Tamil Madhura Uncategorized அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

[youtube https://www.youtube.com/watch?v=GWYq0zUwLts?rel=0&w=560&h=315]

 

காவிரிபோல் வளர்வோம் 

அரோகரா 

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்

கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அங்கு
கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்.

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று பணிந்திடுவோம்
பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!

ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்-சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் – கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு – இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் – அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!

கவியரசு கண்ணதாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37

37 சுஜியின் சம்மதம் கிடைத்த உடனே அனைவரும் அன்று மாலையே திருப்பதி கிளம்பினர். மறுநாள் காலை ஏழுமலையானின் சந்நிதியில் சுஜாதாவைத் தனது மனைவியாக இணைத்துக் கொண்டான் மாதவன். மாதவனின் சார்பில் அவனது பெற்றோரும், கேசவனும், சுஜியின் சார்பில் சுந்தரம், விக்கி, கமலம்,

மன்னிப்பு – 1மன்னிப்பு – 1

மன்னிப்பு, எனக்குப் பிடிக்காத வார்த்தை 1 நோ இது நடக்கக் கூடாது. நான் எந்திரிக்கணும். செய்தாக வேண்டுமே! என்ன செய்யலாம் சீக்கிரம் சீக்கிரம் க்விக் வசு…  நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் கண்கள் தன்னால் மூடியது. “வசுமதி, வசுமதி, வசுமதி” என்று யாரோ