Tamil Madhura

கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும்

 

என்னில் இருந்து உருவானவன் நீ.. மறவாதே (கல்)
என்னால் தான் உனக்கு பெருமைமறவாதே (கற்சிலை)

 

உன்னை உருவாக்க நான் பல வலிகளைத் தாங்கினேன்.
அது உன் கடமை.. தியாகமல்ல.

 

உனக்காக என்னில் பல பாதிகளை இழந்தேன்
தேவையற்றவைகளை அகற்றுவது தானே முறைஇதென்ன சாதனையா?

 

வாயடைத்த வற்றிய கோடுகளாக பிளவுபட்டு
தூக்கி எரியும் தருணம் கல் கூறியது

 

உன் வடிவமும், அழகும், பொலிவும் உள்ளவரைதான்
கற்சிலை என சிறப்புரைப்பார்கள்
சீர்செய்யாது சிதைந்து உடையும் சமயத்தில்
நீயும் வெறும் கல்லாக மாறுவாய்
அன்று என்னை உணர்வாய்
இது என் சாபமல்ல
ஏற்கவேண்டிய நடைமுறை
நான் ஏற்கிறேன் என்றுரைத்து காணாமல் போனது கல்

 

இத்தகைய உரையாடல் கல்லுக்கும் கற்சிலைகளுக்கும்
பொருந்துமோ என்னவோ?


ஆனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நிச்சயம் பொருந்தும்
இல்லாவிடில் இத்தனை முதியோர் இல்லங்கள் இல்லாமல் இருந்திருக்குமே?

 

~ஸ்ரீ !!~