Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 14

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 14

உனக்கென நான் 14

போஸ் முதலில் காரின் அருகே வந்து நிற்க சன்முகம் மூச்சுக்காற்றை நுரையீரலில் வேகமாக பாய்ச்சிகொண்டே காரின்மீது இரூகையையும் வைத்து நின்றார். கார் தடம்புரண்டு விடும் என்று நினைத்தார் போலும். அதுவரை தன் மனதை பறிமாறிகொண்டிருந்த இருவரும் விலகி கொண்டனர். எதுவும் தெரியாதவர்கள் போல.

“ஐயோ என்னடா இப்புடி மிலிட்டரி சரக்க விட்டுகொடுத்துட்ட” என போஸ் சிரிக்க “அட போட இப்புடி கஷ்டபட்டு அந்த சரக்கே எனக்கு வேணாம்” என மூச்சிறைக்க கூறினார். அதற்குள் சந்துருவின் கைமீதிருந்த அன்பரசியின் கைகள் நகர்த்தபட்டன. அதை கவனித்த சந்துரு. “அரிசி உனக்கு எதுவுமே நியாபகம் இல்லையா?” என கேட்டான். அது அவளது இதயத்தை மிகவும் நெருக்கமாக தாக்கியிருக்கவேண்டும். உடனே தலையில் கைவைத்து கொண்டாள். “என்ன ஆச்சு அரிசி?!” என பதட்டத்துடன் கேட்டான்.

“என்ன அப்புடி கூப்டாத எனக்கு ஏதோ பன்னுது ரொம்ப தலை வலிக்குது” கண்கள் கலக்கியிருந்தன. தலையை பிடித்து கொண்டே சந்துருவின் மீது சரிந்தாள். “ஏய் அன்பு அன்பரசி என்ன ஆச்சு” என கன்னத்தில் தட்டினான். அவனது பதட்டமான குரல் வெளியே சென்றடைய தோழர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர். “என்ன மாப்ள ஆச்சு?” என போஸ் கேட்க. “இல்ல மாமா நான் பேசுறத கேட்டுகிட்டு இருந்தா திடீர்னு தலைவலிக்குதுனு சொன்னா நான் உங்களை கூப்பிடுறதுக்குள்ள மயங்கிட்டா” என சந்துருவின் பதட்டம் அவனது குரலில் தெரிந்தது. “சந்துரு வண்டிய ஹாஸ்பிட்டல் விடுடா” என தந்தையின் கட்டளையை தொடர்ந்து “அட சும்மா இருடா இந்த கழுத இப்படிதான் நடிப்பா அன்னைக்கு நடந்தமாதிரி” என போஸ் கோபத்தில் கத்தினார். “என்னடா உளறிகிட்டு இருக்க; சந்துரு நீ எடு டேய் நீ வண்டியில ஏறு” என சன்முகத்தின் அதிகாரம் முதல்முறையாக தன் நண்பனிடம் செல்லுபடியாக வாகனம் தன் நான்கு கால்களை கொண்டு ஓடி ஒரு நவீன மருத்துவமனையை அடைந்தது (அந்த இடத்தில் இருந்த ஒரே நரம்பியல் மருத்துவமனை அதுதான்). காரின் சாவியை கூட எடுக்காமல் அன்பரசியை கையில் ஏந்தி கொண்டு ஓடினான் சந்துரு. உள்ளே ஒரு வயதானவர் அமர்ந்திருக்க அருகிலிருந்த ஓர் பெட்டில் படுக்க வைத்தான். அந்த அறையை பார்த்து இது மருத்துவமனையா என்றசந்தேகம் அவனுக்கு உங்களைபோலவே!. ஆனால் கோயில் மூலவர் போல திருச்சபையின் கர்த்தர் போல மருத்துவர் வந்தார் சற்று வயது முதிர்ந்தவர். நரம்பியல் படித்துவிட்டு சேவை நோக்கமாக உள்ளார் என்பது புலப்பட்டது. ‘என்னடா இங்க இருக்குற யாருக்குமே பணம்னா பிடிக்காதா?!’ என்ற சந்தேகம் சன்முகத்திற்கு.

கையில் ஒரு டார்ச் லைட்டுடன் வந்தவர் அன்பரசியின் கையினை பிடித்துபார்த்துவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். அப்பொழுதும் அவள் தலையை பிடித்துகொண்டு அமர்ந்திருந்தாள். “தலையில் எங்கெல்லாம் வலிக்குது!?” என அவர் சிரித்துகொண்டே கேட்க அவரது புன்னகையே பல நோய்க்கு மருந்தாகும் என்பது போல இருந்தது. அவளும் சில இடங்களை அறிதியிட்டு கூறினாள். அதை கேட்டுவிட்டு சிறிது யேசித்தவர். “எத்தனை நாளா இப்புடி இருக்கு?!” என அடுத்தஸகேள்வியை வைத்தார். “இல்ல டாக்டர் இன்னைக்கு தான்” என சமாளித்தாள். அந்த வயதான மனிதர் சிரித்துகொண்டே “இது உண்மைனு நான் நம்பலாமா ” என அவளை பார்க்க தலையை பிடித்துகொண்டு அழ ஆரம்பித்தாள். தலை வலியால் அல்ல தன் மனவலியால். “இவங்க ரொம்ப எமோசன் ஆனா மயக்கம் போட்டு விழுந்துருபாங்களே!” என டாக்டர் மற்ற மூவரையும் பார்க்க.

“ஆமா சார் இப்போ ஈவ்னிங் கூட மயங்கிட்டா ” என சந்துரு கூறினான். “சார் அவ நடிக்குறா சார் சரியான கல்லூலி மங்கி  ஒன்னு போட்டா சரி ஆகிடுவா ” என போஸ் பொரிந்தார்.

“இல்ல சார் இவங்க நடிக்கல ரொம்ப நாளாக நீங்க கவனிக்காம விட்டுருக்கீங்க. மெமரி மிஸ் அலைன்மென்ட் இவங்களுக்கு இருக்கு” என மருத்துவர் கூற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். அதற்குள்ளாகவே மருத்துவர் ஒரு ஊசியை எடுத்துகொண்டு வந்து அன்பரசியின் கையில் குத்தவிட்டு “இது தூங்குறதுக்காக மட்டும்தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தலைவலி சரி ஆகிடும் ” என அன்பரசியை தூங்க வைத்தார்.

“சார் மெமரி மிஸ் அலைன்மென்ட்னா எந்தமாதிரி இதுனால அன்பரசிக்கு எதாவது?!” என சந்துரு சோகமாக இழுத்தான். “இல்ல இது பிசிக்கல் பிராப்ளம் இல்லை மென்டலிதான் வீக்கா இருக்காங்க மெரி மிஸ் அலைன்மென்ட்னா சில விசயங்கள நாம சீக்கிரம் அக்சப்ட் பன்னிக்கமாட்டோம் அந்த மாதிரி” என டாக்டர் கூற சந்துரு விழித்தான் மேலும் தொடர்ந்தார் “இப்போ நீங்க மதியம் தூங்கி ஈவ்னிங் எழுந்தீங்கனா அந்த இருட்டை பார்த்து அடுத்தநாள் ஆகிருச்சோ அப்புடின்னு நினைப்பீங்கள்ள நம்ம போதாத நேரம் மணியும் 6 னு காட்டும்” என மருத்துவர் கூற “ஆமா சார் நானும் ஃபீல் பன்னிருக்கேன்”  என சந்துரு உணர “அப்போ உங்களுக்கு குழப்பத்துல லேசா தலை வலிக்கும் ஆனா இவங்களுக்கு கொஞ்சம் அதிகமா இருக்கு அது மட்டும் இல்லை..” என டாக்டர் நிறுத்த “வேற என்ன சார்” தந்தையும் மகனும் பதட்டத்துடன் “இவங்களுககு சின்ன வயசுல தலையில அடி பட்டிருக்கனும் அதை நீங்க கவனிக்காம விட்டிருக்கனும் அதான் மென்டலி ரொம்ப வீக்கா இருக்காங்க சின்ன சென்டிமென்டுக்கே அழுதுடாவாங்க” என மருத்துவர் கூறுவதை மூவரும் கேட்டுகொண்டிருந்தனர். போஸின் மூளையோ தன்னிடம் இருந்த வீடியோ காட்சிகளின் தொகுப்பில் ஒன்றை எடுத்து ஓடவிட்டார்.

ஊரின் ஓரத்தில் இருக்கும் ஓர் அழகிய குளம் நாரைகளும் கொக்குகளும் கிளிகளும் தாகம் தீர்க்கும் ஓர் புன்னிய நீர். அதன் அருகில் பல முனிவர்களை கண்டு பூகம்பம் தாங்கி புயல் கடந்த ஓர் பழைமையான ஆலமரம் அதன் அடிமரம் எனும் கோட்பாடு விழுதுகளால் மூடி மறைக்கபட்டிருந்தது. அதன் ஒரு கிளை மட்டும் குளத்தை நோக்கி இருந்ததால். அந்த கிராம வாலில்லா வானரங்களுக்கு நீச்சல் டைவிங் போர்டு அதாதான்.

“ஏய் மலை தள்ளுடி நான் எப்புடி குதிக்குறேன்னு பாருடி டைவ் அடிக்கவா?” என மேலே நின்றுகொண்டிருந்தாள். கீழே இருந்த மலை எனும் மலர்விழி “குதிக்காதடி நான் இடம் சொல்றேன் அங்க குதி” என உயரம்தாண்டுதலும் நீளம் தாண்டுதலும் சேர்ந்து கொண்டது.

ஆனால் மலர் குறித்த இடம் வழக்கமான இடத்தைவிட ஒரு அடி தூரமாக இருந்தது. அதனால் நமது வீராங்கனை சற்று பின்னாலிருந்த ஓடி வந்து பாய்ந்தாள். சிறுதவறு நேரவே காற்றினால் அந்த ஒல்லி உடம்பு அரிசியின் இலக்கு இழந்தாள்

“நீ தோத்துட்டடி நான் சொன்ன இடம் இது இல்ல ” என மலை கிண்டல் செய்ய அதை அரிசியால் ஏற்றுகொள்ள இயலவில்லை. “இருடி நான் மறுபடியும் தாவுறேன்” என வெளியே சென்று மரத்தில் ஏறினாள். அவளுக்கு முன் ஒரு சிறுவன் ஏற முயற்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனை பின்னால் இழத்துபோட்டவள். “டேய் சின்ன பசங்க எல்லாம் பேய் ஓரமா விளையாடுங்கடா இது பொண்ணுங்க இடம் ” என மரத்தில் ஏறினாள். இப்பெழுது என்றுமில்லாமல் சற்று பின்னாலிருந்து ஓட துவங்கினாள்.

காற்றின் வேகம் சீராக இருப்பது அவளது சிக்கலான ஈராமான முடி காற்றில் அசைவதால் அறியமுடிந்தது. உடலில் ஒட்டியிருந்த நீர் கால்களின் பாதங்களை அடைய பளபளப்பாக மின்னியது. முதல் அடி ஓர் சிறுத்தையென பாய்ந்தாள். இரண்டாம் அடியில் கிளையின் கால்தூரத்தை கடந்திருந்தாள். “யேய் அரிசி உங்க அம்மா பிரம்ப எடுத்துட்டு வாராங்கடி” ஒரு புளியங்காவுக்காக பேட்டியில் பயன்படுத்திய உத்தி அதன் விளைவு மூனாறாம் அடி (அரிசிக்கும் அடி சறுக்கும்) காலின் ஈரபதமும் கவனசிதறலும் ஒன்றினைந்தது சிறுதி வினாடிகள் கழித்து அவள் உணர்ந்தது “அரிசி….” என்ற தன் தோழியின் கூச்சலும் முப்பது அடியில் பாதியை கடந்துவிட்டோம் என்பது மட்டுமே. அடுத்த நொடி காத்துவதற்கு வாயை திறக்கும் முன் தரையை அடைந்திருந்தாள். கண்கள் மூடியிருந்தன.

“அரிசி அரிசி கண்ண தொறடி” என தோழி அன்பரசியை உழுக்கினாள். எந்த பயனும் இல்லை. சிறுவர்கள் சூழ்ந்து கொள்ள புள்ளை பிடிக்கும் ஊர் தாத்தா வந்து அன்பரசியை தூக்கிகொண்டு நடந்தார். ஒழுங்காக குழந்தைகள் சாப்பிடவேண்டும் என அந்த பெரியவர் புள்ளைபிடிக்கும் தாத்தா என தாய்மார்கள் கூறுவதுண்டு.

அன்பரசியை ஒரு தின்னையில் கிடத்தி மார்பில் அழுத்தினார். சிறுது நேரத்திலேயே மூச்சுவிட துவங்கினாள். இந்த புள்ளை பிடிக்கும் தாத்தாவை கண்டு பயந்து எழுந்து ஓட முயன்றாள். ஆனால் தலைசுற்றல் காரணமாக அன்பரசியால் நிற்க முடியவில்லை. உலகமே சுற்றியது. பொத்தென விழுந்தாள். அந்த கனம் இந்த கால வாட்ஸ்அப் தோற்கும் அளவிற்கு பாட்டிகளின் புரளி ஆப் வேகமாக செயல்பட்டதின் விளைவு பார்வதி வந்து சேர்ந்தார். பிறகு ஐயனார் கேவிலுக்கு அன்பரசி கெண்டுசெல்லபடவே தன் செல்ல சுட்டி குழந்தையான அரிசியை வேப்பிலையால் மந்திரித்து கொண்டிருந்தார் பூசாரி. இருவரும் அந்த அளவுக்கு நெருக்கம் பொங்கல்சோறுக்காக!.

கோயிலின் வெளியே “என்னடி புள்ள வளக்குற” என்ற குரலுடன் பார்வதி கன்னத்தில் கைவைத்து நின்றாள். அவளின் எதிரில் போஸ் கோபத்துடன் நின்றிருந்தார்.

உள்ளே கோயிலை சுற்றிலும் பார்த்தவள் தலையை பிடித்துகொண்டு “யார் நீங்க” என பூசாரியை பார்த்து கேட்டாள்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41

உனக்கென நான் 41 சந்துரு பயந்துகொண்டு வெளியே ஓடி வந்தான். அன்பரசியின் தாத்தாவும் சிறிது காலம் மாந்திரீகம் என்று சுற்றிதிரிந்தவர்தான். அதனால் பார்வதியும் “என்னப்பா ஆச்சு ” என்று உள்ளே சென்று பார்த்து சிரித்துவிட்டார்.   “அட என்னப்பா இதுக்குபபோய் பயந்துகிட்டு

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 23ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 23

23 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சத்தம் கேட்டும் யாரும் மேலே போகும் தைரியம் இன்றி இருந்தனர். வந்த விருந்தினர் அனைவரும் கிளம்ப ஜெயேந்திரன், தனம், மரகதம், விக்ரம், சஞ்சனா, வாசு, பிரியா, ரஞ்சித், சிந்து, அக்ஸா அனைவரும் செல்ல ஆதர்ஷ்

உள்ளம் குழையுதடி கிளியே – 25உள்ளம் குழையுதடி கிளியே – 25

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இன்றைய முக்கியமான பகுதிக்கு செல்வோம். உள்ளம் குழையுதடி கிளியே – 25 அன்புடன், தமிழ் மதுரா Free Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload Nulled