Tamil Madhura தொடர்கள் கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 6

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 6

காப்பாற்றுங்கள் இந்திராணிக்கு ஆபத்து…..” என்ற குரல் வந்த திசையில் இருவரும் குதிரையை திருப்ப அங்கே சில பெண்கள் பதட்டத்துடன் நின்று கொண்டிருநதனர்.

சற்று தூரத்தில் ஒரு பெண் தரையில் கிடக்க, அவள் மீது ஓர் சிறுத்தை கொடூரமான பற்களை கொண்டு முன்னேறியது.

இந்திரவர்மனாகிய விஷ்ணுவிற்கு நிலைமை புரிந்தது. குதிரை தனது கால்களின் இயக்கத்தை நிறுத்தும்முன் தரையில் குதித்து முன்னேறினான்.

அவன் பின்னாலையே இருந்த காண்டீபன் இந்திரவர்மனின் தோள்களில் கை வைத்துசிறிது பொறுமை காக்கவும் இந்திரவர்மா

பெண்கள் என்றால் நாட்டின் மண்ணை காப்பதுபோல காப்பவன். இவனுக்கு இன்று என்ன நடந்ததுஎன சிந்தித்து காண்டீபனைப்  பார்த்தான் இந்திரன்.

அவனுது நினைவுகளை நன்கு உணர்ந்த உயிர்த் தோழனான காண்டீபன்அங்கே பார்என்றான்.

வேகத்தில் சுயநினைவை இழந்தவனாய் இருந்த இந்திரன் அந்த மங்கையை பார்த்தநொடி சிறுத்தையை கீழே தள்ளி அவள் அதன்மீது முன்னேறியிருந்தாள்.

இந்திரன் கண்விழிகள் விரிவடைந்தன…. பூவுக்குள் புயல் என்று காண்டீபன் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வர இவள் பூவா புயலா என குழம்பி நின்றான்.

ஆனால் அவளது கண்கள் புலியின் கண்களுக்கு நேர் எதிரே இருந்தது. அந்த கண்களை பார்க்க இயலாத புலியின் வேகம் அதிகரிக்க அவளது தோளில் தனது நகங்களை பதித்தது.

போரில் பல காயங்களை பரிசாக பெற்ற இந்திரனுக்கு அவள்மீது பட்ட காயம் வலியை ஏற்படுத்தியது. அவளது உடையிலும் கீறல்கள் இருக்க அதிலிருந்தது குருதி வெளியே வந்த மண்ணில் விழுந்தது.

ஆக்ரோசத்தின் உச்சிக்கு சென்ற சிறுத்தை முன்னேறி பாய அதை தூக்கி வீசினால்அவளது பலம் அதில் தென்படும் அளவுக்கு அது இந்திரன் காலடியில் வந்து விழுந்தது.
இந்த மங்கைகுள் இப்படி ஒரு பலமா என உறைந்திருந்ததான் இந்திரன். அவளோ தனது கைவாளை எடுத்துகொண்டு புலியை நோக்கி முன்னேறினாள்.

சிவந்த இதழ்களை உடைய இந்த பெண் ஒரு பாவத்தை செய்ய வரும்பாத இந்திரன் தனது மோதிரவிரலை மடக்கி புலியின் தலையில் ஓர் இடத்தில் அடிக்கவே அது மயக்கமடைந்தது. அவளோ வாளை ஓங்கி நிற்க

மங்கையே வேண்டாம் அதற்கு அவசியம் இல்லை“- இந்திரன்.

முகத்தில் இருந்த கோபம் மாறமல்நீர் யார்என்பதை போல பார்த்தாள்.

இந்திரனோ அவளது அக்னியான முகத்தின் நடுவில் இருந்த நீல விழிகளை பார்த்தான். ஈர்க்கபட்டான் என்பதே உண்மை.

இவள்தான் நீ தேடும் மங்கையோஎன இந்திரன் காதில் கிசு கிசுத்தான் காண்டீபன்.

முகத்தை திரும்பாமல் கண்களை மட்டும் நகர்த்தியே காண்டீபனைப்  பார்வையால் எடை போட்டவள்.

நீங்கள் யார் என தெரிந்துகொள்ளலாமா?” அவளது குரலில் அனுமதி கேட்பதாக இல்லை. அது கட்டளை போல எதிரொலித்தது.

சுதாரித்து கொண்ட இந்திரன்நான் இந்திரவர்மன் இவர் எனது நண்பர் காண்டீபன்நாங்கள் இருவரும் இந்த நாட்டில் வெளியுறவு மந்திரியாக வந்துள்ளோம்

இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் மந்திரியாக பதவி ஏற்கும் அளவிற்கு நீங்கள் விவேகம் உடையவரோஎன புருவத்தை உயர்த்தி நக்கலாக கேட்டாள்.

அறிவுதிறன் குறைவுதான் ஆனாலும் பங்கேற்பதில் தவறில்லையே தாயே

அகவை விசயத்தில் பெண்களின் கோபத்தை தடுக்கமுடியாது என்பது போல அவன் தாயே என கூறியது இவளை தாக்கஎனக்கு பெயரும் உள்ளதுஎன கூற சிரித்தான் இந்திரன்.

தங்கள் பெயர் எனக்கு தெரிய்தல்லவா

என கூறிய அடுத்த நொடி அவளது தோழிகளில் ஒருவர்இந்தி….” என கூறும் முன்னே அவள் தடுத்தாள்.

கூடவேதுளசிஎன கூறி சமாளித்தாள்.

தோழியோ அவளது காதில் ஏதோ கிசுகிசுக்க அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது ஆனால் அதை இவள் வெளிக்காட்டாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது இந்திரனுக்கு.

அதுவரை மகிழ்ச்சியாக இருந்த தருணம்அவளது தோள்களை பார்த்தவுடன் பறிபோனது இந்திரனுக்கு….அதில் இருந்த புலியின் நககீறல்தான் இதற்கு காரணம்.

தன் குதிரையில் இருந்த ஒரு குடுவையை எடுத்தவன்இந்தா துளசி இதை பயன்படுத்துஇரண்டே நாளில் காயங்கள் மறைந்துவிடும்

அவனை பார்த்த மாத்திரத்தில் பிடித்துபோனதால் அவளோ இவனை மீண்டும் சீண்ட நினைத்தால்… (இது பெண்களின் இயல்பான குணம் அன்போ கோபமோ எல்லாவற்றையும் தன்னவனிடமே காட்ட வேண்டும் என நினைப்பார்கள்)

உங்களுக்கு ஏன் இந்த கருணைஅதிலும் இரண்டு நாட்களில் வேலை செய்வதற்கு அது என்ன அமிர்தமா?” என கூற அனைத்து பெண்களும் சிரித்தனர்.

அவர்களின் அறியாமையை நினைக்கும்போது பரிதாபமாக இருந்தது காண்டீபனுக்கு.

அந்த நேரம் காண்டீபனின் குதிரை தனது இறக்கைகளை விரிக்க அனைத்து பூவையர்களும் கண்கள் விரிய பார்த்தனர்.

ஏங்க இது ஒற்றை கொம்பு குதிரையா?!”

ஆம்“- சுருக்கமாக முடித்தான் காண்டீபன்.

இதில் ஒரு குதிரைதான் மீதம் இருக்கிறது என கேள்விபட்டோம்அப்படியெனில் நீங்கள்…”

ஆம் நான் தீவுகளின் அரசன் காண்டீபன்இது இந்திரவர்மன் எனது உயிர் நண்பன்

இந்திராணியின் முகம் சுருங்கியது…”அரசே நீங்கள் எங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறீர்கள் என்றால்…. எங்களுக்கு ஆபத்தா…?!”

பெரும்பாலும் எதேனும் சிறிய நாடுகளின் மீது அநியாயக்காரர்கள் போர்தொடுத்தால் தீவுகளின் அரசனும் அவனது தோழனும் வந்து காப்பார்கள் என்பது புராணநூல்களில் எழுதபட்டிருக்கும்.
அதனால் அவள் அவ்வாறு கேட்பது ஆச்சரியமில்லை.

தங்கையே நீங்கள் நினைப்பது தவறு சில நல்லகாரியங்களுக்காகவும் நாங்கள் வருவதுண்டு…”

இப்பொழுது எதற்காக வந்திருக்கிறீர்கள் அரசே?!”

உனக்காகத்  தான் இந்திராணிஎன காண்டீபன் முடித்தான்.

என்ன?!”

ஆம் இளவரசி உன்னை என் தோழன் விரும்புகிறான்….. அவன் தேடிய மங்கை நீதான் தங்கையே

நானா?”

ஆம் இளவரசிஎன அவளை பார்த்தவன் அருகில் இருந்த தோழியை பார்த்துஎன்ன நான் கூறுவது சரிதானே துளசிஎன்று பார்க்க அனைவரும் அமைதியாகினர்.

அவர்களை பார்த்து சிரித்த இருவரது குதிரையும் அரண்மனை நோக்கி நடந்தன.

ஆச்சரியமாக இருந்த இந்திராணி கண்கள் விரிய நின்றிருக்க வெட்கத்தில் சிரித்தாள் அவளது அழகிய மச்சம் கன்னகுழியில் விழுந்து நீந்தியது.

அதை குழைக்ககும்விதமாகஎன்ன இளவரசி ஒரு சாதாரண மனிதனுக்கு உன்னை பெண்கேட்கிறார்கள்நீயோ இளவரசி உன்னை எப்படி சாதாரண ஒரு நபருக்கு..‌‌. உனக்கு அந்த தீவுகளின் அரசர்தான் பொருத்தமாக இருப்பார்என அவளின் கனவை கலைத்தாள்.

நீ முடிவெடுக்க வேண்டாம் துளசிஎன அவளை கோபப் பார்வை பார்த்தாள் இளவரசி.

துளசியோ தன்மனதில் பதிந்து கொண்ட அந்த இந்திரனை நீக்கமுடியாம்ல் திணறினாள்.
ஆனால் அரசகுடும்பத்திடம் போராடும் சக்தி அவளுக்கு இல்லாததால் தன்மனதை பூட்டி கொண்டாள்.

அவன் கொடுத்த குடுவையைத்  திறந்து தனது காயங்களில் இட்டால்அதை பயன்படுத்திய சில நிமிடங்களிலேயே காயம் மறையத் துவங்கியது.

ஏன் இந்திரா போரில் பயன்படுத்தும் மருந்தினை அவளிடம் கொடுத்தாய்அது ராஜதீர்த்தமல்லவா?!”

“…..” பதிலுக்கு ஓர் சினேகபுன்னகை வீசினான் இந்திரன்…. அனைவரின் மனதையும் படிக்கும் ஆற்றல் பெற்ற காண்டீபன் அவனது மனதில் காதல் இருப்பதை உணர்ந்தான். பதிலுக்கு காண்டீபனும் புன்னகை வீசினான்.

குதிரை அரண்மனை வாசலை அடைந்தது‌. மிகவும் பிரம்மாண்டமான வாயில். பெரிய கதவுகள் மூடபட்டிருந்தன….


டிரிங்டிரிங்…..டிரிங்

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்க விழிகள் திரையை கிழித்தன. மீண்டும் அந்த சத்தம் ஒலிக்க இந்திரவர்மனின் தோற்றம் மறைய துவங்கியது. கண்ணை திறந்தான் விஷ்ணுவாக.

யார் இந்த நேரம்என அலுத்துகொண்டே எழுந்தவன் ஜன்னலின் வெளியே பார்க்க நிலா இவனை கேலியாகப்  பார்த்தது. அலுத்துகொண்டே எழுந்தவன் கதவை பார்க்க அங்கு கதவு திறந்திருந்தது.

கதவு திறந்திருக்கிறது யார் அதுமீண்டும் அந்த சத்தம் ஒலித்தது.


யார் அங்கே உள்ளே வாங்க

எந்த பதிலும் இல்லை காலிங்பெல் பலமாக அடிக்கும் சத்தம் மட்டும் வரவே இதயத்துடிப்பு அதிகமாக கதவை நெருங்கினான்….


**********

அந்த சம்பவத்திற்கு பிறகு அதிர்ச்சியில் இருந்தவனுக்கு பணத்தாசையை விட உயிர் பயம் தொற்றிக் கொள்ள தான் அரைகுறையாக கட்டி வைத்திருந்த கட்டுமரத்தில் ஏறி கடலில் பயணம் செய்துகொண்டிருந்தான்.


கடந்த சில நாட்கள் எத்தனை நாட்கள் என்று கூற முடியாத அளவுக்கு அந்த கட்டுமானத்தில் தான் இருந்தான். அவனிடம் மீதமிருந்த இறுதித் தேங்காய் அதை நினைவு வைத்திருந்தது. தினமும் ஒருதேங்காய் மட்டுமே என உண்டுவந்தான் ஆனாலும் அவனுக்கு எந்த தீவும் தென்படவில்லை. அதனால் நீரோட்டம் செல்லும்திசையில் பயணம் செய்தான். விசையை செலுத்த அவனுக்கு தெம்பில்லை.

இறுதியாக மயக்கநிலைக்கு சென்றிருந்தான். அவன் முன் ஜென்மத்தில் செய்த நற்பயனின் விளைவோ இல்லை ஏதேர்ச்சையோ அவனது கட்டுமரம் ஓர் இடத்தில் தரைதட்டி நிற்க தன் உடலில் இருந்த மொத்த சக்தியையும் திரட்டி எழுந்து நடந்தான்.

கண்களில் தெளிவில்லை அந்த கடும் இருட்டும் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. சிறிது தூரம் நடந்தவன் முன் சமைத்த மாமிசமும் எரிந்த விறகின் சுவடும் தென்பட இங்கு மனிதர்கள் வசிக்கின்றனர் என மனதில் சந்தோஷ பூவை நாட்டியவன் அந்த துண்டை எடுத்து சாப்பிட்டான். பசி ருசியறியாது என்பது இவனைக்கு நன்றாக பொருந்தியது.

களைப்பின் உச்சியில் இருந்த முனியன் அருகில் இருந்த ஒரு மரத்தில் சாய்ந்து அப்படியே உறங்கி போனான்.

மொத்த உலகத்தையும் கண்காணிக்கும் காவல்காரன் நிலா தான். அது முனியனின் நிலையை பார்க்க முடியாமல் மேகக்  கூட்டங்களால் தன்னை மூடிக்கொண்டது.

********
காலிங் பெல் சத்தத்தினால் எரிச்சலடைந்த விஷ்ணு கதவின் அருகில் செல்ல மின்சார வாரியம் தனது வேலையை சரியாக செய்தது.

மொத்த தெருவும் இருட்டில் மூழ்க கதவின் பின்னால் ரம்யா நின்றிருந்தாள்.

நாம் சிறிது நேரம்தான் கண் அசந்திருந்தோமா?… இரவில் சரியாக தூங்கமுடியவில்லை என்றால் இப்படிதான்என விஷ்ணு மூளையை இயல்புநிலைக்கு திருப்ப ரம்யாவோ விஷ்ணுவை கட்டியணைத்துக்  கொண்டாள்.

இருட்டு என்றால் பயம் என்று அவள் கூறியது நியாகம் வரவேபயப்படாத தங்கம் நான் இருக்கேன்என மேலும் இருக்கமாக்கினான் விஷ்ணு. இவர்களது செய்கையை பார்த்துகொண்டிருந்த நிலவு மேக போர்வையை போர்த்தி கொண்டது.

இருவரது மனதிலும் இந்தநிமிடம் இப்படியே நின்று விடவேண்டும் என தோன்றவே ரம்யா விஷ்ணுவின் மார்பில் முகம் புதைத்தாள். அவள் கண்ணீர் துளிகள் அவனது இதயத்தை நெருங்கியது.

அவள் தன் மனதின் வலியை அவ்வளவு எளிதில் வெளியிடமாட்டாள் கண்ணீரால்தான் பேசுவாள் ஆனால் அவளுக்கு தேவை ஓர் அரவணைப்புஎன நினைத்தவன் ஆறுதல் சொல்லாமல் அவளது கன்னங்களைப்  பிடித்து நிமிர்த்தினான்.

அந்த நொடி மின்சாரம் வீட்டினுள் பாயஅது ரம்யா இல்லை கவிதா என ஊர்ஜிதம் ஆனது. ஒரு வெளிச்சம் இந்த வேறுபாட்டை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.

உடனே விலகி நின்றவன்நீ ஏன்டி இங்க வந்த?!” கோபத்தின் உச்சியில் ஏறி ருத்ரதாண்டவம் ஆடினான்.

கண்களா அல்ல கடலா எனும் அளவிற்கு நீர் பெருக்கெடுக்கஎன்னால் உன்னை பறக்கமுடியவில்லைஎன்றால் அந்த மார்டன் பெண்.

அவளது காரியத்தால் கோபமலையின் உச்சியில் இருந்த விஷ்ணு விண்ணிற்கே சென்றான்.

அடுத்த கணம் அவளது கன்னங்கள் விஷ்ணுவின் கைகளால் சிவந்திருந்தது.

ஏன்டி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா

நீ முதல்ல என்னை புரிஞ்சுக்கோடா

இன்னொரு கன்னமும் சிவந்தது.

ஏன்டி இப்படி நேரம்கெட்ட நேரத்துல ஒரு பையன் வீட்டுக்கு வந்தா உன் வருங்கால வாழ்க்கை  என்ன ஆகுறது

கண்ணீரை துடைத்தவள் விசும்பலான குரலுடன்வருங்காலமா… நீ இல்லாமலா… நெவர்

இவளுக்கு எப்படி புரியவைப்பதுஎன எண்ணிய விஷ்ணுவின் சிறுமூளை சிறந்த ஓர் முடிவை முன்நிறுத்தியது.

உனக்கு என்னை பிடிக்குமா

ரொம்ப பிடிக்கும் மாமா நீ என் உயிர்…. எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்

நீ இந்த மாதிரி  செஞ்சா நான் சந்தோஷமா இருப்பேன்னு நினைக்குறியா

“……” கண்ணீரும் மௌனமுமே பதில்.

சொல்லு கவிதா

இல்லைஅப்போ நீ சந்தோஷமா இருக்க நான் என்ன பண்ணனும் மாமா

சிறிது யோசித்தவன்நீ காலேஜ் முடிக்குற வரைக்கும் இந்தமாதிரி நடந்துக்கக்  கூடாது…. இல்லை என்றால் நான் இந்த வீட்டிலிருந்து கிளம்பி விடுவேன்

மனதின் வலியை அளக்க கருவி இல்லை என்பதால் அவளது பூ மனதை இவனால் உணரமுடியவில்லை. ஆனால் அவளோ அவனது காலடியில் அமர்ந்து அழுதாள். சிறிது நேரம் கண்ணீர் திரையாட ஏதோ யோசித்தவள் எழுந்து நின்றாள்.

சரி விஷ்ணு சார் இனிமே அந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்சரி நான் வந்த காரணத்தையாவது உங்களிடம் கூறலாமா?!”

அவளது எண்ணங்களின் நிலைப்பாட்டை இவனால் அறியமுடியவில்லைஎன்ன திடீர் என்று இப்படி மாறிவிட்டாள்என நினைத்தவன் அவளது கேள்விக்கு பதிலாகம்ம்என பதில் அளித்தான்.

அவள் தொடர்ந்தாள்இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்அதான் இந்த கேக்கை உங்களுக்கு தரலாம் என வந்தேன்என ஒரு அழகிய இதயவடிவ கேக்கை எடுத்து அவனருகில் இருந்த ஓர் மேஜையில் வைத்துவிட்டு திரும்பிபார்க்காமல் சென்றாள். விஷ்ணுவோ அவளது கைகள் கண்களை தடவுவதை பார்க்க முடிந்தது.

எதர்ச்சையாக பார்த்தவன் அவள் மார்டன் உடையில் இல்லாமல் தாவணி  அணிந்திருப்பதை கவனித்தான். எனக்கு குடும்பபாங்கான தாவணி  அணியும் கிராமத்துப்  பெண்தான் பிடிக்கும் என என்றோ இவன் கூறியது அவளுக்கு நினைவில் இருப்பது எண்ணாணான்.

அவன் மனதில் இவள்மீது ஓர் மதிப்பு இருப்பதால் இவனது எண்ணம் இவனை அறிக்க துவங்கியது. கையில் ஈட்டியுடைய மனம் விழித்து கொண்டது.

ஏண்டா ஒரு பெண்ணைக்  கை நீட்டி அடித்துவிட்டாயே அதுவும் அவளது பிறந்தநாள் அதுவுமாக…. எப்படிதான் உனக்கு மனம் வருகிறதோ…’ என அது முடிக்க

வெள்ளை மனம் தொடர்ந்ததுரம்யாவை மனதில் வைத்துகொண்டு ஒரு பெண்ணின் மனதில் ஆசை வளர்ப்பது தவறுஎன உறுதியாக சொல்ல

என்ன இருந்தாலும் மனவலியை பிறந்தநாள் பரிசாக தருவது இந்த உலகத்தில்தான் நடக்கிறது…. நீயே சொல் மின்சாரம் தடைபடாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள்…. வழக்கம் போல் வந்து மாமா எனக்கு பிறந்தநாள்….இந்த டிரஸ் நல்லா இருக்கா மாமா என எதாவது புலம்பிவிட்டு சென்றாருப்பாள்…’ என ஈட்டியை சீவிகெண்டே கூறியது.

இரண்டு மனதிற்கும் நடுவில் காதல் யுத்தமே நடந்துகொண்டிருக்க மனதின் முடிவை எதிர்பார்த்திருந்தான் விஷ்ணு. அந்தநேரம் கைபேசி காதல் மொழி பாட அதில் ரம்யாவின் புகைப்படம்அடுத்த நொடியே ஈட்டி மனது கொலை செய்யப்பட்டு முழு மனதிலும் ரம்யா ஆக்கிரமித்தாள்.

ஹலோ சொல்லு ரம்யா

உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்

என்கிட்ட என்ன தயக்கம் சும்மா சொல்லு

நீ நினைக்குற மாதிரி ரம்யா நல்லவள் இல்லைடாஎன உண்மையை மட்டுமே கூறும் திவ்யாவாக மாறியிருந்தாள்.

என்னடி உளறிகிட்டு இருக்க என்ன பிரச்சனைன்னு சொல்லுடி

லேசாக அழும் குரல் கேட்கவே என்னாச்சு இவளுக்கு என சிந்தித்தவன்.

சொல்லு தங்கம் என்ன பிரச்சனை நான் தீர்த்து வைக்கிறேன்

நான் நேரில் சொல்கிறேன் விஷ்ணுப்ளீஸ்டா என்னை வெறுத்துடாத

1 thought on “கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 6”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09

இதயம் தழுவும் உறவே – 09   யசோதாவிற்கு இன்டெர்னல் தேர்வுகள் தொடங்கி இருந்ததால் மதியமே வீடு திரும்ப தொடங்கினாள். கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தபொழுது வித்யாவின் பெற்றோர் வந்திருந்தனர். மரியாதை நிமித்தம் அவளும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7

‘இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுகிறாள்‘ என குழப்பத்துடன் கைபேசியை கீழே வைத்தான் விஷ்ணு. இரண்டு பெண்களின் மத்தியில் தன் மனது படும்பாட்டை எண்ணியவனின் மூளையில் ரத்தவோட்டம் வேகமாக பாய எண்ணங்கள் வலையாக பின்னின. அவனது எண்ணங்களை அவனால் அடக்க

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதிபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி

ராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான்