Tamil Madhura

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

couple-kissing-and-holding-heart_23-2147736074
முத்தம் தந்திடு!!
 
முட்களோடு சொற்கள் செய்து
காயம் தந்தாய் – எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!

தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் – இன்றோ 
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!

மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே – நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!

பகலெல்லாம் காத்திருக்கும் 
மல்லி அல்லியும் – இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே 
மெல்ல அவிழுமே!

காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து – நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!

மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு – இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!

— அர்ச்சனா