கொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல், திகைப்பூண்டு இருந்தோம். உன் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளி வந்தது. நான் அழவில்லை. அதற்கும் கொஞ்சம் சக்தி வேண்டும். அந்தச் சக்தியற்றவளாகிவிட்டேன், அந்த நேரம்.