந்த தென்னை ஓலைக்குள் ஒழிந்துகொண்டு கோவில் வாசல்வரை விரட்டி விட்டு வந்தனர். பயந்தவர் கோவிலுக்குள் போனதுதான். மறுநாள் மூன்று திருடர்களை கோவிலில் தைரியமாக பிடித்த ஊர்காவலர் கோடாங்கிக்கு சர்கார் வேலை வழங்கியது. இவர்கள் பல கோவிலில் திருடிய திருடர்கள் என அம்பலம். ஒரு பெண்ணை கொன்ற வழக்கும் பதியபட்டுள்ளது. என்ற செய்திகிட்டியது.

“இந்த வாண்டுங்க ரெண்டும் அன்னைக்கு ஒருநாள். அந்த கோடாங்கி தாத்தா கூட விளையாடுன குட்டிசாத்தான் விளையாட்டு விளையாடலாமா அப்புடின்னு பேசிகிட்டு இருக்கும்போதுதான் விசாரிச்சேன் என்ன மேட்டர்னு அப்பதான் சொல்லுச்சுக” என அன்பின் தலையில் செல்லமாக கொட்டினாள் பார்வதி சிரித்துகொண்டே.

சந்துருவும் சுவேதவும் சிரிக்க. “அதான் அந்த வேலை வாங்கி குடுத்த குட்டி சாத்தான் கல்யானத்துக்கு வர முடியாம இப்ப வந்துட்டு பாத்துட்டுபோறாரு” என்று சிரிக்க.

“ஓ அதுக்குதான் எனக்கு அந்த அட்வைஸா” என்று சிரித்தான் சந்துரு.

“டேய் அன்னா நல்ல குட்டிசாத்தான்கிட்ட மாட்டிகிட்டடா” என்று சுவேதா தன் பங்கை ஆற்றினாள்.

அன்பரசிக்கு ஒடிபோய் கட்டிலில் முகம் புதைக்கவேண்டும்போல இருந்தது. ஆனால் சுவேதா கட்டிபிடித்துகொண்டிருந்தாள். அதனால் அன்பின் முகம் வெட்கத்தில் மேலும் சிவந்த்து.

“திரும்பவும் அந்த கதையாடி! இத எத்தனபேர்கிட்ட சொல்லுவ நீ” என போஸ் உள்ளே வந்தார் சிரித்துகொண்டு.

சுவேதாவின் ஃபோன் ஒலிக்க “ஹலோ” என்றாள் சிரித்துகொண்டு இதுதான் சந்தர்ப்பம் என அரிசி ஓடிவிட “நில்லுங்க பனங்கா மேடம்” என சந்துரு விரட்ட.

சுவேதா “வாட் என்ன சொல்றீங்க” என்று சிரிப்பு அடங்கியது.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19

உனக்கென நான் 19 சந்துருவுடன் அந்த மனிதனின் இனைப்பு துண்டிக்கபட்டதும் சந்துருவின் மூளையோ தன் மனதில் உள்ள அனைவரையும் வரிசைப்படுத்தி பார்த்தது. ‘நமக்கு சொல்லிகிற அளவுக்கு யாரும் எதிரி இல்லையே ஒரு நிமிடம் இரு ஒருத்தன் இருக்கானே பூபதி ஆமா அவனாதான்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41

  41 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சிறிது நேரத்தில் ஆதர்ஷ் வந்துவிட இருவரும் அமைதியாக புன்னகைக்க ஆதர்ஷ் “விக்ரம் எல்லாரும் எப்போ கிளம்புனாங்க? அமைதியா போய்ட்டானா?” அக்சரா ” ஒரு மணி  பக்கம் இருக்கும்… அமைதியாவா? நேத்து நீங்க வந்து

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22

  கனவு – 22   சஞ்சயனோடு வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு சஞ்சயனை யார் என்று போய் பார்க்கச் சொன்னாள். ஆனால் அவனோ,   “நீயே போய் பார் வைஷூ…” என்றான்.   “ஏன் நான் போய்