Tamil Madhura Uncategorized லட்சுமி வாருமம்மா

லட்சுமி வாருமம்மா

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் குங்கும பூவாய் பங்கயப் பாவை வேங்கடரமனின் பூங்கொடி வாராய் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 2’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 2’

அத்தியாயம் – 2   “இந்தக் கௌமாரியம்மன் தான் எங்க ஊர் காவல் தெய்வம். சுயம்பா வந்தவடா இவ. எங்க ஊர்ல இருநூறு வருஷத்துக்கு முன்னே மக்கள் கம்மாய்ல வெள்ளம் வந்து கஷ்டப்பட்டாங்களாம். அப்பறம் அங்கேருந்து இந்தக் காட்டுமாரியோட எல்லைக்கு வந்தவுடனே

KSM by Rosei Kajan – 20KSM by Rosei Kajan – 20

அன்பு வாசகர்களே! அனைவருக்கும் இனிய தமிழ் புதுவருட வாழ்த்துகள் பல பல!      அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/1W-1Fl-L7EvdQafZvi_8XPS-QVEFzdSgu/preview” query=”” width=”640″ height=”480″ /]  

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.