Tamil Madhura தொடர்கள் கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதி

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதி

இரண்டு வருடங்களுக்கு பிறகு

ம்மியமான மாலைப் பொழுது கடற்கரையோரமாக இருந்த தனது வீட்டில் நின்றுகொண்டு கையில் காஃபியுடன் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு.

என்ன ஒரு அழகான காட்சி சூரியப் பந்து தனது சுடும் கதிர்களை நீரில் நனைத்தது மறுநாள் புத்துணர்ச்சியுடன் உதிப்பதற்கு ஆயத்தமாகும் தருணம்தான் இந்த மாலைப்பொழுது. விஷ்ணுவின் வாழ்க்கையில் இந்த மூன்று வருடத்தில் நிறையவிசையங்கள் மாறிவிட்டன.

வேண்டாம் என்று கூறியும் இது ராஜகட்டளை என முனியன் கொடுத்த தங்கத்திலிருந்து கிடைத்த பணத்தை வைத்து பெரிய கம்பபெனி துவங்கியவன் வாழ்கையில் அன்றிலிருந்து ஏற்றமே

இவர்களின் புதியரக என்ஜின்கள் பல வெளிநாடுகளில் மிகவும் தேவைப்படவே அதையும் தயாரித்து அனுப்பிகொண்டிருந்தான். ரம்யாவும் விஷ்ணுவும் சேர்ந்து வடிவமைத்த என்ஜின் தான் அது

சொல்ல மறந்துவிட்டேன்விஷ்ணுவுக்கு இருக்கும் தற்போதைய ஒரே செல்லப் பிரச்சனை ரம்யா தான். அதிலும் அவளுக்கு சமைக்க தெரியாது என்பதால் விஷ்ணுவின் நிலைமை திண்டாட்டம்தான். கவிதாவின் சமையலே சிறந்தது என்று தோன்றும்…. பின்ன ஒரு வயது குழந்தை எப்படி சமைக்கும்

ஆம் இந்த விஷ்ணுவின் குட்டி தேவதை இந்த ரம்யா. தன்னவளின் நினைவாக இந்த பெயரை சூட்டியவள் கவிதா தான். ஆம் கவிதா தான் குட்டி ரம்யாவின் தாய்.

பால்கனியில் காஃபியுடன் நின்றிருந்தவனை நோக்கி ஓர் சத்தம்ஏன் மாமா இன்னுமா அந்த காப்பியை குடிக்குறீங்க

அதன் இறுதித்  துளியை உறிஞ்சினான். வழக்கம்போல் அது ஆறாவது சுவையான வெப்பத்தை இழந்திருந்ததுசூரியனும் கடலுக்குள் தன்னை அமிழ்த்தி கொண்டது சூரியன்.

ரம்யாவின் நினைவு வரும்போது இந்த அந்தமான் தீவில் உள்ள இவர்களது வீட்டிற்கு வந்துவிடுவார்கள் விஷ்ணுவும் அவனது மனைவி கவிதாவும்.

கவிதா நமக்கு குழந்தை பிறந்து இரண்டு மாசம் ஆகிறுச்சு.. இன்னும் பெயர் வைக்கலை என்ன பெயர் வைக்கலாம்

அதிலென்ன சந்தேகம் ரம்யா…” என அவள் கூற அவளது உடன்பிறவா சகோதரியின் மீது அவளுக்கு இருக்கும் அன்பு புரிந்தது விஷ்ணுவிற்குஇது விஷ்ணுவின் மீது இருக்கும் காதலால் ஏற்பட்ட அன்பு…. விஷ்ணுவிற்கு பிடித்தவை எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்தினாள் கவிதா.

சரி அப்போ நாளைக்கே பெயர் வச்சுடலாம்

அப்போ நாளைக்கு அந்தமான் போறோமா

இல்லை கவிதாஇங்கேயேதான்என ரம்யாவை பற்றிய நினைவை தவிர்க்க நினைத்தான் ஆனால் அவள் உயிரோடு ஒன்றியவள் என்பதால் அது இயலாத காரியம் என்று விஷ்ணுவின் மனது அறியும்.

அது முடியாது மாமாஅக்காவோட காற்று நம் குழந்தையின் மேலே படணும்

முதல்முறையாக தனக்கென்று ஒரு விசயம் கேட்கிறாள் கவிதா விஷ்ணுவின் மனைவியாக. அதனால் அவனால் மறுக்க முடியவில்லை உடனே கிளம்பினர் இந்த வீட்டிற்கு. மறுநாள் பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்கு அந்த வீடு ஆயத்தமாகிகொண்டிருந்தது கவிதாவின் சேவையால்

இத்தனை வேலைகாரங்க இருந்தும் ஏன் நீ எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யுறஎன காலியான காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு கேட்டான் விஷ்ணு.

அதை வாங்கியவள்சில வேலைகளை நம்மதான் செய்யனும் அதில்தான் இன்பம்

எப்படி எனக்காக வேற யாரையும் சமைக்கவிடாதது அந்த மாதிரியா

ம்ம் உங்களுக்காக என்ன வேணாலும் செய்வேன்

ஆனா கவிதா இந்த இட்லியை மட்டும் ஏன் கல்லு மாதிரி செய்யுற“…. கவிதாவின் சமையலில் குறைகூற தேவர்களாலும் முடியாது இருந்தாலும் அவளை சீண்டி பார்த்தான்.

கல்லு மாதிரியா இருக்குஎன முகத்தை சோகமாக சுருக்கினாள்.

ஆமா இப்படியே சமைச்சு கிட்டு இருந்தேன்னாஎன் LIC சீக்கிரமே உனக்கு கிடைச்சுடும்என கூறி முடிக்கும் முன் அவனது வாயைப்  பொத்தினாள் ஆனால் அவளது கண்ணில் நீர் தேங்கியது தெரிந்தது.

அப்படி எப்பொழுதும் பேசாதீர்கள் மாமா.. நீ இறந்ததுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன செய்ய போகிறேன்என ஒரு துளி கீழே சிந்தியது.

இவள் பணத்திலேயே புரண்டு வாழ்ந்தவள் என்றாலும் அந்த செருக்கு மனதில் துளியும் இல்லைமாறாக மிகவும் மென்மையாக இருக்கிறாள். தன்னவன் ஊடலை விரும்புகிறான் என்றாலும் பொய்யாக கூட அவனை திட்ட விரும்பாமல் தன்னையே காயப்படுத்திக்  கொள்கிறாள்.

இதை புரிந்த விஷ்ணு அவளை சமாதானம் செய்யஏண்டி ஒரு இட்லிக்கா இவ்வளவு கண்ணீர்

“….” கண்ணீர் கலந்த சிரிப்பு

சத்தியமா நல்லா தாண்டி இருந்ததுநான்தான் பொய் சொல்லிட்டேன்

ம்ம்கண்ணீர் நிற்கவில்லை.

வேணும்னா உன் சமையலுக்காக ஒரு பரிசு தருகிறேன்

லேசாக நிமிர்ந்தவளின் பார்வைஎன்ன அதுஎன்பதுபோல தோன்றியது விஷ்ணுவிற்கு.

அதை உதட்டில்தான் தரவேண்டும்என தனது உதட்டை தடவினான்.

சீ போ மாமா கீழே வேலைகாரங்க இருக்காங்கஎன ஓட முயன்றாள்.

அவளது கையை பிடித்தவன் அவளை பின்னால் இருந்து அணைத்து காதோரமாக முத்தமிட்டான். அவளது கையிலிருந்த செராமிக் காஃபி டம்ளர் கீழே விழுந்து நொருங்கியது.

அவளது கரிய கூந்தல் களை விலக்கியவன் கழுத்தில் இதழ் பதிக்க அவளோ  நெளிந்தாள். லேசாக புன்னகை செய்தவன் அவளை அப்படியே தூக்கினான்.

என்னடி வெயிட் கம்மியா ஆகிட்ட

ம்ம் என்னையும் உங்க பொண்ணையும் சேத்து தூக்கினப்ப வெயிட்டா இருந்திருப்பேன்இப்போதான் அவள் என்கிட்ட இருந்து குதிச்சு உங்ககிட்ட வந்துட்டாளேஎன வயிற்றை தடவினாள்.

சரி அடுத்து மறுபடியும் வெயிட் இன்கிரீஸ் பன்னலாமா

ச்சீ என்ன பேசற மாமா ஆளுங்க கீழே இருக்காங்க

அடிக் கள்ளி எப்பவும் அதே நினைப்பாநான் நல்லா சாப்பிட்டு வெயிட் இன்கிரீஸ் பன்ன சொன்னேன்

அவன் தப்பித்த திறமையை எண்ணிஏய் மாமா என்னையே ஏமாத்துறியா
என கள்றசிரிப்பு சிரித்தாள்.

அப்படியாஉனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேஒரு காண்டீபன் நம்ம குடும்பத்துல வந்தா நல்லதுதானே

“…..” வெட்கத்தில் கவிதா நீந்த அவளை இறக்கினான் விஷ்ணு. அவளது கன்னங்களில் கைவைத்து கொண்டு நெற்றியில் முத்தமிட்டான். அதில் அவள் மெய்மறக்க கன்னத்தில் முத்தமிட்டவன் இதழை நோக்கி இதழ்கள் பயணிக்கப்ரீத்திக்கு நான் கியரண்டிஎன குக்கர் விசிலடித்தது.

ஐயோ மாமா குக்கர்ல பருப்பு இருக்குஎன ஓடி மறைந்தாள்.

விஷ்ணுவிற்கு கவிதா எப்பொழுதும் சிறு குழந்தையாகவே தெரிந்தாள்ஆனால் இன்று அவனின் குழந்தைக்குத் தாய் ஆனாலும் இன்னும் குழந்தைபோல் மகிழ்ச்சியாக துள்ளி ஓடுகிறாள்.

அவளின் குறும்பை ரசித்துகொண்டே கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தான் விஷ்ணு.

அந்தமானிலிருந்து சென்னை வந்துசேர முழுதாக ஒரு வாரம்எடுத்தது. அது இரவு என்பதால் ரம்யாவை வீட்டில் சேர்த்தான்.

நாம் இருக்கும் வீடு பீட்டர் உடையது. ஏதேனும் போலிஸ் கேஸ் ஆகிவிட்டால்சரி இரவோடு இரவாக நமது பொருளை எடுத்துகொண்டு சொந்த ஊருக்கு போய்விடலாம்

என நினைத்துகொண்டு வீட்டினை அடைந்தான். அங்கு ஒரு வயதான பெரியவர் நின்றுகொண்டு..

தம்பி இந்தமாத வாடகை இன்னும் தரலைகரண்ட் பில் வேற கட்டலை…. இரண்டாயிரம் ரூபாய் கொடுங்கஎன்று சிரித்தார்.

கதவை திறந்த ரவி குழப்பத்துடன் நான்கு தாள்களை அவரிடம் கொடுக்க அங்கிருந்து நகர்ந்தார்.

அவன் இருக்கும் இடத்தில் எந்த சலனமும் சந்தேகமும் இல்லை. ரம்யாவின் நினைப்புடன் தூங்கி எழுந்தான். மறுநாள் அவன் எழுந்திரிக்க மூன்று முட்களும் ஏழைத்  தொட்டு கொண்டு இருந்தது.

கைப்பேசி ஒலித்தது..

ஹலோ யாருஎன மெதுவாக கேட்டான் விஷ்ணு.

ஏய் விஷ்ணு நீ லீவ் எடுத்து பத்துநாள் ஆகுது இப்போ வேலைக்கு வர்ரியா இல்லையா

சார் நீங்க

பத்துநாள்ல  முதலாளியவே மறந்துட்டியா

பீட்டர் உயிருடன் வந்துவிட்டானா?’ என விஷ்ணுவின் கண்கள் விரிந்தன.

சீக்கிரம் வந்து சேரு விஷ்ணுஇணைப்பு துண்டிக்கப்பட்டது.

குழப்பத்தில் விஷ்ணு இருக்க கருப்பனை சிறிதுநேரத்தில் கிளப்பினான்.

அசுரவேகத்தில் பயணித்தான் இதுவரை அவன் இவ்வளவு வேகமாக சென்றதில்லை. ஒரு வழியாக அலுவலகத்தை அடைய அங்கு அவனுக்கு பழக்கப்பட்ட முகங்கள் எதுவும் இல்லை.

ஆனால் அவர்கள் அனைவரும் இவனை நன்று தெரிந்தது போல் நடந்து கொண்டனர். பீட்டரை பார்க்கும் ஆர்வத்தில் அவனது அறை கதவை திறக்க அங்க தலையில் வழுக்கையுடன்..ஓர் பூதக்கண்ணாடி அணிந்து நெற்றியில் திருநீறு பூசிகொண்டு மங்களகரமாக ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.

என்ன விஷ்ணு உடம்பு சரி ஆயிடுச்சா

எனக்கு உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லலையேஎன நினைத்தவன்ம்ம்என தலையாட்டினான்.

அப்புறம் நீ டிசைன் பன்ன என்ஜின் மத்த நாட்ல ரொம்ப கேட்குறாங்க திங்க் நீ ஒரு கம்பெனி துவங்கலாம்னு நினைக்குறேன்என விஷ்ணுவும் ரம்யாவும் சேர்ந்து வடிவமைத்த கோப்புகளை காட்டினார்.

ஆனால் அதில் திவ்யா என்ற பெயர் எதிலுமே இல்லை.

அப்பறம் விஷ்ணு நான் எல்லாத்தையும் அவங்ககிட்ட பேசிட்டேன்நீ ஈவ்னிங் வீடியோ கால்ல பேசி கன்பாஃர்ம் பண்ணிக்கோ..”

என்ன நடக்கிறது என்றே புரியாத விஷ்ணுதாங்க்யூ சார்என கதவை திறந்து வெளியேற முயன்றான்.

ஒரு நிமிடம் நில்லு இந்திரவர்மாஇது அந்த வயதானவரின் குரல்.

சட்டென திரும்பி பார்த்தான். “நான் யார்ன்னனு குழப்பமா இருக்கா

என பெயர் இந்திரவர்மா இல்லைவிஷ்ணு

ஹா ஹா ஹாஅதே பேச்சுநீ குடகுநாட்டிலிருந்து கிளம்பும்போது என்ன சொனாய்

“…..” புரியாமல் விழித்தான் விஷ்ணு.

அவர் தொடர்ந்தார்

சோழன்மாறாநான் போகபோகும் பயணம் மிக பெரியது நான் நிச்சயம் திரும்ப மாட்டேன்உன்னை விட இந்த குடகு நாட்டை காக்கும் தகுதி யாருக்கும் இல்லைஎன இந்திரன் கூறவே காண்டீபனும் இந்திரனும் குடகு நாட்டிலிருந்து கிளம்பினர்.

இந்திரனின் செங்கோலை கையில் ஏந்திய சோழன்மாறன் அவர்கள் செல்வதை கண்ணீருடன் பார்த்துகொண்டிருந்தான்.

ஆம் விஷ்ணு நீ அந்த அகோரியர்களை அழிக்க இத்தனை காலம் தேவைப்படும் என நாங்கள் நினைக்கவில்லைஇருந்தாலும் நட்சத்திரங்களின் துணையால் இத்தனை ஆயிரம் வருடங்களாக உங்களின் பிறப்பை எதிர்நோக்கியிருந்தோம்இன்று எல்லாமும் முடிந்துவிட்டது…” என சண்முகமாகிய சோழன் சிரிக்க விஷ்ணு வெளியே வந்தான்.

அதன்பின் ஒரு ஆண்டு எப்படி ஓடியது என்றே நினைவில் இல்லை. தனது கம்பெனிஏற்றுமதிமீட்டிங் என வேகமாக சென்றது. ஆனால் இடையில் நடந்தது ஒரு நிகழ்வு….

தனது காரில் விஷ்ணு பயனிக்கும்போது வழக்கம்போல் சீட்பெல்ட் இல்லை…‌ அப்போது கைபேசியின் ஓசை கேட்கவே வண்டியை திடீரென நிறுத்தினான்.

அந்த வேகத்தில் அவனது தலை ஸ்டியரிங் கில் படவே தலையில் அடிபட்டு ரத்தம் வநத்து. பெரிய காயம் இல்லை.

ஹலோ யாருங்க

மாப்பிள்ளை நான் கவிதா அம்மா

சொல்லுங்க ஆன்ட்டிமரியாதையாக கூறினான்.

கவிதாவுக்கு…..” என இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வேகமாக காரை எடுத்துகொண்டு கவிதாவின் வீட்டை நோக்கி பறந்தான்.

அவனது மனதில் நேற்று நடந்த நிகழ்வு ஓடியது

மாமா மாமாஇருக்கீங்களா“- சார் என்பது மாறியிருந்தது

ம்ம் உள்ளே வா

நான் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகிட்டேன்கோல்ட் மெடலிஸ்ட்அவள் மாமா என கூப்பிடுவதின் அர்த்தம் புரிந்தது விஷ்ணுவிற்கு இது அவர்கள் ஒப்பந்தம்.

சரி அதுக்கு என்ன

இப்ப உங்களை நான் லவ் பண்ணலாம்ல

என் மனதில் ரம்யாவை தவிர யாருக்கும் இடம் கிடையாது

நான்தான் உங்களை லவ் பன்றேன் நீங்க பண்ண  வேணாம் உங்கள் நினைப்பிலேயே வாழ்ந்துவிடுவேன்என ரகசியமாக சிரித்தாள்.

இவளுக்கு என்ன பைத்தியமாஎன நினைத்தவன்இங்க பாருடி இந்தமாதிரி என்னை தொந்தரவு செய்யாதேஉன் வாழ்கையை பாருநல்ல பையனை கல்யாணம் பண்ணிக்கோஅப்புறம் என் வீட்டுக்கு அடிக்கடி வருகிற வேலையெல்லாம் வச்சுக்காதஎன தன் அறைக்குள் புகுந்து கதவை வேகமாக அடைத்தான்.

ஏன் மாமா நீ மட்டும் என் அக்காவின் நினைப்பிலேயே வாழமுடியும் என்றால் என்னால் உன்னை நினைத்துக் கொண்டே வாழமுடியாதாஎனக்  கண்ணீர் சிந்திக்  கொண்டு கிளம்பினாள்.

ஏன் இவள் இப்படி பைத்தியமாக இருக்கிறாள்என ரம்யாவின் ஓவியத்தின் முன் சென்று அழுதான். ரம்யாவின் ஓவியமோ ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தது.

விஷ்ணுவின் கார் கவிதாவின் வீட்டை அடைய அவர்கள் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக தகவல் உடனே விரைந்தான்.

அங்கு கையின் மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு மருத்துவர்கள் சூழ்ந்து நின்றனர்.

அழுதுகொண்டிருந்த கவிதாவின் தாயை பார்த்துஎன்ன ஆச்சுஎன்றான்.

நேற்றுநைட் ரூம் குள்ள போனாள்.. காலையில ஐயோ ரம்யா அக்காவிஷ்ணுன்னு  ஒரு பலத்த சத்தம் வந்ததுகையில் வெட்டிகிட்டா அதான் இங்க வந்து அட்மிட் பண்ணிருக்கோம்என அழதுகொண்டு கூற டாக்டர்கள் வெளியே வந்தனர்.

உள்ளே சென்ற விஷ்ணுவை பார்த்த கவிதா லேசாக புன்னகைத்தாள்.

பளாரென ஒரு அறை அறைந்தான். கன்னத்தில் கையை கூட வைக்கவில்லை அவள். அவன் மறுகன்னதிலும் அறையட்டும் என அமைதியாக இருந்தாள்.

அவளருகில் தரையில் அமர்ந்தவன்ஏன்டி எல்லாரும் என் மனதை காயபடுத்துறிங்கஅவளும் போய்ட்டாள்  இப்போ நீயும் போய்ட்டா நான் என்ன செய்வேன்என அழுதான்.

ஆனால் அவளோடாக்டர் டாக்டர்சீக்கிரம் வாங்க மாமாவின் தலையில் அடிபட்டிருக்குஎன தன்னிடம் இருந்த கைக்குட்டையை எடுத்து அவனது நெற்றியில் வைத்து அழுத்தினாள். விஷ்ணு அப்போதுதான் தனக்கு ரத்தம் வருவதை உணர்ந்தான்.


நீ திருந்தவே மாட்டடிஎன அவளை கட்டியணைத்தான் ஓர் குழந்தையாக எண்ணி.

சில நாட்களுக்கு பிறகு இருவருக்கும் திருமணம் முடிந்தது. விஷ்ணுவும் ரம்யாவின் நினைவு அழியும் வரை கவிதாவை தவறான எண்ணத்தில் பார்க்கவில்லைஅப்படி செய்தால் அது துரோகம் என நினைத்திருந்தான்.

ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு

அவனுக்கு சாப்பாடு பரிமாறும்போது அவளை அருகில் அமரவைத்தான்.

ஏன் கவிதா என் மேல் கோபம் உள்ளதா

கோபமா ஏன் எதற்குஎன இயல்பாக கேட்டாள்.

இல்லை நீ நிறைய கனவுகளுடன் என்னை திருமணம் செய்திருப்பாய்…. குழந்தை குடும்பம் என…. ஆனால் என்னால் ரம்யாவை மறக்க முடியவில்லை அதுவரை உன்னை தொட என் மனம் விரும்பவில்லைஎன்னை மன்னித்துவிடு

அவனின் இந்த தெளிந்த மனதையும் பெண்களின் மனதை புரிந்துகொள்ளும் இதயமும் தான் இவனை காதலிக்க செய்தது..”ஏய் மாமா நான் உன்கூட வாழனும் அவ்வளவுதான்…. இப்ப அதைதான் பன்னிகிட்டு இருக்கேன்இப்ப என்ன ஒரு வருடம்தானே ஆகிறதுஅக்காவை நீ மறக்கமுடியாதுஅப்படி நடக்கும் என்றால் அதுவரை நான் காத்திருக்கிறேன்என விஷ்ணுவின் கன்னத்தை கிள்ளினாள்.

அவளது இந்த வார்த்தை இவனது மனதில் ரம்யாவை தூக்கிவிட்டு கவிதாவை காதலுடன் ஏற்றுக்கொண்டது. அவளைக்  கட்டியணைத்தான். மேஜையிலிருந்த தண்ணீர் குவளை கீழே சாய்ந்தது. இவளை அன்பாக தூக்கிகொண்டு நடந்தான். இவளும் இவனது அன்பில் அகப்பட சூரியனும் பூமிதாயும் இணைந்ததைப் போல இவர்களின் இனைப்பு நடந்து முடிந்தது.

யார் மனதையும் புண்படுத்தாதவள் கவிதா ஆனால் விஷ்ணுவின் மனதை புன்படுத்திய சம்பவமும் நிகழ்ந்தது.

ஆம் அன்று அவளது பிரசவ தினம்வலியால் துடித்து கொண்டிருந்தாள். அவளது கரங்களை இறுதிவரை பிடித்திருந்தவன். அந்த கரங்களை விட்ட சமயம் அவனையும் அறியாமல் கண்ணீர் வந்தது.

இந்த தருணம் பெண்களுக்கு ஒரு மறுபிறப்பு என்பதை அறிவான் விஷ்ணு ஆனால் தனக்கு நடக்கும்போது அது வெறும் சொல்லாக தெரியவில்லை.

ஏற்கனவே ரம்யாவை இழந்த விஷ்ணுஇவளின் அலறல் சத்தம் கேட்க இவளையும் இழந்து விடுவோமோ என மனதை பண்படுத்திக்  கொண்டிருக்கஓர் புதிய அழுகுரல்

சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்தவனை கட்டிலில் படுத்திருந்த கவிதா பார்த்து புன்னகைத்தாள். இவர்களின் அன்பிற்கு சாட்சியாக குட்டி ரம்யா நீல கண்களுடன்கன்னத்தில் மச்சத்துடன் அழகாக இருக்க அவனது குழந்தையை அப்படியே அள்ளி தூக்கினான். அது அப்படியே ரம்யாவின் அம்சமாக இருந்தது ஆச்சரியமே.

பால்கனியில் நினைவுகளை திருப்பிகொண்டிருந்த விஷ்ணுவை அந்த அழுகுரல் கலைத்தது.

இதோ அப்பா வந்துட்டேன் செல்லம்என தன் அறையில் இருந்த குழந்தையை நோக்கி கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

அங்கே ஒரு பெண் போர்வீரர் உடையில் அந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

ரம்யா…” என கதவில் சாய்ந்துகொண்டு சத்தமிட்டான்.

மெதுவாக திரும்பியவள் விஷ்ணுவை பார்த்தும் வந்து கட்டியணைத்துக் கொண்டாள்‌. அவனது இதழில் முத்தமிட முன்னேறினாள்ஆனால் விஷ்ணுவின் மனம் தெளிவாக இருந்ததால் அவளிடம் இருந்து விலகி நின்றான்

ரம்யாவிற்கு புரிந்துவிட்டது

அங்கிருந்த நகர்ந்தவள் அந்த குழந்தையை தூக்கினாள்.
என்ன ஒரு கண்கள் என்னை போன்றேஇந்த மச்சம் எவ்வளவு அழகுஆமா என்ன பெயர் வைத்திருக்கிறாய்

ரம்யா …”

என்ன?!”

ரம்யாரம்யா குட்டிஎன கூறவே தனது கழுத்தில் இருந்த ஓர் பவளமாலையை எடுத்து அந்த குழந்தையின் கழுத்தில் அணிவித்தாள்.

உடனே இந்திராணியாக மாறியிருந்த ரம்யாஇந்த குழந்தை என் வாரிசுஇவள் பிரம்ம அட்சய்ம் இவளை நான்தான் வளர்ப்பேன்என கூறவே திடீரென கவிதா அங்கு நுழைந்தாள்.

அப்போது இரண்டு ஆள் உயர மதில் சுவரை தாண்டி ஒரு சாமுராய் பெண் குதிக்க அவள் ஓர் குதிரை மீது பறந்து செல்வது நிலவொளியில் தெரிவதை இரு காதல் புறாக்களும் பார்த்தனர்.

ரம்யா அக்காவா?!” என குழந்தையின் கழுத்தில் இருந்த பவள மாலையை பார்த்து கேட்க விஷ்ணு மேலும் கீழுமாக தலையசைத்தான்.

என்ன சொன்னாங்க

இந்த குழந்தை அவளது வாரிசாம்இந்த குட்டி ரம்யாவின் தாயாக மாற அவள் விரும்புகிறாள்

என் அக்காவுக்கு இல்லாத ஒரு விசயம் இந்த வீட்டில் இருந்த என்ன பயன் இவளை என் அக்காவே எடுத்துக்கொள்ளட்டும்என கவிதா கூறியது தாய்பாசத்தை மிஞ்சி அவள் ரம்யாவின் மீது வைத்திருக்கும் அன்பை விளக்கியது….

*********
மூன்று வருடங்களுக்கு பிறகு

குட்டி ரம்யா பேச துவங்கியிருந்தாள்கவிதாவும் விஷ்ணுவும் அமர்ந்திருக்க காண்டீபன் கவிதாவின் வயிற்றில் இருந்தான். தன் குழந்தையை சுமக்கும் குழந்தைக்கு உணவை ஊட்டிகொண்டிருந்தான் விஷ்ணு.

அங்கு வந்த குட்டி ரம்யாவின் கையில் ஓர் ஓவியம் அதே ரம்யாவின் ஒரு ஓவியம்.

அப்பா ….அம்மா….அம்மாஎன அந்த ஓவியத்தை காட்ட

அப்படியா குட்டி அப்ப இது யார்என விஷ்ணு கவிதாவை பார்த்து கைநீட்டினான்.

இது மம்மி …. இவங்கதான் அம்மாஎன அந்த ஓவியத்தை காட்டி ஓடியவள் சென்று ஒரு பொம்மை வாளை எடுத்து லாவகமாக சுழற்றி ஒரு யானை பொம்மையில் குத்தி சிரிக்க அது கீழே விழுந்தது.

அழகாக நீலகண்களை விரித்து மச்சம் கன்னகுழியில் விழ சிரிக்க அவளின் தலைக்கு மேல் அலங்காரமாக இருந்த வைரவாள் மின்னியது.

மச்சம் கன்னகுழியில் சிறைப்பட்டதுஅந்த குட்டி ரம்யாவை கண்கள் விரிய ஆச்சரியமாக பார்த்தனர் கவிதாவும் விஷ்ணுவும்…..

இவர்களின் காதல்காவியத்திற்கு சாட்சியாக இருந்த வெண்ணிலா அடுத்த காதலர்களை தேடும் விதமாக பூமியை சுற்றித்  தேட தனது சுழற்சியை துவங்கியது….

நாமும் அந்த நிலாவுடன் சேர்ந்து காத்திருப்போம்….

 



காதல் யுத்தம் முற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 6பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 6

ஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா? நடந்தது என்ன தெரியுமா மகனே? என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05

கனவு – 05   ஒலித்துக் கொண்டிருந்த தொலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. ஒரு தடவை முழுதாக ஒலித்து ஓய்ந்ததன் பின்னர் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்கவும் எடுத்துப் பார்த்தாள். சஞ்சயன் தான்.   “முரளியின் நம்பரை அனுப்பு”   என்று

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45

உனக்கென நான் 45 “ம்ம் அன்னிய இம்பிரஸ் பன்னுங்க” என சுவேதா கூற அன்பரசி “வேணாம் அன்னி என்று பதறினாள். சந்துருவோ “ம்ம் சரி நான் பன்னுறேன்! ஆனாஙஎன்ன கிப்ட் கொடுப்காங்க உங்க அன்னி” எனறான். “எங்க அன்னியே உனக்கு கிப்ட்தான்டா