ஹாய் பிரெண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கிங்க. போன அப்டேட் உங்களை நெகிழ வைத்ததுன்னு உங்க கமெண்ட்ஸ், மெயில் மற்றும் முகநூல் மெசேஜ் மூலம் படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி. நான் தனித்தனியா நன்றி சொல்லாம, மொத்தமா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு அடுத்தடுத்த பகுதிகளை உங்களுக்குத் தருவதில் கவனம் செலுத்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.இதனால் உங்களோட கமெண்ட்ஸ் படிக்கலைன்னு நினைச்சுக்காதிங்க. கண்டிப்பா படிக்கிறேன். அவைதான் என்னை சீக்கிரம் அப்டேட் போட ஊக்குவிக்கின்றன.
இன்னைக்கு நீங்க ரொம்…..ப ஆவலா, ரொம்…ப நா…ளா கேட்ட கேள்விக்கு பதில் தரும் பகுதி. உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன். எவ்வளவு பிடிக்குதுன்னு உங்க கமெண்ட்ஸ் பார்த்து தெரிஞ்சுக்குறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா
கதைக்கு விமர்சனம் போடும் தோழிகளே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து சஸ்பென்சை (உதாரணத்துக்கு ராம் யார் என்ற உண்மை) உடைக்காம போடுங்க. நீங்க அனுபவிச்ச டென்சனை மத்தவங்க அனுபவிக்க வேண்டாமா (என்ன ஒரு நல்ல எண்ணம்?)