Tamil Madhura

பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு

Book Fair 2021 - 'Poovellaam un vaasam' new novel | புத்தகக் கண்காட்சி 2021| பூவெல்லாம் உன் வாசம்

வணக்கம் தோழமைகளே!
நலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
புத்தகங்கள் ஸ்டால் எண் 302-303-இல் கிடைக்கும்.
திருமகள் நிலையத்தில் பதிப்பிக்கப் பட்ட எனது நாவல்கள் 1) பூவெல்லாம் உன் வாசம் (விலை ரூபாய் 105) 2) இனி எந்தன் உயிரும் உனதே(ரூபாய் 115.00) 3)யாரோ இவன் என் காதலன் 4) கடவுள் அமைத்த மேடை 5)காதல் வரம் 6) நிலவு ஒரு பெண்ணாகி.
தனது குடும்பத்தினரிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீரா, அவளுக்கு பக்கபலமாக வந்த ஷஷ்டி உதவியாக இருந்தானா இல்லை அவளுக்கு இன்னொரு சுமையாக இருந்தானா?
மீரா சஷ்டி இவர்களுக்கு மத்தியில் நின்று ஆட்டையைக் கலைக்க முயலும் ரேச்சல் அவளது மகள் குட்டி ரேணு. மீராவை எண்ணி காதல் ராகம் பாடும் கண்ணன், சஷ்டியின் எதிரி பிங்கு. இவர்கள் அனைவரும் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். மீரா இந்தப் பரிட்சையில் தோற்க வேண்டும்.
இவர்களது கனவு பலித்ததா? இதனை அறிய பூவெல்லாம் உன் வாசம் நாவலை வாங்கிப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா