Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22

உனக்கென நான் 22

மடியின் மீது ஏறிகொண்டு பிரியாவோ “அம்ம” என்று இவளை அழைக்க உணர்ச்சிமிகுந்தவளாய் பிரியாவை தூக்கி முத்தமிட்டாள் பின் அனைத்துகொண்டாள். பின் மீண்டும் டைரியை (அல்ல) நினைவுகளை புரட்டினாள்.

சந்துருவின் அருகில் வந்த அரிசியோ “டேய் சந்துரு ஓடுடா” என கத்த ஏன் என்று புரியாமல் விழித்தான். அப்போதுதான் கவனித்தான் அங்கு பார்வதி கையில் இரண்டங்குல நன்கு விளைந்த மூங்கில் குச்சியுடன் வந்தார். அதற்குள் இரண்டு தோழிகளும் காற்றில் கரைந்து மறைந்தனர். “என்னடி ஓடுறையா எப்புடி இருந்தாலும் வீட்டுக்குதான வரணும் வா உனக்கு இருக்கு உனக்கு” என திட்டிக்கொண்டே தண்ணீரில் நின்ற சந்துருவின் அருகில் வந்தார். “நீ எதுக்குபா சந்துரு தண்ணீல இறங்குன” என கேட்க “இல்ல அத்த வழுக்கி விழுந்தும் டேன்” என அரிசியை காப்பாற்றினான்.

“சரி வா” என அவனை தூக்கியவர் தன் முந்தானையால் தலையை துவட்டி விட்டார். “இனிமே தண்ணீல விளையாடகூடாது சரியா ” என பார்வதி கூறவே தலையாட்டினான். ஆனாலும் தன் இரண்டாவது அன்னை நீச்சல் கற்றுதருவதாக சொல்லியிருக்கிறாள் அல்லவா.

சந்துருவை வீட்டிற்கு அழைத்துவந்து தலையை துவட்டி உடையை மாற்றிவிட்டார் பார்வதி. பின் அன்பரசிக்காக வாங்கி பீரோவில் அடுக்கபட்டிருந்த பொம்மைகள் தரையிறங்கின சந்துருவுக்காக. “அவளுக்கு பொம்மைய வாங்கிகொடுத்தா ரெண்டே நாள்ல உடைச்சிடுவா இந்த நீ விளையாடுப்பா” என எடுத்து நீட்டினார் பார்வதி. அதை வேறு வழியில்லாமல் வாங்கிகொண்ட சந்துரு ஒரு கார்பொம்மையை எடுத்து விளையாட ஆரம்பித்தான்.

அதற்குள் சமையலறையில் மசால் தடவி எண்ணெயில் பெரிக்கபட்ட கோழிகளும் ஆட்டின் ரத்தபொறியலும் கறிகுழம்பும் தயாராகி வீட்டையே நிரம்பின. அந்த வாசம் துறவிகளையும் எச்சில் ஊறவைத்து இழுத்துவரும் அளவிற்கு இருக்கும். பார்வதியின் கைபக்குவம் அப்படி போன பிறவியில் நிச்சயமாக சமையல் கலை வல்லுநராக பிறந்திருப்பார்போலும் இல்லை இல்லை அரிசியின் பாட்டி கொடுத்த பயிற்ச்சி அப்படி.

சூடாக இறக்கபட்ட ரத்தபொறயலை ஒரு தட்டில் வைத்து அதன் உஷ்னத்தை குறைத்தார் பார்வதி. பின் “சந்துரு ” என அழைக்க “உர்ர்ர்” என காரினை ஓட்டிகொண்டே உள்ளே வந்தான். “இந்தா சாப்பிடு” என பார்வதி கொடுக்க ஒருவாய் எடுத்து வாயிலிட்டான். “இது என்னது அத்த” என கேட்க “ரத்தபொறியல்ப்பா” என பார்வதி கூறியதுதான் தாமதம் உடனே ஓடிச்சென்று வாந்தியெடுத்தான். அவன் பின்னாடியே ஓடி வந்த பார்வதி “என்னப்பா ஆச்சு” என பதறினார்.

“இல்ல நான் கறி சாப்பிடமாட்டேன்” என சந்துரு கூற தன் கல்யாணத்தில் இலையில் கறியை வைத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்த காவேரியின் முகம் கண்முன்னே தோன்ற கண்களில் கண்ணீரும் உதட்டில் சிறிய புன்னகையும் தேன்றியது.

“அவதான் சுத்த சைவம்னாலும் பிள்ளையையும் அப்படிதான் வளத்துவச்சுருக்கா” என மனதினுள் திட்டிக்கொண்டே சந்துருவின் முகத்தை கழுவினாள்.

ஆம் காவேரி காதல் திருமணம் செய்ததால் அவளது வீட்டு சொந்தங்களே அவளை ஒதுக்கிவைத்தன. இருந்த ஒரே சொந்தம் தன் கனவன் சன்முகம் மட்டுமே சிறிது பணக்காரர் என்றாலும் சொந்தங்களில் அவர் மதிப்பெண் குறைவுதான். சன்முகத்திற்கு ஆறுதல் போஸ் மட்டுமே.

போஸிற்கும் அன்று திருமனம் தன் அத்தை மகளுடன்(பார்வதி). இது அரேஞ்ச் மேரேஜ் மாதிரி தெரிந்தாலும் லவ் மேரேஜ்ங்க. அப்போது உறவுகளால் கைவிடபட்ட தம்பதிகளாய் இருந்த காவேரியும் சன்முகமும் ஜோடியாக கலந்துகொண்ட விசேசம் போஸ் பார்வதியின் திருமணம்தான்.

“டேய் ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டு போடா” என போஸ் மிரட்டிகெண்டிருந்தார். அந்த நேரம் சிரிங்கசார் என பழைய ஃபிலிம் கேமிராவைகொண்டு ஒருவர் நின்றுகொண்டிருக்க சற்று பெரிய விசேசம்தான்.

“டேய் இல்லடா வயிறு ஃபுல்லா இருக்குடா நாங்க இன்னொருநாள் கன்டிப்பா வந்து சாப்பிடுறோம்டா” என சன்முகம் போஸின் காதில் கிசுகிசுத்தார்.

“நீ சரிபட்டு வரமாட்ட தங்கச்சி சாப்பிட்டுபோங்க இல்லைனா நான் இவன்கூட பேசமாட்டேன் பாத்துக்கோங்க”என போஸ் கூறவே காவேரியோ சன்முகத்திடம் கெஞ்சுவதைபோல முகத்தினை வைத்துகொள்ளவே சன்முகம் சம்மதித்தார்.

பின் இருவரும் பந்தியில் அமர சாதமும் பின் இறைச்சிகளும் வைக்கபட்டன. அதை காவேரி கவனிக்கும் முன் ஒரு இளைஞன் காவேரியை கடந்து மூன்று இலைகள் தாண்டி சென்றிருந்தான்.

காவேரியோ செய்வதறியாது திகைத்தாள். “ஏங்க ” என சன்முகத்தை அழைக்க சன்முகமோ கையில் ஒரு எலும்பை வைத்துகொண்டு “இதுக்குதான் நான் அப்போவே சொன்னேன்” என காவேரியின் முகத்தை சோர்வாக பார்த்தார். இவளது முகத்தை தூரத்தில் இருந்து கவனித்துவிட்டார் பார்வதி. பின் போஸின் காதில் ஏதோ கிசுகிசுக்க அடுத்த நிமிடம் காவேரிக்கு வேறு இலைகள் விரிக்கப்பட்டு சுவையான ரசம் பரிமாறப்பட்டது.

பின் புதுதம்பபதிகளிடம் இருவரும் வரவே “என்ன அன்னி நீங்க சைவம்னு எனக்கு தெரியாது” என பார்வதி கூறினாள். “இல்லங்க பரவாயில்லை” என காவேரி கூறவே.

“காவேரி பத்தி இவங்களுக்கு ஏற்கனவே தெரியுமா” என சன்முகம் போஸிடம் கேட்க “அத ஏன் அண்ணா கேக்குறீங்க எப்போ பாத்தாலும் உங்கள பத்திதான் பேச்சு இவருக்கு” என பார்வதி போஸை இழுத்துவிட்டாள். “அதுசரி” என சன்முகம் நக்கலாக கூறினார்.

“இதுக்கே இப்புடி சொல்றீங்க உங்க கல்யாணத்துக்கு நடந்த கூத்துஇருக்கே” என பார்வதி போஸை பார்த்து சிரித்தாள்.

“என்னமா சொல்ற என் கல்யாணம் வரைக்கும் தெரியுமா” என வியந்தார். “ஆமான்னா நான் இவர் சொன்னதகேட்டு அழுதேன் அப்போ இவரு சொல்றாரு இங்கபாரு எனக்கு நீயா இல்லை என் நண்பனானு ஒரு சூழ்நிலை வந்துச்சுனா நான் நண்பன்தான்னு சொல்லுவேன் அப்புடின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு. உசுர கையில பிடிச்சுகிட்டு இருந்தது எனக்குதானே தெரியும்” என பார்வதி பெருமூச்சு விட்டார் அந்த கல்யானகோலத்தில்.

அதற்குள் தம்பதிகளின் செல்ல விளையாட்டுகள் ஏற்பாடு செய்யபடவே “சரிடா நாங்க கிளம்புறோம்” என சன்முகம் கூற “இருடா அப்புறம் போகலாம் ” என போஸ் தடுத்து பார்த்தார். “அங்க பாருடா அவள ஒரு பயத்துலேயே இருக்கா அதான் சொல்றேன்” என சன்முகம் தன் மனைவியை காட்டிசொல்ல. “நீங்க போய்ட்டுவாங்க அண்ணா கன்டிப்பா இன்னொரு நாள் வரனும்” என பார்வதி வழியனுப்பி வைத்தார்.

அதிகம் யாருடனும் பேசாத குணம்.அடுத்தவர் விருப்பத்திற்காக எதையும் விட்டுக்கொடுக்கும் மனம். பார்த்தவுடன் மனதை கொள்ளை அடிக்கும் முகம் என காவேரியை அப்படியே உரித்து வைத்திருந்தான் சந்துரு.

மனதில் ஓடிய காட்சிகளில் இருந்து வெளியே வந்த பார்வதி சந்துருவுக்கென தனி உணவுகளை தயாரிக்க துவங்கியிருந்தாள்.

அதற்குள் வெளியே ஒரு உருவம் அங்கிருந்த வேப்பமரத்தை பிடித்துகொண்டு நின்றிருந்தது. முழுவதும் ஈரமாக இருந்த அந்த உருவம் அரிசிதான். பார்வதியின் கைபக்குவ வாசனை அவளை இழுத்துவந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

மந்திரவாதிபோல அடுத்த நொடி சற்று அருகில் வரவே சந்துரு அதை கண்டுகொள்ளாமல் தனக்கு கிடைத்த காருடன் கனவுலகில் பயனித்துகொண்டிருந்தான். அதற்குள் அந்த உருவம் வாசலின் அருகே வந்து நிலையை பிடித்துகொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துகொண்டது.

“உள்ள வந்த தோள உறிச்சுபுடுவேன்” என பார்வதியின் ஓசை சமையலறையிலிருந்து வந்தது. ஆனால் அரிசியோ தன் பொம்மை சந்துருவிடம் இருப்பதால் அதை மீட்க எல்லைதாண்டமுடியாமல் தவித்தாள்.

மீண்டும் தலையை குணிந்துகொண்டே கால்களால் அந்த கல் படிக்கட்டுகளில் கோலமிட்டாள் கதவின் நிலையில் சாய்ந்துகொண்டே. அவள்மீதிருந்து நீர் சொட்டிகொண்டிருக்க அவளை பார்த்தான் சந்துரு. “அத்த அரிசி.” என இழுத்தான்.

“சந்துரு அவகிட்ட பேசாத உன்னையும் கெடுத்துடுவா ” என பார்வதி பொறிய சந்துரு செய்வதறியாது தினறினான்.”அம்மா ” என இழுத்தாள் அன்பரசி. “என்னடி அம்மா. உன்னை குளத்துக்கு போககூடதுன்னு சொல்லிருக்கேன்ல இரு அப்பா வந்தவுடனே உன் காலை ஒடிக்க சொல்றேன். சந்துருவையும் தண்ணீல தள்ளிவிட்டுருக்கீங்க” என பார்வதி கூறவே.

அன்பரசயின் மனதில் ‘தள்ளிவிட்டாங்களா யாரு’ என நினைத்தாள். பின் சந்துருவை பார்க்க அவன் அமைதியாக இருந்தான். “அந்த தயிர்கார பொம்பளை பாத்துட்டு சொல்லுச்சு அதான்டி ஓடி வந்தேன் இனி தண்ணில விளையாடுறத பாத்தேன் அப்புடியே முக்கி கொண்ணுபுடுவேன்” என பார்வதி பொறிந்து கொண்டிருந்தார் சட்டியில் இருந்த கடுகுகளும் இசைந்தன பார்வதியின் கோபத்திற்கு.

“அம்மா பசிக்குதும்மா” என அடுத்த ஆயுதத்தை பயன்படுத்தி பார்த்தாள். “உனக்கு இன்னைக்கு சாப்பாடு கிடையாதுடி” என கேடயமிடபட்டது.

சிறிது நேரத்திலேயே சந்துருவுக்கு சூடான தோசைகள் வைக்கப்பட்டு தக்காளியும் மிளகாயும் சேர்த்து தாளிக்காமல் இடப்பட்ட சுவையான சட்டினியும் பறிமாற படவே. அவன் சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். அன்பயரசிக்கோ நாக்கு நாட்டியமாடியது.

“அத்த அரிசியும் சாப்பிடட்டும் ” என சந்துரு உண்ணாவிரதம் போல அமைதியாக இருந்தான். அதற்குள் அன்பரசிக்கு தட்டில் விருந்து ரெடியாக இருந்தது.  “போய் டிரஸ் மாத்திட்டு வாடி ” என பார்வதி கூறவே. குடுகுடவென உள்ளே ஓடி வந்தாள். அப்படியே சமையலறைக்குள் புகுந்தவள் தட்டை எடுத்துகொண்டு ஓடினாள்.

“ஏய் உன்னை டிரஸ் மாத்த சொன்னேன் ” என பார்வதி பின்னாலயே அரிசியை அடிக்க வர அவளோ சந்துருவின் முன்னால் அமர்ந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.

வெளியிலிருந்து போஸும் உள்ளே நுழைய பார்வதி அமைதியாக திரும்பசென்றார்.

“ஏன்டா நீ கறி சாப்பிடமாட்டியா” என அரிசி தன் முத்துபற்களால் ஒரு கோழியின் காலை கடித்து கொண்டே கேட்க “எங்க அம்மா சாப்பிட மாட்டாங்க அதான் நானும் சாப்பிடமாட்டேன்” என சந்துரு சோகமாக கூறவே. பார்வதியும் போஸும் அப்படியே சிலையாக நின்றனர்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 4கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 4

அவளது காதலை நிராகரிக்க தகுந்த காரணம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தான் விஷ்ணு. அங்கு அவனை எதிர்பார்த்து ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் கவிதா. “வா மாமா உனக்குத்தான் வெயிட்டிங்“ “ஏன்?” “இன்னைக்கு இரவோட அந்த முன்றுமாதம் முடிய போகுது“ “ஆமாம் முடிய

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7

‘இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுகிறாள்‘ என குழப்பத்துடன் கைபேசியை கீழே வைத்தான் விஷ்ணு. இரண்டு பெண்களின் மத்தியில் தன் மனது படும்பாட்டை எண்ணியவனின் மூளையில் ரத்தவோட்டம் வேகமாக பாய எண்ணங்கள் வலையாக பின்னின. அவனது எண்ணங்களை அவனால் அடக்க

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 30ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 30

30 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியிடம் வந்த மதியும், அர்ஜுனும் “ஏன் டா, அம்மாகிட்ட கத்திருக்க…. எனக்கு வேற மெஸேஜில திட்டி அனுப்பிச்சிருக்க. ஆனா அவ வந்ததும் ஒன்னுமே சொல்லாம அனுப்பிச்சிட்ட?” ஆதி சிரித்துக்கொண்டே “டேய் அவ ஆத்துக்கு போயிருக்கான்னு தெரிஞ்சதுமே