Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46

உனக்கென நான் 46

கடிகார முள்ளோ தன் விளையாட்டை துவங்கிவிட்டது. அந்த ஆதவனும் இந்த காதலை பார்த்து ரசிக்க சில தினங்கள் வந்துபோய்விட்டான். அன்பரசியோ ஆசையாக அந்த நாட்காட்டியை தன் மென்கரங்களால் கிழித்தாள். இரவில் தன்னவனுடன் பேசிகலைத்ததாள்.மன்னிக்கவும் அவன் மட்டும்தான் பேசினான். அந்த மயக்கத்தில் உறங்கிபோனவள் அதிகாலை சேவலுக்கு பதிலாக சுவேதாவின் சுவையான பூஸ்ட் வாசனையில் எழுந்தாள்.

“அரிசி அரிசி எழுந்திருங்க” சூடான பூஸ்ட் காத்துகொண்டிருக்க எழுந்தவள் பதறினாள்.

“ஐயோ அன்னி நீங்க எனக்கு” என்றாள்.

“ஹலோ கல்யான பொண்ணு இது உங்க ஆளோட உத்தரவு நியமா பாத்தா அவன்தான் வந்து தரனும் ஆனா அவனால முடியாதே அதான் என அண்ணாவுக்கு பதிலா நான்” என்று அவள் கையில் திணித்தாள்.

“ஐயோ அன்னி இருங்க நான் பிரஸ் பன்னிட்டு வாரேன்” இது அன்பு

“ஐய்யோடா! சும்மா குடிங்க அரிசி இந்த பூஸ்ட்டுக்கு தான என் அண்ணாவ வேப்பங்க்குச்சில பல்லு விளக்க வச்சு வாய புண்ணாக்குனீங்க” என்று தலையில் செல்லமாக கொட்டினாள்.

‘ஐயோ இன்னும் என்னல்லாம் சொல்லிருக்காரோ’ என வெட்கபட்டாள்.

பின் வேகமாக எழுந்து வெளியே ஓடிவந்தாள் கையில் ஒரு பிரஸ். வந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி பந்தல் அலங்காரம் துவங்கியிருந்தது. அனைவரும் அன்பரசியையே பார்ப்பதுபோல அவளுக்கு ஒரு உணர்வு. சந்துருவின் பின்னால் மறைந்துகொள்ளவேண்டும் என தோன்றியது

திரும்ப வீட்டினுள் வர நினைத்து கால்களை வைத்தாள். அப்போது பின்னாலிருந்த ஒரு உருவம் அவளது கண்களை பொத்தியது. “சந்துரு விடுங்க எல்லாரும் பாக்குறாங்க” என நெளிந்தாள்.

“அடிபாவி என்னவிட அந்த ஓலைபட்டாசுதான் முக்கியமா போயிட்டானா?” என்று குரல் கேட்க “சே மலர் நீயா” என்றாள்.

“என்னது சே மலரா?! என்னடி ஆச்சு உனக்கு” என்றாள் மலை.

“ஒன்னமில்லடி இப்போதான் எந்திரிச்சேன் அதான்” என்றாள் அன்பு

“அப்போ நைட் புல்லா ஒரே ரொமான்ஸ்னு சொல்லடி” என்று அவளது தோளில் கைவைத்து அழைத்துசென்றாள். அந்த பளிங்குபோன்ற நீரின் அருகில் சென்றதும் தன் தோழியின் முகத்தை கழுவினாள். இது உள்ளருந்து பார்த்த பார்வதிக்கு சிறுவயது தோழிகளை பார்த்ததுபோல இருந்தது இன்னும் சில நாட்களிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகபோகும் தன் குழந்தையை எண்ணி பூரித்தார்.

“என்னடி பதிலையே காணோம்” மலை விடுவதாய் இல்லை.

“அத ஏன் கேக்குறீங்க அக்கா! இந்த பொண்ணு எங்க அண்ணா கனவுல வந்து தூங்கவேவிடமாட்டேங்க்குதாம் பாவம் புலம்புறான் என்னனு கேட்டு சொல்லுங்க! அதுக்குமுன்னாடி இத குடி அரிசி” என அந்த பூஸ்டை நீட்டினாள்.

அதை வாங்கிய அரிசி தன் தோழிக்கு ஒரு டம்ளரில் ஊற்றினாள். “சந்துரு உங்க அண்ணாவா” என்றாள் மலை.

“ஆமா அக்கா” இது சுவேதா

“அப்புறம் ஏன் என்ன அக்கானு கூப்புடுறீங்க” என்றாள் மலை.

“பின்ன எப்படிக்கா கூப்புடுறது” என்றாள் சுவேதா சந்தேகமாக.

“அன்ப எப்புடி கூப்புடுவீங்க”

“அரசின்னு!” என கூறியவள் நாக்கை கடித்துகொண்டு “ஐயோ அன்னி மன்னிச்சுடுங்க, அன்னினு கூப்பிடுவேன்”

“என்னது அரிசியா” என்றாள் மலை.

“ஆமா அது எங்க அண்ணாவுக்கு ரொம்ப பிடிச்ச பேரு” என அன்பை பார்த்தாள். அவள் தனக்கு கிடைத்த பூஸ்டை ரசித்துகொண்டிருந்தாலா இல்லை கனவில் இருந்தாளோ தெரியவில்லை.

“அரிசிகூட ஒரு வானரம் சுத்திகிட்டு இருந்திருக்குமே அதபத்தி உங்க அண்ணா சொல்லலையா” என்றாள் மலை.

“ஆமா மலைதான! அவங்களதான் நான் தேடிகிட்டு இருக்கேன் அவங்க கால்ல விழுந்து அந்த வித்தையெல்லாம் கத்துகனும்! அட்லீஸ்ட் மரமாவது ஏற கத்துகனும் எங்க அன்னி சொல்லிதரமாட்டேங்குராங்க கேட்டா நான் கெட்டுபோயிடுவேனாம்” என்று அன்பின் கன்னத்தில் கிள்ள அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தாள்.

“கன்டிப்பா கத்துதாரேன் ஒரு அப்லிகேஷன் போட்டு சேந்துகோங்க” இது மலை.

“அப்போ நீங்கதான் அந்த மலையா சாரி சாரி மலர்விழியா” என்றாள்

“மலைனே கூப்பிடுங்க நான் தப்பா எடுத்துங்கமாட்டேன் என்னடி அரிசி நான் சொல்றது” என அவளது முகத்தில் இருந்த பூஸ்ட் மீசையை துடைத்துவிட்டாள் மலை. “ஒழுங்க காஃபிகூட குடிக்க தெரியலடி அரிசி உனக்கு” என்று மீண்டும் முகத்தை கழுவினாள்.

அந்த பாசத்தில் சந்துருதான் நினைவுக்கு வந்தான் “ஒழுங்கா ஒரு ஐஸ் சாப்புட தெரியுதாடி உனக்கு முகம் புல்லா” என துடைத்துவிடுவான். அதனால் அன்பரசி அதிஷ்டமானவள் என நினைத்துகொண்டாள்.

“என்னடி மந்திரிச்சுவிட்டமாதிரி திரியுர! கல்யான கலை வந்துடுச்சுடி உனக்கு” என தன் தோழிக்கு நெட்டிமுறித்தாள் சுவேதாவுக்கு தன் அன்னை அன்று செய்த நியாபகம் வந்தது கண்களின் ஒரத்தில் கண்ணீரும். ஆனால் அவள் கண்ணீரை மறைக்கும் வித்தையில் தேர்ச்சிபெற்றவள் அல்லவா.

“ஏய் கொஞ்சம் ஒழுக்கமா இருடி இப்புடி வெளிய நின்னுகிட்டு அரட்டை அடிச்சிட்டு இருக்க” என்று திட்டினார் பார்வதி இருவரும் மௌனமாக இருக்க வக்காலத்து வாங்கும் சுவேதாவை அழுகை பேசவிடாமல் செய்ய அவளும் மௌனமாக இருந்தாள்.

“ஏண்டி இன்னும் ரெண்டுநாள்ள கல்யானத்த வச்சுகிட்டு இப்புடி வெயிலடிக்குற வரைக்குமா தூங்குவ; மாப்பிள்ளை வீட்டுல என்ன நினைப்பாங்க ஒழுங்கா போய் குளிடி முதல்ல” என திட்டிவிட்டு “உங்க ரெண்டுபேத்துக்கும் தனியா சொல்லனுமா வந்து காஃபி குடிங்க” என்றதும் சுவேதாவும் மலரும் கோழிபின்னால் போகும் குஞ்சுகள்போல அமைதியாக நடந்துசென்றனர். பார்வதியோ லேசாக சிரித்துகொண்டே சென்றார்.

அன்பரசியோ ஏதோ நினைவில் குளியலறைசெல்ல அந்த கதவை தட்டினாள் சுவேதா. “அரிசி குளிச்சிட்டு உள்ளயே தங்கிடுறதா முடிவுபன்னிட்டீங்களா”

“ஏன் அன்னி?” உள்ளிருந்து குரல்மட்டும் வந்தது.

“டிர்ஸ் எடுக்காம போயிட்டீங்களே அதான் கேட்டேன்.” என மூன்று செட் துணிகளை எடுத்து நீட்டினாள். “அன்னி இது எங்க அம்மாவோட பட்டு புடவைங்க!” எனறாள்.

“அட அம்மாதான் குடுக்க சொன்னாங்க எனக்கு தெரியதுப்பா” என ஓடிவிட்டாள்.

ஐயோ அவர் நினைப்புல டிரஸ்ஸகூட மறந்துட்டேனே என தலையில் அடித்துகொண்டு அந்த திரையை விலக்க அவளுக்கு அதிர்ச்சி. “நீங்க எப்புடி இங்க” என்று அவள்கூறும் முன்னே இதழோடு இதழ் பதித்தான். அவள் அவனை தடுக்க முடியவில்லை. அப்படியே வேகமாக மூச்சினைவிட்டாள். உடலில் ஒருவித நடுக்கம். கண்கள் அகல விரிந்தன.மேலும் தன்னவளை மிக இருக்கமாக கட்டியனைத்தான்.

மங்கையவள் தன்னவளாய் மாறிய

காலம் மதிமுகம் தன்னை

கவர எண்ணி ஒழிந்தவன்

அந்த குளிர்மேனி காணுமறைதனில்!

கண்டது அவள் கார்கூந்தல்

தடுமாறிய மனதின் காதல் ரீங்காரம்

ஆசையாய் ஒரு ஓசை அனைத்தான்

அவள் செவ்விதழை

இசைந்தாள் அந்த மங்கை

இருக்கத்தில் காதலை காட்டினான்!

காந்த விழியழகி ஈர்த்தாள் அவன் காதலை

அவனை தள்ளிவிட்டு வெட்கி

தலைகுணிந்து நின்றாள்.”

“சந்துரு என்ன பன்ற முதல்ல வெளிய போ” என்றாள் அவனோ சிரிக்க மட்டுமே செய்தான்.

“அம்மாவ கூப்பிட்டுவேன்” என்றாள் வெட்கத்துடன்

“சரி கூப்பிடு” என்று கைகட்டி அவள் அழகை ரசித்துகொண்டு நின்றான்.

“நான் குளிக்கனும் நீ போ” என்று சினுங்கினாள்.

“நான் குளிக்க வைக்குறேனே” என அவள் கன்னத்தை கிள்ளினான்.

“அம்மா திட்டுவாங்க நீங்க போங்க” என்று தலைகுனிந்தவாறே கூறனாள்.

“அப்போ எனக்கு நீச்சல் சொல்லிகுடு” என்று உதட்டை தடவிடானான்.

அவள் உதட்டு அசைவில் அவளுக்கு இருந்த வெட்கம் புரிந்தது. “கல்யானத்துக்கு அப்புறம்தான்” என்றாள்.

“சரி கல்யானத்துக்கு அப்புறம் நீ குடு இப்போ நான்” என மீண்டும் அவனருகில் வர அங்கிருந்த தண்ணீரை முகந்து அவன்மீது ஊற்றினாள். அவனும் கானலாக தண்ணீரில் மறைந்தான்.

கல்யான கலை நாணம்

ஆசை மையல் கொண்டது

அவன்மீது திருடன்

திருடுகிறான் இவளை கனவில்

கள்ளமுத்தம் அவனாக தர ஆசை

காமமில்லா காதல் அரவனைப்புக்காக

ஏங்கும் காதலி கலை கல்யானகலை

கானலாக மறைந்தான் கள்வன்

“என்ன அண்ணி யாருகூட பேசிகிட்டு இருக்கீங்க; கல்யானத்துக்கு அப்புறம் என்ன குடுக்க போறீங்க என அண்ணாவுக்கு” என்று கேலியாக கூறினாள். அவள் இன்னும் அங்கிருந்து போகவில்லை.

“இல்ல அன்னி சும்மா பாட்டு பாடிட்டு இருந்தேன்” என சமாளித்தாள் வெட்கி நாவை கடித்த பிறகு.

“ஆமா நாங்க பிறந்ததுல இருந்து பாட்டே கேட்டதில்லைல நல்லா சமாளிக்குறீங்க அரிசி சரி சீக்கிரம் வாங்க இன்னும் ஒரு நாளைக்கு அண்ணாவ பாக்க முடியாது. இப்போ வந்தா ஒருதடவ பாத்துகலாம்” என்றாள்.

அப்போதுதான் அன்புக்கு நேரத்தின் முக்கியதுவம் தெரிந்தது. அவனை ஒருமுறை பார்க்க நினைத்து வேகமாக தண்ணீரை ஊற்றினாள். அந்த நீரும் அவளை ஏக்கமாக பார்த்தது.

அவசரமாக வெளியே வந்தாள். ஆனால் அவளுக்காக காத்திரிந்தது மலர் மட்டுமே. அனைவரையும் தேடினாள். “என்னடி தேடுற” இது மலை.

“எல்லாரும் போயிட்டாங்களா”

“ஆமாடி போயிட்டாங்க உனக்கு துனையாதான் என்ன இருக்க சொன்னாங்க” என்றாள் அந்த ஆப்பிளை கொறித்துகொண்டே. அன்பின் முகம் சோகமாக மாறியது. வேகமாக ஓடிசென்று கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

அப்போது அங்கு வந்த மலர்விழி அன்பின் கைபேசியை எடுக்க ஏக்கமாக பார்த்தாள் அன்பு. “மலர் கொஞ்சநேரம்டி ப்ளீஸ்” என்றாள்.

“ஐயோ ஆத்தா உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். பேசாம இரு அன்பு” என்றாள்.

“பத்துநிமிசம்டி” என கெஞ்சினாள். தனக்காக எதையும் செய்யும் தோழி சகோதரி இப்படி சோகமாக கெஞ்சுவதை மலரால் தாங்க முடியவில்லை. இருந்தாலும் ஊரின் கட்டுபாட்டை மீறமுடியவில்லை. ஓர் பாச போர் நிகழ்ந்தது.

“சரிடி நான் ஃபோன வச்சுருக்கேன் அவகளா பத்துநிமிசத்துல கால் பன்னா தரேன் இல்லைனா இல்லை” என்று அவளருகில் அமர்ந்தாள்.

தாத்தாவின் வீட்டில் வைத்து ஊர்கூடி சம்பிரதாயங்கள் துவங்கின. இது மாப்பிளைக்கு காப்ப்புகட்டும் தினம். திருமனத்திற்கு 45 நாட்கள் முன்னால் செய்ய வேண்டிய சம்பிரதாயம். இதுவே மாப்பிளை வெளியூர் என்றால் ஒருதினத்திற்கு முன் காப்பு கட்டிவிடுவர். அதில் விரதம்வேறு மேற்கொள்ள வேண்டும் அதிலும் கடுமையானது இல்லை கொடுமையானது என்னவெனாறால் பொண்ணும் பையனும் காப்பு கட்டியபிறகு பார்க்கவோ பேசிகொள்ளவோ கூடாது.

அன்பரசி ஃபோனை பார்த்துகொண்டே இருந்தாள். அவளுக்கு அழுகை வந்தது. “ஏய் அன்பு ஏண்டி அழற ஒருநாள்தானடி நானும்தான் அவரை பாக்காம 45 நாள் இருந்தேன் தெரியுமா” என சமாதானபடுத்த முயன்றாள்.  ஆனால் முடியவில்லை.

“என்னடா சொல்ற” பதறினான் சந்துரு.

“ஆமா மச்சி ரொம்ப கஷ்டபட்டு கண்டுபிடிச்சேன் ரெண்டு கிளவிங்க பேசிகிட்டு இருந்துச்சுங்க”

“ஐயோ இருடா நான் அன்புகிட்ட பேசிட்டு வந்துடுறேன்”

“உன் மொபைல உங்க மாமாதான் வச்சுருக்காரு பாரு” என அவன் கூற அது போஸின் அருகில் இருந்தது.

“சரிடா பாலு ஒன்னு பன்னு! நீ எனக்கு ஃபோன் பன்னி சந்துருட்ட முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்லு” என்றான்.

அதற்குள் போஸ் சந்துருவை அழைத்து. “இந்தாங்க மாப்பிள்ளை அன்புகிட்ட எதுன்னா பேசனுமனா பேசிக்கோங்க இனி கல்யானத்துக்கு அப்புறம்தான்!” என குடுத்துவிட்டு “யாருகிட்டயும் சொல்லாத்தீங்க ஏதோ பிசினஸ் பேசுற மாதிரி வெளிய போய் பேசுங்க” என்றார்.

உடனே வெளியில் உயிரில்லாத ஃபோனை எடுத்து காதில் வைத்துகொண்டு கிளம்பினான். வெளியில் வந்ததும் கான்டக்டில் தேட நேரமில்லாமல் வேகமாக தட்டினான். தன் இதயத்திலிருந்து வந்த எண்களை.

அன்பரசி ஏக்கமாக பாத்துகொண்டிருக்க அடித்தது காதல்மணியோசை.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 30ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 30

30 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷின் குழப்பத்திற்கான பல பதில்களை தரப்போகும் அன்றைய நாள் அழகாய் விடிய 10 மணிக்கு மேல் மெதுவாக கண் விழித்த ஆதர்ஷ் முதல் பார்த்த காட்சி, பாடலை முணுமுணுத்துக்கொண்டே ஜாலியாக அனைத்து பொருட்களையும் ஒதுங்க

உள்ளம் குழையுதடி கிளியே – 27உள்ளம் குழையுதடி கிளியே – 27

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பகுதி உள்ளம் குழையுதடி கிளியே – 27 படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் மகிழ்வேன். அன்புடன், தமிழ் மதுரா.

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09

அத்தியாயம் – 09   தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு