25 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்
மகேஷ், “ஆமாமா மித்து அங்கிருந்திருந்தா என்ன சொல்லிருப்ப?”
“சொல்லுங்க சொல்லுங்க மாமா..லாஸ்ட்ல கரென்ட் போயிடிச்சு..”
“என்ன பதில் சொன்னிங்க?”
என ஆளாளுக்கு சுற்றி நின்று ஆர்ப்பரிக்க மித்ரன் புன்னகையுடன் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு “லவ் யூ தியா..” என்றான்..
சந்தோஷத்தில் அவள் கண்களில் நீர் வழிய கண்ணீரை துடைத்தபடி “நீ எனக்கு இப்போ சொல்லமாட்டியா?”
“லவ் யூ ஆதி..” என கட்டிக்கொண்டாள்..அவனும் அணைத்துக்கொள்ளவே சுற்றி இருந்த அனைவரும்
சிவா “டிவில என்னடா சொன்ன?”
“இவளோ வருஷம் அவ கேட்டதை சொல்லிருப்பேன்னு சொன்னேன்..”
சந்தியா “அப்டினா இப்போவரைக்கும் நீ ஒருதடவைகூட அவளுக்கு லவ் சொன்னதில்லையா?”
இல்லை என்பது போல தலையசைத்து “இதுதான் பஸ்ட்..”
குணா “அப்போ மித்துவுக்கு இது பெரிய அச்சீவ்மென்ட் தான்..”
சங்கர் “மித்துக்காகூட எமோஷனல் ஆகி அழுகுறா பா” என கிண்டல் செய்தனர்.
அன்றைய பொழுது மகிழ்வுடன் கழிய இரவு உணர்விற்கு பின் மித்ரன் வேலை பார்த்துக்கொண்டிருக்க அறைக்கு வந்த மித்து மெத்தையை ஒழுங்க படுத்திவிட்டு அமைதியாக பின் கதவை திறந்து வெளியே சென்றாள்.. மித்ரன் அவளை பார்க்க, அவளோ மாடியில் நிலவை பார்த்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டான்..அவள் அவ்வப்போது இப்டி நிற்பது தான் இருப்பினும் இன்று அவள் எதுவும் பேசாமல் இருக்க மெதுவாக வந்து அங்கே இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் “என்னாச்சு மேடம்?”
திரும்பியவள் புன்னகையுடன் எதுவுமில்லை என்பது போல தலையசைத்துவிட்டு மீண்டும் திரும்பி வேடிக்கை பார்க்க
அவளையே பார்த்தவன் “தியா” என்றழைக்க அவள் திரும்பி பார்த்ததும் வா என்பது போல அழைத்து அருகே அமர்த்தியவன் அவளை தன் தோளில் சாய்த்தபடி தலையை வருடி கொடுத்தான்..
“என் செல்லக்குட்டி என்ன திங்க் பண்ணிட்டு இருக்கு?”
“எதுமில்லை ஆதி..”
“இல்லையே…வேற ஏதோ தெரியுதே? சொல்லு…”
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ம்ம்ம்…அப்டியா..அப்போ என்னனு சொல்லு..”
“ஏதோ மேஜிக் நடந்திருக்கு போல?”
“ஹா ஹா ஹா..கரெக்ட் தான்..ஆனா அன்எக்ஸ்பெக்டட் மேஜிக்..”
அவன் புரியாமல் பார்க்க “நீ எனக்கு எப்படி எங்க ப்ரொபோஸ் பண்ணுவேன்னு நான் பல தடவ வேற வேற சிச்சுவேஷன்ல யோசிச்சிருக்கேன்..பட் எதுவுமே சூட் ஆகுறமாதிரியே இல்லை..ஆனா இன்னைக்கு, உனக்கு நான் எவ்ளோ முக்கியம்னு சொல்லி முதல எனக்கு சாக் குடுத்து அதிலிருந்து வெளில வரதுக்குள்ள அப்டியே எனக்கு ப்ரொபோஸ்ம் பண்ணி..
உண்மையாவே நான் வாயடைச்சு போய்ட்டேன் ஆதி..அப்போ அமைதியானது தான் இப்போவரைக்கும் எனக்கு வேற எதுவுமே மைண்ட்ல ஏறல..
அவ்ளோ சந்தோஷம்..எவ்ளோ ஹாப்பினு எனக்கு எக்ஸ்பிரஸ் பண்ணவே தெரில….” என
அவனும் புன்னகையுடன் “அதான் எவ்ளோ ஹாப்பினு உன் கண்ணு காட்டிக்குடுத்திடுச்சே…”
அவளும் இறுக அணைத்துக்கொண்டவள் “என்னை உனக்கு பிடிக்கும்னு தெரியும்…ஆனா இவளோ பிடிக்கும்னு நீ ஒருதடவை கூட என்கிட்ட சொன்னதில்ல..எப்போவுமே காட்டுனதும்கூட இல்லையே ஆதி..”
“உன்னோட ஆசையும் என்னோட ஆசையும் சேர்ந்து கிடைக்கிற மொமெண்ட் உன்கிட்ட சொல்லணும்னு நினச்சேன்..”
“அதென்ன நம்ம இரண்டுபேரோட ஆசை?”
“உன் ஆசை ஒரு ஸ்பெஷல் மொமெண்ட்ல நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணனும்னு நீ நினைச்சது…”
மித்து ஆமா என்றாள்…”என்னோட ஆசை என்கிட்ட முதல் தடவையா நீ விரும்பி கேட்ட விஷயத்தை செஞ்சு நீ அதை பாத்து சந்தோசப்படுறத பாக்கணும்ங்கிறது…சோ அது இரண்டுமே இன்னைக்கு நடந்தது..அதான்..”
மித்து அதிர்ச்சியும், ஆச்சரியமாக பார்க்க
“ம்ம்..இந்தமாதிரி ஆசிரமத்துல ஆதரவு இல்லாம இருக்கிற குழந்தைகளோட கனவு திறமையும் வெளில வராதா? இது எல்லாம் மாறவே மாறாதா? நீ ஏதாவது பண்ணு ஆதினு கேட்ட…நீ தெரிஞ்சு கேட்டியோ, தெரியாம கேட்டியோ..நீ என்னை நம்பி கேட்டதை நான் செய்யணும்னு நினைச்சேன்…”
“என்ன ஆதி சொல்ற..இதெல்லாம் நான் கேட்ட ஒரு விஷயத்துக்காக.. இத்தனை வருஷம்..? எதுக்காக ஆதி?”
“என்கிட்ட என்ன இருக்கப்போகுதுனு எதையும் கேட்காம போறவங்களையும், என்கிட்ட என்ன இருக்குனு தெரிஞ்சுச்சுகிட்டு கேக்றவங்களையும் தான் நான் சந்திச்சிருக்கேன்…நல்லா பழகுற பிரண்ட்ஸ் கூட எதுக்குடா உனக்கு சிரமம்னு பாத்து பாத்து கேப்பாங்க…அப்போ எல்லாம் என்கிட்ட ஏதோ குறை இருக்கிறத எல்லாரும் ஞாபகபடுத்துற மாதிரி இருக்கும்…எனக்கு இது எதுமே பிடிக்கல.. என்கிட்ட பணம் இருக்கு இல்லை நான் எப்படி பண்ணுவேன்னு ரொம்ப எல்லாம் யோசிக்காம உரிமையா சாதாரணமா ஒரு பேமிலில இருந்து ஒருத்தன் வந்தா அவன்கிட்ட எப்படி இருப்பாங்களோ அந்த மாதிரி இருந்தது…என்னால முடியும்னு நம்பி கேட்டது..
என்கிட்ட உரிமையா இத பண்ணு இது வேணும்னு கேட்டது என் அம்மா தான்..அதுக்கப்புறம் அந்த மாதிரி என்னை நம்பி சாதரணமா எனக்கு இதுயெல்லாம் வேணும்னு கேட்டது நீ…சோ நீ கேட்டதும் அதை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்…உன்கூட இருக்கும்போது என் லைப்ல குறையே இல்லாதமாதிரி இருக்கும்…முக்கியமா உன்கூட இருக்கும்போது நான் அம்மாவை மிஸ் பண்ணதே இல்லை..”
“அப்புறம் ஏன் ஆதி விட்டுட்டு போன?”
“வேற என்ன பண்ண சொல்ற?..உன்னை எனக்கு பிடிக்கும்..நீ கேட்டதை செய்யணும்னு நினச்சேன்..நான் இல்லேனு சொல்லல..ஆனா அப்போவும் லவ் விஷயத்துல நான் வேண்டாம்னு சொன்ன பதில் எனக்கு மாறல..நீ எந்த விஷயம் ஆரம்பிச்சாலும் என்ன பண்ணாலும் என்கிட்ட வருவ, சொல்லுவ…என்னை நீ ரொம்ப டிபென்ட பண்ணிடுவியோன்னு ஒரு எண்ணம் இருந்திட்டே இருக்கும்…உனக்கு நான் பிரெண்ட்டா, வெல் விஷரா இருக்கணும்னு நினைச்சது உண்மை..ஆனா நீ லவ்னு கேட்கும்போது எனக்கு நிறையா கேள்விகள், குழப்பங்கள் மட்டும் தான் இருந்தது..இப்போ அட்ஜஸ்ட் பண்ணிட்டு பின்னாடி உன் எதிர்பார்ப்புகளை என்னால நிறைவேதமுடிலேனா சண்டை, கோபம் ஒரு ஸ்டேஜ்ல வெறுப்பே வந்திடும்…நீ சொன்னது தான் நமக்கு பிடிச்சவங்க மனசுல நாம இருக்கோம்னு நினச்சு தூரமா இருக்கிறதுகூட பரவால்லை.. கூடவே இருந்தாலும் வெறுப்பு வர அளவுக்கு வந்திட்டோம்னா அது ரொம்ப கொடுமையா இருக்கும்னு தோணுச்சு…என்னால என்னை மாத்திக்க முடியாதுனு தெளிவா தெரிஞ்சிடிச்சு…அதனால தான் என் பதில் எப்போ நீ கேட்டாலும் உன் லைப்க்கு நான் வேண்டாம்..செட் ஆகமாட்டேனு சொல்லிட்டே இருப்பேன்..ஆனா நீ அதுல காதுல வாங்கின மாதிரியே தெரில….என்னால உன்னை அவாய்ட் பண்ணவும் முடில…அமைதியா இருந்து ஹோப் கொடுக்கவும் முடில…என்ன பண்றதுனு யோசிச்சிட்டே இருப்பேன்..ஆனா நீ உன் பெர்த்டே அன்னைக்கு பண்ண பாரு..
[அன்று:
“ஹலோ”
“ஆதி வெளில வா..நான் கேட் கிட்ட இருக்கேன்…”
அடித்துபிடித்து கொண்டு எழுந்தவன் தூக்கம் சுத்தமாக களைய “என்ன சொல்ற? கேட்..” என முடிப்பதற்குள் போன் கட் ஆக வேகவேகமாக டீஷர்ட் மாட்டிக்கொண்டு வெளியே வந்த மித்ரன் மித்துவிடம் “ஹே..என்னாச்சு..இங்க தனியா அதுவும் என்ன இந்த நேரத்துல…எதுவும் பிரச்னையா?”
“வெயிட் வெயிட்…4 3 2 1..எனக்கு ஹாப்பி பெர்த்டே சொல்லு ஆதி..”
மித்ரன் புரியாமல் விழிக்க “ப்ளீஸ் ப்ளீஸ்..நீ விஷ் பண்ணு..நான் என்னனு சொல்றேன்..”
அவள் மொபைல் கத்த அதை சைலென்டில் போட
“ம்ச்..நான் கேட்டதுக்கு முதல பதில் சொல்லு..” என அவன் உடும்புபுடியாக நிற்க வேறு வழியின்றி “போ ஆதி 12 தாண்டிடுச்சு…இன்னைக்கு என் பொறந்தநாள்.. பஸ்ட் விஷஸ் உன்கிட்ட இருந்து இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..அதான் நானே உன்னை தேடி வந்துட்டேன்..”
அவனுக்கு கோபமும் வர அதை கண்ட்ரோல் பண்ண நெற்றியை தடவியபடி குறுக்கும் நெடுக்கும் நடக்க “ஆதி..” என மெதுவாக அழைக்க அவன் திரும்பியதும் “இன்னும் நீ விஷ் பண்ணல?” என அவன் முறைக்கவும் இவளும் உதட்டை கடித்தபடி மௌனமாக மித்ரன் “அதுக்காக இப்படியா..இந்த நேரத்துல…உன்னை என்ன பண்றதுனே தெரில..போன் பண்ணிருந்தா பத்தாதா?”
அவள் பாத்தாது என இடவலமாக தலையசைக்க அவன் முறைக்க தலை அப்டியே நின்றது..
“கிளம்பு..வீட்டுக்கு போலாம்..”
“ஐ…நீயும் வரியா?”
“ஒழுங்கா வரியா இல்லை வீட்ல கூப்பிட்டு சொல்லவா?”
“அது இன்னும் சூப்பர்..நீ சொல்லு..அவங்க அப்டி என்ன அவன் ஸ்பெஷல்னு கேப்பாங்க..நான் லவ் பண்றதை ஓபன் பண்ணிட்றேன்…செம ல?” என அவள் அதிலிருந்து அடுத்த பிளான் போட மித்ரனின் நிலை தான் பாவமாக இருந்தது…கடுப்பை கட்டுப்படுத்தியவன் சற்று தூரம் நடந்ததும் “வீட்ல அம்மா அப்பா எங்க போனாங்க?”
“டாடி வேலை விஷயமா வெளியூர் போய்ட்டாரு…என் ஸ்வீட் மம்மிக்கு அரை தூக்கமாத்திரை பால்ல கலந்து குடுத்திட்டேன்…மம்மி ஆழ்ந்த தூக்கத்துல இருக்காங்க…” என கண்ணடிக்க
மித்ரன் நின்று “அடிப்பாவி..” என முணுமுணுக்க
மித்து திரும்பி “என்ன ஆதி நின்னுட்ட..வா போலாம்…”
“இந்த வேலை எல்லாம் இனிமேல் பண்ணேன்னா பாரு..நீ என்ன குழந்தையா? சீரியஸ்நெஸ் தெரியாது…என்ன பண்ணிட்டு இருக்கேனு தெரிஞ்சுதான் பண்றியா? எல்லாரும் செல்ல கொடுத்து உன்னை இவளோ கெடுத்துவெச்சிருக்காங்க..என்ன பழக்கம் இது..மிட் நைட்ல வரது..அப்டி என்ன..” என முடிக்கும் முன் “ப்ளீஸ் ஆதி..பெர்த்டே அதுவுமா என்னை திட்டாத..அப்புறம் இந்த வருஷம் முழுக்க இப்டி தான் இருக்கும்…” என
அவன் “இதுல இந்த சென்டிமென்ட்..” என திரும்பியவன்
அவள் தலை கவிழ்ந்தபடி ஒரு புறம் கிராசாக மாட்டிய பையில் உள்ள சிப்பை இழுத்து இழுத்து விட்டபடி பாவமாக இருக்க அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நடந்தான்..
வழியில் எக்சிபிஷன் இருக்க அங்கே ரிங் டாஸ் கேம் இருக்க அவள் அங்கேயே பார்த்தபடி வர கீழே தடுக்கி விழப்போனவளை பிடித்தவன் “எங்க வேடிக்கை பாத்திட்டு வர?”
“அதோ..அந்த ரிங் டாஸ்ல எல்லாமே டாய்ஸ், சாக்லேட்ஸ் இருக்கு..ஆதி ஆதி ப்ளீஸ் ஆதி..ஒரு அஞ்சு நிமிஷம்..விளையாடிட்டு போலாமே..ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என அவனை பேசவே விடாமல் அங்கே இழுத்து கொண்டு போக 3 ரிங் வாங்கியதும் அவள் முதல் தடவை வீசி அது வெளியே விழுந்துவிட அடுத்த ரிங் சாக்லேட்டில் விழுக “ஐ…” என குதிக்க மித்ரன் “ம்ம்..உனக்கு ஏத்த மாதிரி தான் விழுந்திருக்கு..சாப்பிட்டே பேசாம வா…”
முகம் சுருக்கி அதை வாங்கியவள் மூன்றாவதை ரிங்கை எடுத்தவள் “ஆதி இந்த டைம் நீ ட்ரை பண்ணு…” என
அவன் மறுக்க அவள் கேட்பாளா என்ன? இறுதியாக அவன் விளையாடி மினியன் பொம்மையில் விழுக அதை வாங்கியபடி இருவரும் மீண்டும் நடந்தனர்..
வீட்டை அடைந்ததும் “இந்தா இதை நீ வெச்சுக்கோ” என பொம்மையை நீட்ட “உண்மையாவா?..”
“ம்ம்..நீதானே ஆசைப்பட்ட..பிடி..” என்றதும் அவள் மகிழ்வுடன் வாங்கி அதை பார்த்துக்கொண்டிருக்க
“ஆனா இந்த மாதிரி பண்றது இதுதான் கடைசியா இருக்கணும்..இப்டி எல்லாம் கேர்லெஸ்ஸா வெளில வரத ஸ்டாப் பண்ணிடணும்..”
அவள் புன்னகையுடன் “ஓகே ஆதி..நீ சொல்லிட்டேல..இனி பண்ணமாட்டேன்..” என அவள் உடனே ஒப்புக்கொண்டதும்
அவன் நம்பாமல் “என்ன உடனே ஒத்துக்கிட்ட? எப்படி?”
“எப்படின்னா என்ன சொல்ரது…எனக்கு உன்னை பிடிக்கும்..நீதான் ஸ்பெஷல்..பிடிச்சவங்க சந்தோசமா இருக்கறதை பாக்கத்தானே எல்லாரும் ஆசைப்படுவாங்க..கஷ்டப்படுத்த இல்லையே..
பிடிச்சவங்களுக்கு பிடிக்காத விஷயத்தை பண்ணி அவங்க கூட இருந்து நான் சந்தோசப்படுறதை விட,
அவங்களுக்கு பிடிச்சதை செஞ்சு எப்போவுமே அவங்க மனசுல இருக்கேங்கிறத தான் எனக்கு பிடிக்கும்…என்ன புரிஞ்சுதா?”
“ம்ம்ம்..இதெல்லாம் நல்லா பேசு…” என அவன் தலையசைத்ததும் அவள் சிரிப்புடன் “ஓகே ஆதி டாடா…நாளைக்கு மீட் பண்ணலாம்” என அவள் திரும்பி நடக்க
“ஹாப்பி பெர்த்டே..” என்றான்..
“ஒஹ்ஹ..தேங் காட்..கடைசியா நீ எனக்கு பஸ்ட்டு விஷ் பண்ணிட்ட…எங்க திட்டிட்டு அப்டியே போக சொல்லிடுவியோன்னு நினச்சேன்…இனி ஜாலியா போவேன்..எல்லார் போன் கால்சும் அட்டென்ட் பண்ணலாம்..” என குதித்த படியே “ஹலோ தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்..” என பேசிக்கொண்டே அவள் போக
மித்ரன் இதழில் புன்னகை இருந்தாலும் அவன் மனம் அதில் இல்லை…தீவிரமாக சிந்தித்தபடியே அங்கிருந்து நகர்ந்தான்..]
ஆதி, தியா இருவரும் இன்று அதை நினைத்து சிரிக்க “அன்னைக்கு எல்லாம் நீ எவ்ளோ சேட்டை பண்ண?” என அவன் கன்னத்தை கிள்ள தியா அதை நினைத்து வாய்விட்டு சிரித்தாள்..”ஆமால…ஆனா அப்போ எல்லாம் ரொம்ப யோசிக்கமாட்டேன் ஆதி..”
“ம்ம்..இப்போ மட்டும் நீ எப்படி இருக்கிறதாம் நினைப்பாம்?”
“ஹா ஹா ஹா..சில சின்ன சின்ன விஷயங்கள் மனசு கேட்கும்போது செஞ்சு உடனே சந்தோசப்படுத்திடனும்..அப்போதான் பெரிய விஷயத்துக்கு அது நம்ம பேச்சை கேட்கும்.. சரி சொல்லு..அப்றம் எப்போ முடிவு பண்ண?”