சிவாவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட அந்த புதன்கிழமை வந்தது. தனபாலன் புதிதாய் ஒரு கடை போடுவதற்கு பணம் பற்றாமல் அலைந்தான். தன் மச்சினனின் உதவியுடன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்துப் பணம் வாங்கும் எண்ணத்துடன் செங்கல்பட்டுக்கு வந்திருந்தான். கடன் தருபவர் சென்னையில்