Tamil Madhura Uncategorized அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

[youtube https://www.youtube.com/watch?v=GWYq0zUwLts?rel=0&w=560&h=315]

 

காவிரிபோல் வளர்வோம் 

அரோகரா 

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்

கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அங்கு
கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்.

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று பணிந்திடுவோம்
பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!

ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்-சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் – கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு – இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் – அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!

கவியரசு கண்ணதாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 12ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 12

12 – மனதை மாற்றிவிட்டாய் சிறிது நேரத்தில் ஆபீஸ் கிளம்பி ரெடியாக சாப்பிட வந்தவன் அம்மா அப்பாவிடம், இந்த சம்பந்தத்தை பற்றி கூறினான். அவர்களுக்கு முதலில் ஆச்சரியமா அதிர்ச்சியா என பிரிக்கமுடியாத கலவையான உணர்வு. பின்பு முதலில் தெளிந்தவர் சந்திரசேகர் தான்.

சிதம்பரம் அவர்களின் பயணக் கட்டுரைசிதம்பரம் அவர்களின் பயணக் கட்டுரை

கோடை என்றவுடன் குழந்தைகள் போல குதித்தாடுது மனசு இனிமை இடம் தேடி பயணம் செல்ல..        சுற்றுலா செல்வதே இன்பம். அதைச் சொல்வது என்றால் அது கொள்ளை இன்பம் அல்லவா. அதற்கு வாய்ப்பளித்த தமிழ் பிஃஷ்சனுக்கு நன்றி.    

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 38ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 38

38 – மனதை மாற்றிவிட்டாய் திவியும், அர்ஜுனும் அறியாத விஷயம் இவர்களின் உரையாடலை மேலும் இருவர் கேட்டதுதான். ஒன்று சுந்தர், மற்றொருவர் ஆதி. புது ப்ராஜெக்ட் கன்பார்ம் ஆயிடிச்சு. அதுக்கு நேர்ல ஒன்ஸ் பாத்து பேசிட்டா நெக்ஸ்ட் கிளைண்ட் கிட்ட டெமோ