Tamil Madhura கவிதை ஏக்கங்கள் (கவிதை)

ஏக்கங்கள் (கவிதை)

longing

 

ஏக்கங்கள்

வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ?
என்ற பூவின் ஏக்கம்
தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும்
வண்டின் ஏக்கம்
மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ?
என்ற நிலவின் ஏக்கம்
தாவித் திளைக்காமல் என்றாவது அமைதியாக உறங்குவேனா ?
என்ற கடலின் ஏக்கம்
கோடையில் நிழலுக்கான ஏக்கம்
குளிரில் வெப்பத்திர்க்கான ஏக்கம்
மாலையில் மறைந்து விடுவேனோ ?
என்ற சூரியனின் ஏக்கம்
எப்போது தன்னை அழிப்பார்களோ ?
என்ற மரங்களின் ஏக்கம்
இரையாக மீன் கிடைக்குமா ?
என்ற கொக்கின் ஏக்கம்
தன் இருப்பிடம் விட்டு வெளிவந்தால் இரையாகி விடுவேனோ?
என்ற மீனின் ஏக்கம்
தன் இருப்பிடமே எதுவென அறியாமல் சுற்றித் திரியும்
பல பிஞ்சு உயிர்களின் ஏக்கம்
காலை எழும்போதே பள்ளி விட்டு வீடு திரும்பும் –
நேரம் கேட்கும் மழலையின் ஏக்கம்
என்றாவது பள்ளி செல்வோமா?
என்ற குழந்தைத் தொழிலாளர்களின் ஏக்கம்
சம்பாதித்த செல்வம் பாதுகாப்பாக இருக்குமோ ?
என்ற பணக்காரர்களின் ஏக்கம்
என்றாவது செல்வம் சேருமா ?
என்ற பாமரர்களின் ஏக்கம்
குடும்ப பொறுப்பு என்றாவது தீருமா ?
என்று பெற்றோர்களின் ஏக்கம்
பெற்றோர்கள் தங்களிடம் மனம் விட்டு பேசுவார்களா?
என்ற குழந்தைகளின் ஏக்கம்
பேரகுழந்தைகளின் நினைவுகளோடு
முதுமையை முதியோர் இல்லத்தில்
கழிக்கும் முதியோர்களின் ஏக்கம்

இந்த அனைத்து ஏக்கங்களும்
என்றாவது தீருமா?
மனிதர்கள் முற்றிலும் மகிழ்வடைவர்களா?
இவ்வுலகம் அனைத்தும் பெற்று நிறைவடையுமா ?
என்ற கடவுளின் ஏக்கம்
தெய்வமே அறியாத் தேடல்கள் இவை
மாற்றங்கள் மாறாதது – கீதை சொன்ன பாடம்
ஏக்கங்கள் தீராதது – வாழ்க்கை உணர்த்தும் பாடம்
வாழ்கையில் தேடலும் எதிர்பார்ப்பும் வேண்டும்
இதுவே நம் முன்னேற்ற பாதையின்
முன்னோடியாக அமையும்
கிடைக்குமா என ஏங்குவதை விடுத்து
கிடைக்கும் என நம்பிக்கையோடு
முயற்சிசெய்து எதிர்பார்த்து இருப்போம்
காலம் கைகூடும்
கனவுகள் நனவாகும்

~ஸ்ரீ !!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

தஞ்சம் வரவா?!!   விழியைத் திருப்பி என்னைப் பாரடா எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ? என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ? சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட மலர்களைக்

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே இரவிலும் வானவில் தோன்றுதே என்னுள் பூத்த பூவொன்று வாழ்வில் வாசம் வீசுதே உள்ளங்கையில் புதிதாகக் காதல் ரேகையும் தோன்றுதே வெயிலிலும் ரகசியமாய் மழைச்சாரல் என்னை நனைக்குதே உன்னிடம் மட்டுமே சொல்லிட கதைகள் கோடி உள்ளதே உனக்காக மட்டுமே

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதைகமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை இந்த உலகம் வாய்ப்புகளால் சூழப்பட்டது இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை போராடத் துணிந்த எவருக்குமே பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டிருக்கிறது தகுதியுள்ள எவருக்கும் உதவிக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்றன அத்தனைக்கும் தேவை “நான் வாழ வேண்டும்;